எங்க வீட்டுத் தேட்டத்தை படம் எடுத்துப் போட்டு இருகேன்.
புகைப் படக் கருவி வாங்கிக் கொடுத்த வடலூரான் கலையரசனுக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.
கலர் கலரா குருவியைப் பார்த்தவுடன் கிளிகிட்டேன். தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. ஏன் என்றுத் தெரியவில்லை.
இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ள செம்பருத்திச் செடி.
வீட்டு வரவேற்பறையில் இருந்து எடுத்தப் படம்
வேர்கடலை செடி. இந்த படம் வருங்கால சந்ததியனருக்காக. தமிழ் நாடு முழுவதும் வருங்காலத்தில் கான்கிரீட் காடுகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
வளர்ந்துவரும் முளைக்கீரை..
பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்
புதினா - ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு.
பாகல் பூ
முதல் பாகல் பிஞ்சு
தோட்டம் வெளியில் இருந்து
சாமந்திபூ
வெண்டை பூ பூப்பதற்கு முன்
வெண்டைப் பூ
வெண்டைக்காய் - எங்கள் தோட்டத்தில் காய்த்த முதல் காய்
எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா
இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்
இதுமாதிரி படங்கள் போடுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நண்பர் ஞானசேகரன் அவர்களின் கண்டதும் சுட்டதும் வலைப்பூ. அதற்காக அவருக்கு நன்றிகள் பல.
பொறுப்பி :
1. இந்த படங்களில் லைட்டிங் சரியில்லை, அது சரியில்லை என்று யாராவது திட்ட வேண்டுமானால் என்னை மட்டும் திட்டவும். புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.
2. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி, நானும் நண்பர் ஞானசேகரனைப் பார்த்து படம் போட்டு இருக்கேன். தயவு செய்து யாரும் அவரையும் என்னையும் எந்த விதத்திலும் கம்பேர் செஞ்சுடாதீங்க. அவர் மலை நான் மடு.
3. இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
109 comments:
அன்பின் இராக்வன்
அருமையான புகைப்படங்கள்
நல்வாழ்த்துகள்
wow... sooooo beautiful..! dream garden..! enga ithu ragavan..? nigeriava..? mm..?
நன்றிங்க சீனா அண்ணா
நன்றி கலகலப்ரியா..
இது நைஜிரியாவில் நான் இருக்கும் வீட்டில் இருக்கும் தோட்டம் தாங்க.
great ..ரொம்ப அழகா இருக்குது தோட்டம்.. படங்களும் தான்..
இது எங்கே நைஜீரியாவிலா இத்தனை அழகான தோட்டம்?
நன்றி முத்துலெட்சுமி..
இந்த தோட்டம் நைஜிரியாவில்தாங்க போட்டு இருக்கேன்.
எல்லா படங்களும் அருமை!!!
கொடுத்து வைத்தவர், தோட்டம் போட இடம் உள்ள வீட்டில் வாழ்வதற்கு.:-):-)
தோட்டமும் அருமை, படங்கள் எடுத்த விதமும் அருமை.
குறை ஒனும் இல்லை அண்ணா...
ம்ம்ம். அந்த வெண்டைக்காய் எனக்கு வேணும்:)
ம்ம்ம்... . அந்த பாகற்காயும் எனக்குதான் :)
p.c.sri ram சாயல் தெரியுது எப்டிங்ணா
வெண்டை பூவும், வெண்டைக்காயும் எடுத்தது அழகா இருக்கு,
ஹேய்...
சாமந்தி என் சாமந்தி எனக்கு பிடிச்ச சாமந்தி சூப்பரு...
ரோஜாவும் ரொம்ப அழகா இருக்குண்ணா...
வடலூரான் கலையரசன் மாப்பிக்கு கல்யாணப்பரிசா ரோஜாவில் செய்த பூங்கொத்து அனுப்புச்சுடுங்கண்ணா...
//இராகவன் நைஜிரியா said...
நன்றி கலகலப்ரியா..
இது நைஜிரியாவில் நான் இருக்கும் வீட்டில் இருக்கும் தோட்டம் தாங்க.//
great-nga... avvvvv...
அண்ணே படங்கள் அருமைனு சொல்லும் முன் ஒரு முக்கியமான ஒன்று. பாராட்டுகள் மற்றும் என் பொறாமையும் கூட உங்கள் அழகான தோட்டத்திற்கு. மெய்சிளிர்ப்புன்ய் சொல்லுவாங்களே அதை உணர்ந்தேன்,... அதிலும் சிமென்ட் காரைகளாக மாறும் பூமியை சுட்டிக்காட்டிய உங்கள் கரங்களுக்கு சபாஸ். அப்பரம் சொல்லவேண்டியது! படங்கள் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்பதே சரி. மிக அழகு..... படம் சொல்லும் செய்திகள் அதைவிட அழகு... பாராட்டவில்லை பெருமைப்படுகின்றேன்.... என்னையும் ஊக்குவித்தமைக்கு நன்றி நண்பா,...
அட அட! குடுத்து வச்சவருண்ணே. இதே நம்மூர்ல இப்புடி போட முடியுமா? பச்சு பச்சுன்னு அழகு. படத்துக்கு படம் பின்னூட்டம் அழகு:)
//இதுமாதிரி படங்கள் போடுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நண்பர் ஞானசேகரன் அவர்களின் கண்டதும் சுட்டதும் வலைப்பூ. அதற்காக அவருக்கு நன்றிகள் பல.
//
கண்டதும் சுட்டதும் மூலம் இப்படி ஒரு நல்லது செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி நண்பா,...
//2. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி, நானும் நண்பர் ஞானசேகரனைப் பார்த்து படம் போட்டு இருக்கேன். தயவு செய்து யாரும் அவரையும் என்னையும் எந்த விதத்திலும் கம்பேர் செஞ்சுடாதீங்க. அவர் மலை நான் மடு.//
அண்ணே இது ஓவரா படல! உங்களுக்கே ஞாயமா?????
// இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.//
அடுத்த கவிதைக்காக காத்திருப்போர் பட்டியலில் 999 வது நபர்..
இவ்ளோ அழகாத் தோட்டம் செய்ய முடியுமா அங்கே !வெயில் காலத்தில மட்டுமா.எப்பவுமேயா ?பாகல்காய் பூவோட அழகாயிருக்கு ராகவன்.
படங்கள் அருமையாய் இருக்கு அண்ணாச்சி!இயற்க்கை சூழ வாழ வாய்த்து இருக்கு உங்களுக்கு...ஹும்..
எல்லாமே அழகு!
ஆனாலும் அந்த பெயர் தெரியாப்பூ!
பேரழகே!
அருமை!
//p.c.sri ram சாயல் தெரியுது எப்டிங்ணா//
இதெல்லாம் ரொம்ப நெக்குலுன்னோவ்....
எனக்கும் இந்த மாதிரி தோட்டம் போட்டு காய்கறிகள் எல்லாம் வளர்க்கனும்னு ஆசை சார். பார்க்கலாம்.
அருமையான புகைப்படங்கள்
"முதல் பாகல் பிஞ்சு" என்னவோ அந்த படம் மிகவும் பிடித்து விட்டது. கசக்கும் காயும் கண் கவர் மலரும்..... இதுவே ஒரு கவிதை கரு கொண்ட அருமையான படம்.
Nice snaps... and a good garden...
அண்ணா
உங்க மனசு மாதிரியே ஒவ்வொரு பூவும் அழகா இருக்கு.
அதிலும் அந்த பெயர் தெரியாத பூ, கொள்ளை அழகு.
கவிதை இல்லாமல் போனது ஒரு குறைதான் இந்த இடுகையில்.
ரொம்ப அழகா
இருக்குது தோட்டம்...........
நைஜீரியாத் தோட்டமா? அழகுதான். அதுவும் அந்த அள்வெடுத்துத் தைத்தது போன்ற சிவப்பு, பெயர் தெரியாத பூ, ரொமப அழகு.
நம் வீட்டில் காய்த்த காய்களைக் கொண்டு செய்யும் சமையல் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!
தோட்டக்கலை நிபுணர் நமது அண்ணா வாழ்க!! செடி, கொடிகள், பூக்கள் அழகோ அழகு, உங்களை கவிஞனாக்கியது இதுக தானா? வளரட்டும், வாழ்த்துக்கள்!!
நல்லாயிருக்கு இராகவன்..
காய்கறியெல்லாம காசு கொடுத்து வாங்க வேண்டாம். சூப்பர்.
நல்ல இருக்கு சார். நாங்க இதே மாதிரி நிறைய பூ செடிங்க வச்சி இருந்தோம் வீடு கட்டும் போது அதை எல்லாம் கான்கிரீட் போட்டு முடிட்டோம்.
நம் வீட்டுக்கு குழந்தைகளை, முதல் முதலாக படம் பிடிக்கும் போது- லைட்டிங்கா நம் கண்ணுக்கு தெரியும். குழந்தைகளின் புன்னகை தான் பெரிசு. குழந்தைகளின் கிறுக்கல்கள் சுமாராக இருந்தாலும் அவை சூப்பர் தான். ராகவன் சாரின் இயற்கை மீதான காதல் வாழ்க.
தோட்டம் மிக அருமை...தோட்டத்தை போல் நம் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒழுங்குப் படுத்தினால் நம் வாழ்க்கை என்னும் மனத் தோட்டத்தில் காய்களும் கனிகளும் மலர்களும் மலரந்து மகிழ்வுபடுத்திக் கொண்டிருக்கும். வாழ்த்துக்கள்.
பாகல் பூ, ரோஜாப் பூ...பாகற்காய்....அழகு
padangal super
முடியாதது.....முயலாதது மட்டுமே....
நல்ல முயற்சி ராகவன் தொடருங்கள்
அண்ணே கூடிய விரைவில் டைரக்டர்/தயாரிப்பாளர் தாங்கள் வீட்டு கதவு தட்ட நிறைய(?) வாய்ப்பு இருக்கு....
இன்னுமொரு தொழில் கைவசம் இருக்குனு சொல்லுங்க...
அந்த செம்பருத்தி துளிரை எடுத்திருக்கும் ஆகாயப் பார்வை
காத்திருந்து பூப்பதை பார்ப்பதும் முதல் காய் சாமிக்கு என்பதும் கழிந்த நூற்றாண்டு கடைசி பனையோலை கவிதைகள்
வாழ்வின் மீதங்களில் இருந்து வாழ எத்தனிப்பதுதான் நன்நம்பிக்கை
தனக்கான கூட்டை பின்னும் பறவை ஒவ்வொரு சுள்ளியை நாரை
சேர்த்தபின்னும் க்றீச்சிடும் குரல்
எதற்கு ஈடு ?
இந்த படங்களின் கீழிருக்கும் பின்னூட்டங்கள்
பல படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன.. அதுவும் அந்த சிவப்பு பட்டுப்(போன்ற)பூவும், வெண்டைப்பிஞ்சுகளும் அழகு.!
//புகைப் படக் கருவி வாங்கிக் கொடுத்த வடலூரான் கலையரசனுக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.//
அண்ணாச்சி... அப்படியே படத்தை மாட்டி பொட்டு வைக்காம இருந்தா சரி!
அப்புறம்... 2,4,7, 14 படங்களின் கிளாரிட்டி ஆச்சரியம்! அது கேமராவினால் இல்லண்ணே... உங்களுடைய ரசிப்பு தன்மையும், கிரியேட்டிவிட்டியும், கைராசியும்தான்!!
முதல் படத்தில் இருக்கும் குருவியும் நீங்கள் வளர்ப்பது தானா!?
அந்த செவப்பு பூ படம் சூப்பர்
Nice Snaps sir.....
eppavum en blogla ethaavathu potta padichitu comments poduvinga...ippa onnum podarathu ilaye....romba busyaa sir...
photos are very nice, beyond photos I salute and appreciate your interest on Gardening
இயற்க்கை உரங்களை உபயோகியுங்கள் காணாமல் போன பறவைகள் தேடி வரும்.
படங்கள் அழகு
விஜய்
// கபீஷ் said...
எல்லா படங்களும் அருமை!!!
கொடுத்து வைத்தவர், தோட்டம் போட இடம் உள்ள வீட்டில் வாழ்வதற்கு.:-):-)
//
நன்றி கபீஷ்.
// RAMYA said...
தோட்டமும் அருமை, படங்கள் எடுத்த விதமும் அருமை.
குறை ஒனும் இல்லை அண்ணா...
ம்ம்ம். அந்த வெண்டைக்காய் எனக்கு வேணும்:)
ம்ம்ம்... . அந்த பாகற்காயும் எனக்குதான் :) //
நன்றி தங்கச்சி ரம்யா. உங்களுக்கு இல்லாததா.. எடுத்துக்கோங்க
// ராஜவம்சம் said...
p.c.sri ram சாயல் தெரியுது எப்டிங்ணா //
நன்றி ராஜவம்சம்.
// பிரியமுடன்...வசந்த் said...
வெண்டை பூவும், வெண்டைக்காயும் எடுத்தது அழகா இருக்கு,
ஹேய்...
சாமந்தி என் சாமந்தி எனக்கு பிடிச்ச சாமந்தி சூப்பரு...
ரோஜாவும் ரொம்ப அழகா இருக்குண்ணா...
வடலூரான் கலையரசன் மாப்பிக்கு கல்யாணப்பரிசா ரோஜாவில் செய்த பூங்கொத்து அனுப்புச்சுடுங்கண்ணா... //
நன்றி வசந்த். கலைக்கு கல்யாணமா? அனுப்பிடுவோம்.
// ஆ.ஞானசேகரன் said...
அண்ணே படங்கள் அருமைனு சொல்லும் முன் ஒரு முக்கியமான ஒன்று. பாராட்டுகள் மற்றும் என் பொறாமையும் கூட உங்கள் அழகான தோட்டத்திற்கு. மெய்சிளிர்ப்புன்ய் சொல்லுவாங்களே அதை உணர்ந்தேன்,... அதிலும் சிமென்ட் காரைகளாக மாறும் பூமியை சுட்டிக்காட்டிய உங்கள் கரங்களுக்கு சபாஸ். அப்பரம் சொல்லவேண்டியது! படங்கள் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்பதே சரி. மிக அழகு..... படம் சொல்லும் செய்திகள் அதைவிட அழகு... பாராட்டவில்லை பெருமைப்படுகின்றேன்.... என்னையும் ஊக்குவித்தமைக்கு நன்றி நண்பா,... //
நன்றி தங்கள் வருகைக்கு
// கண்டதும் சுட்டதும் மூலம் இப்படி ஒரு நல்லது செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி நண்பா,...//
மீண்டும் ஒருமுறை நன்றி நண்பா
//அண்ணே இது ஓவரா படல! உங்களுக்கே ஞாயமா????? //
இல்லீங்க உண்மையைத்தான் சொன்னேன்.
// அடுத்த கவிதைக்காக காத்திருப்போர் பட்டியலில் 999 வது நபர்.. //
மீண்டு வந்திருவோமில்ல
// வானம்பாடிகள் said...
அட அட! குடுத்து வச்சவருண்ணே. இதே நம்மூர்ல இப்புடி போட முடியுமா? பச்சு பச்சுன்னு அழகு. படத்துக்கு படம் பின்னூட்டம் அழகு:) //
அண்ணே ரொம்ப நன்றிங்க அண்ணே.
சென்னையிலும் என் வீட்டைச் சுற்றி மரங்கள் உண்டுங்க. மாமரம், நார்த்தை, எலுமிச்சை, சப்போட்டா, தென்னை இப்படி நிறைய மரங்கள் இருக்குங்க.
// ஹேமா said...
இவ்ளோ அழகாத் தோட்டம் செய்ய முடியுமா அங்கே !வெயில் காலத்தில மட்டுமா.எப்பவுமேயா ?பாகல்காய் பூவோட அழகாயிருக்கு ராகவன். //
இங்கு நான் குடியிருப்பது பங்களா டைப் வீடுங்க. அதனால் முடியுது.
இங்கு இரண்டு இரண்டு சீசன் மட்டும்தாங்க. மழைக்காலம், வெயில்காலம் மட்டும்தான்.
நல்ல மழைக்காலத்தில் போட்டது இப்போ இப்படி வந்திருக்கு.
// Imayavaramban said...
நண்பரே -
உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com///
நன்றி - இமயவரம்பன்.
உங்கள் வலைப்பதிவை நிச்சயம் பார்க்கின்றேங்க.
// பா.ராஜாராம் said...
படங்கள் அருமையாய் இருக்கு அண்ணாச்சி!இயற்க்கை சூழ வாழ வாய்த்து இருக்கு உங்களுக்கு...ஹும்.//
அண்ணே நன்றி.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எல்லாமே அழகு!
ஆனாலும் அந்த பெயர் தெரியாப்பூ!
பேரழகே!
அருமை! //
நன்றி யோகன் பாரிஸ்
// அப்பாவி முரு said...
//p.c.sri ram சாயல் தெரியுது எப்டிங்ணா//
இதெல்லாம் ரொம்ப நெக்குலுன்னோவ்....//
தம்பி அப்படியெல்லாம் சொல்லபிடாது..
// என். உலகநாதன் said...
எனக்கும் இந்த மாதிரி தோட்டம் போட்டு காய்கறிகள் எல்லாம் வளர்க்கனும்னு ஆசை சார். பார்க்கலாம் //
நன்றி இனியவன் உலகநாதன். நீங்க நிச்சயம் நடத்திக் காட்டுவீங்க - உங்க இடுகைகளைப் படிக்கும் போது உங்கள் தன்னம்பிக்கை தெரிகின்றதுங்க.
// T.V.Radhakrishnan said...
அருமையான புகைப்படங்கள் //
நன்றி TVR அண்ணே.
// Chitra said...
"முதல் பாகல் பிஞ்சு" என்னவோ அந்த படம் மிகவும் பிடித்து விட்டது. கசக்கும் காயும் கண் கவர் மலரும்..... இதுவே ஒரு கவிதை கரு கொண்ட அருமையான படம். //
நன்றி சித்ரா.. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.
// அது ஒரு கனாக் காலம் said...
Nice snaps... and a good garden... //
நன்றி கனாக்காலம்.
// S.A. நவாஸுதீன் said...
அண்ணா
உங்க மனசு மாதிரியே ஒவ்வொரு பூவும் அழகா இருக்கு.
அதிலும் அந்த பெயர் தெரியாத பூ, கொள்ளை அழகு.
கவிதை இல்லாமல் போனது ஒரு குறைதான் இந்த இடுகையில்.//
நன்றி தம்பி நவாஸ்.
கவிதை எழுதிடுவோம்... விரைவில் எதிர் பாருங்கள்..
// Sangkavi said...
ரொம்ப அழகா
இருக்குது தோட்டம்.......... //
நன்றி சங்கவி. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
// ஹுஸைனம்மா said...
நைஜீரியாத் தோட்டமா? அழகுதான். அதுவும் அந்த அள்வெடுத்துத் தைத்தது போன்ற சிவப்பு, பெயர் தெரியாத பூ, ரொமப அழகு.
நம் வீட்டில் காய்த்த காய்களைக் கொண்டு செய்யும் சமையல் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!! //
நன்றி ஹுஸைனம்மா..
இப்பத்தான் காய்க்க ஆரம்பிச்சு இருக்குங்க.
// SUFFIX said...
தோட்டக்கலை நிபுணர் நமது அண்ணா வாழ்க!! செடி, கொடிகள், பூக்கள் அழகோ அழகு, உங்களை கவிஞனாக்கியது இதுக தானா? வளரட்டும், வாழ்த்துக்கள்!! //
நன்றி. நான் எல்லாம் தோட்டக்கலை நிபுணர் இல்லீங்க.. மிக மிகச் சாதாரணமானவன்..
// butterfly Surya said...
நல்லாயிருக்கு இராகவன்..
காய்கறியெல்லாம காசு கொடுத்து வாங்க வேண்டாம். சூப்பர்.//
நன்றி சூர்யா. வெண்டை, பாகல் இரண்டும் இப்பத்தான் காய்க்க ஆரம்பிச்சு இருக்குங்க.
கீரை ஒரு 10 தடவை மேல் பண்ணியாச்சுங்க.
கடையில் வாங்குவதைவிட ரொம்ப ருசியா இருக்குங்க.
// Romeoboy said...
நல்ல இருக்கு சார். நாங்க இதே மாதிரி நிறைய பூ செடிங்க வச்சி இருந்தோம் வீடு கட்டும் போது அதை எல்லாம் கான்கிரீட் போட்டு முடிட்டோம். //
வாங்க Remeoboy. நன்றி தங்கள் வருகைக்கு.
// tamiluthayam said...
நம் வீட்டுக்கு குழந்தைகளை, முதல் முதலாக படம் பிடிக்கும் போது- லைட்டிங்கா நம் கண்ணுக்கு தெரியும். குழந்தைகளின் புன்னகை தான் பெரிசு. குழந்தைகளின் கிறுக்கல்கள் சுமாராக இருந்தாலும் அவை சூப்பர் தான். ராகவன் சாரின் இயற்கை மீதான காதல் வாழ்க. //
நன்றி தமிழ். தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.
// கிளியனூர் இஸ்மத் said...
தோட்டம் மிக அருமை...தோட்டத்தை போல் நம் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒழுங்குப் படுத்தினால் நம் வாழ்க்கை என்னும் மனத் தோட்டத்தில் காய்களும் கனிகளும் மலர்களும் மலரந்து மகிழ்வுபடுத்திக் கொண்டிருக்கும். வாழ்த்துக்கள்.//
நன்றிங்க இஸ்மத். வசிஷ்டர் வாயில் பிரம்மரிஷி என்றுச் சொல்லுவார்களே அதுமாதிரி தங்களிடம் வாழ்த்துப் பெற்றது.
உங்களின் படங்களின் தாக்கமும் என்னை இந்த இடுகைப் போடத் வைத்ததுங்க.
// ஸ்ரீராம். said...
பாகல் பூ, ரோஜாப் பூ...பாகற்காய்....அழகு //
நன்றி ஸ்ரீராம்.
// ஜீவன்பென்னி said...
padangal super //
நன்றி ஜீவன் பென்னி
// ஆரூரன் விசுவநாதன் said...
முடியாதது.....முயலாதது மட்டுமே....
நல்ல முயற்சி ராகவன் தொடருங்கள் //
நன்றி ஆரூரன் விசுவநாதன்.
// அபுஅஃப்ஸர் said...
அண்ணே கூடிய விரைவில் டைரக்டர்/தயாரிப்பாளர் தாங்கள் வீட்டு கதவு தட்ட நிறைய(?) வாய்ப்பு இருக்கு.... //
நன்றி அபு..
அப்படி வந்தா கதை, கவிதை எழுத வாய்ப்பு உங்களுக்குத்தான்.
// Rajeswari said...
இன்னுமொரு தொழில் கைவசம் இருக்குனு சொல்லுங்க...//
வாம்மா மின்னல் தங்கச்சி... நமக்கு மேல ரொம்ப பேர் இருக்காங்க... நானெல்லாம் ஜுஜுபி.
// நேசமித்ரன் said...
அந்த செம்பருத்தி துளிரை எடுத்திருக்கும் ஆகாயப் பார்வை
காத்திருந்து பூப்பதை பார்ப்பதும் முதல் காய் சாமிக்கு என்பதும் கழிந்த நூற்றாண்டு கடைசி பனையோலை கவிதைகள்
வாழ்வின் மீதங்களில் இருந்து வாழ எத்தனிப்பதுதான் நன்நம்பிக்கை
தனக்கான கூட்டை பின்னும் பறவை ஒவ்வொரு சுள்ளியை நாரை
சேர்த்தபின்னும் க்றீச்சிடும் குரல்
எதற்கு ஈடு ?
இந்த படங்களின் கீழிருக்கும் பின்னூட்டங்கள் //
நன்றி தம்பி நேசா..
வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள்.
// ஆதிமூலகிருஷ்ணன் said...
பல படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன.. அதுவும் அந்த சிவப்பு பட்டுப்(போன்ற)பூவும், வெண்டைப்பிஞ்சுகளும் அழகு.! //
அண்ணே உங்க பாராட்டுதல்களை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. ரொம்ப நன்றிங்க.
// கலையரசன் said...
அண்ணாச்சி... அப்படியே படத்தை மாட்டி பொட்டு வைக்காம இருந்தா சரி! //
தம்பி இந்த புகைப் பட கருவி வாங்க நீங்கதான் ரெகமெண்ட் பண்ணீங்க...
//அப்புறம்... 2,4,7, 14 படங்களின் கிளாரிட்டி ஆச்சரியம்! அது கேமராவினால் இல்லண்ணே... உங்களுடைய ரசிப்பு தன்மையும், கிரியேட்டிவிட்டியும், கைராசியும்தான்!! //
ரொம்ப நன்றிங்க.
// வால்பையன் said...
முதல் படத்தில் இருக்கும் குருவியும் நீங்கள் வளர்ப்பது தானா!? //
இல்லீங்க. கொஞ்ச நாள் வந்துச்சு. இப்ப எல்லாம் எங்கப் போச்சுன்னு தெரியலை.
// அறிவிலி said...
அந்த செவப்பு பூ படம் சூப்பர் //
நன்றி அறிவிலி
// Pradeep said...
Nice Snaps sir.....
eppavum en blogla ethaavathu potta padichitu comments poduvinga...ippa onnum podarathu ilaye....romba busyaa sir... //
நன்றி பிரதீப். ஆபீஸ் ஷிப்டிங் நடந்துகிட்டு இருக்கு. நெட் இரவில் வீட்டில் மட்டும்தான் இருக்கு.
பல வலைப்பூக்கள் படிக்காமல் விட்டு போய்விடுகின்றது. ரொம்ப சாரி. இனிமேல் பார்த்துப் படிக்கின்றேன்.
// குப்பன்.யாஹூ said...
photos are very nice, beyond photos I salute and appreciate your interest on Gardening //
நன்றி குப்பன்.யாஹூ
// கவிதை(கள்) said...
இயற்க்கை உரங்களை உபயோகியுங்கள் காணாமல் போன பறவைகள் தேடி வரும்.
படங்கள் அழகு
விஜய் //
நன்றி கவிதைகள் விஜய்.
முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு வளர்ந்த செடிகள் தாங்க அத்தனையும்.
லேட்டா வந்தாலும் வர்ற மக்கள் குத்து குத்துன்னு கும்மாங்குத்து குத்தி ஊருல உள்ள மின்அஞ்சல் முழுக்க உங்க பேச்சு தானா?
கடைசி இரண்டு படங்கள் உங்கள் பெருமையைப் போல அருமை.
மூச்சு வாங்குது பந்தியில் இடம் பிடித்தது.
இமயவர்மன் போட்ட அப்ளிகேசனையும் படித்தேன்.
அது தான் இமயம். நீங்க பாட்டுக்கு ஊக்கு கொடுத்துருவீங்க? அவரும் எழுதுவதெல்லாம் எழுத்தல்லன்னு தட்டப்போகிறார்?
அருமையான புகைப்படங்கள்
பெருமையா இருக்கு..
அந்த பெயர் இல்லதபூக்கு ஒரு புது பெயர் சொல்லடுமா நண்பரே....
அந்த பூவின் பெயர்
"தமிழ்ப்பூ""
பஞ்சகவ்யா உபயோகித்தீர்களா ?
அல்லது கடைகளில் விருக்கும் organic fertilizer use செய்தீர்களா?
எனது மற்றுமொரு வலைப்பதிவு
http://agasool.blogspot.com/
விஜய்
// ஜோதிஜி said...
லேட்டா வந்தாலும் வர்ற மக்கள் குத்து குத்துன்னு கும்மாங்குத்து குத்தி ஊருல உள்ள மின்அஞ்சல் முழுக்க உங்க பேச்சு தானா?
கடைசி இரண்டு படங்கள் உங்கள் பெருமையைப் போல அருமை.
மூச்சு வாங்குது பந்தியில் இடம் பிடித்தது.
இமயவர்மன் போட்ட அப்ளிகேசனையும் படித்தேன்.
அது தான் இமயம். நீங்க பாட்டுக்கு ஊக்கு கொடுத்துருவீங்க? அவரும் எழுதுவதெல்லாம் எழுத்தல்லன்னு தட்டப்போகிறார்? //
நன்றி ஜோதிஜி அய்யா... தங்களின் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும்
// singamla366 said...
அருமையான புகைப்படங்கள்
பெருமையா இருக்கு..
அந்த பெயர் இல்லதபூக்கு ஒரு புது பெயர் சொல்லடுமா நண்பரே....
அந்த பூவின் பெயர்
"தமிழ்ப்பூ"" //
நன்றி சிங்கம்ல366 .. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
// கவிதை(கள்) said...
பஞ்சகவ்யா உபயோகித்தீர்களா ?
அல்லது கடைகளில் விருக்கும் organic fertilizer use செய்தீர்களா?
எனது மற்றுமொரு வலைப்பதிவு
http://agasool.blogspot.com/
விஜய் //
அய்யா விஜய். .. உங்களின் அகசூல் வலைப்பூவை இன்றுதான் பார்த்தேன். ரொம்ப நன்றிங்க.
பஞ்ச கவ்யம் எல்லாம் தயார் செய்யவில்லைங்க. எல்லாம் கடையில் விற்கும் நாட்டு உரங்கள்தாங்க.
first time to this blog thro blogintamil.blogspot.com
fotos ellamey soopero sooperu
me the 200th follower........
http://nenjinadiyil.blogspot.com/
வெண்டைக்காய் மோர்க்குழம்பும் பாகற்காய் பிட்ளையும் செய்து சாப்பிட்டீர்களா ராகவன்
ஆனா உங்க பினூட்ட கவிதைகளை மிஸ் பண்றோம்
மிக அருமை
அந்தப் பூ பெயரை யாரவது சொன்ன எனக்குத் தெரிவியுங்க ராகவன்
அடுத்த பூக் கவிதைக்குத்தான்
:-)))))))))))))
நல்லதொரு மழை காலத்தில் மீண்டும் ஒருமுறை படம் எடுத்து UPDATE செய்யுங்கள்...:-)
அண்ணா உங்களுக்குள்ளேயும் ஏதோ ஒன்று இருந்திருக்கு.
------------
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் ...
--------------
உங்கள் வலைத்தோட்டத்தில் இருக்கும் அழகு பூக்கள் போலவே உங்கள் வீட்டுத்தோட்டத்திலும் ...
//இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்//
நை.ராகவா,
எல்லாப்படமும் நல்லாயிருக்கு.
ஆனா, அந்த கடைசி படத்த தினமும் காலையில பாக்குறேன் மலரவே இல்லியே. ஏன்?
நல்ல பகிர்வு.
உங்க "வீட்டுல" தோட்டம் இருக்கு.
எங்க வீடு "தோட்டத்துல" இருக்கு.
அசத்தீட்டீங்க அண்ணன்
azhakaana thottam...
niraya pookal naan ingathaan 1st time paaththen..!
//இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.//
:))
கன்னைக்கவரும் கலைநயமிக்க அழகு..
வீட்டுக்கு வந்து அந்த வெட்டிப்பிஞ்சிக்கிட்டே அமர்ந்தபடி பாகல் பூவின் அழகையும். அழகுகொஞ்சும் ரோஜாவையும் சுற்றித்தெரியும் பச்சைபசேலையும் கண்டுரசிக்கனும்..
சூப்பர் அத்தனையும் அழகோ அழகு
பாகற்பிஞ்சு பக்கத்தில் இருக்கும் முள் பயமுறுத்துகிறது :)
தோட்டம் ஒன்று பராமரிப்பதற்கு வாழ்த்துகள்.
அருமையான புகைப்படங்கள்
அருமையான படங்கள்.
அருமையான புகைப்படங்கள்!!
Excellent photography!Really a nice pics!!!
//தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. //
உங்ககிட்ட கேமரா இருக்குன்னு அதுங்களுக்கு தெரிஞசுப்போச்சோ என்னவோ... பின்ன அழகா இருக்குற அதுங்களை உங்க காமெரா டெரராக்கிடுச்சன்னா...
//பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்//
நாமளா ஒரு பேர் வைக்கவேண்டியதுதான் சார்... இதுக்குன்னு தாகவரவியல் ஆரயாச்சிகழகத்துகிட்டயா போய்கேட்க முடியும்...
//ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு///
ரொம்ப நல்ல செடிசார்...
//எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா
[Photo]
இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்//
யாருக்காது கொடுக்கலாம்னு ஐடியா இருக்கா சார்...
//புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.//
அதை நீங்க சொன்னா ஒத்துக்கனுமா??? கலை.... இதோ இப்பவே ஷார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்பறேன்...
ஹீஹீஹீ... கொஞசம் கும்மி அடிக்கலாம்னு ஒரு சிறிய முயற்சிதான். போதுமா சார்??? :-)
நன்றி வெற்றி
நன்றி thenammailakshmanan
நன்றி பலா பட்டறை
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சத்ரியன்
நன்றி பாத்திமா ஜொஹ்ரா
நன்றி இரசிகை
நன்றி அன்புடன் மலிக்கா
நன்றி PPattian : புபட்டியன்
நன்றி தியாவின் பேனா
நன்றி ஸ்ரீ
நன்றி Mrs.Menagasathia
நன்றி Priya
நன்றி நாஞ்சில் பிரதாப் - நைனா தூள் கிளப்பிட்ட...
Beautiful photos. Name of that flower(small red) is Euphorbia milli
தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.html
Post a Comment