Wednesday, December 23, 2009

என்னா...........................வலி. முடியலை

எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்... என்னாச்சுன்னு கேட்கறீங்களா... படிச்சுப் பாருங்க புரியும் உங்களுக்கே...

அக்டோபர் மாசத்தில ஆரம்பிச்சுதுங்க... பயங்கர ஜலதோஷம்... சென்னைத் செந்தமிழில் சொல்லணும் என்றால், சரியான ஜல்ப்பு பிடிச்சுகிச்சு நைனா.

நானும் மருத்துவர்கிட்ட போகாம நமக்கு தெரிஞ்ச மாத்திரை எல்லாம் உபயோகப் படுத்திப் பார்த்தேன். சில நண்பர்களுக்குடன் பேசும் போது, அண்ணே நல்ல பிராண்டி வாங்கி மிளகு போட்டு அடிச்சுப் பாருங்க சரியாகிடும் என்ற யோசனை வேறு சொன்னார்கள். நம்ம உடம்பு பத்தி நல்லாத் தெரியும் என்பதால் அதை முயற்சி செய்யவில்லை.

இப்படி ஒரு 15 நாள் ஓட்டிட்டேன். இதுக்கு மேலே போச்சுன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னுட்டு, இங்கு ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அய்யா 15 நாளா ஜலதோஷம் பிடிச்சுக்கினு ரொம்ப படுத்துது. மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது, இருமல் வேற ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னேன்.

அதுக்கென்னங்க நிறுத்திடலாம் அப்படின்னு சொன்னாரு. (ஜலதோஷத்தை என்றுதான் அர்த்தம் பண்ணிக்கணும்... மூச்சு விடறத இல்ல).

நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்) இதெல்லாம் நமக்கு அலர்ஜி. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன். சரி அப்படின்னுட்டு மாத்திரை கொடுத்தாரு.

மாத்திரை எல்லாம் சாப்பாடு சாப்பிட்டபின் சாப்பிடுங்கன்னு சொன்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, மதிய உணவுக்கு பின் சாப்பிட்டேன். அதுல பாருங்க ஒரு மாத்திரை (பேர் தெரியலை) நமக்கு அலர்ஜியாடுச்சுப் போல் இருக்கு. இரண்டு மணி நேரத்தில் உதடு தடிச்சு போச்சு, கையில் நாலஞ்சு இடத்தில் ஒரு மச்சம் மாதிரி வந்திடுச்சு. அய்யய்யோ என்னாடா இது வம்பு அப்படின்னு திரும்பவும் டாக்டரிடம் ஓடினேன். அவர் பார்த்துட்டு அய்யய்யோ அப்படின்னுட்டு, அவர் கொடுத்த மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துட்டு, வேற மாத்திரை கொடுத்தாரு. மேலும் அலர்ஜி சரியாவதற்கு மாத்திரைக் கொடுத்தார்.

அவர் அலர்ஜிக்கும், ஜலதோஷத்துக்கும் கொடுத்த மாத்திரையில் அலர்ஜியும், ஜலதோஷமும் சரியாச்சு. ஆனால் வயத்து வலியில் கொண்டு விட்டுடுச்சு. எதைச் சாப்பிட்டாலும் உடனே வயத்து வலி, வயத்துல ஒரு எரிச்சல் தாங்க முடியல.

என்னடாது வம்பாப் போச்சேன்னு, திரும்பவும் டாக்டரிடம் போனேன். அவர் இது மாத்திரை நிறையச் சாப்பிட்டதால் அல்சர் ஆயிருக்கு. அத சரி பண்ண மாத்திரை கொடுக்கின்றேன் என்றுக் கொடுத்தார்.

அந்த மாத்திரைச் சாப்பிட்டா, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பயங்கர தலைவலி, தலைச் சுத்தல் தாங்க முடியல. கொடுமையடா சரவணா இதெல்லாம் நமக்குச் சரி வராது. இந்த வயத்து வலியை முதல்ல கட்டுப் படுத்தணும். அதுக்கு ஒரே வழி நம்ம சாப்பாட்டில் காரம் இல்லாமல், சாப்பிடுவது என்று முடிவு செய்து 10 நாளைக்கு வெறும் மோர் சாதம், ப்ரெட் இப்படி சாப்பிட்டு, ஊரில் இருந்து கொண்டுவந்த பாண்டாசிட் மாத்திரையைய்ப் போட்டு கிட்டு ஒரு மாதிரி இப்பத்தான் சரியாயிருக்கு.

தலைவலி போய் திருகு வலி வந்தமாதிரின்னு சொல்லுவாங்க கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா இப்பத்தான் அனுபவச்சேன்.

இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில் பேசும் போது அவரை கலாய்ச்சதுதான். நீங்களே படிச்சுப் பாருங்களேன்... தம்பி பயங்கர டென்ஷன் ஆயிட்டாரு...

நவாஸ் : அண்ணே எப்படி இருக்கீங்க

நான் : என் நிலைமை எப்படி இருக்குத் தெரியுமா
ஜலதோஷம் வந்து மூக்கு அடைச்சு கிச்சு
சரி என்று டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிட்டால்
அது அலர்ஜியா ஆயிடுச்சு
திரும்பவும் டாக்டரிடம் ஓடினா அவர் பயந்து போய்
அலர்ஜிக்கு மருந்து கொடுத்தா
அது வயத்து வலியில் கொண்டு விட்டுவிட்டது
சரின்னு இப்ப அதுக்கு மருந்து சாப்பிட்டா
அது தலைவலியில் கொண்டு விடுது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா.

நான் : என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம், உண்மைங்க இது

நவாஸ் : நம்ம டாக்டர் தேவன்மாயம் கிட்டா போனீங்களா

நான் : அய்யா நான் இருப்பது நைஜிரியா, அவர் இருப்பது காரைக் குடி இந்தியாவில்

நவாஸ் : என்னண்ணா இது சின்னப்புள்ளைங்க உடம்பு மாதிரி ஆயிடுச்சு உங்களுக்கு. அப்போ கைமருந்துதான் சரிவரும் உங்களுக்கு

நான் : எல்லா மருந்துகளையும் கைல எடுத்து சாப்பிடுகின்றேன்

நவாஸ் : அதாவது நாட்டுமருந்து

நான் : எந்த நாட்டு மருந்து அப்படின்னு சொல்லுங்க

நவாஸ் : அண்ணாஆஆஅ, பாட்டிவைத்தியம்

நான் : எங்க பாட்டி எப்பவோ செத்துப் போயிட்டாங்களே

நவாஸ் : அய்யய்ய்யோஓஒ யாராவது வாங்களேன்

நான் : எதுக்கு. அன்ண்னனுக்கு வைத்தியம் பார்க்கவா

நவாஸ் : எங்க அண்ணனுக்கு மருந்து கொடுக்கத்தான்

நான் : அது சரி. தாங்க முடியலடா சாமின்னு அங்க கத்துவது இங்கு கேட்குது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா. இப்போ எப்படி இருக்கு உடம்பு. தலைவலிக்கு கடைசியா மருந்து சாப்ட்டீங்களா

நான் : இல்ல சாப்பிடவில்லை. வயத்து வலிக்கு மட்டும் கொஞ்சமா மருந்து

நவாஸ் : அதுக்கு புதுசா வர வேற எது வலி இருக்குறமதிரி தெரியலை. அதான் எல்ல வலியும் வந்திடுச்சே


ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை. நான் எதாவது தப்பா பேசிட்டேனாங்க... அவருக்கு என் மேல் என்ன கோபம் அப்படின்னு யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

110 comments:

நட்புடன் ஜமால் said...

என்னா “எலி”ன்னு படிச்சிட்டேன்

இருங்க உள்ளே போய்ட்டு வாறேன்

நட்புடன் ஜமால் said...

எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்...]]

புதன் கிழமையும் அதுவுமா (மற்ற கிழமைகள்ன்னா சரியான்னு எதிர் கேள்வி நாட் அலவ்ட் ;)) ஏண்ணே இந்த புலம்ப்ஸ்

S.A. நவாஸுதீன் said...

////எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்... ////

இப்ப நாங்களும்

வானம்பாடிகள் said...

அதான் நவாஸ் வந்துட்டாரே:)). இவ்வளவு லொல்லுக்கு எந்த மாத்திரைண்ணே காரணம்.:))

S.A. நவாஸுதீன் said...

எத்தனை மாத்திரை...........ஆத்தி

ஃபார்மஸிகாரன் டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு போயிருப்பாரே உங்களை வச்சு

நட்புடன் ஜமால் said...

அதுக்கென்னங்க நிறுத்திடலாம் அப்படின்னு சொன்னாரு. (ஜலதோஷத்தை என்றுதான் அர்த்தம் பண்ணிக்கணும்... மூச்சு விடறத இல்ல).]]

அவரு உங்க பாங் பேலன்சை சொல்லியிருப்பார்ண்ணே

S.A. நவாஸுதீன் said...

இந்த பிஞ்சு உடம்புக்கு இத்தனை வலி வந்தால் என்னாகும்!!! இன்னும் பிஞ்சி போயிடாதா.

அண்ணே உடம்ப கவணிச்சுக்குங்கண்ணே

நட்புடன் ஜமால் said...

இதெல்லாம் நமக்கு அலர்ஜி. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன். சரி அப்படின்னுட்டு மாத்திரை கொடுத்தாரு]]


சரின்னு குடுத்தாரா சளின்னு குடுக்கலையா

ஏமாந்துட்டீங்களேண்ணே

S.A. நவாஸுதீன் said...

///மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது,////

அடச்சிருக்கும்போது எப்படிண்ணே கொட்டுச்சு. உபரி நீரா இருக்குமோ.

S.A. நவாஸுதீன் said...

///நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்)////

தப்பா இருந்தால் அதுக்கும் மாத்திரை கொடுக்கச் சொல்லிடுவோம்ணே. கவலைப்படாதீங்க

Sangkavi said...

ஜலதோஷத்திக்குப்பின் இத்தனை நோயா.........?

Anonymous said...

ஆஹா அண்ணா நீங்க வாழ்க..

என்னை தினம் தினம் உண்டு இல்லைன்னு பண்ணிய நவாஸை பழிக்கு பழி வாங்கி இருக்கீங்க..
அண்ணனுக்கு ஜே....

S.A. நவாஸுதீன் said...

///மாத்திரை எல்லாம் சாப்பாடு சாப்பிட்டபின் சாப்பிடுங்கன்னு சொன்னாரு///

மாத்திரை எப்படிண்ணே சாப்பாடு சாப்பிடும். நீங்கதான் மாத்திரை சாப்பிடனும். டாக்டர் பட்டம் எங வாங்கினார்னு அவர்கிட்ட கேளுங்கண்ணா

நட்புடன் ஜமால் said...

கொடுமையடா சரவணா இதெல்லாம் நமக்குச் சரி வராது. ]]

ஓஹ்! அவுரு தான் டாக்ட்டரா ...

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
இந்த பிஞ்சு உடம்புக்கு இத்தனை வலி வந்தால் என்னாகும்!!! இன்னும் பிஞ்சி போயிடாதா.

அண்ணே உடம்ப கவணிச்சுக்குங்கண்ணே

இப்ப தான் நிம்மதியாயிருக்கு பார்த்தியா நவாஸ் எங்க அண்ணா உன்னை பிச்சி எடுத்திருக்கார் இனிமேல் சாட்டில் வா சொல்றேன்..

S.A. நவாஸுதீன் said...

////தமிழரசி said...
ஆஹா அண்ணா நீங்க வாழ்க..

என்னை தினம் தினம் உண்டு இல்லைன்னு பண்ணிய நவாஸை பழிக்கு பழி வாங்கி இருக்கீங்க..
அண்ணனுக்கு ஜே....////

உண்டுன்னா இல்லைன்னா, தெளிவா சொல்லனும், இல்லேன்னா அண்ணன் மாத்திரை தந்திடுவாரு

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
///மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது,////

அடச்சிருக்கும்போது எப்படிண்ணே கொட்டுச்சு. உபரி நீரா இருக்குமோ

இன்னுமா உன் லொல்லு அடங்கலை...

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
////தமிழரசி said...
ஆஹா அண்ணா நீங்க வாழ்க..

என்னை தினம் தினம் உண்டு இல்லைன்னு பண்ணிய நவாஸை பழிக்கு பழி வாங்கி இருக்கீங்க..
அண்ணனுக்கு ஜே....////

உண்டுன்னா இல்லைன்னா, தெளிவா சொல்லனும், இல்லேன்னா அண்ணன் மாத்திரை தந்திடுவாரு

பாவி பாவி படுபாவி ரெண்டு நாள் தலைவலி இப்ப தான் குறைந்தது மீண்டும் வந்துட்டியா....

நட்புடன் ஜமால் said...

இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில்]]


அம்பூட்டு கொடுமையா செய்தான்

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

பாவி பாவி படுபாவி ரெண்டு நாள் தலைவலி இப்ப தான் குறைந்தது மீண்டும் வந்துட்டியா....

அண்ணன்கிட்ட மாத்திரை கேளு. ஆனால் சின்ன பிரச்சனை. அண்ணன் தரும் மாத்திரை சாப்பிட்டா தலைவலி போயிடும் வயித்து வலி வரும். ஓகேவா

Anonymous said...

நட்புடன் ஜமால் said...
இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில்]]


அம்பூட்டு கொடுமையா செய்தான்

ஆமாம் பா
எப்படி சொல்வேன் அவர் தூங்க என் தூக்கத்தை கெடுக்கிறார்

கலையரசன் said...

அதுக்குதான் கட்டிங் வித் மிளகை மீட் பண்ணியிருந்தீங்கனா இந்த தொல்லையே இருந்திருக்காதுண்ணே...

ஆனாலும், அந்த ரனகளத்திலேயும்.. குதுகுலமா சாட் வேற பண்ண உங்கள என்ன சொல்ல??????

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...

பாவி பாவி படுபாவி ரெண்டு நாள் தலைவலி இப்ப தான் குறைந்தது மீண்டும் வந்துட்டியா....

அண்ணன்கிட்ட மாத்திரை கேளு. ஆனால் சின்ன பிரச்சனை. அண்ணன் தரும் மாத்திரை சாப்பிட்டா தலைவலி போயிடும் வயித்து வலி வரும். ஓகேவா

ஹேய் எனக்கும் எங்க அண்ணாவுக்கும் செக்கா? முடியவே முடியாது...

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

அவன் தான் உங்க கிட்ட மாட்டினானா

நட்புடன் ஜமால் said...

இப்ப சரியாயிடிச்சா ???

Anonymous said...

நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

அவன் தான் உங்க கிட்ட மாட்டினானா

இல்லை பா நான் தான் மாட்டிகிட்டேன்...

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

ஹேய் எனக்கும் எங்க அண்ணாவுக்கும் செக்கா? முடியவே முடியாது..

நோ செக், நோ கேஷ் ஒன்லி டேப்லெட்ஸ்தான். ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம். அண்ணனுக்கு வந்த வலி மாதிரியே

Anonymous said...

நட்புடன் ஜமால் said...
இப்ப சரியாயிடிச்சா ???


ம்ம்ம் போராடி தலைவலியை விரட்டினேன் ஆனால் நவாஸை?

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...

ஹேய் எனக்கும் எங்க அண்ணாவுக்கும் செக்கா? முடியவே முடியாது..

நோ செக், நோ கேஷ் ஒன்லி டேப்லெட்ஸ்தான். ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம். அண்ணனுக்கு வந்த வலி மாதிரியே

ஹேய் இங்கும் என்ன நீ நிம்மதியா விடமாட்டியா?

நட்புடன் ஜமால் said...

அந்த இரண்டு கேள்விகளுமே நான் அண்ணாவை கேட்டதுங்கோ

gayathri said...

ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை.

iyooooo anna avaru unga ketta kannampoochi velayadraru
en ketta ellam olinji irunthu pesuvaru

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...

ஹேய் எனக்கும் எங்க அண்ணாவுக்கும் செக்கா? முடியவே முடியாது..

நோ செக், நோ கேஷ் ஒன்லி டேப்லெட்ஸ்தான். ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம். அண்ணனுக்கு வந்த வலி மாதிரியே


neega mattum adangave mattegale

S.A. நவாஸுதீன் said...

///நட்புடன் ஜமால் said...
அந்த இரண்டு கேள்விகளுமே நான் அண்ணாவை கேட்டதுங்கோ////

நீ கேட்டது அதுக்கு புரியலை மாப்ள. ஒரு டேப்லெட் கொடுத்தா சரியாபோகும். ஸ்டாக் அண்ணன்கிட்ட நிரைய இருக்கு

அப்பாவி முரு said...

:(

கலகலப்ரியா said...

wot... daily oru idugaiyaa ragavan.. great great..! appuram vanthu padichukkaren.. =))...

Joe said...

அண்ணே, ராகவன் அண்ணே!
உங்களுக்கு சளி, அலர்ஜி, வயித்து வலி, தலை வலி-ன்னு வந்தாலும், கையில சிக்கின நண்பனை மரணக் கடி கடிச்சு அனுப்பிருக்கீங்களே? உங்களை என்ன பண்றது?

Merry Xmas and enjoy the holidays!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... இடுகை போட்டுட்டு ஒரு மீட்டிங்க் போயிட்டு வரதுகுள்ள இவ்வளவு கும்மியா..

வாழ்க வாழ்க நண்பர்கள்...

சங்கர் said...

//ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை.//

வேற எங்க போயிருப்பாரு, நைஜீரியாவுக்கு பிளைட்டு பிடிக்கத்தான்

thenammailakshmanan said...

எனக்கும் இந்த பென்சிலின் அலர்ஜி எல்லாம் உண்டு ராகவன்

மேலும் எரித்ரோசின் சாப்பிட்டா வயிறுஎல்லாம் எரிச்சலாக இருக்கும்

அப்பாடா நம்ம பிரச்சனை நமக்கு மட்டும் இல்ல

என் வீட்டில் சொன்னா சிரிப்பாங்க இப்போ உங்க இடுகயை காண்பிச்சு இது உலகளாவிய பிரச்சனைனு நிருபிச்சுடலாம்

இப்படி ஒண்ணு எழுதுனதுக்காக நன்றி ராகவன்

thenammailakshmanan said...

//நட்புடன் ஜமால் said...
என்னா “எலி”ன்னு படிச்சிட்டேன்

இருங்க உள்ளே போய்ட்டு வாறேன்//

ஆரம்ப கமெண்டே அட்டகாசமா இருக்கு

thenammailakshmanan said...

//S.A. நவாஸுதீன் said...
எத்தனை மாத்திரை...........ஆத்தி

ஃபார்மஸிகாரன் டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு போயிருப்பாரே உங்களை வச்சு//

உண்மை நவாஸ் உண்மை

thenammailakshmanan said...

//gayathri said...
S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...

ஹேய் எனக்கும் எங்க அண்ணாவுக்கும் செக்கா? முடியவே முடியாது..

நோ செக், நோ கேஷ் ஒன்லி டேப்லெட்ஸ்தான். ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம். அண்ணனுக்கு வந்த வலி மாதிரியே


neega mattum adangave mattegale//

hahaha
well said gayathri

:-)))))

ஸ்ரீராம். said...

ஒரு மருந்து....ஒரே மருந்து...எல்லாம் சரி ஆயிடணும்...!

என்னண்ணே...இதுக்கு மருந்து சாப்டா அது சரியாப் போகுது..அதுக்கு சாப்டா இன்னொண்ணு சரியாகுது..

அது ஒன்னுமில்லீங்கண்ணே..மாத்திரை சரியாதான் தயாரிச்சாங்க..பேர்தான் மாறிப் போச்சு போல...

ஆரூரன் விசுவநாதன் said...

ராகவண்ணே....சரியாச்சா? இல்லையா? இல்லைன்னா சொல்லுங்க சுடுதண்ணி வைத்தியம் பண்ணி சரி பண்ணீடுவோம்.......

அறிவிலி said...

:(

:)

tamiluthayam said...

அலர்ஜி என்பது யாருக்கும் வரக்கூடாதா ஒன்று. எனக்கும் அலர்ஜி உண்டு- சில உணவு பொருட்களால். உயிர் போய் வந்த மாதிரி இருக்கும். அப்போது.

Sarathguru Vijayananda said...

அண்ணே..அந்த மருத்துவரோட காண்டாக்ட் நெம்பர் ஏதும் இருக்கா..இங்க ரெண்டு மூணு அன்பர்களுக்கு (அன்பர்னு சொன்னவுடனே நண்பர்னு புரிஞ்சுகிட்டதுக்கு அந்த கடைசியா சாப்பிட்ட மருந்து காரணமா இருக்கலாம்) கொடுத்து கொஞ்சம் கிலி காட்டணும்.

நல்லா யோச்சிச்சு சொல்லுங்க அண்ணே..நீங்க மறதியா வேட்டைக்காரன் படம் பார்க்கலையே?

அன்புடன்
மணல்கயிறு

தண்டோரா ...... said...

தலைவரே..டாக்டர்கிட்ட போனா ஒரு வாரம்..இல்லைன்னா ஏழு நாள்..சரிய்யாகிவிடும்(என் அனுபவம்)

ஜெட்லி said...

//December 23, 2009 3:17 PM
தண்டோரா ...... said...
தலைவரே..டாக்டர்கிட்ட போனா ஒரு வாரம்..இல்லைன்னா ஏழு நாள்..சரிய்யாகிவிடும்(என் அனுபவம்)

//

???...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

வண்டி கட்டி உங்கள காலி பண்ண வராம ஓடிப் போனாறேன்னு சந்தோஷப்படுங்க அண்ணே..:-))

RAMYA said...

கத்தி போச்சு வாலு வந்திச்சி டும் டும் பாட்டுதான் என்னோட நினைவிற்கு வந்திச்சி..

எதுக்கும் உஷாரா இருக்கணும்.

ஆனாலும் இந்த நவாசு லொள்ளு ஒரே சிரிப்புதான் போங்க:)

உங்களுக்கு உடம்பு சரி இல்லை என்பது கூட மறந்து போய் சிரிச்சுட்டேன்:)

உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க அண்ணா!

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! ஜலதோசத்திற்கு நல்ல மருந்துன்னா அது நண்டு சூப் தான். ஜலதோசம், அலர்ஜி, வயித்துவலி, தலைவலி கடைசியா நவாஸ் அண்ணே போட்ட மொக்கையில வந்த‌ இதயவலி எல்லாம் நீங்க நான் துவா செய்றேன்.

அபுஅஃப்ஸர் said...

இன்னிக்கு நவாஸ்தான் ஊறுகாயா?

அபுஅஃப்ஸர் said...

உலகமே இருண்டாலும் சாட்டிங்லே உக்காந்து ஒருதனை உண்டு இல்லேனு பண்ணிருக்கீங்களே உங்களை எல்லாம்........

அபுஅஃப்ஸர் said...

//அப்போ கைமருந்துதான் சரிவரும் உங்களுக்கு
நான் : எல்லா மருந்துகளையும் கைல எடுத்து சாப்பிடுகின்றேன்//


//நான் : எங்க பாட்டி எப்பவோ செத்துப் போயிட்டாங்களே//


மிகவும் ரசிச்சேன் டைமிங் ஜோக்

நினைவுகளுடன் -நிகே- said...

சளி வந்தால் இத்தனை வருத்தம் வருமா ?

பிரியமுடன்...வசந்த் said...

அண்ணே என்கிட்ட சொன்ன மாதிரியே நவாஸ்கிட்டயுமா?

அவ்வ்வ்வ்

இன்னும் எத்தினி பேர்?

சொன்ன மாதிரியே போஸ்ட்டா போட்டுட்டீங்க....!

பிரியமுடன்...வசந்த் said...

//தமிழரசி said...
ஆஹா அண்ணா நீங்க வாழ்க..

என்னை தினம் தினம் உண்டு இல்லைன்னு பண்ணிய நவாஸை பழிக்கு பழி வாங்கி இருக்கீங்க..
அண்ணனுக்கு ஜே....
//

என்னா ஒரு நல்லெண்ணம் வாழ்க தமிழ்...

அவ்வ்வ்வ்.......

:))))))))

கலகலப்ரியா said...

அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க... =))... ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க ராகவன்... தொடர்ந்து கலக்குங்க..

பிரபாகர் said...

கை மருந்து, நாட்டு மருந்தூ.... அண்ணா தாங்கல.

பிரபாகர்.

ஹேமா said...

ராகவன் உடம்பைப் பாத்துக்கோங்க.போயும் போயும் ஆளே இல்லாம நவாஸ்கிட்டப் போயிருக்கீங்களே.ஆனைக்கொரு காலம்ன்னா பூனைக்கொரு காலம் வராமலா போகும்.பாத்திட்டே இருங்க.நவாஸ் க்கும்
வரும்....ஒரு நாளைக்கு !

புலவன் புலிகேசி said...

இன்னாமா மொக்க போட்டுருக்கீங்க..உடம்பு சரியில்லாதப்போ..

T.V.Radhakrishnan said...

இப்ப சரியாயிடிச்சா

ஸ்ரீ said...

:-)))))))))))))))))

Rajeswari said...

ஒரே கஷ்டமப்பா..:-))

பலா பட்டறை said...

அண்ணே உங்க பதிவ பாத்த ஒடனே ஞாபகம் வந்தது ரொம்ப நாளுக்கு முன்னாடி சிவ பிரசாதம் ன்னு ஒரு மருந்து கிடைச்சுது ... சர்வ ரோக நிவாரணி... முடிஞ்சா நம்ம பக்கம் வந்து படிங்க ஓகே ன்னா பார்சல் பண்ணிடலாம் ::))

SUFFIX said...

அண்ணே புது வருஷம் பிறக்கப் போவுது, ஸ்ட்ராங்கா ஏதாவது போட்டு விரட்டி விட்டுருங்க, இல்லாட்டி இன்னொரு இடுகை போட்டு போன வருஷம் வந்த ஜலதோசம்னு ஒரு கட்டுரை எழுதுவீங்க‌ போல. அப்போ சாட்டில் நான் மாட்டினாலும் மாட்டிடுவேன்.

SUFFIX said...

அண்ணே ஆப்பிரிக்காவில பச்சை இலை வைத்தியர்கள் யாரும் இல்லையா? அது நல்லா வேலை செய்யுமாமே? ரோட்டோரோமா பேசிக்கிட்டாங்க.

hayyram said...

நல்ல பதிவு

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

thenammailakshmanan said...

நண்பர் ராகவன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

அண்ணே சாட்டைப் படித்து எனக்கு வயித்து வலி வந்துடுத்து, சிரித்துதான். நல்ல பதிவு. ஒரு ஜலதோசம் உங்களுக்கு காலசர்ப்ப தோசம் மாதிரி படுத்திவிட்டது. இனி ஜலதோசம் வந்தால் சட்டுபுட்டுனு ஆவி புடிங்க. (எந்த ஆவியா ஆளை விடுங்க சாமி. )

திரிப்புளாதி சூர்ணம் என்ற ஒன்று உள்ளது. அடுத்த தபா ஊர் பக்கம் வந்தா ஒரு பாட்டில்(அந்த பாட்டில் இல்லிங்க) வாங்கிட்டுப் போங்க. இனிமேல் எந்த மருந்து சாப்பிட்டாலும் கூட ரானிடின் எடுத்துக் கொள்ளுங்கள். அது வயிற்றைக் காப்பாற்றும். ஆனா நாவாஸை மற்றும் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேண்டாம். அவர் சிரிக்க வைத்து வயிற்றைக் காலி பண்ணிவிடுவார்.

ஆமா அக்கா பேரு தமிழரசியா வம்பரசியா சளைக்காமல் கலாய்க்கின்றார்கள்.

மனமும் வயிறும் நிறைந்த பதிவும் பின்னூட்டங்களும், நன்றி. அனைவருக்கும்.

உருப்புடாதது_அணிமா said...

:-)

உருப்புடாதது_அணிமா said...

///"என்னா...........................வலி. முடியலை"///


Aiyo!!!!!

சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான வார்ப்பு வாழ்த்துகள் நண்பரே !!!என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வம்பன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராகவன் கண்டிப்பாக பதிவர் சந்திப்பில் சந்திப்போம்,அதுவரை சஸ்பென்ஸ்

அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - துணைவியாரிடம் சொல்லவும் - அரவிந்திற்கு சிறப்பு வாழ்த்துகள் கூறவும்

நகைச்சுவை நன்று - வி.வி.சி

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

நல்வாழ்த்துகள் இராகவன்

ஸ்ரீ said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சார், உடம்புக்கு எதாவதுன்னா, டாக்டர்ட்ட போங்க..ஏன்னா, அவர் பொழைக்கணும்.
அவர் கொடுத்த மாத்திரைங்களை வாங்குங்க..
ஏன்னா, மருந்து கடைக்காரர் பொழைக்கணும்.
அந்த மருந்தை அப்படியே குப்பைத் தொட்டியில்
போடுங்க.. ஏன்னா நாம் பொழைக்கணும் !
வெளி தேசத்தில் இருக்கீங்க..ஜாக்ரதையா
இருங்க.. எல்லா மாத்திரையையும் வாங்குங்க..
ஆனா, சாப்டாதீங்க!

அன்புடன் ஆர்.ஆர்.சார், உடம்புக்கு எதாவதுன்னா, டாக்டர்ட்ட போங்க..ஏன்னா, அவர் பொழைக்கணும்.
அவர் கொடுத்த மாத்திரைங்களை வாங்குங்க..
ஏன்னா, மருந்து கடைக்காரர் பொழைக்கணும்.
அந்த மருந்தை அப்படியே குப்பைத் தொட்டியில்
போடுங்க.. ஏன்னா நாம் பொழைக்கணும் !
வெளி தேசத்தில் இருக்கீங்க..ஜாக்ரதையா
இருங்க.. எல்லா மாத்திரையையும் வாங்குங்க..
ஆனா, சாப்டாதீங்க!

அன்புடன் ஆர்.ஆர்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

எதுக்கு ரெண்டு தடவை இந்த விஷயத்தை
சொல்றேன்னா,உங்க மேல உள்ள அக்கறைக்காக..ஒரு தடவை..இன்னொரு தடவை டாக்டருங்க மேல உள்ள அவ நம்பிக்கைனால..

Rajalakshmi Pakkirisamy said...

Happy New Year!!!

அன்புடன் மலிக்கா said...

ஆக நவாஸண்ணாவ வெளுத்து வாங்கியிருப்பதுபோல் தெரிகிறதே.

என்னா ஒரு காமெடி கலக்குங்க..

பட்டாபட்டி.. said...

ஏண்ணே....
என்னாச்சு...

Erode Nagaraj... said...

Dear Raghavan,

I have visited your blog a few times... I am visiting lagos for 2,3 concerts of Bhavadharini Venkatesh, a senior disciple of Smt.D.K.P.

If you are residing near by, please make it to it. The concerts are going to be on 16,17 & 18. I shall update the details of venue soon.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இப்போ எப்படி இருக்கு ...

இதை அப்பவே கேட்டா நீங்க தரமாட்டீங்கள்ல அதான் ...

தருவதற்கு என்ன இருக்குன்னு சொல்ல வர்றது தெரியுது ...

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

பாத்திமா ஜொஹ்ரா said...

அண்ணே சாட்டைப் படித்து எனக்கு வயித்து வலி வந்துடுத்து, சிரித்துதான். நல்ல பதிவு.

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அக்பர் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

ஜோதிஜி said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

Cable Sankar said...

:)

:(
:(??

ஹுஸைனம்மா said...

சார், நல்லாருக்கீங்களா?

நைஜீரியாவில கலவரம்னாங்களே, உங்க பக்கம் ஒண்ணும் பிரச்னை இல்லையே?

Mrs.Menagasathia said...

ஹா ஹா சிரித்து சிரித்து இப்போ எனக்கு வயித்து வலி...

நைஜிரியாவில் கலவரம்னு படித்தேன்.நீங்க எப்படி இருக்கிங்க அண்ணா?

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

ரோஸ்விக் said...

அண்ணே! டாக்டர் கொடுத்த அந்த மாத்திரையெல்லாம் சாப்பிட்டா லொள்ளு ஜாஸ்தியாகுமான்னு கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணிக்கங்க அண்ணே! :-))

பாவம் நவாஸ். :-)

thenammailakshmanan said...

what happened Raagavan??

enge irukiingka ???

come soon !!!

coolzkarthi said...

அண்ணே எப்படி இருக்கீங்க?

இங்கிலீஷ்காரன் said...

Me the 100

கவிதை காதலன் said...

இந்தக் கொடுமையை தட்டிகேட்க தமிழ்படம் சிவா மாதிரி யாரும் வர மாட்டாங்களா?

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கொஞ்சம் தாமதம் . பதிவு அருமை .
வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி .

Jaleela said...

ஜல்பு பிடிச்சிக்கிச்சா கிளைமேட் மாறினா அப்படி தான் அபப் நீஙக் என் வலைப்பக்கம் வந்ததில்லை ஏதாவது மருந்து (ஜல்புக்கு தான்)கிடைத்து இருக்கும்.


//அண்ணே ஆப்பிரிக்காவில பச்சை இலை வைத்தியர்கள் யாரும் இல்லையா? அது நல்லா வேலை செய்யுமாமே? ரோட்டோரோமா பேசிக்கிட்டாங்க/

இந்த‌ ஷ‌பிக்கு தான் வித‌ வித‌மா இப்ப‌டி சொல்ல‌ தோனும்.

Jaleela said...

///மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது,////

அடச்சிருக்கும்போது எப்படிண்ணே கொட்டுச்சு. உபரி நீரா இருக்குமோ

///நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்)////

தப்பா இருந்தால் அதுக்கும் மாத்திரை கொடுக்கச் சொல்லிடுவோம்ணே. கவலைப்படாதீங்க//

ஹாஹா நவாஸ் சரியா ரவுண்டு கட்டி அடிச்சிருக்காரு போல,

அன்புடன் மலிக்கா said...

ஏன் இன்னும் வேறபதிவு போடலை..

நினைவுகளுடன் -நிகே- said...

எங்கே என்னும் உங்களை காணவில்லை
என்னும் வலி போகவில்லையா

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

தியாவின் பேனா said...

இத்தனை நோயா
????????

arun said...

hai,
Congrats for your Team, I request the Nigeria bloggers to give more information for Tamil Nadu about Nigeria working conditions, Safety, Security etc... Many of our people are afraid to work there is Nigeria so pls post more info that will be usefull for all of us...... Arun