Monday, December 21, 2009

நாட் குறிப்பு புத்தகம்.





எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டாச்சுங்க... என்ன அப்படின்னு கேட்கறீங்களா..

புது வருஷம் வந்துச்சுன்னா பலருக்கும் வரும் ஆசைதாங்க எனக்கும் வந்துச்சு...

ஆசையை அடக்க முடியலை..

நிறைய பேர்கிட்ட பார்ர்கும் போது, வழ வழன்னு கலர் கலரா, வித விதமான அளவுகளில் பார்க்கும் போது எனக்கு ஆசையா இருந்திடுச்சுங்க..

எப்படியாவது ஒரு நாட்குறிப்பு புத்தகம் (டைரி? / டயரி?) வாங்கி தினமும் எழுத ஆரம்பிக்கணும் அப்படின்னு...

ஒரு சுபயோக சுப தினத்தில் நானும் டைரி வாங்கலாம் அப்படின்னு நினைச்சுகிட்டு கடைக்குப் போனா, அங்க வித விதமா வச்சு இருந்தாங்க. வழ வழன்னு அட்டை போட்டு சூப்பரா வச்சு இருந்தாங்க. நாமதான் ரொம்ப சுறு சுறுப்பாச்சுங்களா, ஒவ்வொன்னா பாக்கும் போது, இத வாங்கலாம், அதவாங்கலாம் அப்படின்னு நினைச்சு எதையும் வாங்காம விலையை மாத்திரம் பார்த்துட்டு (விலையைக் கேட்டு டரியல் ஆகி !!) திரும்பியாச்சு.

மறு நாள் நம்ம மேனேஜர் கூப்பிட்டு, ராகவா இத வச்சுக்க அப்படின்னு ஒரு பெரிய டைரி ஒன்னு கொடுத்தாருங்க. அத பார்த்தவுடனே நமக்கு பெருமை பிடிபடல. வாங்கி மேலட்டையைத் தடவிப் பார்க்கிறது, ஒவ்வொரு பக்கமா திருப்பிப் பார்க்கின்றதும் அப்படி ஒரு சந்தோஷம். குழந்தையை அப்பா மிட்டாய் கடைக்கு அழைச்சுக்கிட்டு போன மாதிரி ஒரு சந்தோஷம். ஒரு வருஷம் கழிச்சு இதை படிச்சுப் பார்த்தா எவ்வளவு விசயம் எழுதியிருப்போம் அப்படின்னு ஒரு எண்ணம்.

பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சுயசரிதம் எழுதும் போது, இது மாதிரிதான் தங்களுடைய டைரியை வச்சு ரெபரன்ஸ் பார்த்து எழுதுவாங்க போல. நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!) வரும் போது இது ரொம்ப உபயோகப் படும், சுய சரிதம் எழுதுவது மாதிரி கனவு வேற. புது வருஷம் பிறக்கும் வரை இப்படி வித விதமா கனவு கண்டுகிட்டே இருந்தேன்.

புது வருஷமும் வந்தது.. கார்த்தால எழுந்தவுடனே பல் தேய்ச்சு, தங்க மணி கொடுத்த காப்பியைக் கூட குடிக்காமல், டைரியை எடுத்து வச்சுகிட்டு எழுத உட்கார்ந்தாச்சு.

என்ன எழுதுவது. சரி முதலில் நம்ம பேர், அட்ரஸ், பிறந்த தேதி, தங்கமணிகிட்ட மாட்டிகிட்ட தேதி, லொட்டு, லொடஸ்க்கு எல்லாம் கேட்டு இருக்காங்களே அதை நிரப்பலாம் என்று நினைத்து நிரப்பினேன்.

அதுல Pan நம்பர், டிரைவிங் லைசன்ஸ் நம்பர் எல்லாம் கேட்டு இருந்தாங்க. நம்ம கிட்டத்தான் இரண்டுமே கிடையாதே, இருந்தாலும் வெறுமையா விட முடியுமா, அதனால ஒரு கோடு போட்டு வச்சேன். இந்த வருஷம் முடிவதற்குள் இரண்டும் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு.

ஜனவரி 1 - எதாவது எழுத வேண்டுமே. சரி முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றுப் புரியவில்லை. கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை. இங்க காப்பி ஆறிப் போகுது, அங்க உட்கார்ந்து காலங்கார்த்தால மோட்டுவளையை பார்த்து என்ன ஆகப் போகுதுன்னு தங்கமணி ஒரு சவுண்ட் விட்ட வுடனே, புது வருஷம் அதுவுமா டோஸ் வாங்க வேண்டாம் அப்படின்னு நினைச்சு, டைரி என்பதே அன்று நடந்த விஷயங்களை சாயங்காலம் இல்லாட்டி ராத்திரி உட்கார்ந்து எழுதணும் அப்படின்னுட்டு மூடி டிராயரில் பத்திரமா வச்சுட்டு வந்துட்டேன்.

அன்று புது வருஷம் என்பதால் நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். நான் சிலர் வீட்டுக்கு போனேன். எல்லாத்தையும் மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் ஞாபகமாக டைரியில் எழுத வேண்டும் என்று. சாயங்காலம் இவை எல்லாவற்றையும் ஞாபகமாக குறித்துக் கொண்டேன். ஒரு 10 லைன் எழுதியிருந்தேன். பார்த்த போதே எனக்கே ஒரு சந்தோஷம். முதல் நாள் இவ்வளவுதான் எழுதமுடியும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அடுத்த நாள் சிலரைச் சந்தித்ததுப் பற்றி எழுதினேன். 4 லைனுக்கு மேல் போகவில்லை.

மூன்றாம் நாளும் இது மாதிரி 4 வரி எழுதினேன். அப்ப தங்கமணி தினமும் ராத்திர் என்னமோ எழுதறீங்களே என்ன அப்படின்னு கேட்டாங்க. ஒன்னுமில்ல நாட் குறிப்பு புத்தகம் எழுதறேன் அப்படின்னேன். நீங்க எழுத்தாளார எப்ப மாறீனீங்க அப்படின்னு கேட்டாங்க. நான் சொல்வது புரியவில்லை என்றால் என்ன பேசறேன்னு கேட்கணும். சும்மா இப்படி எல்லாம் கேள்விக் கேட்கபிடாது அப்படின்னு கேட்கணும் நினைச்சு, ஒன்னுமில்லம்மா டைரி எழுதறேன் அப்படின்னு சொன்னதுக்கு, தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) அப்படின்னு முகவாயில ஒரு இடி இடிச்சுட்டு போன்னாங்க.

அதுக்கு அப்புறம் பிப்ரவி 1 அன்றுதான் டைரி பற்றி நினைப்பு வந்தது. அடடா இத்தனை நாளும் எழுதாம போயிட்டோமேன்னு ஒரே வருத்தமா போயிடுச்சுங்க. என்ன செய்வது போனது போனதுதான். ஆனாலும் என்ன எழுதுவது என்றுத் தெரியவில்லை. சரி தினமும் என்ன செலவு செய்தோம் அப்படின்னு எழுதலாம் அப்படின்னு நினைக்கும் போதுதான்,இந்த வீட்டில் நான் செலவு எதுவும் செய்வது இல்லை என்ற ஞாபகம் வந்தது. அப்படி இப்படின்னு மூளையை (?) கசக்கி, அன்னிக்கு சந்தித்தவர்கள், அலுவலகத்தில் நடந்த விஷயங்கள், சிலருக்கு எழுதிய மெயில் எல்லாம் எழுதினேன்.

இப்படி அப்படின்னு தீடீரென நினைச்சு எழுதுவேன். அப்புறம் கொஞ்ச நாள் எழுத மாட்டேன். 3 மாசம் போச்சு. தங்கமணி, இந்த டைரியை வச்சுகிட்டு என்ன செய்யறீங்க. 3 மாசத்தில் அங்க அங்க எழுதியிருக்கீங்க அப்படின்னு கேட்டாங்க.

நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன்னு சொன்னதுக்கு, நான் உங்களில் பாதிதானே, அதனால படிச்சா தப்பு ஒன்னுமில்ல அப்படின்னு சொன்னாங்க. சொல்லிட்டு, எனக்கு வரவு செலவு கணக்கு எழுத நல்லதா ஒரு நோட்டு இல்ல. இதுல நீங்க ஒன்னும் எழுதுவதில்லையே எனக்கு கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. அப்பாடா இதுதான் சமயம் என்று, நானும் டயரியில் அதைத்தான் எழுதணும் என்று இருந்தேன். நீயே (நீங்களே?) சரியாச் சொல்லிட்டே. வச்சுக்கன்னு உடனே தூக்கிக் கொடுத்துட்டேன். அப்பாடா இந்த டைரி எழுதுவதில் இருந்து தப்பிச்சுட்டேன்.

அப்ப நினைச்சுகிட்டேன்.. இந்த டயரி எழுதுவது எவ்வளவு கஷ்டமான விசயம் என்று..

நீங்க என்ன நினைக்கிறீங்க

78 comments:

R.Santhosh said...

இங்க இவ்ளோ எழுதுன நீங்க டைரில ஒன்னும் எழுதலன்றது கொஞ்சம் காமெடியாதான் இருக்கு பாஸு

பா.ராஜாராம் said...

//மூன்றாம் நாளும் இது மாதிரி 4 வரி எழுதினேன். அப்ப தங்கமணி தினமும் ராத்திர் என்னமோ எழுதறீங்களே என்ன அப்படின்னு கேட்டாங்க. ஒன்னுமில்ல நாட் குறிப்பு புத்தகம் எழுதறேன் அப்படின்னேன். நீங்க எழுத்தாளார எப்ப மாறீனீங்க அப்படின்னு கேட்டாங்க. நான் சொல்வது புரியவில்லை என்றால் என்ன பேசறேன்னு கேட்கணும். சும்மா இப்படி எல்லாம் கேள்விக் கேட்கபிடாது அப்படின்னு கேட்கணும் நினைச்சு, ஒன்னுமில்லம்மா டைரி எழுதறேன் அப்படின்னு சொன்னதுக்கு, தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) அப்படின்னு முகவாயில ஒரு இடி இடிச்சுட்டு போன்னாங்க.


அதுக்கு அப்புறம் பிப்ரவி 1 அன்றுதான் டைரி பற்றி நினைப்பு வந்தது//

அண்ணாச்சி!

:-)))))

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

நாம எல்லாம் டைரி எழுத லாய்க்கில்ல - நான் டைரி யூஸ் பண்றதே குறிப்பு எழுதத்தான் - அவ்ளோதான்

நல்வாழ்த்துகள்

தாராபுரத்தான் said...

பட்டிகாட்டான் யானைப் பார்த்த மாதிரி பழமொழியை மாததுங்க,,,, ,,,

ஹேமா said...

ராகவன் ரொம்ப விவரமான ஆள்தான் உங்க தங்கமணி.கவனமா இருங்க.

சரி இப்ப டைரி கணக்குப் புத்தகமா ஆயிடிச்சா ?சந்தோஷம்.புது வருஷத்திலயும் புதுசா ஒண்ணு வாங்கிக் குடுங்க.

நட்புடன் ஜமால் said...

நானும் டைரியை கணக்கெழுதத்தான் உபயோகிக்கின்றேன்.

வருடா வருடம் எனக்கும் வரும் இந்த ஆசை.

காசு கொடுத்து வாங்கும் விருப்பம் இல்லை சில வருடங்களாக

sathishsangkavi.blogspot.com said...

நான் டைரி எழுதனும்னு வருடா வருடம் நினைப்பேன்.....

நிறைய உண்மைகள் வெளியே வந்துடும் என நினைத்து அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.............

சங்கர் said...

//நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!) வரும் போது இது ரொம்ப உபயோகப் படும், சுய சரிதம் எழுதுவது மாதிரி கனவு வேற.//

நீங்க பெரிய ஆள் இல்லைன்னு யாரு சொன்னது?

அன்புடன் நான் said...

நாட் குறிப்பு என்பது நேர்மையா எழுதினா மற்றவர் பார்வையில் மாட்ட கூடாது..... மற்ற‌வரிடம் மாட்டுவது போலிருந்தால் நேர்மையா எழுத முடியாதுங்க.. பகிர்வுக்கு... வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

உண்மைதான் ராகவண்ணா.....நான் பல முறை முயன்று தோற்றிருக்கிறேன். நீங்களாவது 4 நாட்கள் எழுதினீர்கள்....நான் புதிதாக வரும் டைரியை தொட்டுப் பார்ப்பதோடு சரி.....

ஆனால் தினமும் நாளையிலிருந்து எழுத வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்....

goma said...

என்னிடமும் இது போல் புத்தம் புது டைரி ஏராளம் கடைசியில் அவை சுடோகு புத்தகமாகக் கிடந்துவிடும்

மகேஷ் : ரசிகன் said...

//தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) //

:)
எனக்கும் ஆஃபீஸ்ல டைரி கொடுப்பாங்க. அதெல்லாம் மீட்டிங்க்ல நோட்ஸ் எடுக்க தான் யூஸ் பண்றது.

R.Gopi said...

தலைவா

நீங்க ஒண்ணு பண்ணுங்க....

டிசம்பர் 31 அன்னிக்கு டைரியை எடுத்து, இந்த வருஷம் பூரா டெய்லி ஏதாவது எழுதணும்னு நெனச்சேன்... ஆனா, முடியல... அடுத்த வருஷம் கண்டிப்பாக டெய்லி கொஞ்சமாவது எழுத முயற்சி பண்றேன்னு எழுதி வைங்க....

Paleo God said...

இந்த கொடுமைக்குத்தான் இது எவ்ளோ அழகா வந்தாலும் வேற யாருக்காவது கொடுத்திடுவேன்.. ::)) (நம்ம கொடுமைய நாமளே அனுபவிக்கக் கூடாதுன்னுதானே.. பெருக இவ்வையகம்ன்னு பதிவு போடறது ...::))

க‌ரிச‌ல்கார‌ன் said...

அண்ணா

அந்த‌ ப‌ழ‌க்க‌ம்தான் இங்கேயும் (பிளாக்) தொட‌ருதுன்னு நினைக்கிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆனாலும் நாட்குறிப்புன்ற தமிழ் வார்த்தைதான் எல்லாரும் மறந்துட்டாங்களே அண்ணிக்கு மட்டும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...

:)

கிளியனூர் இஸ்மத் said...

:))))))))

S.A. நவாஸுதீன் said...

நானும் 2 வருஷம் எழுதினேன். அது பார்க்க கூடாத ஆள் பார்த்து சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்ட மாதிரி ஆயிடுச்சு.

இப்போ ஒன்லி ஆஃபிஸ் சம்பந்தப்பட்ட நோட்ஸ் தவிற ஒன்னும் எழுதுறதில்லை.

தமிழ் உதயம் said...

டைரி எழுதுவது நல்ல பழக்கம் தான். ஆனால் இப்போது டைரி எழுதும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. செல்போனின் வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். நிறைய குறிப்புகளை செல்போனில் சேமித்து கொள்கிறோம். மேலும் நிறைய பேரின் வலைப்பூக்கள் டைரி போலவே உள்ளது. இன்னும் சில வருஷங்களில் டைரி எழுதும் பழக்கம் ஒய்ந்து விட்டால் ஆச்சர்ய படுவதற்கில்லை.

செ.சரவணக்குமார் said...

நாட்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு சார்.

கலையரசன் said...

அதுக்குதான் ஃப்ளாக் எழுதுறீங்களேண்ணே??? அப்புறம் என்ன டயரி வேண்டிகிடக்கு டயரி...

அண்ணியாவது எதாவது உருப்புடியா எழுதட்டும், குடுத்த வரைக்கும் சந்தோஷம்!!

ஹுஸைனம்மா said...

இந்த வருஷம் (2010) டைரிக்குச் சொல்லிவச்சிட்டீங்களா மறக்காம?

இராகவன் நைஜிரியா said...

// Santhosh.R said...
இங்க இவ்ளோ எழுதுன நீங்க டைரில ஒன்னும் எழுதலன்றது கொஞ்சம் காமெடியாதான் இருக்கு பாஸு //

எழுதுவதே காமெடிதானுங்களே.. தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// பா.ராஜாராம் said...

அண்ணாச்சி!

:-))))) //

நன்றி அண்ணாச்சி... :=)

இராகவன் நைஜிரியா said...

// cheena (சீனா) said...
அன்பின் இராகவன்

நாம எல்லாம் டைரி எழுத லாய்க்கில்ல - நான் டைரி யூஸ் பண்றதே குறிப்பு எழுதத்தான் - அவ்ளோதான்

நல்வாழ்த்துகள் //

நன்றி அண்ணே... இப்ப வெல்லாம் அதுக்கு கூட ஒன் சைட் பேப்பரை வச்சுகிட்டு காலத்த ஓட்டிடறேங்க.

இராகவன் நைஜிரியா said...

// அப்பன் said...
பட்டிகாட்டான் யானைப் பார்த்த மாதிரி பழமொழியை மாததுங்க,,,, ,,, //

மாத்திட்டேங்க.

காரணம் சொல்லியிருந்தீங்கன்னா தப்பித் தவறி கூட உபயோகப் படுத்தாமல் இருப்பேனுங்க.

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
ராகவன் ரொம்ப விவரமான ஆள்தான் உங்க தங்கமணி.கவனமா இருங்க.

சரி இப்ப டைரி கணக்குப் புத்தகமா ஆயிடிச்சா ?சந்தோஷம்.புது வருஷத்திலயும் புதுசா ஒண்ணு வாங்கிக் குடுங்க. //

ஆமாங்க ரொம்ப விவரமான ஆளுங்க. அது பண விஷயத்தில் பொய்யே சொல்ல முடியாதுங்க.. தோண்டி.. துருவி நொங்கெடுத்துடுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
நானும் டைரியை கணக்கெழுதத்தான் உபயோகிக்கின்றேன்.

வருடா வருடம் எனக்கும் வரும் இந்த ஆசை.

காசு கொடுத்து வாங்கும் விருப்பம் இல்லை சில வருடங்களாக //

நாங்கெல்லாம் என்னிக்குமே காசு கொடுத்து வாங்கியதில்லீங்க.. ஓசியிலே காலத்த ஓட்டிடுவோமில்ல..

இராகவன் நைஜிரியா said...

// Sangkavi said...
நான் டைரி எழுதனும்னு வருடா வருடம் நினைப்பேன்.....

நிறைய உண்மைகள் வெளியே வந்துடும் என நினைத்து அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்............. //

இதுக்கெல்லாம் கலங்கினா எப்பூடி...

இராகவன் நைஜிரியா said...

// சங்கர் said...
//நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!) வரும் போது இது ரொம்ப உபயோகப் படும், சுய சரிதம் எழுதுவது மாதிரி கனவு வேற.//

நீங்க பெரிய ஆள் இல்லைன்னு யாரு சொன்னது? //

என் பவுசு எனக்கு தெரியாதுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// ஆரூரன் விசுவநாதன் said...
உண்மைதான் ராகவண்ணா.....நான் பல முறை முயன்று தோற்றிருக்கிறேன். நீங்களாவது 4 நாட்கள் எழுதினீர்கள்....நான் புதிதாக வரும் டைரியை தொட்டுப் பார்ப்பதோடு சரி.....

ஆனால் தினமும் நாளையிலிருந்து எழுத வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்....//

அண்ணே நீங்க சூப்பர் அண்ணே... சங்கமம் நிகழ்ச்சியை பிரமாதமா பண்ணியிருக்கீங்க... டைரி மேட்டர் எல்லாம் உங்களுக்கு ஜூஜுபி அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// goma said...
என்னிடமும் இது போல் புத்தம் புது டைரி ஏராளம் கடைசியில் அவை சுடோகு புத்தகமாகக் கிடந்துவிடும் //

நன்றி goma. நிறைய இடத்தில இப்படித்தான் ந்டக்குதா?

இராகவன் நைஜிரியா said...

// சி. கருணாகரசு said...
நாட் குறிப்பு என்பது நேர்மையா எழுதினா மற்றவர் பார்வையில் மாட்ட கூடாது..... மற்ற‌வரிடம் மாட்டுவது போலிருந்தால் நேர்மையா எழுத முடியாதுங்க.. பகிர்வுக்கு... வாழ்த்துக்கள். //

போட்டீங்களே ஒரு போடு... அண்ணே சூப்பர் அண்ணே.

Thenammai Lakshmanan said...

ரொம்ப சூப்பர் உண்மை உண்மை உண்மை ராகவன்

சிரிப்பை அடக்கவே முடியல

என் டைரியும் கவிதை நோட்டா மாறி ஒரு காலத்தில் கணக்கு நோட்டா ஆகிருச்சு

இராகவன் நைஜிரியா said...

// மகேஷ் : ரசிகன் said...
//தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) //

:)
எனக்கும் ஆஃபீஸ்ல டைரி கொடுப்பாங்க. அதெல்லாம் மீட்டிங்க்ல நோட்ஸ் எடுக்க தான் யூஸ் பண்றது. //

அது சரி அதுக்காவது யூஸ் பண்றீங்களே.. அது வரைக்கும் சந்தோஷம்

இராகவன் நைஜிரியா said...

// R.Gopi said...
தலைவா

நீங்க ஒண்ணு பண்ணுங்க....

டிசம்பர் 31 அன்னிக்கு டைரியை எடுத்து, இந்த வருஷம் பூரா டெய்லி ஏதாவது எழுதணும்னு நெனச்சேன்... ஆனா, முடியல... அடுத்த வருஷம் கண்டிப்பாக டெய்லி கொஞ்சமாவது எழுத முயற்சி பண்றேன்னு எழுதி வைங்க.... //

ஆஹா இது கூட நல்லா இருக்கே... முயற்சி செய்கின்றேன் அண்ணே

இராகவன் நைஜிரியா said...

// பலா பட்டறை said...
இந்த கொடுமைக்குத்தான் இது எவ்ளோ அழகா வந்தாலும் வேற யாருக்காவது கொடுத்திடுவேன்.. ::)) (நம்ம கொடுமைய நாமளே அனுபவிக்கக் கூடாதுன்னுதானே.. பெருக இவ்வையகம்ன்னு பதிவு போடறது ...::)) //

சூப்பர் ஐடியா அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// க‌ரிச‌ல்கார‌ன் said...
அண்ணா

அந்த‌ ப‌ழ‌க்க‌ம்தான் இங்கேயும் (பிளாக்) தொட‌ருதுன்னு நினைக்கிறேன் //

அட நீங்க வேற... ப்ளாக் வச்சு இருப்பதே பெருமைக்காக... எழுதுவதற்காக அப்படின்னு நினைச்சீங்களா... இவ்வளவு வெள்ளேந்தியா இருக்கீயளே..

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
ஆனாலும் நாட்குறிப்புன்ற தமிழ் வார்த்தைதான் எல்லாரும் மறந்துட்டாங்களே அண்ணிக்கு மட்டும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...

:)//

அது சரி... அண்ணிக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்குன்னு தெரியாம போச்சே..

ஜீவன்பென்னி said...

" தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) "

:-)

இராகவன் நைஜிரியா said...

// கிளியனூர் இஸ்மத் said...
:)))))))) //

அண்ணே ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...
நானும் 2 வருஷம் எழுதினேன். அது பார்க்க கூடாத ஆள் பார்த்து சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்ட மாதிரி ஆயிடுச்சு.

இப்போ ஒன்லி ஆஃபிஸ் சம்பந்தப்பட்ட நோட்ஸ் தவிற ஒன்னும் எழுதுறதில்லை. //

அது... அதுக்குத்தான் நாங்க எல்லாம் எழுதுவதில்லை... இப்ப புரிஞ்சுதா பல பக்கங்கள் ஒன்னுமே எழுதாம இருந்த காரணம்.

ஸ்ரீராம். said...

காலேண்டர் டைரி எல்லாம் கல்யாணத்துல வச்சி கொடுக்கற ப்ளௌஸ் பிட் மாதிரி...கைக்கு வந்ததும் அடுத்தவர் கைக்கு மாற்றி விட வேண்டியதுதான்...!

இராகவன் நைஜிரியா said...

// tamiluthayam said...
டைரி எழுதுவது நல்ல பழக்கம் தான். ஆனால் இப்போது டைரி எழுதும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. செல்போனின் வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். நிறைய குறிப்புகளை செல்போனில் சேமித்து கொள்கிறோம். மேலும் நிறைய பேரின் வலைப்பூக்கள் டைரி போலவே உள்ளது. இன்னும் சில வருஷங்களில் டைரி எழுதும் பழக்கம் ஒய்ந்து விட்டால் ஆச்சர்ய படுவதற்கில்லை. //

சரியாச் சொன்னீங்க தமிழ்...

வருங்காலத்தில் டைரி எழுதும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடும் என நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// செ.சரவணக்குமார் said...
நாட்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு சார்.//

ரொம்ப நன்றிங்க சரவணகுமார்..

இராகவன் நைஜிரியா said...

// கலையரசன் said...
அதுக்குதான் ஃப்ளாக் எழுதுறீங்களேண்ணே??? அப்புறம் என்ன டயரி வேண்டிகிடக்கு டயரி...

அண்ணியாவது எதாவது உருப்புடியா எழுதட்டும், குடுத்த வரைக்கும் சந்தோஷம்!! //

யூ டூ தம்பி... துபாயில் எனக்கு ஆப்பு வைக்கவே இருக்கீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// ஹுஸைனம்மா said...
இந்த வருஷம் (2010) டைரிக்குச் சொல்லிவச்சிட்டீங்களா மறக்காம? //

வாழ்க்கையில் இனிமே டைரி வாங்குவதேயில்லைன்னு சபதமே போட்டாச்சுங்க

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
ரொம்ப சூப்பர் உண்மை உண்மை உண்மை ராகவன்

சிரிப்பை அடக்கவே முடியல

என் டைரியும் கவிதை நோட்டா மாறி ஒரு காலத்தில் கணக்கு நோட்டா ஆகிருச்சு //

ஆஹா தோழி ... உங்களுக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன்பென்னி said...
" தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) "

:-) //

நன்றி ஜீவன்பென்னி... :=)

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீராம். said...
காலேண்டர் டைரி எல்லாம் கல்யாணத்துல வச்சி கொடுக்கற ப்ளௌஸ் பிட் மாதிரி...கைக்கு வந்ததும் அடுத்தவர் கைக்கு மாற்றி விட வேண்டியதுதான்...! //

இதுவும் நல்லாயிருக்கே ஸ்ரீராம்..

அப்துல்மாலிக் said...

அண்ணாத்தே நல்லதாப்போச்சு, இதோடு எழுதாமல் விட்டீங்களே, அப்படி எழுதி 2 வருசம் கழித்து படிக்கும்போது நல்ல காமெடியா இருக்கும்

அதுக்கெல்லாம் டைம் எங்கேனே இருக்கு.. ஆஅவ்வ்வ்வ்

நேசமித்ரன் said...

செம ஃபார்ம்ல இருக்கீங்க போல

மாற்றங்கள் அழகானவை . புதிய வருடம் புதிய முனைப்பு
அருமையான கோர்வையுள்ள எழுத்து

2010- நாட் குறிப்பு வலையில் அமைவதாக

காகிதம்... முதிர் கன்னியின் ஸ்தனம்
வலை.... புது மனைவியின் ஆடை மாற்றம்

கலைச்சு விளையாடுங்க

ஜோதிஜி said...

கொஞ்ச சிரமம் தான் தொடர்ச்சியா எழுதுறது. பிரச்சனையும் கூட. அப்படியே உண்மையை எழுதுறேன்னு படித்துவிட்டு காதலை கண்டுபிடித்த சகோதரிகள் என்று தொடங்கி அன்று உள்ள கோபம் வெறுப்பு மொத்தமும் இப்போது படித்தாலும் தோன்றுவது

அவனா நீ?

பீர் | Peer said...

நானும் பல 'நாட்குறிப்பு புத்தகம்' வாங்கியிருக்கிறேன்.

ஒன்றில் கூட எழுதியதில்லை. :))

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...
அண்ணாத்தே நல்லதாப்போச்சு, இதோடு எழுதாமல் விட்டீங்களே, அப்படி எழுதி 2 வருசம் கழித்து படிக்கும்போது நல்ல காமெடியா இருக்கும்

அதுக்கெல்லாம் டைம் எங்கேனே இருக்கு.. ஆஅவ்வ்வ்வ் //

காமெடியா ஆனால் பரவாயில்லை. டிராஜடியா ஆயிடுச்சுன்னாத்தான் வம்புங்க.

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
செம ஃபார்ம்ல இருக்கீங்க போல

மாற்றங்கள் அழகானவை . புதிய வருடம் புதிய முனைப்பு
அருமையான கோர்வையுள்ள எழுத்து

2010- நாட் குறிப்பு வலையில் அமைவதாக

காகிதம்... முதிர் கன்னியின் ஸ்தனம்
வலை.... புது மனைவியின் ஆடை மாற்றம்

கலைச்சு விளையாடுங்க //

ஆஹா.. தம்பி நேசா... சூப்பர் பின்னூட்டம் போங்க. எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.

இராகவன் நைஜிரியா said...

// ஜோதிஜி said...
கொஞ்ச சிரமம் தான் தொடர்ச்சியா எழுதுறது. பிரச்சனையும் கூட. அப்படியே உண்மையை எழுதுறேன்னு படித்துவிட்டு காதலை கண்டுபிடித்த சகோதரிகள் என்று தொடங்கி அன்று உள்ள கோபம் வெறுப்பு மொத்தமும் இப்போது படித்தாலும் தோன்றுவது

அவனா நீ? //

நான் அவன் இல்லை.

சில விஷயங்கள் தொடர்ச்சியா செய்யவும் அயர்ச்சியாகத்தான் இருக்குங்க.

இராகவன் நைஜிரியா said...

// பீர் | Peer said...
நானும் பல 'நாட்குறிப்பு புத்தகம்' வாங்கியிருக்கிறேன்.

ஒன்றில் கூட எழுதியதில்லை. :)) //

அதுக்கெல்லாம் உடம்பு வணங்குவதில்லைங்க..

vasu balaji said...

ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

அண்ணே இது சூப்பர் அண்ணே...

கார்த்திகைப் பாண்டியன் said...

காசுவலா காமெடி பண்றீங்க அண்ணே.. அரவிந்த் நல்லா இருக்காரா? அண்ணிக்கு என் வணக்கத்தை சொல்லிடுங்க..

மகேஷ் : ரசிகன் said...

// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

எல்லாம் டெரரா இருக்காங்க!

Prathap Kumar S. said...

ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல்லாம் இப்ப யாருக்கு சார் நேரமிருக்கு... இப்ப நிறைய பேருக்கு அவங்க அவங்க கையெழுத்தே மறந்துபோய்டுச்சு...

கலகலப்ரியா said...

//நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!)//

=))... அது... அது..

//அதனால ஒரு கோடு போட்டு வச்சேன்.//

=)))))...

//கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை//

காதல் மரியாத படத்ல அவங்க லெட்டர் எழுதின மாதிரிதான் போல...

//

நீங்க என்ன நினைக்கிறீங்க//

=))... மகா கஷ்டமான விஷயமுங்க அது... நான் ஸ்கூல் போய்ண்டிருந்தப்போ இப்டி ஓசில ஒரு டயரி கிடைச்சு... இன்று அம்மாவாசை... இன்று முழுநிலவு... இன்று சந்திரகிரகணம்... என்று மட்டும் எழுதி வைத்தது கவனமிருக்கிறது... இப்பொழுது அப்பாயின்ட்மென்ட் குறிச்சிக்க மட்டும்... =))

ரொம்ப தமாஷா சொல்லிப்புட்டிய... அருமை ராகவன்..

Romeoboy said...

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வந்த டைரி மொத்தம் 5 அதில் ஒரு பக்கத்தை நிரப்பாதது 5 . இப்ப உங்களுக்கு தெரிந்து இருக்குமே நான் டைரிய எப்படி யூஸ் பண்றேன் என்று .

Chitra said...

நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன்னு சொன்னதுக்கு, நான் உங்களில் பாதிதானே, அதனால படிச்சா தப்பு ஒன்னுமில்ல அப்படின்னு சொன்னாங்க. சொல்லிட்டு, எனக்கு வரவு செலவு கணக்கு எழுத நல்லதா ஒரு நோட்டு இல்ல. இதுல நீங்க ஒன்னும் எழுதுவதில்லையே எனக்கு கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. அப்பாடா இதுதான் சமயம் என்று, நானும் டயரியில் அதைத்தான் எழுதணும் என்று இருந்தேன். .................
........one of the secrets of the happy married life. வாழ்க வளமுடன்.

இராகவன் நைஜிரியா said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
காசுவலா காமெடி பண்றீங்க அண்ணே.. அரவிந்த் நல்லா இருக்காரா? அண்ணிக்கு என் வணக்கத்தை சொல்லிடுங்க. //

தம்பி கார்திக் நன்றி. அரவிந்த் மிக்க நலம். அண்ணிகிட்ட உங்க வணக்கத்தைச் சொல்லிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// மகேஷ் : ரசிகன் said...
// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

எல்லாம் டெரரா இருக்காங்க! //

நாங்கெல்லாம் அப்படித்தான்...

இராகவன் நைஜிரியா said...

// நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல்லாம் இப்ப யாருக்கு சார் நேரமிருக்கு... இப்ப நிறைய பேருக்கு அவங்க அவங்க கையெழுத்தே மறந்துபோய்டுச்சு.. //

ஆமாங்க சரியாச் சொன்னீங்க. போஸ்ட் கார்ட்ல வீட்டு விஷயம் முழுக்க எழுதியிருக்கோம்.. இப்ப எல்லாமே மெயில்தான், தொலைப்பேசிதான்..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

=))... அது... அது..//

ஹி...ஹி...

##//கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை//

காதல் மரியாத படத்ல அவங்க லெட்டர் எழுதின மாதிரிதான் போல...##

ஹி..ஹி.. இது அத விட கஷ்டமா போச்சுங்க

##//நீங்க என்ன நினைக்கிறீங்க//

=))... மகா கஷ்டமான விஷயமுங்க அது... நான் ஸ்கூல் போய்ண்டிருந்தப்போ இப்டி ஓசில ஒரு டயரி கிடைச்சு... இன்று அம்மாவாசை... இன்று முழுநிலவு... இன்று சந்திரகிரகணம்... என்று மட்டும் எழுதி வைத்தது கவனமிருக்கிறது... இப்பொழுது அப்பாயின்ட்மென்ட் குறிச்சிக்க மட்டும்... =)) ##

நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... நமக்கு முன்னாடி ஒரு பெரிய படையே இப்படித்தான் போல் இருக்கு..

##ரொம்ப தமாஷா சொல்லிப்புட்டிய... அருமை ராகவன்..##

நன்றிங்க ப்ரியா

இராகவன் நைஜிரியா said...

// Romeoboy said...
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வந்த டைரி மொத்தம் 5 அதில் ஒரு பக்கத்தை நிரப்பாதது 5 . இப்ப உங்களுக்கு தெரிந்து இருக்குமே நான் டைரிய எப்படி யூஸ் பண்றேன் என்று .//

குருவே சரணம்... சரணம்...

நீங்க செஞ்சதுதான் சூப்பர் அண்ணே

இராகவன் நைஜிரியா said...

//Chitra said...
........one of the secrets of the happy married life. வாழ்க வளமுடன்.//

நன்றிங்க சித்ரா... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

சிநேகிதன் அக்பர் said...

பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல அப்புறம் டைரி எதுக்கு.

இராகவன் நைஜிரியா said...

// அக்பர் said...
பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல அப்புறம் டைரி எதுக்கு. //

இந்த பதிவு எல்லாம் இப்பத்தானே எழுதறோம்... இதுக்கு முன்னாடி நடந்த விஷயமுங்க இது

RAMYA said...

டைரி வாங்குற வரைதான் ஆசை எல்லாம். எழுத ஆரம்பிச்சா போர் அடிக்கும்.

அதுனாலே அதை நாளைக்கு எனக்கு பார்சல் பண்ணுங்க :)

நினைவுகளுடன் -நிகே- said...

என்னிடமும் புத்தம் புது டைரி ஏராளம்.......................
ஒன்றில் கூட எழுதியதில்லை

அன்புடன் நான் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

YUVARAJ S said...

nice postings raghavan anna.

chek by scribbles at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

Keep reading.