Saturday, October 10, 2009

படங்கள்

இந்த தடவை இந்தியா வந்திருந்த போது, இரண்டு நாட்கள் குன்னூரில் தங்கியிருந்தேன். அப்போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு.

நாங்களும் படம் காட்டுவோமில்ல..


ரோஜாவில் இரண்டு கலர் ரோஜா... ரொம்ப பிடித்து எடுத்தப் படம்..
பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை மறந்தேனோ ....



குன்னூர் சிம்ஸ் பூங்காவினில் இருக்கும் பூ.. அதன் இதழ்களின் கவர்ச்சியில் மயங்கி எடுத்தப் படம்.



சிம்ஸ் பூங்கா வாசலில் சோளம் விற்றுக் கொண்டு இருந்த நண்பர்.. ராஜ பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் வியாபாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் எவ்வளவோ செலவு செய்வார்கள், ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் தான் அதிகமாக பேரம் பேசுகின்றனர் என்றார். அவர் விற்கும் சோளம், ஹை ப்ரீட் வகையைச் சேர்ந்தது என்றும், ஒரு வாரத்தில் அனைத்தும் விற்றுவிட வேண்டும் என்றும், அப்படி விற்காமல் போனால் அது அனைத்தும் நஷ்டம் என்றும் கூறினார். அவரிடம் பேரம் சொல்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கின்றது.



சிம்ஸ் பூங்கா ஒரு கண்ணோட்டம் - அறிவிப்புப் பலகை.



சிம்ஸ் பூங்கா வாயில் இருக்கும் அழகாகச் செதுக்கப் பட்ட புல்வெளி.



சிம்ஸ் பூங்காவினில் இருந்த பூ - பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



சிம்ஸ் பூங்காவில் தான் இந்தப் பூவையும் படம் பிடித்தேன்... பெயர் தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருந்த குன்னூர் கிளப்.



குன்னூர் கிளப்பின் மற்றொருத் தோற்றம்.



பூக்களின் ராஜா - ரோஜா



இந்த ரோசாவின் கலர் - என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை



குன்னூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த தோட்டத்தில் எடுக்கப் பட்ட படம் - பூவின் பெயர் தெரியவில்லை - தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.




குன்னூர் செல்லும் வழியில் உள்ள பாலம். அதன் அழகு பிடித்து இருந்ததால் எடுத்தப் படம்.

இந்தப் படங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன். மேலும் படம் போடலாங்க.

97 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆ??????

http://urupudaathathu.blogspot.com/ said...

அட ஆமாம்!!! நான் தான் இன்னிக்கு மொத போனி!!!

டண்டனுக்க டண்டனுக்கா...

http://urupudaathathu.blogspot.com/ said...

//நாங்களும் படம் காட்டுவோமில்ல..//

நாங்களும் படம் பார்ப்போமில்ல...

http://urupudaathathu.blogspot.com/ said...

//ரோஜாவில் இரண்டு கலர் ரோஜா... ரொம்ப பிடித்து எடுத்தப் படம்..///


எது இந்த காங்கிரஸில் சேர்ந்துச்சே அந்த ரோஜாவையா சொல்றீங்க???
ரொம்ப பிடிக்குமோ?? அண்ணி ப்ளீஸ் நோட் திஸ் வோர்ட்..

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing

But I heard Nigeriya has same climate and natural resources of what OOty has.

I had been to Kenya for a week's time and observed full of trees , greenary.

http://urupudaathathu.blogspot.com/ said...

அடடா கடை காத்து வாங்குதே!!!
யாராச்சும் வாங்கப்பா...
கும்மலாம்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படங்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே படங்கள் அருமை.. அதுவும் குன்னூர் கிளப் சூப்பரோ சூப்பர்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///.பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை மறந்தேனோ ....///


கவித கவித...

யாராச்சும் அண்னனுக்கு சோடா சொல்லுங்கப்பா..

http://urupudaathathu.blogspot.com/ said...

இன்னிக்கு தான் ஒரு முடிவோட வந்தேன்.. ஆனா யாருமே இல்லியே எங்கூட !!! :-(

தமிழ் அமுதன் said...

எங்க ராகவன் அண்ணன் மனசுபோல இருக்கு பூக்களின் படங்கள்..!

http://urupudaathathu.blogspot.com/ said...

சிம்ஸ் பூங்கா வாசலில் சோளம் விற்றுக் கொண்டு இருந்த நண்பர்.. ///ராஜ பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் வியாபாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் எவ்வளவோ செலவு செய்வார்கள், ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் தான் அதிகமாக பேரம் பேசுகின்றனர் என்றார். அவர் விற்கும் சோளம், ஹை ப்ரீட் வகையைச் சேர்ந்தது என்றும், ஒரு வாரத்தில் அனைத்தும் விற்றுவிட வேண்டும் என்றும், அப்படி விற்காமல் போனால் அது அனைத்தும் நஷ்டம் என்றும் கூறினார். அவரிடம் பேரம் சொல்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கின்றது.////



எப்படிண்ணே எல்லா பதிவுலேயும் ஒரு நச்” கருத்த சொல்றீங்க???

http://urupudaathathu.blogspot.com/ said...

//மேலும் படம் போடலாங்க.///

அப்போ இன்னும் 4-5 பாகங்கள் வரும் போல இருக்கே!!!

நிஜாம் கான் said...

அண்ணனுக்கு பூக்கள் படமென்றால் உயிர் என்று நினைக்கிறேன். அல்லாமே அருமை. பூவோடு பூவாக‌ எங்கள் அரவிந்த்ம் அருமையா போஸ் குடுக்கிறார். சோள வியாபாரியின் நிலை முற்றிலும் உண்மை. அருமை அண்ணே!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆ??????
//

ஆகா.... வாங்க, மலைக்கோட்டையார்.... தரிசனத்துக்கு நன்னிங்கோ!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...


டண்டனுக்க டண்டனுக்கா...
//

இன்னும் அவளோடத்தான் குடித்தனமா? நல்லா நடக்கட்டும்!!

vasu balaji said...

நல்லா காட்ரீங்கண்ணே படம். அருமை. அக்கா குன்னூர்ல இருந்தப்போ பார்த்தது சிம்ஸ்பார்க். ஓசில ஒரு விசிட் உங்க புண்ணியத்துல.

கலகலப்ரியா said...

superb... (tamilmanam nethila irunthu sothappals.. :(( appaalikka vote poduren.. )

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான படங்கள். சிம்ஸ் பூங்காவில் அதிகமாக டேலியா என்ற பூ இருக்கும். மேட்டுப்பாளையத்தில் கூட இந்த வகைப் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

blogpaandi said...

Nice pictures :)

Menaga Sathia said...

//குன்னூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த தோட்டத்தில் எடுக்கப் பட்ட படம் - பூவின் பெயர் தெரியவில்லை - தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.// டேராப்பூ அண்ணா.அந்தப்பூவையே மறந்துவிட்டேன்.படத்தைப் பார்த்ததும் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு.

எல்லா பூக்கள் படமும் சூப்பரா இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படங்கள் அருமை

ஆ.ஞானசேகரன் said...

படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பா

Unknown said...

அருமையான படங்கள்

SUFFIX said...

அண்ணே சூப்பர், பூப்பூவா பூத்திருக்கு பதிவு முழுசும்!!நல்லாத்தான் காட்டி இருக்கிங்கய்யா படம், நன்றி!!

SUFFIX said...

//சிம்ஸ் பூங்காவினில் இருந்த பூ - பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

ஆமாண்ணே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம் யாரும் சரியான பேரு சொல்லைனா உங்க பேரையே அதுக்கு வச்சுடலாம்ணே!!

வினோத் கெளதம் said...

தல கலக்கல் புகைப்படங்கள்..:))

பழமைபேசி said...

//மேலும் படம் போடலாங்க.//

மேலும் மேலும் தாராளமாப் போடுங்க படம்!

ப்ரியமுடன் வசந்த் said...

மனசுக்கு சந்தோஷமா இருக்கு சார் இந்த பூக்களை பாக்கும்போது....

butterfly Surya said...

படங்கள் அருமை அண்ணே...

Pink colour டேரி பூ என்று நினைக்கிறேன்.

ஹேமா said...

இராகவன்,அழகான பூக்கள்.
இலங்கையில் மலைப்பிரதேசங்களில் இந்த வகைப் பூக்களைப் பார்த்திருக்கிறேன்.

Unknown said...

அதுதான பார்த்தேன்...!! நைஜீரியாவுல இப்புடி பூ பூக்குதான்னு...!! அழகான பூ தொகுப்ப்பு....!! குன்னூர் .... ஊட்டி .. ஆஹா... ஆஹா.... அது ஒரு அழகிய கனா காலம்....!! எனது கல்லூரி வாழ்க்கை நான்கு வருடம் அங்கு குப்பை கொட்டிய மலரும் நினைவுகள் ......!!

goma said...

பூக்களெல்லாம் அழகோ அழகு.அழகை ரசிக்க பெயர் எதற்கு?

பிரபாகர் said...

நல்லா படம் போடறீங்க... இனிமேலும் நிறைய போடுங்க....

(ஓட்டியாச்சு.... அதாங்க, ஓட்டுக்கள குத்தியாச்சு...)

பிரபாகர்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - நானும் குன்னூரிலே தங்கி இருந்தேனெ - படம் எல்லாம் எடுக்கலியே - அருமையான படங்கள் - இயற்கைக்காட்சிகள் - நன்று நன்று ராகவன் நல்வாழ்த்துகள்

puduvaisiva said...

very nice Ragavan

ஜெட்லி... said...

நல்ல ரசிச்சு எடுத்து இருக்கீங்க ஜி....

நிகழ்காலத்தில்... said...

// உருப்புடாதது_அணிமா said...

//ரோஜாவில் இரண்டு கலர் ரோஜா... ரொம்ப பிடித்து எடுத்தப் படம்..///


எது இந்த காங்கிரஸில் சேர்ந்துச்சே அந்த ரோஜாவையா சொல்றீங்க???
ரொம்ப பிடிக்குமோ?? அண்ணி ப்ளீஸ் நோட் திஸ் வோர்ட்..//

எனக்கும் அண்ணன் மீது இதே சந்தேகம்தான் :))


//அதன் இதழ்களின் கவர்ச்சியில் மயங்கி எடுத்தப் படம்

பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை மறந்தேனோ ..


பூக்களின் ராஜா - ரோஜா

இந்த ரோசாவின் கலர் - என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை//


அணிமா கொஞ்சம் அண்ணிக்கிட்ட நல்லாவே பத்த வச்சுருங்க

(ஏதோ என்னால முடிஞ்சது)

வெண்ணிற இரவுகள்....! said...

//இவர் வியாபாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் எவ்வளவோ செலவு செய்வார்கள், ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் தான் அதிகமாக பேரம் பேசுகின்றனர் என்றார். அவர் விற்கும் சோளம், ஹை ப்ரீட் வகையைச் சேர்ந்தது என்றும், ஒரு வாரத்தில் அனைத்தும் விற்றுவிட வேண்டும் என்றும், அப்படி விற்காமல் போனால் அது அனைத்தும் நஷ்டம் என்றும் கூறினார். அவரிடம் பேரம் சொல்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கின்றது.//

ஆம் cool drinks என்ற பெயரில் பூச்சி கொல்லி மருந்துகளை குடிப்பார்கள்....நல்ல சிந்தனை தோழா

Anonymous said...

DERI POO NU SOLVANGA ANNA ATHAI..POOKALIN AZHAGEY THANI ...

Malini's Signature said...

Pink பூவை அங்கு டேலியான்னு சொல்லுவாங்க..அங்கே இருக்கும் மக்கள் இந்த பூக்களை அதிகமா விரும்ப மாட்டாங்க...ஆனா உங்க போட்டோஸ் பாக்கும் போது அடாடா இவ்வளவு அழகான்னு இருக்கு!!!!!

S.A. நவாஸுதீன் said...

படங்கள் அத்தனையும் அருமையா இருக்கு அண்ணா.

*************************************

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//சிம்ஸ் பூங்காவினில் இருந்த பூ - பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

ஆமாண்ணே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம் யாரும் சரியான பேரு சொல்லைனா உங்க பேரையே அதுக்கு வச்சுடலாம்ணே!!

என்ன மாதிரியே யோசிக்கிறீங்க ஷஃபி. ஐ லைக் இட்

நட்புடன் ஜமால் said...

டேரி=யா - டேலி-யா

மிக அருமையாக இருக்கு அண்ணே.

கலையரசன் said...

அண்ணாசச்சி! உங்களுக்குள்ள ஒரு பி.சி. ஸ்ரீராம் ஒளிஞ்சிருக்குறது இப்பதான் தெரியுது!
அழகான புகைப்படங்கள்...

goma said...

நாங்கள் ஊட்டியில் 2 ஆண்டுகள் இருந்த சமயம் ,என் கையில் இருந்தது 110-கோடக் கேமராதான்.
அதனால் படங்கஎல்லாம் சோ சோ தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லா படத்தையும் அருமையா எடுத்திருக்கீங்க அண்ணே..நல்லா இருக்கு..

தேவன் மாயம் said...

உங்களுக்குள் இப்படி ஒரு ரசிகனா!

கலகலப்ரியா said...

vote poattachche..

அ.மு.செய்யது said...

க‌லைக்க‌ண் ???? !!!!!!!!!

50 !!!

அப்துல்மாலிக் said...

அண்ணே துபாய்லே வாங்கிய கேமராவுலே எடுத்த படம் என்று சொல்லலியே என்னாச்சி..

நல்ல பகிர்வு, நேரில் விஸிட் செய்த ஃபீலிங்க்ஸ்

RAMYA said...

பூக்கள் அனைத்தும் அருமை அண்ணா!

எல்லாம் நல்லா வந்திருக்கு!

ஆனா அதுலே பாருங்க ரொம்ப நாட்கள் கழித்து உருப்படாத அணிமாவின் லோகோ பார்த்தேன்
மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.

ஆனா பாருங்க யாருமே இல்லாத நேரத்திலே தனியா உக்காந்து டீ ஆத்தி இருக்காரு அதை நினைச்சாதான் அழுவாச்சியா வருது:(

தங்கி இருந்த விடுதியின் நுழை வாயிலும் கூட அருமை :-)

RAMYA said...

//நாங்களும் படம் காட்டுவோமில்ல..//

காட்டுங்க அண்ணா நாங்க இருக்கோம் பார்க்க :-)

RAMYA said...

வழக்கம் போல நானு செம லடேன்னு நினைக்கிறேன் :))

பாலா said...

nalla irukku ragavan anne
poovellam muthamidanum pola thonuthu

அன்புடன் மலிக்கா said...

ரோஜாக்களைப்பார்க்கும்போது கண்களுக்குள் குளிர்கிறது,

ரொம்ப ரொம்ப அருமையான படங்கள்
போட்டோகிராஃபர் யாரு?

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

அறிவிலி said...

படங்கள் அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது.தொடருங்கள்.

இராகவன் நைஜிரியா said...

வாப்பா தம்பி அணிமா... நீ இல்லாம் பதிவே ரொம்ப போரடிக்குது... கும்மி என்றால் அணிமா, அணிமா என்றால் கும்மி... என்ற நிலை மாற அனுமத்திக்கலாமா..

வா தம்பி வா.. திரும்ப பழய நிலைக்கு வா..

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆ????? //

ஆமாம் நீங்க தான் போணி...

//எது இந்த காங்கிரஸில் சேர்ந்துச்சே அந்த ரோஜாவையா சொல்றீங்க???
ரொம்ப பிடிக்குமோ?? அண்ணி ப்ளீஸ் நோட் திஸ் வோர்ட்.. //

அவ்...அவ்... உங்களை மாதிரி ஒரு தம்பி போதும் என்னை மாட்டிவிட.. வீட்டுக்கு வா கச்சேரி வச்சுகிறேன்.

// அப்போ இன்னும் 4-5 பாகங்கள் வரும் போல இருக்கே!!! //

இல்லீங்க இன்னும் ஒரு பாகம் அல்லது இரண்டு பாகம் மட்டும் வருங்க

இராகவன் நைஜிரியா said...

நன்றி குப்பன்.யாஹூ...

இங்கு நான் அபுஜாவை விட்டு எங்கும் சென்றதில்லை. தம்பி அணிமாவுக்கு என்னைவிட நைஜிரியா பற்றி நன்கு தெரியும்.

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ) - தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

நன்றி ஜீவன் அண்ணா

நன்றி இப்படிக்கு நிஜாம்

நன்றி பழமை ஐயா
மலைக் கோட்டையாரை தொலைபேசியில் பிடிப்பதே இப்போதெல்லாம் அரிதாகிவிட்டதுங்க.
// இன்னும் அவளோடத்தான் குடித்தனமா? நல்லா நடக்கட்டும்!!//

நல்லா இருந்தா சரிதானுங்க

இராகவன் நைஜிரியா said...

நன்றி வானம்பாடிகள் பாலாண்ணே...

நன்றி கலகலப்ரியா.

நன்றி செந்தில்.

நன்றி blogpaandi

நன்றி Mrs.Menagasathia - பேரைச் சொன்னதற்கு நன்றிங்க

நன்றி T.V.Radhakrishnan

நன்றி ஆ. ஞானசேகரன்

நன்றி என் பக்கம்

நன்றி ஷ‌ஃபிக்ஸ்/Suffix - என் பெயரையா... ம் நடக்கட்டும்.. நடக்கட்டும்

நன்றி வினோத் கௌதம்

நன்றி பிரியமுடன் வசந்த்

இராகவன் நைஜிரியா said...

நன்றி butterfly Surya அண்ணே.. நல்லா இருக்கீங்களா..

நன்றி ஹேமா

நன்றி லவ்டேல் மேடி
// எனது கல்லூரி வாழ்க்கை நான்கு வருடம் அங்கு குப்பை கொட்டிய மலரும் நினைவுகள் ......! //
குப்பை கொட்டினீங்களா மேடி...அவ்...அவ்...

நன்றி goma

நன்றி பிரபாகர் - ஓட்டுப் போட்டதற்கு நன்றிகள் பல.

நன்றி cheena (சீனா) ஐயா.

நன்றி ♠புதுவை சிவா♠

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜெட்லி

நன்றி நிகழ்காலத்தில்...

// அணிமா கொஞ்சம் அண்ணிக்கிட்ட நல்லாவே பத்த வச்சுருங்க

(ஏதோ என்னால முடிஞ்சது) //

நீங்களுமா... பூரி கட்டை எனக்கு வேண்டாங்க.. அவ்...அவ்...அவ்..

நன்றி வெண்ணிற இரவுகள்....!

//ஆம் cool drinks என்ற பெயரில் பூச்சி கொல்லி மருந்துகளை குடிப்பார்கள்....நல்ல சிந்தனை தோழா //
தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல.

நன்றி தங்கச்சி தமிழரசி - பின்னூட்டத்தை ஒரு கவிதையாகப் போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேங்க.

நன்றி ஹர்ஷினி அம்மா - அந்த பிங்க் பூ என் மனசை ரொம்பவும் கவர்ந்ததுங்க. ஆனால் ரோஜா கண்களை விட்டு இன்னும் அகலவேயில்லீங்க. அவ்வளவு அழகாக இருந்துச்சுங்க.

நன்றி S.A. நவாஸுதீன் - நல்லா யோசிக்கீறீங்கப்பா - தம்பிகள் எல்லாமே இப்படித்தானோ?

நன்றி நட்புடன் ஜமால்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி தம்பி கலையரசன். நீங்க வாங்கிக் கொடுத்த காமிராதாங்க அவ்வளவு அழகா படம் எடுத்து இருக்கு. நன்றி.

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

நன்றி மருத்தவர் தேவன் மாயம். உங்களை சந்திக்காதது இன்றும் வருத்தமாக இருக்கின்றது. அடுத்த தடவை வரும் போது அவசியம் சந்திக்க வேண்டுங்க.

நன்றி அ.மு.செய்யது. 50 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள்.

நன்றி தம்பி அபுஅஃப்ஸர். ஆமாம் சரியாகச் சொன்னீர்கள். துபாயில் வாங்கிய கேமிராவில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் தாங்க அது. நினைவூட்டலுக்கு நன்றிகள் பல.

நன்றி தங்கச்சி ரம்யா.
// வழக்கம் போல நானு செம லடேன்னு நினைக்கிறேன் :))// லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவதுதான் என் தங்கை.

நன்றி பாலா

நன்றி அன்புடன் மலிக்கா - அழகுக் கவிதை எழுதுபவர் என் பதிவில் - நன்றிகள்.

நன்றி ஆப்பு

// ஐ எம் பேக்!! // ஏன் இப்படி பின்னாடி இருக்கீங்க... முன்னாடி வாங்கண்ணே... நோ பேக் ப்ளீஸ் கம் ஃபார்வார்ட்.

நன்றி அறிவிலி

நன்றி ஸ்ரீ.

மங்களூர் சிவா said...

படங்கள் அருமை.

ஈரோடு கதிர் said...

ரசித்தேன்

Prapa said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

coolzkarthi said...

அண்ணே என்ன ஒரே கலர் கலரா இருக்கு......???(மலர்களை போல் அண்ணன் உறங்குகிறார்....)

அன்பேசிவம் said...

அண்ணா உங்க கடைசி தம்பி முரளி, எப்ப்டி இருக்கிங்க? படங்கள் அருமை அடுத்த பதிப்பை எதிபார்க்கிறேன். பூக்கள் போதும் கொஞ்சம் இயற்கை காட்சிகள் போடுங்கள். :-)

பின்னோக்கி said...

அழகான பூக்கள் பனித்துளிகளுடன். படித்த கவிதை ஒன்று

புல்லின் நுனியில்
பனித்துளி
ஓ ! பூமிக்குள் என்ன புழுக்கம்.

நேசமித்ரன் said...

குன்னூர் என்னூர் என்போர் கூட
மின்னுதவி விண்ணில் பெற்று
கண்குளிர ஒளிரும் பூவை
பெண்பார்க்கும் பெண்ணின் கூந்தல்
மண் நுழையும் வேராய் குஞ்சம்
புன்னகைக்கும் கொண்டை போல
தன்மையாய் சொன்னதில்லை
மின்னல் கொடியில் படரும் கொடிக்கு
பின்னல் மொய்க்கும் வண்ணத்து பூச்சியாய்
கன்னல் சொல் விளக்கம் தொடர
திண்ணம் மிகு பாறை புரள
இன்னருஞ்சுவை நீர் சுரப்பது ஒப்ப
வெந்நீர் ஊற்றின் கந்தகமாய்
பொன்னென கருத்தை வைத்தார்
அன்பெனும் உதிர சொந்தம்
பண்புள்ள பயல்கள் கூட்டம்
என்னரும் அண்ணா " பாரதத்தில்"
கண்ணனின் பாதம் மானாய்
கன்னங்கரியதோர் தேசத்தில்
வண்ணமலர் படம்கூட
விண்ணூர்தி அவசரத்தில் கைக்குட்டை
இன்னொரு பாதியினதை கொண்டதை
சின்னதாய் சிரித்து உணரும் போது
என்னதைப் போல நுகர்ந்த வாசம்

Thenammai Lakshmanan said...

டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவிந்தின் புகைப் படம் பூக்களின் ராஜாவாய்...

மிக அருமையாக எடுக்கப் பட்ட புகைப்படங்கள் ...

உங்கள் புகைப்படங்களுக்காகவே ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கலாம் ராகவன் நீங்கள்...
அவ்வளவு அருமையாய் இருக்கின்றன

Thenammai Lakshmanan said...

டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவிந்தின் புகைப் படம் பூக்களின் ராஜாவாய்...

மிக அருமையாக எடுக்கப் பட்ட புகைப்படங்கள் ...

உங்கள் புகைப்படங்களுக்காகவே ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கலாம் ராகவன் நீங்கள்...
அவ்வளவு அருமையாய் இருக்கின்றன

Thenammai Lakshmanan said...

பூக்களின் காதலியான என்னையே அசத்திவிட்டன உங்கள் புகைப்படங்கள்

*இயற்கை ராஜி* said...

அருமையான மலர்கள்

மணிஜி said...

பூவுக்கு ”பூ”ன்னுதான் பெயர் ராகவன்

வால்பையன் said...

படங்கள் அனைத்தும் அருமை!

கேமாரா நல்லாத்தான் இருக்கு!

सुREஷ் कुMAர் said...

அண்ணா... நல்லா ரோஜாக்களை எல்லாம் ரொம்ப ரசிச்சு எடுத்திருக்கிங்கபோல..

படங்கள் அனைத்தும் அருமை..

இராகவன் நைஜிரியா said...

நன்றி மங்களூர் சிவா

நன்றி கதிர் - ஈரோடு

நன்றி பிரபா - அடிக்கடி வந்துடுவோமில்ல. கவலைப் படாதீங்க.. நாங்க இருக்கோம்

// coolzkarthi said...
அண்ணே என்ன ஒரே கலர் கலரா இருக்கு......???(மலர்களை போல் அண்ணன் உறங்குகிறார்....) //

நன்றி கார்த்தி... உறக்கமா.. நானா... இல்லீங்க தம்பி.. உங்க பதிவுக்கு தவறாமல் ஆஜர் ஆகிவிடுகின்றேன்.

நன்றி முரளிகுமார் பத்மநாபன். புரிகின்றது... உங்கள் பதிவு பக்கம் வந்து கொண்டுதாங்க இருக்கின்றேன்.. பின்னூட்டம் போடவில்லை அவ்வளவுதாங்க. பின்னூட்டம் வரும். வேலைக் கூடுதல் அதான் கொஞ்சம் பின்னூட்டம் சரியாக இட இயலவில்லை. இயற்கை காட்சிகள் அடுத்த இடுகையில்.

நன்றி பின்னோக்கி - தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். கொடுத்த கவிதை அருமை.

நன்றி தம்பி நேசமித்ரா... பின்னூட்டத்தையும் அழகிய கவிதையாக்கிய உன் கைவண்ணம் மிக அழகு.

நன்றி thenammailakshmanan. உங்க கவிதைக்கு முன் என் இடுகை எல்லாம் ஒன்றுமில்லீங்க

நன்றி இய‌ற்கை

நன்றி தண்டோரா அண்ணே ... சரியாச் சொல்லியிருக்கீங்க...

நன்றி வால் அண்ணே

நன்றி தம்பி सुREஷ் कुMAர் (இப்பத் திருப்தியா..)

நாடோடி இலக்கியன் said...

அருமையான படங்கள் சார்.
நல்லா எடுத்துருக்கீங்க.

Viji said...

hi
first flower name i dont know.Second is ziniya and the last one is mum plant.

அன்புடன் நான் said...

உங்க வலைப்"பூ" மிக அருமை.

க.பாலாசி said...

படங்கள் எல்லாம் உங்களின் ரசனையை எடுத்துக்காட்டுகிறது. நல்ல அனுபவம்....

புதுசா வந்திருக்கேன் எதாவது விருந்தோம்பல் உண்டுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// நாடோடி இலக்கியன் said...
அருமையான படங்கள் சார்.
நல்லா எடுத்துருக்கீங்க. //

நன்றி நாடோடி இலக்கியன்.

// Viji said...
hi
first flower name i dont know.Second is ziniya and the last one is mum plant.//

Thanks a lot Viji for your information and comments.

//சி. கருணாகரசு said...
உங்க வலைப்"பூ" மிக அருமை. //

நன்றி கருணாகரசு.

// க.பாலாஜி said...
படங்கள் எல்லாம் உங்களின் ரசனையை எடுத்துக்காட்டுகிறது. நல்ல அனுபவம்....

புதுசா வந்திருக்கேன் எதாவது விருந்தோம்பல் உண்டுங்களா? //

நன்றி கானாபானா. வாங்க. உங்க வரவு நல்வரவாகுக.

புதுசா வரவங்களை வச்சு நாங்க நல்லா கும்மி அடிப்போம். பரவாயில்லையா சொல்லுங்க. செஞ்சுடுவோம்.

Menaga Sathia said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Sanjai Gandhi said...

குட் குட்.. :)

பா.ராஜாராம் said...

அருமையான பதிவும்,பகிர்வும் அண்ணாச்சி.வேலை பளு.அதனால்தான் வர தாமதம்,மன்னியுங்கள்.தீபாவளி வாழ்த்துக்கள்!

vasu balaji said...

இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா.

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

மகேஷ் : ரசிகன் said...

Photos are good.

இது நம்ம ஆளு said...

அருமையான புகைப்பட தொகுப்பு

Thenammai Lakshmanan said...

Thamks Raagavan for ur DEEPAVALI wishes

same to u

congrats for 100 comments
kalakuriinga

naanga 100 innu enni vena parthukkalaam

ஜோதிஜி said...

முதன் முதலாக இத்தனை பின் ஊட்டங்களைப் பார்த்த முதல் இடுகை இது தான்.

போன வருடம் தான் 18 வருடத்தில் முதன் முறையாக ஊட்டி தேவியர்களுடன் சென்றேன். ரசிக்கும் நிலையில் அன்று இல்லை. ஆனால் அத்தனையும் இன்று தீர்த்து விட்டீர்கள்.

கணக்கு வேலையில் இருந்து, கலாப காதலன், உலகம் சுற்றும் வாலிபன், பூவே உனக்காக, என்று எத்தனை அசாதராணமான அவதாரங்கள் உங்களுக்குள் இருக்கிறது ஐயா?

நிறைந்த மனம் இந்த பூக்களின் அழகைப் போலவே. வாழ்த்துக்கள். வளம் பெற நலம் பெற.

சந்தான சங்கர் said...

பூக்களும் பேசியிருக்கின்றது
நீங்களும் பேசியிருக்கின்றீர்கள்..

அருமை..

பா.ராஜாராம் said...

அண்ணாச்சி,படத்தை மாத்துங்க.நூறு நாளை தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு,(என்ன அருமையான புகை படங்களும்,மின்னிட்டாம் தெறிப்புகளும்!)