என்னுடைய விடுமுறையில் பல பதிவர்களையும் சந்தித்தேன். நண்பர்கள் பலரையும் சந்தித்தது மிக மிக சந்தோஷமாக இருக்கின்றது. அவர்களின் பாசம் அளவிட முடியாதாது.
நிறைய நண்பர்களைச் சந்தித்தாலும், பல நண்பர்களை சந்திக்கமுடியாமல் போனது மிக வருத்தமாகத்தான் இருக்கின்றது.
சந்தித்த நண்பர்களைப் பற்றியும் அவர்கள் எனக்கு உதவியதும் நான் பாச மழையில் நனைந்ததும் ...
ஜூன் 21, 2009 - காலை 7.30 மணி
இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே, மெயில் மூலம் தம்பி சரவணன் (குசும்பன்), அண்ணே துபாய் வந்தவுடன் என்னை அழையுங்கள் என்றுச் சொல்லி அவரின் மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். அவரிடம் எனக்கு தேவையான உதவிகளைச் செய்யச் சொன்னவர் அன்புத்தம்பி அபி அப்பா.
இவரைத்தவிர தம்பி அபுவும் தன்னுடைய மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். ஆனால் அவர் அப்போது இந்தியா சென்று இருந்தார், நான் வருகின்றேன் என்ற காரணத்திற்காகவே அவசரம், அவசரமாக துபாய் திரும்பினார்.
துபாய் விமான நிலையத்தில் இறங்கி, குடியுரிமை பரிசோதனைகளை முடித்துவிட்டு, பின் அவர்கள் கொடுத்த வண்டியில் Pearl Residence ஐ அடையும் போது மணி காலை 9.30. சற்று இளைப்பாறிவிட்டு, தம்பி சரவணணை அழைத்தவுடன், அவர் கேட்ட முதல் கேள்வி அண்ணே ப்ரேக்பாஸ்ட் ஆச்சா என்று தான்.
இல்லை என்றவுடன், நான் வரும்போது இட்லி வாங்கி வருகின்றேன். அண்ணி தயிர் சாதம் வேண்டும் என்று சொன்னவுடன், அதையும் வாங்கி வருகின்றேன் என்றார். சரியாக 30 நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்றவர், 29 நிமிடத்தில் அங்கு இருந்தார். கையில் டிபனுடன்.
இதற்கிடையில் நான் தம்பி அபி அப்பா அவர்களை அழைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. அரவிந்த் கூட நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.. அரவிந்த்க்கு அவர் கூட பேசியதில் நிரம்ப சந்தோஷம்.
அண்ணி தங்க வளையல் வாங்கப் போகவேண்டும் என்றவுடன், அரவிந்தையும் கூட்டிக் கொண்டு, கோல்ட் சூக்கிற்கு உடனே அழைத்துச் சென்றார்.
இதற்கு இடையில் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, நான் வந்த விவரத்தை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு, அனைவரையும் மாலை 6 மணிக்கு Pearl Residence க்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அங்கு அண்ணி வளையல் வாங்கும் போது நடந்தவை உங்களுக்காக..
முதல் கடையில் :
சரவணன் : அண்ணி இங்கு தங்கம் நல்லா இருக்கும். எடைச் சரியாக இருக்கும்.
அண்ணி : வளையல் மாடல் காண்பிக்கச் சொல்லுங்க.
சரவணன் : எவ்வளவு பவுன் அண்ணி வாங்கப் போறீங்க..
அண்ணி : 4 பவுன்
சரவணன் : என்ன அண்ணி இது அண்ணன் பத்து பவுன் என்று சொல்லிகிட்டு இருக்கார் .. நீங்க 4 பவுன் என்று சொல்கின்றீர்கள்.
நான் மனதிற்குள் : (போட்டு கொடுக்கின்றாயா தம்பி..!! - நல்லாயிரு அப்பு)
அண்ணி : அவர் அப்படித்தான் சொல்லுவார்... 4 போதும்
ஆனால் அந்தக் கடையில் அண்ணிக்குப் பிடித்த டிசைன் கிடைக்கவில்லை.
அதனால் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்...
சரவணன் : அண்ணி இங்கு குவாலிட்டி நல்லா இருக்கும் வாங்கிகுங்க.
அண்ணி அங்கு ஒரு டிசைனை செலக்ட் பண்ணி இது நல்லா இருக்கு வாங்கிகலாம் என்றுச் சொன்னாங்க.
சரவணன் : 6 வளையல் வாங்கிகுங்க
அண்ணி : 2 போதும்பா
சரவணன் : என்னங்க அண்ணி இது... அண்ணனுக்கு செலவு வைக்க மாட்டிங்க போலிருக்கு..
அண்ணி : வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொள்ளத்தானே ... இரண்டு வளையல் போதும்.
சரவணன் : இல்லீங்க அண்ணி, இன்னும் இரண்டு சேர்த்து 4 வளையலா வாங்குங்க...
இப்படியாக அவங்க பேசி 50 கிராமில் 4 வளையல் வாங்கிட்டாங்க.
பின்னர் தம்பி எங்களை ரூமில் இறக்கிவிட்டுவிட்டு, சாயங்காலம் 6 மணிக்குப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டார்...
சரவணன் எங்களை இறக்கிவிட்டு சென்றபின் அண்ணி சொன்ன வார்த்தைகள்..
” பாசத்தின் மறு பெயர் சரவணன் “
சாயங்காலம் 6 மணி...
தொடரும்....

41 comments:
மிகவும் பாசம் வழிகிறதே அண்ணா
தொடருங்க அண்ணே.... படிக்க காத்திருக்கோம்...
/பாசத்தின் மறு பெயர் சரவணன் /
ரிப்பீட்டேய்...
/"பாசப் பறைவைகள் - பாகம் 1"/
அண்ணே...ஒரு 100-பாகம் வரணும்:)
தொடருங்க இராகவன்
//இப்படியாக அவங்க பேசி 50 கிராமில் 4 வளையல் வாங்கிட்டாங்க.
//
சரவணன் ரொம்ப நல்லவரு....
வாழ்க சரவணன்.
அண்ணே டெய்லி ஒரு பாகம் போடுங்க
வருடம் முழுதும் பதிவு போட்டவர்ன்னு பேர் கிடைக்கும்.
வணக்கம் சார்,
இன்றுதான் முதன்முதலாக உங்க வலைப்பூவை படிக்கிறேன்..... அதுவும் உங்கள் பெயருடன் நைஜீரியா என்று இருப்பதால் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு....(நானும் ஆப்பிரிகாவில் தான் கடந்த 6 வருடமாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் ( Mali, Benin, Ghana and Presently in Togo). இதுவரை நைஜீரியா வரும் வாய்ப்பு வரவில்லை.
நான் இன்னும் அனைத்து பதிவுகளையும் முழுமையாக படிக்கவில்லை...இதுவரை படித்ததில் எது உன்னதம் என்ற பதிவு என்னை மிகவும் பாதித்துவிட்டது..........அதுவும் இந்த இரு பாட்டிகளின் முகம் என் கண்ணை விட்டு மறைய மறுக்கிறது.
இதுபோன்ற விழிப்புணர்வு தரும் பதிவுகளை தொடருங்கள்.
நன்றி................
வணக்கங்களுடன்
ந. சண்முகராஜ் . (Lome - Togo) West Africa. shan.kns@gmail.com
//சரவணன் எங்களை இறக்கிவிட்டு சென்றபின் அண்ணி சொன்ன வார்த்தைகள்..
” பாசத்தின் மறு பெயர் சரவணன் “//
மூணாவது எபிசோடில் எனது பேர் வருமோ?
பண்ணினதெல்லாம் குசும்பன் கேரக்டரூ ஆனா சரவணன் சொல்லுறீங்க சரி அக்செப்ட் பண்ணிக்கிடறோம் ! :)
ஆஹா...ஆரம்பமாயிடுச்சா....நாங்கெல்லாம் எந்த எபிசோட்ல வர்றோம் ??
//அண்ணே டெய்லி ஒரு பாகம் போடுங்க //
ஆமாங்க...நாளைக்கு லெக் பீஸா பாத்து போடுங்க...
//சரவணன் எங்களை இறக்கிவிட்டு சென்றபின் அண்ணி சொன்ன வார்த்தைகள்..
” பாசத்தின் மறு பெயர் சரவணன் “//
குசும்பன்-கிற பேரு சரியாத்தான் இருக்கு... பண்ணுறதெல்லாம் குசும்பு. இதுல அண்ணிக்கிட்ட நல்ல பேரு... ம்... நடக்கட்டும்.
//சரவணன் : என்ன அண்ணி இது அண்ணன் பத்து பவுன் என்று சொல்லிகிட்டு இருக்கார் .. நீங்க 4 பவுன் என்று சொல்கின்றீர்கள்.
நான் மனதிற்குள் : (போட்டு கொடுக்கின்றாயா தம்பி..!! - நல்லாயிரு அப்பு)
அண்ணி : அவர் அப்படித்தான் சொல்லுவார்... 4 போதும்
ஆனால் அந்தக் கடையில் அண்ணிக்குப் பிடித்த டிசைன் கிடைக்கவில்லை//
இதான் இடையில் கோரி ஊத்துரதா? (போட்டு கொடுப்பது)
இராகவன் நைஜீரியா அப்ப மற்ற பிளாக் பதிவுகளில் பார்த்திருக்கீறேன்.
இப்போது தான் படிக்க முடிந்தது.
எல்லாம் கமடியா இருக்கு.
பிளாக் மூலம் இப்படி ஒரு சந்திப்பு...எங்கிருந்தோ உள்ளவர்களை ஒன்று சேர்த்து இருக்கு...
ஆகா!
குடும்பத்தோடு பர்சேஸ் போகும் போது குசும்பனை கூட்டிட்டு போனா சொத்தை வித்துட்டு தான் எடுத்துகிட்டு போகணுமா!
குசும்பன் அங்கிள் மஞ்சு அக்காவுக்கும் இதே மாதிரி வாங்கி தருவிங்களா!?
அண்ணே! ஆரம்பமே அசத்தல். போட்டுத்தாக்குங்க. சென்னை சந்திப்பை கொஞ்சம் விரிவாகவே எழுதுங்கண்ணே!புகைப்படம் இருந்தால் அதையும் பதிவேத்துங்க.
அழகா எழுதி இருக்கீங்க... எனக்கு, அங்க நடந்தத நேர்ல பாக்குற மாதிரியே இருந்துச்சிங்க.. :)
பாசப்பறவைகள் - நெகிழ்ச்சியா இருக்கு அண்ணா. இந்த தொடர் இன்னும் நண்பர்களுக்கிடையில் உள்ள பாசத்தை மென்மேலும் அதிகரிக்கட்டும். அதிக இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்க அண்ணா.
பாசப் பறவைகள் தலைப்புல மிஸ்டேக் இருக்குண்ணே... பார்த்து சரி பண்ணுங்க!!
பாசம் 29 நிமிடத்தில் அங்கு வந்துட்டாரா, கையில் டிபனோட..?
எம்மாம் பாஸ்டு!!
நாங்க ஏதாவது கேட்டா, வருவாருருருரு... 29 நாள் கழிச்சு!
:-)
ஆரம்பமே நல்லா இருக்கு அண்ணே!! தொடர்ந்து பட்டைய கெளப்புங்க!
என்ன அண்ணாச்சி ஊர் திரும்பியாச்சா?
கொஞ்சம் ஓவராகவே எழுதி இருக்கீங்க நிஜமா கூச்சமாக இருக்கு!
உங்களையும் அரவிந்தையும் சந்தித்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!
//பாசம் 29 நிமிடத்தில் அங்கு வந்துட்டாரா, கையில் டிபனோட..?
எம்மாம் பாஸ்டு!! //
யோவ் கலை நாங்க எப்பொழுதும் கரீட்டா ஆஜர் ஆயிடுவோம், சிலரை போல் அங்கு ஒரு மணி நேரம் முன்னாடி போய் போற வர பிகரை எல்லாம் வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!:)))
வயதில் சிறியவந்தான்
இருத்தாலும் அண்ணா
என்று வாய் நிறைய
அழைக்க விரும்புகிறேன் தம்பி..
அருமை தொடருங்கள்
இந்தப் பயண பதிவு எப்ப போடுவீங்கன்னு நான் எதிர்ப்பார்த்துகிட்டிருந்தேன்.
எப்படியும் 10 பாகம் ஓடும்னு நெனைக்கிறேன்
:)))
தொடருங்கள் நல்லாயிருக்கே....
ஹாஹ...சரவணன் இம்புட்டு பாசக்காரரா..?
பத்தரமா போய்ட்டு பயண அனுபவங்கள எழுத ஆரமிச்சாச்சா..
இன்னும் ரெண்டு கடை பாத்திருந்தா இந்தியாவுக்கு நடந்துதான் வந்திருப்பிங்களோ..
உண்மையில் உங்களையெல்லாம் சந்தித்ததில் எங்களுக்குத்தான் ரொம்ப சந்தோசம்..
//
"பாசப் பறவைகள் - பாகம் 1"
//
ஒருநாள் நிகழ்வுகள நாலு இடுகையா போட்டாகூட..
கிட்டத்தட்ட 120 இடுகைகளுக்குமேல வருமே..
தொடருக்கு சனி, ஞாயிறு எல்லாம் விடுமுறை உண்டா..
நிஜம்மாவா சார்? நீங்க பத்து பவுன்னு சொல்லியும் 4 பவுன் போதும்னாங்க?
ஆஹா , வேலை எல்லாம் முடிச்சாச்சா .... இனி நம்ம வேலை தான் , பதிவு தான் ...போட்டு தாக்கு ... அன்னிக்கு என் நமஸ்காரங்கள் & அரவிந்துக்கு என் அன்பு
அம்புட்டுதான் முடுஞ்சுதா குசும்பரால
நானா இருந்தா இன்னும் ரெண்டு ஐட்டத்த இல்ல கூட்டி விட்டுருப்பேன்
வளவி மட்டுந்தானா அண்ணி மேட்சா ஒரு கம்மலு ஒரு மோதிரம் அப்டீன்னு பில்லைக் கூட்டி விட்டுருப்பேன்
நல்லாத் தான்யா பாசத்தக் காட்டுறாய்ங்க.
வண்டிய ஸ்டார்ட் பண்ணதுமே எம்புட்டு பொகை கிளம்புது ஆத்தீ...!
அடிய பின்னிவிடுங்க தூள்
அன்பின் இராகவன்
அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரையும் சந்தித்ததில். பொதுவாக என் துணவியும் ( பதிவர் தான் ) நான் இது மாதிரி எங்கு சென்றாலும் உடன் வருவார்கள். நமது சந்திப்பின் போது தவிர்க்க இயலாத காரணங்களினால் வர இயலவில்லை.
நான் வந்து கூறியவுடன் - கலந்து கொள்ள இயலாமைக்கு மிகவும் வருத்தப் பட்டார்கள்
நிறக் வீட்டில் அரவிந்தன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி அனைவரையும் கேட்டதாகக் கூறவும்.
நன்றி
தொடர்ந்து எழுதுங்கள்.
சரவணன் : என்ன அண்ணி இது அண்ணன் பத்து பவுன் என்று சொல்லிகிட்டு இருக்கார் .. நீங்க 4 பவுன் என்று சொல்கின்றீர்கள்
\\
சரவணன் நீங்க ரொம்பபபபபபபபப நல்லவரு
அ.மு.செய்யது said...
ஆஹா...ஆரம்பமாயிடுச்சா....நாங்கெல்லாம் எந்த எபிசோட்ல வர்றோம் ??
\\
நீங்களுமா.......?
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா
பாலோயர் ஆனதற்கு மிக்க நன்றி அண்ணா.. நானெல்லாம் ரெம்ப புதுசு'ணா.. தொடர்ந்து ஆதரவளியுங்கள்..
நல்ல பகிர்வு ராகவன் சார்
நாங்க தான் பார்க்க முடியவில்லை.
Post a Comment