Thursday, June 11, 2009

சரணாகதி..........!!!









தங்கமணி வளையல் வாங்கணும் அப்படின்னு முடிவுப் பண்ணிட்டாங்க. அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...

சிவப்பு கலரில் இருப்பது தங்கமணி பேசியது
நீலக் கலரில் இருப்பது நான் பேசியது..
(அடைப்புக் குறிக்குள் இருப்பது என் நினைப்பு அதாவது என் உள் மனசு - பச்சைக் கலரில் )


அப்பாடா டிக்கெட் புக்கிங் பண்ணி, இ-டிக்கெட் இன்னிக்கு கைக்கு வந்துடுச்சும்மா அப்படின்னு தங்கமணிகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்... அப்போது...

என்னங்க.
(ஆசையாக...)
சொல்லும்மா.
நாம துபாயில் ஒரு நாள் முழுக்க தங்குவோமில்ல.
ஆமாம்மா. கார்த்தல 8 மணிக்கு போயிடுவோம். அப்புறம் அடுத்த ப்ளைட் மறுநாள் காலை 2 மணிக்குத் தான்.
அங்கு கோல்ட் நல்லா இருக்குமில்ல. நீங்க கூட பதிவு போட்டு இருக்கீங்கில்ல..
(ராகவா சுதாரிச்சுக்கோ.... உள்மனசு சொல்வதையெல்லாம் நாங்க கேட்போமா என்ன..)
நான் இடுகைப் போட்டது கத்தாரில் தங்கம் வாங்குவதுப் பற்றிம்மா...
கத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...
(ராகவா தப்பிக்க முடியாது.... மாட்டிகிட்ட)

ஆமாம்மா அங்கு கோல்ட் நல்லா இருக்கும். எதுக்கு கேட்கிற..
ஒன்னுமில்லீங்க...
அப்படின்னா சரி.. ஒன்னுமில்லைன்னு நீ சொன்ன பிறகுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..
அதில்லீங்க
என்னது அதில்லீங்க....
நான் சொல்லவதை கேளுங்க
என்னது நான் சொல்வதை கேளுங்க..
நடுவில் என் மகன் புகுந்து ... அப்பா இந்த ஜோக் வடிவேலு சொல்லிட்டார்... நீங்க வேற கடிக்காதீங்க - அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டுட்டார்....
இப்ப கேட்கப் போறீங்களா இல்லையா...
(ராகவா.... சமத்தா இருடா... வம்பை விலைக்கு வாங்காதே... அப்புறம் சோத்துக்குத் தாளம் போட வேண்டியிருக்கும்)
சரி சொல்லும்மா..
எதுக்கு சொல்ல வந்தேன்னா...
அதான் ஆரம்பிச்சாச்சே .. சொல்லும்மா...
இப்ப இருக்கின்ற வளையல் எல்லாம் சின்னதா ஆயிடுச்சுங்க...
என்னது வளையல் சின்னதா ஆயிடுச்சா.. (ராகவா ரொம்ப பேசற... இது நல்லதுக்கு இல்ல...)
ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா... (ராகவா... வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டே..)
என்ன சொன்னேன்..... (அப்பாடா மறந்துட்டீயா... ரொம்ப சந்தோஷம்..)
வளையல் சின்னதா ஆயிடுச்சுன்னு சொன்னே... (வாழ்க்கையிலே முதல்தடவையா கேள்விப் படுகின்றேன்..)
வளையல் சின்னதா ஆயிடுச்சுன்னு சொன்னேன் இல்ல...
ஆமாம்... வளையல் சின்னதா ஆயிடுச்சு... (துணி மாதிரி சுருங்கிப் போச்சு. ஊருக்குப் போனவுடன் வளையல் வாங்கிய கடையில் போய் சண்டை போடணும்..)
துபாயில் வளையல் ஒரு ஜோடி வாங்கலாமா.... (என்னாடா பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கேன்னுப் பார்த்தேன்...)
பார்க்கலாம்.. (ப்பாடி இன்னிக்குத் தப்பிச்சாசு...)

அதற்கு அடுத்த நாள்..

ஏங்க..
ஏம்மா ஏங்கற, நான் இங்கத்தானே இருக்கேன்.. (ராகவா .. பார்த்து அடிவாங்கப் போறே... வாயை வச்சுகிட்டு சும்மா இருடா..)
சரி, சரி வழிய வேண்டாம்
ஓகே.. ஓகே ...சொல்லும்மா (அப்பாடா அடிவாங்காம தப்பிச்சுட்டேன்...)
துபாயில்தானே வளையல் வாங்கப் போகின்றோம்..
அப்படியா எனக்குத் தெரியாதே.. (மனசுகுள்ள பெரிய நடிகன்னு நினைப்பு...)
இப்படி எல்லாம் சொன்னா எப்படி
எப்ப சொன்னேன் துபாயில் வளையல் வாங்கப் போகின்றோம் என்று..
நேத்து சொன்னேன் இல்ல.... வளையல் வாங்க வேண்டும் என்று
ஆமாம் ...
பார்க்கலாம் என்று நீங்க கூடச் சொன்னீங்க, அப்படின்னா வாங்கலாம் என்றுதானே அர்த்தம்
சரி இப்ப அதுக்கு என்ன ஊருக்குப் போவதற்கு இன்னும் நாள் இருக்கும்மா (இப்பவும் தப்பிச்சாச்சு..)

இரண்டு நாள் கழித்து... சாப்பாடு போட்டுக் கொண்டே...

நாம துபாயில் வளையல் வாங்குகின்றோம் தானே..
அப்படியா... எனக்குத் தெரியாதே... (ராகவா சாப்பாடு போட்டுகிட்டு இருக்காங்க... ஞாபகம் இருக்கட்டும்...)
என்னது தெரியாதா... வாங்குகின்றோம்... சரியா.. வாங்குகின்றோம்..
சரிம்மா வாங்கலாம்.... (வேற வழி...)
மொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...
என்னாது 4 பவுனா... (ஷாக் டிரீட்மெண்ட் !!)
என்னங்க ஒரு வளையல் 2 பவுனுக்கு குறைவா இருந்தா வளையல் போட்ட மாதிரி இருக்காதுங்க
(போட்ட மாதிரி இருக்காதா... ம்... எல்லாம் நேரம்...)
ம்..ம்.... சரி வாங்கிடலாம்.. (4 பவுன் 6 ஆக மாறுவதற்கு முன் ஒத்துக்கோடா ராகவா..)
நான் எதாவது கேட்டு இல்லேன்னு சொன்னதேயில்லைங்க நீங்க...
நீங்க ரொம்ப நல்லவர்ங்க...
அப்படின்னு எல்லாம் புகழ்ந்து பேசினாங்க...

(இதுக்கு மேலும் தர்க்கம் செய்யாத ராகவா... )
4 பவுன் என்னம்ம.... அதுக்கு மேலேயே வாங்கிக்கோம்மா... உனக்கு இல்லாதாதா... (டோட்டல் சரணாகதி !!!...)

என்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...





103 comments:

கண்ணா.. said...

அண்ணா துபாய்ல செய்ன் எல்லாம் 32 பவுன்ல கிடைக்குதாம்..

:))

கண்ணா.. said...

மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டேன்...

ஹி ஹி அதான் ரெண்டாவதா வந்து போட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// Kanna said...

அண்ணா துபாய்ல செய்ன் எல்லாம் 32 பவுன்ல கிடைக்குதாம்..

:)) //

உங்களை மாதிரி இரண்டு தம்பிகள் இருந்தா போதும், வேண்டாம் நீங்க ஒருத்தரே போதும், என்னைப் போட்டு கொடுக்க...

Unknown said...

"சரணாகதி..........!!!”

இப்படி எல்லாம் கூட இருக்கா...

மிக அருமை.

gopi said...

கைக்கு ரெண்டா போட்டா 4 வளையல் x 4 பவுன், அது தான நீங்க சொன்னது

இராகவன் நைஜிரியா said...

// Kanna said...

மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டேன்...

ஹி ஹி அதான் ரெண்டாவதா வந்து போட்டேன்//

வாழ்த்துகள்

Mahesh said...

நல்லா அடக்கி வாசிச்சுருக்கீங்க....
என்ன இருந்தாலும் உங்க அனுபவம் அதிகம்தான்....

கும்மாச்சி said...

அஹா ராகவன், நீங்களும் நம்ம மாதிரிதான, அதுசரி, கத்தார் வருவீங்களா, வாங்க இங்கே ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சுருவோம்

sindhusubash said...

வாங்கறதே வாங்கறீங்க...பர்துபாயில் போயி பாருங்க. கோல்டுசூக்கில் கொஞ்சம் கலக்ஷன் கம்மியா தான் இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

சரணா - கதி ?

தேவன் மாயம் said...

சரண்டர்,சரணாகதி ரெண்டுமே ஒரே மாதிரி வருதில்ல!!!

தமிழ் அமுதன் said...

அண்ணே! நாலு பவுன் ,ஆறு பவுன் வளையல் எல்லாம் பார்வையா இருக்காதுண்ணே!
ஒரு எட்டு பவுன் ,பத்து பவுனுன்னா! ஓரளவு சுமாரா இருக்கும்! நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் ! எதோ என்னால முடிஞ்சது ;;))

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா... கண்டிப்பா இது சரணாகதி தான்...

:-)

நட்புடன் ஜமால் said...

அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...\\

வீடியோ அட்டாச்மெண்ட் ஏதும் இல்லையே அண்ணே

நட்புடன் ஜமால் said...

சிவப்பு கலரில் இருப்பது தங்கமணி பேசியது
நீலக் கலரில் இருப்பது நான் பேசியது..
(அடைப்புக் குறிக்குள் இருப்பது என் நினைப்பு அதாவது என் உள் மனசு - பச்சைக் கலரில் )\\

கலர் கலரா பேசியிருக்கீங்களே அண்ணே

http://urupudaathathu.blogspot.com/ said...

அங்க கலாய்ச்சு, இங்க கலாய்ச்சு, இப்போ அண்ணியவே கலாய்க்க ஆரம்பிச்சிடீங்களா??

( ஆஹா பத்த வைச்சுட்டியே பரட்டை??)

http://urupudaathathu.blogspot.com/ said...

//கத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...///

எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா??

நட்புடன் ஜமால் said...

அண்ணே பல பரட்டைகள் இங்கே தென்படுறாங்க போல

சாக்கிரதை ...

நட்புடன் ஜமால் said...

ராகவா சுதாரிச்சுக்கோ\\

சுதா-வா

அது யாரு அண்ணே ...

இராகவன் நைஜிரியா said...

// என் பக்கம் said...
"சரணாகதி..........!!!”

இப்படி எல்லாம் கூட இருக்கா...

மிக அருமை. //

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ....

இப்படித்தான் இருக்குங்க...

இராகவன் நைஜிரியா said...

// gopi said...
கைக்கு ரெண்டா போட்டா 4 வளையல் x 4 பவுன், அது தான நீங்க சொன்னது //

இதெல்லாம் ரொம்ப ஜாஸ்திங்க...

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
நல்லா அடக்கி வாசிச்சுருக்கீங்க....
என்ன இருந்தாலும் உங்க அனுபவம் அதிகம்தான்.... //

நாங்கெல்லாம் யாரு...

நட்புடன் ஜமால் said...

இப்ப இருக்கின்ற வளையல் எல்லாம் சின்னதா ஆயிடுச்சுங்க..\\


எந்த கடையில வாங்கி - நீங்க

இராகவன் நைஜிரியா said...

// கும்மாச்சி said...
அஹா ராகவன், நீங்களும் நம்ம மாதிரிதான, அதுசரி, கத்தார் வருவீங்களா, வாங்க இங்கே ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சுருவோம் //

இல்லீங்க.. இந்த வருடம் கத்தார் வரவில்லை...

இராகவன் நைஜிரியா said...

// sindhusubash said...
வாங்கறதே வாங்கறீங்க...பர்துபாயில் போயி பாருங்க. கோல்டுசூக்கில் கொஞ்சம் கலக்ஷன் கம்மியா தான் இருக்கும். //

ஆஹா... இது மாதிரி வேற இருக்கா...

நட்புடன் ஜமால் said...

அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா... \\

அங்கும்
தங்கம்

அட அட அடா

எதுகை மோனை கிளப்புதே அண்ணே

நட்புடன் ஜமால் said...

அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா... \\

இருக்குமா
இல்லையா

சரியா சொல்லுங்கப்பே!

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
சரணா - கதி ? //

தம்பி அறியாததா... இல்லை செய்யாததா இந்த அண்ணன் செய்துடப் போகின்றேன்...

// நட்புடன் ஜமால் said...
அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...\\

வீடியோ அட்டாச்மெண்ட் ஏதும் இல்லையே அண்ணே //

ஆஹா... வீடியோ வேற எல்லாம் எடுக்கணுமா இதை...

// நட்புடன் ஜமால் said...
அண்ணே பல பரட்டைகள் இங்கே தென்படுறாங்க போல

சாக்கிரதை ... //

ஆமாம்.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல..

// நட்புடன் ஜமால் said...
ராகவா சுதாரிச்சுக்கோ\\

சுதா-வா

அது யாரு அண்ணே ... //

நோ குழப்பம் உண்டாக்கிஃபையிங் இன் த ஃபேமலி ப்ளீஸ்..

பழமைபேசி said...

//என்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...//

நெம்பச் சரீங்க்

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...
சரண்டர்,சரணாகதி ரெண்டுமே ஒரே மாதிரி வருதில்ல!! //

மருத்துவர் அறியாததா நாங்க சொல்லிடப் போகின்றோம்...

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன் said...
அண்ணே! நாலு பவுன் ,ஆறு பவுன் வளையல் எல்லாம் பார்வையா இருக்காதுண்ணே!
ஒரு எட்டு பவுன் ,பத்து பவுனுன்னா! ஓரளவு சுமாரா இருக்கும்! நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் ! எதோ என்னால முடிஞ்சது ;;)) //

தம்பி உங்கப் பங்குக்கு கொளுத்திப் போட்டாச்சா... ம்... நடக்கட்டும்..

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
ஆஹா... கண்டிப்பா இது சரணாகதி தான்...

:-)//

தம்பி அறியாததா ! :-)

// உருப்புடாதது_அணிமா said...
அங்க கலாய்ச்சு, இங்க கலாய்ச்சு, இப்போ அண்ணியவே கலாய்க்க ஆரம்பிச்சிடீங்களா??

( ஆஹா பத்த வைச்சுட்டியே பரட்டை??) //

யூ டூ தம்பி...

// உருப்புடாதது_அணிமா said...
//கத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...///

எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா?? ..

இதெல்லாம் சரியா புடிச்சுடுவாங்க... சொல்லிக் கொடுக்க ஜூனியர் வேறு பக்கத்தில் இருக்கின்றார்...

நட்புடன் ஜமால் said...

ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா\\


அதே! (தல ஸ்டைல்ல ...)

நட்புடன் ஜமால் said...

நடுவில் என் மகன் புகுந்து\\

அட சின்னதம்பியும் எண்ட்ரியா

அண்ணே ஒழுங்கா ஆயிடுங்க

சரண்-டர் இல்லாட்டி ஆயிடுவீங்க
டர்

coolzkarthi said...

ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா\\
எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா?

coolzkarthi said...

ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா\\
எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா?

கழுதை கார்ட்டூன் said...

//நாம துபாயில் வளையல் வாங்குகின்றோம் தானே..
அப்படியா... எனக்குத் தெரியாதே... (ராகவா சாப்பாடு போட்டுகிட்டு இருக்காங்க... ஞாபகம் இருக்கட்டும்...)//

அண்ணன் நம்ம என்ன பேசினாலும் சரி,என்ன நடந்தாலும் சரி, நாம‌ சாப்பாடு மேட்டர்ல மட்டும் கோட்டைவிட்டுறக் கூடாதுன்னு நீங்க நிறூபிச்சிட்டீங்கண்ணே!

அப்பாவி முரு said...

அண்ணா வந்துட்டேன்.,

ஆமா சிங்கப்பூர் வரும்போது அண்ணிக்கு என்ன வாங்கித்தர்ப் போறீங்க.

கல்ஃப்க்கு இணையா சிங்கையிலும் தங்கம் சுத்தமா இருக்கும், ஆமா.

எப்பூடி...

அப்பாவி முரு said...

அண்ணா வந்துட்டேன்.,

ஆமா சிங்கப்பூர் வரும்போது அண்ணிக்கு என்ன வாங்கித்தர்ப் போறீங்க.

கல்ஃப்க்கு இணையா சிங்கையிலும் தங்கம் சுத்தமா இருக்கும், ஆமா.

எப்பூடி...

ஜெட்லி... said...

கணவர்களின் கதி கண்டு என் மனம் கொதிக்கிறது....
கூடிய விரைவில் சங்கம் நிறுவ வேண்டும்,,,,,
நீங்கள் தான் தலைவர்.....

மணிஜி said...

இராகவன்..மொத்தத்துல வளையத்துல
மாட்டியாச்சு..

வழிப்போக்கன் said...

"சரணாகதி..........!!!"

பொருத்தமான தலைப்பு...

வால்பையன் said...

//நீங்க ரொம்ப நல்லவர்ங்க...//

ரெண்டு நாள்ல செமத்தியா வாங்குனதை மறச்சிடிங்களே!

எம்புட்டு அடிச்சாலும் தாங்குறிங்களே, நீங்க உண்மையிலேயே நல்லவர் தான்!

வினோத் கெளதம் said...

தல

ஆர்வமாய் இருக்கிறோம் சீக்கிரம் வருகை தாருங்கள்..

நசரேயன் said...

நீங்க செய்தது சரிதான்

குப்பன்.யாஹூ said...

holiday mood started pola, enjoy the holidays

நிகழ்காலத்தில்... said...

\\நீங்க ரொம்ப நல்லவர்ங்க...\\

இதுக்கப்புறமும் வாங்கித்தராவிட்டால் எப்படி!!!

வாழ்த்துக்கள்

RAMYA said...

ஆமா துபாயிலே தங்கம் ரொம்ப வெலை கம்மிதான். அண்ணிக்கு என்னவெல்லாம் கேக்கறாங்களோ எல்லாம் வாங்கி கொடுங்களேன். ஏன் இப்படி உள்மனசோட தர்க்கம் அதிகமா பண்ணறீங்க :))

அ.மு.செய்யது said...

ஹா..ஹா.!!


நீங்க பேசும் போது உங்க உள்மனசு பேக்ரவுண்ட் வாய்ஸ் வெகுவாக ரசித்தேன்.

நம்ம ஆதிமூலகிருஷ்ணன்க்கு அடுத்து தங்கமணி பற்றிய பதிவுகள் உங்க கிட்ட இருந்து நல்லா வருதுங்க...

அ.மு.செய்யது said...

Me the 50.....

RAMYA said...

//
ஜீவன் said...
அண்ணே! நாலு பவுன் ,ஆறு பவுன் வளையல் எல்லாம் பார்வையா இருக்காதுண்ணே!
ஒரு எட்டு பவுன் ,பத்து பவுனுன்னா! ஓரளவு சுமாரா இருக்கும்! நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் ! எதோ என்னால முடிஞ்சது ;;))
//

ஜீவனே பொருத்திப் போட்டுட்டாரு நீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

RAMYA said...

நேரா பேச பயந்து உள் மனசுக்குள்ளே என்ன பேச்சு?

அது சரி :)

அவ்வளவு தைரியமா?

த.அகிலன் said...

அது சரி.. அங்க போயி வாங்கும் போது ஏங்க 6 பவுண் ஜோடியை விட அந்த பத்து பவுணு அழகா இருக்குதில்லைங்க ன்னு ஆரம்பிச்சு.. நீங்க அதையே வாங்கிக் கொடுத்த ரகசியத்தை எப்ப எழுதுவீங்க பாசு..

सुREஷ் कुMAர் said...

//
அங்கும் தங்கம் நல்லா இருக்கும்
//
தங்கம் எங்க இருந்தாலும் தங்கம் தானேபா.. அதென்ன நல்ல தங்கம் கெட்ட தங்கம்னுட்டு..

सुREஷ் कुMAர் said...

ஆஹா. நேத்து எப்புடி உங்களோடத மிஸ் பண்ணினேன்..

सुREஷ் कुMAர் said...

//
நான் இடுகைப் போட்டது கத்தாரில் தங்கம் வாங்குவதுப் பற்றிம்மா...
//
இனிமே இடுகையே போடவேணாம்னு பச்சை கலர் சொல்லலியோ..?

सुREஷ் कुMAர் said...

//
இப்ப கேட்கப் போறீங்களா இல்லையா...
//
அவங்க உங்ககிட்ட ஏதோ கேக்கவந்துட்டு இப்போ உங்கள கேக்கசொல்றாங்க..

सुREஷ் कुMAர் said...

//
இப்ப இருக்கின்ற வளையல் எல்லாம் சின்னதா ஆயிடுச்சுங்க...
//
சட்டை பேன்ட் தான் சின்னதாகி கேள்விபட்டிருக்கிறேன்..
இப்போ வளையலுமா..?

सुREஷ் कुMAர் said...

//
சரிம்மா சொல்லும்மா...
//
சாரி சொன்னீகளா..
சரி சொன்னீகளா..

सुREஷ் कुMAர் said...

//
ஏங்க..
ஏம்மா ஏங்கற, நான் இங்கத்தானே இருக்கேன்..
//
LOL..

सुREஷ் कुMAர் said...

//
(வேற வழி...)
//
எதுக்கு..?
துபாய் போகாம இந்தியா வர்றதுக்கா..?

Suresh said...

ஹா ஹா அருமை தலைவா ;) நகைச்சுவையா பிண்ணி எடுத்து இருக்கிங்க

/அங்கு கோல்ட் நல்லா இருக்குமில்ல. நீங்க கூட பதிவு போட்டு இருக்கீங்கில்ல..//

உங்க பதிவே உங்களுக்கு ஆப்பா ;)

सुREஷ் कुMAர் said...

//
மொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...
//
நான்கூட.. ஒவ்வொரு கைக்கும் 4 பவுன்லனு நெனைச்சேன்..
அண்ணி ஜஸ்ட் மிஸ் பண்ணிடாங்க..

Suresh said...

//(ராகவா தப்பிக்க முடியாது.... மாட்டிகிட்ட)

ராகவா... வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டே..)

(ராகவா ரொம்ப பேசற... இது நல்லதுக்கு இல்ல...)//

உங்க மனசு பேசினது ஹீ ஹீ ரொம்ப நல்லாருக்கு

Suresh said...

//
மொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...
//

இந்தியா வந்தவுடனே கடத்திட வேண்டியது தான் ;) ஹீ ஹீ
வாங்க உங்க வருகைக்கு எதிர் நோக்கி காத்தி இருக்கும் நல்லவன் ;)

सुREஷ் कुMAர் said...

//
4 பவுன் என்னம்ம.... அதுக்கு மேலேயே வாங்கிக்கோம்மா... உனக்கு இல்லாதாதா...
//
அப்போ.. அடுத்த நாள் 4 என்பது இன்னும் அதிகமாயிருக்கனுமே.. ஆகலியா..?
அப்படி ஆகலைனா சொல்லுங்கோ.. நாம ஆக்கிடலாம்..

सुREஷ் कुMAர் said...

//
(டோட்டல் சரணாகதி !!!...)
//
ஓம் சரணம்..

सुREஷ் कुMAர் said...

நகைகள் செலவு அல்ல முதலீடுனு அண்ணி நினைக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்..
பொழைக்க தெரிஞ்சவங்க.. வாழ்த்துக்கள் (அன்னிக்கு)..

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...

\\
மொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...
\\

இந்தியா வந்தவுடனே கடத்திட வேண்டியது தான் ;) ஹீ ஹீ
வாங்க உங்க வருகைக்கு எதிர் நோக்கி காத்தி இருக்கும் நல்லவன் ;)
//

சகா.. இங்க நம்ம ஏரியாக்குத்தான் வராரு.. வண்டி ரெடி பண்ணிடலாமா..?
ஷேர்ல ஆளுக்கு பாதி..

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...
ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா\\
எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா? //

நான் மாட்டியதில் என்னே ஒரு சந்தோஷம் பாருங்களேன்...

இது நம்ம ஆளு said...

அருமை.தொடர்ந்து கலக்குங்க

Anonymous said...

அண்ணா சிரிச்சி சிரிச்சி முடியலை கொஞ்சம் கடினமான நிலைத்தான் உங்க நிலை...

உங்க நல்ல நேரம் அண்ணி ஹாரம் கேட்கவில்லை நான் சொல்றேன் அண்ணிக்கு இந்தியாவில் நல்ல நல்ல மாடல் இருக்குன்னு....

அண்ணா மனைவி சொல்லே மந்திரம் நீங்க ரொம்ப நல்லவங்க அண்ணா,,,,,,

rose said...

நீங்க ரொம்ம்ம்ம்மப நல்லவருங்க‌

rose said...

4 பவுன் என்னம்ம.... அதுக்கு மேலேயே வாங்கிக்கோம்மா... உனக்கு இல்லாதாதா... (டோட்டல் சரணாகதி !!!...)

\\
super anna

Poornima Saravana kumar said...

me the 75th

Poornima Saravana kumar said...

நல்லா மாட்டுனீங்களா??

Poornima Saravana kumar said...

மொத்தத்தில் அண்ணி கை மேல் ஓங்கி இருக்கிறது:)

Poornima Saravana kumar said...

அண்ணா வளையல் படம் சூப்பர்:)

Poornima Saravana kumar said...

அப்பா இந்த ஜோக் வடிவேலு சொல்லிட்டார்... நீங்க வேற கடிக்காதீங்க //

அம்மா பையன்னு நிரூபிச்சிட்டார் :)

Poornima Saravana kumar said...

// Kanna said...
அண்ணா துபாய்ல செய்ன் எல்லாம் 32 பவுன்ல கிடைக்குதாம்..

:))

//

அண்ணி கிட்ட இந்த செய்திய எப்படி சொல்றது
:((

Joe said...

பிரமாதமா எழுதியிருக்கீங்க.

உங்க உள்மனசு எவ்வளவு தான் புலம்பினாலும், அவுங்க பட்ஜெட் போட்டது போட்டது தான்.

இல்லன்னா இருக்கவே இருக்கு வழக்கமான வசனம். "பொண்டாட்டிக்கு ஒரு சின்ன நகை கூட வாங்கித் தர முடியலைன்னா எதுக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம்?"

தங்கம் ஒரு வகையில் நல்ல முதலீடு அப்படின்னு சொல்றாங்க, அப்படி நினைத்து மனசத் தேத்திக்கோங்க. (ஆனா இந்த மாதிரி நகைகளை விக்கவும் மாட்டாங்க)

கலையரசன் said...

//என்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...//

ரொம்ப சரியண்ணே! உங்களுக்கு இடம் தெரியதுல்ல.
நீஙக இங்க வரும்போது, நானே உங்களை கோல்ட் சூக் ல
டிராப் பண்றேன்! (ஏதோ, நம்மலால முடிஞ்ச ஆப்பு!!)

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா.

நாம உள்ளே பேசினா என்ன வெளிய பேசினா என்ன, ஜெயிக்கிறது என்னமோ அவங்கதான்.

வலசு - வேலணை said...

கலக்குறீங்க ஐயா!
:-)

Rajeswari said...

உண்மைதான் அண்ணா..2 பவுனுக்கு குறைந்து போட்டால் வளையல் போட்டது மாதிரியே இருக்காது..(என்னது ..இந்தியா வந்து என்ன கவனிச்சிகிடுரீங்களா,,,ராஜீ எஸ்கேப்)

(ஊருக்கு சென்றுவிட்டதால் ,இன்றுதான் பதிவை படிக்க முடிந்தது..தாமதமான பின்னுட்டம் என்றாலும்,கமெண்ட் 86 ஆகிடுமுல)

Anonymous said...

தமிழ்ர்ஸ் இணையத்தின் இவ்வார தமிழர் திரு.இராகவன். நைஜீரியா அவர்களுக்கு தமிழர்சின் வாழ்த்துக்கள்

सुREஷ் कुMAர் said...

தமிழ்ர்ஸ் இணையத்தின் இவ்வார தமிழராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..

Joe said...

ராகவ் அண்ணே,
இந்த வார தமிழர் ஆனதுக்கு, வாழ்த்துக்கள். (அப்போ போன வாரம் நீங்க தெலுங்கரான்னே?)

வரும் போது, எங்களுக்கு ஒரு அப்சொலுட் வோட்கா வாங்கிட்டு வந்தீங்கன்னா, விழாவை சிறப்பா நடத்திரலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

ராகவன் சார் இவ்வாரதமிழர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

ராகவன் அண்ணா இவ்வாரதமிழர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

இவ்வார தமிழர் ஆனதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணே...தொடர்ந்து கலக்குங்க

scharu said...

தங்கமணி வளையல் வாங்கணும் அப்படின்னு முடிவுப் பண்ணிட்டாங்க. அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...//
athan mudivu panitagala pinna enna parkkurathu.thanga mani mudivuku rangamani enna solla mudium solunga

scharu said...

ஆமாம்மா அங்கு கோல்ட் நல்லா இருக்கும். எதுக்கு //
ama ama nalla erukum vaaga vaga

scharu said...

ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
//
athaana ennathu puthu palakkam.pesum pothu naduvula pesurathu

scharu said...

என்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...
//
amanga romba sari ellana vaalkaila kuppai kotta mudiuma?

scharu said...

உருப்புடாதது_அணிமா said...
//கத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...///

எப்படி புடிச்சாங்க பாத்தீங்களா??
//
athana ella thangamani vudaiya spl

oviyangal said...

இ.வா.த.
வாழ்த்துக்கள்

oviyangal said...

நீங்களே தழிழர்சை நடத்திகினு நீங்களே இ.வா.த. ஆகிறீக்கிங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

100

குசும்பன் said...

தாங்கள் அனுப்பிய மெயில் என்னிடம் இருக்கு அதை அண்ணிக்கிட்ட காட்டனும்! என்னிடம் அண்ணிக்கு ஒரு 10பவுனில் வளையலும் ஒரு வைர நெக்லஸும் வாங்கனும் எங்கு வாங்கலாம் நல்ல கடையா பார்த்து வை என்று சொன்னீங்களே அப்ப அது எல்லாம் சர்ப்ரைஸ் கிப்ட்டா கொடுக்கவா அண்ணா:)

SUFFIX said...

//என்னது வளையல் சின்னதா ஆயிடுச்சா.. //

இந்த மாதிரி இன்டெல்லிஜென்ட்டான கேள்வியெல்லாம் தோன்றியதே தப்பு... நல்ல வேளை தப்பிச்சீங்க!! ஆறுல‌ போட்டாலும் அளந்து போடு பழமொழி அவங்களுக்கு தெரியாம போச்சோ, நாலோடு தப்பிச்சிட்ட்டீங்க.

Jaleela Kamal said...

இப்ப கேட்கப் போறீங்களா இல்லையா...
(ராகவா.... சமத்தா இருடா... வம்பை விலைக்கு வாங்காதே... அப்புறம் சோத்துக்குத் தாளம் போட வேண்டியிருக்கும்)
சரி சொல்லும்மா..
எதுக்கு சொல்ல வந்தேன்னா...
அதான் ஆரம்பிச்சாச்சே .. சொல்லும்மா...



ஹா ஒரு வளையக்கு இவ்வளவு காமடியா?

ஹி ஹி
வளையல் சின்னதாகி ஆயிடுச்சா?உங்க‌ள் வளைய‌ல் க‌தை ரொம்வே சிரிப்பு,

நாடோடிப் பையன் said...

Hilarious.
I have not laughed so hard in a while.