நம் நாட்டில் நாம் வாங்கும் தங்கத்திற்கு கொடுக்கும் விலைக்கும், தோஹா, கத்தாரில் கொடுக்கும் விலைக்கும் எவ்வளவு வித்யாசம் என்று பாருங்கள்.
அதனால் எனக்கு பல சந்தேகங்கள் உண்டாகி உள்ளன. அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.
இந்த கால்குலேஷன் போடுவதற்கு கீழ் கண்ட காரணிகளை எடுத்துள்ளேன்.
- தங்கத்தின் விலை - 28, ஏப்ரல் 2008 விலை
- வாங்கிய தங்கத்தின் அளவு - 40 கிராம்
- வாங்கிய பொருள் - தங்கச் சங்கிலி
- ஒரு கத்தாரி ரியால் - ரூபாய். 11.25 (அன்றைய அதிகபட்ச விலை)
- தங்கத்தின் சேதாரம் - இந்தியாவில் கணக்கிடப்படுவது - 16% - 18%
- தங்கத்தின் தரம் - 22 காரட்.
முதலில் தங்கத்தை தோஹா, கத்தாரில் வாங்கியது -
மொத்த தங்கம் - 40 கிராம்
விலை - 100 ரியால் ஒரு கிராமுக்கு
செய்கூலி - 7 ரியால் ஒரு கிராமுக்கு
மொத்தம் கொடுத்தது - 40 கிராம் x (107 ரியால்) = 4,280 ரியால்
இந்திய விலையில் - (4,280 ரியால் x ரூ.11.25) = ரூ. 48,150/-
இப்போது சென்னையில் உள்ள நிலவரத்தைப் பார்ப்போம்
மொத்த தங்கம் - 40 கிராம்
சேதாரம் - 16% - 6.40 கிராம்
மொத்த எடை - 46.40 கிராம்
தங்கத்தின் விலை - ரூ 1,155 ஒரு கிராமுக்கு
நகையின் விலை - (46.40 கி x 1,155) = ரூ. 53,592.00
செய்கூலி - ரூ. 75 ஒரு கிராமுக்கு = (46.40 கி x 75) = ரூ. 3,480.00
மொத்த விலை கொடுத்தது = ரூ. 57,072.00
இதற்கு சேல்ஸ் டாக்ஸ் - 1% (பில் வாங்கினால்) = ரூ. 571.00
மொத்த விலை - ரூ. 57,643.00
கத்தாரில் வாங்குவதற்கும், சென்னையில் வாங்குவதற்கும் உள்ள விலை வித்தியாசம் - ரூ. 9,493.00
கூகுளில் தங்கத்தின் தரத்தை பற்றி கூறியுள்ளது இதுதான்
The difference between the different types of gold is in the purity of the gold. The karat weight of gold is measured by a golds purity, with 24 karat gold being pure gold. Therefore, 22 karat gold would have a purity of 22/24 or 91.7 percent, 18 karat gold would have a purity of 18/24 or 75 percent, 14 karat gold would have a purity of 14/24 or 50 percent and 10 karat gold would have a purity of 10/24 or 41.6 percent.
நண்பர்களே என்னுடைய சந்தேகங்கள் இவைகள் தான்
- இரண்டு இடங்களிலுமே ஒரே தங்கம் தான் வாங்கப்பட்டது. ஆனால் கத்தாரில் சேதாரம் போடப்படவில்லை. ஆனால், சென்னையில் மட்டும் ஏன் சேதாரம் போடப்படுகின்றது. தரத்திற்கு இரண்டு கடைகளும் கியாரண்டி.
- 24 காரட் தங்கம் என்பது 99.99% சுத்த தங்கம். 22 காரட் தங்கம் என்பது 91.7% சுத்த தங்கம். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் 8.1% இருக்கும் போது, 16% சேதாரம் போடப்படுவது ஏன்? சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..
- செய்கூலி இல்லை / சாதா கற்களுக்கு விலை இல்லை என்பதெல்லாம் சும்மா விளம்பரத்திற்கு மட்டும் தானா?
- நம்மை மிக அழகாக ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்களா?
- நமக்கு ஏன் தங்கம் வாங்கும் போது, பில் போட்டு வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லையே ஏன்?
நண்பர்களே.. இதெல்லாம் என்னுடைய அனுபவ அறிவு மட்டும்தான்... ஏப்ரல் 2008 -ல் இரண்டு இடங்களிலும் தங்கச் சங்கிலி வாங்கியதால் தான் எனக்கு இது புரிந்தது. நீங்களும் சற்று யோசித்து பார்த்து பின்னூட்டம் இடுங்களேன்..
50 comments:
\\"தங்கமணிகளே உஷார் - தங்கம் + money"\\
ஆஹா உஷார் மாமே ...
\\(பில் வாங்கினால்)\\
அவசியம் வாங்கனுங்க.
இதை வாங்கததால்
நகை விற்ற காசால் கிடைத்த வருமானத்திற்கு வரி ஏய்ப்பு நடைப்பெறுவது மட்டுமல்லாமல், அது கருப்பு பணமாகவும் மாறிவிடுகிறது.
இது இலஞ்சத்தை விட கொடுமையானது.
இதுவும் நாட்டிற்கு செய்யும் துரோகம்.
நாடு என்னவான எனக்கின்னா-ba டைப்பா நீங்கள் ...
இதோ இதையும் பாருங்க ...
அந்த நகையை திருட்டு நகை என்று உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்
நாட்டிற்கு மட்டுமல்ல நம்ம வீட்டிற்கும் கேடுதான் ...
\\சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..\\
அட மக்கா ...
படித்த பலருக்கே இந்த விஷயங்கள் தெரியலையே
பாமரர்கள் நிறைந்த நம் ஊரில் ...
தங்கமணிக்கு காண்பிக்க வேண்டிய பதிவுங்க ஐயா! நல்ல தகவல்கள் கொடுத்து இருக்கீங்க.... தங்கமணியப் படிக்கச் சொல்லிட்டு, மறுபடியும் வர்றேன்.
\\பில் போட்டு வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லையே ஏன்?\\
கஷ்டப்பட்டு வந்த சம்பாத்தியம்னா பில் கேட்டு வாங்குங்க
இஷ்டப்பட்டு வந்த சம்பாத்தியம் என்றால் - உங்க குஷ்டம் ச்சே உங்க இஷ்டம்
ஒரு வேலை தோஹா வுல இருந்து பிள்லைட் புடிச்சி தங்கம் வந்திருக்குமோ??
அதனால கொஞ்சம் விலை கூட குறைவு ஆகியிருக்குமோ ??
//நீங்களும் சற்று யோசித்து பார்த்து பின்னூட்டம் இடுங்களேன்..//
யோசிச்சா??
என்ன சொல்ல வரீங்க??
அப்போ இத்தினி நாளும் நான் யோசிக்காம தான் பின்னூட்டம் போட்டேன்கிறது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
வருத்தமான பதிவில் கூட கும்மி அடிக்க அழைக்க நினைக்கும் சங்கம் ..
தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு தோஹா ...
////அதிரை ஜமால் said...
அவசியம் வாங்கனுங்க.
இதை வாங்கததால்
நகை விற்ற காசால் கிடைத்த வருமானத்திற்கு வரி ஏய்ப்பு நடைப்பெறுவது மட்டுமல்லாமல், அது கருப்பு பணமாகவும் மாறிவிடுகிறது.
இது இலஞ்சத்தை விட கொடுமையானது.
இதுவும் நாட்டிற்கு செய்யும் துரோகம்.
நாடு என்னவான எனக்கின்னா-ba டைப்பா நீங்கள் ...
இதோ இதையும் பாருங்க ...
அந்த நகையை திருட்டு நகை என்று உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்
நாட்டிற்கு மட்டுமல்ல நம்ம வீட்டிற்கும் கேடுதான் ...///
ஹாய், இதோ பாருங்கப்பா நம்ம முதல்வன் அர்ஜுன் கணக்கா ஒருத்தர் இங்க வரிஞ்சி கட்டி எழுதிகிட்டு இருக்காரு...
விசயகாந்த் சொல்ற மாதிரியே இருக்கு..
அப்படியே டெர்ர் மாதிரி இருக்கு ..
நான் பயந்துட்டேன்
///அதிரை ஜமால் said...
அட மக்கா ...
படித்த பலருக்கே இந்த விஷயங்கள் தெரியலையே
பாமரர்கள் நிறைந்த நம் ஊரில் ...///
என்னை பற்றி இப்படி வெளிப்படையாக சொன்ன ஜமால் அவர்களை கண்டித்து ஆட்டையில் இருந்து வெளியேறுகிறான்
நண்பர்களே..
இது பற்றி உங்கள் அனைவரின் கருத்தை அறிந்த பின் என்னுடைய பின்னூட்டத்தில் பதில்களை விவரமாக கொடுக்கின்றேன்.
நாம் எல்லாரும் எவ்வளவு மோசமாக ஏமாற்ற படுகின்றோம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
மேலாதிக்க தகவல்கள் வரவேற்க படுகின்றன.
அண்ணே வணக்கம்., அண்ணே இவ்வளவு ஞானத்தை ( வீட்டு வேளையில் தொடங்கி, தங்கம்., புத்தகம், விலை, பொருளாதாரம், ...) வைச்சுகிட்டு, என்ன எழுதுறதுன்னு தெரியலை....என்ன எழுதுறதுன்னு தெரியலை-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க...
வராது.... ஆனா வரும்....
அப்பிடின்ன கதையால்ல இருக்கு.
அண்ணே...
உலக அரசியல் தேவை இல்லை- வீட்டு அரசியல் பற்றி பகிர்ந்தால் போதும்,
உலக பொருளாதாரம் தேவை இல்லை- வீட்டு நிர்வாகம் போதும்,
அவன் அப்படி இருக்க வேண்டும் என்று எழுதுவதை விட-நான் (நாம்) எப்படி இருக்க வேண்டும் என்று எழுதினால் போதும்.
ஏனெனில், தனிமனித மாற்றத்தின் மூலமே- உலக மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே தனி மனிதனை பற்றி எழுதிக்கிட்டே இருக்கலாமே., அதற்கான அனுபவம் உங்களிடம் நிறையவே இருக்கிறது. எனவே நிறைய எதிர்பார்க்கிறோம்.
சேதாரம் இல்லாத 100% ஹால்மார்க் முத்திரைப் பதிவு.
சேதாரம் செம்பு கலந்தபின் நகை செய்யும்போது தங்கம், செம்பு இரண்டுக்கும் சேர்ந்து நேரும் இழப்பு. தங்கம் மட்டும் தனியாக இழப்பு ஏற்படுவதில்லை. 24 காரட் சுத்த தங்கத்தில் நகை செய்தால் (பொதுவாக செய்வதில்லை, பலம் இருக்காது) அதி இழப்பு 10% மேலெ இருக்கும். 916 ல் 5-8% நகை வேலைப்பாட்டைப் பொறுத்து இழப்பு நிர்ணயிக்கப் படுகிறது.
நீங்கள் சொல்வது போல சில மத்திய கிழக்கு நாடுகளில் சேதாரம் கணக்கு போடப்படுவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்களுக்கு தங்கம் கிடைக்கும் வழிமுறைகள் இந்தியாவை விட வேறுபட்டவை மற்றும் சுலபமானவை.
பில் போடுவது பற்றி சொன்னீர்கள். எனக்குத் தெரிந்து தென், வட, மேற்கு இந்தியாவில், தங்க நகை வாங்குவோர் வழமையாக ஒரு கடை அல்லது பொன்னாசாரியிடமே வாங்குவது வழக்கம். இன்றும் கூட. அதோடு பொதுவாக பல கடைக்காரர்களும் தங்கம் நல்லதாக இருந்தால் அன்றைய விலையில் எடுத்துக் கொள்கின்றனர். பில் இருக்கிறதா என்று பார்ப்பது இல்லை.
நகை செய்பவர்களும் விற்பவர்களும் இருப்பை எப்படி கணக்கிடுகிறார்கள், காட்டுகிறார்கள் என்பது..... என்னால் இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது.
வணக்கம் ராகவன்! நல்ல பதிவு நியாயமான கேள்விகள்!
நான் நண்பர் சிம்பா வின் புழுதிகாட்டில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் பாருங்கள்
அதில் உங்களுக்கு சில விடைகள் கிடைக்கலாம் .
http://pulithikkaadu.blogspot.com/2008/09/blog-post.html
USEFUL INFORMATIONS ABOUT "GOLD" PURCHASES...O.K. BUT Mr RAGHAVAN...FOR THIS DIFFERENCE AMOUNT...IS IT POSSIBLE FOR EVERY BODY, TO TRAVEL UPTO MIDDLE EAST...!!!! BY THE BY...DID YOU COME ACROSS THE DETAILS ABOUT NIGERIAN 419 SCAMS...!!!
நன்றி அதிரை ஜமால்...
தங்கம் வாங்கும் போது ரொம்ப உஷாரகத்தான் இருக்க வேண்டும்
பில் வாங்க வேண்டியதின் அவசியத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
ஏமாற்று பவர்களுக்கு படித்தவர்கள், பாமரர்கள் என்ற பாகு பாடு கிடையாது, யார் ஏமாந்தாலும் நாங்கள் ஏமாற்றுவோம் என்று ஏமாற்றுவார்கள்.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி.
// பழமைபேசி said...
தங்கமணிக்கு காண்பிக்க வேண்டிய பதிவுங்க ஐயா! நல்ல தகவல்கள் கொடுத்து இருக்கீங்க.... தங்கமணியப் படிக்கச் சொல்லிட்டு, மறுபடியும் வர்றேன். //
உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றேன்.
// உருப்புடாதது_அணிமா said...
ஒரு வேலை தோஹா வுல இருந்து பிள்லைட் புடிச்சி தங்கம் வந்திருக்குமோ??
அதனால கொஞ்சம் விலை கூட குறைவு ஆகியிருக்குமோ ?? //
தோஹாவுக்கே தங்கம் நம்ம நாட்ல இருந்துதான் போகுது அப்படின்னு சொல்லுவாங்க ...
தெற்காசிய நாடுகளில் செய்யப்பட்ட நகைதான் தோஹா, துபாய் போன்ற இடங்களில் விற்க்கப்படுகின்றன என்றும் கேள்வி பட்டுள்ளேன்.
மேலாதிக்க தகவல் இருந்தால் யாரவது தெரிவிக்கவும்.
உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல.
// உருப்புடாதது_அணிமா said
ஹாய், இதோ பாருங்கப்பா நம்ம முதல்வன் அர்ஜுன் கணக்கா ஒருத்தர் இங்க வரிஞ்சி கட்டி எழுதிகிட்டு இருக்காரு...
விசயகாந்த் சொல்ற மாதிரியே இருக்கு..
அப்படியே டெர்ர் மாதிரி இருக்கு ..
நான் பயந்துட்டேன் //
நீங்க பயந்துட்டீங்களா... ஹா..ஹா.. நம்ப சொல்றீங்க.. நம்பிட்டோம்.
// muru said...
அண்ணே வணக்கம்., அண்ணே இவ்வளவு ஞானத்தை ( வீட்டு வேளையில் தொடங்கி, தங்கம்., புத்தகம், விலை, பொருளாதாரம், ...) வைச்சுகிட்டு, என்ன எழுதுறதுன்னு தெரியலை....என்ன எழுதுறதுன்னு தெரியலை-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க...
வராது.... ஆனா வரும்....
அப்பிடின்ன கதையால்ல இருக்கு.
அண்ணே...
உலக அரசியல் தேவை இல்லை- வீட்டு அரசியல் பற்றி பகிர்ந்தால் போதும்,
உலக பொருளாதாரம் தேவை இல்லை- வீட்டு நிர்வாகம் போதும்,
அவன் அப்படி இருக்க வேண்டும் என்று எழுதுவதை விட-நான் (நாம்) எப்படி இருக்க வேண்டும் என்று எழுதினால் போதும்.
ஏனெனில், தனிமனித மாற்றத்தின் மூலமே- உலக மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே தனி மனிதனை பற்றி எழுதிக்கிட்டே இருக்கலாமே., அதற்கான அனுபவம் உங்களிடம் நிறையவே இருக்கிறது. எனவே நிறைய எதிர்பார்க்கிறோம். //
வாங்க முரு..
இன்னும் நிறைய படிக்க வேண்டுங்க...
கொடுக்கும் தகவல்களை சரி பார்க்க வேண்டும். தமிழ் இன்னுன் நன்றாக எழுத வேண்டும்... இப்படி பல வேண்டும் இருக்கும் போது, இப்படி புகழ்ந்து தள்ளியிருக்கீங்களே..
இது அனுபவம்.. அதனால் எழுதியுள்ளேன்..
எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன், படியுங்கள்.
குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள், நிறை இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.
// Mahesh said...
சேதாரம் இல்லாத 100% ஹால்மார்க் முத்திரைப் பதிவு.
சேதாரம் செம்பு கலந்தபின் நகை செய்யும்போது தங்கம், செம்பு இரண்டுக்கும் சேர்ந்து நேரும் இழப்பு. தங்கம் மட்டும் தனியாக இழப்பு ஏற்படுவதில்லை. 24 காரட் சுத்த தங்கத்தில் நகை செய்தால் (பொதுவாக செய்வதில்லை, பலம் இருக்காது) அதி இழப்பு 10% மேலெ இருக்கும். 916 ல் 5-8% நகை வேலைப்பாட்டைப் பொறுத்து இழப்பு நிர்ணயிக்கப் படுகிறது.
நீங்கள் சொல்வது போல சில மத்திய கிழக்கு நாடுகளில் சேதாரம் கணக்கு போடப்படுவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்களுக்கு தங்கம் கிடைக்கும் வழிமுறைகள் இந்தியாவை விட வேறுபட்டவை மற்றும் சுலபமானவை.//
நன்றி மகேஷ். தங்கள் மேலாதிக்க தகவல்களுக்கு நன்றி.
ஒரு விஷயம் மட்டும் நான் மாறுபடுகின்றேன்.
24 காரட் தங்கத்தில் உருக்கும் போது அதிக இழப்பு ஏற்படும் என்கின்றீர்கள். நான் பட்ட படிப்பு படிக்கும் போது, அனைத்து அரசாங்களும் தங்கத்தை ரிஸர்வாக வைப்பதன் காரணங்களில் ஒன்று, சுத்த தங்கம் மட்டும் தான் உருக்கி, பின் கட்டியாக மாற்றும் போது சேதாரம் ஆகாது என்றார்கள். இதை கும்பகோணத்தில் ஒரு பொற்கொல்லரும் ஒத்துக் கொண்டார்.
மேலும் நம் நாட்டில், பெரிய கடைகளில், 24 காரட் தங்க நாணயங்களை திரும்பி விற்கும் போது, சேதாரம் போடாமல், அன்றைய மார்கெட் விலைக்கே எடுத்து கொள்வர். பழைய தங்க நகைகளை விற்கும் போது, அவர்கள் சேதாரம் போட்டு கழிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
மத்திய கிழக்கு நாடுகளில் தங்கம் எந்த வழியில் கிடைத்தாலும், தங்க நகை செய்யும் போது, சேதாரம் இல்லாமல் செய்ய முடியாதில்லையா? அப்புறம் அவர்கள் ஏன் போடுவதில்லை? விவரமாக ஒரு பதிவே போடுங்களேன்.
// Mahesh said...
பில் போடுவது பற்றி சொன்னீர்கள். எனக்குத் தெரிந்து தென், வட, மேற்கு இந்தியாவில், தங்க நகை வாங்குவோர் வழமையாக ஒரு கடை அல்லது பொன்னாசாரியிடமே வாங்குவது வழக்கம். இன்றும் கூட. அதோடு பொதுவாக பல கடைக்காரர்களும் தங்கம் நல்லதாக இருந்தால் அன்றைய விலையில் எடுத்துக் கொள்கின்றனர். பில் இருக்கிறதா என்று பார்ப்பது இல்லை.
நகை செய்பவர்களும் விற்பவர்களும் இருப்பை எப்படி கணக்கிடுகிறார்கள், காட்டுகிறார்கள் என்பது..... என்னால் இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. //
பில் இல்லாமல் பெரிய நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூடாது. 1% தானே கொடுத்து விடலாமே என யாருக்கும் தோன்றுவதில்லை. நீங்கள் சொன்ன பொற்கொல்லர் காலங்கள் மலை ஏறிக் கொண்டு இருக்கின்றன.
அஷ்ய திரிதியை என்று ஒன்று சொல்லிக் கொண்டு, அன்று நகை வாங்கினால் நல்லது என்று நகை வாங்கும் கூட்டத்தை சென்னையில் வந்து பாருங்கள்.. (மற்ற ஊர்களைப் பற்றி எனக்குத்தெரியாது).. அன்று எத்துனைப் பேர் பில் போட்டு வாங்கி இருப்பார்கள்?
எனக்கு அஷ்யதிரிதியை பற்றி சிறு வயதிலேயே தெரிந்தது எல்லாம், கும்பகோணத்தில் 12 கருட சேவை விமர்சனமாக நடக்கும் என்பது மட்டும் தான். நகை வாங்க வேண்டும் என்பதெல்லம் இப்போதான் ஒரு 10 வருஷமாக கேள்வி படுகின்றேன்.
தங்களின் வருகைக்கும், மேலான தகவல்களுக்கும் மிக்க நன்றி
// ஜீவன் said...
வணக்கம் ராகவன்! நல்ல பதிவு நியாயமான கேள்விகள்!
நான் நண்பர் சிம்பா வின் புழுதிகாட்டில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் பாருங்கள்
அதில் உங்களுக்கு சில விடைகள் கிடைக்கலாம் .
http://pulithikkaadu.blogspot.com/2008/09/blog-post.html //
தங்கள் வருகைக்கு நன்றி ஜீவன்.
தங்கள் பதிவைப் படித்து பார்த்தேன். மிக அருமையான பதிவு. அதில் சொல்லியுள்ள சில வரிகள் மிக மிக அருமை..
அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்..
//நகை தொழிலும் பல நல்ல வியாபாரிகள் உள்ளனர். என்ன ஒன்று நல்லவர்கள் விளம்பரப்படுதப்படுவதில்லை. ஆகையால் இங்கே சில கோட்டான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருகிறார்கள், ஏமாந்தவர்களின் இதயத்தில் ஏறி. //
என்னுடைய நினைப்பும் இதுதான் - அதிலும் 16% சேதாரம் என்பது சரிதானா?
நிச்சயம் இவ்வளவு சேதாரம் ஆகாது, அப்படி என்றால், கிராமுக்கு ரூ.35 கம்மி, செய்கூலி கிடையாது என்று எல்லாம் சொல்லி நம்மை ஏமாற்றுகின்றனரா?
பொற்கொல்லர்கள், தங்கத்தை கழுவிய நீரை கூட, சாக்கடையில் கொட்ட மாட்டர்கள், அதை காய்ச்சி அதில் இருந்தும் தங்கத்தை எடுத்து விடுவார்கள் எனச் சொல்ல கேள்விபட்டுள்ளேன். இது சரியா என விஜாரித்து சொல்லுங்களேன்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.
// RAMASUBRAMANIA SHARMA said...
USEFUL INFORMATIONS ABOUT "GOLD" PURCHASES...O.K. BUT Mr RAGHAVAN...FOR THIS DIFFERENCE AMOUNT...IS IT POSSIBLE FOR EVERY BODY, TO TRAVEL UPTO MIDDLE EAST...!!!! BY THE BY...DID YOU COME ACROSS THE DETAILS ABOUT NIGERIAN 419 SCAMS...!!! //
WELCOME MR. SHARAMA.
PLEASE UNDERSTAND THE WHOLE ISSUE. FIRST THE WASTAGE IS BEING MEASURED AT 16% IN OUR COUNTRY. IS IT REALLY 16% OR NOT? IT IS THE SHOP OWNERS CHEATING US.
WE SHOULD WAKE UP IN THIS JUNCTION, TO KNOW WHAT THEY ARE CHARGING IS CORRECT OR NOT? IT DOES'T MEAN THAT WE SHOULD GO TO MIDDLE EAST TO BUY GOLD. BARGAIN WITH THE GOLD SELLERS AND GIVE THEM THE CORRECT AMOUNT. WHETHER IT IS ONE GRAM / 100 GRAM GOLD PURCHASE BE CAREFUL.
REGARDING 419 SCAMS, NO INFORMATION RECEIVED SO FAR.
சேதாரம் என்பது நம் நகையில் ஏற்படும் துகள், அதை நம்மிடம் கொடுக்கவேண்டும்,ஆனால் இந்தியாவில் மட்டும் நம்மிடம் காசு வாங்குவார்கள்.
நல்ல பதிவு ராகவன் சார்.
24 கேரட்டுக்கும் 22 கேரட்டுக்கும் வித்தியாசம் 2 கேரட் அதாவது 8.33%.
தங்கத்தின் விலையில் கூட 24க்கும் 22க்கும் சரியாக வித்தியாசம் வைத்திருப்பார்கள். அதாவது 22 கேரட் தங்கம் 24 கேரட் தங்கத்தை விட 8.33% குறைவு.
சேதாரம் என்பது நகை செய்யப் பயன் படுத்தும் தங்கத்தின் எடைக்கும் நகையின் எடைக்கும் உள்ள வித்தியாசம். அந்தத் துகள்களைக் கூட ரிசைக்கிள் செய்துவிடுவார்கள் என்றாலும் அதன் மதிப்பு குறைவுதான். ஆனால் கட்டிங் டிசைன் அதிகமில்லாத நகைகளுக்கு 10 முதல் 12% சேதாரம் லாபப் பங்குடன் சரியானதாக இருக்கும். டிசைன் அதிகமாக அதிகமாக சேதாரம் அதிகப் படும். சென்னைக் கடைகளில் தான் சேதாரம் அதிகமாகப் போடுவார்கள். திருச்சி சேலம் பகுதிகளில் சேதாரம் சற்று குறைவாகவே இருக்கும்.
கே.டி.எம். நகைகள் இப்போது ஃபேஷன். இதில் என்னவென்றால் காட்மியம் என்ற பற்றவைக்கும் பொருளுக்கும் தங்கத்தின் விலையே கொடுக்க வேண்டும். சில கடைகளில் கற்களுக்கும், கலர் பெயிண்ட் எடைக்கும் சேர்த்தே தங்கத்தின் விலையை வாங்கிவிடுகிறார்கள்.
தங்கத்தை சேமிப்பதற்காக வாங்குவதானால் 24 கேரட் தான் சிறந்தது. நகையாக வாங்கினால் திரும்ப எடுக்கும் போது ரேட்டும் குறையும். மேலும் அழுக்கு என்று 5 முதல் 10% குறைத்து விடுவார்கள்.
தங்கம் வாங்குற அளவுக்கு வளரல இன்னும்...இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருக்கனும்னு தோணுது...
www.kadaikutti.blogspot.com
இப்போ வாங்க.... என் எழுத்தை வளர்த்துக் கொள்ள ஒரு பின்னூட்டம் போடுங்க...!!
இப்படித்தான் நம்ப தங்கம்
வாங்கறோமா மனதிற்கு
ரொம்பவும் கஷ்டமா இருக்கு
நானே பாத்திருக்கேன் நிறையா
பேர் பில் வேண்டாம்ன்னு சொல்லறதை
மக்களாகிய நாம் முதலில் மாற வேண்டும் முதலில் நாம் மாறினால் தான் நம்மை வைத்து வியாபாரம் செய்பவர்களை நாம் கேள்வி கேக்க முடியும்
//
அதிரை ஜமால் said...
\\சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..\\
அட மக்கா ...
படித்த பலருக்கே இந்த விஷயங்கள் தெரியலையே
பாமரர்கள் நிறைந்த நம் ஊரில் ...
//
ஜமால் ரொம்ப சரியா சொல்லி இருக்காரு
ரொம்ப தீவிரமா யோசிச்சு
பின்னுட்டம் போட்டிருக்காரு
ஜமாலுக்கு ஒரு Salute
//
உருப்புடாதது_அணிமா said...
ஒரு வேலை தோஹா வுல இருந்து பிள்லைட் புடிச்சி தங்கம் வந்திருக்குமோ??
அதனால கொஞ்சம் விலை கூட குறைவு ஆகியிருக்குமோ ??
//
எங்கே குறைஞ்சிது?
நீங்க எங்கே இருக்கீங்க
தினம் தினம் விலை
எங்கோ போகுது நண்பா
எல்லாம் அவன் செயல்
//
உருப்புடாதது_அணிமா said...
//நீங்களும் சற்று யோசித்து பார்த்து பின்னூட்டம் இடுங்களேன்..//
யோசிச்சா??
என்ன சொல்ல வரீங்க??
அப்போ இத்தினி நாளும் நான் யோசிக்காம தான் பின்னூட்டம் போட்டேன்கிறது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
//
உங்களை பத்தி எல்லாருக்கும்
தெரிஞ்சி போச்சு போல
மாட்டிடீங்க போல
கடைசியா ஒன்னு சொல்ல ஆசைபடறேன்
ராகவன் அண்ணன் ப்லாக் ஆரம்பிச்சாரு
தினம் தினம் ஒரு முக்கியமான தகவல்
சொல்லி நம்மை எல்லாம் உஷார் படுத்தராறு
நாம் இவரை "நைஜீரியா தென்கச்சி கோ. சுவாமிநாதன்"
என்று அழைக்கலாமே?
ராகவன் சார் கதாரில் வாங்கும் தங்கத்துக்கு மட்டுமல்ல பிரான்சில் வாங்கும் தங்கத்துக்கும் சேதாரம் கிடையாது (நான் பிரான்ஸ் வாசி)இந்த கேள்வியை நான் நகை வாங்கும் போதெல்லாம் கடைகாரர்களிடம் கேட்பதுண்டு.ஆணால் இதுவரை எனக்கு சரியான பதில் கிடைத்ததில்லை,இந்தியர்கள் எவ்வளவு இளிச்சவாயர்கள் என்பது
இதிலிருந்து தெரிகிறது.
இராகவன்,தங்கம் வாங்கும்போது பற்றுச்சீட்டு வாங்குவது மிக முக்கியம்.இங்கு கொஞ்ச நாடக்ளுக்கு முன்னர் சில தமிழர்களின் வீடுகளில் திட்டம் போட்டுக் களவு நடந்தது.
களவு கொடுத்தவர்கள் காப்புறுதியும் செய்து தங்கத்தின் பற்றுச்சீட்டுக்களும் வைத்திருந்தபடியால் தொலைந்த தங்கத்தின் பெறுமதி காப்புறுதி மூலமாகக் கிடைத்தது.
நீங்க நல்லதுக்கு சொன்னதை, ஊர்ல இருக்கிற என் சொந்தக்காரங்களும், நண்பர்களும் தோஹாவில் 19 வருஷமா (பதுங்கி வாழ்ந்து வரும்) என்னை (தோஹாவில் தங்கம் இவ்வளவு சீப்பா கிடைக்கறதை சொல்லவேல்ல. சரி சரி வரும் பொது 4 செயின் மொத்தமா வாங்கியா, பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடுவோம். (வரும்.. ஆனா வராது)) படுத்தப்போறாங்க. ரொம்ப கவலையா இருக்கு
நிறைய கருத்துக்களை திரட்டி செய்தியை கொடுத்தமைக்கு நன்றி ராகவ்.
{விரைவில் துவங்கப்பட உள்ள திரட்டியின் சோதனை தளமான
http://india.nellaitamil.com இணையத்தில் தங்கள் தளத்தையும் இணைக்கலாம். நன்றி.}
சென்ற வருடம் செளதி தமாமில் உள்ள தங்க கடை ஒன்றில் சென்னையிலிருந்து வாங்கிய வளையல்கள் சிலவற்றை விற்று புதிய நகைகளை வாங்குவதற்காக எடுத்து சென்றிருந்தேன். வளையல்கள் சென்னை தி.நகரில் உள்ள மிக பிரபலமான மூன்றெழுத்து கடை. அதே ஏரியாவில் இவர்கள் ஓட்டல், பள்ளி எல்லாம் நடத்துகிறார்கள். எப்போது பார்த்தாலும் இவர்களது நகைக்கடையில் கூட்டம் அலை மோதும்.
அந்த வளையல்களை பார்த்த செளதி கடைக்காரர், இவை 22 காரட் நகைகள் இல்லை, அதை விட கம்மி தான் என்று கூறினார். நானோ, "இல்லை, இவை மிக பிரபலமான கடையிலிருந்து வாங்கியவை. வேண்டுமானால் வளையளின் உட்பகுதியை பாருங்கள். 22 KT என்று உள்ளது" என்று கூறினேன். அந்த செளதியோ "இல்லை. நான் 30 வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறேன். நீங்கள் நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறினான்.
எனக்கு மிக வருத்தமாக போய் விட்டது. நாம் கஷ்டப்பட்டு உழைத்த காசு எவனோ ஒருவன் எப்படி சாமர்த்தியமாக உட்கார்ந்த இடத்திலிருந்து அடிக்கிறான் பாருங்கள். செளதியை பொருத்த வரை நகை கடையில் வாங்கும் நகைகள் அனைத்தும் உண்மையிலேயே இந்திய நகைகளை விட தரமானது. 22 காரட் என்றால் அந்த நகை கண்டிப்பாக 22 காரட்டாக தான் இருக்கும். அப்படி யாராவது ஏமாற்றி அது நிரூபணமானால் அந்த கடைக்கு சீல் வைத்து விடுவார்கள்.
இந்த அனுபவத்துக்கு பிறகு நான் அந்த தி.நகர் கடையில் எதுவுமே வாங்குவதில்லை.
நல்ல பதிவு. நிறைய விவரங்கள் கிடைத்தன.
நன்றி ராகவன்.
நாம் பில் கேட்டதும், நம்மை ஒரு அப்புராணியாப் பார்த்துட்டுத்தான் பில் போடுறாங்க. இதுக்கெல்லாம் பயந்துருவமா?:-))))
24 காரட் சுத்தத்தங்கம் மற்றும் 22 காரட் ஆபரணத்தங்கம் இரண்டில் விலையும் வேறு வேறு. அப்படி இருக்கையில் 7.9% சேதாரமா என்ற கேள்வி தவறானது என எண்ணுகிறேன். மற்றபடி சேதாரம் மட்டுமே வேறு வேறு இடங்களில் வெவ்வேறான விலைகளுக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். அது வியாபாரிகளின் லாபநோக்காக இருக்கலாம்.
// RAMYA said...
கடைசியா ஒன்னு சொல்ல ஆசைபடறேன்
ராகவன் அண்ணன் ப்லாக் ஆரம்பிச்சாரு
தினம் தினம் ஒரு முக்கியமான தகவல்
சொல்லி நம்மை எல்லாம் உஷார் படுத்தராறு
நாம் இவரை "நைஜீரியா தென்கச்சி கோ. சுவாமிநாதன்"
என்று அழைக்கலாமே? //
நன்றி ரம்யா..
ஏங்க அவர்கூட என்னை கம்பேர் பண்ண முடியுங்களா.. நான் எல்ல சின்ன ஆளுங்க
// moulefrite said...
ராகவன் சார் கதாரில் வாங்கும் தங்கத்துக்கு மட்டுமல்ல பிரான்சில் வாங்கும் தங்கத்துக்கும் சேதாரம் கிடையாது (நான் பிரான்ஸ் வாசி)இந்த கேள்வியை நான் நகை வாங்கும் போதெல்லாம் கடைகாரர்களிடம் கேட்பதுண்டு.ஆணால் இதுவரை எனக்கு சரியான பதில் கிடைத்ததில்லை,இந்தியர்கள் எவ்வளவு இளிச்சவாயர்கள் என்பது
இதிலிருந்து தெரிகிறது. //
இந்தியர்கள் மிகப் பெரிய இளிச்சவாயர்களாக இருப்பதால் தான் இவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றார்கள்
// ஹேமா, said...
இராகவன்,தங்கம் வாங்கும்போது பற்றுச்சீட்டு வாங்குவது மிக முக்கியம்.இங்கு கொஞ்ச நாடக்ளுக்கு முன்னர் சில தமிழர்களின் வீடுகளில் திட்டம் போட்டுக் களவு நடந்தது.
களவு கொடுத்தவர்கள் காப்புறுதியும் செய்து தங்கத்தின் பற்றுச்சீட்டுக்களும் வைத்திருந்தபடியால் தொலைந்த தங்கத்தின் பெறுமதி காப்புறுதி மூலமாகக் கிடைத்தது. //
பற்று சீட்டு (ஒரு நல்ல தமிழ் வார்த்தையை கற்றுக் கொடுத்தீர்கள்- அதற்கு நன்றி) வாங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இல்லை. அதனால் வரும் பிரச்சினைகளை யாரும் புரிந்த்து கொள்ளவில்லை. எல்லோரும் 1% காசுக்குத்தான் பார்க்கின்றார்களே தவிர, அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை பற்றி கவலைப்படவில்லை.
// குடுகுடுப்பை said...
சேதாரம் என்பது நம் நகையில் ஏற்படும் துகள், அதை நம்மிடம் கொடுக்கவேண்டும்,ஆனால் இந்தியாவில் மட்டும் நம்மிடம் காசு வாங்குவார்கள். //
சேதாரம் பற்றி தான் என்னுடைய கேள்வியே..
இந்தியாவில் மட்டும் தான் அதிகமான சேதாரம் போட்டு காசு வாங்குவார்கள்
// மன்மதக்குஞ்சு said...
நீங்க நல்லதுக்கு சொன்னதை, ஊர்ல இருக்கிற என் சொந்தக்காரங்களும், நண்பர்களும் தோஹாவில் 19 வருஷமா (பதுங்கி வாழ்ந்து வரும்) என்னை (தோஹாவில் தங்கம் இவ்வளவு சீப்பா கிடைக்கறதை சொல்லவேல்ல. சரி சரி வரும் பொது 4 செயின் மொத்தமா வாங்கியா, பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடுவோம். (வரும்.. ஆனா வராது)) படுத்தப்போறாங்க. ரொம்ப கவலையா இருக்கு //
ஹி..ஹி..
போட்டு கொடுத்துவிட்டேனா? ரொம்ப சாரிங்க...
// Expatguru said...
சென்ற வருடம் செளதி தமாமில் உள்ள தங்க கடை ஒன்றில் சென்னையிலிருந்து வாங்கிய வளையல்கள் சிலவற்றை விற்று புதிய நகைகளை வாங்குவதற்காக எடுத்து சென்றிருந்தேன். வளையல்கள் சென்னை தி.நகரில் உள்ள மிக பிரபலமான மூன்றெழுத்து கடை. அதே ஏரியாவில் இவர்கள் ஓட்டல், பள்ளி எல்லாம் நடத்துகிறார்கள். எப்போது பார்த்தாலும் இவர்களது நகைக்கடையில் கூட்டம் அலை மோதும்.
அந்த வளையல்களை பார்த்த செளதி கடைக்காரர், இவை 22 காரட் நகைகள் இல்லை, அதை விட கம்மி தான் என்று கூறினார். நானோ, "இல்லை, இவை மிக பிரபலமான கடையிலிருந்து வாங்கியவை. வேண்டுமானால் வளையளின் உட்பகுதியை பாருங்கள். 22 KT என்று உள்ளது" என்று கூறினேன். அந்த செளதியோ "இல்லை. நான் 30 வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறேன். நீங்கள் நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறினான்.
எனக்கு மிக வருத்தமாக போய் விட்டது. நாம் கஷ்டப்பட்டு உழைத்த காசு எவனோ ஒருவன் எப்படி சாமர்த்தியமாக உட்கார்ந்த இடத்திலிருந்து அடிக்கிறான் பாருங்கள். செளதியை பொருத்த வரை நகை கடையில் வாங்கும் நகைகள் அனைத்தும் உண்மையிலேயே இந்திய நகைகளை விட தரமானது. 22 காரட் என்றால் அந்த நகை கண்டிப்பாக 22 காரட்டாக தான் இருக்கும். அப்படி யாராவது ஏமாற்றி அது நிரூபணமானால் அந்த கடைக்கு சீல் வைத்து விடுவார்கள்.
இந்த அனுபவத்துக்கு பிறகு நான் அந்த தி.நகர் கடையில் எதுவுமே வாங்குவதில்லை. //
இது நிறைய பேருக்கு புரிந்து கொள்ள முடிவதில்லை.
இதைப்பற்றி நாம் சொன்னால், நாம் எதோ அவர்களைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்கின்றோம் என்று நினைக்கின்றார்கள்.
மக்களிடம், தங்கத்தை பற்றிய அறிவு இன்னும் முழுமையாகச் சென்று அடையவில்லை
// துளசி கோபால் said...
நல்ல பதிவு. நிறைய விவரங்கள் கிடைத்தன.
நன்றி ராகவன்.
நாம் பில் கேட்டதும், நம்மை ஒரு அப்புராணியாப் பார்த்துட்டுத்தான் பில் போடுறாங்க. இதுக்கெல்லாம் பயந்துருவமா?:-)))) //
அந்த பார்வைக்கு அர்த்தம் அப்புராணி இல்லைங்க, மவனே எனக்கு ஆப்பு வைக்கிறாயே என்பது தான். இதுக்கு பில் போட்டால், இதை கணக்கில் எப்படி கொண்டு வருவது என்பதுதான் அதன் அர்த்தம்.
பற்றுசீட்டு வாங்குவதை எல்லோரும் வழக்கமாக கொண்டால், பகுதி ஊழல் குறையும் என்பது என் எண்ணம்.
// தாமிரா said...
24 காரட் சுத்தத்தங்கம் மற்றும் 22 காரட் ஆபரணத்தங்கம் இரண்டில் விலையும் வேறு வேறு. அப்படி இருக்கையில் 7.9% சேதாரமா என்ற கேள்வி தவறானது என எண்ணுகிறேன். மற்றபடி சேதாரம் மட்டுமே வேறு வேறு இடங்களில் வெவ்வேறான விலைகளுக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். அது வியாபாரிகளின் லாபநோக்காக இருக்கலாம். //
நண்பரே தங்கள் விளக்கம் எனக்கு புரியவில்லை.
சேதாரம் என்பது, 8.33% வரை இருக்கலாம். ஆனால், சென்னையில் அது ஏன் 16% வரை போகின்றது எனப்புரியவில்லை.
எனக்கு தெரிந்த வரை, கத்தார், சைனா இரண்டு இடங்களிலும், சேதாரம் வாங்குவதில்லை.
மேலும் moulefrite அவர்கள் சொன்னபடி, பிரான்ஸிலும் சேதாரம் வசூலிப்பதில்லை.
ராகவன், கொள்ளை லாபத்தின் காரணமாக தெருவிற்கு நான்கு கடைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாமரர்கள் வந்தால் கேரட் சமாச்சாரத்தில் அட்ஜஸ்ட் பண்ணி விடுவார்கள். இதெல்லாம் தொழில் ரகசியங்கள். பெட்ரோலியத்துறையிலும், டாஸ்மாக்கிலும் அரசு அடிக்காத கொள்ளையினையா இவர்கள் அடிக்கிறார்கள்.
எங்கு திரும்பினும் கொள்ளை.. ஏமாற்று வித்தை... இது தான் உலகம்.
Post a Comment