Saturday, May 23, 2009

கேள்வியும் பதிலும்....

இது ஒரு சங்கிலித் தொடர் இடுகை.... (அப்படின்னு சொல்றாங்க)

ஸ்டார்டிங் பாயிண்ட் நிலாவும் அம்மாவும். (எப்படிதான் இது மாதிரி எல்லா தோணுமோன்னு புரியலை... பாவம் நிலா)

அவரின் சங்கிலித் தொடர்கள்....

ரவீ.

அத்திரி.

கடையம் ஆனந்த்.

ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன்.

குமரை நிலாவன்.

சிந்துகா.

தேவா.

வேத்தியன்

என் உயிரே... அபு...

துபாயில உட்கார்ந்துகிட்டு என்னை மாட்டிவிட்டுட்டாரு....

இதைத் தொடர்ந்து அழைத்தவர் பிரியமுடன் ...வசந்த்... கத்தாரில் உட்கார்ந்துகிட்டு மாட்டிவிட்டவர்...

முதலில் ராகவன் என்பது யார்...? இதுக்கு பதில்.... ????? !!!!

பிள்ளைக்கு தகப்பனா, தகப்பனுக்கு பிள்ளையா, தாய்க்கு மகனா, மனைவிக்கு கணவனா, மச்சானா, மாமனா இப்படி பல கேள்விகள் தோணுது.. .

சரி இப்ப புலம்பி என்னா செய்வது....

இந்த இடுகையைத் தொடர்வது என்று முடிவு செய்தாச்சு.. (மாட்டேன் சொன்னா தம்பிகள் கிட்ட அடிவாங்க முடியாதில்லையா... அதனால் (ஆ)ரம்பம் சங்கிலித் தொடர் இடுகை....)

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அப்பா, அம்மா வச்ச பேரு. பேருல என்ன இருக்கு பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும். அது ஒரு அடையாளம்தான். இத தவிர நண்பர்கள் வச்ச பட்ட பெயர்கள் நிறைய உண்டு. அது எல்லாம் சொல்லப்பிடாது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தாயையும்(27-01-2005) , தந்தையும் (26-11-2005) மறைந்த போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். நெஜமாவே நல்லா இருக்குங்க.

4.பிடித்த மதிய உணவு என்ன?

என் அம்மா சமைத்த, மனைவி் சமைக்கும் எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும். இதுதான் வேண்டும் என்பது கிடையாது. தயிர்சாதம், ஊறுகாய் கூட போதுமானதுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லோரிடமும் நட்பாகத்தான் இருக்க நினைப்பேன். நன்கும் பழகுவேன். தொடர்வது காலத்தின் கையில்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும் இல்லீங்க. எனக்கு நதியில் நீந்தி குளிக்கத்தாங்க ரொம்ப பிடிக்கும். கும்பகோணத்தில் காவிரி ஆற்றுக்கு பக்கத்தில் இருந்ததால் அந்த ஆசை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

யாரையுமே அவர்கள் கண்களைப் பார்த்துதான் பேசப் பிடிக்கும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் அப்படின்னு சொல்லுனும் என்றால்...தெரியலை.

பிடிக்காத விசயம்.... கோபம்... மூக்கின் மேலே இருக்கும் கோபம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது - எல்லாமே.... பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

இது வரை அது மாதிரி வருந்தியது இல்லீங்க. நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று இருப்பவன் நான்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி, பனியன்... (வீட்டில் இருந்து எழுதுகின்றேன்..)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய முடியாதுங்க... ஒரு வேலைச் செய்யவே இங்கு மூச்சு வாங்குதுங்க...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீல வர்ணமாக மாற ஆசை.

14.பிடித்த மணம்?

சந்தனம், ஒல்ட் ஸ்பைஸ் மஸ்க் ஆப்டர் ஷேவ் லோஷன் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

2. திறைமையான தம்பி. புதிதாக பதிவராக வந்தாலும், எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கின்றது. நான் எப்ப சாட்டிங்கில் வருவேன் என்று காத்துக் கொண்டு இருக்கும் அன்புத் தம்பி.

3. தைரியமாக எழுதும் பதிவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை அவருக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்பதாலும்....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அபுஅஃப்ஸர்... என் உயிரே...

தம்பி ஜமாலால் அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர். கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், கதை சொல்வதாகட்டும், பின்னூட்டம் போடுவதாகட்டும் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். எதை சொல்ல, எதை சொல்லாமல் இருக்க. நல்லவர், வல்லவர் எல்லாவற்றிக்கும் மேலாக அன்புத் தம்பி. எல்லாவற்றிற்கும் மின்னரட்டையில் என்னோட கடிகளை தாங்கிக் கொண்டு அன்பாக அண்ணே என்றழைக்கும் பாங்கு...

பிரியமுடன்...வசந்த்

சூப்பர் கடி மன்னர். எப்படி எல்லாம் யோசிக்கின்றார். 2008 -ல் 1 பதிவு போட்டவர், 2009 மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 69 பதிவுகள் போட்டு சிலிர்க்க வைத்தவர். மனம் விட்டு சிரிக்க இவரது பதிவுகளைப் படியுங்க.

17. பிடித்த விளையாட்டு?

கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய

18.கண்ணாடி அணிபவரா?

ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காம நெடி இல்லாத காமடி படங்களை ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

மைக்கேல் மதன் காமராஜன்.... (டிவிடியில் பார்த்தது)

திரையரங்கில் கடைசியாகப் பார்த்த படம் - சிவாஜி

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்..... மழை பெய்வதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிப்பதற்கு இங்கு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அதனால் இணையத்தில் படிப்பதுடன் சரி. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதுங்க.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது எல்லாம் மகன் செய்வது. நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

விடியற் காலையில் ஒலிக்கும் பறவைகளின் சத்தம், குழந்தைகளின் மழலை, சிரிப்பு.

வாகனங்களின் ஏர் ஹார்ன் சத்தம், ஆட்டோ சத்தம், சைலன்சரை கழட்டி விட்டுட்டு வண்டி ஓட்டுபவர்களைக் கண்டாம் பயங்கர கோபம் வரும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

நைஜிரியாதான் அதிக தூரம் .

இதற்கு முன் சைனாதான் அதிக பட்ச தொலைவு சென்ற இடம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமையா... அப்படின்னா என்னங்க

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம், திருட்டு

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்தான்....

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் எல்லா இடமும் பிடிக்கும். சென்னையில் இருந்த வரை நான் அடிக்கடி போகும் இடம் புதுச்சேரி ஆரோவில். இதுத்தவிர டாப்ஸ்லிப், குன்னூர், கோடைக்கானல் ... இப்படி நிறைய இடம் சொல்லலாம்.

வெளிநாட்டில் சுற்றிப் பார்க்க ஆசை எல்லாம் கிடையாதுங்க. நம் நாட்டை சுற்றிப்பார்க்கவே இந்த ஆயுசு போதாதுங்க...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, உபத்திரவமா இருக்க கூடாதுன்னு நினைக்கின்றேன்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி எல்லாம் ஒரு நினைப்பே கிடையாதுங்க.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். இன்பமும், துன்பமும், சந்தோஷமும், கஷ்டமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஓவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம். நம் கஷ்டத்தை அடுத்தவர்கள் மேல் திணிக்காமல் மற்றவர்களுக்கு நம்மால முடிந்த உதவிகளை செய்து வாழ வேண்டும்.

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1. தங்கச்சி ரம்யா Will to Live

2. தம்பி சுரேஷ் எழுதுவது எல்லாம் எழுதல்ல....

3. டக்ளஸ்

எதோ என்னால முடிஞ்சது மாட்டிவிட்டாச்சு. தொடருங்கப்பா...

86 comments:

தேவன் மாயம் said...

கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய//

எல்லாமே நல்ல விளையாட்டுங்கோ!!

தேவன் மாயம் said...

முதலில் ராகவன் என்பது யார்...? இதுக்கு பதில்.... ????? !!!!

பிள்ளைக்கு தகப்பனா, தகப்பனுக்கு பிள்ளையா, தாய்க்கு மகனா, மனைவிக்கு கணவனா, மச்சானா, மாமனா இப்படி பல கேள்விகள் தோணுது.. //

சுய பரிசோதனை செய்தால் நல்லாத்தான் இருக்கும்!!

ஆதவா said...



தொடர்ந்து பல நண்பர்கள் இத்தொடர்பதிவில் ஈடுபட்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்வது மனதிற்கு இதமாக இருக்கிறது.

உங்களை நன்கு வெளிப்படுத்திக் கொண்டீர்கள்.
உணவு விஷயத்தில் உங்களைப் போலவே நானும்.. என்ன,, தயிர்சாதம் மட்டும் எனக்குப் பிடிக்காது.

நட்பு = நச்

கும்பகோணத்தில் காவிரி ஓடுதா என்ன?? இங்கே ஈரோட்டில் வெறும் பாறைகள்தான் தெரிகின்றன.

9. ம் கேள்வி மழுப்பல்

பிடிக்காத சப்தம்.... மிகப்பிரமாதமான அவதானிப்பு

வேத்தியன் said...

சிறப்பாக பதில்கள் சொல்லி அசத்தியிருக்கீங்க நண்பரே...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி..

सुREஷ் कुMAர் said...

நன்றி அண்ணா.. கோர்த்துவிட்டமைக்கு..

सुREஷ் कुMAர் said...

//
மனைவி் சமைக்கும் எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும்.
//

இல்லைனா நைட் சாப்பாட்டுக்கு சிங்குளா சிங்கி அடிக்கவேண்டி இருக்குமே..

सुREஷ் कुMAர் said...

//
எல்லோரிடமும் நட்பாகத்தான் இருக்க நினைப்பேன். நன்கும் பழகுவேன். தொடர்வது காலத்தின் கையில்...
//

வாஸ்த்தவம் தான்..

सुREஷ் कुMAர் said...

//
கும்பகோணத்தில் காவிரி ஆற்றுக்கு பக்கத்தில் இருந்ததால் அந்த ஆசை.
//
இப்போ போனிங்கனா, வீடுகட்ட நல்ல மணல் அள்ளிகிட்டு வரலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு சில கேள்விகளுக்கு எஸ் ஆகிட்டீங்க.. இருந்தாலும்.. நல்லா இருக்கு..:-)

सुREஷ் कुMAர் said...

//
யாரையுமே அவர்கள் கண்களைப் பார்த்துதான் பேசப் பிடிக்கும்.
//
கண்ணை நம்பாதே..
உன்னை ஏமாற்றும்....
(புரட்ச்சிதலைவர் படத்தில் வரும் இந்த வரிகள் சரியாக நியாபகம் இல்லை..) பாடலை கேட்டிருகிங்களா..?

सुREஷ் कुMAர் said...

//
மூக்கின் மேலே இருக்கும் கோபம்
//
எனக்கு தெரிந்து பலருக்கு மூக்கின் மேல் வியர்த்துதான் இருக்கும்..

सुREஷ் कुMAர் said...

//
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.
//

பிழைக்கத்தெரிந்த மனிதனய்யா நீங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
ஒரு வேலைச் செய்யவே இங்கு மூச்சு வாங்குதுங்க...
//
அப்படியென்ன வேலை..
ஒருவேளை, ஓடிக்கிட்டு இருகின்களோ..?

S.A. நவாஸுதீன் said...

எதார்த்தமான, வெளிப்படையான பதில்கள். பாலுமகேந்திரா படத்துல வர்ற கதாநாயகி மாதிரி (அளவுக்கதிகமான மேக்கப் இல்லாமல்).

நல்லா இருந்தது இராகவன் அண்ணா

सुREஷ் कुMAர் said...

//
திறைமையான தம்பி. புதிதாக பதிவராக வந்தாலும், எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கின்றது.
//

புதிய தகவல்..
(நம்பகத்தன்மை வாய்ந்ததா..?)

सुREஷ் कुMAர் said...

//
என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே "போகலாம்".
//
எங்க "போகலாம்"னு எல்லாம் அபத்தமா கேற்க மாட்டேன்..

सुREஷ் कुMAர் said...

ஆனாலும் நல்ல பாசமானா அக்காதான்.. ஆனா, கொஞ்ச நாளா தொடர்பில் இல்லை..

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பா

सुREஷ் कुMAர் said...

டக்லஸ் எனது உலகிற்கு புதுசு கண்ணா புதுசு..

सुREஷ் कुMAர் said...

//
பேய்ப் பந்து..
//
என்னாது இது.. நான் கேள்விப்பட்டதே இல்லையே..?

सुREஷ் कुMAர் said...

//
கண்ணாடி அணிபவரா?

ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..
//
எங்க போட்டிக..?

सुREஷ் कुMAர் said...

//
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்.
//
மில்லிமீட்டரா..
செண்டிமீடரா..
மீட்டரா..
எவ்ளோ தூரம்னு தெளிவா சொல்லுங்கப்பு..

सुREஷ் कुMAர் said...

//
தனித் திறமையா... அப்படின்னா என்னங்க
//
இப்படி கேக்குறதே ஒரு திறமைதான் பாஸ்..

सुREஷ் कुMAர் said...

//
நம் கஷ்டத்தை அடுத்தவர்கள் மேல் திணிக்காமல்
//
இத்தனை நாளாக பூட்டிக்கிடந்த அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்..

நானும் இதை முயற்சித்துக்கொண்டுதான் உள்ளேன்.. முடியமாட்டேங்குது..

सुREஷ் कुMAர் said...

பின்னூட்டங்கள் யாவும் ஏதும் கபடமற்ற மனநிலையில் போடப்பட்டது.. தவறுகள் ஏதும் இருப்பின் யோசிக்காமல் மன்னிக்கவும்..

सुREஷ் कुMAர் said...

//
இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு
2. தம்பி சுரேஷ் எழுதுவது எல்லாம் எழுதல்ல....
//
அண்ணா.. இப்டி நீங்களே நான் எழுதுவது எல்லாம் எழுதல்ல'னு சொன்னா இந்தஊர் என்னான்னு நெனைக்கும்..

கலையரசன் said...

நீங்களும் நல்லவருங்கண்ணா!
பொருமையா 32 கேள்விகளுக்கு
பதில் சொல்லியிருக்கீங்க பாருங்க...
/பாராட்டுக்கள்! (படிச்ச எனக்குதான்)

குடந்தை அன்புமணி said...

ராகவன் அண்ணே! உங்களைப்பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தயிர்சாதம் ஊறுகாய்க்கு ஈடு ஏது? நான் அரசலாற்றில் குளிப்பேன். அது ஒரு தனி அனுபவம்.( தனி பதிவே போடலாம்.) உண்மையில் இந்த தொடர் ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்!

அப்துல்மாலிக் said...

//நட்பாகத்தான் இருக்க நினைப்பேன். நன்கும் பழகுவேன். தொடர்வது காலத்தின் கையில்...//

ஆன்லைன் கையிலேனு சொல்லுங்க, இப்போ காலம் அப்படிதான் இருக்கு

அப்துல்மாலிக் said...

//கும்பகோணத்தில் காவிரி ஆற்றுக்கு பக்கத்தில் இருந்ததால் அந்த ஆசை.
/

இப்போ போனால் மணலில்தான் நீச்சலடிக்கவேனும் ஹா ஹா

அப்துல்மாலிக் said...

//யாரையுமே அவர்கள் கண்களைப் பார்த்துதான் பேசப் பிடிக்கும்.
//

இது பெண்களிடன் பலிக்காதே (கண்ணைப்பார் அதில் உன்னைப்பார்) ச்சும்மா

அப்துல்மாலிக் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது? பிடித்தது - எல்லாமே.... பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க

உஷாராதான்யா இருக்கீர்....எதிர்ப்பார்த பதில்தான் ஹி ஹி ஹி

அப்பாவி முரு said...

சிங்கம் தப்பிசிடுச்சு.,
மான்கள் மாட்டிக்குச்சு...

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//அபுஅஃப்ஸர்... என் உயிரே...
தம்பி ஜமாலால் அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர். கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், கதை சொல்வதாகட்டும், பின்னூட்டம் போடுவதாகட்டும் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். நன்றி அண்ணாத்த என் புகழ் பரப்பியதற்கு//

அப்துல்மாலிக் said...

//எதை சொல்ல, எதை சொல்லாமல் இருக்க. நல்லவர், வல்லவர் எல்லாவற்றிக்கும் மேலாக அன்புத் தம்பி. எல்லாவற்றிற்கும் மின்னரட்டையில் என்னோட கடிகளை தாங்கிக் கொண்டு அன்பாக அண்ணே என்றழைக்கும் பாங்கு...//

நானும் அப்ப‌ப்ப‌ க‌டிப்பேன் அதை சொல்ல‌லியே.. ஆவ்வ்வ்வ்வ், இருந்தாலும் உங்க‌ளுடைய‌ அன்பும் பாசமும் கிடைக்க‌ நான் புண்ணிய‌ம் செய்திருக்க‌வேண்டும் (இது எப்ப‌டி இருக்கு)

அப்துல்மாலிக் said...

வாழ்க்கையை பற்றி சொன்னவிதம் அருமை

31 வது கேள்விக்கு மீண்டும் ஒரு மலுப்பல்

32 கேள்விகளுக்கும் பொருமையா தெளிவா உங்களைபற்றி சுயபுராணம் பாடிருக்கீர், என்னுடைய அழைப்பை ஏற்று இடுக்கையிட்டதுக்கு என் நன்றிகள்

உங்களைபற்றி பயோடேட்டா எடுத்துவிட்டதுக்கு வாழ்த்துக்கள்

அத்திரி said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது - எல்லாமே.... பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.//



நல்ல நழுவல்........

பழமைபேசி said...

சங்கிலித் தொடர் இடுகை.... பால் வார்த்தீங்க... நன்றி! இஃகிஃகி!!

Anonymous said...

2வது ரொம்பவே கொடுமை.....இருவரும் ஒரே ஆண்டு......பதில்கள் எல்லாம் நேர்த்தியா சொல்லியிருக்கீங்க அண்ணா.....எல்லாமே ரொம்ப சதாரணமா எடுத்துக்கொள்ளும் பக்குவம்.... அண்ணா அண்ணாத்தான்
உங்களை பற்றி தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி......

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...
//யாரையுமே அவர்கள் கண்களைப் பார்த்துதான் பேசப் பிடிக்கும்.
//

இது பெண்களிடன் பலிக்காதே (கண்ணைப்பார் அதில் உன்னைப்பார்) ச்சும்மா

குறும்புக்கு மறுபெயர் அபு.....

Mahesh said...

அருமை.... உங்களைக் கோத்து விடறதுக்குன்னே பலபேர் சுத்திக்கிட்டுருக்காங்க... எதாவது சங்கிலி இடுகைன்னாலே முதல்ல உங்க பேர்தான் ஞாபகம் வருது :))

நட்புடன் ஜமால் said...

நல்ல துவக்கம் அண்ணா ...

நட்புடன் ஜமால் said...

\\6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா? இரண்டும் இல்லீங்க. எனக்கு நதியில் நீந்தி குளிக்கத்தாங்க ரொம்ப பிடிக்கும். கும்பகோணத்தில் காவிரி ஆற்றுக்கு பக்கத்தில் இருந்ததால் அந்த ஆசை.\\

நானும் இதே ஜாதி தான் அண்ணே

நட்புடன் ஜமால் said...

\\10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ? இது வரை அது மாதிரி வருந்தியது இல்லீங்க. நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று இருப்பவன் நான்.\\


அருமையான பதில்

நட்புடன் ஜமால் said...

\\17. பிடித்த விளையாட்டு? கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய\\


அப்படி போடு(ங்க) ...

நட்புடன் ஜமால் said...

\\நம் கஷ்டத்தை அடுத்தவர்கள் மேல் திணிக்காமல் மற்றவர்களுக்கு நம்மால முடிந்த உதவிகளை செய்து வாழ வேண்டும்.\\

அருமை அண்ணா

coolzkarthi said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.
//
தப்பிசுப்பீங்க

coolzkarthi said...

அண்ணா உங்களை பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள்....
அருமை.....

ப்ரியமுடன் வசந்த் said...

//24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

விடியற் காலையில் ஒலிக்கும் பறவைகளின் சத்தம், குழந்தைகளின் மழலை, சிரிப்பு.//

ரசனையான பதில் ராகவன்

எல்லாபதிலும் ( நிறைய எஸ்கேப்) சூப்பர்

நட்புடன் ஜமால் said...

\\1. தங்கச்சி ரம்யா Will to Live
2. தம்பி சுரேஷ் எழுதுவது எல்லாம் எழுதல்ல....3. டக்ளஸ்\\

விறைவில் அறியத்தருவார்கள் என விரும்புகிறேன் ...

இராகவன் நைஜிரியா said...

//thevanmayam said...

கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய//

எல்லாமே நல்ல விளையாட்டுங்கோ!! //

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. நமக்கு தெரிஞ்ச விளையாட்ட மட்டும்தாங்க சொல்ல முடியும். நாம என்ன சினிமா நடிகையா... கவாஸ்கர் நல்லா டென்னிஸ் விளையாடுவார் அப்படின்னு சொல்வதற்கு.

// சுய பரிசோதனை செய்தால் நல்லாத்தான் இருக்கும்!! //

சமயத்தில் இதுவும் தேவையா இருக்குங்க. தலைக் கணம் ஏறாமல் இருக்க இது தேவையா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// ஆதவா said...

9. ம் கேள்வி மழுப்பல் //

நன்றி ஆதவா தங்கள் வருகைக்கு.

நிச்சயமாக மழுப்பல் இல்லைங்க. இல்லாதத சொல்ல முடியாதில்ல.

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

சிறப்பாக பதில்கள் சொல்லி அசத்தியிருக்கீங்க நண்பரே...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.. //

நன்றி வேத்தியன் தங்கள் வருகைக்கு

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

நன்றி அண்ணா.. கோர்த்துவிட்டமைக்கு..//

திட்டாமல் நன்றி சொன்னதற்கு ஒரு நன்றி.

// இல்லைனா நைட் சாப்பாட்டுக்கு சிங்குளா சிங்கி அடிக்கவேண்டி இருக்குமே..//

இல்லைப்பா ... சரிபாதி ரொம்ப நல்லவங்க. வயத்த காயப் போட விட மாட்டாங்க.

//இப்போ போனிங்கனா, வீடுகட்ட நல்ல மணல் அள்ளிகிட்டு வரலாம்..//

மணல் எடுக்க நான் கவுன்சிலர் கூட இல்லீங்க

// கண்ணை நம்பாதே..
உன்னை ஏமாற்றும்....
(புரட்ச்சிதலைவர் படத்தில் வரும் இந்த வரிகள் சரியாக நியாபகம் இல்லை..) பாடலை கேட்டிருகிங்களா..?//

அது பாட்டுக்கு சரிங்க. அடுத்தவர் கண்களைப் பார்த்து பேசிப் பாருங்க புரியும்.

// எனக்கு தெரிந்து பலருக்கு மூக்கின் மேல் வியர்த்துதான் இருக்கும்..//

அப்படிங்களா எனக்கு தெரியாதுங்களே..

//பிழைக்கத்தெரிந்த மனிதனய்யா நீங்கள்..//

வாழ்க்கையே அப்படி ஆகிப்போச்சுங்க

//அப்படியென்ன வேலை..
ஒருவேளை, ஓடிக்கிட்டு இருகின்களோ..? //

வாழ்க்கயே ஓட்டம் தானுங்க. ஓட்டம், ஓட்டம், ஓட்டம்... இதுவாகவே வாழ்க்கை ஆகிப்போச்சுங்க

\\//
திறைமையான தம்பி. புதிதாக பதிவராக வந்தாலும், எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கின்றது.
//

புதிய தகவல்..
(நம்பகத்தன்மை வாய்ந்ததா..?)\\
நன்பகத்தன்மை இல்லாத தகவல்கள் என் வலைப்பூவில் இடம் பெறாதுங்க.

\\//
பேய்ப் பந்து..
//
என்னாது இது.. நான் கேள்விப்பட்டதே இல்லையே..?\\

சிறு வயதில் விளையாடியது. ஒரு பந்து. 10 (அ) 15 நண்பர்கள். பந்தை மேலேத் தூக்கி போட்டுவிட்டு எல்லோரும் ஓடுவோம். பந்தை எடுப்பவர் அடுத்தவரை அந்த பந்தினால் அடிக்க வேண்டும். பந்தை எடுத்தவரை நாம் தொட்டுவிட்டால் நம்மை அடிக்கக் கூடாது. இது தான் பேய்ப் பந்து விளையாட்டு.

//பின்னூட்டங்கள் யாவும் ஏதும் கபடமற்ற மனநிலையில் போடப்பட்டது.. தவறுகள் ஏதும் இருப்பின் யோசிக்காமல் மன்னிக்கவும்..//

நம்பிட்டோம்

இராகவன் நைஜிரியா said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு சில கேள்விகளுக்கு எஸ் ஆகிட்டீங்க.. இருந்தாலும்.. நல்லா இருக்கு..:-) //

எஸ் மாதிரி வளைந்து நெளிவதுதானே வாழ்க்கை.

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...

எதார்த்தமான, வெளிப்படையான பதில்கள். பாலுமகேந்திரா படத்துல வர்ற கதாநாயகி மாதிரி (அளவுக்கதிகமான மேக்கப் இல்லாமல்).

நல்லா இருந்தது இராகவன் அண்ணா //

நன்றி நவாஸுதீன்.

இராகவன் நைஜிரியா said...

// ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பா //

நன்றி நண்பரே.

இராகவன் நைஜிரியா said...

// கலையரசன் said...

நீங்களும் நல்லவருங்கண்ணா!
பொருமையா 32 கேள்விகளுக்கு
பதில் சொல்லியிருக்கீங்க பாருங்க...
/பாராட்டுக்கள்! (படிச்ச எனக்குதான்)//

நன்றி கலையரசன். தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.

உங்களுக்கு பாராட்டுக்கள்.. இந்த இடுகையைப் படித்தததற்கு.

இராகவன் நைஜிரியா said...

// குடந்தை அன்புமணி said...

ராகவன் அண்ணே! உங்களைப்பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தயிர்சாதம் ஊறுகாய்க்கு ஈடு ஏது? நான் அரசலாற்றில் குளிப்பேன். அது ஒரு தனி அனுபவம்.( தனி பதிவே போடலாம்.) உண்மையில் இந்த தொடர் ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்! //

சரியாகச் சொன்னீர்கள். அது ஒரு கனாக் காலம் தான். காவிரிக்கு காலை 6 மணிக்கு குளிக்கப் போய், 8 மணிக்கு கண்கள் சிவக்க வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வாங்கிய அடி, தண்ணீர் எம்பல் போட்டு குளித்து முடித்து வீட்டுக்கு திரும்புவர்களிடம் வாங்கிய திட்டு, நண்பர்களிடம் போட்டிப்போட்டுக் கொண்டு இக்கரைக்கு அக்கரை நீந்தியது... ம் எவ்வளவோ இருக்கு. சென்னையில் சந்திக்கும் போது பேசலாம்.

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...
ஆன்லைன் கையிலேனு சொல்லுங்க, இப்போ காலம் அப்படிதான் இருக்கு //

ஆமாம் சரியாகச் சொன்னீர்கள்.

// இப்போ போனால் மணலில்தான் நீச்சலடிக்கவேனும் ஹா ஹா//

வருஷத்தில் 3 மாசமாவது இன்னும் தண்ணி ஓடிகிட்டுதான் இருக்கு என்று இன்று நான் தொலைபேசியில் பேசிய நண்பர் தெரிவித்தாருங்க.

//
இது பெண்களிடன் பலிக்காதே (கண்ணைப்பார் அதில் உன்னைப்பார்) ச்சும்மா//

இதுதான் தம்பி அபு .. ரொம்ப குறும்பு

//உஷாராதான்யா இருக்கீர்....எதிர்ப்பார்த பதில்தான் ஹி ஹி ஹி//

ஹி...ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு said...

சிங்கம் தப்பிசிடுச்சு.,
மான்கள் மாட்டிக்குச்சு...

வாழ்த்துக்கள் //

சிங்கம் இப்போ இருக்க வேண்டிய ஊரில் இல்லாததால் தப்பிச்சுடுச்சு. இப்போ தப்பிச்சிட்டாலும், மாட்டித்தானே ஆகணும். ஒரு வலைப்பதிவருக்கு, உங்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை, நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொல்லி, உங்கப் பேரைப் போடச்சொல்லிவிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// அத்திரி said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது - எல்லாமே.... பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.//



நல்ல நழுவல்........//

ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

சங்கிலித் தொடர் இடுகை.... பால் வார்த்தீங்க... நன்றி! இஃகிஃகி!! //

எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததுதாங்க. அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// தமிழரசி said...
உங்களை பற்றி தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி...... //

மிக்க நன்றி தங்கச்சி தமிழ்.

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...

அருமை.... உங்களைக் கோத்து விடறதுக்குன்னே பலபேர் சுத்திக்கிட்டுருக்காங்க... எதாவது சங்கிலி இடுகைன்னாலே முதல்ல உங்க பேர்தான் ஞாபகம் வருது :))//

மிக்க நன்றி மகேஷ். கவிதை சங்கிலி இடுகையைத் தவிர மற்ற இடுகைகள் வரவேற்க்கப் படுகின்றது.

இராகவன் நைஜிரியா said...

வாங்க தம்பி ஜமால்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...

அண்ணா உங்களை பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள்....
அருமை..... //

நன்றி கூல்ஸ்கார்த்திக்...

இராகவன் நைஜிரியா said...

நன்றி வசந்த்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா நான் தான் லேட்டா

http://urupudaathathu.blogspot.com/ said...

அதுக்குள்ளே இவ்ளோ பேரா??

அ.மு.செய்யது said...

ஓஹ்..பதிவு போட்டாச்சா ??


இதற்கான விமர்சனங்களை ஏற்கெனவே ( ஒரு மணி நேரம் ) அலசிட்டதால அடுத்த பதிவ பார்க்கலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

தல இந்த பதிவு யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில்

வாழ்த்துக்கள்

♫சோம்பேறி♫ said...

/*மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, உபத்திரவமா இருக்க கூடாதுன்னு நினைக்கின்றேன்.*/

நிஜமாவே நல்ல ஆசை..

(தொடர் பதிவுக்கு யாராவது கூப்பிட்டா மட்டும் தான் எழுத வருவீங்க போல? என் பேர் உங்களுக்கு தான் நல்லா பொருந்துது..)

டாஸ்மாக் கபாலி said...

//18.கண்ணாடி அணிபவரா?

ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..//

அண்ணே! அப்ப 30 + 45=75, எப்டிண்ணே என் கணக்கு சரியா? அதனால தான் உங்க படத்தப் போடாம பூவப்போட்டு இருக்கியலா?

Unknown said...

நல்ல வேல .. பேச்சு வாக்குல ... உங்களோட அடுத்த படம் என்னன்னு கேக்குலையே ..???

இராகவன் நைஜிரியா said...

நன்றி அணிமா... தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

இராகவன் நைஜிரியா said...

// அ.மு.செய்யது said...

ஓஹ்..பதிவு போட்டாச்சா ??


இதற்கான விமர்சனங்களை ஏற்கெனவே ( ஒரு மணி நேரம் ) அலசிட்டதால அடுத்த பதிவ பார்க்கலாம்.//

நன்றி செய்யது.

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்.........வசந்த் said...

தல இந்த பதிவு யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில்

வாழ்த்துக்கள்//

நன்றி வசந்த்.

இராகவன் நைஜிரியா said...

// ♫சோம்பேறி♫ said...

/*மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, உபத்திரவமா இருக்க கூடாதுன்னு நினைக்கின்றேன்.*/

நிஜமாவே நல்ல ஆசை..

(தொடர் பதிவுக்கு யாராவது கூப்பிட்டா மட்டும் தான் எழுத வருவீங்க போல? என் பேர் உங்களுக்கு தான் நல்லா பொருந்துது..)//

நன்றி சோம்பேறி. எனக்கு மட்டும் என்ன நிறைய இடுகைகள் போடக் கூடாது என்று ஆசையா. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இங்கு சரக்கு கிடையாதுங்க. அதனாலதான் போடுவது குறைச்சலாக இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

// டாஸ்மாக் கபாலி said...

//18.கண்ணாடி அணிபவரா?

ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..//

அண்ணே! அப்ப 30 + 45=75, எப்டிண்ணே என் கணக்கு சரியா? அதனால தான் உங்க படத்தப் போடாம பூவப்போட்டு இருக்கியலா?//

ஆஹா அண்ணே கபாலி நல்லாத்தான் கணக்குப் போடுற.

என் படத்த பார்த்து யாரும் பயந்துடக் கூடாது என்பதற்காகக்த்தான் பூ படம் போட்டு இருக்கேன்.

இராகவன் நைஜிரியா said...

// லவ்டேல் மேடி said...

நல்ல வேல .. பேச்சு வாக்குல ... உங்களோட அடுத்த படம் என்னன்னு கேக்குலையே ..???//

நன்றி லவ்டேல் மேடி. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

அதானே யாருமே கேட்கவேயில்லை பாருங்க. அடுத்த படம்.. பேரு இன்னும் வைக்கவில்லைங்க.

सुREஷ் कुMAர் said...

//
சிறு வயதில் விளையாடியது. ஒரு பந்து. 10 (அ) 15 நண்பர்கள். பந்தை மேலேத் தூக்கி போட்டுவிட்டு எல்லோரும் ஓடுவோம். பந்தை எடுப்பவர் அடுத்தவரை அந்த பந்தினால் அடிக்க வேண்டும். பந்தை எடுத்தவரை நாம் தொட்டுவிட்டால் நம்மை அடிக்கக் கூடாது. இது தான் பேய்ப் பந்து விளையாட்டு.
//

ஓ.. இது தான் பேயப்பந்தா..
இத நாங்க பந்துக்கு உள்ள கல்லெல்லாம் வெச்சு கொலை வெறியுடன் விளையாடி இருக்கிறோம் (விளையாட்டின் பெயர் தெரியாமலே.. :) )..

RAMYA said...

என்னை இந்த தொடர் பதிவில் அழைத்ததிற்கு மிக்க நன்றி அண்ணா
மிகவும் தாமதமாதான் படித்தேன். ஆனால் உடனே நான் பதிவு போட்டுட்டேன்.

ஊரில் இல்லை, வேலைப் பளுவும் அதிகம்.

உங்கள் பதில்கள் அனைத்தும் மிகவும் சுவாரசியமா இருந்தது.

RAMYA said...

சிறப்பாக பதில்கள் சொல்லி அசத்தியிருக்கீங்க அண்ணா!!

S.A. நவாஸுதீன் said...

அண்ணா!

முன்னாடியே சொல்ல மறந்துவிட்டேன். கடையம் ஆனந்திற்கு நீங்கள் ரவியின் லிங்க் கொடுத்துள்ளீர்கள். மாற்றிவிடவும்

Joe said...

//
தாயையும்
//
தாயும் என்று வந்திருக்க வேண்டும்.

//
அம்மா சமைத்த, மனைவி் சமைக்கும் எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும்.
//
நான் ஆண்மகன், சமைக்க மாட்டேன் என்று மறைமுகமாக சொல்லும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ;-)