Tuesday, November 17, 2009

பத்துக்குப் பத்து.. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்



பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு சங்கிலித் தொடர் இடுகை, வலைப் பதிவுகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.தொடங்கியவர் திரு. மாதவராஜ் அவர்கள். இந்த சங்கிலித் தொடர் இடுகையைத் தொடர என்னை அழைத்து இருப்பவர் அன்புத் தம்பி “ஷஃபி” உங்களில் ஒருவன்.

இந்த பிடித்தது, பிடிக்காததுப் பற்றி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.

இன்று நான் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று போடப்படுவது அனைத்தும் இன்றைய மன நிலையில் போடப்படுகின்றது.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்.


இந்த இடுகையைப் போடும் போது பின் வரும் விதி முறைகளையும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றனர். அவை

  1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்..
  2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
  3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்

குறிப்புகள் :

  1. பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
  2. கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்


இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல் தலைவர்கள்

பிடித்த‌வ‌ர்க‌ள் : யாருமே இல்லை

பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இரண்டிற்கும் காரணம் ஒன்னுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.

2. எழுத்தாளர்கள் :

பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)

பிடிக்காதவர்கள் : யாருமே இல்லீங்க.. (சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது)


3. திரைப்பட பாடலாசிரியர்கள் :

பிடித்தவர்கள் : வைரமுத்து (இவரின் கற்பனை வளம் எனக்கு பிடித்தது), கவிஞர் வாலி... (என்னைக் கட்டிப் போடும் வரிகள்)

பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும் (வாலி, வைரமுத்து குத்து பாட்டு எழுதும் போதும் எரிச்சலாகத்தான் வ்ரும்...)

4. நகைச்சுவை நடிகர் :

பிடித்தவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசாமல், குட் காமெடியுடன் (குட் காமெடி, பேட் காமெடிக்கு ஐயா லதானந்த அவர்களின் இந்த இடுகையைப் பார்க்கவும்) நடிக்கும் போது அனைவரும்

பிடிக்காதவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசி நடிக்கும் அனைவரும். இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரிகின்றது.

5. நடிகர் :

பிடித்தவர்கள் : சரியாக நடிக்கும் போது - யாராக இருந்தாலும்..

பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...

6. நடிகை :

பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.

பிடிக்காதவர்கள் : இன்று திரைத் துறையில் இருப்பவர் அனைவரும்

7.தொழில் அதிபர்க‌ள் :

பிடித்தவர்கள் : வேணு சீனிவாசன்... சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர். அங்கு வேலை பார்த்ததால் அவரைப் பற்றி நன்கு தெரியும்.

பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்


8. இயக்குனர் :

பிடித்தவர்கள் : இதில் குறிப்பிட்டு இவர்தான் என்று சொல்லத் தெரியவில்லை. படம் பிடிக்கும் போது, அவரைப் பிடிக்கின்றது.. உதாரணம் - பாரதிராஜா - முதல் மரியாதை படத்துக்காக அவரை ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் : ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.


9. பதிவுலகம் :

பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.


10. திரைப்படங்கள் :

பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

பிடிக்காதது : எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்.


இந்த தொடர் இடுகையை தொடர யாரையும் நான் அழைக்கவில்லை.

காரணம் - கிட்ட தட்ட எல்லாரும் எழுதியாச்சு...

அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.

70 comments:

सुREஷ் कुMAர் said...

இன்னைக்கும் மீ த ஃபஸ்ட்டேய்..

thiyaa said...

கழுவுற மீனில நழுவுற மீன்
நல்ல பதில்கள்

Prathap Kumar S. said...

பட்டும்படாமல் சொல்லி வசமா தப்பிச்சுட்டீங்க... அடுத்த தடவை கண்டிப்பா மாட்டுவீங்க... அப்ப பார்த்துக்கறேன்.ஹஹஹ

सुREஷ் कुMAர் said...

//
பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)
//
ம்ம்..
பட்டால்தான் தெரியுதாக்கும்..

ப்ரியமுடன் வசந்த் said...

//பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு...

सुREஷ் कुMAர் said...

//
சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது
//
வாஸ்தவந்தான்..

இருந்தாலும்,
எழுத்துன்னு கேள்வி போட்டுட்டு எழுத்தாளற புடிக்குமா புடிக்காதானு சொல்றீயலே..

ஒண்ணா
எழுத்தாளர்'னு போட்டுட்டு இந்த பதில போடுங்க..

இல்ல..
எழுத்துன்னு போட்டுட்டு புடிச்ச / புடிக்காத எழுத்துக்கள போடுங்க..
(சரியாதான் பேசிட்டு இருக்கனா.. இல்ல.. தூக்கத்துல ஒலரிட்டு இருக்கனா..)

RAMYA said...

என்னா சுரேஷ்தான் எப்போ பார்த்தாலும் ஃபஸ்ட்டேய்.. :)

सुREஷ் कुMAர் said...

//
பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும்
//
வயசானாவே இப்டிதான்..

सुREஷ் कुMAர் said...

//
பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.
//
பக்கத்துல அண்ணி நிக்கிறாங்களோ..

சரி.. அவங்க போன அப்புறமா தனியா சொல்லுங்க..

Prasanna said...

மொத்தத்தில் 3 அல்லது 4 பேர் மட்டும் போட்டு பத்துக்குப் பத்து முடிச்சிட்டீங்க :) ஆனா எல்லாமே நல்லா இருக்கு :)

RAMYA said...

அண்ணா நச்சுன்னு உள்ளது உள்ளபடி பதில் சொல்லி இருக்கீங்க.

ம்ம்ம்.. எவ்வளவு நாள் ஆச்சு, இப்படி தொடரா பதிவு போட்டு அதுலே பின்னூட்டங்கள் போட்டு!

ஒன்னும் சரி இல்லே யாருக்கும் நேரம் இல்லே :)

விதியின் விளையாட்டு படு வேகமா இருக்கு:(

सुREஷ் कुMAர் said...

//
10. திரைப்படங்கள் :
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி
//
இப்டி ஒரு படம் இருக்கா.. இது நான் பார்த்தது இல்லையே.. ஒருவேளை.. உங்க தலைமுறை படமா இருக்குமோ..

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.
//
பக்கத்துல அண்ணி நிக்கிறாங்களோ..

சரி.. அவங்க போன அப்புறமா தனியா சொல்லுங்க..
//

இந்த தம்பியை போய் நம்புறீங்களே! பாருங்க எப்படி மாட்டி விடுறாரு உங்களை உஷாரு உஷாரு :)

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

என்னா சுரேஷ்தான் எப்போ பார்த்தாலும் ஃபஸ்ட்டேய்.. :)
//
ஆமா.. ஏனா.. நாங்கதான் நைட்டெல்லாம் காவ காக்குறோம்ல.. அதான்..

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
10. திரைப்படங்கள் :
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி
//
இப்டி ஒரு படம் இருக்கா.. இது நான் பார்த்தது இல்லையே.. ஒருவேளை.. உங்க தலைமுறை படமா இருக்குமோ..
//

ஹையோ! ஹையோ! தெரியாதாமா!

அண்ணா இப்போ என்ன செய்ய போறீங்க சுரேஷை :)

அடுத்த முறை வருபோது அந்த படம் போட்டு காட்டுங்க :)

ஹி ஹி ஹி நானும் பார்த்ததில்லை :)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
RAMYA said...

என்னா சுரேஷ்தான் எப்போ பார்த்தாலும் ஃபஸ்ட்டேய்.. :)
//
ஆமா.. ஏனா.. நாங்கதான் நைட்டெல்லாம் காவ காக்குறோம்ல.. அதான்..
//

காவல்காரன் அப்படீன்னு ஒரு படம் வந்திச்சாம் ராகவன் அண்ணா சொன்னாரு அதே பார்க்கலை:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிலகள்

vasu balaji said...

இது பத்துக்கு பத்தில்லை போங்கு:))

கலகலப்ரியா said...

ஆஹா... அருமையா சொல்லி இருக்கீங்க... நிறைய புடிக்கல போல.. =))... அந்த நடிகர்கள் நடிகைகள் கேள்வி நான் எடுத்திருந்தா கிட்டத் தட்ட உங்க பதில்-ன்னுதான் நினைக்கிறேன்...

சங்கர் said...

//பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்//

இவுங்க போனதுக்கு அப்புறம் கூட பிடிக்காத அளவுக்கு செய்கிற காரியங்கள் இருக்கு

Mahesh said...

//நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//

super !!

ஹேமா said...

ராகவன் யாருக்கும் வலிக்காம ...!

ஆ.ஞானசேகரன் said...

//அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்//

அய்ய்ய்ய் நல்லாயிருக்கே.... பதிலகள் நல்லபடியாக இருக்கு நண்பா

இராகவன் நைஜிரியா said...

// सुREஷ் कुMAர் said...
இன்னைக்கும் மீ த ஃபஸ்ட்டேய்.. //

ஆமாங்க இன்னிக்கும் நீங்கதான் பர்ஸ்ட்... வாழ்த்துகள்

## //
பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)
//
ம்ம்..
பட்டால்தான் தெரியுதாக்கும்.. ##

ஆமாங்க பட்டறிவு என்பது இதுதாங்க..

// இருந்தாலும்,
எழுத்துன்னு கேள்வி போட்டுட்டு எழுத்தாளற புடிக்குமா புடிக்காதானு சொல்றீயலே..

ஒண்ணா
எழுத்தாளர்'னு போட்டுட்டு இந்த பதில போடுங்க..

இல்ல..
எழுத்துன்னு போட்டுட்டு புடிச்ச / புடிக்காத எழுத்துக்கள போடுங்க..
(சரியாதான் பேசிட்டு இருக்கனா.. இல்ல.. தூக்கத்துல ஒலரிட்டு இருக்கனா..) //

எழுத்தாளர்கள் அப்படின்னு மாத்திட்டேங்க

## //பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும்
//
வயசானாவே இப்டிதான்.. ##

உங்களுக்கு வயசாயிடுச்சு.. வீட்டுக்கு இன்னும் கல்யாணம் பண்ண ஒரு முயற்சியும் செய்யலைன்னு சொல்ல வேண்டாம்.

## //பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.
//
பக்கத்துல அண்ணி நிக்கிறாங்களோ..

சரி.. அவங்க போன அப்புறமா தனியா சொல்லுங்க.. //

ஆஹா.. இன்னமும் என்னைப் புரிஞ்சுக்கலையே தம்பி..

## //10. திரைப்படங்கள் :
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி
//
இப்டி ஒரு படம் இருக்கா.. இது நான் பார்த்தது இல்லையே.. ஒருவேளை.. உங்க தலைமுறை படமா இருக்குமோ.. //

என்ன தம்பி மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படம் தெரியாதா... போ போ.. சிடி விக்கிற கடைல போய் கேட்டுப் பாரு.. சிரிச்சு.. சிரிச்சு வயறு புண்ணாயிடும்.

இராகவன் நைஜிரியா said...

// தியாவின் பேனா said...
கழுவுற மீனில நழுவுற மீன்
நல்ல பதில்கள் //

நன்றி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

இராகவன் நைஜிரியா said...

// நாஞ்சில் பிரதாப் said...
பட்டும்படாமல் சொல்லி வசமா தப்பிச்சுட்டீங்க... அடுத்த தடவை கண்டிப்பா மாட்டுவீங்க... அப்ப பார்த்துக்கறேன்.ஹஹஹ //

நன்றி நாஞ்சிலாரே... எதிர்ப்பார்க்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// எம்.எம்.அப்துல்லா said...
:) //

அண்ணே தங்கள் வருகைக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
//பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு... //

மிக்க நன்றி வசந்த்..

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
என்னா சுரேஷ்தான் எப்போ பார்த்தாலும் ஃபஸ்ட்டேய்.. :) //

ராக்கோழி.. தூங்காம இருக்காரு..

// அண்ணா நச்சுன்னு உள்ளது உள்ளபடி பதில் சொல்லி இருக்கீங்க.

ம்ம்ம்.. எவ்வளவு நாள் ஆச்சு, இப்படி தொடரா பதிவு போட்டு அதுலே பின்னூட்டங்கள் போட்டு!

ஒன்னும் சரி இல்லே யாருக்கும் நேரம் இல்லே :)

விதியின் விளையாட்டு படு வேகமா இருக்கு:( //

நன்றி.

ஆமாம். வேலை பளு அதிகமாகிவிட்டது. எல்லாம் நேரம். இதுவும் கடந்து போகும்

// இந்த தம்பியை போய் நம்புறீங்களே! பாருங்க எப்படி மாட்டி விடுறாரு உங்களை உஷாரு உஷாரு :) //

என்னாப் பண்றதுங்க.. விதியின் விளையாட்டில் இதுவும் ஒன்று.

// ஹையோ! ஹையோ! தெரியாதாமா!

அண்ணா இப்போ என்ன செய்ய போறீங்க சுரேஷை :)

அடுத்த முறை வருபோது அந்த படம் போட்டு காட்டுங்க :)

ஹி ஹி ஹி நானும் பார்த்ததில்லை :) //

இஃகி... இஃகி.. உங்களுக்கு கூடவா தெரியாது...

// காவல்காரன் அப்படீன்னு ஒரு படம் வந்திச்சாம் ராகவன் அண்ணா சொன்னாரு அதே பார்க்கலை:) //

ஆமாம். ஆனால் அந்த படம் நானும் பார்த்ததில்லை. தெரிஞ்சவங்க யாராவது அதைப் பற்றிச் சொல்லுங்க.

இராகவன் நைஜிரியா said...

// பிரசன்ன குமார் said...
மொத்தத்தில் 3 அல்லது 4 பேர் மட்டும் போட்டு பத்துக்குப் பத்து முடிச்சிட்டீங்க :) ஆனா எல்லாமே நல்லா இருக்கு :)//

நன்றி பிரச்ன்ன குமார் தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

ஹி.. ஹி... கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாதுங்க

இராகவன் நைஜிரியா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல பதிலகள் //

நன்றி ஸ்டார்ஜன்..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இது பத்துக்கு பத்தில்லை போங்கு:)) //

நோ போங்கு... அண்ணே மனசறிஞ்சு உண்மையைத்தான் சொல்லியிருக்கேன்.

முதல் கேள்விக்கே.. யாரையும் பிடிக்காது என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கேன் அண்ணே... இதைவிட யாரும் உண்மையைச் சொன்னது கிடையாதுங்க.

திரைப்பட நடிகர்கள், நடிகைகள் பற்றிச் சொல்லும் போதும் எவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியிருக்கேன் பாருங்க..

இதைப் போய் போங்கு என்றுச் சொல்லியிட்டீங்க...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
ஆஹா... அருமையா சொல்லி இருக்கீங்க... நிறைய புடிக்கல போல.. =))... அந்த நடிகர்கள் நடிகைகள் கேள்வி நான் எடுத்திருந்தா கிட்டத் தட்ட உங்க பதில்-ன்னுதான் நினைக்கிறேன்...//

நன்றி கலகலப்ரியா..
.

இராகவன் நைஜிரியா said...

// சங்கர் said...
//பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்//

இவுங்க போனதுக்கு அப்புறம் கூட பிடிக்காத அளவுக்கு செய்கிற காரியங்கள் இருக்கு //

நன்றி சங்கர்...

உங்களின் Excel பற்றிய இடுகை எப்போது வரும்.

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
//நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//

super !! //

நன்றி மகேஷ்.

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
ராகவன் யாருக்கும் வலிக்காம ...! //

நன்றி ஹேமா..

இராகவன் நைஜிரியா said...

// ஆ.ஞானசேகரன் said...
//அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்//

அய்ய்ய்ய் நல்லாயிருக்கே.... பதிலகள் நல்லபடியாக இருக்கு நண்பா //

ஆஹா அண்ணே.. உங்க பேரைப் போட்டுவிடட்டுமா?

அண்ணே தங்கள் வருகைக்கு நன்றிகள்.

பீர் | Peer said...

இது செல்லாது.. மார்க் போட முடியாது.

பிரபாகர் said...

ஆஹா அண்ணனும் எழுதியாச்சு...

பிரபாகர்.

Thenammai Lakshmanan said...

//
பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும்
//
வயசானாவே இப்டிதான்..

:-))

suresh kumar nalla kalaikiraaru ungalai

Thenammai Lakshmanan said...

//பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...//


superb Raagavan

Thenammai Lakshmanan said...

//பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.//

very nice

கலையரசன் said...

//என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.//

இதுக்கு பேருதான் ஆப்பை கேட்டு வச்சிக்கிறதோ? ரைட்டுண்ணே... உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுண்ணே.. அதான், யாரையும் புண்படுத்தாம எழுதியிருக்கீங்க!! ம்ம்ம்..

விஜய் said...

தெளிவான பதில்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

S.A. நவாஸுதீன் said...

//இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.//

சரிதாண்ணே நீங்க சொன்னது

S.A. நவாஸுதீன் said...

//ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.//

புல்லரிக்குதுண்ணே.

S.A. நவாஸுதீன் said...

//நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...//

யார் யாரைச் சொல்றீங்கன்னு எனக்கு புரியுதுண்ணே

S.A. நவாஸுதீன் said...

//பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்//

ரொம்ப சரியாச் சொன்னீங்க

S.A. நவாஸுதீன் said...

மீ த 50 யும் போட்டுக்கிறேன்

க.பாலாசி said...

//1. அரசிய‌ல் தலைவர்கள்

பிடித்த‌வ‌ர்க‌ள் : யாருமே இல்லை//

ஆரம்பமே நறுக்கென்று இருக்கிறது.

வால்பையன் said...

சரியா சொல்லியிருக்கிங்க அண்ணே!

Rajeswari said...

பிடித்தது: அனைத்து பதில்களும்

பிடிக்காதது:எதுவுமில்லை

எப்பூடி.....

Unknown said...

பட்டும் படாமலே நீங்க சொல்லி இருக்கீங்க போங்க........

ஜெட்லி... said...

ரைட் ரைட்...நல்லாவே பதில் சொல்லிரியிகிங்க அண்ணே...

தேவன் மாயம் said...

கழுவுற மீனில நழுவுற மீனைப் பிடிக்க முடியலையே!!

நிஜாம் கான் said...

//ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//

அண்ணே! பேரரசு மேல உங்களுக்கு அப்படி என்னக் கோவம்???
மற்றபடி பிடித்ததும் பிடிக்காததும் பிடித்தது.

iniyavan said...

http://www.iniyavan.com/2009/11/blog-post_04.html

Kindly read this!!!

அப்துல்மாலிக் said...

அண்ணே புரியுது, நல்லாவே எஸ்கேப் ஆகிருக்கீங்க‌

பதில்களை ரசிச்சேன்

புலவன் புலிகேசி said...

எல்லாமே மழுப்பல் பதில்கள். தல பநங்கர சாமர்த்தியமாத்தான் பதில் சொல்லிருக்கீங்க...

நேசமித்ரன் said...

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு...

Menaga Sathia said...

யதார்த்தமான பதிகள் அண்ணா!!

தத்துபித்து said...

ஆக உங்களுக்கு முழுமையாக பிடித்தவர் திரு. வேணு சீனிவாசன் ஒருவர் மட்டுமே !
இது பத்துக்கு பத்து இல்லை பத்துல ஒண்ணு.

Anonymous said...

அண்ணாவா கொக்கா..எப்படி அண்ணா பதில்கள் இப்படி பொத்தாம் பொதுவா?

நட்புடன் ஜமால் said...

பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.


பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.


--------------------

அண்ணா சேம் ப்ளட்

அன்புடன் நான் said...

ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//

//எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்//

நேர்மையாக‌வும்... யாருக்கும் வ‌ருத்த‌மில்லாம‌லும்...சொல்லிய‌ வித‌ம் ந‌ன்று. கிட்ட‌த‌ட்ட உங்க‌ளின் பார்வைதான் என் பார்வையும்.

ஜோதிஜி said...

கழுவுற மீனில நழுவுற மீன்

தியா இப்படிச் சொல்லி இருந்தாலும் என்னுடைய பார்வையில் பக்கா மெச்சூரிட்டி தெரிகிறது. வயது வரும் போது வந்து விடும் போலிருக்கு.

பஸ்ட் வர்றவர்ட்ட கேளுங்கோ.

1, பெயர் உருவாக்க ரூம் போட்டு யோசிச்சு இருப்பாரோ?

2. எங்க இல்லத்துக்கு எல்லாம் வந்தா வெரட்டி விட்டுடுவோமா?

நுட்பம் நுட்பம் ன்னு நல்லா டீடெய்ல்லு கேட்டு கௌப்பிவிட்டு போனவரு, போனவரு தான்.

இன்னிக்கு வர கண்ணுல தட்டுபடல.

சுரேசு நீங்க எங்க இருக்கிறீங்க. ராசா கூப்டுறது காதுல விழுகுதா?

Jawahar said...

உங்கள ரொம்ப நல்லவேன்னு நினைக்க வைக்கிற மாதிரி ரொம்ப எஸ்கேப்பியாவா எழுதியிருக்கீங்க. வாலியோ, வைரமுத்துவோ குத்துப் பாட்டு எழுதணும், அப்பத்தான் அவங்க ரேன்ஜ் தெரியும். ஒரு படைப்பாளி ஒரு வட்டத்துக்குள்ளே மட்டும் சிந்திக்கக் கூடாதில்லையா?

http://kgjawarlal.wordpress.com

ஸ்ரீராம். said...

அடேடே...இப்படி பொதுவாக் கூட எழுதி தப்பிச்சிக்கலாம் இல்லே....

Thamira said...

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்//

நீங்க எழுதிய தைரியமான பதில்களுக்கு இந்த வரிகள் அவசியமா.? அடப்பாவிகளா.. என்ன அநியாயம்.!

SUFFIX said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அண்ணா, ஊரில் சிறிது நாட்களாக இல்லை. தங்களுக்கே உரிய நடையில் அதிரடி பதில்கள்!! விரைவில மற்றொரு தொடர் இடுகைக்கான அழைப்பு கிடைக்குட்டுமாக, ஹி ஹி, சும்மா இருக்க விடமாட்டோம்ல!!