நண்பர் கிருஷ்ணன் இப்போது தொலைபேசியில் பேசினாலும், ராகவா உன்னை தினமும் காலையில் நினைத்துக் கொள்வேன் என்பார்.
காரணம் தெரிய வேண்டுமா..
இதைப் படித்து பாருங்கள்..
நானும் நண்பர் கிருஷ்ணனும் ஓசூரில் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தோம். நண்பர் கிருஷ்ணன், General Manager க்கு Executive Secretary. நான் ஒரு ஜுனியர் கிளார்க். அப்போது அவரிடம் TVS Suzuki MotorCycle இருந்தது. எனக்கு வண்டி ஓட்ட பழகிக் கொடுத்ததும் அவர்தான்.
இருவர் வீடும் அடுத்து அடுத்து என்பதால், நாங்கள் இருவரும் அலுவலகம் சேர்ந்து சென்றுவிட்டு, திரும்புவோம்.
ஒரு நாள் அவருக்கு வேலை பளு அதிகமாக இருந்ததால், ராகவா வண்டிய ஓட்டு, நான் பின்னாடி உட்கார்ந்து கொண்டு வருகின்றேன் எனச்சொன்னார்.
நான் வண்டி ஓட்டிய போது மழைக்காலம். அதனால், சாயங்காலம், 6 மணிக்கே, வெளிச்சம் குறைவாக இருந்தது. நாங்கள் வரும் வழியில் ஒரு பாரஸ்ட் செக் போஸ்ட் உண்டு. நான் சற்று தொலைவில் இருந்து பார்த்த போது, செக் போஸ்ட் கிராஸ் பார் இல்லை. அது மூடிய நிலையில் இல்லை, திறந்த நிலையில் உள்ளதா எனப்பார்த்தேன் அதுவும் இல்லை. சரி எதோ ஒரு லாரி இடித்து விட்டு போய்விட்டது (சாத்ரணமாக நடக்கும் நிகழ்ச்சி) என நினைத்து அருகில் வந்த போதுதான் கவனித்தேன்.. அது 45 டிகிரி சாய்மானத்தில் உள்ளது என்பதை..
கிருஷ்ணா குனிஞ்சுக்கோ என சொல்லிவிட்டு, நான் குனிந்துவிட்டேன்.. அவரால் உடனே குனிய முடியவில்லை.. அவர் முகவாயில் அடிபட்டு இரண்டு பேரும் கீழே கிடந்தோம்..
எங்கள் நிறுவன உத்தரவுப்டி, நாங்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தப்பித்தோம், ஏனெனில் நான் கீழே விழுந்த போது, தலைகீழாக விழுந்தேன்.. ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த வைஸர் தெரித்து விழுந்தது..
நண்பருக்கு, முகவாயில் 6 தையல் போடப்பட்டது. நண்பர் தினமும் காலையில் முகச்சவரம் செய்யும்போது, சற்று கவனமாக செய்ய வேண்டியுள்ளதால், என்னை அப்படி சொல்லி கொண்டு இருக்கின்றார்.
- நண்பர்களே.. ஹெல்மெட் அவசியம் தேவை..
- அன்று நான் ஹெல்மெட் அணியாமல் சென்று இருந்தால், நிச்சயமாக இந்த பதிவு எழுதவோ பின்னூட்டம் போடவோ இன்று நான் இருந்திருக்க மாட்டேன்.
- அனுபவத்தில் சொல்கின்றேன்.. ஹெல்மெட் அணியுங்கள்.
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
- IT IS LAW OR NOT, PLEASE WEAR HELMET - WITH ISI STANDARD
42 comments:
\\ராகவா உன்னை தினமும் காலையில் நினைத்துக் கொள்வேன் என்பார்.\\
நீங்க நல்லவர் அண்ணே ...
அதான்
\\நண்பருக்கு, முகவாயில் 6 தையல் போடப்பட்டது\\
அப்புறம் எப்படிண்ணே உங்கள மறக்க முடியும்...
\\காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.\\
சரியாச்சொன்னீங்க
சரியானத சொன்னீங்க
உள்ளேன் அண்ணே
அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல பதிவு!
தலையில் ஹெல்மெட் போடவேணும் என்று சொன்னதை யாராவது காதில் போட்டுக்கொண்டால் நல்ல விஷயம்.நன்றி மறக்காத நண்பண் கிடைக்க இராகவன் நீங்க குடுத்து வச்சிருக்க வேணும்.
படிக்கிரவங்க கடபிடிச்சா நல்லது.
ஆனா எல்லோருக்கும் தியரி புரியல ப்ராக்டிக்கல் தான் புரியுது.
நல்லதொரு பதிவு
///அன்று நான் ஹெல்மெட் அணியாமல் சென்று இருந்தால், நிச்சயமாக இந்த பதிவு எழுதவோ பின்னூட்டம் போடவோ இன்று நான் இருந்திருக்க மாட்டேன். ///
நான் விபத்தில் விழுந்தபோது அம்மா என்று நன்கு பழக்கப்பட்ட குரல் ஒன்று அலறியதாய் ஞாபகம் எழுந்து பாந்ததபோது உடலெல்லாம் சிராய்ப்பு காயங்கள்..தலைதப்பியது ஹெல்மெட்டால்
நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா
அதனால் தான் சட்டத்தை மதித்து
பொறுப்பா ஹெல்மெட் போட்டுவந்திருக்கீங்க
உங்களுக்கு ஒன்றும் ஆகாது அண்ணா
உங்கள் நண்பர் அவர் வாழ்நாள் பூரா
உங்களை மறக்க முடியாதபடி
ஒரு அடையாளமும் கொடுத்திட்டீங்க
அங்கே தான் நீங்க நிக்கறீங்க
அண்ணே நல்ல கருத்து.....
நான் சின்ன பையன் என்பதால் தங்கம்பத்தி தெரியாது...அதான் போன பதிவுக்கு என்ன எழுதுறது அப்படின்னு தெரியாம விட்டு விட்டேன்.....
என்ன அண்ணே நைஜீரியா எப்படி இருக்கு?சீனா ,ஓசூர் பத்தி சொன்னீங்க நைஜீரியா பத்தியும் சொல்லுங்களேன்.....அங்கே ஏற்பட்ட ஏதாவது சுவையான அனுபவம்?
இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன்...நம்ம ஊரு சேலம்....நாளைக்கு ப்ராஜெக்ட் review.... review முடிஞ்ச உடனே நெட்டுக்கு போயிடுலாம்....அங்கே தான் ப்ரீ ....
நல்ல பதிவு... சூப்பர்...
//கிருஷ்ணா குனிஞ்சுக்கோ என சொல்லிவிட்டு, நான் குனிந்துவிட்டேன்.. அவரால் உடனே குனிய முடியவில்லை.. அவர் முகவாயில் அடிபட்டு இரண்டு பேரும் கீழே கிடந்தோம்..\\
நிலைமையை நினைத்து பார்த்தேன்.
சிரிப்பு வருது சிரிப்பு.
ஹாஹாஹா.....
அனுபவத்தில் செய்தி சூப்பர்
நல்லா, கோர்வையா எழுதி அசத்துறீங்க ஐயா! தொடரட்டும் உங்கள் எழுத்து!! வாழ்த்துகள்!!!
அண்ணே., உங்களுக்கு முதன் முதலில் சைக்கிள் கத்துக் கொடுத்தவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க ஆவலாய் இருக்கிறோம்!!!
payanulla pathivu ragav
//
அதிரை ஜமால் said...
\\ராகவா உன்னை தினமும் காலையில் நினைத்துக் கொள்வேன் என்பார்.\\
நீங்க நல்லவர் அண்ணே ...
அதான் //
அப்படிங்களா... தெரியாதே..
// உருப்புடாதது_அணிமா said...
உள்ளேன் அண்ணே //
வாங்க அணிமா..
அடிக்டி வந்திட்டு போங்க..
// கபீஷ் said...
நல்ல பதிவு! //
நன்றி கபீஷ்..
// ஹேமா, said...
தலையில் ஹெல்மெட் போடவேணும் என்று சொன்னதை யாராவது காதில் போட்டுக்கொண்டால் நல்ல விஷயம்.நன்றி மறக்காத நண்பண் கிடைக்க இராகவன் நீங்க குடுத்து வச்சிருக்க வேணும். //
ஏன் ஹெல்மெட் போடவில்லை என்று நூறு காரணம் சொல்லுவாங்க.. கேட்டு பாருங்களேன்.. நல்ல விஷயங்கள் கசக்கத்தான் செய்யும்.
// ஆ.முத்துராமலிங்கம் said...
படிக்கிரவங்க கடபிடிச்சா நல்லது.
ஆனா எல்லோருக்கும் தியரி புரியல ப்ராக்டிக்கல் தான் புரியுது. //
சில சமயங்களில், ப்ராக்டில் அறிவை விட அனுபவப் பட்டவர்கள் வார்த்தைகளை கேட்பது நல்லது.
// தங்கராசா ஜீவராஜ் said...
நான் விபத்தில் விழுந்தபோது அம்மா என்று நன்கு பழக்கப்பட்ட குரல் ஒன்று அலறியதாய் ஞாபகம் எழுந்து பாந்ததபோது உடலெல்லாம் சிராய்ப்பு காயங்கள்..தலைதப்பியது ஹெல்மெட்டால் //
உங்களுக்கு தெரிந்தவர்களிடம், ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்துங்கள் நண்பரே
நன்றி ரம்யா..
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
// coolzkarthi said...
என்ன அண்ணே நைஜீரியா எப்படி இருக்கு?சீனா ,ஓசூர் பத்தி சொன்னீங்க நைஜீரியா பத்தியும் சொல்லுங்களேன்.....அங்கே ஏற்பட்ட ஏதாவது சுவையான அனுபவம்? //
நைஜிரியா இப்போதானே வந்தேன். அதனால சொல்றாப்பல அனுபவம் ஒன்றும் இல்லை.
பின்னால் வரும் போது நிச்சயம் எழுதுகின்றேன்
// Mahesh said...
நல்ல பதிவு... சூப்பர்... //
நன்றிங்க..
// வேத்தியன் said...
//கிருஷ்ணா குனிஞ்சுக்கோ என சொல்லிவிட்டு, நான் குனிந்துவிட்டேன்.. அவரால் உடனே குனிய முடியவில்லை.. அவர் முகவாயில் அடிபட்டு இரண்டு பேரும் கீழே கிடந்தோம்..\\
நிலைமையை நினைத்து பார்த்தேன்.
சிரிப்பு வருது சிரிப்பு.
ஹாஹாஹா..... //
இன்னிக்கும் நாங்க ரெண்டு பேரும் நேரில் பார்க்கும் போது, இந்த நிகழ்ச்சியை நினைத்து சிரித்துக் கொள்வோம்
// குடுகுடுப்பை said...
அனுபவத்தில் செய்தி சூப்பர் //
நன்றி குடுகுடுப்பை...
// பழமைபேசி said...
நல்லா, கோர்வையா எழுதி அசத்துறீங்க ஐயா! தொடரட்டும் உங்கள் எழுத்து!! வாழ்த்துகள்!!! //
அப்படிங்களா.. !! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..
// muru said...
அண்ணே., உங்களுக்கு முதன் முதலில் சைக்கிள் கத்துக் கொடுத்தவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க ஆவலாய் இருக்கிறோம்!!! //
ஆஹா அவரை தேடணும்..
சிறு வயது நண்பர்கள் இப்போது எங்கு உள்ளனர் எனத்தெரியவில்லை..
// sayrabala said...
payanulla pathivu ragav //
நன்றி கடல் புறா..
அனுபவப்பட்டவங்க சொன்னா ஏத்துக்கிட்டா நல்லது. இல்லே நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்றவங்களை நாம என்ன செய்யமுடியும். ஓதுறதை ஓதுவைப்போம். என்ன நான் சொல்றது...
நல்ல பதிவு திரு ராகவன்!
நன்றி!
என் உறவுக்காரரின் கோர மரணமும் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் தான் நடந்தது. அவரது குடும்பம் இன்று நிர்கதியாய் நிற்கிறது. குடும்பத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் எவராயிருப்பினும் தனது உயிரைப் பற்றி சிறிதாவது கவலைப் படுவார்கள். விட்டேத்தியாய் திரிபவர்கள் தானும் கெட்டு மற்றவர்களையும் நோகடிப்பார்கள்.
உங்கள் பதிவு அனைவருக்கும் பாடமான ஒன்று.
ராகவன் நானும் ஒரு பக்கம் அரம்பித்துள்ளேன் ஆனால் இருவரினதும் நோக்கம் வேறு. ஜாலியாக எழுதுகிறீர்கள். நைஜீரியா வாழ்கையை பற்றியும் எழுதுங்கள். நான் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறேன் ஒரு காலத்தில் சம்பியாவில் இருந்தேன்
தலைகணம் வேண்டாம் என்பார்கள், ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டால் தலைக்கு ’கணம்’தேவைதான் போல் இருக்கிரது இராகவன் அண்ணா.
வணக்கம் அண்ணே..நீங்க சொல்லி நம்ம மக்கள் ஹெல்மெட் போடுவாங்கன்னு நினைக்கறீங்க...
பொங்கல் வாழ்த்துக்கள்...
இல்லை இல்லை ...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இல்லை இல்லை...
ஐயோ எப்படி வாழ்த்து சொல்றதுன்னு புரியலையே...
அண்ணே டி வி எஸ்லயா இருந்தீங்க?
எனக்கு அதுதான் தாய்க்கழகம்.. !!
மறக்க முடியாத ஊரு ஹோசூர்..
Post a Comment