திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு ஜூலை 6, 2009.
ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன். எப்போதும் போல் வடகரை வேலன் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு வழியைக் கேட்டுக் கொண்டு பின் போகலாம் என்று, அவரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் திருப்பூர் வழியாக போங்க. ரோடு நல்லா இருக்கும். அப்படியே திருப்பூர் பதிவர்களையும் சந்திக்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றி. சொன்னதோடு மட்டுமல்லாமல், பரிசல் காரன், வெயிலான் இருவரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து அவர்களுக்கும் என் வருகையைப் பற்றி தகவலும் தெரிவித்தார்.
ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.
அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களிடம் தொலைப்பேசி எண் கிடைத்ததும், முதலில் அழைத்தது நண்பர் பரிசல் காரன் அவர்களைத்தான். அவர் அவசியம் வாங்க, பார்க்கலாம் என்றுச் சொன்னார்.
அடுத்து நண்பர் வெயிலான் அவர்களை அழைத்தேன். அண்ணே, திருப்பூர் அருகில் வந்தவுடன் அழையுங்கள். வழிச் சொல்லுகின்றேன் என்றுச் சொன்னார்.
சென்னையில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேனேஜராக வேலை செய்த போது, பல தடவை திருப்பூர் சென்று இருக்கின்றேன். அப்போதெல்லாம், கோவையில் தங்குவேன். அங்கிருந்து கம்பெனி பி.ஆர்.ஓ நான் போக வேண்டிய இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று திரும்பி கொண்டுவந்து விடுவார். அதனால் வழிப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.
திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. டையிங், வாஷிங், பிரிண்டிங், எம்பிராடய்ரி எல்லாம் சென்னையை விட மலிவாக கிடைக்கும். சென்னையில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரை நாடுவதற்கு காரணம் இதுதான் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தவர்கள் விவரமாக தெரிவிக்கவும்.
மதியம் 12 மணியளவில் திருப்பூரை நெருங்கியபின், நண்பர் வெயிலானை அழைத்தேன். அண்ணே எங்க இருக்கீங்க என்று கேட்டார். எப்போதும் போல் நான் வரும் வழியை சொல்லி அவரைக் குழப்பினேன். பின்னர் ரயில் நிலையம் செல்லும் வழி என்றுப் போட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அண்ணே நேரா வாங்க, உங்க வண்டி நம்பர் என்ன வென்றுச் சொல்லுங்க என்றுச் சொன்னார். நம்ப வண்டி நம்பரையும், கலரையும் சொன்னேன். ரயில் நிலையம் அருகில் வரும்போது, நண்பர் வெயிலான் தொலை பேசியில் அழைத்து அண்ணே உங்க வண்டியைப் பார்த்துட்டேன், அப்படியே ஓரம் கட்டுங்க என்றுச் சொன்னார்.
அவரும் அவருடைய நண்பர் தேவராஜனும் எங்களை அழைக்க வந்திருந்தனர்.
பின்னர் மதியச் சாப்பாட்டுக்கு எங்கு போவது என்று பலரை கூப்பிட்டு கேட்டு, அரோமா ஹோட்டலுக்கும் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.
அங்கு சென்ற பின் நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், இராமன் குட்டி மூவரும் வந்தனர்.
பரிசல் அவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருப்பதால், எங்களை உணவருந்த ஆரம்பிக்குமாறும், பின்னர் அவர் வந்து சேர்ந்துக் கொள்வதாகவும் சொன்னார்.
நாங்க சாப்பிட்டு முடிச்ச பின்பும் பரிசல் அவர்கள் வர தாமதமானது. அன்று ஒரு ஷிப்பிங் இருப்பதால், குவாலிட்டி செக்கிங் போய் கொண்டு இருப்பதாகவும், அதனால் தான் தாமதம் என்றும் சொன்னார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.
அங்கிருந்து கிளம்பும் போது பரிசல் அவர்களும் நிறைய நேரம் அளவாவ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தொலைப்பேசியில் உரையாடும் போதும் அவருக்கும் அந்த வருத்தம் இருந்ததை உணர முடிந்தது.
வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.
பின்னர் அங்கு அரோமா ஹோட்டல் வாசலில் கிட்டதட்ட 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, திருப்பூரில் சில டி-சர்ட் வாங்க வேண்டும் என்றுச் சொன்னேன்.
பரிசல் அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். பின்னர் ஒரு வழியாக பரிசல் அவர்கள் கம்பெனியில் எதோ சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக வந்துச் சேர்ந்தார்.
நண்பர் வெயிலானும், தேவராஜன் அவர்களும் கூடவே வந்து இருந்து, எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அரவிந்திற்கு ஒரு சட்டை வாங்கி பிரசண்ட் செய்தனர்.
திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு, மிகச் சிறிய நேரம் என்றாலும், மிக அழகாக அமைந்தது.
மிக்க நன்றி திருப்பூர் நண்பர்களே.
சில படங்கள் தங்கள் பார்வைக்காக.
நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், பரிசல்காரன், வெயிலான், நான், இராமன் குட்டி (இவர் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்க வில்லை).
மேலுல்ல வரிசையில் பரிசல்காரன் அருகில் அமர்ந்திருப்பவர், வெயிலான் அவர்களின் நண்பர் தேவராஜன்.
பின் திருப்பூரில் இருந்து சுமார் 4.30 மணியளவில் கிளம்பி, கரூர் வழியாக திருச்சியை அடைந்த போது, இரவு மணி 8.30. கரூர் திருச்சி சாலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.
பல பதிவர்களையும் சந்திக்க ஆசைத்தான். முக்கியமாக அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுடன் தொலைப் பேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும் போது சந்திக்க வேண்டும். அதிஷா, லக்கிலுக் இவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். அதுவும் என்னுடைய பல தனிப்பட்ட வேலைகளால் தடைப்பட்டுவிட்டது.
இந்திய பயணத்தில் வலைப்பதிவர்கள் பலரையும் பல இடங்களில் சந்தித்து, அவர்களுடன் அளவாவியது, அவர்கள் காண்பித்த கள்ளமில்லா அன்பு என்னை மிகவும் நெகிழவைத்தது என்னவோ நிஜம்.
இந்தியவில் இருந்து திரும்பிய பின், நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா தம்பியுடன் சந்திப்பு மிக கோலாகலமாக நடந்தது. இந்தியப் பிரயாணம் பற்றி தம்பி விஜாரித்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்ததுப் பற்றி சந்தோஷப்பட்டார். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.
இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது.
அன்பு காண்பித்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும் பல.
இதுவரை இந்த தொடர் இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்
இராகவன், நைஜிரியா.
70 comments:
இந்தத் தொடர்ல எங்கயும் அமெரிக்கா வந்த மாதரித் தெரியலீங்களே? அவ்வ்வ்வ்........
//நைஜிரியா //
நைஜிரியாவா, நைஜீரியாவா??
// பழமைபேசி said...
இந்தத் தொடர்ல எங்கயும் அமெரிக்கா வந்த மாதரித் தெரியலீங்களே? அவ்வ்வ்வ்........ //
அடுத்த வருடம் ஜூலை மாதம் அமெரிக்கா வரலாம் என்று இருக்கின்றேன் அண்ணே. ஆண்டவன் அருளால் வருவேன் என நினைக்கின்றேன்.
// பழமைபேசி said...
//நைஜிரியா //
நைஜிரியாவா, நைஜீரியாவா?? //
அண்ணே நைஜீரியா என்றுத்தான் நினைக்கின்றேன். சந்தேகத்தை கிளப்பி விட்டுடீங்களே...
நண்பர்களிடம் கேட்டுச் சொல்லுகின்றேன் அண்ணே..
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி அண்ணே.
மீண்டும் பறக்கும் பாசப் பறைவகள்.. வாழ்த்துகள்.. !
அண்ணே இது என்னா திருப்பூர் பதிவர் சந்திப்ப விட குட்டியா இருக்கே. =)). நல்ல பயணப் பகிர்வு.
நல்லதொரு தொடர் பகிர்வு.
//இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது//
என்னண்ணே, தொடரை இப்பிடி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க?
அண்ணா,
அடுத்த தடவை வரும்போது மலேசியாவுக்கும் வாங்க.
அருமையான பயண(பாச) கட்டுரை அண்ணா! ஏழு பாகமும் சூப்பரோ சூப்பர். அனேகமா பதிவுலகில் அதிகம் பதிவரை பார்த்த பெருமை உங்களுக்கு தான் சேரும் என நினைக்கிறேன்!!!
நல்ல நண்பர்கள்,பாசம்,நிஜமான சந்தோசம் இதெல்லாம் இந்த பதிவுலகத்தில் கிடைக்கிறது,இது ஒரு வரம்,வாழ்த்துக்கள் அண்ணா
இராகவன்,
உங்களை சந்திக்க இயலாதது குறித்து எனக்கும் வருத்தம்தான்.
அடுத்த முறை சந்திக்கலாம்.
- பொன்.வாசுதேவன்
தங்கள் அனைத்து பயண
கட்டுரைகளும் சூப்பர்.
//ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.//
எங்களை விட சரியாவே கணித்து வைத்துள்ளீர்கள்
//அடுத்த வருடம் ஜூலை மாதம் அமெரிக்கா வரலாம் என்று இருக்கின்றேன் அண்ணே. ஆண்டவன் அருளால் வருவேன் என நினைக்கின்றேன்.//
ஆஹா அண்ணே உலகம் சுற்றும் வாலிபன் அப்படின்னு உங்க blog டைட்டில் மாத்திடலாம்.....
வாழ்த்துக்கள்....
அம்மாடி.... உங்க உறவினர்களை விட நிறைய பதிவர்களை சந்திச்சுட்டாப்ல இருக்கு !!வாழ்த்துகள் !!
(அப்பாடா... கொளுத்தி போட்டாச்சு... நாராயண... நாராயண)
பாசப் பறவைகள் அருமை.... வாழ்த்துகள் தலைவா
அழகான எழுத்து நடையில் அற்புதமான நண்பர்களை அறிமுகபபடுத்தி, எங்களை மகிழ்வித்தற்க்கு மிக்க நன்றி அண்ணா!!
ஒரு அருமையான பயணக்கட்டுரை நிரைவுக்கு வந்துவிட்டது. பாசப்பறவைகள் என்றென்றும் சிறகடித்துப் பறக்கட்டும்.
அதுக்குள்ள முடிஞ்சிருச்சா!?
சுமாரான உணவு, சில மணி
நேரக்கழி/ளிப்பு இருந்தும், திருப்பூரைப் பற்றிய உங்கள் எழுத்துக்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ராமன் குட்டியின் வலைத்தளம் - http://peyarenna.blogspot.com/
உங்களின் அடுத்த வருகையை எதிர்நோக்கும் - http://tiruppur-bloggers.blogspot.com/
:)
):
என்னாது இது? "பாசப் பறவைகள் சட்டுன்னு முடிஞ்சி போச்சு??
மீ த குவாட்டர் செஞ்சுரி...
//நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், ///
இது எப்போ??? யார் அவரு?? தெரியாம போச்சே!!
///என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, ///
எதுனா அரசியல்ல சேருர மாதிரி எண்ணம் எதுனா இருக்கண்ணே??
///என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா ///
அட விடுங்கண்ணே இதுக்கெல்லாம் போய் டென்ஷனாய்கிட்டு?? லூஸ்ல விடுங்கண்ணே, பாவம் பொழச்சி போகட்டும்
//கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.///
ஆமாண்ணே உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தா நேரம் பொறதே தெரிவதில்லை..
/// Mahesh said...
அம்மாடி.... உங்க உறவினர்களை விட நிறைய பதிவர்களை சந்திச்சுட்டாப்ல இருக்கு !!வாழ்த்துகள் !!
(அப்பாடா... கொளுத்தி போட்டாச்சு... நாராயண... நாராயண)///
எப்படி இருக்கீங்க தல?? பார்த்து நெம்ப நாள் ஆச்சு??
அருமையான பகிர்வு அண்ணாச்சி!
//இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது//
மிடிஞ்சிருச்சா
டிஞ்சிருச்சா
ச்சா
ச்சா
???????
//ஆஹா அண்ணே உலகம் சுற்றும் வாலிபன் அப்படின்னு உங்க blog டைட்டில் மாத்திடலாம்.....//
உலகம் சுற்றும் சரி
வாலிபன் ?????
சரி லூஸ்ல விடுவோம் நம்ம அண்ணன்தன்னே
///என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா ///
காணமல் போன அணிமா
correct
//மீ த குவாட்டர்செஞ்சுரி...//
குவாட்டர்.....?
ok ok
குவாட்டர்செஞ்சுரி!!!
///என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, ///
எதுனா அரசியல்ல சேருர மாதிரி எண்ணம் எதுனா இருக்கண்ணே??//
இது வேறயா
அப்போ இது தொகிதி நிலவரம் அறியும் ஸுட்ரு பயணம்
மக்களில் நாடிதுடிப்பரிய ஸ்டெதஸ் கொப்புடம் அண்ணன் ராகவன் பயனம்ன்னு அடுத்த அறிவிப்பு வருமா ?
என்னாண்ணே முடிச்சிட்டீங்க..
அடுத்த பயணம் வரும்வரை தொடர்வீர்கள் என்று எதிர்ப்பார்த்து இருந்தேன்
அருமையான பகிர்வு
//தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.//
மட்டமான சாலை
அப்போ மத்த ஊர்லயெல்லாம் செங்குத்தான சாலையா ???
//ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.//
நம்ம வழி கேட்குரதுக்குள்ளதான் ஓவத் டூ இன்னிங்க்ஸ் டூவா ஆகிடுமே
:(
A fine ending
:)
அண்ணே! தலைப்பை சரி பண்ணுங்க! பாசப்பறவைகளுக்கு ஃபைனலே கிடையாது.
//ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன்.//
அண்ணே! அதே டிரைவர் தானா? இந்த முறையாவது கரெக்டா கண்டுபிடிச்சாரா ரூட்ட?
உங்கள கும்மி அடிக்கலாமுன்னு பார்த்தா மனசே வரமாட்டுதே!ஓக்கே ஓக்கே! படங்கள் அருமை அண்ணே!
// கலகலப்ரியா said...
மீண்டும் பறக்கும் பாசப் பறைவகள்.. வாழ்த்துகள்.. ! //
நன்றி கலகலப்ரியா..
// வானம்பாடிகள் said...
அண்ணே இது என்னா திருப்பூர் பதிவர் சந்திப்ப விட குட்டியா இருக்கே. =)). நல்ல பயணப் பகிர்வு. //
நன்றி அண்ணே..
// மணிநரேன் said...
நல்லதொரு தொடர் பகிர்வு. //
நன்றி மணிநரேன்.. தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
// அப்பாவி முரு said...
//இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது//
என்னண்ணே, தொடரை இப்பிடி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க? //
என்னாது பொசுக்குன்னு முடிச்சுட்டேனா... வஞ்சகப் புகழ்ச்சி அணி என்பது இதுதானோ?
// என். உலகநாதன் said...
அண்ணா,
அடுத்த தடவை வரும்போது மலேசியாவுக்கும் வாங்க. //
நன்றி உலகனாதன். வர வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. பார்க்கலாம் முயற்சி செய்கிறேன்.
// அபி அப்பா said...
அருமையான பயண(பாச) கட்டுரை அண்ணா! ஏழு பாகமும் சூப்பரோ சூப்பர். அனேகமா பதிவுலகில் அதிகம் பதிவரை பார்த்த பெருமை உங்களுக்கு தான் சேரும் என நினைக்கிறேன்!!!//
உங்களைச் சந்திக்க முடியாமல் போன வருத்தம் இன்றும் எனக்கு உண்டு தம்பி.
// பிரியமுடன்...வசந்த் said...
நல்ல நண்பர்கள்,பாசம்,நிஜமான சந்தோசம் இதெல்லாம் இந்த பதிவுலகத்தில் கிடைக்கிறது,இது ஒரு வரம்,வாழ்த்துக்கள் அண்ணா //
நல்ல நட்புகள் இந்த பயணத்தில் எனக்கு கிடைத்து வசந்த். நீங்கள் சொல்வது 100% உண்மைதாங்க
// அகநாழிகை said...
இராகவன்,
உங்களை சந்திக்க இயலாதது குறித்து எனக்கும் வருத்தம்தான்.
அடுத்த முறை சந்திக்கலாம்.
- பொன்.வாசுதேவன் //
நன்றி வாசுதேவன். தங்களை சந்திக்க முடியாமல் போன வருத்தம் எனக்கும் உண்டுங்க. அடுத்த முறை நிச்ச்யம் சந்திக்கலாம்.
// ஜெட்லி said...
தங்கள் அனைத்து பயண
கட்டுரைகளும் சூப்பர். //
நன்றி ஜெட்லி.
// நிகழ்காலத்தில்... said...
//ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.//
எங்களை விட சரியாவே கணித்து வைத்துள்ளீர்கள் //
s - 3 m - 5 l - 6 xl -2 xxl - 2 - சைஸ் வாரியா சட்டை கேட்பாங்க வாய் கூசாம கேட்பாங்க இல்ல. கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும் என எனக்கும் தெரியும். முதல் தலவலி சைஸ் சரியில்லை, இரண்டாவது தலைவலி கலர் சரியில்லை, லைட்டிங் சரியில்லை எனச் சொன்ன குவாலிட்டி செக்கர்கள் எனக்குத் தெரியும். இது மாதிரி நிறைய பார்த்துச்சுங்க... 100க்கு 2 பேரை மட்டும் நல்லவங்களா பார்த்தேன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
// coolzkarthi said...
//அடுத்த வருடம் ஜூலை மாதம் அமெரிக்கா வரலாம் என்று இருக்கின்றேன் அண்ணே. ஆண்டவன் அருளால் வருவேன் என நினைக்கின்றேன்.//
ஆஹா அண்ணே உலகம் சுற்றும் வாலிபன் அப்படின்னு உங்க blog டைட்டில் மாத்திடலாம்.....
வாழ்த்துக்கள்.... //
நன்றி coolzkarthi
// Mahesh said...
அம்மாடி.... உங்க உறவினர்களை விட நிறைய பதிவர்களை சந்திச்சுட்டாப்ல இருக்கு !!வாழ்த்துகள் !!
(அப்பாடா... கொளுத்தி போட்டாச்சு... நாராயண... நாராயண) //
ஆஹா... இப்படியெல்லாம் வேற ஆரம்பிச்சுட்டீங்களா... நடக்கட்டும்
// ஆ.ஞானசேகரன் said...
பாசப் பறவைகள் அருமை.... வாழ்த்துகள் தலைவா //
நன்றி ஞானசேகரன்.
// ஷஃபிக்ஸ்/Suffix said...
அழகான எழுத்து நடையில் அற்புதமான நண்பர்களை அறிமுகபபடுத்தி, எங்களை மகிழ்வித்தற்க்கு மிக்க நன்றி அண்ணா!!//
நன்றி ஷஃபிக்ஸ் / Suffix.
// S.A. நவாஸுதீன் said...
ஒரு அருமையான பயணக்கட்டுரை நிரைவுக்கு வந்துவிட்டது. பாசப்பறவைகள் என்றென்றும் சிறகடித்துப் பறக்கட்டும். //
நன்றி நவாஸ்.
// வால்பையன் said...
அதுக்குள்ள முடிஞ்சிருச்சா!? //
ஆமாங்க ... இதுக்கு மேல இத வளர்த்த இயலாதுங்க
// வெயிலான் said...
சுமாரான உணவு, சில மணி
நேரக்கழி/ளிப்பு இருந்தும், திருப்பூரைப் பற்றிய உங்கள் எழுத்துக்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ராமன் குட்டியின் வலைத்தளம் - http://peyarenna.blogspot.com/
உங்களின் அடுத்த வருகையை எதிர்நோக்கும் - http://tiruppur-bloggers.blogspot.com/ //
நன்றி வெயிலான். உங்கள் அன்பை என்றும் மறக்க இயலாதுங்க.
// இது நம்ம ஆளு said...
:)
): //
நன்றி அண்ணே..
// உருப்புடாதது_அணிமா said...
என்னாது இது? "பாசப் பறவைகள் சட்டுன்னு முடிஞ்சி போச்சு?? //
ஏன்.. இந்த அதிர்ச்சி...
// மீ த குவாட்டர் செஞ்சுரி... //
யெஸ் யெஸ்... வாழ்த்துகள்
// எதுனா அரசியல்ல சேருர மாதிரி எண்ணம் எதுனா இருக்கண்ணே?? //
இந்த விளையாட்டுக்கு நான் வரலை..
// ஆமாண்ணே உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தா நேரம் பொறதே தெரிவதில்லை.. //
ரொம்ப நன்றி... தங்களின் பாசம் என்றும் மறக்க இயலாதுங்க.
// பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு அண்ணாச்சி! //
நன்றி பாரா...
உங்க எழுத்துக்கு முன் இதெல்லாம் ஜுஜூபிங்க..
நாங்களும் இங்க இருக்கோம், to prove my presence, அப்படின்னு சொல்வதற்காக எழுதுகின்றேங்க..
// நேசமித்ரன் said...
//இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது//
மிடிஞ்சிருச்சா
டிஞ்சிருச்சா
ச்சா
ச்சா
???????//
மிடிஞ்சிடுச்சு
டிஞ்சிடுச்சு
ஞ்சிடுச்சு
சிடுச்சு
டுச்சு
ச்சு
சு..
// உலகம் சுற்றும் சரி
வாலிபன் ?????
சரி லூஸ்ல விடுவோம் நம்ம அண்ணன்தன்னே //
40 வயது வாலிபனப்பா.. எதுக்காக லூசுல உடணும்..
// //மீ த குவாட்டர்செஞ்சுரி...//
குவாட்டர்.....?
ok ok
குவாட்டர்செஞ்சுரி!!! //
எஸ்...எஸ்... குவாட்டர் செஞ்சுரிதான்
// இது வேறயா
அப்போ இது தொகிதி நிலவரம் அறியும் ஸுட்ரு பயணம் //
தொகுதியா... தம்பி என்னை வம்புல மாட்டிவிட்டுடாதீங்க
// மட்டமான சாலை
அப்போ மத்த ஊர்லயெல்லாம் செங்குத்தான சாலையா ??? //
ஆஹா... நல்லாவே தேறிட்டார் கவிஞர்.
// A fine ending
:) //
வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி..
// அபுஅஃப்ஸர் said...
என்னாண்ணே முடிச்சிட்டீங்க..
அடுத்த பயணம் வரும்வரை தொடர்வீர்கள் என்று எதிர்ப்பார்த்து இருந்தேன்
அருமையான பகிர்வு //
ஆஹா.. இப்படி எல்லாம் வேற என்ன இருக்குங்களா... ம்.. நடக்கட்டும்.
// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! தலைப்பை சரி பண்ணுங்க! பாசப்பறவைகளுக்கு ஃபைனலே கிடையாது. //
அது அப்படியே இருக்கட்டுங்க. பைனல் என்னிக்காவது வந்துதானே ஆகணும்.. முடிவில்லாதது ஒன்றும் இல்லையே?
//
அண்ணே! அதே டிரைவர் தானா? இந்த முறையாவது கரெக்டா கண்டுபிடிச்சாரா ரூட்ட? //
அது சரி... பாதி வழியில டிரைவரை மாத்த முடியாதுங்க. ஆனா இந்த தடவை சரியான வழியிலத்தான் போனார் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் எனக்கே வழித் தெரியாதுங்களே.
// உங்கள கும்மி அடிக்கலாமுன்னு பார்த்தா மனசே வரமாட்டுதே!ஓக்கே ஓக்கே! படங்கள் அருமை அண்ணே! //
கும்மி அடிக்கணும் ஆசை வந்தா, அண்ணானவது, தம்பியாவது ஓரு ஆட்டம் ஆடித்தான் ஓயணும்.
பந்தம் பாசத்திற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது கும்மி.
நல்ல பயண பகிர்வு!!அதுக்குள்ள சீக்கிரம் முடித்துட்டீங்களே..
பகிர்வுக்கு நன்றிண்ணே..நிறைய பதிவர்களோட போட்டோவ உங்க புண்ணியத்துல பார்த்தாச்சு..
கரூரில் இருந்து குளித்தலை வரை உள்ள சாலை வரைக்கும் மோசமாக இருந்தது. எட்டு மாதங்களுக்கு முன். குளித்தலையில் பாலம் அமைந்த பிறகு அது கூட சரி செய்யப்பட்டு விட்டது.
திருப்பூர் திருச்சி 176 கிமி 60 கிமி தவிர கார் பயணம் ரத பயணம் தான்.
2010ல் அவஸ்யம் எதிர்பார்க்கின்றேன்.
Post a Comment