ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...
ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை
ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.
பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.
கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.
பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)
பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.
அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..
வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.
எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..
சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்
சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்
சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்
வெல்கம் டிரிங்ஸ் ???
தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.
சங்கத் தலைவர் ...
மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )
சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க
பொறுப்பி :
1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.
3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.
92 comments:
=)). மீ த ஃபர்ஸ்டு
//1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல.//
கேமரா கம்பெனிகாரன் வெறுத்து போய் கலையரசன்னே வெச்சிடப்போறான்=))
/சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க//
அட என்னண்ணே. காஃப் சிரப் பாட்டில் வெச்சிட்டு காமெடி பண்றீங்க
=))... கலக்கிட்டீங்க... அழகான வீடு மற்றும் படங்கள்...
கலகலப்ரியா said...
/ =))... கலக்கிட்டீங்க... //
ஆமாம். ஆமாம். ரெண்டு பாட்டிலும் காலியா இருக்கே=))
//சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க
//
தோடா...உங்களுக்கு எதும் உடம்பு சரி இல்லையா?? ஏன் மருந்து சாப்பிட்டுருக்கீங்க???
அண்ணே “ஃபுல்” ஃபார்ம்ல இருக்குறீங்க போல.
சீக்கிரம் ஒரு பதவி ஏற்புக்கு வந்திடறேன்
அணிமா வாழ்க (அவர் தானே வேலை வாங்கி தாறாரு)
அண்ணன் வாழ்க வாழ்க (முன் மொழிந்ததற்கு)
//சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்//
ஐ, புதுசா ஒரு ஆள்(டு) சிக்கியிருக்காரா!!!!
அவருக்கு நல்ல வரவேர்ப்புதான்
//3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.//
எங்களது கிளையின் நிதியை தலைமை செயலகத்துக்கு அனுப்ப பொட்டலம் கட்டி வைத்தாயிற்று. ஆனால் அதை அனுப்பத் தேவையான நிதி இல்லாததால் அனுப்ப முடியவில்லை.
அதனால் தயவு கூர்ந்து தலைமை செயலகத்திலிருந்து எங்கள் கிளைக்கு கொஞ்சம் பணத்தை அனுப்பிவைக்கவும்....
:)
வெல்கம் ட்ரிங்கஸ் எப்படி ஆரஞ்ச் கலருக்கு மாறிச்சு ?
அப்போ மாநாடு நடக்கலையா? :( அணிமா பக்கத்தூருக்கு போறாராமே...
கலக்கிட்டீங்க...
அடிச்சி தூள் கிளப்புங்க, ஐயா......... என்ஜாய்..........
/ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.
//
மேலே இருக்கிறது தமிழா..??::))
அப்புறம் உங்க ஊர்லேயும் மிரண்டா ஆரஞ்சு கலர்தானா.. ஹி..ஹி.. நான் கருப்பா இருக்குமோன்னு நினைச்ச்சேன். பக்கத்தில நிக்கிற பாட்டில்ல பகார்டின்னு எழுதியிருக்கே.. அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா..
சந்திப்பு ஒரே கலக்கல்தான் போங்க!!!!
அந்த ஊடு நெம்ப அழகா இருக்குது. நைஜீரியா வந்தாத் தங்க முடியுமா? பன்னீர் சோடா அங்கியும் கெடைக்குதா?
அண்ணே முடில...
அண்ணே பகார்டி இருமல் மருந்து உங்க ஊருலேயும் கிடைக்குதா?
நல்லாயிருக்கு. நேசன் வரவில்லையா.
அப்புறம் அந்த கடைசி படம்...
நல்லாயிருங்க... நாமதான் சந்திக்க முடியாம போச்சு,
அட... பாகார்டி
ம்.மாநாட்டில் என்ன தீர்மானம் எடுத்தீர்கள்...
:-))
ண்ணா...கடேசி போட்டோல இருக்கறது என்னங்கணணோவ்...
அண்ணே... நீங்க திரும்பி ரஜினி ஸ்டைல்ல ஒரு போஸ் குடுக்குறீங்க பாருங்க!!
டாப்புக்கே டாப்பு அடிச்ச மாதிரி இருக்கு!!
3 பேரு இருந்துகிட்டு என்ன பில்டப்ப்ப்ப்பு?
கமண்ட்ஸ் எல்லாம் சரவெடி..
என்ஜாய் பண்ணுங்க தல...
அண்ணே தூள்...
அந்த கிளாஸ்ல இருக்குறது என்னதுன்னு முதல் போட்டோவுலேயே தெரிஞசுடுச்சு... மிக்ஸீங் என்னன்னு நாங்க போட்டோவுலேயே மோந்து பார்த்துருவோமுல்ல...
இல்ல இல்ல அது ஆரஞசு ஜுஸ்னு நீங்க சொன்னா நாங்க... நம்பிட்டோம்...
நல்ல சந்திப்பாக இருந்திருக்கும்.... பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா,...
நீங்க மட்டும் கலக்கு கலக்குன்னு கலக்கி குடிச்சிட்டிங்க......
எங்களுக்கெல்லாம் கூரியர்ல அனுப்புங்க............
வீடும், படங்களும் அழகு..............
ஆகா. செம கூட்டமா இருக்கேண்ணே. பரவாயில்லை. பதிவர்கள் எண்ணிக்கையில் 50% அளவு பார்வையாளர்களும் வந்திருக்காங்களே. கலக்கல்தான்.
ஆமா செலவு எவ்வளவு ஆச்சு. கணக்கு வேணும்னு யாருப்பா அது முனுமுனுக்கிறது
அண்ணே. உங்க சீக்ரெட் ஆஃப் எனர்ஜி என்னண்ணே?
ஒண்ணு மட்டும் புரியுது. பதிவர்கள் எல்லாம் எழுதறதை விட்டுட்டு மாநாடு நடத்தறதுல குறியா இருப்பது
// நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.//
நிதி நிலைமை மிக மோசமாக - கடைசி படத்த பார்த்தா அப்படி தெரியலேயே!
//எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.//
நாற்காலி, மைக் எல்லாம் பத்திரமா இருக்குல.
சூப்பர் சந்திப்புதான்.மாநாட்டை சீக்கிரம் நடத்துங்க.
//மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக்கொடுத்த புகைப் படக் கருவி//
நல்லா இருக்கட்டும், ஒவ்வொரு இடுகையிலும் இவரை நினைவுகூர்வது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு, ஃபீஈஈஈஈலிங்க்ஸ்.........
:-)
//நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.
//
க்கும். சங்கத்துல மொத்தமே மூணுபேரு. இதுக்கு பொ.செ வேற!!!
:))
//அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா..
//
இல்ல கேபிள் அண்ணே... அது கோலிசோடா :)
//மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி/
இந்த மூட்டப்பூச்சி தொல்லை தாங்கமுடியலேப்பா....
நிதிக்காக வெளிநாடு சென்று
நிதிக்காக மாநாட்டை தள்ளிப்போட்டு
நிதிக்கேட்டு இடுக்கையிட்டு
இதற்கு நீதி கேட்க ஆளே இல்லையா ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்
ரெண்டு பேரை வெச்சி ஒரு மாநாட்டை நடத்தி அதையும் ஒரு இடுக்கையா போட்ட மாண்புமிகு வலைப்பதிவு நைஜீரியா சிங்கம் வாழ்க
என்ன சார் பதிவர் சந்திப்புன்னீங்க....பிரியாணி இல்லாமலா?....உங்க ஊர்ல போட்டல்தான் பிரியாணியா?
மாநாடு நடத்த அகில உலக தமிழ்ப் பதிவர்கள் சங்க அனுமதியைப் பெற்று விட்டீர்களா?
flight பிடிச்சு போற தூரத்தில் இருந்து கிட்டு சந்திப்பு துவங்க சில
மணித்துளிகளே இருப்பதால் உங்கள் அட்டெண்டென்சை போனில் பதிவு செய்யவும் என்று சொன்னதோடு அல்லாமல் எனக்கான இருமல் மருந்துக்கும் ப்ராக்சி கொடுத்த தலைவரே . பொ.செ வே
நான் அனுப்பிய சங்க நிதிக்கு
ரசீது இன்னும் கிடைக்காததால்
அடுத்த சந்திப்புக்கு “தயாராக” ( கவிதைகள் நேரில் வாசிக்கப்படும் )இருக்குமாறு தாழ்மையுடன் எச்சரிக்கிறேன்
ஒவ்வொரு போட்டோவுக்கும் நன்றி சொல்றிங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையே!
its nice that tamil bloggers meets are happening in distant countries like Nigeria
நல்லா இருக்கு 4 பேர்ல 3 பேர் சேர்ந்து நடத்தின வலைப் பதிவர் மாநாடு ராகவன்
அதுக்கு ஒரு இடுகை கொடுத்த தாராளம் இருக்கே அது அதைவிடப் பெரிது
ம்ம் பக்கார்டி பார்ட்டி... கலக்கிட்டீங்க தலைவரே...
பகார்டி பார்க்கும் போதே தெரியுது உங்க சங்கம் ரொம்ப பணமுடக்கதுல இருக்கு. உங்க ஏரியால எதாவது இடைதேர்தல் வரவதற்கு வாய்ப்பு இருக்கான்னு பாருங்க ..
அண்ணே! போன தடவை நீங்களும் அணிமாவும் சேர்ந்து நடத்திய உலகப் பதிவர் மாநாட்டுக்கு நீங்கள் கேட்டுக்கொண்ட $100 க்கு சில்லரை இல்லாமல் $500 ஐ அனுப்பி வைத்தேனே! போனா போவுது இந்த மாநாட்டுக்கும் $100 ஐ எடுத்துக்கொண்டு மரியாதையா மீதமுள்ள $300 ஐ உடனே அனுப்பிவிடுங்கள். இல்லாவிட்டால் உலகப்பதிவர் சங்கத்தில் புகார் கொடுத்துவிடுவேன் ஆமாம். சரிண்ணே! அது என்ன கடைசிபடத்தில் ஒரு பெரிய பாட்டில் இருக்கு? நைஜீரியா நல்லெண்ணையா???????
//என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க //
ஆ.... ஆ....
/சும்மா போசுக்காக... //
//அட என்னண்ணே. காஃப் சிரப் பாட்டில் வெச்சிட்டு காமெடி பண்றீங்க//
// பாட்டில்ல பகார்டின்னு எழுதியிருக்கே.. அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா.//
//சரிண்ணே! அது என்ன கடைசிபடத்தில் ஒரு பெரிய பாட்டில் இருக்கு? நைஜீரியா நல்லெண்ணையா??????//
வயிறு வலிக்குதுங்க...::))
வானம்பாடிகள் said...
// =)). மீ த ஃபர்ஸ்டு //
ஆமாம் அண்ணே... ரொம்ப நன்றிங்க
//கேமரா கம்பெனிகாரன் வெறுத்து போய் கலையரசன்னே வெச்சிடப்போறான்=)) //
அண்ணே அந்த அளவுக்கு உதவி செஞ்சாருங்க. அலுவலக வேலை எல்லாம் முடிச்சுட்டு, எனக்காக கூட வந்து வாங்கி கொடுத்ததை மறக்க இயலாதுங்க.
//அட என்னண்ணே. காஃப் சிரப் பாட்டில் வெச்சிட்டு காமெடி பண்றீங்க //
இஃகி... இஃகி... நல்ல காஃப் சிரப் அண்ணே..
//ஆமாம். ஆமாம். ரெண்டு பாட்டிலும் காலியா இருக்கே=)) //
இஃகி... இஃகி... ரொம்ப நன்றிங்க.
// கலகலப்ரியா said...
=))... கலக்கிட்டீங்க... அழகான வீடு மற்றும் படங்கள்...//
நன்றி ப்ரியா
// புலவன் புலிகேசி said...
//சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க
//
தோடா...உங்களுக்கு எதும் உடம்பு சரி இல்லையா?? ஏன் மருந்து சாப்பிட்டுருக்கீங்க??? //
நன்றி புலவரே...
உடம்பு சரியாயிடுச்சு... அதுக்காகத்தான் இந்த மருந்துங்க
// நட்புடன் ஜமால் said...
அண்ணே “ஃபுல்” ஃபார்ம்ல இருக்குறீங்க போல.
சீக்கிரம் ஒரு பதவி ஏற்புக்கு வந்திடறேன்
அணிமா வாழ்க (அவர் தானே வேலை வாங்கி தாறாரு)
அண்ணன் வாழ்க வாழ்க (முன் மொழிந்ததற்கு) //
நன்றி தம்பி ஜமால்..
// அப்பாவி முரு said...
//சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்//
ஐ, புதுசா ஒரு ஆள்(டு) சிக்கியிருக்காரா!!!!
அவருக்கு நல்ல வரவேர்ப்புதான் //
அய்யோ ஆடு இல்லீங்க அவர் சிங்கம்.
##//3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.//
எங்களது கிளையின் நிதியை தலைமை செயலகத்துக்கு அனுப்ப பொட்டலம் கட்டி வைத்தாயிற்று. ஆனால் அதை அனுப்பத் தேவையான நிதி இல்லாததால் அனுப்ப முடியவில்லை.
அதனால் தயவு கூர்ந்து தலைமை செயலகத்திலிருந்து எங்கள் கிளைக்கு கொஞ்சம் பணத்தை அனுப்பிவைக்கவும்....##
எத்தனை தடவை அனுப்புவதுங்க
// கோவி.கண்ணன் said...
:)
வெல்கம் ட்ரிங்கஸ் எப்படி ஆரஞ்ச் கலருக்கு மாறிச்சு ? //
அதாங்க எனக்கும் புரியலை...
இந்த ஊரில் மிராண்டா எல்லாம் ஆரஞ்சு கலரில்தாங்க இருக்கு
// பீர் | Peer said...
அப்போ மாநாடு நடக்கலையா? :( அணிமா பக்கத்தூருக்கு போறாராமே..//
நன்றி பீர். ஆமாங்க..
// T.V.Radhakrishnan said...
கலக்கிட்டீங்க... //
நன்றி அண்ணே.
// Chitra said...
அடிச்சி தூள் கிளப்புங்க, ஐயா......... என்ஜாய்.........//
நன்றிங்க சித்ரா...
// Cable Sankar said...
மேலே இருக்கிறது தமிழா..??::))//
ஆமாங்க தமிழ்தான். வருங்கால இயக்குனருக்கு இதில் சந்தேகம் என்ன. இந்த மாதிரி படத்துக்கு பேர் வச்சாலும் வரிச் சலுகை கிடைக்குங்க.
//அப்புறம் உங்க ஊர்லேயும் மிரண்டா ஆரஞ்சு கலர்தானா.. ஹி..ஹி.. நான் கருப்பா இருக்குமோன்னு நினைச்ச்சேன். பக்கத்தில நிக்கிற பாட்டில்ல பகார்டின்னு எழுதியிருக்கே.. அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா.. //
ஆமாங்க இங்கேயும் இப்ப எல்லாம் மிராண்டா கலர் ஆரஞ்சு கலராகத்தாங்க இருக்கு.
வரும் போது பன்னீர் சோடா ஒன்னும் உங்களுக்கு வாங்கி வர முயற்சி செய்கின்றேங்க.
// goma said...
சந்திப்பு ஒரே கலக்கல்தான் போங்க!!!! //
நன்றிங்க கோமா.. அப்ப அப்ப இது மாதிரி நடக்கும்.
// லதானந்த் said...
அந்த ஊடு நெம்ப அழகா இருக்குது. நைஜீரியா வந்தாத் தங்க முடியுமா? பன்னீர் சோடா அங்கியும் கெடைக்குதா? //
வாங்க நைஜிர்யா வந்தா உங்களுக்கு இல்லாத இடமா...எப்போ வந்தாலும் நம்ம வீட்டில் தங்கலாங்க.
பன்னீர் சோடா இங்க நிறைய கிடைக்குதுங்க. அய்யாவுக்கு பிடிக்குமுங்களா?
// பிரியமுடன்...வசந்த் said...
அண்ணே முடில... //
வாங்க தம்பி வாங்க. உங்களாலேயே முடியலையா.
// தத்துபித்து said...
அண்ணே பகார்டி இருமல் மருந்து உங்க ஊருலேயும் கிடைக்குதா? //
அது இல்லாத ஊரும் ஒரு ஊரா?
// அகநாழிகை said...
நல்லாயிருக்கு. நேசன் வரவில்லையா.
அப்புறம் அந்த கடைசி படம்...
நல்லாயிருங்க... நாமதான் சந்திக்க முடியாம போச்சு, //
ஆமாங்க நேசன் வரவில்லை. தம்பி கொஞ்சம் பிசி.
ஜூலை 2010 ல் நிச்சயம் சந்திப்போமுங்க.
// ஈரோடு கதிர் said...
அட... பாகார்டி //
ஆமாங்க அடடா பகார்டிங்க தாங்க.
தங்கள் வருகைக்கு நன்றிங்க.
// Rajeswari said...
ம்.மாநாட்டில் என்ன தீர்மானம் எடுத்தீர்கள்...
:-))//
தேதி குறிப்பிடபடாமல் மாநாடு ஒத்தி வைக்கப் படுகின்றது என்ற தீர்மானம் எடுக்கப் பட்டது.
// கண்ணா.. said...
ண்ணா...கடேசி போட்டோல இருக்கறது என்னங்கணணோவ்... //
அதுத் தெரியாமத்தானே நான் படம் போட்டு எல்லோரையும் கேட்டு இருக்கேன்.
// கலையரசன் said...
அண்ணே... நீங்க திரும்பி ரஜினி ஸ்டைல்ல ஒரு போஸ் குடுக்குறீங்க பாருங்க!!
டாப்புக்கே டாப்பு அடிச்ச மாதிரி இருக்கு!!
3 பேரு இருந்துகிட்டு என்ன பில்டப்ப்ப்ப்பு?
கமண்ட்ஸ் எல்லாம் சரவெடி.. //
தம்பி கலையரசா ரொம்ப நன்றிப்பா
3 பேரா இருந்தாலும் வலைப் பதிவர்கள்ங்க.
// ஸ்ரீ.கிருஷ்ணா said...
என்ஜாய் பண்ணுங்க தல... //
நன்றி ஸ்ரீ. கிருஷ்ணா அண்ணே
// நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே தூள்...
அந்த கிளாஸ்ல இருக்குறது என்னதுன்னு முதல் போட்டோவுலேயே தெரிஞசுடுச்சு... மிக்ஸீங் என்னன்னு நாங்க போட்டோவுலேயே மோந்து பார்த்துருவோமுல்ல...
இல்ல இல்ல அது ஆரஞசு ஜுஸ்னு நீங்க சொன்னா நாங்க... நம்பிட்டோம்... //
நன்றி நாஞ்சில். நாமெல்லாம் யாரு... ஸ்காட்லாண்ட் யார்டுக்கே சவால் விடுவோமில்ல
// ஆ.ஞானசேகரன் said...
நல்ல சந்திப்பாக இருந்திருக்கும்.... பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா,... //
ரொம்ப நன்றி நண்பா..
// Sangkavi said...
நீங்க மட்டும் கலக்கு கலக்குன்னு கலக்கி குடிச்சிட்டிங்க......
எங்களுக்கெல்லாம் கூரியர்ல அனுப்புங்க............
வீடும், படங்களும் அழகு.............. //
நன்றி சங்கவி. உங்க வருக்கைக்கு நன்றி.
// S.A. நவாஸுதீன் said...
ஆகா. செம கூட்டமா இருக்கேண்ணே. பரவாயில்லை. பதிவர்கள் எண்ணிக்கையில் 50% அளவு பார்வையாளர்களும் வந்திருக்காங்களே. கலக்கல்தான்.
ஆமா செலவு எவ்வளவு ஆச்சு. கணக்கு வேணும்னு யாருப்பா அது முனுமுனுக்கிறது //
வாங்க நவாஸுதன். பயங்கர கூட்டம். கட்டு படுத்தவே முடியவில்லீங்க.
செலவு கணக்கு தனிமடலில் அனுப்பப் படும்.
// tamiluthayam said...
ஒண்ணு மட்டும் புரியுது. பதிவர்கள் எல்லாம் எழுதறதை விட்டுட்டு மாநாடு நடத்தறதுல குறியா இருப்பது //
சும்மா இருக்கப் பிடாது... எதாவது செஞ்சுகிட்டு இருக்கணுமில்ல..
// S.A. நவாஸுதீன் said...
அண்ணே. உங்க சீக்ரெட் ஆஃப் எனர்ஜி என்னண்ணே? //
பூஸ்ட் இஸ் தெ சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி
## கரிசல்காரன் said...
// நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.//
நிதி நிலைமை மிக மோசமாக - கடைசி படத்த பார்த்தா அப்படி தெரியலேயே! ##
படத்தை பார்த்து எடைப் போடக்கூடாதுங்க. மாநாடு நடத்த பணம் இல்லீங்க..
// SUFFIX said...
//எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.//
நாற்காலி, மைக் எல்லாம் பத்திரமா இருக்குல. //
முதல்லேயே அதை எல்லாம் ஒளிச்சு வச்சுட்டோமில்ல.
// ஸ்ரீ said...
சூப்பர் சந்திப்புதான்.மாநாட்டை சீக்கிரம் நடத்துங்க. //
நன்றி ஸ்ரீ. விரைவில் எதிர் பாருங்கள்.
// உருப்புடாதது_அணிமா said...
:-) //
::=))
##எம்.எம்.அப்துல்லா said...
//நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.
//
க்கும். சங்கத்துல மொத்தமே மூணுபேரு. இதுக்கு பொ.செ வேற!!!
:)) ##
அண்ணே வருங்காலத்தில் 300000 பேர் சேருவதாக கூறியிருக்கின்றார்கள் அண்ணே.
//அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா..
//
இல்ல கேபிள் அண்ணே... அது கோலிசோடா :) //
அண்ணே சரியாக் கண்டுபிடுச்சுட்டீங்க
// அபுஅஃப்ஸர் said...
//மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி/
இந்த மூட்டப்பூச்சி தொல்லை தாங்கமுடியலேப்பா....//
மருந்து அடிச்சுடுவோமா?
//நிதிக்காக வெளிநாடு சென்று
நிதிக்காக மாநாட்டை தள்ளிப்போட்டு
நிதிக்கேட்டு இடுக்கையிட்டு
இதற்கு நீதி கேட்க ஆளே இல்லையா ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்
ரெண்டு பேரை வெச்சி ஒரு மாநாட்டை நடத்தி அதையும் ஒரு இடுக்கையா போட்ட மாண்புமிகு வலைப்பதிவு நைஜீரியா சிங்கம் வாழ்க //
நன்றி தம்பி அபு
// கிளியனூர் இஸ்மத் said...
என்ன சார் பதிவர் சந்திப்புன்னீங்க....பிரியாணி இல்லாமலா?....உங்க ஊர்ல போட்டல்தான் பிரியாணியா? //
அண்ணே எம் பேரைச் சொல்லி, அங்க நீங்க பிரியாணி போட்டுடுங்க.
// நேசமித்ரன் said...
flight பிடிச்சு போற தூரத்தில் இருந்து கிட்டு சந்திப்பு துவங்க சில
மணித்துளிகளே இருப்பதால் உங்கள் அட்டெண்டென்சை போனில் பதிவு செய்யவும் என்று சொன்னதோடு அல்லாமல் எனக்கான இருமல் மருந்துக்கும் ப்ராக்சி கொடுத்த தலைவரே . பொ.செ வே
நான் அனுப்பிய சங்க நிதிக்கு
ரசீது இன்னும் கிடைக்காததால்
அடுத்த சந்திப்புக்கு “தயாராக” ( கவிதைகள் நேரில் வாசிக்கப்படும் )இருக்குமாறு தாழ்மையுடன் எச்சரிக்கிறேன் //
வாங்கோ வாங்கோ... அடுத்த சந்திப்புக்கு உங்க கவிதையுடன் மற்ற சரக்கையும் அன்புடன் எதிர்பார்க்கும் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்.
// வால்பையன் said...
ஒவ்வொரு போட்டோவுக்கும் நன்றி சொல்றிங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையே! //
என்னாச் செய்வது... நம்ம பிறப்பு அப்படித்தான்.
// குப்பன்.யாஹூ said...
its nice that tamil bloggers meets are happening in distant countries like Nigeria //
நன்றி குப்பன்.யாஹூ
// thenammailakshmanan said...
நல்லா இருக்கு 4 பேர்ல 3 பேர் சேர்ந்து நடத்தின வலைப் பதிவர் மாநாடு ராகவன்
அதுக்கு ஒரு இடுகை கொடுத்த தாராளம் இருக்கே அது அதைவிடப் பெரிது //
நன்றி தோழி தேனம்மை.
// அண்ணாமலையான் said...
ம்ம் பக்கார்டி பார்ட்டி... கலக்கிட்டீங்க தலைவரே... //
நன்றி அண்ணாமலையாரே.......
// Romeoboy said...
பகார்டி பார்க்கும் போதே தெரியுது உங்க சங்கம் ரொம்ப பணமுடக்கதுல இருக்கு. உங்க ஏரியால எதாவது இடைதேர்தல் வரவதற்கு வாய்ப்பு இருக்கான்னு பாருங்க ..//
ஒன்னுமில்லீங்க அண்ணே.. எதோ ஒரு பாட்டில் பகார்டிதாங்க..
இடைத் தேர்தல் வாய்ப்பு ஒன்னுமில்லீங்க
// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! போன தடவை நீங்களும் அணிமாவும் சேர்ந்து நடத்திய உலகப் பதிவர் மாநாட்டுக்கு நீங்கள் கேட்டுக்கொண்ட $100 க்கு சில்லரை இல்லாமல் $500 ஐ அனுப்பி வைத்தேனே! போனா போவுது இந்த மாநாட்டுக்கும் $100 ஐ எடுத்துக்கொண்டு மரியாதையா மீதமுள்ள $300 ஐ உடனே அனுப்பிவிடுங்கள். இல்லாவிட்டால் உலகப்பதிவர் சங்கத்தில் புகார் கொடுத்துவிடுவேன் ஆமாம். சரிண்ணே! அது என்ன கடைசிபடத்தில் ஒரு பெரிய பாட்டில் இருக்கு? நைஜீரியா நல்லெண்ணையா??????? //
தம்பி நிஜாம் நீங்க அனுப்பிய பணம் தலைமைச் சங்கத்திற்கு வரவேயில்லீங்க.
ஆமாம் தம்பி அது நைஜிரியாவில் கிடைக்கும் பாமாயில்ங்க
// மகேஷ் : ரசிகன் said...
//என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க //
ஆ.... ஆ....//
என்னாச்சு... இப்படி அலறீங்க..
// பலா பட்டறை said...
/சும்மா போசுக்காக... //
//அட என்னண்ணே. காஃப் சிரப் பாட்டில் வெச்சிட்டு காமெடி பண்றீங்க//
// பாட்டில்ல பகார்டின்னு எழுதியிருக்கே.. அது என்ன.. ?நைஜீரியா பன்னீர் சோடாவா.//
//சரிண்ணே! அது என்ன கடைசிபடத்தில் ஒரு பெரிய பாட்டில் இருக்கு? நைஜீரியா நல்லெண்ணையா??????//
வயிறு வலிக்குதுங்க...::)) //
வாங்க பலா பட்டறை. நன்றிங்க
Post a Comment