ஜூன் 28, 2009
சென்னைப் பதிவர் சந்திப்பு - மாலை 6.00 மணி.
பதிவர் சந்திப்பிற்கான நேரம் மாலை 5.30 மணி தி.நகர் நடேசன் பூங்கா என்று சொல்லியிருந்தார்கள். நான் அங்கு போகும் போதே மணி 6.00 ஆகிவிட்டது. (எப்போதுதான் சொன்ன நேரத்திற்கு போவோம்ன்னு கேட்கீறங்களா... அதுவும் சரிதான்..).
அங்கு பல பதிவர்களை ஒரு சேர சந்தித்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். எனக்கு ஐயா டோண்டு ராகவன் மற்றும் தண்டோரா இருவருக்கும் மத்தியில் அமர இடம் கிடைத்தது.
அங்கு சந்தித்த பதிவர்கள்
டோண்டு ராகவன், வண்ணத்துப்பூச்சியார், தண்டோரா, கேபிள் சங்கர், நர்சிம், லக்கிலுக், அதிஷா, பைத்தியக்காரன், இணைய நண்பர்களுக்காக ஸ்ரீ, வெண்பூ, இலக்கியா குடந்தை அன்புமணி, பினாத்தல் சுரேஷ், மருத்துவர் ப்ரூனோ, ஜாக்கி சேகர், அக்கினி பார்வை, ஆசிஃப் மீரான்.
என் நினைவில் இருந்து இந்த இடுகையை எழுதுவதால், சிலரது பேர் விட்டுப் போயிருக்கலாம். அவர்கள் மன்னிக்கவும்.
பதிவர் சந்திப்புக்கு முன்பே தண்டோரா அறிமுகமாகியிருந்ததால், ஐயா டோண்டு ராகவன் அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். நெடு நாள் பழகியவர் போல் ரொம்ப நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தார். நான் சென்றபிறகும் பல பதிவர்கள் வந்ததால், எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.
அண்ணன் ஆசிப் மீரான் அவர்களை, துபையில் சந்தித்து இருக்க வேண்டியது, இங்கு அவரை சந்தித்து சந்தோஷமாக இருந்தது. பல பதிவர்களும் பல விசயங்களைப் பற்றி பேசினார்கள். நான் பதிவர் சந்திப்புக்கு புதியவன் என்பதால் மௌனமாக இருந்தேன்.
சந்திப்பு முடிந்ததும், தேனீர் அருந்த சென்ற போது, மருத்துவர் புருனோ அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. மிக அழகாக, நேர்த்தியாக பேசுகின்றார். தன்னுடைய கருத்துகளில் அவருக்கு உள்ள ஆழ்ந்த அறிவு என்னை மலைக்க வைத்தது. எந்த விசயத்தைய்ம் மேலோட்டமாக பார்க்காமல் ஆழ்ந்து அறிந்து அதைப் புரிந்து கொள்ளும் அவரது பண்புக்கு தலை வணங்குகிறேன். சில நிமிடங்கள் பேசினாலும், அறிவுப் பூர்வமான நண்பருடன் பேசியது பிடித்து இருந்தது.
அதன் பின் ஐயா டோண்டு ராகவன், தண்டோரா, கோபிளார் மற்றும் நண்பர்கள் சிலருடன் சிற்றுண்டி அருந்த சென்றோம். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.
அங்குதான் திரைப்படத்துறையில் தண்டோரா, கேபிளார் அவர்களின் ஆழ்ந்த அறிவு புரிந்தது. சில படங்களின் காட்சிகளை அவர்கள் விவரித்த அழகு, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எல்லாம் படம் பார்ப்பதே வேஸ்ட். உதாரணத்துக்கு ஒன்று, கற்பகம் திரைப்படத்தில், மன்னவனே அழலாமா.. பாட்டு எடுத்த விதம், அந்த கேமிரா கோணம், எடிட்டிங் பற்றி எல்லாம் இருவரும் பேசிய பேச்சு இன்றும் மறக்கவில்லை.
ஐயா ராகவன் அவர்கள் எந்த விசயத்தைப் பற்றி பேசினாலும், அவரது அனுபவம் புரிந்தது. அது அரசியல், குடும்பம், வேலை, செக்ஸ் ஜோக் எதுவாக இருந்தலும் ஐயா ராகவன் அவர்கள் ராகவன் தான். அற்புதமான மனிதர். அதன் பிறகு தனிப்பட்ட முறையில் சந்தித்தப் போதும், தொலைப் பேசியில் உரையாடிய போதும், அவரின் மிக உயர்ந்த பண்பு புரிந்தது.
ஜூன் 30, 2009 & ஜுலை 1, 2009 - மதுரை பதிவர் சந்திப்பு
ஜுன் 30, 2009 - காலை 7.00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, வழியில் சில கோயில்களில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, மதுரையை பார்க் ப்ளாசா ஹோட்டலை அடையும் போது மணி 3.00. அங்கிருந்து நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு தொலைப் பேசியில் உரையாடிய போது, அண்ணே உங்களை சரியாக 6.00 மணிக்கு வந்துச் சந்திக்கின்றேன் என்றார்.
சரியாக மாலை 6.00 மணிக்கு நண்பர் ஸ்ரீதர் அவர்கள் கூட எங்களை வந்துப்பார்த்தார். கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். கல்லூரிக்குப் போய்விட்டு, பின் எங்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பின் மறு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்னறனர்.
ஜுலை 1, 2009 - மாலை 6.30 மணியளவில், கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா ஐவரும் ரூமுக்கு வந்திருந்தனர். மதுரைக்காரவுகளே பாசக்காரவுகத்தான். சும்மா சொல்லக்கூடாது, அவங்க பேச்சு, சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியவில்லை. அதிலும் தங்ஸ்க்கு மதுரை (சோழவந்தான்) சொந்த ஊர் என்ற தெரிந்தபின், காண்பித்த பாசம் இருக்கின்றதே, அளவிட இயலாதது. பின்னர் அனைவரும் இரவு விருந்துக்காக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே, roof top Garden க்குச் சென்ன்று உணவு அருந்தினோம்.
மதுரை பார்க் ப்ளாசா ஹோட்டல் பற்றி இந்த இடத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். உணவு நன்றாக இருந்தது. பரிமாறப் பட்டதும், அதை செய்தவிதமும் மிக அழகு.
படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.
இந்தச் சந்திப்புக்கு அவசியம் வருகின்றேன் என்று மருத்துவர் தேவா அவர்கள் சொல்லியிருந்தார். ஆனால் தவிர்க்க இயலாத வேலை வந்துவிட்டதால் வர இயலவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். புரிந்து கொள்கின்றேன் மருத்துவரே... அடுத்த முறை இந்தியா வரும் போது அவசியம் சந்திக்கலாம்.
ஜூலை 2, 2009 ...
காலை நாங்கள் அனைவரும் கோவைச் சொல்ல கிளம்பிக் கொண்டு இருந்தோம். நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் வேகமாக வந்து அண்ணே இந்தாங்க என்று ஒரு பார்சல் கொடுத்தார். என்னங்க இது என்றால், இல்லை அண்ணே, இது தாமரை இலை அல்வா என்று நேற்று சொன்னீங்களே, அதுதான் வாங்கி கொடுத்து இருக்கின்றேன். இப்ப அவசரமாக கல்லூரி போக வேண்டும். பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டார்.
மதுரையில் இருந்து கிளம்பி, தம்பி வால்பையனை அழைத்து, வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் இருவரது தொலைப் பேசி நம்பர்களையும் வாங்கி, தொலைபேசியில் கொடுத்த தொல்லைகள் பற்றியும், அவர்களது பாச மழையில் நனைந்தது பற்றியும் அடுத்த பாகத்தில்...
தொடரும்....
டிஸ்கி : இந்த தொடர் எழுதுவது பெரும்பாலும் என்னுடைய ஞாபகசக்தியில் இருந்துதான். அதனால் சிலருடைய பெயர்கள் (அ) செய்திகள் விடுபட்டு இருக்கலாம். நண்பர்கள் தெரிவித்தால் அதை இதனுடன் சேர்த்துக் கொள்ளுகின்றேன்.
66 comments:
:))
:)
:)
உள்ள போட்டோக்களிலேயே நீங்க தான் ரொம்ப ‘யூத்’தாக இருக்கீங்க அண்ணா.
---------------
இம்பூட்டு நாள் கழித்து நினைவுகளை மீட்டி எழுதுவது அருமை அண்ணா.
எல்லாம் நினைவு படுத்தி அழகா சொல்லி இருக்கீங்க சார். ஹோட்டல் சர்வீஸ் மாதிரி சின்ன விஷயம் கூட.
நன்றி துபாய் ராஜா.
நன்றி அப்பாவி முரு.
நன்றி தமிழினி... இணைக்கின்றேன்
நன்றி ஜமால்... உள்குத்து, வெளிகுத்து எதுவுமில்லையே?
நன்றி வானம்பாடிகள்..
மீண்டும் மலர்ந்தன அந்த அந்த நாள் ஞாபகம்...
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
நன்றி ஜமால்... உள்குத்து, வெளிகுத்து எதுவுமில்லையே?]]
என்ன அண்ணா - நம்மள - பார்த்து(க்காம)
நன்றி குடந்தை அன்புமணி
//உள்ள போட்டோக்களிலேயே நீங்க தான் ரொம்ப ‘யூத்’தாக இருக்கீங்க அண்ணா.//
ஆமாண்ணே உண்மைதான்........!!
உங்க பதிவ படிச்சதும் எனக்கு தோன்றியது .......!!
இவங்களையெல்லாம் சந்திக்கனும்னு எனக்கும் ஆவலா இருக்கு ..!
அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன் சார்....
அழகாகத் தொகுத்து எழுதுகிறீர்கள்.அருமை.
படிக்கும்போதே ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே.
அண்ணே! சென்னை, மருதன்னு கலக்கியிருக்கியலண்ணே! படங்கள் சூப்பர்.
போட்டோ புடிக்கும் பொது தம்மையும் செத்தா புடிப்பீங்க.. :-)
நல்ல அனுபவம் :-)
ரைட்டு
அதிகப்படியானோரை காணக்கிடைத்ததில் சந்தோஷம்
தொடருங்கள் உமது வலைபயணத்தை
//படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.// பெயர் போட்டிருக்கலாம் அண்ணா என்னை மாதிரி புதியவர்களுக்கு தெரியும் அல்லவா.
அழகா தொகுத்து எழுதிருக்கிங்க.அடுத்த பதிவு எப்போ?
நன்றி ராகவன். மீண்டும் நினைவுகள். மகிழ்ச்சி.
கோர்வை சிறப்பு. என்னைப் போன்றவர்கள் இன்னும் பயணிக்க வேண்டும். ஜாம்பவான்கள்.
அன்பின் இராகவன்
அருமையான படங்களுடன் கூடிய இடுகை - நினைவாற்றல் அதிகம்
நல்வாழ்த்துகள்
நன்றி ஜீவன் அண்ணே... நிச்சயம் சந்திக்கலாம் அண்ணே.. மதுரைத்தானே, ஒரு நாள் போனீங்கன்னா பார்த்துட்டு வந்திடலாமண்ணே...
// ஜெட்லி said...
அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன் சார்.... //
நன்றி ஜெட்லி... விரைவில் எதிர்பாருங்கள்
நன்றி கவிதாயினி ஹேமா. உங்களைப் போல் கவிதை எழுத வரமாட்டேங்குதுங்களே..
// S.A. நவாஸுதீன் said...
படிக்கும்போதே ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே. //
நன்றி நவாஸுதன் அண்ணே....
// நிஜாம் said...
அண்ணே! சென்னை, மருதன்னு கலக்கியிருக்கியலண்ணே! படங்கள் சூப்பர். //
அடுத்து கோவை, திருப்பூர் சந்திப்புக்கள் இருக்குங்க
// SK said...
போட்டோ புடிக்கும் பொது தம்மையும் செத்தா புடிப்பீங்க.. :-)
நல்ல அனுபவம் :-) //
நல்லா கவனிக்கிறீங்க... நன்றிங்க
//அபுஅஃப்ஸர் said...
ரைட்டு
அதிகப்படியானோரை காணக்கிடைத்ததில் சந்தோஷம்
தொடருங்கள் உமது வலைபயணத்தை //
நன்றி தம்பி அபு அஃப்ஸர்
// Mrs.Menagasathia said...
//படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.// பெயர் போட்டிருக்கலாம் அண்ணா என்னை மாதிரி புதியவர்களுக்கு தெரியும் அல்லவா.
அழகா தொகுத்து எழுதிருக்கிங்க.அடுத்த பதிவு எப்போ? //
நன்றிங்க தங்கள் வருகைக்கு. படங்களில் இருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)
நான், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா, கார்த்திகைப் பாண்டியன்.
அடுத்தப் பதிவு விரைவில் எதிர்பாருங்கள்
// butterfly Surya said...
நன்றி ராகவன். மீண்டும் நினைவுகள். மகிழ்ச்சி. //
நன்றி வண்ணத்துப் பூச்சியாரே
// ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
கோர்வை சிறப்பு. என்னைப் போன்றவர்கள் இன்னும் பயணிக்க வேண்டும். ஜாம்பவான்கள். //
ஐயா ரொம்ப புகழுகின்றீர்கள். கூச்சமா இருக்குங்க. நானெல்லாம் கத்துக்குட்டிங்க..
// cheena (சீனா) said...
அன்பின் இராகவன்
அருமையான படங்களுடன் கூடிய இடுகை - நினைவாற்றல் அதிகம்
நல்வாழ்த்துகள் //
நன்றி ஐயா... தங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப் பட்டவன்
//ஐயா ராகவன் அவர்கள் ராகவன் தான். அற்புதமான மனிதர்//
ஆனாலும் இவ்ளோ வெளிப்படையா உங்களைப் பத்தி சொல்றது நல்லா இல்ல.. ஆமாம்.
தமிழ்மணம் ஓட்டு அப்பப்ப சொதப்பறான்.. நாளைக்கு வந்து ஓட்டு போட்டு விடுகிறேன் ஐயா.. !
அருமையான படங்களுடன் கூடிய இடுகை
// கலகலப்ரியா said...
//ஐயா ராகவன் அவர்கள் ராகவன் தான். அற்புதமான மனிதர்//
ஆனாலும் இவ்ளோ வெளிப்படையா உங்களைப் பத்தி சொல்றது நல்லா இல்ல.. ஆமாம்.
தமிழ்மணம் ஓட்டு அப்பப்ப சொதப்பறான்.. நாளைக்கு வந்து ஓட்டு போட்டு விடுகிறேன் ஐயா.. ! //
ஹா... ஹா... அது டோண்டு ஐயாங்க... நான் இல்ல.
தமிழ்மணம் எனக்கும் அடிக்கடி சொதப்பும்...
தங்கள் வருகைக்கு நன்றிங்க
// T.V.Radhakrishnan said...
அருமையான படங்களுடன் கூடிய இடுகை //
நன்றிங்க அண்ணே
:)
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதவும்... பெரிய பள்ளம் விழுகுது நடுவுல!!
நன்றி அறிவிலி..
நன்றி கலையரசன்... அலுவலகத்தில் வேலை அதிகம்... அதான் நிறைய இடைவெளி ஆகிவிட்டது. அடுத்த இடுகை விரைவில் எதிர்பாருங்கள்.
நல்ல பகிர்வு!
போட்டோவுல என் மச்சான் ஸ்ரீதர் எப்படி பளிச்சுன்னு தெரியிறார் பாருங்க!
அரவிந்துக்கு என் ஆசிர்வாதங்கள்
வாலு - ஸ்ரீ உன் மச்சானா - அது சரி
சுவாரஸ்யம் தொடர்கிறது, நல்லா இருக்கு அண்ணே!!
கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்திட்டோம்பா...
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
திரு இராகவன் நைஜீரியா
நன்றக எழுதுகிறீர்கள்.
சென்னை பதிவர் வட்டம் பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது
ஏனெனில் நானும் தற்போதுதான் எழுதத்துவங்கி உள்ளேன்
அது சரி எப்படி இவ்வளவு வலைத்தளங்களையும் படிக்கிறீர்கள்
நேரம் கிடைக்கிறதா என்ன
அருமையான நினைவாற்றலுடன் கூடிய திறமையான எழுத்து வடிவில் தொகுத்தளித்துள்ளீர்கள் :)
வலைப்பதிவாளர்கள் சந்திப்பு
மக்ழ்ச்சியின் தித்திப்பு.
பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை மிக சுவைபட வழங்கினீர்கள்.
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
மேலும் இதுபோன்ற சந்திப்பு எவ்வளவு காலத்திற்கொரு முறை
நடக்கிறது என தெரிவிப்பீர்களா?
not for commets in this section
just a reply for ur mail
Thiru Raagavan
Naam santhithu ariyaatha thuyarai ellam avargal adainththullaargal
enavay avargal kathaigalil nijam therikkirathu
the name is my blogs name with extra h
similarity is there only
but im writing wat i feel
plz view the 4th comment of the saamanthippoo
thanks for ur visit and guidance
// வால்பையன் said...
நல்ல பகிர்வு!
போட்டோவுல என் மச்சான் ஸ்ரீதர் எப்படி பளிச்சுன்னு தெரியிறார் பாருங்க! //
ஆஹா. இவ்வளவு லேட்டாச் சொல்றீங்க
// தண்டோரா ...... said...
அரவிந்துக்கு என் ஆசிர்வாதங்கள் //
நன்றி அண்ணே.
// cheena (சீனா) said...
வாலு - ஸ்ரீ உன் மச்சானா - அது சரி //
ஆமாங்க ஐயா. இத்தனை நாள் சொல்ல்வேயில்லீங்க.
// ஷஃபிக்ஸ்/Suffix said...
சுவாரஸ்யம் தொடர்கிறது, நல்லா இருக்கு அண்ணே!! //
நன்றி ஷஃபிக்ஸ்...
// கலகலப்ரியா said...
கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்திட்டோம்பா... //
நன்றி கலகலப்ரியா..
சாரி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..
நீங்க இடுகை போடுறதுக்கும் நான் வாறரதுக்குக்ம் ரெண்டையும்தான் சொல்றேன்..
ரொம்ப நாள் கழிச்சு எழுதும்போதும் நிகழ்வுகள நியாபகப்படுத்தி நல்லா எழுதிருக்கிங்க.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..
//
படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.
//
என்ன மாதிரி ஆளுங்கல எல்லாம் கணக்குலையே சேத்துக்களைனுபுரியுது..
சரி.. அதுல எது எது யார் யார்னு யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்குறேன்..
// thenammailakshmanan said...
திரு இராகவன் நைஜீரியா
நன்றக எழுதுகிறீர்கள்.
சென்னை பதிவர் வட்டம் பற்றிய தகவல்கள் எனக்கும் புதிது
ஏனெனில் நானும் தற்போதுதான் எழுதத்துவங்கி உள்ளேன்
அது சரி எப்படி இவ்வளவு வலைத்தளங்களையும் படிக்கிறீர்கள்
நேரம் கிடைக்கிறதா என்ன //
வாங்க. தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
இடுகை தினமும் போடணும் என்றால்தான் பிரச்சனை. நமக்கு படிப்பது மட்டும்தாங்க வேலை. இரவு 8 மணி முதல் 11 மணி வரை இதுதான் வேலை.
//
மதுரையில் இருந்து கிளம்பி, தம்பி வால்பையனை அழைத்து, வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் இருவரது தொலைப் பேசி நம்பர்களையும் வாங்கி,
//
சஞ்சய் அண்ணனா.. இதுவேறையா.. நீங்க அவ்ளோ யூத்தா.. வாழ்த்துக்கள்..
// RAMYA said...
அருமையான நினைவாற்றலுடன் கூடிய திறமையான எழுத்து வடிவில் தொகுத்தளித்துள்ளீர்கள் :) //
நன்றி தங்கச்சி ரம்யா.
// சந்தான சங்கர் said...
வலைப்பதிவாளர்கள் சந்திப்பு
மக்ழ்ச்சியின் தித்திப்பு. //
நன்றி சந்தான சங்கர் அவர்களே.. தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
// NIZAMUDEEN said...
பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை மிக சுவைபட வழங்கினீர்கள்.
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
மேலும் இதுபோன்ற சந்திப்பு எவ்வளவு காலத்திற்கொரு முறை
நடக்கிறது என தெரிவிப்பீர்களா? //
நன்றி நிஜாமுதீன் தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
சென்னையைப் பொருத்தவரை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கின்றது. இதைத் தவிர, சிங்கை, துபாய், மதுரை, திருப்பூர் போன்ற இடங்களில் மாதம் ஒருமுறை (அ) இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கின்றது.
நான் இந்தியா போகும் போது அங்கு நண்பர்களை சந்திக்க போகும் வழக்கம் உண்டுங்க.
// सुREஷ் कुMAர் said...
சாரி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..
நீங்க இடுகை போடுறதுக்கும் நான் வாறரதுக்குக்ம் ரெண்டையும்தான் சொல்றேன்..
ரொம்ப நாள் கழிச்சு எழுதும்போதும் நிகழ்வுகள நியாபகப்படுத்தி நல்லா எழுதிருக்கிங்க.. பகிர்வுக்கு நன்றி அண்ணா.. //
வாய்யா தம்பி சுரேஷ்... என்னா பண்ணுவது.. இப்படித்தான் லேட்டாகி விடுகின்றது.
// सुREஷ் कुMAர் said...
//
படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.
//
என்ன மாதிரி ஆளுங்கல எல்லாம் கணக்குலையே சேத்துக்களைனுபுரியுது..
சரி.. அதுல எது எது யார் யார்னு யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்குறேன்.. //
இந்த பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்க்கவும்...
\\ இராகவன் நைஜிரியா said...
// Mrs.Menagasathia said...
//படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.// பெயர் போட்டிருக்கலாம் அண்ணா என்னை மாதிரி புதியவர்களுக்கு தெரியும் அல்லவா.
அழகா தொகுத்து எழுதிருக்கிங்க.அடுத்த பதிவு எப்போ? //
நன்றிங்க தங்கள் வருகைக்கு. படங்களில் இருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)
நான், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா, கார்த்திகைப் பாண்டியன். \\
ஓகே
\\ सुREஷ் कुMAர் said...
//
மதுரையில் இருந்து கிளம்பி, தம்பி வால்பையனை அழைத்து, வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் இருவரது தொலைப் பேசி நம்பர்களையும் வாங்கி,
//
சஞ்சய் அண்ணனா.. இதுவேறையா.. நீங்க அவ்ளோ யூத்தா.. வாழ்த்துக்கள்.. \\
பின்னே யூத் இல்லையா...
//
இராகவன் நைஜிரியா said...
நான், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா, கார்த்திகைப் பாண்டியன்.
ஓகே
//
ஓகேஓகே.. நெம்ப வெளக்கமா தெரிஞ்சுது.. நன்றி..
//
இராகவன் நைஜிரியா said...
//
சஞ்சய் அண்ணனா.. இதுவேறையா.. நீங்க அவ்ளோ யூத்தா.. வாழ்த்துக்கள்..
பின்னே யூத் இல்லையா...
//
பின்னே மட்டும் இல்லை.. முன்னே, சைடுல, மேல, கீழ எல்லா பக்கமும் ராகவன் அண்ணா யூத்துதான்.. ஆனா எத்தன வருசத்துக்கு முன்னேன்றதுதான் கேள்வி..
பதிவுகள் அருமை தொடரட்டும் இப்பணி வாழ்த்துக்கள்
Post a Comment