Monday, May 25, 2009

நைஜீரியா வலைப் பதிவர் சங்க வருடாந்திர மாநாடு அழைப்பிதழ்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

உலகின் மிகப் பெரிய நைஜிரியா வலைப் பதிவர் சங்க மாநாடு (Regn. No. 00001/002/xabc/2007), அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாநாடு விவரங்கள்

நாள் : 30-05-2009
நேரம் : மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம் : அபுஜா


கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்க்காக மாநாடு கூட்டப் படுகின்றது.

1. சங்க உறுப்பினர் சந்தாத் தொகையை உயர்த்தலாமா (அ) தற்போதுள்ள நிலையிலேயே தொடரலாமா... (தற்போது வருடத்திற்கு US$ 100 ஆக உள்ள சந்தாத் தொகையை US$ 100 ஆக உயர்த்தலாம் என முடிவு செய்யக்கூடாது்)

2. சங்க உறுப்பினர்த் தொகையைச் செலுத்தாத உறுப்பினர்களை உடனே சந்தாத் தொகையை செலுத்த வேண்டுகோள் விடுத்தல்.

3. சங்க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்று செயல் வீரர்களைத் தேர்ந்தெடுத்தல். (இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது. மேலும் ஒருவரே இரண்டு பதவிகளில் இருப்பதும் சங்கத்தின் விதி 99(ஓ(iii)) அனுமதிக்கின்றது)

4. சங்கத்திற்க்காக தனிக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவது சம்பந்தமாக.

5. வருடாந்திர கணக்கு, வழக்குகளை சமர்பித்தல். (இதுவரை எந்த சந்தாவும் வசூலாகவில்லை என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டு இருக்கின்றோம்)

6. தலைவர், பொதுச் செயலார், பொருளாளர்களுக்கு சந்தாத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கும் தீர்மானம். இது முக்கிய தீர்மானம் என்பதில் எந்த உறுப்பினறுக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

7. நைஜிரியா பதிவர் சங்கம் என்று இருக்கும் பெயரை அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது.

உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அழைப்பையே தங்களின் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

இப்படிக்கு தங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கும்



அணிமா
தலைவர்
+234 54321 54321


இராகவன்
பொதுச் செயலாளர்
+234 12345 12345


அணிமா & இராகவன்
பொருளாளர்கள்
(இரண்டு பொருளார்கள் - சங்கம் நேர்மையானது என்பதற்கான சாட்சி இது)


டிஸ்கி :
(முதலில் பி.கு. என்றுதான் போடலாம் என்று நினைத்தோம் - வலையுலக தர்மம் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் டிஸ்கி எனப் போடப்பட்டுள்ளது)


அ) இதுவரை இரண்டு பேர்தான் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். (அணிமா & இராகவன்) சேராத அனைவரும் உடனடியாக உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

ஆ) மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் அழைத்து நாங்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. தலைவரும், பொதுச் செயளாளரும் பொறுப்பல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். (அலுவலகப் பணிச் சுமைக்காரணமாக தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்).

இ) தேவையான சிற்றுண்டி, காபி, தேனீர் வசதிகளுக்கு, ஸ்பான்சர்கள் வரவேற்க்கப் படுகின்றார்கள்.

ஈ) முதலில் சேரும் உறுப்பினர்களுக்கு சங்கத்தில் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை தெரிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக சங்கத்தில் உறுப்பினர்களாக சேருமாறு வலைப்பதிவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். சேரும் உறுப்பினர்கள் முதலில் சந்தாத் தொகையைச் செலுத்திய பின்னர் தான் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

உ) நைஜிரியா வலைப் பதிவர் சங்கத்தில் சேருவதற்கு, நீங்கள் நைஜிரியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றப் பட இருப்பதால், உலகத்தில் நீங்க எங்கு இருந்தாலும் இங்கு தாங்கள் உறுப்பினர் ஆக முடியும்.


ஓப்பம்
முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.


134 comments:

பழமைபேசி said...

வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயனும், ஜ.மு.க தலைவர் மாட்டுக்கார வேலன் குடுகுடுப்பையாரும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள் என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

//டிஸ்கி ://

பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல்

பழமைபேசி said...

//ஓப்பம்
முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
//

இவங்கல்லம் ஆப்பம் தருவாங்களா ஐயா?

தமிழ் அமுதன் said...

கொள்கை பரப்பு செயலாளர் யாருண்ணே ?

இராகவன் நைஜிரியா said...

வாங்க பழமைபேசி ஐயா. தங்கள் முதல் வருகைக்கும், தகவலுக்கும் நன்றிகள் பல.

நமது சங்கத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து, சந்தா தொகையை வசூலித்துக் கொடுத்தால், தங்களை அமெரிக்கா கிளையில் தலைவராக அமர வைத்துப் பெருமைப் படுவோம்.

அகநாழிகை said...

இராகவ்,
நானும் வர்றேன், நானும் வர்றேன்
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க,

அத்திரி said...

இணைச்செயலாளர் யாருண்ணே

நட்புடன் ஜமால் said...

அண்ணே நான் தானே உங்க வரவுகளை வைத்திருக்க வேண்டிய ஆளு, அதனால உருப்பினர் தொகைகளை எனக்கு அனுப்பி வைக்கவும் ...

நட்புடன் ஜமால் said...

சந்தா தொகையெல்லாம்

பந்தா பன்னாம

அனுப்பி வைக்கவும்

சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் உங்களுக்கு தெரியும் தானே ...

அறிவிலி said...

சந்தாவை 042-231-34521 , POSB, Singapore அக்கவுண்டிற்கு அனுப்பவும். ரசீதுகள் முறையாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன் said...

கொள்கை பரப்பு செயலாளர் யாருண்ணே ? //

கொபசெ பதிவி இது வரை யாரும் நிறப்பப் படவில்லை.

முதலில் சந்தா செலுத்தி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

இராகவன் நைஜிரியா said...

// "அகநாழிகை" said...

இராகவ்,
நானும் வர்றேன், நானும் வர்றேன்
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க,//

நீங்க இல்லாமலா... மறக்காம சந்தா தொகையை அனுப்பிடுங்க

இராகவன் நைஜிரியா said...

// அத்திரி said...

இணைச்செயலாளர் யாருண்ணே //

இணைச் செயலாளர் பதிவும் காலியாகாத்தான் உள்ளது. முந்துங்கள். முந்துபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

அண்ணே நான் தானே உங்க வரவுகளை வைத்திருக்க வேண்டிய ஆளு, அதனால உருப்பினர் தொகைகளை எனக்கு அனுப்பி வைக்கவும் ... //

தம்பி ஜமாலு, இதெல்லாம் நாம தனியா பேசிக்கலாம். முதல்ல அங்க சிங்கைப் பதிவர்களைப் பிடிச்சு, கலெக்‌ஷன் பண்ணி இங்க அனுப்புற வழியப் பாருப்பா.

இராகவன் நைஜிரியா said...

// அறிவிலி said...

சந்தாவை 042-231-34521 , POSB, Singapore அக்கவுண்டிற்கு அனுப்பவும். ரசீதுகள் முறையாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். //

யாருப்பா அது அங்க ஊடால ஆட்டோ ஓட்டுறது.

இராகவன் நைஜிரியா said...

எனதருமை சக வலைஞர்களே,

சந்தாப் பணத்த அனுப்ப மாட்டேங்கிறீங்க, அதுக்காக, நெல்லைத்தமிழ், தமிழ் மணம், தமிழிஷில் ஓட்டு போடக்கூட முடியலயா.

தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை இடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆளவந்தான் said...

பசையுள்ள மந்திரி பதவி எதாவது உண்டா :)

ஆதவா said...

ஓட்டு போட்டவங்களுக்கு நூறு டாலராமே??? (இப்பல்லாம் ஓட்டுன்னாலே பணம் தான் ஞாபகத்துக்கு வருது..)

நாந்தான் முதல் ஓட்டு!!!

ஆதவா said...

ஓட்டு போட்டவங்களுக்கு நூறு டாலராமே??? (இப்பல்லாம் ஓட்டுன்னாலே பணம் தான் ஞாபகத்துக்கு வருது..)

நாந்தான் முதல் ஓட்டு!!!

அ.மு.செய்யது said...

//அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//

மாநாட்டில‌ க‌ல‌ந்துக்க‌ போற‌தே அந்த‌ ரெண்டு பேர் ம‌ட்டும் தான்.

என்னா க‌ல‌வ‌ர‌ம் ??

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்

அ.மு.செய்யது said...

//இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது.//

காலங்காலமாக சங்கம் வளர்க்க பெரும்பாடுபட்ட அ.மு.செய்யது அவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தராமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டமும்,கடையடைப்பும் நடத்தப்படும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே முன் மொழிகிறேன்.

துண்டு சீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் முன்பதவி செய்து கொ(ல்)ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

sakthi said...

அ.மு.செய்யது said...

//இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது.//

காலங்காலமாக சங்கம் வளர்க்க பெரும்பாடுபட்ட அ.மு.செய்யது அவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தராமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டமும்,கடையடைப்பும் நடத்தப்படும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே முன் மொழிகிறேன்.

துண்டு சீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் முன்பதவி செய்து கொ(ல்)ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..

hahahahaha

sakthi said...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க

தினேஷ் said...

ஆஹா , அடுத்து ஒரு கட்சி ஆரம்பித்து எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று ஒரு வெள்ளோட்டமா அணிமாவுக்கும் உங்களுக்கும்...
உங்களின் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராக (எந்த வேலையும்,கஷ்டமும்,முக்கியமா சொந்த பணம் போடாமல் ,கட்சி நிதியிலும் நன்கொடையிலும் பங்கும் பொது செயாலாளர் பதவியும்(முடிந்தால் தலைவர் பதவி)) இனைந்துக்கொண்டு தமிழ் வலை பதிவு உடன் பிறப்புகளுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

பழமைபேசி said...

வணக்கங்க ஐயா! இது ரொம்ப முக்கியமான விசயம்!! நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!!! அதை நினைவுல வெச்சுகிட்டு, வந்து போகணும்... சரீங்களா?!

ப்ரியமுடன் வசந்த் said...

அங்க சாரி சங்க உறுப்பினர்,தலைவர்,பொருளாளர் திரு அணிமா கண்டுபிடித்து தருபவர்களுக்கு இந்த நைஜீரியா வலை பதிவு சங்கத்தின் கத்தார் கிளை செயலாளர் வசந்த்தின் வெகுமதி உண்டு

ஆ.ஞானசேகரன் said...

நானும் வரேன் நண்பா...

nitham manasil utham said...

கானோ வாழ் தமிழ் மக்களின் ஏக மற்றும் ஒரே பிரதிநிதியாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன், [கண்டிப்பாக சந்தா செலுத்தாமல்தான்] என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

nitham manasil utham said...

நைஜீரியா வந்தாலே இப்பிடியெல்லாம் யோசிக்கத்தோனுதோ?

தேவன் மாயம் said...

படித்துத்தலையைப் பிச்சுக்கிட்டேன்!! கண்ணாடியில் பார்த்தா நைஜீரியன் மாதிரி முடி,முகம்!!!ஹி!! ஹி!!

Mahesh said...

அடுத்த நைஜீரியா ஸ்கேமா? ஆ....

நசரேயன் said...

சங்கத்திலே வட்டி இல்லா கடன் இருக்கா ?

Rajeswari said...

ஆஹா..கிளம்பிட்டாங்கப்பா..கிளம்பிட்டாங்க....ராகவன் அண்ணே எனக்கு ஒரு சேர் கொடுங்கண்ணே..வர்ரதுல 40% தந்துடுறேன்.

Rajeswari said...

//இராகவன் நைஜிரியா said... தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை இடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.//

தலைக்கு எவ்வளவு...

Rajeswari said...

சந்தாவை 042-231-34521 , POSB, Singapore அக்கவுண்டிற்கு அனுப்பவும். ரசீதுகள் முறையாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.//

அக்கவுண்ட் கோல்டர் பேர மறக்காம ரசனைக்காரின்னு போட்டுருங்கப்பா...

Suresh said...

படித்து சிரித்தேன்.. அதற்க்கு குழு கண்டணம் தெரிவிக்கக்கூடாது என்று மனு கொடுக்கிறேன்..

அப்புறமா நானும் உங்க சங்கத்தில் சேருகிறேன் இராகவன்அண்ணா

சந்தா தொகையை நான் இமெயில் போட்டோவா அனுப்புறேன்.. :-)\

/தேவையான சிற்றுண்டி, காபி, தேனீர் வசதிகளுக்கு, ஸ்பான்சர்கள் வரவேற்க்கப் படுகின்றார்கள்./

நான் ரெடி ஸ்பான்சர்க்கு இல்லை சாப்பிடுறதுக்கு :-)

Suresh said...

அந்த பி.கு ஸாரி டிஸ்கி மேட்டர் சூப்பர்

குடந்தை அன்புமணி said...

சங்கத்தில் உறுப்பினரா சேர்ந்தவர்களுக்கு பதிவர் கூட்டத்தில் கலந்துகொள்ள நைஜீரியாவுக்கு டிக்கெட் ப்ரீயாமே!

S.A. நவாஸுதீன் said...

நான் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் அண்ணா. (அப்பத்தான் நீங்களா கூப்பிட்டு பதவி கொடுப்பீங்க.

மொத்த சந்தாவையும் என்னோட PVPVP (போட்டா வராது போடலேன்னா வீட்டு பத்திரம்) வங்கியில் உள்ள அக்கௌண்டில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

காலங்காலமாக சங்கம் வளர்க்க பெரும்பாடுபட்ட அ.மு.செய்யது அவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தராமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டமும்,கடையடைப்பும் நடத்தப்படும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே முன் மொழிகிறேன்.

துண்டு சீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் முன்பதவி செய்து கொ(ல்)ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..

சூப்பர் செய்யது

கபிலன் said...

Concept அ ரூம் போட்டு யோசிப்பாங்களோ...!

அப்துல்மாலிக் said...

ஆஹா கிளம்பிடியெலா நீங்களும்

எனக்கு பொருளாலர் பதவி தந்தால்தான் நான் மாநாட்டுக்கு வருவேன் (இதுலே நுண்ணரசியல் எதுவுமே இல்லே)

அப்துல்மாலிக் said...

//முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.//

ரெண்டுபேரை வைத்து உலகம்தழுவிய மாநாடு நடத்தி வெற்றிகாணும் ஒரே ஆளு நீர்தான்யா....

மாசா மாசம் 100 டாலர் ரெண்டுபேரும் போட்டால் 2,400 டாலர் வருஷத்துக்கு வரும், அதை வைத்து என்னென்ன நல்(?) உதவிகள் செய்தீர்னு கொஞ்சம் பதிவுபோட முடியுமா

அப்துல்மாலிக் said...

எனக்கு பொருளாலர் பதவியும் கொடுத்து துபாய்‍ அபுஜா துபாய் ஏர் டிக்கெட் ம் எடுத்துக்கொடுத்த நைஜீரியா சிங்கம் ராகவ் அவர்களுக்கு பெரிய மனசுயா

அப்துல்மாலிக் said...

//சங்கத்திற்க்காக தனிக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவது சம்பந்தமாக///


சங்க கட்டிடம் என்ற பேரில் ஆளுக்கொரு வீடு கட்டப்போறீங்க என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் - மும்பை கிளை.

இப்போதே, அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் இந்த மும்பை கிளை சங்கத்தின் நிர்வாகிகளை மதிக்காமல், தலைமை சகல முடிவுகளும் எடுப்பதால் இந்த கட்சியை உடைத்து சாரி சங்கத்தை விட்டு நான் வெளியே வருகிறேன், நாங்கள் வைத்திருக்கும் சங்கம் தான் உண்மையான அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம். எங்களுக்கு இந்த கட்சி கிடைக்கவில்லை என்றால் புதிய சங்கம் / கட்சி தோற்றுவித்து அதற்கு "அகில உலக அண்ணா நைஜிரியா வலைப்பதிவர் சங்கம்" என்றும் பெயர்வைத்து அறிவிப்பு செய்யப்படும்.

பின் குறிப்பு: இங்கே "அண்ணா" என்பது மும்பைவாசிகள் தென் இந்திய மக்களை குறிக்க பயன்படுத்தும் சொல் என்பதினை இந்த தருணத்திலே நியாபகபடுத்துகிறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

///உலகின் மிகப் பெரிய நைஜிரியா வலைப் பதிவர் சங்க மாநாடு (Regn. No. 00001/002/xabc/2007), அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.////

இது என்ன புது கரடியா சாரி புது கதையா இருக்கு??

http://urupudaathathu.blogspot.com/ said...

///நாள் : 30-05-2009
நேரம் : மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம் : அபுஜா////


சரக்கு உண்டா??
( அப்போ தான் நான் வருவேன்)

http://urupudaathathu.blogspot.com/ said...

//கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்க்காக மாநாடு கூட்டப் படுகின்றது.///

மாநாட்டில் எனக்கு கட் அவுட் உண்டா??

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹையா நான் தான் அம்பது...

( எப்படி போட்டேன் பாத்தீங்களா??)

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...

வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயனும், ஜ.மு.க தலைவர் மாட்டுக்கார வேலன் குடுகுடுப்பையாரும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள் என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

//டிஸ்கி ://

பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல்///

சேருவது இருக்கட்டும்.. அந்த $ மறக்காம அனுப்பிடுங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...


இவங்கல்லம் ஆப்பம் தருவாங்களா ஐயா?//

ஆப்பம் என்ன? விட்டா ஆப்பே தருவாங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஜீவன் said...

கொள்கை பரப்பு செயலாளர் யாருண்ணே ?///

அந்த பதவியையும் நானே எடுதுக்கலாம்னு இருக்கேன்.. நீங்க என்ன சொல்றீங்க?

http://urupudaathathu.blogspot.com/ said...

///"அகநாழிகை" said...

இராகவ்,
நானும் வர்றேன், நானும் வர்றேன்
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க,///

சந்தா தொகை அனுப்பிய பிறகே முடிவு செய்யப்படும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//நட்புடன் ஜமால் said...

அண்ணே நான் தானே உங்க வரவுகளை வைத்திருக்க வேண்டிய ஆளு, அதனால உருப்பினர் தொகைகளை எனக்கு அனுப்பி வைக்கவும் ...///

அப்படி ஒன்னு இருந்தா தானே அனுப்பி வைக்க முடியும்,,..
ஐயோ ஐயொ...

http://urupudaathathu.blogspot.com/ said...

///அபுஅஃப்ஸர் said...


சங்க கட்டிடம் என்ற பேரில் ஆளுக்கொரு வீடு கட்டப்போறீங்க என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///


ஹி.. ஹி.. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா

http://urupudaathathu.blogspot.com/ said...

//கபிலன் said...

Concept அ ரூம் போட்டு யோசிப்பாங்களோ...!///

ரூம் போட்டு தான் யோசிக்கனுமா? ஏன் சரக்க போட்டு யோசிக்க கூடாதா?

Cable சங்கர் said...

உடனடியா டிக்கெட் அனுப்பி விடுங்க. வந்திர்றேன்.

ஜானி வாக்கர் said...

உறுப்பினர் ஆகா விரும்பும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை, சங்கத்தில் உள்ள இருவரில் ஒருவர் போட்டி சங்கம் துவங்க வேண்டி மிகப்பெரிய கலவரம் உருவாக்கி மற்றவருக்கு அவபெயர் உண்டாக்க முனைந்துள்ளதாக ரகசிய தகவல்கள் உலாவருகின்றது. ராகவன் அய்யா ஏதோ என்னால முடுஞ்சது இவ்ளோ தான்.

இராகவன் நைஜிரியா said...

//ஆளவந்தான் said...
பசையுள்ள மந்திரி பதவி எதாவது உண்டா :)//

சங்கத்தை வளர்க்க நடவடிக்கை எடுங்கப்பா. அதுக்கப்புறம் பார்த்துகலாம்.

இராகவன் நைஜிரியா said...

//ஆதவா said...
ஓட்டு போட்டவங்களுக்கு நூறு டாலராமே??? (இப்பல்லாம் ஓட்டுன்னாலே பணம் தான் ஞாபகத்துக்கு வருது..)

நாந்தான் முதல் ஓட்டு!!!//

இங்கு சங்கத்தின் நிதி நிலைமை கவலைகிடமாக இருப்பதால், வாக்குகளுக்கு பணம் தர இயலாத நிலைமையில் இருக்கின்றோம்.

இராகவன் நைஜிரியா said...

//அ.மு.செய்யது said...
//அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//

மாநாட்டில‌ க‌ல‌ந்துக்க‌ போற‌தே அந்த‌ ரெண்டு பேர் ம‌ட்டும் தான்.

என்னா க‌ல‌வ‌ர‌ம் ??//

ஒவ்வொருவரும் லட்சம் பேருக்கு சமானம். அதனால் இரண்டு லட்சம் பேருக்கு மேல் கூட்டம் கூடும் என்று எதிர்ப்பார்க்கப் படுகின்றது.

இராகவன் நைஜிரியா said...

// அ.மு.செய்யது said...
//இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது.//

காலங்காலமாக சங்கம் வளர்க்க பெரும்பாடுபட்ட அ.மு.செய்யது அவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தராமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டமும்,கடையடைப்பும் நடத்தப்படும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே முன் மொழிகிறேன்.

துண்டு சீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் முன்பதவி செய்து கொ(ல்)ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.//

சங்கம் வளர்த்த அ.மு. செய்யது அவர்களுக்கு என் இதயத்தில் என்றும் நிரந்தர இடமுண்டு.

இராகவன் நைஜிரியா said...

//sakthi said...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க//

அதுதாங்க நைஜிரியா வலைப் பதிவர் சங்கத்தின் பெருமையே...

இராகவன் நைஜிரியா said...

//சூரியன் said...
ஆஹா , அடுத்து ஒரு கட்சி ஆரம்பித்து எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று ஒரு வெள்ளோட்டமா அணிமாவுக்கும் உங்களுக்கும்...
உங்களின் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராக (எந்த வேலையும்,கஷ்டமும்,முக்கியமா சொந்த பணம் போடாமல் ,கட்சி நிதியிலும் நன்கொடையிலும் பங்கும் பொது செயாலாளர் பதவியும்(முடிந்தால் தலைவர் பதவி)) இனைந்துக்கொண்டு தமிழ் வலை பதிவு உடன் பிறப்புகளுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..//

கவலையேப் படாதீங்க. முதலில் சந்தா திரட்டுங்கள். திரட்டிய சந்தாவை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உடனடி பதிவி உங்களுக்குத்தான்.

இராகவன் நைஜிரியா said...

//பிரியமுடன்.........வசந்த் said...
அங்க சாரி சங்க உறுப்பினர்,தலைவர்,பொருளாளர் திரு அணிமா கண்டுபிடித்து தருபவர்களுக்கு இந்த நைஜீரியா வலை பதிவு சங்கத்தின் கத்தார் கிளை செயலாளர் வசந்த்தின் வெகுமதி உண்டு //

தலைவர் பணிச் சுமைக் காரணமாக அவ்வப்போது வலைப்பூக்களில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கின்றார். உறுப்பினர்கள அனைவரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இங்கணம் பொதுச் செயளாளர்.

இராகவன் நைஜிரியா said...

//ஆ.ஞானசேகரன் said...
நானும் வரேன் நண்பா... //

நீங்க இல்லாமலா.

உங்க பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.

இராகவன் நைஜிரியா said...

// nitham manasil utham said...
கானோ வாழ் தமிழ் மக்களின் ஏக மற்றும் ஒரே பிரதிநிதியாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன், [கண்டிப்பாக சந்தா செலுத்தாமல்தான்] என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் இவர்கள் இருவருக்கு மட்டும் தான் சந்தாத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கின்றது. கிளை, துணைக் கழங்களில் பணியாற்றுபவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

இராகவன் நைஜிரியா said...

// nitham manasil utham said...
நைஜீரியா வந்தாலே இப்பிடியெல்லாம் யோசிக்கத்தோனுதோ? //

என்னாச் செய்யறது.. அது அப்படித்தான் ... மண் வாசனை.

coolzkarthi said...

ஹல்லோ ராகவன் அண்ணே....அலை கடல் போல் வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த போறீங்க?

coolzkarthi said...

அண்ணே அப்புறம் உங்க சென்னை விசிட் எப்போ?

biskothupayal said...

அண்ணே புதுசா பெட்டக பாதுகாப்புக்கு பொறுப்பு இருந்தா சொல்லுங்க பெருதன்மைய அந்த பொறுப்பு மட்டும் நான் செய்ய தயார் !

சி தயாளன் said...

2 பேரை மட்டும் கொண்டு பில்டப் காட்டும் அரசியலில் முதிர்ச்சி தெரிகின்றது....:-)))

RAMYA said...

அண்ணா நல்லா யோசிச்சிருக்கீங்க. படிச்சிட்டு ஒரே சிரிப்பா வந்திச்சு. சரி என்னையும் உங்க சங்கத்திலே சேர்த்துக்கோங்க. நண்பர் நசரேயன் கேட்பது போல் எனக்கும் வட்டி இல்லாமல் கடன் கொடுங்க. நாணயமா திருப்பித் தந்து விடுகின்றேன் :)

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...
படித்துத்தலையைப் பிச்சுக்கிட்டேன்!! கண்ணாடியில் பார்த்தா நைஜீரியன் மாதிரி முடி,முகம்!!!ஹி!! ஹி!!//

மருத்துவருக்கே இந்த கதியா... ஐயோ பாவம்

RAMYA said...

ஜீவன், நான்தான் கொள்கைப் பரப்புச் செயலாளர். இதெல்லாம்........

இராகவன் நைஜிரியா said...

//Mahesh said...
அடுத்த நைஜீரியா ஸ்கேமா? ஆ....//

எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்நேகம் மட்டும்தாங்க. ஸ்கேம் தெரியாதுங்க

இராகவன் நைஜிரியா said...

//நசரேயன் said...
சங்கத்திலே வட்டி இல்லா கடன் இருக்கா ? //

தளபதி என்னாது இது. இங்கு சந்தாவே வசூல் ஆகக் காணும் அப்படின்னு நான் புலம்பிகிட்டு இருக்கேன்.

நீங்க கொஞ்சம் உதவி பண்ண முடியுமா பாருங்க..

இராகவன் நைஜிரியா said...

//Rajeswari said...
ஆஹா..கிளம்பிட்டாங்கப்பா..கிளம்பிட்டாங்க....ராகவன் அண்ணே எனக்கு ஒரு சேர் கொடுங்கண்ணே..வர்ரதுல 40% தந்துடுறேன். //

60% கொடுங்க ஒரு சேர் என்ன இரண்டு சேர் கொடுக்கின்றேன்.

सुREஷ் कुMAர் said...

//
உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
//
எந்த மாதிரியான பயன்..?

सुREஷ் कुMAர் said...

//
உடனே சந்தாத் தொகையை செலுத்த வேண்டுகோள் விடுத்தல்
//
சங்கத்துல லோன் குடுத்தா செலுத்திடலாம்..

सुREஷ் कुMAர் said...

//
இந்த அழைப்பையே தங்களின் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
//
பயனசெலவுகள் சங்கத்தால் கொடுக்கப்படுமா..?

இராகவன் நைஜிரியா said...

//Rajeswari said...
சந்தாவை 042-231-34521 , POSB, Singapore அக்கவுண்டிற்கு அனுப்பவும். ரசீதுகள் முறையாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.//

அக்கவுண்ட் கோல்டர் பேர மறக்காம ரசனைக்காரின்னு போட்டுருங்கப்பா...//

ஹலோ அங்க யாருங்க குறுக்கால ஆட்டோ ஓட்டுவது. ஆரம்பிச்ச இரண்டு பேர் இங்க இருக்கோம். அவங்களுக்கே ஒன்னும் கிடைக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

//Suresh said...
படித்து சிரித்தேன்.. அதற்க்கு குழு கண்டணம் தெரிவிக்கக்கூடாது என்று மனு கொடுக்கிறேன்..

அப்புறமா நானும் உங்க சங்கத்தில் சேருகிறேன் இராகவன்அண்ணா

சந்தா தொகையை நான் இமெயில் போட்டோவா அனுப்புறேன்.. :-)\

/தேவையான சிற்றுண்டி, காபி, தேனீர் வசதிகளுக்கு, ஸ்பான்சர்கள் வரவேற்க்கப் படுகின்றார்கள்./

நான் ரெடி ஸ்பான்சர்க்கு இல்லை சாப்பிடுறதுக்கு :-)//

பணம் கட்டிய ரசீதை போட்டோ எடுத்து அனுப்பினால் ரொம்ப சந்தோஷப்படுவோம்

இராகவன் நைஜிரியா said...

//குடந்தை அன்புமணி said...
சங்கத்தில் உறுப்பினரா சேர்ந்தவர்களுக்கு பதிவர் கூட்டத்தில் கலந்துகொள்ள நைஜீரியாவுக்கு டிக்கெட் ப்ரீயாமே! //

வருடத்திற்கு $3000 க்கு மேல் கொடுக்கும் உறுப்பினர்களுக்கு டிக்கெட் ப்ரீ..

सुREஷ் कुMAர் said...

அண்ணா.. என் ஓட்டு + சில பல கள்ள ஓட்டுக்களும் போட்டாச்சு.. சந்தாவில் ஏதும் குறைப்பு, சலுகைகள் உண்டா..?

இராகவன் நைஜிரியா said...

//S.A. நவாஸுதீன் said...
நான் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் அண்ணா. (அப்பத்தான் நீங்களா கூப்பிட்டு பதவி கொடுப்பீங்க.

மொத்த சந்தாவையும் என்னோட PVPVP (போட்டா வராது போடலேன்னா வீட்டு பத்திரம்) வங்கியில் உள்ள அக்கௌண்டில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இங்கு யார் சந்தா தொகையைச் சரியாக செலுத்தி, அதிகமாக சந்தா வசூலிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் பதவி.

இராகவன் நைஜிரியா said...

//கபிலன் said...
Concept அ ரூம் போட்டு யோசிப்பாங்களோ...! //

வாங்க கபிலன். தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல.

தலைவர் அணிமா தங்களுக்கு பதில் சொல்லியிருக்கார் பாருங்க.

सुREஷ் कुMAர் said...

அப்படியே, இங்க கோயமுத்தூரிலும் மாநாடு நடத்தி வசூல் செய்துகொடுங்கள்.. கொஞ்சம் செலவு இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

//அபுஅஃப்ஸர் said...
ஆஹா கிளம்பிடியெலா நீங்களும்

எனக்கு பொருளாலர் பதவி தந்தால்தான் நான் மாநாட்டுக்கு வருவேன் (இதுலே நுண்ணரசியல் எதுவுமே இல்லே)//

வா தம்பி வா. உனக்கு இல்லாத பதவியா. எனதருமை தம்பிகளுக்காகத்தான் பதவிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன.

துபாய் பதிவர்களிடம் வசூலிக்க வேண்டிய தொகைகளை சரியாக வசூலித்து அனுப்பிவிடுங்க.

இராகவன் நைஜிரியா said...

// நையாண்டி நைனா said...
அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் - மும்பை கிளை.

இப்போதே, அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் இந்த மும்பை கிளை சங்கத்தின் நிர்வாகிகளை மதிக்காமல், தலைமை சகல முடிவுகளும் எடுப்பதால் இந்த கட்சியை உடைத்து சாரி சங்கத்தை விட்டு நான் வெளியே வருகிறேன், நாங்கள் வைத்திருக்கும் சங்கம் தான் உண்மையான அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம். எங்களுக்கு இந்த கட்சி கிடைக்கவில்லை என்றால் புதிய சங்கம் / கட்சி தோற்றுவித்து அதற்கு "அகில உலக அண்ணா நைஜிரியா வலைப்பதிவர் சங்கம்" என்றும் பெயர்வைத்து அறிவிப்பு செய்யப்படும்.

பின் குறிப்பு: இங்கே "அண்ணா" என்பது மும்பைவாசிகள் தென் இந்திய மக்களை குறிக்க பயன்படுத்தும் சொல் என்பதினை இந்த தருணத்திலே நியாபகபடுத்துகிறேன்.//

வாங்க நைனா... நம்ம விவகாரத்தை அப்புறம் பார்த்துக்கலாம். அந்த வசூல் எல்லாம் சரியா பண்ணி அனுப்பிவிடுங்க...

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///உலகின் மிகப் பெரிய நைஜிரியா வலைப் பதிவர் சங்க மாநாடு (Regn. No. 00001/002/xabc/2007), அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.////

இது என்ன புது கரடியா சாரி புது கதையா இருக்கு?? //

தலைவரே என்னாது இது... உங்களிடம் கேட்டுத்தானே ஏற்பாடு எல்லாம் நடந்துகிட்டு இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///நாள் : 30-05-2009
நேரம் : மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம் : அபுஜா////


சரக்கு உண்டா??
( அப்போ தான் நான் வருவேன்) //

சரக்கு மாஸ்டரே நீங்கத்தானே...

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
//கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்க்காக மாநாடு கூட்டப் படுகின்றது.///

மாநாட்டில் எனக்கு கட் அவுட் உண்டா?? //

ஷெரட்டான் ஹோட்டல் பக்கத்தில் ஒரு 140 கட் அவுட் வைக்க ஏற்பாடு நடந்தது. அபுஜா மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு சொல்லிவிட்டதால் வைக்க முடியவில்லை.

இராகவன் நைஜிரியா said...

//Cable Sankar said...
உடனடியா டிக்கெட் அனுப்பி விடுங்க. வந்திர்றேன். //

டிக்கெட் என்னங்க.. உங்களுக்காக எங்களுடைய சிறப்பு கான்கார்ட் விமானத்தை அனுப்பினோம். அது சென்னையில் தரையிருங்குவதற்கு அனுமதி கிடைக்காததால், விமானம் திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதுங்க.


சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி தகவல் கொடுத்தால் திரும்பவும் அனுப்புகின்றோம்.

டிஸ்கி : சென்னையில் விமானம் தரையிரங்குவதற்கு ரூ 6 லட்சம் கட்ட வேண்டுமாம். அதை நீங்க கட்டிவிடுங்க.

இராகவன் நைஜிரியா said...

//சின்னக்கவுண்டர் said...
உறுப்பினர் ஆகா விரும்பும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை, சங்கத்தில் உள்ள இருவரில் ஒருவர் போட்டி சங்கம் துவங்க வேண்டி மிகப்பெரிய கலவரம் உருவாக்கி மற்றவருக்கு அவபெயர் உண்டாக்க முனைந்துள்ளதாக ரகசிய தகவல்கள் உலாவருகின்றது. ராகவன் அய்யா ஏதோ என்னால முடுஞ்சது இவ்ளோ தான். //

சங்கத்தை உடைக்க நினைப்பவர்களால் நடத்தப் படும் நாடகம். உறுப்பினர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அணிமா & இராகவன்

இராகவன் நைஜிரியா said...

//coolzkarthi said...
ஹல்லோ ராகவன் அண்ணே....அலை கடல் போல் வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த போறீங்க?//

கவலையேயில்லை. நீங்க வந்து அதை எல்லாம் பார்த்துப்பீங்க.

// coolzkarthi said...
அண்ணே அப்புறம் உங்க சென்னை விசிட் எப்போ? //

ஜூன் 22 சென்னையில் இருப்பேன்

இராகவன் நைஜிரியா said...

//biskothupayal said...
அண்ணே புதுசா பெட்டக பாதுகாப்புக்கு பொறுப்பு இருந்தா சொல்லுங்க பெருதன்மைய அந்த பொறுப்பு மட்டும் நான் செய்ய தயார் !//

இல்லீங்க அது எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்வோம்.

சந்தா வசூலிக்கும் வேலைத்தான் காலியா இருக்கு வருவீங்களா?

இராகவன் நைஜிரியா said...

//’டொன்’ லீ said...
2 பேரை மட்டும் கொண்டு பில்டப் காட்டும் அரசியலில் முதிர்ச்சி தெரிகின்றது....:-)))//

நன்றி டொன் லீ.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா......

இராகவன் நைஜிரியா said...

//RAMYA said...
அண்ணா நல்லா யோசிச்சிருக்கீங்க. படிச்சிட்டு ஒரே சிரிப்பா வந்திச்சு. சரி என்னையும் உங்க சங்கத்திலே சேர்த்துக்கோங்க. நண்பர் நசரேயன் கேட்பது போல் எனக்கும் வட்டி இல்லாமல் கடன் கொடுங்க. நாணயமா திருப்பித் தந்து விடுகின்றேன் :) //

உனக்கு இல்லாததாம்மா...

இராகவன் நைஜிரியா said...

//RAMYA said...
ஜீவன், நான்தான் கொள்கைப் பரப்புச் செயலாளர். இதெல்லாம்........//

ஆமாம் தங்கச்சித்தான் கொள்கைப் பரப்புச் செயலாளர்.

இராகவன் நைஜிரியா said...

//சுரேஷ் குமார் said...
//
இந்த அழைப்பையே தங்களின் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
//
பயனசெலவுகள் சங்கத்தால் கொடுக்கப்படுமா..? //

சங்கத்திற்கு யூஎஸ் டாலர் 3,000 க்கு மேல் சந்தா செலுத்துபவர்களுக்கு பயணச் செலவுகள் சங்க விதிகளின் படி வழங்கப்படும்.

இராகவன் நைஜிரியா said...

//சுரேஷ் குமார் said...
//
உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
//
எந்த மாதிரியான பயன்..?//

சங்கத்தில் சேர்ந்து சந்தாத் தொகையை அனுப்புங்க.. அப்ப புரியும்.

இராகவன் நைஜிரியா said...

//சுரேஷ் குமார் said...
//
உடனே சந்தாத் தொகையை செலுத்த வேண்டுகோள் விடுத்தல்
//
சங்கத்துல லோன் குடுத்தா செலுத்திடலாம்.. //

சந்தாத் தொகைகளை வசூல் பண்ணிக் கொடுங்க.. செஞ்சுடலாம்.

இராகவன் நைஜிரியா said...

//சுரேஷ் குமார் said...
அண்ணா.. என் ஓட்டு + சில பல கள்ள ஓட்டுக்களும் போட்டாச்சு.. சந்தாவில் ஏதும் குறைப்பு, சலுகைகள் உண்டா..? //

இது மாதிரி எல்லாம் கேட்கக் கூடாது. சந்தாத் தொகையை செலுத்துங்க. பின்னர் கவனிக்கப்படும்.

Anonymous said...

உங்களது அன்பும் ஆதரவும் என்றும் நமக்கு தேவை

இராகவன் நைஜிரியா said...

// நன்றி தமிழர்ஸ் - Tamilers said...
உங்களது அன்பும் ஆதரவும் என்றும் நமக்கு தேவை//

நன்றி தமிழர்ஸ். இந்த இடுகையை உங்கள் திரட்டியில் சேர்த்துவிட்டேன். சில நாட்கள் கழித்து உங்களின் வாக்குப் பட்டையை இணைக்கின்றேன். தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் வைரஸ் பயம்தான் காரணம்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

பயம் வேண்டாம் நண்பா, நல்லா செக்யூர்டா இருக்கும்.நம்பி இணைக்களாம்

நன்றி
தமிழ்ர்ஸ்

ஜெட்லி... said...

வணக்கம் அண்ணே....

என்கிட்ட ஒரு அஞ்சு உருப்படி இருக்கு வேணும்னா சேர்த்து விடுறேன்.

எவ்வளோ கமிஷன் தருவிங்க?

அப்புறம் என்னை வேணும்னா கொ.ப.செ ஆக்கிடுங்க, பரப்பிடலாம்.

வால்பையன் said...

உங்க போனுக்கு கூப்பிட்டா, தலைவர் பயங்கர மப்பில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்னு ஒரு பொண்ணு பேசுதே!

யாருன்னே அது?

veera said...

நானும் வந்து சேரலாம் என்றிருக்கிறேன். பொருளாளர் பதவியை கொடுத்தால் சந்தோஷப்படுவேன். இல்லையென்றால் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஜெட்லி said...

வணக்கம் அண்ணே....

என்கிட்ட ஒரு அஞ்சு உருப்படி இருக்கு வேணும்னா சேர்த்து விடுறேன்.

எவ்வளோ கமிஷன் தருவிங்க?

அப்புறம் என்னை வேணும்னா கொ.ப.செ ஆக்கிடுங்க, பரப்பிடலாம்.//

கமிஷன் தானே... நாங்க எப்போதுமே சரியா நடந்துக்குவோம்.. 60% எங்களுக்கு 40% உங்களுக்கு. சரியா. முதலில் கலக்‌ஷன் பாருங்க. பதவி தானே தேடிவரும்.

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

உங்க போனுக்கு கூப்பிட்டா, தலைவர் பயங்கர மப்பில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்னு ஒரு பொண்ணு பேசுதே!

யாருன்னே அது?//

என்னப்பா இது.. கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்லிகிட்டு. இது பற்றி நாம் ஒரு செயற்குழு கூட்டி, முடிவெடுக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// veera said...

நானும் வந்து சேரலாம் என்றிருக்கிறேன். பொருளாளர் பதவியை கொடுத்தால் சந்தோஷப்படுவேன். இல்லையென்றால் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பேன். //

வாங்க. ... உங்கள் வரவு நல்வரவாகுக. பொருளாளர் பதிவிக்கு பலத்த போட்டி இருக்கின்றது. அதனால், நீங்க யுஎஸ் டாலர் 3000 கொடுத்து, இணைப் பொருளாளர் பதிவியை வாங்கிடுங்க...

coolzkarthi said...

அண்ணே உங்க msg அன்னைக்கே கிடைச்சிடுச்சு....நானும் அன்னைக்கே reply அனுப்பினேன்...மிக்க நன்றி அண்ணே.....

vasu balaji said...

ஏதாவது பதவி காலி இருக்கா?

லோகு said...

எல்லா நிபந்தனைகளும் சரிதான்.. ஆனால் US$100ஆக இருக்கும் சந்தாவை ('ச'வுக்கு துணைக்கால் இல்லை) US$100ஆக குறைத்தால் உடனடியாக சேர தயார்..

Sukumar said...

தாமதமா இந்த பதிவ படிச்சிட்டேன் அதுக்காக என்னை விட்டுடாதீங்க..... அட்லீஸ்ட்... சூளைமேடு வட்ட செயலாளர் போஸ்டிங் கொடுத்திடுங்க... டவுன் பய்மேன்ட் பண்ணிடலாம்..... ( ஆமா வருங்காலத்துல சங்கத்தை அரசியல் கட்சி ஆக்கிடுவீங்கள்ள அப்ப நம்மளை மறந்துடாதீங்க )

*இயற்கை ராஜி* said...

க‌ண்டிப்பா க‌ல‌ந்துக்க‌றேங்க‌....டிக்க‌ட் அனுப்பிவ‌ச்சிடுங்க‌..:-))

Anonymous said...

மாநாட்டிற்க்கு துவக்க பாடல் பாட யாரை அழைக்கலாம்ன்னு இருக்கீங்க சார்..?

கண்ணா.. said...

வணக்கம்,

நான் கண்ணா, இருப்பது துபாயில்.
நீங்கள் துபாய்க்கு குடும்பத்தாராடு ஜுன் 21ம் தேதி வரூவதாக அபிஅப்பா கூறினார்கள்.மிக்க மகிழ்ச்சி...அந்த சமயத்தில்தான் பதிவர் சந்திப்பு நடக்கும்.

சில உறுப்பினர்கள் விடுமுறைக்கு செல்வதால்தான் இந்த ஜுன் 5ம் தேதி சாதாரண சந்திப்பு....

ஆசிப் அண்ணன் வந்தவுடன் இடம் முடிவு செய்து ஜுன் 3வது அல்லது 4வது வாரம் கண்டிப்பாக நடைபெறும்..

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி உங்கள் அன்புதம்பி,

கண்ணா @ வெங்கடேஷ்.

என் மின்மடல்: mk1venki@gmail.com

இராகவன் நைஜிரியா said...

//பாலா... said...

ஏதாவது பதவி காலி இருக்கா? //

அண்ணே பாலா அண்ணே நீங்க சரின்னு சொல்லுங்க என்னோட பதவியை விட்டுக் கொடுத்திடறேன்...

(நம்ம தனியா கவனிச்சுகுங்க)

இராகவன் நைஜிரியா said...

// Sukumar Swaminathan said...

தாமதமா இந்த பதிவ படிச்சிட்டேன் அதுக்காக என்னை விட்டுடாதீங்க..... அட்லீஸ்ட்... சூளைமேடு வட்ட செயலாளர் போஸ்டிங் கொடுத்திடுங்க... டவுன் பய்மேன்ட் பண்ணிடலாம்..... ( ஆமா வருங்காலத்துல சங்கத்தை அரசியல் கட்சி ஆக்கிடுவீங்கள்ள அப்ப நம்மளை மறந்துடாதீங்க ) //

சங்கம் ஆரம்பிப்பதே, வருங்காலத்தில் அரசியல் கட்சியாகி ஆட்சியைப் பிடிப்பதற்க்காகத்தான். நாங்கெல்லாம் யாரையும் மறக்க மாட்டோங்க...

இராகவன் நைஜிரியா said...

// இய‌ற்கை said...

க‌ண்டிப்பா க‌ல‌ந்துக்க‌றேங்க‌....டிக்க‌ட் அனுப்பிவ‌ச்சிடுங்க‌..:-)) //

சங்க விதிகளின் படி யாருக்கும் டிக்கெட் கொடுப்பதில்லைங்க..

இராகவன் நைஜிரியா said...

// Covai Ravee said...

மாநாட்டிற்க்கு துவக்க பாடல் பாட யாரை அழைக்கலாம்ன்னு இருக்கீங்க சார்..? //

யார் காசுக் கொடுக்கின்றார்களோ... அவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.

இராகவன் நைஜிரியா said...

// Kanna said...

வணக்கம்,

நான் கண்ணா, இருப்பது துபாயில்.
நீங்கள் துபாய்க்கு குடும்பத்தாராடு ஜுன் 21ம் தேதி வரூவதாக அபிஅப்பா கூறினார்கள்.மிக்க மகிழ்ச்சி...அந்த சமயத்தில்தான் பதிவர் சந்திப்பு நடக்கும்.

சில உறுப்பினர்கள் விடுமுறைக்கு செல்வதால்தான் இந்த ஜுன் 5ம் தேதி சாதாரண சந்திப்பு....

ஆசிப் அண்ணன் வந்தவுடன் இடம் முடிவு செய்து ஜுன் 3வது அல்லது 4வது வாரம் கண்டிப்பாக நடைபெறும்..

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி உங்கள் அன்புதம்பி,

கண்ணா @ வெங்கடேஷ்.

என் மின்மடல்: mk1venki@gmail.com //

நன்றி தங்கள் வருகைக்கு கண்ணா.

தங்களுக்கு தனி மின்மடல் அனுப்பியிருக்கின்றேன்.

அது ஒரு கனாக் காலம் said...

நீங்கள் துபாய் வருவதாக அறிந்தேன் .... என்னுடைய தொலைபேசி ..050-4821594, கண்டிப்பாக சந்ததிக்க முயர்ச்சி செய்கிறேன்

Anonymous said...

நைஜிரியாவில நம்மட ஆக்கள் இருக்காங்களா?

புதுசா வந்தீருக்கிறோம் எட்டிப்பாக்கிறது!

கும்மாச்சி said...

நைஜீரியா ராகவன் அவர்களே வணக்கம். உங்களை தொடர்பு கொள்வதில் சிறிது குழப்பம் இருந்தது. சமீபத்தில் "Ntamil" செய்த குழப்பத்தால், என்னுடைய ப்லோக் நீக்கப்பட்டுவிட்டது. பொறுத்திருந்து பார்த்து புதிய ப்லோக் உருவாக்கிவிட்டேன். என்னுடைய ப்லோகின் புதிய முகவரி kummacchi.blogspot.com

உங்களுடைய தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.

குசும்பன் said...

உங்களுடைய நிக் நேம் தானே அனிமா:) (இருப்பது ஒரே ஒரு ஆள் இதுல இரண்டு பேராக பில்டப்பு:)

தாங்கள் துபாய் வரும் விபரத்தை சொன்னால் ஆட்டோ தயார் செய்ய வசதியாக இருக்கும்.

ஜோசப் பால்ராஜ் said...

ஒட்டுமொத்தமா உலகம் பூர பதிவர் சங்கம் அமைச்சு காசு பார்க்க நாங்க கான்ட்ராக்ட் எடுத்து வைச்சுருக்கோம், இதுல நீங்க இப்டி அறிவிப்பு வெளியிட்டதே தப்பு. முதல்ல சிங்கையில இருக்க தலைமையகத்துக்கு 10ஆயிரம் டாலர் அபராதம் கட்டிட்டு, முறையா எங்க அனுமதிய வாங்க முயற்சி செய்யுங்க.
நாங்க எதையும் தனியா முடிவு செய்ய மாட்டோம். எங்க செயற்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி உங்களுக்கு அனுமதி தருவோம். ( எல்லாக் குழுலயும் சேர்த்து 20 பேரு இருக்காங்க, அதுனால தனியா ஒரு 25 ஆயிரம் டாலர் அனுப்புங்க, அனுமதி குடுத்துருவோம்).

இராகவன் நைஜிரியா said...

// குசும்பன் said...

உங்களுடைய நிக் நேம் தானே அனிமா:) (இருப்பது ஒரே ஒரு ஆள் இதுல இரண்டு பேராக பில்டப்பு:)

தாங்கள் துபாய் வரும் விபரத்தை சொன்னால் ஆட்டோ தயார் செய்ய வசதியாக இருக்கும். //

அண்ணே குசும்புதானே... எதோ பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கோம். இதுல ஆட்டோ எல்லாம் அனுப்பி கெடுத்திடாதீங்க.

துபாய் ஜூன் 21 அன்று வருகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஜோசப் பால்ராஜ் said...

ஒட்டுமொத்தமா உலகம் பூர பதிவர் சங்கம் அமைச்சு காசு பார்க்க நாங்க கான்ட்ராக்ட் எடுத்து வைச்சுருக்கோம், இதுல நீங்க இப்டி அறிவிப்பு வெளியிட்டதே தப்பு. முதல்ல சிங்கையில இருக்க தலைமையகத்துக்கு 10ஆயிரம் டாலர் அபராதம் கட்டிட்டு, முறையா எங்க அனுமதிய வாங்க முயற்சி செய்யுங்க.
நாங்க எதையும் தனியா முடிவு செய்ய மாட்டோம். எங்க செயற்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி உங்களுக்கு அனுமதி தருவோம். ( எல்லாக் குழுலயும் சேர்த்து 20 பேரு இருக்காங்க, அதுனால தனியா ஒரு 25 ஆயிரம் டாலர் அனுப்புங்க, அனுமதி குடுத்துருவோம்). //

இது ஏற்றுக் கொள்ள இயலாதுங்க. நீங்க யாரிடமோ ஏமாந்து பணத்தைக் கொடுத்து காண்டிராக்ட் எடுத்து இருக்கீங்க.

அகில உலக நைஜிரியா வலைப் பதிவர் சங்கம்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் உங்க காண்டிராக்ட் செல்லுபடியாகதுங்க.

Eswari said...

இராகவன் நைஜிரியா said...
// ஜோசப் பால்ராஜ் said...

ஒட்டுமொத்தமா உலகம் பூர பதிவர் சங்கம் அமைச்சு காசு பார்க்க நாங்க கான்ட்ராக்ட் எடுத்து வைச்சுருக்கோம், இதுல நீங்க இப்டி அறிவிப்பு வெளியிட்டதே தப்பு. முதல்ல சிங்கையில இருக்க தலைமையகத்துக்கு 10ஆயிரம் டாலர் அபராதம் கட்டிட்டு, முறையா எங்க அனுமதிய வாங்க முயற்சி செய்யுங்க.
நாங்க எதையும் தனியா முடிவு செய்ய மாட்டோம். எங்க செயற்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி உங்களுக்கு அனுமதி தருவோம். ( எல்லாக் குழுலயும் சேர்த்து 20 பேரு இருக்காங்க, அதுனால தனியா ஒரு 25 ஆயிரம் டாலர் அனுப்புங்க, அனுமதி குடுத்துருவோம்). //

இது ஏற்றுக் கொள்ள இயலாதுங்க. நீங்க யாரிடமோ ஏமாந்து பணத்தைக் கொடுத்து காண்டிராக்ட் எடுத்து இருக்கீங்க.

அகில உலக நைஜிரியா வலைப் பதிவர் சங்கம்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் உங்க காண்டிராக்ட் செல்லுபடியாகதுங்க.//
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க ??