Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - விடைத் தெரியாத கேள்விகள்..





ஆந்திரமுதல்வர் திரு. ராஜசேகர ரெட்டி (1949 - 2009)


ஆந்திர முதல்வர் திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள் இப்போது நம்மிடம் இருந்து மறைந்து விட்டார். அருமையான முதலமைச்சர் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.

ஆந்திர முதலவர் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டரைப் பற்றிய தகவல்கள் அறிய DGCA website - ல் பார்த்தப் போது கிடைத்த தகவலகள்.

ஆந்திர முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ள இங்கே சொடுக்கி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ற இடத்தில் APG என்று இட்டுப் பாருங்கள் . http://dgca.nic.in/caris/cofaop/cofaregn1.ASP


அதில் இருந்து மிக முக்கியமான தகவல்கள் :

ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டது 10-11-1998
Model : Bell 430
C of A (Certificate of Airworthiness) Number : 2390
C of A (Certificate of Airworthiness) valid upto : 04-07-2007.

இதைத் தவிர ஆந்திர அரசு கடந்தாண்டு முதலமைச்சருக்காக கிட்டதட்ட ஒரு இத்தாலிய ஹெலிகாப்டர் வாங்கி இருக்கின்றனர். (Augusta AW 139 மாடல்). இதை வாங்கியதற்குச் சொல்லப்பட்ட காரணம் - Bell 430 பறப்பதற்கு ஏற்றதல்ல என்பதுதான்.

கடந்த நவம்பர் முதல் முதலமைச்சர் அவர்கள் புதிய ஹெலிகாப்டரைத்தான் உபயோகப் படுத்திக் கொண்டு இருந்தார்.

எனக்கு தேன்றிய கேள்விகள் இதுதான்...

  • பறப்பதற்கு லாயக்கற்ற ஒரு ஹெலிகாப்டரில் ஒரு மாநில முதல்வருக்கு எப்படி ஏற்பாடு செய்தார்கள்?
  • அதிகாரிகளுக்கு அந்த ஹெலிகாப்டர் சரியாக இருக்கின்றதா எனத் தெரியாதா?
  • மோசமான வானிலையில் அந்த ஹெலிகாப்டர் பறப்பது சிரமம் என்பது அவங்களுக்குத் தெரியாதா?
  • புது ஹெலிக்காப்டர் இருக்கையில் ஏன் பழைய ஹெலிக்காப்டரில் முதல்வர் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்?
  • யார் செய்த தவறு ஒரு மாநில முதல்வரின் உயிரையும், மேலும் 4 பேர் உயிரையும் வாங்கியது?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. யார் பதில் சொல்லப் போகின்றார்கள்?

30 comments:

सुREஷ் कुMAர் said...

முதல்வர் மற்றும் விபத்தில் இறந்த மற்ற அதிகாரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

सुREஷ் कुMAர் said...

//
எனக்கு தேன்றிய கேள்விகள் இதுதான்...

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. யார் பதில் சொல்லப் போகின்றார்கள்?
//
இந்த பழைய ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தமைக்கு மற்றும் இந்த விபத்துக்கு அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இருந்து என்னமாதிரியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றனவென்று பொறுத்திருந்து பார்ப்போம்..

நம்மால் அதைத்தானே செய்ய முடியும்..

ரவி said...

செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குதேசம் பற்றி அவர் சொன்ன கமெண்ட் பற்றி நினைக்கயில் இன்னும் சந்தேகம் வலுக்கிறது.

ஏற்கனவே அம்பானிகள் செல்லும் ஹெலியில் அவர்களை கொல்ல சதி செய்யப்பட்டது.

அப்துல்மாலிக் said...

//இப்படி பல கேள்விகள் எழுகின்றன//

இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன, பதில் ஒரு நல்ல தலைவரை, மனிதரை, அரசியல்வாதியை இந்த நாடு இழந்துவிட்டது என்பது மட்டும்தான் உண்மை

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

துபாய் ராஜா said...

அன்னாருக்கும் உடன் அகால மரணம் அடைந்தோர்க்கும் அஞ்சலிகள்.

ஆந்திர முதல்வருக்கு அஞ்சலியும் சில அரசியல் தகவல்களும்....
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_7206.html

goma said...

யார் எத்தனை கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றிற்கும் ஒரே பதில் .விதி.

goma said...

அரசியல்வாதிகளுக்குத்தான் எதிரிகள் ...அந்த இரண்டு விமான ஒட்டுனர்களுக்கு யார் விரோதி?

அப்பாவி முரு said...

// goma said...
அரசியல்வாதிகளுக்குத்தான் எதிரிகள் ...அந்த இரண்டு விமான ஒட்டுனர்களுக்கு யார் விரோதி?//


//goma said...
யார் எத்தனை கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றிற்கும் ஒரே பதில் .விதி//

அறிவிலி said...

////அப்பாவி முரு said...
// goma said...
அரசியல்வாதிகளுக்குத்தான் எதிரிகள் ...அந்த இரண்டு விமான ஒட்டுனர்களுக்கு யார் விரோதி?//


//goma said...
யார் எத்தனை கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றிற்கும் ஒரே பதில் .விதி// ////

அசத்தறீங்க அப்பாவி.

Anonymous said...

இந்த கேள்வியை தான் நாடே கேட்டுக் கொண்டு இருக்கிறது? எல்லாம் முடிந்தவுடன்.....

கலையரசன் said...

?????????????????????????????????
உண்மை மறையாது!!
விடை விரைவில்!

வால்பையன் said...

மில்லியன் டாலர் கேள்விகள்!

வழிப்போக்கன் said...

அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....

மணிஜி said...

இரண்டு மணி நேரம் பொறுத்திருந்தால் வேறு ஹெலியில் போக வேண்டியவர்..மரணத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைத்து கொண்டார்

Anonymous said...

லால் பகதூர் சாஸ்திரி,இந்திராகந்தி, ராஜிவ் காந்தி,என தொடங்கி ஒய்.எச்.ஆர் வரை உள்ள மரணங்களுக்கு உண்மையான காராணம் வெளிவரப்போவதிலை. இனி வரும் சம்பவங்களும் அப்படித்தான். இதில் வியப்பேதும் கிடையாது!

ஈரோடு கதிர் said...

1 + 4 இல்லை..

அவர் இறந்த அதிர்ச்சியில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனராம்

ஈரோடு கதிர் said...

1 + 4 இல்லை..

அவர் இறந்த அதிர்ச்சியில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனராம்

Unknown said...

உண்மைதான்.

மிகச்சரியான கேள்விகள்...

ஒரு முதலமைச்சருக்கே இப்படி என்றால்... :(

வருத்தமா இருக்கிறது

Sanjai Gandhi said...

:(

SK said...

அண்ணா, எல்லா தவறையும் செய்து விட்டு என் நடந்தது அப்படின்னு யோசிக்கறோம். அப்பறம் அமைதி ஆகிடறோம். திரும்ப அந்த தவறை பற்றி யோசிக்கும் பொழுது அதே போல் வேறு ஏதேனும் ஒரு தவறு நடந்து உள்ளது. இதுவே பொழப்பா போச்சு. :(

என் ஆழ்ந்த அனுதாபங்கள். :(

Menaga Sathia said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!! இந்தியா ஒரு நல்ல நபரை இழுந்துவிட்டது.இது திட்டமிட்ட சதின்னு எனக்கு தோனுது.

நட்புடன் ஜமால் said...

கோமா சொன்னதையே வழிமொழிகிறேன்.

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

S.A. நவாஸுதீன் said...

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா. மொத்தமாக இத்தனை குறைபாடுகள் இருந்தும் எப்படி?

அரசியலில் அதர்மம் மட்டுமல்ல மர்மமும் அதிகம்தான்.

நேசமித்ரன் said...

:(
:(

sondarya . ysr politics anne politics

arasiyal kolaigal ....!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஜோதிஜி said...

நிறைய விடை தெரியாத கேள்விகள், ? முன்னமே (அத்தனை விபத்துகளிலும்) தெரிந்த மனிதர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகப்பட வைக்கின்றது. அவர் பயணத்தின் மூலம் திடீர் என்று சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய முயற்சித்த முயற்சிகளைப் பார்க்கும் போது.? எல்லாமே தகவல்களாகத்தான் இருக்கிறது. மொத்தத்திலும் உருப்படியான ஒரு தலைவர் போன சோகம். அதைவிட இறந்த விதம் மொத்தத்திலும் கொடுமையானது. அதென்ன ஒரு பதிவுக்கு கூட பதில் ஏதும் தராமல் மொத்தமாய் நன்றாகத்தான் இருக்கும் என்று ஒரே போடாக போட்டு விட்டீர்கள். துபாய் சுந்தருடன் நீங்கள் எடுத்த புகைப்படம் பார்த்து உள்ளே வந்த போது பார்த்த அனுபவங்களைக் கொண்டு முயற்சித்தேன். உங்கள் வரைக்கும் வந்து சேர்ந்ததே வியப்பாக இருக்கிறது. நன்றி.

அன்புடன் மலிக்கா said...

இறந்த ஆந்திரமுதல்வரின் ஆன்மா சாந்தியடையட்டும்

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Anonymous said...

கொடுமைதான்..



அன்புடன்,

அம்மு.