ஜூலை 2 & 3 கோவைப் பதிவர்கள் சந்திப்பு.
ஜூலை 2 ஆம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, கோவையை நோக்கிப் பயணம் ஆரம்பம். எனது ஊர்தியின் ஓட்டுனரைப் பார்த்து கேட்டேன்..
நான் : தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்.
ஓட்டுனர் : நல்லாத் தெரியும் சார். என்னா இப்படி கேட்டுட்டீங்க. நான் மதுரைக்காரன் சார்... எல்லா வழியும் நல்லாத் தெரியும்.
இப்படி சொல்லி தம்பி மதுரையை ஒரு இரண்டு சுத்து வந்தார். நானும் ரொம்ப சாதுவாக, தம்பி மீனாட்சி அம்மன் கோயிலை இப்படி எல்லம் சுத்தக்கூடாது... கோயில் உள்ள போய், நடந்துதான் சுத்தணும் அப்படின்னு சொன்னேன். தம்பி படு ஷார்ப். சார் கோச்சுகாதீங்க, அப்படின்னு சொல்லிட்டு, ஒரு ஓரமா வண்டியை நிறுத்திபிட்டு, அங்கன யார் கிட்டயோ, அண்ணே, கோயமுத்தூர் வழி எதுண்ணேன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திடீரென லவுட் ஸ்பீக்கரில், டொயோட்டா இன்னோவா 4511 வண்டியை எடுங்க அப்படின்னு. ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு திரும்பவும் அதே மாதிரி ஒரு லவுட் ஸ்பீக்கரில் ஒரு குரல். நமக்கு சொந்த வண்டியா இருந்தாவண்டி நம்பர் ஞாபகம் இருக்கும். இதுவோ வாடகை வண்டி. ஓட்டுனர் மட்டும் எனக்கு நம்பகமான, 10 வருடங்களுக்கு மேல் பழக்கமான ஓட்டுனர். அவருக்கும் வண்டி நம்பர் ஞாபகம் இல்லை போலிருக்கு. அடுத்து வந்த லவுட் ஸ்பீக்கரில் வந்த குரல், யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல.. அதுல பாருங்க அன்னிக்கு நானும் வெள்ளைச் சட்டை, ஓட்டுனரும் வெள்ளைச் சட்டை போட்டுகிட்டு இருந்தோம்.
சரி அப்படி, இப்படின்னு வண்டிய எடுத்து, வழி விசாரிச்சுகிட்டு, கிளம்பியாச்சு. சிலர் பொள்ளாச்சி வழி என்றும், சிலர் கொடை ரோடு, ஓட்டன் சத்திரம் வழி என்றும் சொன்னார்கள். இந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம் என்று, நண்பர் வால்பையனுக்கு தொலைப்பேசி அழைத்து அவரிடம் வழி கேட்க, அவரும் ஒரு வழி சொன்னார். அவரிடமே வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் அவர்கள் தொலைப்பேசி நம்பர் இரண்டையும் வாங்கிக் கொண்டேன்.
பிறகு ஆரம்பிச்சது, அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களுக்கு... தொந்திரவு...
அண்ணே, கொடை ரோடு வந்தாச்சு.. இப்ப எந்த ரூட்ல வரணும். அண்ணே ஓட்டன் சத்திரம் வந்தாச்சு இப்ப எந்த ரூட்ல வரணும், வழில வரும் ஊர் பேர் எல்லாம் சொல்லி வழி கேட்டாச்சு. அவரும் வழி சொல்லி, சொல்லி சோர்ந்துப் போயிட்டார். கடைசியில் அண்ணே அலங்கார் கிராண்டேயில் ரூம் போட்டு இருக்கு இப்ப சூலூர் வந்தாச்சு எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டோம். ராமநாதபுரம் சிக்னலில் வலதுபுறம் என்று சொன்னார். நம்ம ஓட்டுனர் அதை எல்லாம் விட்டு விட்டு நேரா ரயில்வே ஸ்டேஷன் கிட்ட வந்துட்டார். அண்ணனை திரும்பவும் கூப்பிட்டு அண்ணே ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு, இப்ப எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டேன். அண்ணன், அய்யய்யோ ஏன் ஸ்டேஷனுக்கு வந்தீங்க.. சரி சரி பரவாயில்லை அப்படியே நேரா போங்க, ஒரு மேம்பாலம் வரும். அதுக்கு கீழால போயி ஒரு யூ டர்ன் எடுத்துகிட்டு நேரா போனா சிட்டி டவர் வரும். அதற்கு எதிர்த்தாற் போல் அலங்கார் கிராண்டே இருக்கு என்றார். ஒருவழியா அலங்கார் கிராண்ட் டே வந்து, வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன், சுரேஷ் குமார் அண்ணன், செல்வேந்திரன் அண்ணன் நால்வருக்கும் நாங்க தங்கியிருந்த ரூம் விவரத்தை சொன்னோம். அண்ணன்கள் நாலவரும் மாலை வருவதாக வாக்களித்தப் படி, முதலில்,வேலன் அண்ணாச்சி செல்வேந்திரன் அண்ணன் கூட வந்தார். பின்னர் சஞ்சய் அண்ணன் வந்தார். கடைசியாக சுரேஷ்குமார் அண்ணன் வந்தார்.
பின்னர் நால்வரும் பேச ஆரம்பித்தோம். வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களின் வியாபர நுணுக்கங்களைப் பற்றியும், அவரது தொழில் பற்றியும் பேச்சு போய்க்கொண்டு இருந்தது. அண்ணன் செல்வேந்திரன் அவரது வேலைப் பற்றியும், அது சம்பந்தமாகவும் உரையாடிக்கொண்டு இருந்தோம்.
அண்ணன் செல்வேந்திரன் அவர்கள் கஸ்டமர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைப் பற்றி சொன்னார். ஒரு கஸ்டமர் நமது நல்ல சர்வீசை யாராவது இருவரிடம் தான் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார். ஆனால் அதே கஸ்டமர் நமது மோசமான சர்வீசைப் பற்றி 50 பேரிடம் புகார் தெரிவிப்பார். அதனால் எந்த மாதிரியான கஸ்டமாராக இருந்தாலும் அவரை மதித்து, நல்ல சர்வீஸ் வழங்க வேண்டும். முடியாது என்பதைக்கூட நளினமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அருமையான கருத்து. நன்றி செல்வேந்திரன்.
செல்வேந்திரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், அவரால் எங்களுடன் அதிக நேரம் அமர்ந்து பேச இயலாமல் போய்விட்டது.
சஞ்சய் அண்ணன் அவர்கள் கூட பேச ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிடும். அப்படி ஒரு பேச்சுத்திறன்.
தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார். அருமையான தம்பி. என்னைப் பார்க்க வந்துவிட்டு, அவர் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ, கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும். என்னிடம் கேமிரா பற்றி பேசுவது என்பது, குருடனை ராஜபார்வை பார் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது.
பின்னர் நாங்க அனைவரும் இரவு உணவுக்காக அங்கே இருந்த உணவகத்திற்குப் போனோம். கவனிப்பு முதலில் சரியாக நடக்கவில்லை. எப்போதும் போல், அவர்களிடம் சற்று கோபமும், கனிவும் கலந்து பேசி, சரி செய்ய வைத்தோம். உணவுத்தரம் நன்றாக இருந்தது.
மிக முக்கியமாக நான் உணவுத் தரத்திற்கு எனக்கு உள்ள அளவு கோல், அடுத்த நாள் என் வயிற்றையோ, உடல் நலத்தையோ பாதிக்காத உணவு நல்ல தரமான உணவு என்பதுதான்.
ஜுலை 3, 2009.
காலை நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பொள்ளாச்சி போய் வந்தோம். இன்று அரவிந்தனின் பிறந்த நாள். காலையிலேயே நண்பர்கள் பலரும் தொலைப் பேசியில் பேசி அரவிந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மதியம் ஒரு நண்பரை பார்ப்பதற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். அண்ணன் வால்பையன் அவர்கள் ஈரோட்டில் இருந்து எங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று தொலைப் பேசியில் கூறினார். அண்ணன் சுரேஷும் மாலை 6 மணிக்கு வருவதாகக் கூறினார்.
அண்ணன் வால் பையன் சரியாக 6 மணிக்கு வந்தார். அவருடன் நிறையப் பேசிக் கொண்டு இருந்த போது, அரவிந்திற்கு பர்த்டே கேக் வாங்கிக் கொண்டு அண்ணன் சுரேஷ்குமார் வந்தார்.
சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.
பின்னர், சுரேஷ் குமார் அவர்கள் வாங்கி வந்து இருந்த கேக்கை வெட்டி, அரவிந்தனின் பிறந்த நாள் அமர்க்களமாகக் கொண்டாடப் பட்டது.
இரவு 8 மணியளவில் நெடுநாள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வருவதாகச் சொல்லியிருந்ததால், வால்பையன் அவர்களுடன் உணவருந்த செல்ல இயலவில்லை. சாரி வால் பையன் அண்ணே.
புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு
வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன்
சஞ்சய் அண்ணனும், நானும்.
வடகரை வேலன் அண்ணாச்சி
அரவிந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்காக சுரேஷ் குமார் அண்ணன் வாங்கிவந்த கேக்
அண்ணன் சுரேஷ்குமார், அண்ணன் வால்ஸ் & me
ஜூலை 4 அன்று அங்கிருந்து கிளம்பி குன்னூர் போய்விட்டு ஜூலை 6 ம் தேதி அன்று திருப்பூரில் பதிவர்களுடன் லஞ்ச் ஆன் மீட்டிங்.... இது பற்றி விவரமாம அடுத்தப் இடுகையில்..
அது வரை ... தொடரும்
படங்கள் உதவி - அண்ணன் சுரேஷ் குமார்...
என்னோட காமிராவில் படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. அதனால் படங்கள் கொடுத்து உதவிய அண்ணன் சுரேஷ் குமாருக்கு நன்றிகள் பல.
101 comments:
சொன்னேன்ல. என்னைக்காவது மீ த ஃபர்ஸ்ட் வருவேன்னு. வந்துட்டேன். நல்லா இருக்கு பயணமும் அறிமுகமும்.
தல கலக்கல் சந்திப்பு மற்றும் அனுபவங்கள்..
ஒரே பதிவர் சந்திப்புகள் தான் ஊர்ல கிளம்புனதுல இருந்து..:))
அச்சச்சோ நான் தான் முதல் பின்னூட்டம் போட வேண்டும் என்றிருந்தேன் ஆனா
வானம் பாடிகள் முந்திக்கிட்டாரே
அடடா இந்த வினோத் கௌதம் வேற நான் டைப் பண்றதுக்குள்ள ரெண்டாவதா வந்துட்டார்
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு...
பதிவர் வட்டம் பற்றிய இடுகைகள்ல கலக்குறீங்க ராகவன்
ஏகப்பட்டது சொல்லலாம் ஆனா ஒரு சோறு பதம் மட்டும் சொல்றேன்
"காமிரா பத்தித் தெரியாத என்னை ராஜபார்வை பாருன்ன மாதிரி"
:)))))))
அப்புறம் அரவிந்த் யாரு ? அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லோரும் அட்வான்சா சொல்லுவாங்க ஆனா நாங்கள் லேட்டா வந்து லேட்டஸ்டா சொல்றோம்
//பிரபல பதிவர் அண்ணன் வால் பையனுடன்..//
அண்ணே எதாவது தப்பு பண்ணியிருந்தா ரெண்டு அடி அடிச்சிருங்க!
ஏன் இந்த கொலைவெறி!
ராகவன்,
சுரேஷை எல்லாம் உங்க அண்ணன்னு சொல்லுறது வன்முறையில்லையா?
இன்னைக்கெல்லாம் இருந்தா அவருக்கு 23 வயசுக்கு மேல இருக்காது. ஹோடலுக்குப் போனா தனக்கு என்ன வேணும்னு சொல்லக்க்கூடத் தெரியாத பாலகன். அவரை விட நமது அரவிந்த் அன்றைக்கு அதிகமாகச் சாப்பிட்டாரே நினைவில்லையா?
appuram onnu vittup poiyiruchu
vadakarai velan annachchi,annan vaal paiyan, sanjay annan and suresh kumar annan----ellaraiyum ketathagach chollungal
eena nama chinavanga illayaa
:)))))
haha nalla vangik kattittiingalaa
ella annanga kittayum
அண்ணன் பதிவு சூப்பர்
பின்னூட்டம் எழுதிக்கிட்டே நல்ல இடுகையும் எழுதுவது எப்படின்னு உங்ககிட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு வரணும் ராகவன்
சத்தமில்லாம எழுதி கலக்குறீங்க உங்க பதிவுல
எல்லாரையும் இணைத்து எடுத்துச் செல்லும் நல்ல உள்ளம் உங்களுக்கு வாய்த்து இருக்கிறது
வாழ்த்துக்கள் ராகவன்
// வானம்பாடிகள் said...
சொன்னேன்ல. என்னைக்காவது மீ த ஃபர்ஸ்ட் வருவேன்னு. வந்துட்டேன். நல்லா இருக்கு பயணமும் அறிமுகமும். //
அண்ணே ரொம்ப நன்றின்னே. சொல்றத த்தான் செய்வீங்க, செய்றதத்தான் சொல்வீங்கன்னு எனக்கு தெரியுமண்ணே.
// வினோத்கெளதம் said...
தல கலக்கல் சந்திப்பு மற்றும் அனுபவங்கள்..
ஒரே பதிவர் சந்திப்புகள் தான் ஊர்ல கிளம்புனதுல இருந்து..:)) //
ஆமாங்க வினோத். இன்னும் திருப்பூரில் ஒரு பதிவர் சந்திப்பு பின்னர் இங்கு நைஜிரியாவில் மாபெரும் சந்திப்பு ஒன்றும் நடந்தது...
// thenammailakshmanan said...
அச்சச்சோ நான் தான் முதல் பின்னூட்டம் போட வேண்டும் என்றிருந்தேன் ஆனா
வானம் பாடிகள் முந்திக்கிட்டாரே //
அண்ணன் அப்படித்தாங்க. என்கிட்ட பாசம் ஜாஸ்தி. அதான் உடனே வந்து தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டும் போட்டுட்டு, பின்னூட்டமும் போட்டுட்டாருங்க.
// Mahesh said...
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு... //
இல்லீங்க மகேசண்ணே.. நீங்க பெரியவங்க இருக்கும் போது... நான் அண்ணன் சொல்லிக்கிடலாமா?
// thenammailakshmanan said...
பதிவர் வட்டம் பற்றிய இடுகைகள்ல கலக்குறீங்க ராகவன்
ஏகப்பட்டது சொல்லலாம் ஆனா ஒரு சோறு பதம் மட்டும் சொல்றேன்
"காமிரா பத்தித் தெரியாத என்னை ராஜபார்வை பாருன்ன மாதிரி"
:)))))))
அப்புறம் அரவிந்த் யாரு ? அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லோரும் அட்வான்சா சொல்லுவாங்க ஆனா நாங்கள் லேட்டா வந்து லேட்டஸ்டா சொல்றோம் //
அரவிந்த் எங்கள் வீட்டு இளவரசு.
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.
// வால்பையன் said...
//பிரபல பதிவர் அண்ணன் வால் பையனுடன்..//
அண்ணே எதாவது தப்பு பண்ணியிருந்தா ரெண்டு அடி அடிச்சிருங்க!
ஏன் இந்த கொலைவெறி! //
அண்ணே, இப்படி சொல்லிட்டீங்க. எது எப்படி இருந்தாலும், நீங்க எனக்குப் பிரபல பதிவர்தாங்க. உங்க மேல கோபமா.. அதுவும் உங்க மேலேயா... சான்சே இல்லீங்க.
// sanban said...
ராகவன்,
சுரேஷை எல்லாம் உங்க அண்ணன்னு சொல்லுறது வன்முறையில்லையா?
இன்னைக்கெல்லாம் இருந்தா அவருக்கு 23 வயசுக்கு மேல இருக்காது. ஹோடலுக்குப் போனா தனக்கு என்ன வேணும்னு சொல்லக்க்கூடத் தெரியாத பாலகன். அவரை விட நமது அரவிந்த் அன்றைக்கு அதிகமாகச் சாப்பிட்டாரே நினைவில்லையா? //
அண்ணே சஞ்சய் அண்ணே... வன்முறைங்களா... அய்யய்யோ என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. அதெல்லாம் இல்லீங்க... எப்போதும் போல் எல்லோரையும், நம்ம அப்துல்லா அண்ணன் அழைப்பது மாதிரி கூப்பிட்டேங்க.
// thenammailakshmanan said...
appuram onnu vittup poiyiruchu
vadakarai velan annachchi,annan vaal paiyan, sanjay annan and suresh kumar annan----ellaraiyum ketathagach chollungal
eena nama chinavanga illayaa
:)))))
haha nalla vangik kattittiingalaa
ella annanga kittayum //
அக்கா என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க. யாருகிட்ட வாங்கிக் கட்டிகிட்டேன். எல்லாம் நம்ப அண்ணன்கிட்ட தானே. அது ஆசீர்வாதம் மாதிரி அக்கா.
// அறிவிலி said...
அண்ணன் பதிவு சூப்பர் //
நன்றி அறிவிலி.
// thenammailakshmanan said...
பின்னூட்டம் எழுதிக்கிட்டே நல்ல இடுகையும் எழுதுவது எப்படின்னு உங்ககிட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு வரணும் ராகவன்
சத்தமில்லாம எழுதி கலக்குறீங்க உங்க பதிவுல
எல்லாரையும் இணைத்து எடுத்துச் செல்லும் நல்ல உள்ளம் உங்களுக்கு வாய்த்து இருக்கிறது
வாழ்த்துக்கள் ராகவன் //
அக்கா... அழுதுருவேன்... நான் எழுதுவது எல்லாம் எழுத்தா... நீங்கத்தான் மெச்சிக்கணும்.
பின்னூட்டம் போடுவது நமக்குத் பிடித்தது. அதை படிச்சு செஞ்சுகிட்டு இருக்கோம்.
வலைப்பதிவர்களில் மோசமான எழுதுவது யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தைக்கூடச் சொல்லும், இராகவன், நைஜிரியா என்று.
சூப்பர் பயண கட்டுரை
அப்படியே உங்க கூட வந்த மாதிரி இருக்கு அண்ணே ............
சூப்பர் பயண கட்டுரை
அப்படியே உங்க கூட வந்த மாதிரி இருக்கு அண்ணே ............
அண்ணா! நம்ம தம்பி எல்லாரையும் அண்ணா அண்ணான்னு சொல்றீங்களே, இதிலே எதுனா உள் குத்து இருக்கா!
அப்படி பார்த்தா வடகரை அண்ணாச்சிய நீங்க தம்பின்னு தான் சொல்லியிருக்கனும்:-))
ஏய் அவர் அண்ணண்டா, எனக்கு அண்ணன், உனக்கும் அண்ணன் ஏன் எல்லோர்க்கும் அவர் அண்ணண்டா.....
அண்ணே தப்பா நெனக்காதீங்க பாட்ஷா பட வசனம் சட்னு நியாபகம் வந்துட்டு...
வால் பையனுடன் என்ன உரை ஆடீனீர்கள் என்பது மட்டும் எனக்கு தனி மெயிலிடுங்கள்.
பதிவு கலக்கல் அண்ணா. வால் பையனை விட சின்னவரா நீங்க?
வாலு போட்டோல நீங்க அம்பூட்டு சின்ன புள்ளையா இருக்கிங்க.சஞ்சய் அண்ணா,அண்ணாசி,சுரேஷ் குமார்,நீங்க அனைவரையும் நேர்ல பார்த்த மாதிரி ஒரு உணர்வு.
//Mahesh said...
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு...//
நல்லா கேளுங்கண்ணே.. ஓ.. ! ச்சே.. இங்க வந்தாலே யண்ணே.. யக்கான்னே வருதே.. (ராகவன் அங்கிள் .. கொஞ்சம் பார்த்து கூப்டுங்க.. )
இன்பச் சந்திப்புப் பற்றிய
இனிமையான கட்டுரை.
இராகவன் அண்ணே.. அருமையா எழுதியிருக்கீங்க. எங்கூரு வழியா (உடுமலை, பொள்ளாச்சி) கோவை வந்திருந்தீங்கன்னா குளுகுளுன்னு வந்திருக்கலாமே..
// ஜெட்லி said...
சூப்பர் பயண கட்டுரை
அப்படியே உங்க கூட வந்த மாதிரி இருக்கு அண்ணே ............ //
நன்றி ஜெட்லி.
// அபி அப்பா said...
அண்ணா! நம்ம தம்பி எல்லாரையும் அண்ணா அண்ணான்னு சொல்றீங்களே, இதிலே எதுனா உள் குத்து இருக்கா!
அப்படி பார்த்தா வடகரை அண்ணாச்சிய நீங்க தம்பின்னு தான் சொல்லியிருக்கனும்:-)) //
அண்ணே என்னண்ணே இப்படிச் சொல்லிபுட்டீங்க. இந்த உள் குத்து, வெளிகுத்து எல்லாம் எனக்குத் தெரியாதுங்கண்ணே..
நான் எப்போ உங்களை சந்திக்குறது?
:(
// கும்க்கி said...
ஏய் அவர் அண்ணண்டா, எனக்கு அண்ணன், உனக்கும் அண்ணன் ஏன் எல்லோர்க்கும் அவர் அண்ணண்டா.....
அண்ணே தப்பா நெனக்காதீங்க பாட்ஷா பட வசனம் சட்னு நியாபகம் வந்துட்டு... //
அண்ணே கும்க்கி அண்ணே என்னே உங்க ஞாபகசக்தி அண்ணே..
சரியான இடத்தில் சரியான பின்னூட்டம் போட உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாதுகங்க..
// கும்க்கி said...
வால் பையனுடன் என்ன உரை ஆடீனீர்கள் என்பது மட்டும் எனக்கு தனி மெயிலிடுங்கள். //
இஃகி... இஃகி..
// Mrs.Menagasathia said...
பதிவு கலக்கல் அண்ணா. வால் பையனை விட சின்னவரா நீங்க?
வாலு போட்டோல நீங்க அம்பூட்டு சின்ன புள்ளையா இருக்கிங்க.சஞ்சய் அண்ணா,அண்ணாசி,சுரேஷ் குமார்,நீங்க அனைவரையும் நேர்ல பார்த்த மாதிரி ஒரு உணர்வு. //
ஆமாங்க... நம்மையும் இந்த உலகம் நம்புதுங்கோ...
\\ கலகலப்ரியா said...
//Mahesh said...
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு...//
நல்லா கேளுங்கண்ணே.. ஓ.. ! ச்சே.. இங்க வந்தாலே யண்ணே.. யக்கான்னே வருதே.. (ராகவன் அங்கிள் .. கொஞ்சம் பார்த்து கூப்டுங்க.. ) //
யக்கோவ்... அங்கிளாஆஆஆஆஆஆஆஆஆஆ...
// NIZAMUDEEN said...
இன்பச் சந்திப்புப் பற்றிய
இனிமையான கட்டுரை. //
நன்றி நிஜாமுதீன்.
// ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
இராகவன் அண்ணே.. அருமையா எழுதியிருக்கீங்க. எங்கூரு வழியா (உடுமலை, பொள்ளாச்சி) கோவை வந்திருந்தீங்கன்னா குளுகுளுன்னு வந்திருக்கலாமே.. //
உடுமலை என்றவுடன் எனக்கு ஞாபகத்துக்கு வருவது சின்னார் தாங்க. அங்கு ஒரு முறை சென்று இருக்கின்றேன். அங்கு கேரளா பார்டரில் ஒரு வாட்ச் டவர் உண்டு. அதில் அமர்ந்து மிருகங்களை பார்ப்பது ஒரு ரசமான விசயம். நீங்க சின்னார் போயிருக்கீங்களா?
பொள்ளாச்சி போகும் வழியெல்லாம் குளு குளு வென்றுதாங்க இருந்தது.
அழகான ஊர்கள். அமைதியான மக்கள்.
// பிரியமுடன்...வசந்த் said...
நான் எப்போ உங்களை சந்திக்குறது?
:( //
எனக்கும் ஆசையாகத்தான் இருக்கின்றது. பார்க்கலாம் காலம் கனியும் போது நிச்சயம் பார்க்கலாம்.
அடுத்த முறை இந்தியா போகும் போது கத்தார் வழியாகப் போக முயற்சி செய்கின்றேன்.
இராகவன் அண்ணாச்சி, என்னங்க உடுமலைக்காரன் கிட்ட இப்புடி ஒரு கேள்வியக் கேட்டுட்டீங்க? எங்க கூட்டாளிகளுக்கு லீவுன்னா சின்னார் தாங்க. அதுவும் சின்னார் ஓடையில காட்டுக்குள்ள போயி குளிக்கறதுன்னா அப்படி ஒரு சுகம். உண்மை தான், வாட்ச் டவர்ல இருந்த மிருங்கங்களப் பாக்கறது அருமையா இருக்கும். :)
//sanban said...
ராகவன்,
சுரேஷை எல்லாம் உங்க அண்ணன்னு சொல்லுறது வன்முறையில்லையா?
இன்னைக்கெல்லாம் இருந்தா அவருக்கு 23 வயசுக்கு மேல இருக்காது. ஹோடலுக்குப் போனா தனக்கு என்ன வேணும்னு சொல்லக்க்கூடத் தெரியாத பாலகன். அவரை விட நமது அரவிந்த் அன்றைக்கு அதிகமாகச் சாப்பிட்டாரே நினைவில்லையா? //
இந்தப் பின்னூட்டம் நானிட்டதுதான். s anban என்ற எனது நண்பனின் லாகின்னில் இருந்து வந்ததால் நீங்கள் சஞ்சய் என நினைத்து விட்டீர்கள் போல இருக்கிறது. பிழைக்கு வருந்துகிறேன்.
//
யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல..
//
அவிங்க எப்போமே அப்டித்தாங்க.. நம்ம எங்க இருந்தாலும் தேடிப்புடிச்சு வெரட்டுவாங்க...
//
வடகரை வேலன் said...
//sanban said...
ராகவன்,
சுரேஷை எல்லாம் உங்க அண்ணன்னு சொல்லுறது வன்முறையில்லையா?
இன்னைக்கெல்லாம் இருந்தா அவருக்கு 23 வயசுக்கு மேல இருக்காது. ஹோடலுக்குப் போனா தனக்கு என்ன வேணும்னு சொல்லக்க்கூடத் தெரியாத பாலகன். அவரை விட நமது அரவிந்த் அன்றைக்கு அதிகமாகச் சாப்பிட்டாரே நினைவில்லையா? //
இந்தப் பின்னூட்டம் நானிட்டதுதான். s anban என்ற எனது நண்பனின் லாகின்னில் இருந்து வந்ததால் நீங்கள் சஞ்சய் என நினைத்து விட்டீர்கள் போல இருக்கிறது. பிழைக்கு வருந்துகிறேன்.
//
அண்ணாச்சி.. நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு நெம்ப நல்லாவே பிரியுது..
//
சுரேஷ் குமார் அண்ணன்
//
இது வன்முறையின் உச்ச வட்டம்.. (முடிவில்லாத வன்முறை என்பதால்..)
\\ வடகரை வேலன் said...
//sanban said...
ராகவன்,
சுரேஷை எல்லாம் உங்க அண்ணன்னு சொல்லுறது வன்முறையில்லையா?
இன்னைக்கெல்லாம் இருந்தா அவருக்கு 23 வயசுக்கு மேல இருக்காது. ஹோடலுக்குப் போனா தனக்கு என்ன வேணும்னு சொல்லக்க்கூடத் தெரியாத பாலகன். அவரை விட நமது அரவிந்த் அன்றைக்கு அதிகமாகச் சாப்பிட்டாரே நினைவில்லையா? //
இந்தப் பின்னூட்டம் நானிட்டதுதான். s anban என்ற எனது நண்பனின் லாகின்னில் இருந்து வந்ததால் நீங்கள் சஞ்சய் என நினைத்து விட்டீர்கள் போல இருக்கிறது. பிழைக்கு வருந்துகிறேன். \\
சாரிங்க அண்ணாச்சி... நானும் சரியாக கவனிக்கவில்லை.
தங்கள் வரவுக்கு நன்றி.
\\ सुREஷ் कुMAர் said...
//
சுரேஷ் குமார் அண்ணன்
//
இது வன்முறையின் உச்ச வட்டம்.. (முடிவில்லாத வன்முறை என்பதால்..)\\
இதெல்லாமா வன்முறை ?
//
அண்ணன் செல்வேந்திரன் அவர்கள் கஸ்டமர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைப் பற்றி சொன்னார்.
//
ஆமா.. அவருக்கு துறைசார்ந்த அனுபவம் பலது இருக்கு.. பெரிய ஆள்தான்..
\\सुREஷ் कुMAர் said...
//
யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல..
//
அவிங்க எப்போமே அப்டித்தாங்க.. நம்ம எங்க இருந்தாலும் தேடிப்புடிச்சு வெரட்டுவாங்க... \\
உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கா?
//
தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார்.
//
இங்கையாச்சும் தம்பின்னு உண்மைய சொன்னதுக்கு நன்றி..
நான் எப்போ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்'னு டயலாக் வுட்டேன்..
//
என்னைப் பார்க்க வந்துவிட்டு, அவர் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ, கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும்.
//
அண்ணா.. என்னணா இப்டி சொல்லிட்டிங்க..
எனக்கும் கேமேராவுக்கும் என்ன சம்பந்தம்..
//
இன்று அரவிந்தனின் பிறந்த நாள். காலையிலேயே நண்பர்கள் பலரும் தொலைப் பேசியில் பேசி அரவிந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
//
நான்தான் சொல்லாம விட்டுட்டேன்.. சாரி..
//
சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.
//
இருந்ததே நீங்க ரெண்டு பேர்தான் அப்புறம் என்ன தனிப்பட்ட முறையில்..
ஆமா அது தனிபட்ட முறையிலா.. இல்லை தண்ணிபட்ட முறையிலா..
அடச் சே... அலங்காரைத் தொட்டாப்புலதான் எங்க வீடு.... சொல்லவே இல்ல?!
//
என்னோட காமிராவில் படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை.
//
எங்க மூஞ்சிய பாத்ததுனால வந்த விளைவா இருக்கும்..
புது கேமராவுக்கு சேதாரம் ஏதும் ஆகிட கூடாதுன்னு நெனச்சிங்களோ..
//
அதனால் படங்கள் கொடுத்து உதவிய அண்ணன் சுரேஷ் குமாருக்கு நன்றிகள் பல.
//
அண்ணே.. இதுக்கெலாம் எதுக்குங்க நன்றி சொல்லிக்கிட்டு..
என்னையெல்லாம் சந்திக்க பெரியமனசு பண்ணின உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்..
என்னை அண்ணே சொன்னது மாட்டும் லாஜிக்மீறல்.. மத்தபடி நல்லாஇருக்கு..
இந்த முறையும் நிகழ்வுகளை நல்லா நியாபகப்படுத்தி அழகா சொல்லிருக்கிங்க..
சந்திப்பு நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல..
//உடுமலை என்றவுடன் எனக்கு ஞாபகத்துக்கு வருவது சின்னார் தாங்க. அங்கு ஒரு முறை சென்று இருக்கின்றேன். அங்கு கேரளா பார்டரில் ஒரு வாட்ச் டவர் உண்டு. அதில் அமர்ந்து மிருகங்களை பார்ப்பது ஒரு ரசமான விசயம். நீங்க சின்னார் போயிருக்கீங்களா?
பொள்ளாச்சி போகும் வழியெல்லாம் குளு குளு வென்றுதாங்க இருந்தது.
அழகான ஊர்கள். அமைதியான மக்கள்.//
எங்க வீடு சின்னார் போற வழில தான் ஆசானே. காலேஜ்ல படிக்கும்போது பெரும்பாலான ஞாயித்துக்கிழமைகள் பைக்ல அமராவதி, சின்னார், திருமூர்த்திமலைன்னு கெளம்பிருவோம். ஹூம் பாருங்க உங்கள துபாய்ல வந்து சந்திக்கணும்னு விதி. எப்பவாச்சும் முடிஞ்சா உங்களை மாதிரி மனிதர்களை எங்க ஊரை சுத்தி இருக்க எல்லா எடத்துக்கும் கூட்டிப் போய் காட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
நல்ல அனுபவம் அண்ணே
\\ கலகலப்ரியா said...
//Mahesh said...
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு...//
நல்லா கேளுங்கண்ணே.. ஓ.. ! ச்சே.. இங்க வந்தாலே யண்ணே.. யக்கான்னே வருதே.. (ராகவன் அங்கிள் .. கொஞ்சம் பார்த்து கூப்டுங்க.. ) //
யக்கோவ்... அங்கிளாஆஆஆஆஆஆஆஆஆஆ///
Frm thenammailakshmanan:-
யக்கோவ்... ரொம்ப புகழறீங்க..
நான் எழுதுவது எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க... சும்மா கிறுக்கிகிட்டு இருக்கோம்.
நீங்க எழுதறீங்களே இது எழுத்து.
ஹேமா அவர்கள் கவிதை, நேசமித்ரன் அவர்களின் கவிதைகள்... அதுதாங்க எழுத்துகளின் உயிர் நாடி. நான் எல்லாம் சும்மா.
பின்னூட்டம் போடுவது நமக்கு இஷ்டமான ஒன்று. அதனால் அதை செய்து கொண்டு இருக்கின்றோம்.
Frm thenammailakshmanan:-
யக்கோவ்... ரொம்ப புகழறீங்க..//
எல்லாத் தம்பிங்களையும் அண்ணனாக்கிட்ட மாதிரி சந்தடி சாக்குல தங்கச்சியான என்னையும் அக்காவாக்கீட்டாரே இந்த ராகவன் ....தம்பிங்களா கொஞ்சம் அவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா
நல்ல கவரேஜ் அண்ணே
கலக்கல் பதிவு அண்ணே:)
நல்லாயிருக்கு.
அடுத்த பதிவு எப்போ?
சாரிண்ணா. 8 நாள் லீவு முடிஞ்சு இப்பதான் வந்தேன். பாசப்பறவைகள் சூப்பரா சிறகடிச்சி பறக்குது. நீங்க பாசப்பெட்டகம்ணே.
// सुREஷ் कुMAர் said...
//
தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார்.
//
இங்கையாச்சும் தம்பின்னு உண்மைய சொன்னதுக்கு நன்றி..
நான் எப்போ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்'னு டயலாக் வுட்டேன்.. //
இவ்வளவு ஞாபகமறதியா உங்களுக்கு... அவ்...அவ்...
// सुREஷ் कुMAர் said...
//
சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.
//
இருந்ததே நீங்க ரெண்டு பேர்தான் அப்புறம் என்ன தனிப்பட்ட முறையில்..
ஆமா அது தனிபட்ட முறையிலா.. இல்லை தண்ணிபட்ட முறையிலா.. //
இல்லீங்க தனிப்பட்ட முறையில்தாங்க.
\\ பழமைபேசி said...
அடச் சே... அலங்காரைத் தொட்டாப்புலதான் எங்க வீடு.... சொல்லவே இல்ல?! \\
அட்டடே... தெரியாம போயிடுச்சுங்களே...
\\ நாகா said...
//உடுமலை என்றவுடன் எனக்கு ஞாபகத்துக்கு வருவது சின்னார் தாங்க. அங்கு ஒரு முறை சென்று இருக்கின்றேன். அங்கு கேரளா பார்டரில் ஒரு வாட்ச் டவர் உண்டு. அதில் அமர்ந்து மிருகங்களை பார்ப்பது ஒரு ரசமான விசயம். நீங்க சின்னார் போயிருக்கீங்களா?
பொள்ளாச்சி போகும் வழியெல்லாம் குளு குளு வென்றுதாங்க இருந்தது.
அழகான ஊர்கள். அமைதியான மக்கள்.//
எங்க வீடு சின்னார் போற வழில தான் ஆசானே. காலேஜ்ல படிக்கும்போது பெரும்பாலான ஞாயித்துக்கிழமைகள் பைக்ல அமராவதி, சின்னார், திருமூர்த்திமலைன்னு கெளம்பிருவோம். ஹூம் பாருங்க உங்கள துபாய்ல வந்து சந்திக்கணும்னு விதி. எப்பவாச்சும் முடிஞ்சா உங்களை மாதிரி மனிதர்களை எங்க ஊரை சுத்தி இருக்க எல்லா எடத்துக்கும் கூட்டிப் போய் காட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.\\
நன்றி நாகா. எனக்கும் உங்ககூட அதுமாதிரி எல்லா இடங்களையும் பார்ப்பது மிக்க சந்தோஷமான விசயம். விரைவில் நடக்கும் என எதிரிப்பார்க்கின்றேன்.
// நசரேயன் said...
நல்ல அனுபவம் அண்ணே //
நன்றி நசரேயன் அண்ணே.
// Cable Sankar said...
நல்ல கவரேஜ் அண்ணே //
நன்றி கேபிளாரே. தாங்கள் 4 லட்சம் ஹிட்ஸ் வாங்கியதற்கும், அலெக்சாவில் 100,000 க்குள் வந்ததற்கும் வாழ்த்துகள்.
// நிஜமா நல்லவன் said...
கலக்கல் பதிவு அண்ணே:) //
நன்றி நல்லவரே.
\\ butterfly Surya said...
நல்லாயிருக்கு.
அடுத்த பதிவு எப்போ? \\
நன்றி சூர்யா. தங்களை சென்னையில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
// S.A. நவாஸுதீன் said...
சாரிண்ணா. 8 நாள் லீவு முடிஞ்சு இப்பதான் வந்தேன். பாசப்பறவைகள் சூப்பரா சிறகடிச்சி பறக்குது. நீங்க பாசப்பெட்டகம்ணே. //
நன்றி நவாஸுதன். விடுமுறை எல்லம் நன்றாக கழிந்ததா?
ரம்ஜான் விமர்சையாகக் கொண்டாடினீர்களா?
அண்ணே என் நண்பன் அர்விந்த் எப்படி இருக்கான்??
வெள்ளை சட்டை மேட்டர்
செம கல கல
-----------------------
பிரபல பதிவர் அண்ணன் - வால் பையனுடன்.. ;)
//தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்//
தெரியும் ஆனா தெரியாதுன்னு தானே வழக்கமா சொல்லுவாக
//கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும்.//
இந்த கேமரா மேட்டர் அடிக்கடி வந்து உங்கள் பேஜாருக்குது அண்ணே!! கேமரா மேன்வல நீங்க மனப்பாடம் செஞ்சாத்தேன் சரியா வரும் போல.
வழக்கம் போல கலக்கல் பதிவு, அரவிந்தினன் பிறந்த நாள் நிகழ்வு ஒரு ஹைலைட்!! பகிர்விற்க்கு நன்றி அண்ணே!!
நல்ல ஜாலியா இருக்கு அண்ணே..! பதிவு ..!
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே என் நண்பன் அர்விந்த் எப்படி இருக்கான்?? //
நன்றி அப்துல்லா அண்ணே. உங்கள் நண்பன் அரவிந்த் மிக்க நலம்.
// நட்புடன் ஜமால் said...
வெள்ளை சட்டை மேட்டர்
செம கல கல
-----------------------
பிரபல பதிவர் அண்ணன் - வால் பையனுடன்.. ;) //
நன்றி ஜமால்.
// ஷஃபிக்ஸ்/Suffix said...
//தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்//
தெரியும் ஆனா தெரியாதுன்னு தானே வழக்கமா சொல்லுவாக //
வேற யாராவதாக அப்படித்தான் அந்த ஓட்டுனர் சொல்லியிருப்பார். நான் எப்போ டூர் போனாலும், இவரோ (அ) இவரது அண்ணனோதான் எனக்கு ஓட்டுனராக வருவார்கள். 10 வருடத்திற்கு மேலான பழக்கம். அதனால்,என்னிடம் அப்படி சொல்லவில்லை.
// இந்த கேமரா மேட்டர் அடிக்கடி வந்து உங்கள் பேஜாருக்குது அண்ணே!! கேமரா மேன்வல நீங்க மனப்பாடம் செஞ்சாத்தேன் சரியா வரும் போல. //
சரியாச் சொன்னீங்க... படிக்கிற காலத்துலேயே பாட புஸ்தகத்தை ஒழுங்கா படிச்சதில்லை.. இப்ப மேனுவலை படிக்க போறமா?
// ஜீவன் said...
நல்ல ஜாலியா இருக்கு அண்ணே..! பதிவு ..! //
நன்றி ஜீவன் அண்ணே.
//அண்ணன் சுரேஷ்குமார், அண்ணன் வால்ஸ் & me//
சரிங்க அங்கிள் !!!
//இராகவன் நைஜிரியா said...
\\ கலகலப்ரியா said...
//Mahesh said...
எல்லாரையும் அண்ணன்...அண்ணன்னு சொல்லிட்டா.... நாங்க உங்களை தம்பின்னு நம்பிடுவோமா? ஐ...அஸ்கு...புஸ்கு...//
நல்லா கேளுங்கண்ணே.. ஓ.. ! ச்சே.. இங்க வந்தாலே யண்ணே.. யக்கான்னே வருதே.. (ராகவன் அங்கிள் .. கொஞ்சம் பார்த்து கூப்டுங்க.. ) //
யக்கோவ்... அங்கிளாஆஆஆஆஆஆஆஆஆஆ...//
அங்கிள்ன்னு சொன்னதுக்காக வீட்டுப் பக்கம் வராதிருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறேன்..
ஹா!ஹா! ஹா! அண்ணே! நல்ல காமெடிண்ணே! அடுத்து திருப்பூரா? அசத்துங்க
தொடருங்கள்.தொடர்கிறோம்.
சந்திப்புகளும் தொகுப்புகளும் சூப்பர்
வாழ்த்துக்கள்
It's been a long time since you wrote a post?
//குருடனை ராஜபார்வை பார்//
எப்பிடி அண்ணே !
எல்லாம் தான வர்றதுன்னு சொல்லுவாகளே அப்பிடித்தானா இதுவும்
மொழியில் என்ன ஒரு அங்கதம் .சுய எள்ளல் .சுவாரஸ்யமான மொழி ஓட்டம்
கலக்குங்க சாமி
அருமையான நடை ராகவன்.எல்லோரையும் நீங்கள் அன்பு செய்கிறீர்களா,எல்லோரும் உங்களை கொண்டாடுகிறார்களா என பிரித்து பார்க்க முடியவில்லை.நேசனும் உங்களை சிலாகித்தார்-தொலை பேசியில்.சந்தோசமான மனிதரை பார்த்த சந்தோசம் இன்று!
என் ப்ளாக்கில் தங்களின் கருத்திற்கு நன்றி..தொடர்து வாங்க ராகவன்..
அன்புடன்,
அம்மு.
அண்ணா உங்க பதிவு அருமை!
எப்படியோ எல்லாரையும் அண்ணா என்று கூறி நீங்க ரொம்ப சின்னப் பிள்ளை ஆகிவிட்டீர்கள்.
படங்கள் அனைத்தும் அருமை, குறிப்பா சஞ்சய் அண்ணனை அருமையா படம் பிடிச்சிருக்கீங்க :))
பார்த்து அடுத்த முறை வரும்போது கவனித்து விடப்போகிறார்கள் :)
வணக்கம்,
இப்போது நான் நைஜீரியாவில் வசிக்கிறேன். நானும் ஒரு பிளாக் வைத்து நடத்துகிறேன். அதற்க்கு பெயர் www.tamilpadhivugal.blogspot.com
96 கமெண்ட்ஸா கலக்குறீங்க ராகவன் இன்னும் 3 வந்தா சென்டம்தான்
congrats for ur century
சார். நம்ம திண்ணைல உங்கள வம்புக்கு இழுத்திருக்கேன். வாங்க சார்:))
ஆகா ஆகா அருமை அருமை - உலகில் உள்ள அனைவரின் அருமைத் தம்பி ராகவனின் இடுகை அபாரம்
படித்தே ரசித்தேன் - மறுமொழிகள் உட்பட
நல்வாழ்த்துகள் - தம்பி ராகவனுக்கும் - செல்லம் அரவிந்திற்கும்
ஆனாலும் சுரேஷுப்பயல எல்லாம் அண்ண்ண்ண்ண்ண்ண்னனு சொன்னது குரோர்மச்
நான் நூறாவதா - நெசமாவா
சிவகங்கை பாவன்னா ராஜாராம்,மொய் நூத்தி ஒன்னு! இரட்டை சதம் அடிங்க அண்ணாச்சி.
article arumai
visit my site
vaalpaiyyan.blogspot.com
Post a Comment