Friday, November 12, 2010

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??

மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.

சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க செய்யும் ஏரி. அந்த ஏரியின் இன்றைய தோற்றம். (ஆகஸ்ட் மாதம்... இந்தியா வந்த போது எடுத்தப் படங்கள்...)ஏரி ஒரு பகுதி.... எதிர் கரையில் சுகமாக மேயும் எருமை மாடுகள்.ஐயப்பா நகர் சன்னதி தெருவின் சாக்கடை ஏரியை நோக்கிஐயப்பா நகர் சன்னதி தெரு சாக்கடை ஏரியை வந்தடைந்துவிட்டது. !!சாக்கடை ஏரியில் சங்கமிக்கும் இடம்.. புண்ணிய பூமி!!ஏரிக் கரையில் கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள். ரொம்ப சுத்தமானவங்க வீட்டில் இருக்கும் குப்பைகள் ஏரிக் கரையில் !!


மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை. இங்கு வளரும் மீன்களை சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நிச்சயம் வரும் - 100% கியாரண்டி என்று போடவில்லை.!!


ரொம்ப புத்திசாலி இவர்... வீட்டு சாக்கடையை தெருவில் விட்டுள்ளார் (12 வது தெரு வாசி)அவரேதான்... வீட்டு சுவர் ஓரமாக அணை கட்டியது மாதிரி பள்ளம் வெட்டி அதில் சாக்கடை தண்ணீர்.


தெருவெங்கும் அந்த சாக்கடை தண்ணீர். அந்த வழியாகத்தான் நிறைய பள்ளிக் குழைந்தகள் செல்வார்கள். தினமும் இரண்டு குழைந்தகளாவது சைக்கிளில் இருந்து விழுந்து விடுகின்றனர்.


புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.


43 comments:

வானம்பாடிகள் said...

ரொம்ப நாள் கழிச்சி இடுகை. முதல் பின்னூட்டம். பின்னூட்ட மன்னனுக்கே முதல் பின்னூட்டமா. பின்னிட்டடா வானம்பாடி:)

வானம்பாடிகள் said...

அண்ணே என்ன கொடுமை இது. நீங்களுமா மாடரேஷன்.

நேசமித்ரன் said...

அட அண்ணன் இடுகை போட்ருக்காரு!!!


சமூகப் பொறுப்புணர்வுள்ள பகிர்வு .

Vidhoosh said...

மடிப்பாக்கத்திற்கு சமீபத்தில்தான் வந்தோம். ஏரிக்கு எதிரேயே வீடு என்பதால், காலங்கார்த்தால நிலவரம் தெரியாம ஜன்னலைத் திறந்துட்டேன்.. நல்லவேளை என் பொண்ணு அதையெல்லாம் பார்க்கலை... :(

பார்க்கலாம், இந்த ஏரிகளைக் காக்க நம்மால் இயன்றதை செய்யலாம்.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே மனதுக்குக் கஷ்டமா இருக்கு ராகவன் சார். இருக்கும் நீர் நிலைகள் எல்லாவற்றிலும் கழிவு நீரைக் கலந்து அவற்றை உயிரோடு கொலை செய்து கொண்டு இருக்கிறோம். தில்லியில் யமுனா நதி என்று ஒரு புண்ணிய நதி இருந்ததாம், கேள்விப்பட்டது தான். ஏனெனில் இப்போது யமுனா என்ற பெயரில் தில்லியில் ஓடிக்கொண்டு இருப்பது வெறும் சாக்கடை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு! நன்றி.

ஹுஸைனம்மா said...

கொடுமை.. ஆனா, நிஜமாங்க, எங்கூர்ல சில ஏரியாக்களின் நிலைமைக்கு இது எவ்வளவோ பரவால்லைன்னுதான் தோணுது!! :-(((((((((

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சவுக்கியமாண்ணே! :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சவுக்கியமாண்ணே! :))

vasan said...

கார்ப‌ரேச‌ன்காரர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்?
மாடி குடியிருப்போர் ந‌லச‌ங்க‌ம் அமைத்து‌,
அந்த‌ந்த‌ மாடிக்குடியிருப்பின் பொது பிர‌ச்ன‌க‌ளை
பேசி தீர்ப்ப‌து போல், புது ந‌க‌ர்க‌ளில் நல்ச‌ங்க‌ங்க‌ள்
அமைத்து, புதிய‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுப‌வ‌ர்க‌ளிட‌ம்,
இது போன்ற‌ பொது பிர‌ச்னைக‌ளைப் பேசி தீர்வு காண‌லாம்.
த‌னி ஆளாய் கேட்க இய‌லாது.

மோகன் குமார் said...

எங்க ஊரை பத்தி வெளி நாட்டில் உள்ள நீங்க எழுதுறீங்க. நாங்க ஏன் எழுதலைன்னு யோசிச்சா.. ம்ம்

nerkuppai thumbi said...

பதிவுக்கு நன்றி.
கார்த்திகேய புரம் பக்கம் (கிழக்கு கரை) இவ்வளவு மோசம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதுவரை ஊராட்சியாக இருந்தது. மாநகரத்தில் சமீபத்தில் தான் இணைந்திருக்கிறது.
பாதாள சாக்கடை வந்தால் நிலைமை மாறும் என நம்புகிறோம்.

ஸ்ரீ said...

பல மாதங்கள் கழித்து வந்தாலும் ,உருப்படியான இடுகை.நலமா?

ராமலக்ஷ்மி said...

//புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.//

உண்மைதான். அவசியமான பதிவு.

அஹமது இர்ஷாத் said...

இருப்பை நிலைநாட்டிட்டீங்க‌ண்ணே..

Kalidoss said...

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

polurdhayanithi said...

கார்ப‌ரேச‌ன்காரர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்?

இராகவன் நைஜிரியா said...

@@ வானம்பாடிகள். நன்றி அண்ணே.

// அண்ணே என்ன கொடுமை இது. நீங்களுமா மாடரேஷன்.//

அது இடுகை எழுத ஆரம்பிச்ச தேதிய போட்டு ரிலீஸ் ஆயிடுச்சு. என்னோட இடுகைகள் 14 நாளுக்கு மேலே போச்சுன்னா மாடரேஷனுக்கு போயிடும். அதான் இது மாதிரி ஆயிடுச்சு. இப்ப 100 நாள் என்று மாற்றிவிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

@@ நேசமித்ரன் - நன்றி தம்பி.

இராகவன் நைஜிரியா said...

@@ விதூஷ்... கொடுமை அது... ஏரிக்க்கரை பக்கதில் வீடா... கேட்கவே வேண்டாம். மறந்து கூட சன்னலை திறந்துடாதீங்க...

இராகவன் நைஜிரியா said...

@@ வெங்கட் நாகராஜ் - இந்தியா முழுக்க இதுதான் நிலை.

இராகவன் நைஜிரியா said...

@@ஹூஸைனம்மா - எல்லா ஊரும் இப்படிதாங்க இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

@@ ஷங்கர் - மிக்க நலம் அண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க.

இராகவன் நைஜிரியா said...

// vasan said...
கார்ப‌ரேச‌ன்காரர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்?
மாடி குடியிருப்போர் ந‌லச‌ங்க‌ம் அமைத்து‌,
அந்த‌ந்த‌ மாடிக்குடியிருப்பின் பொது பிர‌ச்ன‌க‌ளை
பேசி தீர்ப்ப‌து போல், புது ந‌க‌ர்க‌ளில் நல்ச‌ங்க‌ங்க‌ள்
அமைத்து, புதிய‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுப‌வ‌ர்க‌ளிட‌ம்,
இது போன்ற‌ பொது பிர‌ச்னைக‌ளைப் பேசி தீர்வு காண‌லாம்.
த‌னி ஆளாய் கேட்க இய‌லாது. //

நலச் சங்கங்கள் நாதியத்து போய்கிடக்கிறாங்க.

இராகவன் நைஜிரியா said...

//மோகன் குமார் said...
எங்க ஊரை பத்தி வெளி நாட்டில் உள்ள நீங்க எழுதுறீங்க. நாங்க ஏன் எழுதலைன்னு யோசிச்சா.. ம்ம் //

நன்றி மோகன் குமார். சொந்த வீடு மடிப்பாக்கம் ஐயப்பா நகரில் இருக்கு. நானும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் இதை எழுதுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// nerkuppai thumbi said...
பதிவுக்கு நன்றி.
கார்த்திகேய புரம் பக்கம் (கிழக்கு கரை) இவ்வளவு மோசம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதுவரை ஊராட்சியாக இருந்தது. மாநகரத்தில் சமீபத்தில் தான் இணைந்திருக்கிறது.
பாதாள சாக்கடை வந்தால் நிலைமை மாறும் என நம்புகிறோம். //

நம்பிக்கைத்தான் வாழ்க்கையே. பாதாள சாக்கடை எப்போ வரும் என்று தெரியவில்லையே? எனக்குத் தெரிஞ்சு 5 வருஷமா போட்டுகிட்டே இருக்காங்க.. :-))

கார்த்திகேயபுரம் சற்று பரவாயில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீ said...
பல மாதங்கள் கழித்து வந்தாலும் ,உருப்படியான இடுகை.நலமா? //

நன்றி ஸ்ரீ. மிக்க நலம். அரவிந்த உங்களை மிகவும் விசாரித்தார்.

இராகவன் நைஜிரியா said...

// ராமலக்ஷ்மி said...
//புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.//

உண்மைதான். அவசியமான பதிவு.
//

நன்றி ராமலக்ஷ்மி..

இராகவன் நைஜிரியா said...

// அஹமது இர்ஷாத் said...
இருப்பை நிலைநாட்டிட்டீங்க‌ண்ணே.. //

நன்றி. உங்க சொல் பேச்சு கேட்டுட்டேன் பார்த்தீங்களா. நண்பேண்டா..

இராகவன் நைஜிரியா said...

// Kalidoss said...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. //

நன்றி காளிதாஸ் ஐயா.

உங்களுக்கும் எங்கல் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// polurdhayanithi said...
கார்ப‌ரேச‌ன்காரர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்?
//

மில்லியன் டாலர் கேள்வி. மடிப்பாக்கம் இருப்பது இந்தியாவில்... அதுவும் தமிழகத்தில்... அத மறந்துட்டீங்களே.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பொறுப்பான இடுகை,ராகவன்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,


ஆர்.ஆர்.ஆர்.

மதுரை சரவணன் said...

நான் தற்போது பெங்களூரில் உள்ளதால் மடிபாக்கம் சென்று தங்கள் கருத்து உண்மை என்பதை உணர்ந்தேன். சமூக அக்கறையுள்ள பதிவு. தம்பி அரவிந்தை கேட்டதாக கூறவும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

A relevant issue showcased.. But don't know how far it will reach to the authorities.

Part Time Jobs said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

Gayathri said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

கண் கெட்டபிறகு சூரிய நம்ஸ்காரம் செய்ய முயற்சிக்காமல் உடனடி நட்வடிக்கை அவசியம்.

DrPKandaswamyPhD said...

நலமா?

admn said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

ஜோதிஜி திருப்பூர் said...

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

அண்ணே, நலமா?

Guna said...

உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணா

Guna said...

உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணா

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_6.html