அன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது லேட்டாகிவிட்டது. அலுவலகம் இருந்தது வண்டலூரில். வீடு மடிப்பாக்கத்தில். மறுநாள் அனுப்ப வேண்டிய பர்ச்சேஸ் ஆர்டர்களையும், வந்த பில்கள் அனைத்தையும் செக் செய்து, கையெழுத்துப் போட்டு, அசிஸ்டெண்ட் பாலுவிடம் கொடுத்துவிட்டு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. மணியைப் பார்த்தல் 8. அய்யோ ரொம்ப நேரமாச்சே. அப்பா வேற தூங்காம காத்துகிட்டு இருப்பாரே. என்னச் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாறு. நீங்க எப்போதும் போல் 8 மணிக்கு படுத்துகுங்க அப்பா, நான் வர லேட்டாகும் அப்படின்னு சொன்னாலும், அலுவலகத்தில் இருந்து வந்து, என்னைப் பார்த்தப் பின்னாடித்தான் அவர் படுத்துக்கப் போகின்றார். 87 வயச்சாச்சு ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கின்றார் என புரியவில்லை என்று பலவாறக நினைத்தப் படி வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.
வீடு வந்து சேர மணி 8.40 ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்தவுடன், ஷுவைக் கழட்டி வைத்துவிட்டு, நேராக அவரைப் போய்த்தான் பார்க்கவேண்டும். போனவுடனே மணியைப் பார்ப்பார். இந்த காலத்தில அப்படி என்னதான் வேலை செய்கின்றீர்களோ புரியவில்லை. 6 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு 7 மணிக்குள்ளாவது வீட்டுக்கு வரவேண்டாமா என்று சொல்லுவார்.
அன்று அதே மாதிரி, போனவுடனேயே, வாடா குழந்தை ரொம்ப லேட்டாயிடுச்சு இன்னிக்கு அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே, அப்பா பிபி மாத்திரை மத்யாணம் சாப்பிட்டீங்களா அப்படின்னு கேட்டதுக்கு சாப்பிட்டேன், இப்ப இந்த இரண்டு மாத்திரைத்தானே சாப்பிடணும் அப்படின்னு கேட்டார். பெயரைப் பார்த்து இதைத்தான் சாப்பிடணும் அப்படின்னு சொன்ன பிறகு, இன்னிக்கு சப்பாத்தி ஏ கிளாஸ். பர்ஸ்ட் கிளாஸ் டால். நானே நாலுச் சாப்பிட்டேன்னா பார்த்துக்கோ. போ.. போ.. மூஞ்சி கை,கால் அலம்பிட்டு சாப்பிடுன்னு வாஞ்சையாச் சொன்னார்.
மூஞ்சி கை, கால் அலம்பிட்டு வந்து மாத்திரைச் சாப்பிட்டீங்களா கேட்ட போது, நான் சாப்பிட்டாச்சு, போய் முதல்ல சாப்பிடு. மத்யானம் சாப்பிட்டது. நேரத்தோடு சாப்பிட பழகிக்கோ அப்படின்னு சொன்னார்.
எப்போதும் போல் ஈசிச்சேரில் உட்கார்ந்து, முன்னாடி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டுகிட்டு, சாப்பிட உட்கார்ந்தா, அப்பா ரூமில் இருந்து டமால்ன்னு ஸ்டூல் விழறச் சத்தம் கேட்டுச்சு. இத்தனைக்கும் அவர் ரூம் முன்னாடித்தான் உட்கார்ந்து இருக்கேன்.
என்னடான்னு பார்த்தா, கட்டிலில் உட்கார்ந்திருவர் அப்படியே ஜன்னலில் சாய்ஞ்சுகிட்டு இருக்கார், கண்கள் மேலே சொருகியிருக்கு. தன்க்கு முன்ண்ட்டை வச்சு இருந்த ஸ்டூலையும், வென்னீர் பாத்திரத்தையும் தட்டி விட்டு இருக்கார். புரை ஏறும் போது இப்படி ஆகும் என நினைச்சுகிட்டு,( முன்னாடி சில சமயம் அது மாதிரி ஆகியிருக்கு) தூக்கி முதுகுல தட்டி கொடுத்தா ... களக் என்று ஒரு சத்தம்... என் மேல் சாய்ந்தார்.. தலை சாய்ந்துவிட்டது... வாயில் இருந்து எச்சில் ஒழுகுகின்றது ...கூப்பிட்டா பதில் இல்லை....
சரி உடனே நங்கநல்லூர் ஹிந்து மிஷின் ஆசுபத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்குள், விரல்களைத் தொட்டால் ஜில் என்று ஆகிவிட்டது...
அப்பா ... போயிட்டார் .. நன்றாகத் தெரிந்துவிட்டது.. இருந்தும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துப் போய், காண்பித்த போது, அவர் நம்மை விட்டு போய்விட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.
இன்று அவருக்கு 4 வது திவசம்.... ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதை நினைக்க மனசு வேதனை..
அப்பா எவ்வளவு கத்துக் கொடுத்து இருப்பாய். பாடம் சந்தேகம் கேட்டால் நீயாக பதில் சொல்வதைவிட, நானே கத்துகிறமாதிரி அதை செய்வாயே...
சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வேறுபாடு சொல்லிக் கொடுத்தாயே...
இரண்டு வேஷ்டிகளுக்கு மேல் மூன்றாவது வேஷ்டி இருந்தால் அது லக்சரி என்று சொல்வது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் அதே மாதிரி வாழ்ந்து காட்டீனாயே...
உன்னை நினைத்து தூக்கம் போய்விட்டது..
கொஞ்சம் தூங்கட்டும்மா..
கடைசி வரை உன் மரியாதையை எவ்வளவு நல்லா காப்பாத்தி கொண்டு போனாய். யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.
இன்றும் என்னால் மறக்க முடியாது, உன்னை பெசண்ட் நகர் எடுத்துச் செல்லும் போது வழியில் இருந்த அத்தனை டிராபிக் போலிஸூம் தொப்பியைக் கழட்டிவிட்டு சல்யூட் அடித்ததை..
பொறுப்பி :
என் அப்பாவை நினைத்து இன்று இரவு உறக்கமே வரவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த இடுகை.
67 comments:
உங்கள் தந்தைக்கு எனது மரியாதைகள்....
படித்ததும் கண்கள் கலங்கியது ஸார்.உங்களுக்கு இருந்தது அப்பா இல்ல.தெய்வம்.
உங்களின் தந்தைக்கு எனது மரியாதைகளும்,வணக்கங்களும்..
அப்பாவுக்கு எனது வணக்கங்கள்.
நினைவலைகளில் அவரை எப்போதும் வைத்து பூஜிக்கும் நல்ல மகனாக இருக்கிறீர்கள். வருத்தம் வேண்டாம்.
பல மனிதர்களுக்கு தாயை விட தந்தையின் பாதிப்பு மிக அதிகம். உங்கள் தந்தையின் மீது உங்களுக்கிருந்த அன்பும் மரியாதையும் நெகிழ வைக்கிறது.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மகன்களின் மனதில் நின்றவர் எத்தனை பேர்? "தாயுமானவனை" தந்தையாக பெற்றிருந்த நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
பொறாமையாக இருக்கிறது.
அன்புடன்
ஆரூரன்
கண்ணீர் வருகிறது நண்பரே...உங்க தந்தக்கு என்னுடைய சல்யூட்டுகளும்...இப்படி ஒரு தந்தையை பிரிவது கொடுமையானதுதான்...
//இரண்டு வேஷ்டிகளுக்கு மேல் மூன்றாவது வேஷ்டி இருந்தால் அது லக்சரி //
Gud ideology !!
வார்த்தைகளில்லை..!!! மனம் கனக்கச்செய்த பதிவு.
அடுத்தவருக்கு சிரமம் தராமல்,உலக வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து புறப்பட,ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும்
.
கண்ணீர் வழிய வைத்து விட்டீர்கள்
யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.
எத்தனை பேருக்குக் கிட்டும் இந்த வரம்
அப்பாவுக்கு எனது வணக்கங்கள்.
வார்த்தைகளில்லை..!!!உங்களின் தந்தைக்கு எனது மரியாதைகளும்,வணக்கங்களும்..
mariyathaikkuriya nanbba samarppanam kannerkadal
நம் தந்தைக்கு ராயல் சல்யூட்... இதுபோல் நீங்களும் அரவிந்துக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க இறைவனை வேண்டுகிறேண்ணே...
என்ன சொல்றது சார்? நான்கு வருடங்கள் முன் இறந்து போன, உங்க அப்பாவிற்கு மட்டும் இல்லை, 15 நாட்கள் முன் என்னை விட்டு போன எங்கள் அப்பாவிற்கும் சேர்த்து கண்ணீர் அஞ்சலிதான் கொடுக்க முடிகிறது.
தந்தையின் நினைவில் உங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. பெற்றோர்கள் நம்மிடம் காட்டும் அன்பு அபரிமிதமானது. சுயநலமற்றது.
சிரிப்பை ஜீன் மூலம், தந்தையிடம் பெற்றார்.அழுவது எப்படி என்று அவர் மறைந்ததும் கற்றுக்கொண்ட, சித்ராவுக்கும், இங்கு என் அனுதாபத்தையும் ஆறுதலையும் சொல்லிக் கொள்கிறேன்.
பகிர்தல் யாவர்க்கும் பொது. இன்பத்தை
பகிர்வதால் அது இரண்டு மடங்காகும். துன்பம்
பகிரப்படுவதால் அது பாதியாகக் குறைந்து
விடும். என்னைப் பொறுத்தவரை பித்ரு கடன்
என்பது அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யும்
மரியாதை.அது அவர் இருந்த காலத்தில் அவர்
மனம் கோணாமல், அவருக்கு மனதுக்குப் பிடித்தவாறு, நாம் இருப்பது தான். மற்றபடி
அக்னி வளர்த்து வேள்வி செய்து, ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.அவர் இருந்த காலத்தில், நாம் இருந்தது போல் அவர் இல்லாத இந்த நாட்களிலும் நாம் இருந்தால் அது தான் நாம் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய 'ஹானராக'
இருக்க முடியும். உங்கள் இடுகையைப்
படித்து முடித்ததும் கண்கள் குளமாயின.
அந்த 'ட்ராபிக் கான்ஸ்டபிள்களை'ப் போல்
என்னுடைய ஸல்யூட் மற்றும் கண்ணீர்
அஞ்சலி உங்கள் தந்தை என்கிற அந்த
ஆன்மாவிற்கு!
ராகவன், உங்கள் பதிவு மிகவும் நெகிழ வைக்கிறது, அப்பா விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அல்லவா? நாலு வருடம் கழித்தும் அதே மனநிலையில் பதிவு போட்டு இருக்கீங்க //
சித்ரா கவலை படாதீங்கள், பிறப்பு என்று இருந்தால் இறப்பும் எப்ப என்று ஆண்டவன் கணக்கு போட்டு வைத்து இருப்பார். அதன் படி தான் உலகில் எல்லா அனைத்து ஜீவன்களுக்கும்.
உங்க அப்பா உங்களோடு தான் வாழ்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள்.
நெகிழ்ந்துவிட்டேன்...தந்தைக்கு மரியாதைகள் அண்ணா..
Very moving entry, Raghavan.
You are lucky to have such a nice father. He is lucky to have such an affectionate son.
எந்த வயதில் இருந்தாலும் தகப்பனுக்கு மகன் குழந்தைதான். எந்த வயதில் இறந்தாலும் அப்பா அப்பாதான்.. இன்றுடன் 27ஆம் ஊனமாசியம் அப்பாவுக்கு முடித்துவிட்டு கண்கலங்கி எழுதும்..
கேபிள்சஙக்ர்
படிக்க நெகிழ்ச்சியாக இருக்கு அண்ணா, மனதை தேற்றிக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும், பெற்றோர்கள் பார்வையில் என்றும் நாம் குழந்தைகளே!!
மனதை வெகுவாய் இறுக்கி கண்ணீரை கசிய வைக்கிறது. அப்பா... அது ஒரு மந்திர வார்த்தை...
நெகிழ்ச்சியான பதிவு அண்ணே!
பிரபாகர்.
அண்ணே! கடனேன்னு திவசம் பண்றது விட இந்த நினைப்பிருக்கே, இந்த பாசம் இருக்கே இது உசத்தி. எந்தக் குறையும் வேண்டாம். மனசு நிறைவா இருங்க.அவர் நினைவில் என் வணக்கத்தையும் சேர்த்துக்குங்க.
மனதை பெரிதும் பாத்தித்த இடுகை அண்ணா.
வேறு வார்த்தகள் இல்லை.
வாழ்வின் சில அற்புதமான அடிப்படைகளை- நாம் தந்தையரிடமே பெறுகிறோம். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு... அதனாலேயே நமது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அவர் இருக்கிறார். அதனாலேயே அவர் நம்முள் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இது உங்கள் தந்தைக்கான சமர்ப்பணம் என்றாலும், அது எல்லா பதிவருடைய தந்தையரையும் நினைத்து பார்க்க வைக்கும்.
அப்பாவின் நினைவலைகள் கண்களை நனைத்தது மனம் கனத்தது...அப்பாவுக்காக பிரார்த்திக்கிறேன்.
ராகவன் எல்லா அப்பாக்களுமே நமக்கு நிறைய கற்றுத்தருகின்றனர். நாம் அதை அவர் இருக்கும்போது அதிகமாக கவனிப்பதில்லை. இறந்தபிறகே அவரின் அருமை புரிகிறது.
நாம் அப்பாவாகும் போது அப்பாவான பிறகோ நிச்சயம் நம் அப்பாவை நினைக்க மனம் தவறுவதில்லை. சுருக்கமாக அப்பாவின் இழப்பை வர்ணித்துவிட்டு, அவரின் இழப்பி ஏற்படுத்திய பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
இதையும் படித்துப் பாருங்கள். ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை..
http://www.manalkayiru.com/2009/11/old-records/
நல்லப் பதிவு.
நெகிழ்ச்சியான இடுகை சார். அப்பாவுக்கு எனது மரியாதையும், வணக்கங்களும்.
அப்பா பதிவு அருமை.. ஒரு வாழ்ந்த மனிதனின் அடையாளங்களை நானும் தெரிந்து வியந்தேன்..
ஐம்பதாவது இடுகை அப்பாவுக்கு அமைந்ததில் மிக்க பெருமை.
தேடிப்பாருங்கள்... உங்கள் தந்தை உங்களோட இருப்பார் ஏதோ ஒரு வடிவில் அல்லது உணர்வில்.
உங்கள் அப்பாவை எப்படி புரிந்து வைத்துள்ளீர்கள். ரொம்ப பெருமையா இருக்கு.
அண்ணா! மனசு ரொம்ப கனத்துப் போச்சு, அப்பாவின் பாசம்,
நீங்கள் அலுவலகத்தில் இருந்து திரும்பும் வரை காத்திருத்தல் இந்த பாசம் வேறு யாருக்கு வரும் :(
சிக்கனதிற்கும் கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லிக் கொடுத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கை சிறக்க எல்லா வழிகளுமே சொல்லிக் கொடுத்திருப்பார். அதனால்தான் இன்று இவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் இல்லையா அண்ணா?
தெவசம் பண்றது ஒன்னும் பெரிய விஷயமில்லை, அவர்களின் நினைவுகளுடன் வலம் வருவது எவ்வளவு பெரிய விஷயம்!
வயதானவர்களை சிலர் சட்டை செய்யாத இந்த உலகத்தில் உங்களைப் போல பிள்ளைகளும் கண் முன்னே இருப்பதைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது அண்ணா.
இப்படி ஒரு பிள்ளை கிடைக்க அப்பா கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு அப்பா கிடைக்க பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அப்பாவுக்கு நமஸ்காரங்கள்..! சில இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை..! தடுக்கவும் முடியாதவை..!
"அப்பா"
ஒவ்வொரு மகனின் ரோல் மாடல் அவனது தந்தையே..........
உங்களது ரோல் மாடல் உங்கள் தந்தை தான் என்று பதிவை படித்தவுடன் அறிந்தேன்...
இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரிவில்லை....
கண்ணீருடன் உங்களின் சாகா..............
\\உன்னை நினைத்து தூக்கம் போய்விட்டது..
கொஞ்சம் தூங்கட்டும்மா..\\
ஆழ்ந்த அமைதியான தூக்கத்தைக் தந்தையார் கொடுப்பாராக !!
Appa is always great ...my deepest feelings are with you
//பல மனிதர்களுக்கு தாயை விட தந்தையின் பாதிப்பு மிக அதிகம். உங்கள் தந்தையின் மீது உங்களுக்கிருந்த அன்பும் மரியாதையும் நெகிழ வைக்கிறது.//
ஆரூரான் விஸ்வநாதனின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை இருக்கு ராகவன்
கேபிள் சங்கர்
சித்ரா
ராகவன் உங்க துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்
// ரோஸ்விக் said...
ஐம்பதாவது இடுகை அப்பாவுக்கு அமைந்ததில் மிக்க பெருமை.
தேடிப்பாருங்கள்... உங்கள் தந்தை உங்களோட இருப்பார் ஏதோ ஒரு வடிவில் அல்லது உணர்வில்//
ரோஸ்விக் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை உங்க அப்பா உங்களோட உணர்வில் எண்ணங்களில் மற்றும் நீங்கள் சந்திக்கும் ஒரு முதியவரில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
என் அப்பாஅம்மாவைப் பற்றி இப்பதான் நூறாவதா ஒரு இடுகை வெளி இட்டுவிட்டு உங்க வலைப் பக்கம் வந்தேன்
என்னை நெகிழவைத்துவிட்டது உங்கள் அப்பா பற்றிய எண்ணம்
நெகிழ்வாகவும், மனம் பாரமாகவும் உணர்ந்தேன்..
உங்கள் தந்தையாருக்கு எனது மரியாதைகளும், வணக்கங்களும்!!
வணக்கம் இராகவன். உங்கள் தந்தை உங்களின் எண்ணங்களிலும் நடத்தையிலும் இன்னும் வாழ்கிறார் இராகவன். அவருக்கு என் அஞ்சலியும் மரியாதையும் இராகவன்....
//நினைவலைகளில் அவரை எப்போதும் வைத்து பூஜிக்கும் நல்ல மகனாக இருக்கிறீர்கள். வருத்தம் வேண்டாம்.
//
இதற்குமேல் என்ன சொல்வது??
:(
உணர்வு பூர்வமாக ஒரு நல்ல தகப்பனாரை உணர தந்தமைக்கு உங்களுக்கு நன்றி அண்ணா
மிக திருப்தியான ஒரு வாழ்வை வாழ்ந்த அப்பா இதை வாசிக்க கூடும்
வாழ்த்தேர்ந்த இந்த காகங்களற்ற தேசத்தில்
உங்களின் இடுகைளில் மிகப் பிடித்த இடுகை இதுதான் அண்ணே
என்ன சொல்றதுன்னு தெரியவில்லை.இந்த இடுகையை படித்ததும் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.15வருடங்களுக்கு என்னைவிட்டு சென்ற அப்பா ஞ்ஜாபகம் வந்துவிட்டது.
தங்கள் தந்தைக்கு என் மரியாதைகளும்,வணக்கங்களும்...
எனக்கும் என்னோட பழைய நினைவுகள் வந்து விட்டது
அப்பாவிற்க்கு மரியாதையுடன் வணக்கங்கள்..
நெகிழ்ந்துவிட்டேன் அண்ணா...
வேறு எதும் சொல்ல தோணலை..
:-(((((((((((((
நெகிழ வைத்த பதிவு
விஜய்
மனசுக்கு கஸ்டமாயிருக்கு.அவருக்கு நல்ல மகனாயிருக்கிறீர்களே.அதுவே அவர் தந்த ஆசீர்வாதம்.வணக்கங்கள் ராகவன்.
போக்குவரத்து காவலர்கள் அன்று செய்த வணக்கம் என்பது அப்பா வாழ்ந்த மொத்த வாழ்க்கைக்குமான சிறப்பு.
அடுத்தவர்களை உண்மையான அக்கறையினால் வளர்த்து எடுக்க உதவும் உங்களின் அத்தனை ஆளுமையும் அவர் உருவாக்கி வளர்த்த அக்கறையினால் தான் இத்தனை உண்மையான பின்னூட்டங்களும், நல்ல வரிகளால் எண்ணங்களால் செலுத்திய அஞ்சலியும்.
அவர் இறக்கவில்லை. உங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்.
அதைத்தான் நீங்கள் உரையாடிய நிமிடங்களும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரிடமும் நீங்கள் காட்டும் அன்பும் உணர்த்திக்கொண்டு இருக்கிறது.
//என் அப்பாவை நினைத்து இன்று இரவு உறக்கமே வரவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த இடுகை.//
ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.. அப்பாவிற்கு என் இனிய முத்தங்கள்
மிக நெகிழ்வாய் இருந்தது அண்ணா
இரண்டாவது பத்தியிலேயே வித்தியாசமான ‘இராகவனை’ பார்த்தேன்.
போக போக கண்கள் பணித்தன
மேலும் இப்படி ஒரு நிலையை எல்லா மகன்களும் அடைய நேரிடும் - இதோ எனது கண்கள் குலமாகின்றது - தட்டச்ச இயலவில்லை -
நல்ல இடுக்கை என்றெல்லாம் சொல்வதைவிட - நல்லதொரு தந்தையை பெற்ற என்னை போன்ற ஒரு மகனாக பார்க்கிறேன் ...
இங்கிருந்து ஒரு சல்யூட்.
பதிவை படித்தவுடன்...! உங்கள் தந்தை வாழ்ந்ததைப்போல வாழ்ந்து செல்ல வேண்டும் என தோன்றுகிறது ...!
தந்தைக்கு என் வணக்கங்கள்...!
இழந்தவர்கள் வேதனையைப் பகிர்ந்துகொள்ளும்போது இருப்பவர்கள் அருமையை உணர்ந்து திருத்திக் கொள்ள முயலுகிறோம்.
இப்படி அப்பாவும், மகனும் வாய்ப்பது பாக்கியம்.
உங்கள் தந்தையாருக்கு எனது மரியாதையும், வணக்கங்களும்.
மனதை நெகிழ வைத்த இடுகை
நெகிழ்ச்சியான பதிவு. உங்கள் அப்பா என்னவாக இருந்தார் என்று தெரியாது. ஆனால் நல்ல தந்தையாக, மனிதனாக இருந்துள்ளார் என்று தெரிகிறது. உங்கள் நினைவில் மட்டும் அல்ல, ரோஸ்விக் சொல்லி உள்ள மாதிரி உங்களில் உங்கள் அப்பாவும் இருப்பார். அப்பா பற்றி சொன்ன நீங்கள் அம்மா பற்றி சொல்லவில்லை என்று எண்ணிப் பார்க்கிறேன்.
பின்னூட்டத்தில் நெகிழ்ச்சியுற வைத்த சித்ரா அவர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும் ...உங்கள் உணர்வில் நாங்களும் பங்கு பெறுகிறோம்.
தந்தைக்கு எனது மரியாதைகளும்,வணக்கங்களும்..
raagavan sir-ungalin yennai patri kurippukalil...,
melaalar-kanakkeduppu-nu irukkuthillaiyaa...,athil
"melaalar" spelling mistake..
maaththidureengalaa!
நெகிழ்ந்தேன்!
நெகிழ்வான பதிவு சார். உங்கள் தந்தைக்கு எனது மரியாதைகள்
@@ சிங். செயகுமார் நன்றி
@@ பூங்குன்றன்.வே நன்றி
@@ புதுகைத் தென்றல் நன்றி
@@ ஆரூரன் விசுவநாதன் நன்றி
@@ புலவன் புலிகேசி நன்றி
@@ அ.மு. செய்யது நன்றி
@@ goma நன்றி
@@ தியாவின் பேனா நன்றி
@@ Pradeep நன்றி
@@ Saravanakumarava நன்றி
@@ கலையரசன் நன்றி
@@ Chithra - உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
@@ கும்மாச்சி - நன்றி
@@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி - நன்றி
@@ Jaleela - நன்றி
@@ Rajeswari - நன்றி
@@ நாடோடிப் பையன் - நன்றி
@@ Cable Sankar - நன்றி
@@ Suffix - நன்றி
@@ பிராபகர் - நன்றி
@@ வானம்பாடிகள் - நன்றி
@@ S.A. நவாஸுதன் - நன்றி
@@ tamiluthayam - நன்றி
@@ கிளியனூர் இஸ்மத் நன்றி
@@ Sarathguru Vijayananda நன்றி
@@ செ.சரவணக்குமார் நன்றி
@@ jackiesekar நன்றி
@@ ரோஸ்விக் நன்றி
@@ அக்பர் நன்றி
@@ RAMYA நன்றி
@@ கலகலப்ரியா நன்றி
@@ Sangkavi நன்றி
@@ நிகழ்காலத்தில் நன்றி
@@ அது ஒரு கனாக் காலம் நன்றி
@@ thenammailakshmanan நன்றி
@@ அன்புடன்-மணிகண்டன் நன்றி
@@ காவிரிக்கரையோன் MJV நன்றி
@@ எம்.எம்.அப்துல்லா நன்றி
@@ நேசமித்ரன் நன்றி
@@ Mrs.Menagasathia நன்றி
@@ நசரேயன் நன்றி
@@ பிரியமுடன்...வசந்த் நன்றி
@@ ஸ்ரீ நன்றி
@@ கவிதை(கள்) நன்றி
@@ ஹேமா நன்றி
@@ ஜோதிஜி நன்றி
@@ ஆ.ஞானசேகரன் நன்றி
@@ நட்புடன் ஜமால் நன்றி
@@ அறிவிலி நன்றி
@@ ஜீவன் நன்றி
@@ ஹுஸைனம்மா நன்றி
@@ ஆதிமூலகிருஷ்ணன் நன்றி
@@ ஈரோடு கதிர் நன்றி
@@ ஸ்ரீராம். நன்றி
@@ கரிசல்காரன் நன்றி
@@ இரசிகை நன்றி - மாத்திட்டேங்க
@@ வால்பையன் நன்றி
@@ நாஞ்சில் பிரதாப் நன்றி
கடைசி வரை உன் மரியாதையை எவ்வளவு நல்லா காப்பாத்தி கொண்டு போனாய். யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.
இதேதான் என் அம்மாவுக்கும். செப்டம்பரில்.. நெகிழ வைத்தது
Post a Comment