அது ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. அங்கு அவன்... (எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..) ஒரு பர்ச்சேஸ் மேனேஜர். அவனுக்கு 15 வருடம் பல கம்பெனிகளில் வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், பர்ச்சேஸ் என்பது அவனுக்குப் புதியது.
அந்த கம்பெனியில், அவனுக்கு உதவியாக, 6 பேர் இருந்தனர். அதில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.
அந்த கம்பெனியின் முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் சேர்ந்து காசுப் போட்டு, பரிசு வாங்க தீர்மானித்தனர்.
என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு.
சரி எக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஒருத்தர், வேறு சில டிபார்ட்மெண்டில் இருந்து சிலர் என நான்கு பேர் பரிசுப் பொருள் வாங்கச் செல்லலாம் என முடிவு செய்தனர்.
அவன் (அதாவது எக்ஸ்), வேலை கூடுதலாக இருந்ததால், தன்னுடைய உதவியாளர் ஒருவரை அவர்கள் கூட அனுப்பினான்.
அந்த உதவியாளர், கொஞ்சம் அல்டாப் பேர்வழி. இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் அவரை பரிசுப் பொருள் வாங்க அனுப்பினான். அவர்களும் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து பரிசு பொருளை வாங்கி வந்தனர். வரும் போது, பரிசு கொடுப்பதற்கு ஏதுவாக பேக் செய்து, பொருள் என்னவென்று தெரியாத மாதிரி கொண்டு வந்தனர்.
கூட வேலைச் செய்த மற்றவர்களுக்கு என்ன பரிசுப் பொருள் என அறிய ஆவல். அதனால் அவர்கள் பரிசுப் பொருள் வாங்கப் போனவரை என்ன பரிசுப் பொருள் என்று கேட்கத் தொடங்கினர். அவரும், பிரமாதமான பரிசுப் பொருள், சூப்பரா இருக்கு, ரூ x,xxx/- ஆச்சு, என்றெல்லாம் சொல்லுகின்றாரேத் தவிர, என்ன பரிசுப் பொருள் என்றுச் சொல்லவேயில்லை. ஒருவர் வாய் திறந்தே கேட்டு விட்டார். அதற்கு அவர், பரிசுக் கொடுக்கும் போது முதளாலி திறந்து காண்பிப்பார் அப்ப பார்த்துக்கோங்க, அது சஸ்பென்ஸ் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்.
எக்ஸ் அப்போது கூட, அவரிடம் என்ன பரிசுப் பொருள் என்றுக் கேட்கவில்லை. அந்த உதவியாளரும் எக்ஸ் எதாவது கேட்பேரா என்று எதிர்ப் பார்த்தார். நேரம் கடந்தது. அதைப் பற்றி எக்ஸ் கவலைப் படவேயில்லை. அவர் தன் வேலையில் கண்ணும், கருத்துமாகவே இருந்தார்.
அந்த உதவியாளர், கொஞ்ச நேரம் கழித்து எக்ஸிடம் வந்தார்...
அவர் : சார் என்ன பரிசுப் பொருள் என்று நீங்கள் கேட்கவேயில்லையே ?
எக்ஸ் : என்ன அவசரம், நாளைக்கு கொடுக்கும் போது தெரிந்துவிடப் போகின்றது.
அவர் : எல்லோரும் கேட்டாங்க, ஆனால் நீங்க கேட்கவில்லையே?
எக்ஸ் : அதுதான் நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றதே? தெரியவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடப் போகின்றாதா என்ன?
அவர் : இல்ல சார் டிபார்ட்மெண்ட் சீஃப் நீங்க ஒன்னுமே கேட்கவேயில்லையே?
எக்ஸ் : ஆமாம் டிபார்ட்மெண்ட் சீஃப் நான் தான். இல்லை என்றுச் சொல்லவேயில்லையே? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
அவர் : என்ன சார் நீங்க என்ன பரிசுப் பொருள் என்று கேட்கவே மாட்டேன் என்கின்றீர்களே?
எக்ஸ் : அதான் சொன்னேனே, நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றது. இப்ப என்ன அவசரம்.
அவர் : அது வந்து சார், சந்தன மரத்தில் செதுக்கிய அழகான சிற்பம் சார்.
எக்ஸ் : அப்படியா .. ரொம்ப சந்தோஷம்..
உதவியாளருக்கு முகம் தொங்கிப் போயிட்டது. என்னாடா இந்த மனுஷன் இப்படி இருக்கின்றாரே என்று. அந்த உதவியாளர் வேறு விஷயமாக வெளியே போன போது, மற்றொரு உதவியாளர் எக்ஸிடம் வந்து, சார், நாங்க எல்லாரும் கேட்ட போது, பதில் சொல்லாமல் எதோ எதோ சொன்னார்கள். நீங்க எப்படி சார் அவங்களையே சொல்ல வச்சீங்க அப்படின்னாங்க..
எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...
எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..
பொறுப்பி :
1. பாதி உண்மை, மீதி புனைவு
2. வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.
நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,
இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.
3. பொறுப்பி 2 கவிதை என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
4. கவிதை எழுத எனக்கு ரோல் மாடல் - அன்பு அண்ணன் தண்டோரா.
99 comments:
அண்ணா மீ த பர்ஸ்டாகிய நான் வெடித்து சிதறுவது என்னான்னா சிம்ப்ளி சூப்பர். வர வர பினா நனாவா மாறிகிட்டே வரீங்க. வெயிட்டிங் ஃபார் 200 வது பாலோயர். (இப்ப 191ல் இருக்கு அண்ணா)
"ஜஸ்ட் இக்னோர் இட்..."
ignored...! :-s padikka venamla...
//
எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...//
hmm...!
osho kavanam varaaru..!
பர்ச்சேஸ் மேனேஜர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர், எனக்கு ரொம்ப பிடிச்சவர் போல இருக்கே. சரிதானேண்ணே:))
நிஜம்மா ரொம்ப முக்கியமான ஒரு டேக்டிக்ஸ் இது. கேட்டா சொல்லாத விஷயம் கூட இக்னோர் பண்ணா பிச்சிகிட்டு கொட்டும்.
கவிதை சூப்பர். தண்டோரா படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவார்=))
நேத்துல இருந்தே ஃபுல் ஃபார்ம்ல இருக்காப் போல இருக்கேண்ணே. ஒரு இடுகையில இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொள்ளா
//ஜஸ்ட் இக்னோர் இட்...//
படிக்கவா? வேண்டாமா?
//எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்... //
பிடிச்சியிருக்கு,....
இப்போ ஒண்ணு சொல்லவா?
ஒருத்தர்கிட்ட என்ன அடிக்கடி என் பிலாக்குக்கு வர மாட்டேன்றீங்க?
அப்பிடின்னு எனக்கு கேட்க தோணினாலும்...
ஜஸ்ட் இக்னோர்இட்...
இப்பிடி கண்டுக்காம விட்டா போதுமா?
திரும்ப வருவாரா?
வித்தியாசமாப்
பேசாம
வித்தியாசமா
வித்தியாசமானதைச்
சொல்லி
வித்தியாசமா
வித்தியாசமாவே
பின்னூட்டச் சொன்ன
வித்தியாசமான அண்ணா
வித்தியாசமானவரே!
//வித்தியாசமாப்
பேசாம
வித்தியாசமா
வித்தியாசமானதைச்
சொல்லி
வித்தியாசமா
வித்தியாசமாவே
பின்னூட்டச் சொன்ன
வித்தியாசமான அண்ணா
வித்தியாசமானவரே//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அண்ணா நீங்க..சாதாரண அண்ணா இல்லே.. அறிஞர் அண்ணா..
(அவ்வை சண்முகி டெல்லி கணேஷ் ஸ்டைலில் படிக்கவும்..)
மனுசனோட இயல்ப வித்தியாச படம் புடிச்சு காட்டீட்டீங்க
வாழ்த்துகள்..
பொறுப்பி 3 நல்ல ஜோக்.
(வித்யாசமா நினைக்க மாட்டேன்னு சொன்னதால)
:)
நல்ல திட்டம். முயற்சிக்கிறேன்
(எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..)
Y-ன்னு வச்சா நீங்க why-ன்னு கேப்பீங்களோ
ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
வித்தியாசமில்லாம வித்தியாசமான ஒரு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
வித்தியாசமில்லாம வித்தியாசமான ஒரு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
//நேத்துல இருந்தே ஃபுல் ஃபார்ம்ல இருக்காப் போல இருக்கேண்ணே. ஒரு இடுகையில இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொள்ளா//
very nice vaanambadi
:-)))))))
//எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...
எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..//
nalla irukku
so naanum pidikathavaigalai ignore panna kathukuren
nandri RAGHAVAN
//அண்ணா நீங்க..சாதாரண அண்ணா இல்லே.. அறிஞர் அண்ணா..
(அவ்வை சண்முகி டெல்லி கணேஷ் ஸ்டைலில் படிக்கவும்..)//
Seemachu is also humarous
unga kuda serntha ippadi aagidarangala Raghavan
:-)))))))))))
//S.A. நவாஸுதீன் said...
(எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..)
Y-ன்னு வச்சா நீங்க why-ன்னு கேப்பீங்களோ//
rotfl....lol.... :-D
navasutheen kuuda pinnurrunga
அண்ணே.. எல்லாம் நல்லாருந்திச்சு.. ஆனா கடைசி.. ஓகே.. சரி.. “ஜஸ்ட் இக்னோர் இட்’ :)
நான் கூட உங்க பதிவைதான் சொல்றீங்களோன்னு நினைச்சுப்புட்டேன்:)))
வித்தியாசமானதுதான்.வாழ்த்துகள்.
ராகவன் நீங்க சொல்றதும் சரிதான்.பிடிக்கலன்னா கண்டுக்காம இயல்பாய் இருப்போம். அலட்டிக்கொள்ளவேணாம்.
வித்தியாசம் என்கிறதே வித்தியாசம்.அதையே வித்தியாசமா பின்னூட்டம் போடுங்கன்னா வித்தியாசமா நான் எப்பிடி யோசிக்க !
JUST LIKE IT
VIJAY
அட... இது நல்லா இருக்கே !!
அண்ணாத்தே வித்தியாசமான ஆளுதான்யா நீர்
இதை இக்னோர் பண்ண இயலாது
இத வித்தியாசமான கண்ணோட்டத்தோட பார்க்கும் போது வித்தியாசமாத்தான் தெரியுதுங்க... வித்தியாசமில்லாத கண்ணோட்டத்தில பார்க்கும் போது வித்தியாசாம தெரியலிங்க...ஆனாலும் இதுல ஏதோ வித்தியாசம் இருக்குங்க, ஏதாவது வித்தியாசம எழுதியிருதா இத வித்தியாசம எடுத்துக்க வேண்டாம்ங்க.
நான் கூட நீnga பதிவை இக்னோர் செய்ய சொல்றீங்கலோன்னு நினைச்சேன்!!
ரைட்டு... வித்தியாசமானவரிடமிருந்து வித்தியாச பதிவு!!
//வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.
நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,
இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.//
சூப்பர் தல!
:-))))))))))))
நல்லா இருந்தது....
வித்யாசமா னு திருப்பி திருப்பிப் படிச்சதுல எனக்கு வித்யா ஞாபகம் வந்து விட்டது.
அது சரி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...
//என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு"//
இந்தத் "தாவு" னா என்னங்க?
என் நண்பனோட அப்பாவா போய்ட்டீங்க.இல்லாட்டி நான் உங்களை ஜஸ்ட் இக்னோர் இட் செய்துருப்பேன்
இஃகிஃகிஃகி
:)
அண்ணே! அந்த X கடைசிவரை wh"Y" ன்னு கேக்காமலயே மேட்டர வரவச்சிட்டார். கடைசியில் தண்டோரா அண்ணன வம்புல மாட்டிவிட்டுட்டு சுலோவா எஸ் ஆயிட்டீகளே. தமிழ்மணத்துல ஓட்டு சேரமாட்டேங்குது அப்பறம் வாரேன் அதுவர ஜஸ்ட் இக்னோர் தட். ஹாஹா ஹா இதெப்படி இருக்கு.
//வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.
நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,
இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.//அப்போ எனக்கு தலை சுத்தது.
ஆனாலும் உங்க புனைவு நல்லாயிருக்கு அண்ணா!!
// அபி அப்பா said...
அண்ணா மீ த பர்ஸ்டாகிய நான் வெடித்து சிதறுவது என்னான்னா சிம்ப்ளி சூப்பர். வர வர பினா நனாவா மாறிகிட்டே வரீங்க. வெயிட்டிங் ஃபார் 200 வது பாலோயர். (இப்ப 191ல் இருக்கு அண்ணா) //
அண்ணே வாங்கண்ணே... நீங்கத்தான் பர்ஸ்ட்....
பினா நனாவா வா? அய்யோ இல்லீங்க..
விரைவில் 200 தொடும் என எதிர்ப் பார்க்கின்றேன். 189 - 191 மாறி மாறி 4 தடவை போய் வந்துடுச்சுங்க..
// ஸ்ரீ.கிருஷ்ணா said...
"ஜஸ்ட் இக்னோர் இட்..." //
நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா..
// கலகலப்ரியா said...
ignored...! :-s padikka venamla...//
ஐயோ ... நீங்க இப்படிச் சொன்னா நாங்க என்னா செய்வது..
//
எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...//
hmm...!
osho kavanam varaaru..! //
நன்றி
// வானம்பாடிகள் said...
பர்ச்சேஸ் மேனேஜர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர், எனக்கு ரொம்ப பிடிச்சவர் போல இருக்கே. சரிதானேண்ணே:))//
ஆமாங்க சரிதான்..
//நிஜம்மா ரொம்ப முக்கியமான ஒரு டேக்டிக்ஸ் இது. கேட்டா சொல்லாத விஷயம் கூட இக்னோர் பண்ணா பிச்சிகிட்டு கொட்டும். //
சரியாச் சொன்னீங்க
// கவிதை சூப்பர். தண்டோரா படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவார்=)) //
ஆமாங்க.. ஆசான் ரொம்ப சந்தோஷப் படுவார்ங்க
// நேத்துல இருந்தே ஃபுல் ஃபார்ம்ல இருக்காப் போல இருக்கேண்ணே. ஒரு இடுகையில இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொள்ளா //
நன்றிங்கண்ணே..
// ஆ.ஞானசேகரன் said...
//ஜஸ்ட் இக்னோர் இட்...//
படிக்கவா? வேண்டாமா? //
படிங்க.. படிங்க.. உங்களுக்குகாதானே எழுதியிருக்கேன்..
//எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்... //
பிடிச்சியிருக்கு,.... //
நன்றி..
// பிரியமுடன்...வசந்த் said...
இப்போ ஒண்ணு சொல்லவா?
ஒருத்தர்கிட்ட என்ன அடிக்கடி என் பிலாக்குக்கு வர மாட்டேன்றீங்க?
அப்பிடின்னு எனக்கு கேட்க தோணினாலும்...
ஜஸ்ட் இக்னோர்இட்...
இப்பிடி கண்டுக்காம விட்டா போதுமா?
திரும்ப வருவாரா? //
இதெல்லாம் கண்டுக்காம விடப்பிடாது... அப்ப அப்ப என்ன என்று கண்டுக்கணும்...
// பழமைபேசி said...
வித்தியாசமாப்
பேசாம
வித்தியாசமா
வித்தியாசமானதைச்
சொல்லி
வித்தியாசமா
வித்தியாசமாவே
பின்னூட்டச் சொன்ன
வித்தியாசமான அண்ணா
வித்தியாசமானவரே! //
ஐயா பழமை அய்யா நன்றிங்க..
// Seemachu said...
//வித்தியாசமாப்
பேசாம
வித்தியாசமா
வித்தியாசமானதைச்
சொல்லி
வித்தியாசமா
வித்தியாசமாவே
பின்னூட்டச் சொன்ன
வித்தியாசமான அண்ணா
வித்தியாசமானவரே//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அண்ணா நீங்க..சாதாரண அண்ணா இல்லே.. அறிஞர் அண்ணா..
(அவ்வை சண்முகி டெல்லி கணேஷ் ஸ்டைலில் படிக்கவும்..) //
அண்ணா... வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி..
// நிகழ்காலத்தில்... said...
மனுசனோட இயல்ப வித்தியாச படம் புடிச்சு காட்டீட்டீங்க
வாழ்த்துகள்..//
நன்றி நிகழ்காலத்தில்
// அறிவிலி said...
பொறுப்பி 3 நல்ல ஜோக்.
(வித்யாசமா நினைக்க மாட்டேன்னு சொன்னதால) //
நன்றி.. அறிவிலி...
// S.A. நவாஸுதீன் said...
(எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..)
Y-ன்னு வச்சா நீங்க why-ன்னு கேப்பீங்களோ //
எப்படி வச்சாலும், அதுவும் நீங்க அப்படின்னா எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் எடுத்துக்குவோம்
//ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
வித்தியாசமில்லாம வித்தியாசமான ஒரு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. //
நன்றி..
// thenammailakshmanan said...
//நேத்துல இருந்தே ஃபுல் ஃபார்ம்ல இருக்காப் போல இருக்கேண்ணே. ஒரு இடுகையில இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொள்ளா//
very nice vaanambadi
:-)))))))//
:))
##//எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...
எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...
எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..//
nalla irukku
so naanum pidikathavaigalai ignore panna kathukuren
nandri RAGHAVAN ##
நன்றிங்க
## //அண்ணா நீங்க..சாதாரண அண்ணா இல்லே.. அறிஞர் அண்ணா..
(அவ்வை சண்முகி டெல்லி கணேஷ் ஸ்டைலில் படிக்கவும்..)//
Seemachu is also humarous
unga kuda serntha ippadi aagidarangala Raghavan
:-))))))))))) ##
இஃகி... இஃகி..
## //S.A. நவாஸுதீன் said...
(எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..)
Y-ன்னு வச்சா நீங்க why-ன்னு கேப்பீங்களோ//
rotfl....lol.... :-D
navasutheen kuuda pinnurrunga ##
பின்றதா... அடிச்சு தூள் கிளப்புவாறு..
// Cable Sankar said...
அண்ணே.. எல்லாம் நல்லாருந்திச்சு.. ஆனா கடைசி.. ஓகே.. சரி.. “ஜஸ்ட் இக்னோர் இட்’ :) //
அண்ணே நீங்க சொன்னா சரிதாயாகத்தான் இருக்கும்..
// குசும்பன் said...
நான் கூட உங்க பதிவைதான் சொல்றீங்களோன்னு நினைச்சுப்புட்டேன்:))) //
இப்படியெல்லாம் சொல்லி தப்பிச்சுக்க முடியாதுங்க..
// ஸ்ரீ said...
வித்தியாசமானதுதான்.வாழ்த்துகள். //
நன்றி ஸ்ரீ..
// ஹேமா said...
ராகவன் நீங்க சொல்றதும் சரிதான்.பிடிக்கலன்னா கண்டுக்காம இயல்பாய் இருப்போம். அலட்டிக்கொள்ளவேணாம்.
வித்தியாசம் என்கிறதே வித்தியாசம்.அதையே வித்தியாசமா பின்னூட்டம் போடுங்கன்னா வித்தியாசமா நான் எப்பிடி யோசிக்க !//
நன்றி ஹேமா..
வித்யாசமா, வித்யாசத்தை யோசனைப் பண்ணி போட வேண்டியதுதான்..
// கவிதை(கள்) said...
JUST LIKE IT
VIJAY//
நன்றி கவிதை(கள்) விஜய்
// Mahesh said...
அட... இது நல்லா இருக்கே !! //
நன்றி மகேஷ்
// அப்பாவி முரு said...
:)
நல்ல திட்டம். முயற்சிக்கிறேன்
No //
நன்றி முரு..
// அபுஅஃப்ஸர் said...
அண்ணாத்தே வித்தியாசமான ஆளுதான்யா நீர்
இதை இக்னோர் பண்ண இயலாது //
நன்றி அபு.
// சி. கருணாகரசு said...
இத வித்தியாசமான கண்ணோட்டத்தோட பார்க்கும் போது வித்தியாசமாத்தான் தெரியுதுங்க... வித்தியாசமில்லாத கண்ணோட்டத்தில பார்க்கும் போது வித்தியாசாம தெரியலிங்க...ஆனாலும் இதுல ஏதோ வித்தியாசம் இருக்குங்க, ஏதாவது வித்தியாசம எழுதியிருதா இத வித்தியாசம எடுத்துக்க வேண்டாம்ங்க.//
அண்ணே.. பின்னீட்டீங்க...
// கலையரசன் said...
நான் கூட நீnga பதிவை இக்னோர் செய்ய சொல்றீங்கலோன்னு நினைச்சேன்!!
ரைட்டு... வித்தியாசமானவரிடமிருந்து வித்தியாச பதிவு!! //
நன்றி கலை..
// துளசி கோபால் said...
good one! //
நன்றிங்க .
// பா.ராஜாராம் said...
சூப்பர் தல!
:-)))))))))))) //
கவிஞர் பா.ரா வந்து பாராட்டியதுதான் என் கவிதையின் சிறப்பு...
அண்ணே ரொம்ப நன்றி...
// ஸ்ரீராம். said...
நல்லா இருந்தது....
வித்யாசமா னு திருப்பி திருப்பிப் படிச்சதுல எனக்கு வித்யா ஞாபகம் வந்து விட்டது. //
இப்படி எதாவது படிச்சாத்தால் தான் வித்யா ஞாபகம் வருதா? அண்ணே பார்த்து அவங்களும் இதை எல்லாம் படிப்பாங்கன்னு நினைக்கின்றேன்.
///அது சரி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...
//என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு"//
இந்தத் "தாவு" னா என்னங்க? //
இந்த கேள்வி .. ஐயா பழமை பேசி அவர்களுக்கு மாற்றப் படுகின்றது..
அண்ணே கலக்கல்...ஜஸ்ட் இக்னோர் இட்.....
// எம்.எம்.அப்துல்லா said...
என் நண்பனோட அப்பாவா போய்ட்டீங்க.இல்லாட்டி நான் உங்களை ஜஸ்ட் இக்னோர் இட் செய்துருப்பேன்
இஃகிஃகிஃகி
:)//
அண்ணே ரொம்ப நன்றிங்க..
சரி தொலைப்பேசியில் அழைத்தால் கிடைக்கவேயில்லை.. என்னாச்சுங்க தொலை பேசிக்கு..
// RAD MADHAV said...
பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html //
நன்றிங்க.. முயற்சிக்கின்றேன்..
// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! அந்த X கடைசிவரை wh"Y" ன்னு கேக்காமலயே மேட்டர வரவச்சிட்டார். கடைசியில் தண்டோரா அண்ணன வம்புல மாட்டிவிட்டுட்டு சுலோவா எஸ் ஆயிட்டீகளே. தமிழ்மணத்துல ஓட்டு சேரமாட்டேங்குது அப்பறம் வாரேன் அதுவர ஜஸ்ட் இக்னோர் தட். ஹாஹா ஹா இதெப்படி இருக்கு.//
அண்ணே ரொம்ப நன்றிங்க...
தண்டோரா எங்க அண்ணன் - அவரை மாட்டி விடுவோமாங்க
// Mrs.Menagasathia said...
##அப்போ எனக்கு தலை சுத்தது. ##
உங்களுக்கு இருக்கும் வசதி எங்களுக்கு இல்லீங்க.. என்ன அப்படின்னு கேட்கீறங்களே... தலை சுத்துவதால் உங்க முதுகை நீங்க பார்க்கலாம்..
##ஆனாலும் உங்க புனைவு நல்லாயிருக்கு அண்ணா!! ##
நன்றி.
// coolzkarthi said...
அண்ணே கலக்கல்...ஜஸ்ட் இக்னோர் இட்..... //
நன்றி கார்த்திக்
//// என்னாச்சுங்க தொலை பேசிக்கு..//
தொலைன்னு சொன்னாத் தொலையாம என்ன செய்யுமாம்? அவ்வ்வ்.....
// பழமைபேசி said...
//// என்னாச்சுங்க தொலை பேசிக்கு..//
தொலைன்னு சொன்னாத் தொலையாம என்ன செய்யுமாம்? அவ்வ்வ்.....//
வேணும்ணுதாங்க அப்படி போட்டேன்..
அண்ணன் கூட பேசணும் அப்படின்னு, 15 நாளா முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்... கிடைக்கவேயில்லை...
அப்படியே இந்த தாவு தீர்ந்து போயிடுச்சு அப்படின்னா என்ன அர்த்தம் என்றும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்..
வித்தியாசமாய் விவரமாய் இருக்கு அண்ணே
நீங்க சொன்ன “ஜஸ்ட் இக்னோர் இட்”
அவசியம் கடைபிடிக்கிறேன்
ஆனால் இந்த பதிவை ஜஸ்ட் இக்னோர் செய்ய இயலாது.
சும்மா பின்னி பெடல் எடுக்கறீங்க இராகவன். ஜஸ்ட் இக்னோர் இட்... யு ஜஸ்ட் கான்ட் இக்னோர் இட்.(உங்க இடுகையை சொன்னேன்!!!!!).... எப்புடி திருத்திக்கிட்டோமா நீங்க சொன்னதுலேந்து(இடுகை) !!!!!
கவிதை...... சரி விடுங்க விடுங்க அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.......
// நட்புடன் ஜமால் said...
வித்தியாசமாய் விவரமாய் இருக்கு அண்ணே
நீங்க சொன்ன “ஜஸ்ட் இக்னோர் இட்”
அவசியம் கடைபிடிக்கிறேன்
ஆனால் இந்த பதிவை ஜஸ்ட் இக்னோர் செய்ய இயலாது. //
நன்றி தம்பி ஜமால்
// காவிரிக்கரையோன் MJV said...
சும்மா பின்னி பெடல் எடுக்கறீங்க இராகவன். ஜஸ்ட் இக்னோர் இட்... யு ஜஸ்ட் கான்ட் இக்னோர் இட்.(உங்க இடுகையை சொன்னேன்!!!!!).... எப்புடி திருத்திக்கிட்டோமா நீங்க சொன்னதுலேந்து(இடுகை) !!!!!
கவிதை...... சரி விடுங்க விடுங்க அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா....... //
நன்றி காவிரிக்கரையோன்...
மிக்க மகிழ்ச்சி...
சரியான வழிதான்.. ஆனா எல்லா சமயமும் வேலைக்கி ஆகுமா???
நம்ம ஜ.இ.இட் ந்னு போக.. எடிராளியும் ஜ.இ.இட்ன்னு போயிட்டா என்ன அண்ணே பண்றது??
கவித.. கிக்கி... :-)
தொடர்ந்து கவிதவும்.
இன்னாப்பா ராகவா இத்தினி பேரு கமெண்ட் போட்டதற்க்கப்புறம், நான் இன்னா புதுசா சொல்லிடப் போறன், ஜஸ்ட் இக்னேர் இட் அம்புட்டுதான். வரட்டா. சும்மா கும்முனு சூப்பரா ஒரு டயலாக் சொல்லிக் கொடுத்த. வாத்தியாரே இனி நானும் பாலோ பண்ணிகிற நைனா. வரட்டா. நன்றி.
ரொம்பவே வித்தியாசமா இருக்கே..... நான் டிஸ்கியைச் சொன்னேன் !!!
சில விஷயத்தை சிலரால் தான் சிறப்பாக சொல்ல முடியும். சிலரால் படிக்க மட்டுமே முடியும். இதில் நான் இரண்டாம் ரகம்.
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
நீங்க கவிதை எழுத ரோல் மாடலா அண்ணன் “தண்டோரா”வை எடுத்துக்கொண்டுள்ள விஷயம் “தல”க்கு தெரியுமா??
தெரியலேன்னாலும், “வானம்பாடிகள்’ சொல்லிட்டார்... இத நான் சொல்லல....
ராகவன்..வித்யா யாரு? என் கிட்ட மட்டும் சொல்லுங்க.. சத்தியமா தண்டோரா போடமாட்டேன்
அண்ணே கலக்குரீஙக
கவிதை முயற்சி அழகு
நான் இவ்வளவு லேட்டா வந்தத கண்டுக்காம, ஜஸ்ட் இக்னோர்.
என் அப்பாவின் வாக்குகளில் இதுவும் ஒன்று. முக்கியமா உறவுகளில் ஏற்படும் கருத்துவேறுபாடுகளைக் களைய இதுவே நல்ல வழி என்று சொல்வார்.
சரியா தான் சொல்லியிருக்கிங்க!
ஆகா ஆகா ஜஸ்ட் இக்னோர் இட் - அருமையான பொன்மொழி - கடைப்ப்டிக்கணும் - முடியுமா - முடியணும்
நல்லா இருந்திச்சி இடுகை
நல்வாழ்த்துகள் ராகவன் - அப்துல்லாவோட நண்பனோட அப்பா
//
ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா...
//
இந்த எக்ஸ்'கு பரிசுப்பொருள் கொடுப்பது பிடிக்கலையா.. அது என்னான்னு நோண்டிட்டு இருக்குறது பிடிக்கலையா..
அந்த எக்ஸ் ராகவன் அண்ணாவா.. :-)
//
வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.
//
வித்தியாசமான இடுகையை படிப்பதாய் வித்தியாசமாய் நினைத்து, வித்தியாசமாக பின்னூட்டுவதாக நினைத்து பின்னூட்டி இருக்கிறேன்..
நல்லா இருந்தது....
அருமை
கதை நல்லாயிருந்தது.
பொறுப்பி 2 படிக்கும்போது கூட பொறுத்துக்கிட்டேன். ஆனா அதை கவுஜைன்னிங்க பாருங்க, அதைத்தான் தாங்க முடியலை.
ஜஸ்ட் இக்னோர் இட் னு போட்டபிறகும் படிச்சேன்...
நல்லாருக்கு சார்...
வித்தியாசமான விச்தியாசம்..
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
வித்யாசமா எழுதி எழுதி நூறு பின்னூட்டமும் இருநூறு பின்பற்றுபவர்களும்னு அசத்துறீங்க ராகவன்
இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html
இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
மீ த 100....
மேட்டரை விட டிஸ்கி தாங்க டாப்பு. அதிலும் உங்க கவிதை அடடே!
வித்தியாசமாய் இருக்கிறதை, "ஜஸ்ட் இக்னோர்" பண்ண முடியாது.
விலகிப் போனால் விரும்பி வரும்
'strategy' தான் இது!
Post a Comment