ஜூன் 24, 2009
சிலப் பதிவர்களைச் சந்திக்கலாம் என்று எண்ணி, என்னிடம் கைவசம் இருந்த தொலைப் பேசி எண்களை வைத்து பதிவர் நண்பர்களை ஜூன் 24 காலையில் இருந்து கூப்பிட ஆரம்பித்தேன். அப்போது தங்கச்சி ரம்யா இன்று டின்னர் சாப்பிட எதாவது ஹோட்டல் போகலாம் என்று சொன்னார்கள். தங்கச்சி ரம்யாவிடம் எந்த ஹோட்டல் போகலாம் என்று விசாரித்து, அவர்கள் சொன்ன 4 ஹோட்டல் நிராகரித்துப் பின் T. Nagar GRT Grand days - ல் சந்திக்கலாம் என்று முடிவு செய்து, மாலை 6.00க்கு பார்க்கலாம் என்று நேரத்தை முடிவுச் செய்தோம்.
பின் GRT Grand Days - தொலைப்பேசியில் அழைத்து, மொத்தம் 10 பேருக்கான இடத்தை ரிசர்வ் செய்தோம்.
நான் வீட்டில் இருந்து மாலை 5.30 க்கு கிளம்பி, ஆட்டோ பிடித்து, பின் தங்கச்சி ரம்யாவை கூப்பிட்டேன். அண்ணே கிளம்பிட்டோம், வந்துகிட்டு இருக்கோம், டிராபிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்றார்கள். வரும் போது ரசனைக்காரி, நாமக்கல் சிபி இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதாகவும் கூறினார்கள்.
அடுத்து தம்பி செய்யதுவை கூப்பிட்டேன், அவர் அண்ணன் ஜீவன் கூட வருவதாகவும், அவரும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும் சொன்னார்.
அடுத்து அண்ணன் புதுகை அப்துல்லா, வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொன்னார். அண்ணே எப்படியாவது வந்திருங்க அண்ணே என்று சொன்னதற்காக, எப்படியோ, அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, வந்திட்டார்.
ஆதிமூலகிருஷ்ணன், அவர்கள் 6 மணிக்கு சரியாக வந்துவிட்டு, லாபியில் இருப்பதாகவும் சொன்னார்கள்.
நான் 6.15 க்குப் போய் அண்ணன் ஆதி அவர்கள் கூட பேசிகிட்டு, (எங்களுக்கு தெரிஞ்ச சிக்ஸ் சிக்மா / குவாலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பற்றி அவரிடம் கொஞ்சம் போட்டுப் பார்த்தோமில்ல..) இருக்கும் போது அண்ணன் புதுகை அப்துல்லா வந்தார்...
சிறுது நேரத்திற்கொல்லாம் தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரசனைக்காரி, அண்ணன் நாமக்கல் சிபி, நண்பர் சுரேஷ், கலை அக்கா எல்லோரும் வந்தனர்.
இன்னும் சிறிது நேரம் பொருத்து, சென்னை டிராப்பிக்கில் நொந்து நூடுல்ஸ் ஆகி அண்ணன் ஜீவனும், தம்பி செய்யதுவும் வந்து சேர்ந்தனர்.
அனைவரும் 6.30க்கு ஆஜர்...
GRT Grand Days ஹோட்டலில் டின்னர் 7.30 க்குத்தான் ஆரம்பிக்குமாம்.
எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சோம்... யாரும் மாட்டினாலும் மாட்டிகிட்டவரைஅனைவரும் சேர்ந்து கும்மி அடிச்சு தீர்த்தோம்...
அப்போது தங்கச்சி ரம்யா அவர்கள், சிபி அவர்கள் வண்டியில் வரும்போது, ரசனைக்காரி ராஜேஸ்வரியிடம், நான் தான் கோவி கண்ணன் என்று சொல்லுகின்றார். அதை இவங்களும் நம்பிகிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. அப்ப ஆரம்பிச்ச கும்மி டின்னர் முடியரவரைக்கும், போயிகிட்டு இருந்தது ...
அன்றுச் சந்தித்த பதிவர்கள்...
அண்ணன் புதுகை அப்துல்லா அண்ணன்
அண்ணன் ஆதிமூல கிருஷ்ணன் (எ) தாமிரா
அண்ணன் நாமக்கல் சிபி
அண்ணன் ஜீவன்
தம்பி அ.மு. செய்யது
தங்கச்சி ரம்யா
தங்கச்சி ரசனைக்காரி
நண்பர் (சித்தர்) சுரேஷ்
கலை அக்கா
தம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..
தம்பி அ.மு. செய்யது
அண்ணன் புதுகை அப்துல்லா
அண்ணன் அப்துல்லா, அண்ணன் ஆதி, அண்ணன் சிபி, அண்ணன் ஜீவன், நண்பர் சுரேஷ்..
டின்னர் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. கடைசியில் நண்பர்கள் சிலர் காப்பி வேண்டும் என்றுச் சொல்லவும், அங்கு வந்த பேரரிடம், நாங்க இரண்டு காப்பி கொண்டு வாங்க என்றுச் சொன்னோம். இதோ கொண்டு வருகின்றோம் என்று சொன்னவர், 10 நிமிடம் ஆகியும் கொண்டு வரவில்லை.
அதன் பின் அவருக்கு மேல் உள்ள சூப்பர்வைசரிடம் சொன்னோம். இதோ என்று சொல்லிவிட்டு போனவர் தான் அப்புறம் ஆள் மிஸ்ஸிங்.
இப்படியாக ஒரு 25 நிமிஷம் போனவுடன், நான் நேராக மேலாளரிடம் சென்றேன். பின் வருமாறு அவரிடம் சொன்னேன்...
ஐயா, இங்கு நாங்கள் அனைவரும் நன்றாகச் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. கவனிப்பும் மிக அருமையாக இருந்தது. ஆனால் இனிமேல் இந்த ஹோட்டலுக்கு வருவதாக இல்லை. நீங்க பணம் கொடுத்து வாங்கன்னு கூப்பிட்டாக் கூட வருவதாக இல்லை. ஒரு காப்பிக்காக 25 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்று இங்குத்தான் பார்த்தேன். அதுவும் இரண்டு பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை அதைவிட வெட்கக் கேடான விசயம் வேறில்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
எவ்வளவு கலகலப்பாக போச்சோ, அதை அத்தனையும் ஒரு நிமிடத்தில் போக்கடித்துவிட்டனர் GRT Grand Days.
இது மாதிரி நான் சென்ற இடங்களில் நடந்தவைகள் சில... அவற்றை ஒரு தனி
இடுகையாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்...
அன்று எனது அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
அதிலும் அண்ணன் அப்துல்லாவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துக் கொண்டு இருந்தது, அண்ணன் ஆதி வீடு மாற்றிக் கொண்டு இருந்தார், அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கும், அண்ணன் ஜீவன், தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரஜேஸ்வரி அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குப் போய்விட்டு எனக்காக வந்தது மிக நெகழிச்சியாக இருந்தது.
ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவுடன், ரம்யா அவர்களது காரில் என்னை திருவல்லிக்கேணியில் கொண்டு விட்டார்.
அடுத்து பிரபல பதிவர்கள் குடந்தை அன்புமணி, கேபிள் சங்கர், தண்டோரா மணி, வண்ணத்துப் பூச்சியார் சுரேஷ் அவர்களை சந்தித்ததைப் பற்றியும், சென்னைப் பதிவர் சந்திப்பைப் பற்றியும் .... அடுத்த இடுகையில் பார்க்கலாமே...
தொடரும்.....
43 comments:
மொத தடவையா.... பஷ்டேய்....
// Mahesh said...
மொத தடவையா.... பஷ்டேய்.... //
வாங்க.... வாங்க...
நல்ல சந்திப்பு அண்ணா...
நல்ல சந்திப்பு
இனியதொரு பகிர்வு.
பாசப்பறவைகளால் பதிவுலகம் என்றென்றும் இன்பமாக இருக்க எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக.
பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
//தம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..//
நல்ல ராசியான கேமரா தான்....
முதல் படமே
அழகிய சிங்கர்(Singer)..
:))))
செய்யது, அப்துல்லா படங்களைப் போட்டீர்கள். எங்கே மீத போட்டோக்கள்!!
நானும் உங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட உணர்வை இந்தப் பதிவு தந்தது.
அட... நெம்ப நல்லாருக்குதுங்குனோவ்......!!
தம்பி அ.மு.செய்யது .. இந்த டி-ஷர்ட்'ட்ட மாத்தவே மாட்டியாட்டோ....? ரம்யா அக்கா பதிவுல பாத்தப்பவும் இதே டி-ஷர்ட்டு....!!
கேர்ள் ப்ரெண்டு அம்முனி எடுத்து குடுத்ததுங்குளா தம்பி......?? நெம்ப நல்லா இருக்குதுங்...!!
///தம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..//
நல்ல ராசியான கேமரா தான்....
முதல் படமே
அழகிய சிங்கர்(Singer)..
:))))//
மடோனா?
அடுத்து அண்ணன் புதுகை அப்துல்லா, வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொன்னார். அண்ணே எப்படியாவது வந்திருங்க அண்ணே என்று சொன்னதற்காக]]
உங்க நுண்ணரசியல் - விளங்குதண்ணே ...
இது மாதிரி நான் சென்ற இடங்களில் நடந்தவைகள் சில... அவற்றை ஒரு தனி இடுகையாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்]]
விடுங்கண்ணே
எவ்வளவோ பார்த்துட்டோம் ...
நல்ல சந்திப்பு
சந்திப்பு பற்றி ஏற்கெனவே ரம்யா அக்கா இடுகை போட்டிருந்தாலும் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள முடிந்தது. படங்களும் தெளிவாக(குளோஷப் ஷாட்டில் செய்யதுவை) பார்க்க முடிந்தது.
//அடுத்து பிரபல பதிவர்கள் குடந்தை அன்புமணி//
அண்ணே... என் மேல கோபம் இருந்தா சொல்லிடுங்க... அதுக்காக இப்படி பழிவாங்க வேண்டாம். (இஃக்கி... இஃக்கி...)
எல்லோரையும் அண்ணே அண்ணேன்னு போட்டு இருக்கிறதுல எதுவும் உள்குத்து இருக்கா அண்ணே..:-))))
இந்த லிங்கினை பார்க்கவும்.
http://sashiga.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html
இன்னம் நீங்க சிங்கபூரும், இலங்கைக்கும்தான் போகல போல?
சூராவெளி சூற்று பயணம் பயங்கரமா இருக்கு அண்ணாச்சி...
அடுத்த பதிவை ஆவலோடு எதிர் நோக்கும்... பாச குருவி!!
இனிய சந்திப்புகள் என்றும் மனதை விட்டு மறையாதவை .
அப்படியே ஒரு தடவ 'யு கே'க்கு வாங்கணா..
குறிகிய காலத்தில் நிறைய பதிவர்களை சந்த்தித்த ஒரே பதிவர் நீங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்குறேன்.. :-)
அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்.
நன்றி வசந்த்..
நன்றி T.V. Radhakrishnan..
நன்றி துபாய் ராஜா..
நன்றி அப்பாவி முரு.. சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி மருத்துவர் தேவா.. பெண் பதிவர்கள் படங்கள் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்
நன்றி லவ்டேல் மேடி.. யப்பா இப்படி ஷார்ப்பா இருக்கே... எப்படிங்கண்ணா இது...
நன்றி தண்டோரா... மடோனா? யாருங்கண்ணா இவங்க....
நன்றி தம்பி ஜமால் - நுண்ணரசியல் எதுவும் கிடையாதுங்க...
நன்றி ரோஸ்..
நன்றி குடந்தை அன்புமணி - சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு நீங்க பிரபல பதிவர்தாங்கண்ணே...
நன்றி கார்த்திகைப் பாண்டியண்ணே... நமக்கு இந்த உள்குத்து எதுவும் தெரியாதுங்க...
நன்றி Mrs. Menagasathia - நீங்க கொடுத்த லிங்கைப் பார்த்துட்டேனுங்க.. விரைவில் பதிவு போட்டுறேங்க
நன்றி கலையரசன் - அடுத்த வருடம் சிங்கப்பூர், இலங்கை இரண்டும் போகலாமென்று இருக்கோமுங்க
நன்றி இது நம்ம ஆளு
நன்றி கார்ல்ஸ்பெர்க் - யூகே வரணும், விசா வாங்கணும்... நிறைய இருக்கே.. பார்க்கலாம்... ஆண்டவன் அருள் இருந்தா எல்லாம் நடக்கும்
நன்றி SK - எதோ நம்மாள் முடிந்தது - பல பதிவர்களைச் சந்தித்தேன். பலரை பார்க்க இயலாமல் போய்விட்டது..
தொடருங்கள் ஐயா!
அப்பாவி முரு அண்ணே...ம்ம்ம்முடியல :)
என் நண்பனை உங்கள் வீட்டில் சந்தித்ததையும் எழுதுங்கள் :)
ம்ம்ம் நடக்கட்டும் சந்திப்புக்கள்.
அருமையான சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ஆமா அந்த படத்துல நான் இல்லியே..:)
அண்ணா! விரிவான இடுகை.
போட்டோ எல்லாம் ஜம்முன்னு இருக்கு!
பாடகர் போட்டோ நல்லா எடுத்து இருக்கீங்க:))
அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன் அண்ணா!
நீங்க வந்ததும் தெரியல கிளம்பினதும் தெரியல நாட்கள் வேகமாக பறந்து விட்டன :))
//
நட்புடன் ஜமால் said...
இது மாதிரி நான் சென்ற இடங்களில் நடந்தவைகள் சில... அவற்றை ஒரு தனி இடுகையாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்]]
விடுங்கண்ணே
எவ்வளவோ பார்த்துட்டோம் ...
//
யோசிக்காதீங்க ஜமால் சீக்கிரம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
காத்திருக்கிறோம் படிக்க :))
நல்லா சாப்பிட்டீங்கள்ள அது போதும் விடுங்க
நன்றி பழமை பேசி ஐயா
நன்றி அப்துல்லா அண்ணே.. நிச்சயம் அதுவும் உண்டு.
நன்றி புதுகை தென்றல் அக்கா
நன்றி தம்பி வால்பையன்.
நன்றி கேபிளாரே... உங்களை படம் எடுக்காம விட்டுட்டேன்.. அடுத்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் உங்களை எடுக்கின்றேன்.
நன்றி தங்கச்சி ரம்யா. ஆமாம் 42 நாட்கள் சென்றதேத் தெரியவில்லை.
நன்றி குடுகுடுப்பை.
/லவ்டேல் மேடி said...
அட... நெம்ப நல்லாருக்குதுங்குனோவ்......!!
தம்பி அ.மு.செய்யது .. இந்த டி-ஷர்ட்'ட்ட மாத்தவே மாட்டியாட்டோ....? ரம்யா அக்கா பதிவுல பாத்தப்பவும் இதே டி-ஷர்ட்டு....!!
கேர்ள் ப்ரெண்டு அம்முனி எடுத்து குடுத்ததுங்குளா தம்பி......?? நெம்ப நல்லா இருக்குதுங்...!!
//
ரம்யா அக்கா போட்டதும் இதே சந்திப்பு பற்றி தான்.ராகவன் அண்ணன் கொஞ்சம் லேட்டா போட்டுட்டாரு.
ரெண்டு போட்டோவுமே ஒரே சந்திப்புல எடுத்தது தான் மேடியண்ணே...!!!!!!
@ராகவன் அண்ணே !!
நிறைய பேசினோமோ அதெல்லாம் சென்சார் பண்ணிட்டீங்களே !!!
தம்பிகளை எல்லாம் அண்ணன்னு சொல்லும் எங்க பெரியண்ணன் வாழ்க!!
நல்ல பகிர்வு அண்ணா
அண்ணே தொடர்ந்து அசத்துறீங்க, ஏதோ நாங்களும் உங்க கூட பயணம் செய்வது போன்ற உணர்வு. நன்றி!!
// ஷஃபிக்ஸ் said...
அண்ணே தொடர்ந்து அசத்துறீங்க, ஏதோ நாங்களும் உங்க கூட பயணம் செய்வது போன்ற உணர்வு. நன்றி!!//
ரிப்பீட்டு....,,,
நாங்களும் கூட இருக்கிறா மாதிரி இருக்கு. என்ன டின்னர் மிஸ்ஸிங்.
பாராட்டுகள் சார். என்னைக்காவது எனக்கும் சான்ஸ்கிடைக்காமலா போயிடும்!
தம்பி அ.மு. செய்யது... நோ டென்ஷன் ப்ளீஸ்... மேடி சும்மா கிண்டலடிச்சு இருக்காரு.. அம்புடுதேன்..
நன்றி ஜீவன் அண்ணே
நன்றி நவாஸுதன்..
நன்றி ஷஃபிக்ஸ்...
நன்றி நிஜாம்..
நன்றி வானம்பாடிகள் பாலாண்ணே... அடுத்த தடவை ஊருக்கு வரும்போது உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன். என்னோட மெயில் ஐடி raghavannigeria@gmail.com - முடிந்தால் கூப்பிடுங்களேன். பேசலாம்.
//தம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..//
முதல் கோனல் முற்றிலும் கோனல் மாதிரி முதல் போட்டோவே அப்துல்லாவா ம்ம்ம்ம் ஒன்னும் சொல்வதுக்கு இல்ல:)
//அதிலும் அண்ணன் அப்துல்லாவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துக் கொண்டு இருந்தது,//
அய்யோ அய்யோ அதை நீங்களும் நம்பிட்டீங்களா? அது ரிமைண்டர் சவுண்ட் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கும் அடிக்கும் அப்படியே காதில் எடுத்து வெச்சு அப்துல்லா ஸ்பீக்கிங் என்று கதையவிடுவார்:)
//அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குப் போய்விட்டு எனக்காக வந்தது மிக நெகழிச்சியாக இருந்தது. //
இதுல நெகிழ்ச்சியா ஆவ என்ன இருக்கு அவுங்க ஆபிஸில் புல் ரெஸ்ட் எடுத்துட்டு பிரஸா வந்திருப்பாங்க:)
சென்னை சந்திப்பு அருமை
அதுலேயும் அனைவரையும் காணக்கிடைத்தமைக்கு நன்றி
அண்ணே.. சூப்பரா போட்டு தாக்கிட்டிங்க போங்க..
நல்ல படியா சாப்ட்டு முடிச்சுட்டு கடேசியா காப்பிக்குதான் போராட்டம் பலமா இருந்துது போல..
சரி,காப்பி கெடைக்கலைனு கோவிச்சுகிட்டு அடுத்ததபா அங்க வரமாட்டேன்னு சொல்லிட்டிங்க..
இங்கயும் நம்ம போன ஹோட்டலுக்கு திரும்ப வரமாட்டேனு சொல்லிட்டிங்க.. இப்டியே போனா அடுத்த தடவ கையேந்திபவன்தான் நமக்கு வாய்க்கும்ணே.. பாத்து..
Post a Comment