புத்தக கண்காட்சி என்றாலே எனக்கு ரொம்ப கொண்ட்டாடம்.
இந்த முறை புத்தக கண்காட்சியை யாரவது பதிவில் படம் போடும் போது பார்த்து ஏக்க பெரு மூச்சு மட்டும் விடமுடியும்
தங்கமணிக்கு ரொம்ப கோபமான நேரம். புத்தக கண்காட்சிக்காக என்னுடைய பட்ஜெட் ரூ. 2000 முதல் ரூ. 2500 வரை. புத்தகம் வாங்கிட்டு வந்திட்டா அப்புறம் வீட்ல ஒருவேலை செய்யாமல் புத்தகத்தை படித்துக் கொண்டே இருந்தால் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க.
இப்போ நான் சொல்ல வந்த விஷயம் வேறு. புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கும் காரணங்கள்.
1. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
2. சில பழைய புத்தகங்கள் அங்கு தேடி பார்த்து வாங்க இயலும்
3. 10% க்ழிவு கிடைக்கும்.
புத்தக கண்காட்சியில், எந்த கடையில் புத்தகம் வாங்கினாலும், 10% கழிவு உண்டு. நான் போன தடவை, ஒரு கடையில் ரூ. 700 க்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு (பதிப்பகத்தார் பெயர் வேண்டாம் என்பதால் சொல்லவில்லை) என்னுடைய கடனட்டையை கொடுத்த போது, கடன் அட்டை கொடுத்தால், கழிவு கிடையாது என்று சொன்னார்கள்.
நான் கடனட்டை உபயோகப்படுத்தினால், கழிவு கிடையாது எங்குமே விளம்பரம் செய்யப்படவில்லை, பின் ஏன் கொடுக்க மாட்டீர்கள் எனக் கேட்டதற்கு, அந்த கடையில் இருந்தவர்கள், சற்று கோபமாகவே, சார் இஷ்டமிருந்தா வாங்குங்க, இப்படியெல்லாம் எங்களை தொந்திரவு பண்ணாதீங்க, நீங்க வாங்கவில்லை என்றால் எங்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை என்று கூறினார்.
எனக்கு வந்த கோபத்திற்கு நேராக, அங்கு புத்தக கண்காட்சியின் அலுவலகத்திற்கு சென்று, ஐயா, கடனட்டை மூலம் புத்தகம் வாங்கினால், கழிவு கிடையாதா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கடனட்டை மூலமாக புத்தகம் வாங்கினாலும் 10% கழிவு உண்டு எனச்சொன்னார்கள். நான் பதிப்பகத்து பெயரைச்சொல்லி, இவர்கள் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகின்றார்கள்.
அவர் அந்த பதிப்பகத்தை சேர்ந்தவரை உடனே ஒலிப்பெருக்கியில் அழைத்து, ஏன் கொடுக்க மாட்டேன் என்று கேட்டதற்கு, எங்கள் முதலாளி கடனட்டைகளுக்கு கழிவு இல்லை என்று சொல்லியுள்ளார் எனக் கூறினார். உடனே அங்கிருந்த அதிகாரி பதிப்பக உரிமையாளரை கைபேசியில் அழைத்து இது பற்றி விசாரித்தார். அவர் அப்படியில்ல்லாம் ஒன்றும் இல்லை, கழிவு கொடுக்கலாம் என்று கூறினார். பின் அவர்களிடம் சென்று, கழிவுடன் புத்தகங்களை வாங்கி வந்தேன்.
இப்போது இதை நினைக்கும் போது சற்று வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது.
நான் வாங்கிய மொத்த புத்தகங்களின் மதிப்பு ரூ. 700/-
அதற்கு கிடைக்ககூடிய கழிவு ரூ. 70/-
பதிப்பகத்தாரின் கஷ்டங்கள் பல. புத்தகங்களை பதிப்பகத்தில் இருந்து கொண்டு வருவது, அதை கண்காட்சியில் பத்திரமாக பாதுகாப்பது என்று பலவிதமான கஷ்டங்கள். நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?
நண்பர்களே... எனக்கு இது மிகவும் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.. உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன், நான் செய்தது சரியா/ தவறா என்று...
39 comments:
ராகவன் சார்... தப்பே இல்லை...
பதிப்பகத்தாரின் லாபம் சொற்பம்தான்.. மறுக்க முடியாது... ஆனால் இது போன்ற புத்தக கண்காட்சிகளில் அவர்கள் இருப்பு கணிசமாக விற்பனை ஆகிறது. எனவே நஷ்டமே கிடையாது. கழிவு கொடுப்பதும் BAPASI கூட்டமைப்பின் ஒருமுகமான முடிவு. இதை நுகர்வோருக்கு மறுப்பது வியாபார மோசடி ஆகும்.
இது குறித்து நீங்கள் சங்கடப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமே இல்லை. இது போன்ற குற்ற உணர்வுக்கெல்லாம் இடம் கொடாதீர்கள்.
//ஒலிப்பெருக்கியில் அழைத்து, ///
ஒலிபெருக்கியிலா....தொலைபேசியிலா... ஒலிபெருக்கி என்றால் அவ்வளவு உரக்க எல்லாரும் கேட்கும்படியாகவா விசாரித்தார்கள்?
\\ நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?\\
நீங்கள் சண்டை பேட்டது 70ரூபாய்க்காக அல்ல
கலக்கம் வேண்டாம் சகோதரா
\\ நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?\\
நிச்சயமாக இல்லை!
Customer service என்கின்ற concept தென்னாசிய நாடுகளில் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
This is your rights. Your attitude is correct. Dont worry about it.
// Mahesh said...
//ஒலிப்பெருக்கியில் அழைத்து, ///
ஒலிபெருக்கியிலா....தொலைபேசியிலா... ஒலிபெருக்கி என்றால் அவ்வளவு உரக்க எல்லாரும் கேட்கும்படியாகவா விசாரித்தார்கள்? //
தங்கள் வருகைக்கு நன்றி மகேஷ்.
எந்த பதிப்பகத்தாரை பற்றி நாம் புத்தக கண்காட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தாலும், அவர்கள் அந்த பதிப்பகத்தின் பெயரை ஒலிப்பெருக்கியில் அலுவகத்திற்கு வரச்சொல்லி பின் விசாரிப்பார்கள்.
அதிரை ஜமால் said...
\\ நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?\\
நீங்கள் சண்டை பேட்டது 70ரூபாய்க்காக அல்ல
கலக்கம் வேண்டாம் சகோதரா
நன்றி... ஜமால் அவர்களே
நன்றி அரிஞ்சயன், நன்றி Karuna, Sharjah
உங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி...
தப்பே இல்லை அண்ணா.,
கடன் அட்டைக்கு கழிவு இல்லை என்றால், புத்தக கண்காச்சி பற்றிய அறிவிப்பிலே தெரிவித்திருக்க வேண்டும். யாராவது ஒருத்தர் கேட்க்க வில்லை என்றால், நடை முறையே மாற்றிவிடுவார்கள்.
அப்புறம்., புத்தகம் வாங்கிட்டு வந்திட்டா அப்புறம் வீட்ல ஒருவேலை செய்யாமல் புத்தகத்தை படித்துக் கொண்டே இருந்தால் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க.
அண்ணே., வீட்டுல என்ன வேலை செய்வீங்க? பொய் சொல்லாம சொல்லணும்...
நமக்கெல்லாம் இந்த அளவுக்கு தைரியம் கிடயாதுலே
don't worry. you fight for the right
ராகவன் அய்யா,
புத்தகம் வாங்கும் போது, உங்களை போன்ற புத்தக காதலர்கள், நிச்சயம் கழிவு கேட்க கூடாது.
சுமார் 40 சட்ட புத்தககங்களை எழுதி பதிப்பித்தவன் என்ற முறையில், புத்தக விற்பனையின் போது யாராவது கழிவு அல்லது தள்ளுபடி கேட்டால், அப்போது ஏற்படும் வலி... ஒட்டு துணி இல்லாமல் ஓட ஓட விரட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வலி.... ஏன் பிறந்தோம்..... ஏன் கல்வி கற்றோம்.... ஏன் புத்தகம் எழுதினோம்.... என்றெல்லாம் யோசிக்க வைக்கும்.
மிக சொற்ப லாபம்... அதிலும் விற்றால்தான் பணம்.... தாள் விலை உயர்வு... மின்சார தட்டுபாடு.. என பல்வேறு சோதனைகள். குறிப்பாக இணையத்தளம்.. வலைபூ ..... இவற்றுக்கு இடையில் விற்பனை ஆக வேண்டும்...
கழிவு கேட்க கூடாது என்று எல்லோரும் முடிவு செய்தல் புத்தக பதிப்பு தொழில் இன்னும் சில ஆண்டுகள் மூச்சு விடும்.....
நீங்கள் கழிவு கேட்டதில் தவறு உள்ளது... ஆனால் கழிவு கேட்டது தவறு என்று நீங்கள் உணர்ந்து வருத்தப்பட்டது சரி. இந்த "சரி" உணர்வு எங்களை போன்ற புத்தக ஆசிரியர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வாழ்வு தரும்...
உங்கள் இந்த உணர்வை, அனுபவத்தை நான் எனது "சட்ட பார்வை" மாத இதழின் சனவரி 2009 பதிப்பில் தங்கள் அனுமதியுடன் வெளியிட உள்ளேன்....
நன்றி
// muru said...
தப்பே இல்லை அண்ணா.,
கடன் அட்டைக்கு கழிவு இல்லை என்றால், புத்தக கண்காச்சி பற்றிய அறிவிப்பிலே தெரிவித்திருக்க வேண்டும். யாராவது ஒருத்தர் கேட்க்க வில்லை என்றால், நடை முறையே மாற்றிவிடுவார்கள்.
அப்புறம்., புத்தகம் வாங்கிட்டு வந்திட்டா அப்புறம் வீட்ல ஒருவேலை செய்யாமல் புத்தகத்தை படித்துக் கொண்டே இருந்தால் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க.
அண்ணே., வீட்டுல என்ன வேலை செய்வீங்க? பொய் சொல்லாம சொல்லணும்...//
நன்றி முரு.
வீட்டில் தங்கமணிக்கு நான் நிறைய உதவிகள் செய்வேன். சமையலில் ஆரம்பித்து வீடு சுத்தம் செய்வது வரை, அனைத்தும் செய்வேன். இந்த புத்தக்தை படிக்க ஆரம்பித்து விட்டால், அதுவும் மிக பிடித்த எழுத்தாளர் என்றால் அவ்வளவுதான்..
// அத்திரி said...
நமக்கெல்லாம் இந்த அளவுக்கு தைரியம் கிடயாதுலே //
நன்றி அத்திர் அவர்களே..
// முரளிகண்ணன் said...
don't worry. you fight for the right //
நன்றி முரளிகண்ணன்
தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
நன்றி வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்களே..
புத்தக பதிர்வர் / எழுத்தாளர்களின் வலியை, திரு. சாரு அவர்களின் வலைப்பூத்தலத்தை படிக்கும் போது புரிந்து கொண்டதால், இவ்வாறு செய்வது சரியில்லை என்று ஒரு உறுத்துதல் உண்டானது. தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
//உங்கள் இந்த உணர்வை, அனுபவத்தை நான் எனது "சட்ட பார்வை" மாத இதழின் சனவரி 2009 பதிப்பில் தங்கள் அனுமதியுடன் வெளியிட உள்ளேன்.. //
தங்கள் மாத இதழில் வெளியிடுவதில் எந்த மறுப்பும் இல்லை.. ஆனால் எந்த வரியையும் (அ) வார்த்தைகளை மாற்றாமல் இட வேண்டும். என் வலைப்பூவின் அட்ரஸ் கொடுக்கப்படவேண்டும்.
இது இரண்டும் செய்தால் எனக்கு எந்த வித ஆட்சேபணைக்கிடையாது..
நீங்க சண்டை போட்டது தப்பே இல்லை அண்ணா
நானா இருந்தால் இதே போல் தான் நல்லா சண்டை போட்டுஇருப்பேன்
முதலில் இதை சண்டை என்றே சொல்ல கூடாது கடைக்காரர் விற்பனைக்காக சொன்னதைத்தானே
நீங்க கேட்டிருக்கிறீர்கள்
இது போல் செய்பவர்களை தட்டி கேட்டால் தான் மற்றவர்களும் திருந்துவார்கள்
இது எல்லாரும் தட்டி கேட்டால் தான் நமக்கு இது போல் பிரச்சனைகள் வராது
அதே போல் கடன் அட்டை கொடுத்தால் ஒரு பிரபல ஜவுளிக்கடை, அதில் Printed Paper இல் signature வாங்குவார்கள் இல்லையா, அதேபோல் பில்லின் கார்பன் காப்பியிலும் Signatrue போட சொல்லி சொன்னாங்க
எனக்கு ரொம்ப கோபம் வந்தது.
ஆனா எங்க அக்கா நீங்க கேட்ட மாதிரிதான் நல்லா பேசினாங்க, எங்க கூட ஒரு குடும்ப நண்பர் வக்கீல் வந்திருந்தார் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்து
பிறகு அவரும் எங்க அக்கா கூட சேர்ந்து கொண்டு அந்த ஜவுளி கடை மேலதிகாரியை ஒரு வழி பண்ணிட்டாங்க
தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்கவேண்டும் நியாயம் நம் பக்கம் இருக்கும் பொது எதற்கும் பயப்பட கூடாது பணம் என்பது முக்கியம் இல்லை அண்ணா ஏமாற்றுவதுதான் கோவம் வருது.
அதனால் உங்கள் கோபம் நியாமானதே
உங்களுக்கு 100 வோட்டு போடலாம்
//அரிஞ்சயன் said...
\\ நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?\\
நிச்சயமாக இல்லை!
Customer service என்கின்ற concept தென்னாசிய நாடுகளில் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்.//
நச் .....
இராகவன் நீங்க சேந்து தப்பே இல்ல, நீங்களா போய் கழிவு வேணும்னு கேக்கலை.அவங்க கடன் அட்டை வாங்க மாட்டோம்னு தெளிவா எங்காவது போர்டு வச்சி இருக்கணும்.அது அவங்க தப்பு தான். சோ நோ பீலிங்க்ஸ்.
இராகவன் நீங்க செஞ்சது தப்பே இல்ல, நீங்களா போய் கழிவு வேணும்னு கேக்கலை.அவங்க கடன் அட்டை வாங்க மாட்டோம்னு தெளிவா எங்காவது போர்டு வச்சி இருக்கணும்.அது அவங்க தப்பு தான். சோ நோ பீலிங்க்ஸ்.
நுகர்வோர் தங்கள் உரிமையைக் கேட்டுப் பெற வேண்டும். இப்படி அனைவரும் செயல்பட ஆரம்பித்தால், இது போன்ற செயல்கள் தவிர்க்கப் படலாம். தாங்கள செய்தது மிகவும் சரியே.
கேட்டீங்கன்னு சொல்லுறேன், நீங்க செஞ்சது சரிதான்
10% கழிவு நீங்களாக கேட்க்கவில்லை
உடன் பணம் கொடுத்திருந்தால் நீங்கள் கேட்க்காமலே 10% கழிவு கிடைத்திருக்கும் ...
இங்க பிரச்சனை கடன் அட்டைக்கு கழிவில்லை என்றதே ...
ஆதலால் எனது பார்வையில் தாங்கள் செய்தது சரியே ...
நீங்கள் செய்தற்கும்
\\ஒட்டு துணி இல்லாமல் ஓட ஓட விரட்டினால் எப்படி இருக்கும்\\
இதற்கும் என்ன சம்பந்தம் ...
தப்பே இல்லை...
எப்படி தப்பாகும் ??
எதுக்கு வருத்தப்படனும் ??
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
/////Advocate Jayarajan said...
ராகவன் அய்யா,
புத்தகம் வாங்கும் போது, உங்களை போன்ற புத்தக காதலர்கள், நிச்சயம் கழிவு கேட்க கூடாது./////
ஐயா அட்வகேட் ஜெயராஜன் அவர்களே ,
நாங்க என்னிக்கு கழிவுகேட்டோம்?? அவங்களே போட்டி போட்டுக்கிட்டு பத்து பர்சன்ட் இருவது பர்சன்ட் அப்படின்னு கூவும் போது , நாங்க என்ன பண்ண முடியும் ..??
//// Advocate Jayarajan said... சுமார் 40 சட்ட புத்தககங்களை எழுதி பதிப்பித்தவன் என்ற முறையில், புத்தக விற்பனையின் போது யாராவது கழிவு அல்லது தள்ளுபடி கேட்டால், அப்போது ஏற்படும் வலி... ஒட்டு துணி இல்லாமல் ஓட ஓட விரட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வலி.... ஏன் பிறந்தோம்..... ஏன் கல்வி கற்றோம்.... ஏன் புத்தகம் எழுதினோம்.... என்றெல்லாம் யோசிக்க வைக்கும்./////
நீங்க கழிவு சொல்லாமல் விற்கும் போது யாரவது தள்ளுபடி அல்லது கழிவு கேட்டால் உங்களது வாதத்தில் ஒரு நேர்மை/நியாயம் உண்டு ..
அதற்காக ஒட்டு துணி இல்லாமல் ஓடுவதற்கும், இதற்கும் என்ன தான் சம்பந்தம் என்று இன்னும் விரிவாக சொன்னால், ஏதோ அறிவில்லாத என்னை மாதிரி இருப்பவர்களுக்கும் புரியும்..
எதுக்கு மொட்டை தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சி போடுறீங்க??
//// Advocate Jayarajan said...
நீங்கள் கழிவு கேட்டதில் தவறு உள்ளது... ஆனால் கழிவு கேட்டது தவறு என்று நீங்கள் உணர்ந்து வருத்தப்பட்டது சரி. இந்த "சரி" உணர்வு எங்களை போன்ற புத்தக ஆசிரியர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வாழ்வு தரும்...///
அது எப்படிங்க இவரு மேல தவறாகும்?? பணமா குடுத்து இருந்தாருன்னா, இவருக்கு அப்பவே அங்கேயே பத்து பர்சன்ட் கழிவு கிடைசி இருக்குm.. கடனட்டையில் குடுக்கும் போது தான் இந்த பிரச்சனையே வந்துள்ளது..
அப்படி இருக்க, அவரு வருத்தப்பட்டு இங்கே அதை பதிந்தது எப்படி சரியாகும்..??
உங்க பக்கத்து நியங்கள் மட்டும் அல்ல, எதிராளியின் இடத்தில் இருந்தும் சற்று யோசியுங்கள்..
அண்ணே நீங்க கேட்டதில் தவறே இல்லை..
அதற்காக நீங்கள் வருத்தப்படவும் தேவை இல்லை
//உங்கள் இந்த உணர்வை, அனுபவத்தை நான் எனது "சட்ட பார்வை" மாத இதழின் சனவரி 2009 பதிப்பில் தங்கள் அனுமதியுடன் வெளியிட உள்ளேன்....
நன்றி//
அவுரு கேட்டது தப்பே கிடையாது.. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க
நன்றி, ஜமால், அணிமா
நீங்கள் இருவரும் சொன்னது மாதிரி, அவர்களாகவேத்தான் தள்ளுபடி என்று சொன்னார்கள்.
நானகவே ஒன்றும் கேட்கவில்லை.
அதனால் தான் ஆரம்பத்திலேயே போட்டு இருந்தேன், புத்தக கண்காட்சிக்கு போவதன் காரணத்தை..
1. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
2. சில பழைய புத்தகங்கள் அங்கு தேடி பார்த்து வாங்க இயலும்
3. 10% க்ழிவு கிடைக்கும்.
இதை வழக்கறிஞ்சர் ஜெயராசன் அவர்கள் கவனிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
மேலும், குறிப்பிட்ட பதிப்பகத்தில் மட்டும் தான், கடனட்டைகளுக்கு கழிவு கிடையாது என்று சொன்னார்கள். மற்ற இடங்களில் ஒன்றும் சொல்லவில்லை.
எனக்கு மிகவும் கோபப்படுத்திய வார்த்தைகள் இதுதான்
அந்த கடையில் இருந்தவர்கள், சற்று கோபமாகவே, சார் இஷ்டமிருந்தா வாங்குங்க, இப்படியெல்லாம் எங்களை தொந்திரவு பண்ணாதீங்க, நீங்க வாங்கவில்லை என்றால் எங்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை
எருது வலி காக்கைக்குத் தெரியாது என்று சொல்வார்கள் அதுமாதிரி, கடையில் வேலை செய்பவர்களுக்கு, அந்த பதிப்பகத்தின் கஷ்ட நஷ்டங்கள் புரிவதில்லை.
மேலும் புத்தக கண்காட்சியில், விளம்பர படுத்தும் போதே, 10% தள்ளுபடி உண்டு என்றே விளம்பரம் செய்கின்றனர்.
என்னுடைய கேள்வியே 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா என்பதே அன்றி, வேறு இல்லை.
வழக்கறிஞர் அந்த இடத்தை கவனிக்காமல் சென்றுவிட்டார்.
நன்றி ரம்யா அவர்களே..
தங்கள் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி
நன்றி coolzkarthi,
நன்றி பழமைபேசி,
நன்றி பதிவு,
நன்றி நசரேயன்
உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
பின்னூட்டத்தில் செய்தது தவறில்லை என்று கூறியதிற்கு மீண்டும் நன்றிகள் பல
கடனட்டைகளில் 2 லிருந்து 2.5 % வரை கடைக்காரருக்கு /பதிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை வாடிக்கையாளருக்கு புரிய வைத்திருக்கலாம். எனக்கு பல சமயங்களில் பல கடைகளில் இந்த அனுபவம் உண்டு. இப்போதெல்லாம் முன்னரே கேட்டுக்கொண்டுதான் மேற்கொண்டு வாங்குவதா இல்லையா என்று முடிவு செய்வேன்.
இதனால் நம் bargaining power குறையுமோ என்னவோ. எப்படியிருந்தாலும் நமக்கு பிடித்திருந்தால்தானே வாங்க போகிறோம் :-)
பொதுவாக புத்தக விற்பனையில் கழிவு கேட்பது, அதனால் ஏற்படும் வலி பற்றி கவனத்தை ஈர்க்க நேரமும், இடமும் கிடைக்குமிடத்தில் எல்லாம் நான் நிறைய பேசியதுண்டு, எழுதியதுண்டு.
அந்த வகையில் தங்கள் வலைபூ பதிவுக்கு நான் சொன்ன பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் தந்து தங்கள் கவனத்தை என் கருத்தின்பால் திருப்பிய அனைவருக்கும் நன்றி. அதுபோல் தங்கள் வலைபூ பதிவுக்கும் நன்றி.
மன்னிக்கவும்... எனக்கு வழக்கறிஞரின் கருத்து ஏற்பு இல்லை.
புத்தகமோ மற்ற பொருளோ விற்பனைக்கு என்று வந்து விட்டால் எல்லாமே commodity என்ற ஒரே குடையின் கீழ். நாமே போய் ஏதோ ஒரு புத்தகக் கடையில் கழிவுகள் ஏதும் அறிவிக்கப்படாதபோது கழிவு கேட்டல் நிச்சயம் தவறு. புத்தகப் பதிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து கழிவு உண்டு என்று செய்து விளம்பரம் நடத்தும் ஒரு கண்காட்சியில் புத்தகம் வாங்கும் நுகர்வோருக்கு அவர்களாகவே கழிவு தர வேண்டும். இல்லையேல் அது மோசடி, ஏமாற்று வேலை. அது போன்ற இடத்தில் கழிவு கேட்டது தவறு என்பது மிகப் பெரிய தவறு.
கழிவு தர ஒப்புகை இல்லையென்றால் புத்தகத்தை கண்காட்சியில் வைக்கவே வேண்டாமே.
நகை வாங்கப் போகும் கடையில் சேதாரம் இல்லை என்று சொன்ன பிறகும், ஆசாரி வருத்தப் படுவாரே, கடைக்காரர் நட்டமடைவாரே என்று யோசிப்பாரா வழக்கறிஞர்?
சட்டத்தையும் உரிமையையும் பற்றி நன்கு அறிந்த ஒரு வழக்கறிஞரின் இந்த வாதம் ஆச்சரியமாக இருக்கிறது.
புத்தக பதிப்பாளர்களின் சங்கத்தலைவர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் பதிப்புத்தொழில் லாபம் தரத்தக்க தொழிலாகவே இருக்கிறது என்று சமீபத்தில் ஆனந்தவிகடனில் கூறியிருந்தார்.அதோடு ஒரே நேரத்தில் அதிகமாக விற்பனையாக புத்தக கண்காட்சி வழிவகை செய்கிறது. ஆகவே புத்தக கழிவு தருவதில் அவர்களுக்கு நட்டமில்லை.
புத்தக பதிப்பாளர்களின் சங்கத்தலைவர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் பதிப்புத்தொழில் லாபம் தரத்தக்க தொழிலாகவே இருக்கிறது என்று சமீபத்தில் ஆனந்தவிகடனில் கூறியிருந்தார்.அதோடு ஒரே நேரத்தில் அதிகமாக விற்பனையாக புத்தக கண்காட்சி வழிவகை செய்கிறது. ஆகவே புத்தக கழிவு தருவதில் அவர்களுக்கு நட்டமில்லை.
நிச்சயமாய் தவறில்லை ராகவன். அவர்கள் அறிவித்திருக்க வேண்டும், அப்படியில்லாமல் நாம் காசாக கொடுத்தால் மட்டும் அவர்களுக்கு கழிவு தர இனிக்குமா..?
துணியேயில்லாமல் நடு ரோட்டில் ஒடுவதை போல் தோன்றுவதற்கு நாமா அவர்களின் கோவணத்தை உருவுகிறோம்.. உங்களது பதிப்பகத்தார்தானே தங்களுக்கு அடக்கமான விலையில் ஓரே நேரத்தில் மொத்த விற்பனனக்காக, க்ழிவு கொடுத்து விற்கிறார்கள். அதனால் உங்கள் ராயல்டியில் ஏதாவது துண்டு விழுந்தால் அதற்கு நாங்கள் காரணமல்ல. அது மட்டுமில்லாமல். சிறிய, பெரிய என்று எழுத்தாளர்கள் பாகுபாடில்லாமல் எல்லாருடைய புத்தங்களும் விற்பனனயாகுமிடம் புத்தக கண்காட்சியிலேதான். நாம் ஒரு கடையில் நல்ல வியாபாரம் செய்தால் கடைக்காரரே நமக்கு சிறப்பு தள்ளுபடி கேட்காமலே தள்ளுபடி தருவார். ஆனால் இவர்களோ.. அறிவித்துவிட்டு தர மறுப்பது நுகர்வோரை சிறுமைபடுத்துகிறதனம்.
ஆகையால் ராகவன்.. உங்கள் உரிமையை என்றுமே விட்டு கொடுக்காதீர்கள்.. நீங்கள் செய்தது.. மிக. சரியே..
\\ நாம் இந்த 70 ரூபாய்க்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமா..
நான் செய்தது தவறா?\\
உங்கள் நிலையில் நான் இருந்தாலும் நீங்கள் செய்தவாறே செய்திருப்பேன்.
எந்த நிலையிலும் யாரும் எம்மை ஏமாற்ற இடம் கொடுக்ககூடாது.
பணம் பெரிய விசயமில்லை ஆனால் ஏமாளியாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்.
Post a Comment