Monday, December 29, 2008

நானும், விகடனும்

நான் 1996 முதல் 2001 வரை சைனாவில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கோ புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு.அங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை.

அப்போதுதான் தெரிந்தது,  ஆனந்த விகடனுக்கு, சந்தா செலுத்தினால், வெளி நாட்டு வாசகருக்கு அஞ்சலில் அனுப்பி வைப்பார்கள் என்று.  என்ன நான் இருந்த இடத்திற்கு விகடன் அனுப்பிய நாளில் இருந்து 14வது நாள் தான் கிடைக்கும்.

நான், தங்கமணிக்கு போன் போட்டு, விகடன் ஆபிஸில் போய் பணம் கட்டிவிட்டு வாம்மா எனச் சொன்னேன்.

அவரும் பணம் கட்டி விட்டு வந்தார். எனக்கும் விகடன் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. முதல் இதழ் வந்த்து. கவரில் என்னுடைய பேர், விலாசம்,  ஐடி நம்பர், மற்றும் expiry date என்றும் இருந்தது.

நான் அவர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பினேன்.  Expiry date என்று போடாதீர்கள், அதற்கு பதிலாக Valid up to  எனப்போடுங்கள் என்று.

நம்பினால் நம்புங்கள்,  அதற்கு பின் வந்த 4 வது விகடன் கவரில் Valid upto என்றுதான் போட்டு இருந்தார்கள்.

நான் அங்கு இருந்தவரை விகடனுக்கு பணம் கட்டி வாங்கிக்கொண்டு இருந்தேன். அங்கு நல்ல மழை பெய்த சம்யம், இரண்டு வாரங்கள் எனக்கு விகடன் கிடைக்கவேயில்லை.  நான் திரும்பவும் ஒரு இ-மெயில் அனுப்பிய போது, அவர்கள் உடனே இரண்டு புத்தகங்களையும் அனுப்பிவிட்டார்கள்.  

என் அனுபவத்தில், விகடன், என்றுமே அவர்கள் வாசகர்களை மதிப்பவர்கள்.

இப்போ விகடன்.காம் பணம் கட்டி படித்து கொண்டு இருக்கின்றேன்.  இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே...

இந்த நினைவலைகளை தூண்டி, என்னை எழுத வைத்த வால் பையனுக்கு நன்றி.
அப்படியே இதைப்போய் படியுங்களேன்..


குடுகுடுப்பை அவர்கள் சொன்னதை இங்கு சேர்த்துள்ளேன்...  யாருக்காவது சரியான காரணம் தெரிந்தால் சொல்லவும்

Blogger குடுகுடுப்பை said...

எனக்கு தெரிந்தவரை சரிதான், இப்போ விகடன் லின்ங் சில நெரங்களில் லேட்டாகுது ஏன்னு தெரியல


37 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் மொதல் போனி

நசரேயன் said...

account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம், இதை சொல்லிட்டேன்னு ஆட்டோ எடுத்து கொண்டு வர வேண்டாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

இருங்க இதுக்கு பேரு தான் பின்னூட்ட முடிசெவிக்கி தனம்

http://urupudaathathu.blogspot.com/ said...

இருங்க இப்போ பதிவ படிச்சிட்டு வரேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம்///

நீங்களும் என்னை மாதிரி தானா?
இது தெரியாம போச்சே

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே அடுத்த தபா நான் ஊட்டுக்கு வரும் போது(user id, password) மறக்காம குடுங்க..

குடுகுடுப்பை said...

எனக்கு தெரிந்தவரை சரிதான், இப்போ விகடன் லின்ங் சில நெரங்களில் லேட்டாகுது ஏன்னு தெரியல

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
நான் தான் மொதல் போனி //

ஆமாம் நீங்க தான் முதல் வருமை..

வருக.. வருக..

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
இருங்க இப்போ பதிவ படிச்சிட்டு வரேன் //

இப்படியெல்லாம் பண்ணலாமா.. படிக்காமயே பின்னூட்டமா.. ரொம்ப தப்பு

இராகவன் நைஜிரியா said...

//
நசரேயன் said...
account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம், இதை சொல்லிட்டேன்னு ஆட்டோ எடுத்து கொண்டு வர வேண்டாம் //

ஏங்க இப்படியெல்லாம் வெளிப்படையாவா கேக்கிறது..

அப்புறம் விகடன்ல என்னோட யூசர் ஐடி ய கட் பண்ணிட மாட்டாங்க

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...
எனக்கு தெரிந்தவரை சரிதான், இப்போ விகடன் லின்ங் சில நெரங்களில் லேட்டாகுது ஏன்னு தெரியல //

ஏகப்பட்ட இமேஜ் டவுன் லோட் பண்ண வேண்டியிருப்பதால் லேட்டாகுதுன்னு நினைக்கின்றேன்.

புது புக் அப்டேட் பண்ணவுடன் ஓப்பன் பண்ணாலும் டைம் ரொம்ப எடுக்குது.

மேலும் இது இங்குள்ள internet connection speed அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. நீங்க சொன்னதற்கு பிறகு தான் அது வேற ப்ராப்ளம் என்று.

விகடன் இதை கவனிப்பார்கள் என நினைக்கின்றேன்.

நட்புடன் ஜமால் said...

\\என் அனுபவத்தில், விகடன், என்றுமே அவர்கள் வாசகர்களை மதிப்பவர்கள்.\\

உண்மைதான் ...

ஆனாலும் ...

நிறைய சொல்லனும் பிறகு வர்றேன்.

நட்புடன் ஜமால் said...

\\நம்பினால் நம்புங்கள்,\\

உங்களை நம்பாமலா ...

நட்புடன் ஜமால் said...

\\இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. \\

உண்மை உண்மை ...

கணினி உலகத்தில் நாம் இழந்தது பல

அதில் இதுவும் ஒன்று

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

//நசரேயன் said...

account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம்///

நீங்களும் என்னை மாதிரி தானா?
இது தெரியாம போச்சே\\

ஒரு கூட்டனி அமைக்கலாம் போல

பழமைபேசி said...

////நசரேயன் said...

account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம்/////

நானும்...இஃகிஃகி!

g said...

பதிவை நன்கு படித்தாயிற்று. பின்னூட்டம் போட்டாயிற்று.

g said...

பதிவை நன்கு படித்தாயிற்று. பின்னூட்டம் போட்டாயிற்று.

புதியவன் said...

//இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே...//

மிகவும் சரியே...

இராகவன் நைஜிரியா said...

// அதிரை ஜமால் said...
\\என் அனுபவத்தில், விகடன், என்றுமே அவர்கள் வாசகர்களை மதிப்பவர்கள்.\\

உண்மைதான் ...

ஆனாலும் ...

நிறைய சொல்லனும் பிறகு வர்றேன்.//

வாங்க ஜமால்.. நீங்க சொல்றத கேட்கணுமே.. எப்ப வரபோறீங்க

இராகவன் நைஜிரியா said...

// அதிரை ஜமால் said...
\\நம்பினால் நம்புங்கள்,\\

உங்களை நம்பாமலா ... //

உங்களுக்கு வேற வழி கிடையாது..
நான் சொல்றத நம்பித்தான் ஆகவேண்டும்

இராகவன் நைஜிரியா said...

// அதிரை ஜமால் said...
\\இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. \\

உண்மை உண்மை ...

கணினி உலகத்தில் நாம் இழந்தது பல

அதில் இதுவும் ஒன்று //

நல்லா சொன்னீங்க நண்பரே

இராகவன் நைஜிரியா said...

பழமைபேசி said...
////நசரேயன் said...

account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம்/////

நானும்...இஃகிஃகி! //

வாங்க பழமைபேசி..

இரண்டு மூன்று பின்னூட்டங்களில் சும்மா சிரிச்சிட்டு போயிடுறீங்க..

வேறு ஒன்றும் சொல்ல கூடாதா?

இராகவன் நைஜிரியா said...

// ஜிம்ஷா said...
பதிவை நன்கு படித்தாயிற்று. பின்னூட்டம் போட்டாயிற்று. //

நன்றி ஜிம்ஷா... இரண்டு தடவை படிச்சீங்க போலிருக்கு.. இரண்டு தடவை ஒரே பின்னூட்டத்தை போட்டு இருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// புதியவன் said...
//இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே...//

மிகவும் சரியே... //

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புதியவன் அவர்களே

coolzkarthi said...

நானும் விகடன் ரசிகன் என்பதை சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்....

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...
நானும் விகடன் ரசிகன் என்பதை சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.... //

வருகைக்கு நன்றி கூல்ஸ்கார்த்தி

Mahesh said...

நல்ல பதிவு..... எனக்கு account username,password எல்லாம் கேட்டு உங்களை சங்கடப்படுத்த மாட்டேன்...

(ஏற்கெனவே ஒருத்தர் கடன் குடுத்துட்டாரு... ஹி ஹி)

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
நல்ல பதிவு..... எனக்கு account username,password எல்லாம் கேட்டு உங்களை சங்கடப்படுத்த மாட்டேன்...

(ஏற்கெனவே ஒருத்தர் கடன் குடுத்துட்டாரு... ஹி ஹி) //

வாங்க மகேசு.. எப்படியிருக்கீங்க..

RAMYA said...

//
இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே...//

அப்படியாண்ணா!!!!!
நீங்க விகடன் அனுதாபியா
எனக்கு சில அதிர்ப்தி
விகடன் மேல் உண்டு
ஆனால் உங்களுக்கு சரியா
இருக்குன்னு நினைக்கிறேன்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இருங்க இதுக்கு பேரு தான் பின்னூட்ட முடிசெவிக்கி தனம்

//

என்னா இது யாரை திட்டறீங்க ???

RAMYA said...

//
நசரேயன் said...
account username,password கொடுங்க, நான் ஓசியில தான் படிச்சு பழக்கம், இதை சொல்லிட்டேன்னு ஆட்டோ எடுத்து கொண்டு வர வேண்டாம்

//


இதெல்லாம் யாருக்கும் குடுக்காதீங்க அண்ணா

பழமைபேசி said...

மிக்க நன்றி ஐயா!

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

இராகவன் நைஜிரியா said...

// TamilBloggersUnit said...
happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது //

Dear TamilBloggers Unit

Thanks for your new year greeting.

Kindly advise me how to join with TamilBloggers, as I am new to the blogspot

வால்பையன் said...

பெரும்பாலும் நல்ல அனுபவங்களே அமைந்திருகிறது!

இதற்கு நான் காரணமாக இருந்தேன் என்று குறிப்பிட்டதற்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
பெரும்பாலும் நல்ல அனுபவங்களே அமைந்திருகிறது!

இதற்கு நான் காரணமாக இருந்தேன் என்று குறிப்பிட்டதற்கு நன்றி //

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.