மாலை நேரம் அண்ணன் கேபிளாரை அழைத்தேன். அண்ணன் அப்போ ரொம்ப பிசியா கொடைக்கானலில் டிஸ்கஷனில் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவேன் என்றும் பின்னர் அழைப்பதாகவும் சொன்னார். சற்று நேரத்திற்கெல்லாம் அண்ணன் தண்டோரா அழைத்தார். நலம் விசாரித்தார். ஜூன் 29, 2009 அன்று பதிவர் சந்திப்பு நடேசன் பூங்காவில் இருப்பதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் அழைத்தார். அதற்கு முன்பாக சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நிச்சயம் சந்திக்கலாம் என்று கூறி கேபிள் அண்ணனும் வந்துவிடட்டும் என்றும் கூறினேன்.
அன்று மாலையே அண்ணன் இலக்கியா குடந்தை அன்புமணி அவர்களையும் அழைத்து இருந்தேன். அவர் நிச்சயம் மறு நாள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.
ஜூன் 26, 2009
அண்ணன் இலக்கியா அன்பு மணி மாலை 6.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அவர் கூட பல விசயங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். குறிப்பாக குடந்தை யில் வாழ்ந்த நாட்களைப் பற்றியும், ஊரைப்பற்றியும், துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும் பேசினோம். நான் பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார். பதிவர் சந்திப்பில் அண்ணன் உண்மைத் தமிழன் வருவார் என எதிர்பார்த்து இருப்பதாகவும், அவர் வந்தால் அவரிடம் சில கேள்விகள் (முக்கியமாக கவிதை என்று சொல்லி ஒரு இடுகைப் போட்டாரே அதைப் பற்றி - அதைப் படிக்க இங்க சொடுக்கவும்) கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அதை அண்ணன் இலக்கியா ஒரு பதிவாகவே போட்டுவிட (அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்), அண்ணன் உண்மைத் தமிழன் பதிவர் சந்திப்பில் இருந்து அப்ஸ்காண்ட்.
பெ....ரி...ய பதிவாக எழுதி தள்ளிய அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள், நேற்று மட்டும் கிட்டதட்ட 16 இடுகைகள் எழுதி டரியலாக்கிவிட்டார். அண்ணே மத்தவங்க பதிவையும் நாங்க எல்லாம் படிக்கணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் போடுங்கண்ணே... தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போடணும், பின்னூட்டம் போடணும், நாங்களும் இடுகை எழுதணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க...
நண்பர் இலக்கியா அவர்களை அழைத்தது ஞாபகம் இல்லாமல் எனது நண்பர் மணி அவர்களுடன் இரவு உணவுக்காக வெளியில் செல்வதாக சொல்லிவிட்டேன். அதனால் அவர்களை பார்த்து பின்னர் இரவு உணவுக்கு அவருடன் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் இருவரும் கிளம்பி நண்பர் மணி அவர்களைப் பார்க்க போனோம்.
பின்னர் அண்ணன் குடந்தை அன்புமணி, அவர்கள் DMS அருகில் இறங்கி, வேறு சென்றார்.
ஜூன் 27, 2009.
அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்திக்கலாம் என்று அண்ணன் கேபிளாருக்கு தொலைப்பேசினேன். அவரும் அண்ணே சைதாப்பேட்டை வந்திடுங்க அண்ணன் தண்டோரா அலுவகத்தில் சந்திக்கலாம் என்றும் சொன்னார்.
சரி என்று சைதாப்பேட்டைக்கு வந்து அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் சந்திக்கப் போனப்போது அங்கு அண்ணன் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா அவர்கள் இருந்தார்.
மிக்க சந்தோஷமாக இருந்தது. முதன் முதலாக இவர்களைப் பார்த்தப் போதும், அது முதல் சந்திப்பு மாதிரியே இல்லை. நெடு நாள் பழகிய நட்பு மாதிரி இருந்தது. அண்ணன்கள் கேபிளாரும், தண்டோராவும் வாங்கிக் கொடுத்த சாத்துக்குடி ஜூசுக்கு ஒரு பெரிய “ஓ”. அன்று பல் மருத்துவர் அவர்களின் அப்பாயின்மெண்ட் இருந்ததால், நெடு நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியவில்லை.
இதற்கு பிறகு இரண்டு / மூன்று முறை அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்தித்தேன்.
அண்ணன் ச்சின்னப்பையன் அவர்கள் இந்தியா வந்தபோது அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் வைத்து சந்தித்தோம்.
அண்ணன் கேபிளாரிடம், ஒரு விடியோ காசெட் சரியில்லை எனவும், அதை டிவிடி யாக மாற்ற உதவிச் செய்ய இயலுமா என்றுக் கேட்டேன். அண்ணன் கேபிளார் தன்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னை ரிச்சி தெருவில் உள்ள பல கடைகளில் ஏறி இறங்கி, கடைசியாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டாலின்ஸ் என்ற இடத்தில் கொடுத்து அதை டிவிடியாக மாற்றிக் கொடுத்தார். விடியோ காசெட் மாற்றுவதில் என்ன கஷ்டம் என்று நீங்க நினைப்பது எனக்குப் புரிகின்றது. அது Sony Hi8 காசெட். அந்த காசெட் சரியாக வேலைச் செய்யாமல், எங்கேயோ சிக்கிக் கொண்டு, விடியோ காமில் போட்டால் ஓடவேயில்லை. அதை நானும் எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. அந்த காசெட்டில் அப்படி என்னதான் இருக்கு என்றால், என் மகன் அரவிந்த் சிறுவனாக இருந்த போது அடித்த லூட்டிகள், நடந்தது, ஓடியது எல்லாம் அந்த காசெட்டில்தான் இருந்தது. இந்த உதவி செய்த அண்ணன் கேபிளாருக்கு நன்றிகள் பல. உண்மையாகச் சொல்லுகின்றேன் அன்று அவர் எனக்காக அலைந்ததும், நண்பர்கள் பலரை அழைத்து தொலைப் பேசியதும், பின்னர் ஏக்னாத் போய் முயற்சி செய்த்தும் மறக்க இயலாதது. நன்றி கேபிள்அண்ணே... கேபிள் அண்ணன் கிட்ட கேளுங்க, நிச்சயம் சரி செஞ்சு கொடுப்பார் என்று சொன்ன புதுகை அப்துல்லா அண்ணனுக்கும் நன்றி.
அண்ணன் கேபிளாரும், அண்ணன் தண்டோராவும் நான் நைஜிரியா திரும்பும் முன் என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அப்போது இணைய நண்பர்களுக்காக பதிவர் ஸ்ரீ... அவர்களும் வந்து இருந்தார்.
அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களும் வீட்டிற்கு வந்து இருந்தார். மகன் அரவிந்து கூட அவரின் படமும் .. அரவிந்து கூட அப்துல்லா அண்ணன் பேசிகிட்டு இருந்தார். என் கூட பேசியவை ரொம்ப குறைவு. அவர்கள் இருவரும் பேசியதை நம் இடுகையில் போடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அதைப் பற்றி எதுவும் இந்த இடுகையில் கிடையாது. (உண்மையைச் சொல்லப் போனால் இருவரும் என்னைப் பேசவே விடவில்லை..)
அண்ணன் கேபிளார் அவர்களை படம் எதுவும் எடுக்கவில்லை. எப்போதும் மனதிலேயே இருப்பதால் படங்கள் எடுக்கவில்லை.

அண்ணன் புதுகை அப்துல்லா, அரவிந்த்..
அண்ணன் தண்டோரா (இந்த படம் எடுத்தது அண்ணன் கேபிளார்)
இணைய நண்பர்களுக்காக .... ஸ்ரீ.. (இந்தப் படம் எடுத்ததும் அண்ணன் கேபிளார்தான்...)
அடுத்து
சென்னை வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் மதுரைப் பதிவர்கள சந்திப்பு பற்றி...
தொடரும்
38 comments:
நம்ம அப்துல்லா அண்ணனா....ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு சும்மா டெர்ரரா ஆயிட்டாரு...
அவ்வ்வ்வ்வ்வ்.....!!!!
( பகிர்வுக்கு நன்றி ராகவன் அண்ணே !!! பாசப்பறவைகள்னு ஒரு நாவலே நீங்க எழுதலாம்..)
ஆஹா அற்புதமான சந்திப்புகள் சார்
அண்ணன் கேபிள் அவர்களை நானும் இந்தியா போனதும் சந்திப்பேன்....
பாசப்பறவைகளுடனான சந்திப்பை விவரித்திருக்கும் விதம் அழகு ராகவன் அண்ணா
அண்ணே நான் செஞ்சது ஒரு சாதாரண விஷயம்.. ஆனாலும் ரொம்பத்தான் பாராட்டீட்டீங்க.. மிக்க நன்றி.. உங்கள் மனதில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அரவிந்தை கேட்டதாய் சொல்லவும்..
நானும் இந்தியா வந்த அப்பறமா இவங்க எல்லாரையும் பார்க்கணும்னு பிளான் போட்டுருக்கேன் :)
நீங்க ஒரு தடவ U.K ட்ரிப்'க்கு பிளான் போடுங்க..
நன்றி அ.மு. செய்யது... நாவல் எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க.. எல்லாம் நீங்க எல்லாம் காண்பிக்கும் பாசமுங்க
நன்றி பிரியமுடன் வசந்த். ஆம் வசந்த் நிச்சயம் நீங்க அண்ணன் கேபிள்,சந்திக்க வேண்டும். ரொம்ப நல்லா பழகுவார்.
நன்றி சக்தி.
நன்றி கேபிள். தாங்கள் செய்த உதவி நிச்சயமாக எனக்கு பெரிசுங்க.
// கார்ல்ஸ்பெர்க் said...
நானும் இந்தியா வந்த அப்பறமா இவங்க எல்லாரையும் பார்க்கணும்னு பிளான் போட்டுருக்கேன் :) //
நிச்சயம் பாருங்க கார்ல்ஸ்பெர்க். சந்திக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் நிச்சயம் அனுபவித்து புரிந்து கொள்ள வேண்டிய விச்யங்க.
// கார்ல்ஸ்பெர்க் said...
நீங்க ஒரு தடவ U.K ட்ரிப்'க்கு பிளான் போடுங்க.. //
யூகே ட்ரிப் ப்ளான் பண்ணனும். அபுஜா லண்டன் ஹீத்ரோ நேரடி ப்ளைட் இருக்கு. செய்யலாம். அடுத்த வருடம் தான் அது முடியும். முயற்சி செய்கின்றேன். தங்கள் அழைப்புக்கு நன்றி.
நானும் உடன் வந்த மாதிரியே இருந்ததுங்க ஐயா!
பாகம்-3க்கும் பாகம்-4க்கும் இடையில புதுகை அண்ணனோட உருமாற்றம் பெரிய அளவுல இருக்கே? மெய்யாலுமே, அவர்தான் இவரா?? அல்லது இவர்தான் அவரா??
மிக்க நன்றி பழமை பேசி அய்யா..
ஆமாம் பாகம் 3 க்கும் 4 க்கும் நடுவில் நிறைய உருமாற்றம். கமல்ஹாசன் மாதிரி ஓவ்வொரு மாதத்திற்கும் ஒரு உருவம் தரிக்க போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
//கேபிள் அண்ணன் கிட்ட கேளுங்க, நிச்சயம் சரி செஞ்சு கொடுப்பார் என்று சொன்ன புதுகை அப்துல்லா அண்ணனுக்கும் நன்றி.//
அடுத்த வீட்டு நெய்யே
ஏன் பொண்டாட்டி கையே...
அப்துல்லா அண்ணே ஸூப்பருஉஉஉ
வலையுலக நட்பு உண்மையிலேயே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு !!
பெ....ரி...ய பதிவாக எழுதி தள்ளிய அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள், நேற்று மட்டும் கிட்டதட்ட 16 இடுகைகள் எழுதி டரியலாக்கிவிட்டார். அண்ணே மத்தவங்க பதிவையும் நாங்க எல்லாம் படிக்கணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் போடுங்கண்ணே... தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போடணும், பின்னூட்டம் போடணும், நாங்களும் இடுகை எழுதணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க...]]
ஹா ஹா ஹா
எல்லோரையும் அண்ணன் என்று போட்ட நீங்க ஸ்ரீயை மட்டும் போடவில்லை என்பதை இங்கே அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் அண்ணா ...
அர்விந்தை பார்த்ததில் மிக்க சந்தோஷம் அதுவும் அண்ணன் புதுகை அப்துல்லாவோடு பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா போன்றவர்கள் பார்க்க மேலும் ஆசையை தூண்டிட்டீங்களே ண்ணே..
நான் இந்தியா போகும்போது இந்த இரண்டு ஆபாச.. சாரி! பாச பறவைகளை கண்டிபாக சந்திப்பேன்!!
நடத்துங்க.... நடத்துங்க.... !! மேலும் ஒரு சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்...!!
என்னை அண்ணன் என்று போட்டிருப்பதில் கொஞ்சம்கூட நியாயமில்லைங்கண்ணா... எனக்கு வயசு 35 தானுங்கண்ணா... (ம்... வயதை சொல்ல வேண்டாம்னு பார்த்தேன் முடியலையே....)
நாம் சந்தித்த அந்த நாட்கள் மீண்டும் கண்முன் நிழலாடுகிறது. மிக்க நன்றிண்ணா.
அருமையான+கலக்கலான சந்திப்பு அண்ணே..
சும்மா சூப்பரா ரெக்கை கட்டி பறக்குது அண்ணா, பாசப்பறவைகள்
//பாசப் பறவைகள் //
உண்மை தான் சார்...
அண்ணே! படங்கள் அருமை. தாக்குதல் தொடரட்டும்.
ஹை! அப்துல்லா அண்ணனும், அரவிந்தும்......
ஹாய்! அரவிந்த்! :)
//நம்ம அப்துல்லா அண்ணனா....ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு சும்மா டெர்ரரா ஆயிட்டாரு...//
ஆமாங்க பாட்டு பாடி பயமுறுத்துவாரு!
பகிர்வுக்கு நன்றியண்ணே!
//அடுத்த வீட்டு நெய்யே
ஏன் பொண்டாட்டி கையே...
அப்துல்லா அண்ணே ஸூப்பருஉஉஉ
//
யோவ் முரு அண்ணே, அந்தாளு சுத்த சினிமாக்காரன்.பிலிம்லே பொறந்து பிலிம்லே வாழுறவன்.எனக்கு அதப்பத்தி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாததால ஒரு ரெபரன்ஸ் குடுத்தா...
(பைதிவே உங்க பின்னூட்டம் படித்து குபீர் என சிரித்தேன்) :)))
//ஆமாங்க பாட்டு பாடி பயமுறுத்துவாரு!
//
ஏய்ய்ய்ய்...சைலன்ஸ்
:)))
அண்ணே பதிவுலகத்திலகமே வாழ்க
இதையெல்லம் படிக்கும்ப்போது உங்க இத்தனை வருஷ வெக்கேஷனில் அதிகம் சந்தோஷப்படுத்தியது இதுதான் என்பேன்.. இந்த சந்தோஷம் காலகாலமாக தொடரட்டும்....
தொடருங்கோ
வாழ்த்துக்கள்
இனிய சந்திப்புகள். இனிய அறிமுகம். நன்றி சார்.
பதிவு சூப்பர்!!
சந்திப்புக்கள் அனைவர் பற்றியும் அபாரமாக விவரித்துள்ளீர்கள்
உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி சூறாவளிச் சுற்றுபயணம் செய்து
அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
விபரங்களுக்கு நன்றி!!
//
//ஆமாங்க பாட்டு பாடி பயமுறுத்துவாரு!
//
ஏய்ய்ய்ய்...சைலன்ஸ்
:)))
//
என்ன சத்தம் இந்த நேரம்.............
இந்த பாட்டு தான் நினைவிற்கு வருகிறது போங்க :-)
நடகட்டும் நடகட்டும் "-)
//
அ.மு.செய்யது said...
நம்ம அப்துல்லா அண்ணனா....ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு சும்மா டெர்ரரா ஆயிட்டாரு...
அவ்வ்வ்வ்வ்வ்.....!!!!
//
லேசா குசும்பு தெரியலை ???
எனக்கு தெரியுது :-)
//
அ.மு.செய்யது said...
நம்ம அப்துல்லா அண்ணனா....ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு சும்மா டெர்ரரா ஆயிட்டாரு...
அவ்வ்வ்வ்வ்வ்.....!!!!
//
லேசா குசும்பு தெரியலை ???
எனக்கு தெரியுது :-)
சூப்பர் அண்ணா..
பயண அனுபவத்தின் நான்காம் பாகத்தையும் சுவாரசியம் குறையாம பட்டைய கெளப்பிட்டிங்க..
பொதுவா தொடர் இடுகைல அடுத்தடுத்த இடுகைகள் கொஞ்சம் முடிக்கும் அவசரத்துடன் எழுதி சுவாரசியம் குறைந்திட வாய்ப்பு இருக்கும்..
உங்க இடுகையும் அப்டி ஆகிடுமோனு நெனச்சேன்.. ஆனா.. நான்காம் பாகமும் சிறப்பா வந்திருக்கு..
நாலு பாகம் எழுதறதா சொன்னிங்க.. இப்போவே நாலு ஆகிடுச்சு.. இன்னும் எவ்ளோ பாகம் இருக்கு..
கோயமுத்தூர் பதிவர்களுடனான சந்திப்பையும் இதே சுவாரசியத்தோடு எதிர்பார்க்கிறேன்..
பகிர்விற்கு நன்றி அண்ணா..
Post a Comment