Monday, May 18, 2009

என்னைத் திருடியவர்....






மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதயரவர்கள்...

தம்பி டக்ளஸ் என்னையும் மதித்து இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு என்னை அழைத்து இருக்கின்றார். தம்பி டக்ளஸ் நேதாஜி பற்றிய இடுகையைக் காண இங்கு சொடுக்கவும்.

முன்னமே என்னைக் கவர்ந்தவர்கள் என்று ஒரு இடுகை எழுதியிருக்கின்றேன். தம்பி டக்ளஸ் அழைப்பை ஏற்று இந்த சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்.

மனதிற்குள் ஒரு சிறு பயமும் உண்டு. இந்த இடுகையை எந்தவிதமான தப்புகளும் இல்லாமல் எழுதவேண்டுமே, அதிலும் தமிழ் தாத்தா அவர்களைப் பற்றிய இடுகை என்பதால், மிகக் கவனமாக எழுத முயற்சித்துள்ளேன். தப்புகள் இருந்தால் தமிழ்த் தாத்தா மன்னிப்பாராக.

அனைவராலும் தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப் படும் டாக்டர் உ.வே. சா அவர்கள் பிறந்தது 19 - 02 -1855. உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாதய்யர் என்பதின் சுருக்கமே உ.வே.சா.

தந்தையார் திரு. வேங்கட சுப்பையர் - தாயார் திருமதி சரஸ்வதியம்மாள்.

பலரிடம் பல பாடங்கள் கேட்டபின், திருவாடுதுறை ஆதினத்தின் பெருங் கவிஞரவாகவும் சிறந்த புலவராகவும் விளங்கிய மகா வித்வான் திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 6 வருடங்கள் பாடங்கள் படித்தார் தமிழ்த் தாத்தா அவர்கள். (1870 முதல் 1876 வரை). மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் 1876 - ல் மறைந்தைதால் அவரிடம் மேலும் பாடம் படிக்க இயலாமல் போய்விட்டது.

பிள்ளை அவர்கள் மறைவிற்குப் பின் தமிழ்த் தாத்தா திருவாடுதுறை ஆதினகர்த்தர் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் அவர்களிடத்தில் பாடம் கேட்க ஆரம்பித்தார். அதோடு மற்ற பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் பணியினை மேற்க் கொண்டார்.

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் அவர்கள் ஓய்வு பெரும் காலம் வந்த போது, அவரின் சிபாரிசின் காரணமாக ஐயரவர்களை தமிழாசிரியாராக வேலை 1880 ஆம் ஆண்டு முதல் வேலைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் வேலைப் பார்த்த காலத்தில் தமிழ்த்தாத்தா அவர்களுக்கு கிடைத்த நட்பு, கும்பகோணம் ஜில்லா முன்சீப் திரு. சேலம் இராமசாமி முதலியார் அவர்கள். அவர்கள் மூலம் அவருக்கு கிடைத்த நூல் தான் சீவக சிந்தாமணி. இராமசாமி முதலியார் அவர்கள் தமிழ்த் தாத்தா அவர்களிடம் சீவக சிந்தாமணி பாடம் சொல்லிக் கொடுக்க சொல்லியுள்ளார்கள். அதனை பாடம் எடுக்கும் போது அன்னாருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட அதை அவர் ஜைன மத நண்பர்கள் மூலம் கற்றறிந்து, அவருக்கு விளக்கினார்.

தமிழ் தாத்தா அவர்கள் விடாப்பிடியாக முயன்று, 1887 - ல் சீவக சிந்தாமணியை அச்சில் வெளியிட்டார்.

தமிழ்த்தாத்தா அவர்கள் முயற்ச்சியினால் அச்சில் கொண்டு வரப் பெற்ற மற்ற நூல்கள் பத்துப்பாட்டு (1889) , சிலப்பதிகாரம் (1892), புறநானுறு(1894), மணிமேகலை(1898) என்று இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லுகின்றது.

கும்பகோணம் கல்லூரியில் இருந்து 1903 ஆம் ஆண்டு சென்னை கல்லூரிக்கு தமிழாசிரியாராக சேர்ந்தார்கள் தமிழ்த் தாத்தா அவர்கள்.

தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது மிகப் பெரியத் தொண்டு. ஏட்டில் இருந்து பிரதி எடுத்து, அதை அப்படியே அச்சிடும் வேலை அல்ல ஐயரவர்கள் செய்தது. ஏட்டில் உள்ள் பாடம் பிழைப் பட்டு இருக்கும். இன்னதென்று ஊகிக்க முடியாத சிதைவுகள் ஏற்பட்டு இருக்கும். அதை சரி செய்து வெளியிடுவது என்பது மிகப் பெரிய விசயம். தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது இதுதான்.

தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம், தமிழர் மரபு என்று பலவாறு பேசிக் கொண்டு இருக்கின்றோம். தமிழ் இந்திய மொழிகளில் மிகப் பழமையானது என்று இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். இந்த உயர்வுக்கு காரணம் தமிழ்த்தாத்தா அவர்களின் அயராத தொண்டும், உழைப்பும் தான் காரணம்.



தமிழ்த்தாத்தா அவர்கள் பெற்ற பட்டங்கள்
தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது.

இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தாத்தா அவர்களின் புகழ் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எழுத விசயங்கள் ஏராளாமாக உண்டு.

இவரின் பெருமையை திரு ராகவையங்கார் அவர்கள் செய்யுளாகவே கொடுத்துள்ளார்.

ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புறை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
கோதி லாச் சாமி நாதன் யமிழ்க் கென்றே!

தமிழ்த் தாத்தா அவர்கள் 28.04.1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

தமிழ்த் தாத்தா அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்க முடியாதது.


இந்த சங்கிலித் தொடர் இடுகையை அன்பு நண்பர் திரு ஜீவன் அவர்களை தொடரும் படி அழைக்கின்றேன்.

நன்றி : தமிழ்த்தாத்தா அவர்களின் என் சரித்திரம்

39 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல ஒரு அறிமுகம், நல்விதத்தில்.

நட்புடன் ஜமால் said...

\\தமிழ்த் தாத்தா அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்க முடியாதது.\\

சரியா சொன்னீங்க

தேவன் மாயம் said...

தமிழ்த்தாத்தா அவர்கள் முயற்ச்சியினால் அச்சில் கொண்டு வரப் பெற்ற மற்ற நூல்கள் பத்துப்பாட்டு (1889) , சிலப்பதிகாரம் (1892), புறநானுறு(1894), மணிமேகலை(1898) என்று இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லுகின்றது///

இது புதிய செய்தி!!

தேவன் மாயம் said...

தமிழ்த் தாத்தா அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்க முடியாதது.
///
நினைவு படுத்தியது பயனுள்ளதாக்வுள்ளது. இப்போது உள்ள மாணவர்களுக்கு இவரைத்தெரியுமா என்பது சந்தேகமே!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல தகவல்கள் நன்றி ஐயா

அ.மு.செய்யது said...

இந்த படத்தை பார்த்தவுடன், சிவராஜ் சித்திய வைத்திய சாலையை பற்றி ஏதோ பதிவு போட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

அழகாக உ.வே.சுவின் வரலாற்றை தொகுத்திருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, உ.வே என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது, ஏ.வி.ரமணன் தான்..அவர் தான் டிவி சீரியல் ஒன்றில் உ.வே.சுவாக நடித்தார்.

Cable சங்கர் said...

நைஸ்.. இராகவன்..

வேத்தியன் said...

நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன்...
நன்றி...

குடந்தை அன்புமணி said...

நல்ல பதிவு என்றால், அது இதுதான். கும்பகோணத்தில் அவரின் பிறந்தநாள் கொண்டாடட்டத்தின்போது திரு G.K.மூப்பனார் அவர்கள் தலைமயில் குழு அமைக்கப்பட்டு, உ,வே.சா. அவர்களுக்கு குடந்தையில் வெண்கலச்சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் செய்யப் படவில்லை.

Mahesh said...

அருமையான இடுகை ராகவன் சார்... .நன்றி.

S.A. நவாஸுதீன் said...

தமிழ்த் தாத்தாவைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி இராகவன் அண்ணா

அப்துல்மாலிக் said...

தமிழ் அறிஞ்ரைப்பற்றி / பெருமைகளை தெளிவா எடுத்துச்சொல்லி எங்களையெல்லாம் திருப்தி படுத்திவிட்டீர் அண்ணாத்தே நன்றி

ஆதவா said...

தமிழ் பற்றி அறிந்திருக்கும் எவருக்கும் எளிதில் மறந்திடா/மறந்திட முடியாத தமிழ்தாத்தா.... சாமிநாத ஐயர் அவர்கள். அவரைப் பற்றி பெருமளவல்லாவிடினிம் தெரிந்து கொள்ளுமளவுக்கு நீங்களே சொல்லிவிட்டபடியால் இனி நாங்கல் சொல்ல ஏதுமில்லை. உங்களுக்கு அவரைப் பிடித்ததிலும் ஆச்சரியமில்லாமல் இல்லை....

அறிவிலி said...

மிகவும் அருமையான இடுகை. நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//மனதிற்குள் ஒரு சிறு பயமும் உண்டு. இந்த இடுகையை எந்தவிதமான தப்புகளும் இல்லாமல் எழுதவேண்டுமே, அதிலும் தமிழ் தாத்தா அவர்களைப் பற்றிய இடுகை என்பதால், மிகக் கவனமாக எழுத முயற்சித்துள்ளேன். தப்புகள் இருந்தால் தமிழ்த் தாத்தா மன்னிப்பாராக.

//

எனக்குப் பின்னூட்டம் போட இப்ப பயமா இருக்கு.

Poornima Saravana kumar said...

தெரியாத சில விடயங்களை இப்போது அறிந்து கொண்டேன்..
நன்றி அண்ணா:)

सुREஷ் कुMAர் said...

தாத்தாவை பற்றின நல்ல தகவல்கள்.. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா.. :)

सुREஷ் कुMAர் said...

ஆனா ஒரு சின்ன சந்தேகம் / கருத்து..

அவரைப்பற்றின இந்த தகவல்களோடு, அவர் உங்களை எந்த வகையில் திருடினார் என்று சொல்லி இருந்தால் கூடுதல் சுவையாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து..

சரிதானேங்ணா..?

सुREஷ் कुMAர் said...

அவர் செய்த எல்லாமே உங்களை திருடியது என்பது உங்களின் பதிலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்..
(அப்படி எல்லாம் சொல்லப்பிடாது..)
குறிப்பிட்டு எதையாச்சும் சொல்ல முடியுமா..?

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜமால்.

நன்றி மருத்துவர் தேவா.
// நினைவு படுத்தியது பயனுள்ளதாக்வுள்ளது. இப்போது உள்ள மாணவர்களுக்கு இவரைத்தெரியுமா என்பது சந்தேகமே!!//

இன்றும் பலருக்கும் இவரை நன்கு தெரிந்து இருக்கின்றது மருத்துவரே..

நன்றி சுரேஷ்.

நன்றி அ.மு. செய்யது.
நல்லா நினைச்சீங்க...

நன்றி கேபிள் சங்கர்.

நன்றி வேத்தியன்.

நன்றி குடந்தை அன்புமணி...
சிலை வைக்க வேண்டும் என்று தீர்மானம் மட்டும்தான் போட்டார்கள். அதன் பிறகு அதை எல்லாம் மறந்துவிட்டனர்..

நன்றி மகேஷ்

நன்றி நவாஸுதன்

நன்றி அபு

நன்றி ஆதவா

நன்றி அறிவிலி

நன்றி அப்துல்லா அண்ணே...
//எனக்குப் பின்னூட்டம் போட இப்ப பயமா இருக்கு.// நீங்களே இப்படி எல்லாம் சொன்னா, நானெல்லாம் இடுகைப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். பின்னூட்ட சூறாவளியே இப்படின்னா, நானெல்லாம் எம்மாத்திரம்.

நன்றி தங்கச்சி பூர்ணிமா

நன்றி சுரேஷ்குமார்.
//அவரைப்பற்றின இந்த தகவல்களோடு, அவர் உங்களை எந்த வகையில் திருடினார் என்று சொல்லி இருந்தால் கூடுதல் சுவையாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து..

சரிதானேங்ணா..?//

என்னுடைய இடுகையில் காணப்படும் இந்த வரிகளை படியுங்க...
//தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம், தமிழர் மரபு என்று பலவாறு பேசிக் கொண்டு இருக்கின்றோம். தமிழ் இந்திய மொழிகளில் மிகப் பழமையானது என்று இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். இந்த உயர்வுக்கு காரணம் தமிழ்த்தாத்தா அவர்களின் அயராத தொண்டும், உழைப்பும் தான் காரணம்.// இதுதான் அவர் என் உள்ளத்தை திருட காரணம்.

பத்துபாட்டும், புற நானூறுப் பற்றியும் இன்னும் பல பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அறிய காரணமாயிருந்தவர் தமிழ் தாத்தா அவர்கள் தான்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீ வேங்கட சுப்பையர் - தாயார் ஸ்ரீமதி சரஸ்வதியம்மாள்.//

திரு.வேங்கடசுப்பையர்
திருமதி சரசுவதியம்மாள்

என்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும் நண்பா............

RAMYA said...

நல்ல பதிவு அண்ணா, சிறப்பான தேர்வு உங்களோட இந்த பதிவு

தமிழ்த்தாத்தாவின் சிறப்பை அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்

அவர் வடித்த பல நூல்கள் அச்சில் வந்தவைகளும் அருமை.

மறந்து போன அவரின் நினைவுகளை இந்த காலக் கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில்
உங்கள் பதிவு அமைந்து இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

அப்பப்போ இது போல் பல நினைவுகளும் நம் எல்லாருக்கும் தேவைதான்.

எவ்வளவு நல்ல உயர்வானவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் நாமும் வாழ்கின்றோமே என்ற சந்தோஷம் மனதில் நிறைவாக உள்ளது.

இந்த இடுகைக்கு மிக்க நன்றி அண்ணா!

அதையும் தாமதமாகப் படித்தது நானாகத்தான் இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்.........வசந்த் said...

//ஸ்ரீ வேங்கட சுப்பையர் - தாயார் ஸ்ரீமதி சரஸ்வதியம்மாள்.//

திரு.வேங்கடசுப்பையர்
திருமதி சரசுவதியம்மாள்

என்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும் நண்பா............//

நன்றி நண்பரே. மாற்றிவிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி தங்கச்சி ரம்யா.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்க

सुREஷ் कुMAர் said...

ஹய்யா.. மீ த 25th..

Rajeswari said...

தாத்தாவை பற்றிய நிறைய புதுவிசயங்கள்.

தொகுத்த விதம் அருமை அண்ணா..

வால்பையன் said...

அடுத்து ”என்னை கண்டுபிடித்தவர்”ன்னு ஒரு பதிவு தொடர் ஆரம்பிங்கப்பா!

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

ஹய்யா.. மீ த 25th..//

வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

தாத்தாவை பற்றிய நிறைய புதுவிசயங்கள்.

தொகுத்த விதம் அருமை அண்ணா..//

நன்றி தங்கச்சி ராஜேஸ்வரி

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

அடுத்து ”என்னை கண்டுபிடித்தவர்”ன்னு ஒரு பதிவு தொடர் ஆரம்பிங்கப்பா! //

அதுக்கு பதிலா இப்ப “நான் யார்” அப்படின்னு ஒரு தொடர் இடுகை ஓடிகிட்டு இருக்குங்க

நசரேயன் said...

நல்ல அறிமுகம்

coolzkarthi said...

அண்ணே மிக அருமை....தமிழுக்கு தொண்டாற்றிய அருட்பெரும் மனிதர் அவர்...

தமிழ் said...

நன்றி நண்ப்ரே

இராகவன் நைஜிரியா said...

நன்றி நசரேயன்

நன்றி கூல் கார்த்திக்

நன்றி திகழ்மிளிர்

தமிழ் அமுதன் said...

வணக்கம் அண்ணே! தாமதத்திற்கு மன்னிக்கணும்! தமிழ் தாத்தா பத்தி பல விசயங்கள
கொடுத்ததுக்கு மிக்க நன்றி!

என்னை தொடர அழைத்ததுக்கும்!! மிக்க நன்றி!
விரைவில் பதிவிடுகிறேன்!!!

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜீவன்.

Raju said...

அசத்தீட்டீங்க ராகவன் அண்ணே..!
ஜீவனுகு வழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி டக்ளஸ்.

ப்ரியமுடன் வசந்த் said...

தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள் வரவும் நண்பா