Saturday, August 15, 2009

பாசப் பறவைகள் பாகம் - 2

ஜூன் 21 மாலை 6 மணி...

சரியாக மாலை 6.15... தம்பி சரவணன், தம்பி கலையரசன், அண்ணன் சுந்தராமன் மூவரும் வருகை தந்தனர்.

வரும் போதே கையில் இட்லி,வடை இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர். உபயம் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள்.

சிறிது நேரம் அரவிந்த் கூட உலக விவகாரங்களை அலசி கொண்டு, கிரிகெட் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.

பின்னர் நண்பர்களிடம் ஒரு கேமிராவும், சட்டையும் வாங்க வேண்டும் என்று சொன்னவுடன், அண்ணன் சுந்தர்ராமன் சாரதியாகவும், தம்பி சரவணன் வழி காட்டுபவராகவும், நான் துபை கட்டிடங்களைப் பாராக்குப் பார்ப்பவனாகவும், இப்படியாக ஒரு கடைக்கு அழைத்துச் சென்றனர்.

காமிரா கடைக்குப் போனதும், கலையரசனிடம், தம்பி நம்ப பட்ஜெட் 2500 திராம்ஸ் எந்த காமிரா நல்லா இருக்குமோ அதைப் பார்த்து வாங்கி கொடுங்க என்று சொன்னேன்.

உடனே, அண்ணன் ஜாக்கி சேகர் உபயோகப் படுத்திகின்ற மாதிரி ஒரு காமிராவைப் பார்த்தார். அண்ணே நீங்க ப்ரொபஷனல் போட்டோ கிராபரா, இல்லை அமெச்சூரா (இந்த மூஞ்சியைப் பார்த்தவுடன் ப்ரொபஷனல் போட்டோகிராபரா என்று கேட்க நினைத்தாரே அதுவே பெரிய விசயம்தான்) என்றார். போட்டோகிராபிக்கும் நமக்கு பல காத தூரம் தம்பி, அதனால் எது நல்ல காமிராவோ அதை வாங்கிக் கொடுங்க, ரொம்ப கேள்விகேட்காதீங்க அப்படின்னு சொன்னனேன்.

அண்ணே அப்படின்னா இந்த காமிரா உங்களுக்கு வேண்டாம். சாதாரண காமிரா போதும், அப்படின்னு சொல்லிட்டி, Sony, Canon, இப்படி பல காமிராவை பார்த்து, அந்த சேல்ஸ் மேனை ஒரு வழியாக்கி, அப்புறம் எல்லோரும் கலந்து பேசி, Canon Digitial IXUS 951S என்ற மாடலை 1000 திராம்ஸ்க்கு வாங்கி கொடுத்தார். அண்ணே மீதி பணத்துக்கு ஒரு விடியோ காம் எடுத்துகுங்க அப்படின்னு சொல்லி, Sony வாங்கலாமா, JVC வாங்கலாமா அப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, JVC வாங்குவது என்று முடிவு செஞ்சு, அதையும் வாங்கிகிட்டோம்.

கூட வந்து, ஒத்துழைத்து, ஒரு நல்ல காமிரா வாங்கிக் கொடுத்த தம்பி கலையரசனுக்கு நன்றிகள் பல. காமிராவைப் பார்த்த பலரும் (விசயம் அறிந்தவர்கள்) ரொம்ப நல்லா இருக்கு, சூப்பர் காமிரா என்று சொன்னார்கள். அந்த காமிராவில் எடுத்த படங்கள் அடுத்த இடுகைகளில் வரும்...

இந்த காமிரா வாங்கிக் கொண்டு இருக்கும் போதே அண்ணன் ஆசாத், தம்பிகள் கண்ணா, நாகா மூவரும் தங்கள் வருகையை கலைய்ரசனையும், சரவணனையும் தொலைப் பேசியில் அழைத்து சொல்லிவிட்டனர்.

அதனால் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்பினோம்.












பதிவர் சந்திப்பில் படங்கள் இல்லாமல் இருக்க கூடாதல்லவா... அதனால் தம்பி கலையரசன், நாகா பதிவில் இருந்து சுட்ட படங்கள்... (கலை & நாகா பர்மிஷன் இல்லாமல் போட்டதற்கு- மன்னிக்கவும்....)


அறைக்கு திரும்பியதும், பதிவர்கள் நாகா, ஆசாத், மற்றும் ப்ரதீப் வந்து அரவிந்த், தங்கமணி கூட பேசிகிட்டு இருந்தார்கள்.

நாங்க பேசிக் கொண்டு இருந்த போது தம்பி அபு அஃப்சர் வந்து கலந்து கொண்டார். துபாயில் இருந்து தம்பி ஜமால் கூட தொலைப் பேசியில் உரையாடிக் கொண்டு இருந்த போது, அண்ணே அரவிந்துக்கு என்னப் பிடிக்கும் என்று கேட்டார். நானும் சாதாரணமாக அரவிந்திற்கு கம்பூயட்டர் கேம்ஸ் பிடிக்கும் என்று சொன்னேன். அவர் தம்பி அபுகிட்ட சொல்ல, வரும்போதே, கேம்ஸ் சிடியும், சாக்லெட்டும் வாங்கிவந்துவிட்டார். அரவிந்த் தினமும் தம்பி அபுவை நினைக்காத நாளில்லை. நன்றி அபு.

பின்னர் வந்து இணைந்துக் கொண்டவர் எனது 25 வருடகால நண்பர் திரு ஸ்ரீதர் அவர்கள். பார்த்து பல வருடங்கள் ஆன போதிலும், ஒரே ஒரு தொலைப் பேசி செய்ததற்கு, வந்து பார்த்தார்.

சட்டை வாங்கவில்லை என்று சொன்னதுமே கண்ணாவும், கலையரசனனும் இருவரும் சென்று வெள்ளைக் கலரில் ஒரு சட்டை வாங்கி வந்தனர். நன்றிகள் பல. பணம் வாங்க மறுத்துவிட்டனர் தம்பிகள்.

நண்பர்கள் பலரும் பேசியதில், பொதுவாக பேசப்பட்ட விசயங்கள் தான் அதிகமிருந்தன. நைஜிரியாவில் வெயில் எப்படி, என்ன என்ன தொலைக் காட்சிகள் தெரிகின்றன, உங்க கூட தமிழர்கள் வேலை செய்கின்றனரா, உருப்புடாதது அணிமா எப்படி இருக்கின்றார் என்பன போன்ற விசயங்கள்தான்.

மேலும் பேசிய விசயங்களில், நமது வலைப் பதிவைப் பாதுகாப்பது எப்படி, கும்மி அடிப்பது எப்படி, உங்களால எப்படி இவ்வளவு பின்னூட்டம் போட முடிகின்றது (இது பெரிய விசயமே இல்லை... இடுகை எதுவும் போடவில்லை என்றால், போடத் தெரியவில்லை என்றால் பின்னூட்டம்தான் போட முடியும் !!!!)

இப்படியாக பேசிக் கொண்டே இருக்கும் போது, எல்லோருக்கும் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள் வாங்கி வந்திருந்த இட்லி, வடைக் கொடுக்கப்பட்டது.

நண்பர்கள் அனைவரும் விடைப் பெற முடிவு செய்த போது, அண்ணி சொன்ன வார்த்தைகள்...

“இந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்”

பின்னர் என்னிடம் சொல்லியது..

“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. கூடப் பிறந்தவர்கள் மாதிரி எவ்வளவு அன்பா, பாசமா இருக்காங்க எல்லோரும்”

பின்னர் அனைவரும் 8.30 க்கு விடைப் பெற்றுச் சென்றனர்...

வேலை நாளாக இருந்தாலும், தங்கள் வேலைக்களை முடித்துவிட்டு என்னைச் சந்தித்துச் சென்ற நண்பர்கள்

சரவணன்
கலையரசன்
சுந்தர் ராமன்
நாகா
ஆசாத்
கண்ணா
அபு அஃப்சர்
ப்ரதீப்

உங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் எங்கள் குடும்பத்தினரின் நன்றி, நன்றி, நன்றி.

எங்களுக்குத் தேவையான வண்டி 11.00 மணியளவில் வந்து துபை விமான நிலையம் வந்து, சென்னைக்கு ஜூன் 22, 2009 காலை 8.10 க்கு வந்துச் சேர்ந்தோம்...

ஓவர் டு சென்னை...

இந்தியாவில் பதிவர்களைச் சந்தித்ததுப் பற்றி...

அடுத்த பாகத்தில் பார்க்கலாமே..


தொடரும்...

53 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இராகவன் அண்ணா, நீங்கள் துபாய் வந்த போது நான் உடுமலை (சொந்த ஊர்) சென்றுவிட்டேன். உங்களைச் சந்திக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே! மீண்டும் எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க ஐயா... அடுத்த இடுகைக்காக காத்திருப்பில்....

பழமைபேசி said...

//ச.செந்தில்வேலன் said...
இராகவன் அண்ணா, நீங்கள் துபாய் வந்த போது நான் உடுமலை (சொந்த ஊர்) சென்றுவிட்டேன்.
//

சொல்லவே இல்லை?!

அறிவிலி said...

//அந்த காமிராவில் எடுத்த படங்கள் அடுத்த இடுகைகளில் வரும்...//


விடீயோ காமிராவில் எடுத்த விடீயோக்கள்?????

நட்புடன் ஜமால் said...

இந்த மூஞ்சியைப் பார்த்தவுடன் ப்ரொபஷனல் போட்டோகிராபரா என்று கேட்க நினைத்தாரே அதுவே பெரிய விசயம்தான்]]

உண்மை தானே அண்ணே.

தேவன் மாயம் said...

தங்களை மதுரையில் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்!!

அது ஒரு கனாக் காலம் said...

எங்களையும் பழய நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்

Cable சங்கர் said...

ரைட்டு.. ப்ளைட் லேண்டட் இன் சென்னை.. வெல்கம் டூ சென்னை..

SUFFIX said...

பாசங்கள் நெகிழவைக்கிறது உண்மையிலேயே. Keep it up!!

S.A. நவாஸுதீன் said...

படிக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.

கலையரசன் said...

//(கலை & நாகா பர்மிஷன் இல்லாமல் போட்டதற்கு- மன்னிக்கவும்....)//

என்னாதிது? நாங்க என்ன பிரபல பதிவர்களா? :-)

உங்களுக்கு இல்லாத புகைப்படங்களா? போட்டு தாக்குங்கண்ணே!!
அண்ணியையும், அரவிந்தையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்!

அப்துல்மாலிக் said...

ஆஹா அண்ணாத்தே மறுபடியும் சந்தித்தது போன்ற ஒரு பதிவு...

அர்விந்த்/அண்ணி சுகமா (நீங்க நல்லாயிருப்பீங்கனு தெரியும் ஹெ ஹெ)

//அண்ணி சொன்ன வார்த்தைகள்...
“இந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்”/

நிச்சயமா...தொடரும்

இராகவன் நைஜிரியா said...

நன்றி செந்தில்வேலன். அடுத்த தடவை ஊருக்கு போகும் போதும் துபை வழியாகத்தான் செல்வேன். அப்போதுப் பார்க்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி பழமைபேசி ஐயா...

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

பாசப்பறவைகள் உலகமெங்கும் இருக்கின்றன - சந்திக்கும் அந்த நேரங்கள் மனதிற்கு இனிமையாக இருக்கும் - அனைவரும் கூடிக் களிக்கும் நேரமது

மறக்க இயலாத நேரமது

இராகவன் நைஜிரியா said...

நன்றி அறிவிலி...

விடியோகாமில் எடுத்தவை எல்லாம் குடும்பப் படங்கள். அதனால் அதை வெளியிட முடியாத நிலையில் இல்லை.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜமால். என்னைப் பற்றி நல்லா புரிஞ்ச ஒரே தம்பி நீங்கதான்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி மருத்துவர் தேவன்.. எனக்கும் தங்களைச் ச்ந்திக்காதது குறித்து வருத்தம் தான்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி அண்ணன் சுந்தர்ராமன்...

இராகவன் நைஜிரியா said...

நிச்சயம் கேபிளாரே...

அடுத்த பாகம் எழுதிகிட்டு இருக்கேன்...

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஷபிக்ஸ்..
நன்றி நவாஸுதன்..
நன்றி கலையரசன்..
நன்றி அபு அஃப்சர்...

இராகவன் நைஜிரியா said...

நன்றி சீனா அய்யா...

தங்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு..

அதுவும் அடுத்த இடுகைகளில் வருங்க

ஹேமா said...

இராகவன்,உண்மையில் அருமை விடுமுறைக்குப் போய்வந்த அந்தத் தருணங்களைப் பதிவாக்குகிறீர்கள்.
சந்தோஷமாக இருக்கு.
10 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும்போது கூட இனிக்கும்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஹேமா. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்

butterfly Surya said...

கலக்குங்க.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

அரவிந்த் நலமா..?? வாழ்த்துகள்.

Mahesh said...

மறக்க முடியாத விடுமுறை... உங்களுக்கும் சந்தித்த எல்லாருக்கும்..

அந்த முதல் படத்துல நடுவுல கரன் தாபர் மாதிரி ஒருத்தர் நிக்கறாரே... யார் அவரு? :))))))))))

rose said...

aduththa pathivaiyum seekaram podunga anna

இராகவன் நைஜிரியா said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார். அரவிந்த் மிக்க நலம்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி மகேஷ்...

அந்த நடுவுல நிற்பவர் யாருன்னு தெரியலையா...

அய்யோ என்னாது இது...

இராகவன் நைஜிரியா said...

நன்றி ரோஸ்

அ.மு.செய்யது said...

பதிவர் சந்திப்பு என்றாலே சுவாரஸியத்திற்கும் அன்பிற்கும் குறை இருக்காது.

அதுவும் நீங்க வந்திருக்கீங்கன்னா கேக்கவா வேணும்.

நிஜமா நல்லவன் said...

/இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜமால். என்னைப் பற்றி நல்லா புரிஞ்ச ஒரே தம்பி நீங்கதான்./


எங்கப்பா போனீங்க மத்த தம்பிங்க எல்லாம்...ராகவன் அண்ணா கூட சண்டை போட ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சி இருக்கு:)))))

நிஜமா நல்லவன் said...

/அ.மு.செய்யது said...

பதிவர் சந்திப்பு என்றாலே சுவாரஸியத்திற்கும் அன்பிற்கும் குறை இருக்காது.

அதுவும் நீங்க வந்திருக்கீங்கன்னா கேக்கவா வேணும்./

ரிப்பீட்டு!

நிஜமா நல்லவன் said...

/கூட வந்து, ஒத்துழைத்து, ஒரு நல்ல காமிரா வாங்கிக் கொடுத்த /

அண்ணே..அந்த காமெராவை கூட ஒரு படம் பிடித்து போட்டு இருக்கலாம்!

நேசமித்ரன் said...

:)

Present Sir....!

From Dubaai Air Port

:)

குடந்தை அன்புமணி said...

தங்களை வீட்டிலும், பதிவர் சந்திப்பிலும் சந்தித்து பேசினாலும் இன்னும் பேச வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதுபோலவே எண்ணுகிறேன்...

அண்ணி, அரவிந்தை விசாரித்ததாகச் சொல்லவும். இந்த நட்பு என்றென்றும் நீங்காது.

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் அருமை..:-)))))

வால்பையன் said...

முதல் போட்டோவுல உங்களுக்கு வலது பக்கம் நிக்கிறவர்! நம்ம ஊர்
”சாம் ஆண்டர்சன்” மாதிரியே இருக்கார்!

सुREஷ் कुMAர் said...

துபாய் அனுபவத்தின் இரண்டாம் பகுதியும் சூப்பர் அண்ணா..
இங்கவந்தப்போ விடியோ காம்'அ காட்டவே இல்லையே..

உண்மையில் பதிவர்களின் அன்பு நெகிழத்தான் வைக்கிறது..
பகிர்வுக்கு நன்றி அண்ணா..

(கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.. பிளாக்க கொஞ்சநாளைக்கு log off பண்ணிவெச்சிருக்கேன்..அதான் லேட்.. சீக்கிரம் பிளாக் உலகிற்கு திரும்ப வந்திடுவேன்.. அதுவரைக்கும் பொறுத்துகோங்க.. )

நிஜாம் கான் said...

//இடுகை எதுவும் போடவில்லை என்றால், போடத் தெரியவில்லை என்றால் பின்னூட்டம்தான் போட முடியும் !!!!)//

அண்ணாச்சி! நீங்க நெசமாவே ரொம்ப நல்லவர். உண்மைய டப்புன்னு சொல்லிப்புட்டியலே! ஹி..ஹி.. இது நம்மளயும் குறிக்கும். அதான்.

நிஜாம் கான் said...

//அண்ணி சொன்ன வார்த்தைகள்...
“இந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்” //

அண்ணாச்சி! அண்ணியின் இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துக்கள்.அது மாறாது, அழியாது.

நிஜாம் கான் said...

//“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. கூடப் பிறந்தவர்கள் மாதிரி எவ்வளவு அன்பா, பாசமா இருக்காங்க எல்லோரும்” //

அண்ணாச்சி! எங்கயோ இருக்குற உங்களயும் எங்கயோயோ இருக்கற நம்ம பதிவர்களையும் (நானுந்தான்) உடன்பிறப்பாய் மாற்றிய இந்த கூகுல் சேவைக்குத் தான் நாம நன்றி சொல்ல வேனும்.

நிஜாம் கான் said...

// நைஜீரியாவில் என்ன என்ன தொலைக்காட்சிகள் தெரிகின்றன ?//

அண்ணாச்சி!என்ன என்ன தொலைக்காட்சிகள் சொல்லுங்க. நம்ம கலைஞர் தொலைக்காட்சி தெரிகிறதா?

இராகவன் நைஜிரியா said...

நன்றி செய்யது..

தம்பி நல்லவரே.. என்னாது இது எங்கூட சண்டையா... சரண்டர்... என்னைப் பற்றி தெரிந்த தம்பிகள் இருவரில் முதல்வர் நீங்கள் இரண்டாமவர் ஜமால்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி அன்புமணி...

அடுத்த தடவை உங்களுடன் நிறைய நேரம் இருக்க முயற்சிக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி தம்பி நேசமித்ரன். சௌகர்யமாக ஊருக்குப் போய் சேர்ந்தீர்களா?

இராகவன் நைஜிரியா said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி सुREஷ் कुMAர்

இராகவன் நைஜிரியா said...

நன்றி நிஜாம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

இங்கு வருவது இரண்டே இரண்டு தமிழ் சேனல்கள் தான். ஒன்று TBO மற்றது ... சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள்... ஜெயா டிவி. கலைஞர் டிவிகளோ, சன் டிவியோ எதுவும் இங்குத் தெரியாது.

நீங்க சொன்ன மாதிரி இந்த கூகுள் சேவைக்கு நாம் மிக்க நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

இது நம்ம ஆளு said...

கலக்குங்க.

vasu balaji said...

மணியனின் இதயம் பேசுகிறது கவனம் வருகிறது.!

geethappriyan said...

இராகவன் அண்ணா,உங்களைச் சந்திக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே! மீண்டும் நீங்கள் துபாய் வரும்போது சந்திக்கிறோம்..
:)
voted

குசும்பன் said...

அண்ணே அந்த கலையரசன் வடைய ஆட்டைய போட்டத சொல்லவே இல்ல:)