ஒவ்வொருவருக்கும் சில நாட்களை மறக்க முடியாததாக ஆகிவிடும்.
என்னால் மறக்க முடியாத நாள்..... பிப்ரவரி 13, 2003.
அன்று உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவர்கள் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தந்தையுடன் சென்று, ஈமச்சடங்குகள் முடியும் வரை இருந்து விட்டு, வீட்டிற்கு வரும் போது காலை 11.00 ஆகிவிட்டது.
அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டியிருந்ததால், சாப்பிட்டு விட்டு, அலுவலகம் கிளம்பினேன். அப்போது நேரம் மதியம் 12.15 ஆகி இருந்தது.
நான் குடியிருந்தது மடிப்பாக்கம். அலுவலகம் இருந்தது நீலாங்கரை. வீட்டில் இருந்து, அலுவலகம் செல்ல, குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை உபயோகப்பது வழக்கம். அந்த சாலை அப்போதுதான் போடப்பட்டு கொண்டு இருந்ததாலும், வாகனப் போக்குவரத்து மிக குறைவாக இருக்கும் என்பதாலும் அந்த வழியை உபயோகப் படுத்துவேன். பாலாஜி டெண்டல் காலேஜ் முதல் துரைப்பாக்கம் வரை எந்த விதமான தடங்கல்களும் இல்லாமல் வேகமாக செல்ல முடியும். டவுன் பஸ் எதுவும் அந்த வழியில் செல்வதும் கிடையாது.
அன்று அலுவலகத்திற்கு செல்லும் போது, துரைப்பாக்கத்திற்கு 1 கி.மீ. முன் ஒருவர் லிப்ட் கேட்டார். பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் மாதிரி இருந்தார். அவர் முதுகில் ஒரு பை. வலது கையை பின்புறம் வைத்துக் கொண்டு, இடது கையால் தம்ஸ் அப் மாதிரி காண்பித்து லிப்ட் கேட்டார். நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.
அன்றும் அது போல பரிதாப்பட்டு, வண்டியை நிறுத்திய உடன், மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை, அந்த காலத்தில் அரசர்கள் வைத்து இருப்பார்களே அது மாதிரி பெரிய கத்தி, வண்டியை கொடுடா, வண்டியை கொடுடா என்று மிரட்ட ஆரம்பித்தான். கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி விடுவேன் என்றும் மிரட்டினான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.
அதனால் அவனிடம், உனக்கு பணம் எதாவது வேண்டுமா, சொல்லு என்று சொல்லிக் கொண்டே, சைட் ஸ்டாண்டை போட்டுவிட்டு வண்டியை ஆஃப் செய்துவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். அவனும் துரத்த ஆரம்பித்தான். அன்று இருந்த களைப்பில் வேறு வழியில்லாமல் வண்டி சாவியை தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன்.
அதன் பிறகு, துரைப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தது, பின்னர் அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் நோ டிரேசிங் சர்டிபிகேட் வாங்கி, வண்டிக்கான இன்சூரண்ஸ் தொகையை பெற்றேன்.
அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...

105 comments:
பிப்ரவரி 14 உலகமே சொல்ல இருக்கும் வேளையில் நீங்கள் 13 பற்றி சொல்கிறீர்கள்,
படிப்போம்
நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம்.\\
நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே
அடடே, கொடுமையான அனுபவம்.
இன்சூரன்ஸாவது கிடைத்ததே.
ஹேப்பி வேலண்டைன்ஸ் டே.
\\மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை\\
ஒன்னும் பட விமர்சணம் இல்லியே இது ...
\\எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.\\
இத அப்படியே கற்பனை செய்து பார்க்கிறேன்.
\\அதனால் அவனிடம், உனக்கு பணம் எதாவது வேண்டுமா, சொல்லு என்று சொல்லிக் கொண்டே, சைட் ஸ்டாண்டை போட்டுவிட்டு வண்டியை ஆஃப் செய்துவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன்\\
நிஜமா ஹார்ட்லி சேஸ் படிச்ச மாதிரி இருக்கு
\\அன்று இருந்த கலைப்பில் வேறு வழியில்லாமல் வண்டி சாவியை தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன்.\\
நல்லது செஞ்சீங்க.
உள்ளேன் ஐயா...
//பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் மாதிரி இருந்தார்.//
அது நா இல்லீங்க...
//நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.//
தெரியுமே...பரந்த உள்ளமாச்சே !!!!!!!!
/ஒவ்வொருவருக்கும் சில நாட்களை மறக்க முடியாததாக ஆகிவிடும்./
ஆமா..ஆமா...
//கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை,//
ஸ்பெசல் சாதாவா........
//அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...
//
அதுக்காக 70 மாடிக்கட்டிடமா இருந்தாலும் அலுவலகத்தில் , லிப்ட் ஐ யூஸ் பண்ணாம ஏணி வைச்சோ, கவுறு கட்டியோ தான் ஏறுவேன்னு அடம் பிடிக்கறதெல்லாம் கொஞ்சம்
ஓவரு...
//சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். //
ஐயயோ..வண்டியையும் சேர்த்து கையில எடுத்துக்கிட்டு ஓடிருக்கலாம்ல..
இதே போல் எனக்கும் கத்தியின் அனுபவம் உண்டுங்க! தேதி மட்டும் தெரியும் தேதி10 அது ஒரு மறக்கமுடியாத நினைவு... இன்றும் அந்த இடம் சென்றால் எனக்கு நடுக்கம் வரும்... அந்தநாட்களில் எனக்கு பயம் அனுபவம் தெரியாது ஆனால் இந்த சம்பவத்தை நினைத்தால் ஒரு பய உணர்வு தெரியும்.. இதைப் பற்றி பின் ஒரு நாளில் பதிவாக போடும் எண்ணம் உள்ளது...
//நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.
//
வண்டியில் ஏறும் பழக்கமே இல்லாதவன் நான்.
ஏன்னா வண்டியே இல்லாதவன் நான்...லைசன்ஸ் இன்னும் எடுக்கலீஙக..
நீங்க விஜயகாந்த் ரேஞ்சுக்கு சண்டைப் போட்டு கடைசியில டையலாக் எல்லாம் சொல்லி அந்த பையனை திருத்தியிருப்பீங்கன்னு நெனச்சேன் அண்ணே.
இப்படி ஏமாத்திப்புட்டீகளே ..
கும்மி அடிக்க வந்த நாங்கள் கமெண்ட் மாடரேசன் எனேபிள் செய்யப்பட்டுள்ளதை
அறிந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம்.
என்ற உண்மையை இங்கே பதிவு செய்து விட்டு கிளம்புகிறேன்.
\\அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...
\\
நல்ல விடயம் அண்ணே.
நாம யாருக்காவது லிப்ட் கொடுத்து ஏதேனும் ஆக்ஸிடனட் ஆனா, போச்சு நமக்குதான் மிக கஷ்டம்.
//அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...//
ஒரு கயவனால் எங்களைப் போல லிப்ட் கேட்போரும் பாதிக்கப்படுகிறோம்.
அன்பு நண்பர், அன்புத்தம்பி, இன்னும் இந்த உலகில் என்ன என்ன அன்புகள் உண்டோ அந்த அன்புக்காக, அ.மு. செய்யது அவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் கமெண்ட் மாடரேஷன் எடுக்கப்பட்டுள்ளது...
// Blogger நட்புடன் ஜமால் said...
பிப்ரவரி 14 உலகமே சொல்ல இருக்கும் வேளையில் நீங்கள் 13 பற்றி சொல்கிறீர்கள்,
படிப்போம் //
வாங்க ஜமால்.. படிச்சிட்டு சொல்லுங்க
// Blogger நட்புடன் ஜமால் said...
நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம்.\\
நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே //
ஆஹா...ரொம்ப குளுருதுங்க
மறக்க முடியாத நாள்தான்..
\\மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை\\
ரொம்ப பயந்திட்டீங்களோ?
// Blogger தேனியார் said...
அடடே, கொடுமையான அனுபவம்.
இன்சூரன்ஸாவது கிடைத்ததே.
ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. //
நன்றி தேனியார்...
அந்த ஒரு கணம் பணம் பற்றி கவலைப் படவில்லை, இன்சூரன்ஸ் பற்றியும் கவலைப் படவில்லை...
நமக்கு எதுவும் நடக்ககூடாது என்ற கவலைதான் அதிகமாக இருந்தது
// Blogger நட்புடன் ஜமால் said...
\\மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை\\
ஒன்னும் பட விமர்சணம் இல்லியே இது ...//
பட விமர்சனமா... கிழிஞ்சுது...
உண்மைங்க...
// நட்புடன் ஜமால் said...
\\அன்று இருந்த கலைப்பில் வேறு வழியில்லாமல் வண்டி சாவியை தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன்.\\
நல்லது செஞ்சீங்க.//
வேற வழி.. தப்பிக்கணுமே...
// Blogger அ.மு.செய்யது said...
உள்ளேன் ஐயா... //
வாங்க..வாங்க... உங்கள் வரவு நல்வரவு ஆகுக
\எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.\///
உண்மையா இது?
// அ.மு.செய்யது said...
//பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் மாதிரி இருந்தார்.//
அது நா இல்லீங்க...//
நிச்சயமா நீங்க இல்லீங்க..
அதனால் அவனிடம், உனக்கு பணம் எதாவது வேண்டுமா, சொல்லு என்று சொல்லிக் கொண்டே, சைட் ஸ்டாண்டை போட்டுவிட்டு வண்டியை ஆஃப் செய்துவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன்\\//
வெவரம்தான்..
கமெண்ட் மாடரேசன எடுத்த ராகவன் அவர்களுக்கு ரேசன் கார்டுல எஸ்ட்டா ரெண்டு கிலோ
கிருஸ்னாயில் தர ஆவண செய்யுமாறு அபுஜா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
//நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.////
நல்லவரே வாங்க..
// அ.மு.செய்யது said...
//நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.//
தெரியுமே...பரந்த உள்ளமாச்சே !!!!!!!!//
நல்லது செய்யப் போய்த்தான் வில்லங்கமா ஆயிடுச்சுங்க..
அதுல ஒரு நண்பர் திட்டினது... இவர் பெரிய கர்ண பரம்பரை.. லிப்ட் கொடுக்கிறாராம்
// அ.மு.செய்யது said...
//அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...
//
அதுக்காக 70 மாடிக்கட்டிடமா இருந்தாலும் அலுவலகத்தில் , லிப்ட் ஐ யூஸ் பண்ணாம ஏணி வைச்சோ, கவுறு கட்டியோ தான் ஏறுவேன்னு அடம் பிடிக்கறதெல்லாம் கொஞ்சம்
ஓவரு...//
லிப்ட் கொடுப்பதில்லை... யாரா இருந்தாலும் கவுறு கட்டி ஏறுங்க அப்ப்டின்னு சொல்லிவிடுவேன்
// thevanmayam said...
\எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.\///
உண்மையா இது? //
ஆமாங்க அது என்னமோ ரொம்ப நாளாவே அதுமாதிரி பழக்கமாயிடுச்சுங்க
// thevanmayam said...
//நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். அதிலும் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பரிதாபப்பட்டு கொடுப்பேன்.////
நல்லவரே வாங்க.. //
வந்துட்டேங்க
// அ.மு.செய்யது said...
கமெண்ட் மாடரேசன எடுத்த ராகவன் அவர்களுக்கு ரேசன் கார்டுல எஸ்ட்டா ரெண்டு கிலோ
கிருஸ்னாயில் தர ஆவண செய்யுமாறு அபுஜா அரசை கேட்டுக்கொள்கிறேன். //
இதுக்கும் கிருஸ்னாயில் தானுங்களா... ஏங்க சக்கர, பாமாயில் எல்லாம் கொடுக்கச் சொல்ல கூடாதுங்களா
// அ.மு.செய்யது said...
//கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை,//
ஸ்பெசல் சாதாவா........ //
இது சாதா ஸ்பெசல் கத்திங்க..
// அ.மு.செய்யது said...
//சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். //
ஐயயோ..வண்டியையும் சேர்த்து கையில எடுத்துக்கிட்டு ஓடிருக்கலாம்ல.. //
வுட்டா திருடனையும் சேர்த்து தூக்கிகிட்டு ஓடச் சொல்லுவீங்க போலிருக்கு
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...
// அன்புமணி said...
\\மிகப் பெரிய கத்தியை எடுத்து காண்பித்து, கத்தி என்றால் சாதரண கத்தி இல்லை\\
ரொம்ப பயந்திட்டீங்களோ? //
பயமா...உங்க வீட்டு பயம் எங்க ஊட்டு பயம் இல்லீங்க.. ரொம்பவே பயந்துடேங்க
// ஆ.ஞானசேகரன் said...
இதே போல் எனக்கும் கத்தியின் அனுபவம் உண்டுங்க! தேதி மட்டும் தெரியும் தேதி10 அது ஒரு மறக்கமுடியாத நினைவு... இன்றும் அந்த இடம் சென்றால் எனக்கு நடுக்கம் வரும்... அந்தநாட்களில் எனக்கு பயம் அனுபவம் தெரியாது ஆனால் இந்த சம்பவத்தை நினைத்தால் ஒரு பய உணர்வு தெரியும்.. இதைப் பற்றி பின் ஒரு நாளில் பதிவாக போடும் எண்ணம் உள்ளது...//
போடுங்க...
அன்புத்தம்பி, அன்பு நண்பர் செய்யது 50 அடிப்பதற்காக இந்த இடத்தில் நான் நிறுத்திக் கொள்கின்றேன்
// அ.மு.செய்யது said...
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...//
இது மாதிரி மாத்தி எடுத்து போய் பழக்கமுங்களா?
எனக்கு லிப்ட் அனுபவம் உண்டு. ஆனால் கத்தி அனுபவம் இல்லை. வேறு விதமான கேவலமான அனுபவம். :(
48
49
50
இப்பதான் சந்தோசமா இருக்கு..நேத்து நிறைய ஆஃப் செஞ்சுரி மிஸ் ஆயிடுச்சுங்க..
//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...//
இது மாதிரி மாத்தி எடுத்து போய் பழக்கமுங்களா?
//
இந்த மாதிரி மாத்தி மாத்தி எடுத்துட்டு போனா
எங்க வீட்டுல என்ன வச்சி மாத்து மாத்துனு மாத்திருவாங்க...
//SK said...
எனக்கு லிப்ட் அனுபவம் உண்டு. ஆனால் கத்தி அனுபவம் இல்லை. வேறு விதமான கேவலமான அனுபவம். :(
//
பரவாயில்ல SK சொல்லுங்க..
சபைக்கு வந்தாச்சுல்ல..அப்புறம் என்ன கூச்சம்....
நம்ம ராகவன் அண்ணன் சம்பவத்துல மாதிரி, பின்னூட்டத்திலயும் சில
திருப்பங்கள் வேணும்ல...
// அ.மு.செய்யது said...
//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...//
இது மாதிரி மாத்தி எடுத்து போய் பழக்கமுங்களா?
//
இந்த மாதிரி மாத்தி மாத்தி எடுத்துட்டு போனா
எங்க வீட்டுல என்ன வச்சி மாத்து மாத்துனு மாத்திருவாங்க...//
எப்படி மாத்துவாங்க..
துயய்செ.மு.அ...
ரொம்ப கஷடமாச்சே கூப்பிட...
50 அடிச்ச செய்யதுக்கு வாழ்த்துக்கள்
// அ.மு.செய்யது said...
//SK said...
எனக்கு லிப்ட் அனுபவம் உண்டு. ஆனால் கத்தி அனுபவம் இல்லை. வேறு விதமான கேவலமான அனுபவம். :(
//
பரவாயில்ல SK சொல்லுங்க..
சபைக்கு வந்தாச்சுல்ல..அப்புறம் என்ன கூச்சம்....
நம்ம ராகவன் அண்ணன் சம்பவத்துல மாதிரி, பின்னூட்டத்திலயும் சில
திருப்பங்கள் வேணும்ல...//
அதானே.. கூச்சப் பட்டா நடக்குமா..
சொல்லுங்க..
// இராகவன் நைஜிரியா said...
எப்படி மாத்துவாங்க..
துயய்செ.மு.அ...
ரொம்ப கஷடமாச்சே கூப்பிட...//
கூப்பிட இல்லங்க..குமுற....
//இராகவன் நைஜிரியா said...
50 அடிச்ச செய்யதுக்கு வாழ்த்துக்கள்
//
நன்றி !!!!!!!! நன்றி !!!!!!!!!
// அ.மு.செய்யது said...
// இராகவன் நைஜிரியா said...
எப்படி மாத்துவாங்க..
துயய்செ.மு.அ...
ரொம்ப கஷடமாச்சே கூப்பிட...//
கூப்பிட இல்லங்க..குமுற....//
ரொம்ப கும்றாங்களோ...
// அ.மு.செய்யது said...
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...//
அடிக்கடி ஆபிஸ்ல தேமேன்னு சிரிச்சா, ஒருமாதி பாக்குறாங்க சையது.
//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...
// இராகவன் நைஜிரியா said...
எப்படி மாத்துவாங்க..
துயய்செ.மு.அ...
ரொம்ப கஷடமாச்சே கூப்பிட...//
கூப்பிட இல்லங்க..குமுற....//
ரொம்ப கும்றாங்களோ...
//
டங்குவார் அறும் அளவுக்கு.........!!!!!!!!
//தேனியார் said...
// அ.மு.செய்யது said...
சரி ..சக்கர,பாமாயிலையும் சேர்த்தே தர சொல்றேன்..
ஆனா ரேசன் கார்டுக்கு பதிலா உங்க பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போய்ட போறீங்க...//
அடிக்கடி ஆபிஸ்ல தேமேன்னு சிரிச்சா, ஒருமாதி பாக்குறாங்க சையது.
//
இதெல்லாம் சகசம் தானுங்க தேனியாரே !!!!!
இருந்தாலும் சிரித்ததற்கு நன்றி !!!!
ஏங்க.. பொறுமையா பைக்க குடுத்துட்டு, அட்லீஸ்ட் கத்தியவாச்சும் கேட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல,பிற்காலத்தில மொக்க போடப்போறோம்னு அப்ப தெரியாதோ...
/அ.மு.செய்யது said...
//சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். //
ஐயயோ..வண்டியையும் சேர்த்து கையில எடுத்துக்கிட்டு ஓடிருக்கலாம்ல../
அதானே...இதுவே செய்யதுவா இருந்தா வண்டியை மட்டும் இல்லை கத்தியை காட்டின அந்த ஆளையும் சேர்த்து தூக்கிட்டு போலிஸ் ஸ்டேஷன் பக்கமா ஓடி இருப்பார்...:)
/இராகவன் நைஜிரியா said...
அன்பு நண்பர், அன்புத்தம்பி, இன்னும் இந்த உலகில் என்ன என்ன அன்புகள் உண்டோ அந்த அன்புக்காக, அ.மு. செய்யது அவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் கமெண்ட் மாடரேஷன் எடுக்கப்பட்டுள்ளது.../
உங்க அன்புக்கு அ.மு. செய்யது தலை வணங்கி வணங்கி தலையை திருப்பவே முடியலையாம்...:)
/இராகவன் நைஜிரியா said...
// Blogger நட்புடன் ஜமால் said...
நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம்.\\
நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே //
ஆஹா...ரொம்ப குளுருதுங்க/
நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் அண்ணே...:)
கால தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்...அலுவலக ஆணிகள் அதிகம்!!!
எலி டிஸ்கோ ஆடிட்டி போயிருக்கு போல
அண்ணே இந்தப்பதிவை போன வாரம் போட்டப்ப நான் முதல்ல வந்தேன், நீங்க பதிவை தூக்கிபுட்டீங்க, இது செல்லாத ஆட்டம்
/*அந்த காலத்தில் அரசர்கள் வைத்து இருப்பார்களே அது மாதிரி பெரிய கத்தி, */
அது இம்சை அரசன் கத்தியாக இருந்திருக்கும்
/*எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது எப்போதுமே, இடது பக்கம் இறங்காமல், வலது பக்கம் இறங்கும் வழக்கம் உள்ளவன்.*/
நல்ல பழக்கம்
/*துரைப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தது, பின்னர் அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் நோ டிரேசிங் சர்டிபிகேட் வாங்கி */
என்னைக்குத்தான் காணாமப்போனதை கண்டுபிடிச்சி இருக்கோம்
அடுத்து ஊருக்கு வரும்போது சொல்லுங்க, நான் வாரேன் லிப்ட் கேட்க்க
//நசரேயன் said...
அண்ணே இந்தப்பதிவை போன வாரம் போட்டப்ப நான் முதல்ல வந்தேன், நீங்க பதிவை தூக்கிபுட்டீங்க, இது செல்லாத ஆட்டம் //
இந்த save பட்டனக்கு பதிலா publish பட்டன அமுத்திட்டேன்.. அதான் குழப்பம்..
raghavannigeria@gmail.com - ஒரு மெயில் அனுப்புங்க... உங்க மெயில் அட்ரஸ் கிடைச்ச பிறகு, உங்ககிட்டு சொல்லிட்டு பதிவு போடுகின்றேன்... வந்து முதல் பின்னூட்டம் போடுங்க..
//நசரேயன் said...
அடுத்து ஊருக்கு வரும்போது சொல்லுங்க, நான் வாரேன் லிப்ட் கேட்க்க //
இப்ப எல்லாம் வெளியில் செல்லும் போது ஆள் பலத்தோடுதான் போறது..
வசதி எப்படி...
//நசரேயன் said...
அண்ணே இந்தப்பதிவை போன வாரம் போட்டப்ப நான் முதல்ல வந்தேன், நீங்க பதிவை தூக்கிபுட்டீங்க, இது செல்லாத ஆட்டம்
//
நாட்டாம.....
இராகவன்,பெப்ரவரி 13 உங்களுக்குக் கண்டம் இருந்திருக்குப் போல.எப்பிடி மறக்கமுடியும்.இந்த பெப்ரவரி 13 ம் வந்தனா அவன்!கவனம்.
பெப்ரவரி 13 ஐ மிரட்டல் டே ன்னு வச்சுக்கலாமா?
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
நசரேயன் said...
அடுத்து ஊருக்கு வரும்போது சொல்லுங்க, நான் வாரேன் லிப்ட் கேட்க்க
//
நசரேயன் நண்பர் வில்லனிடம் கேளுங்க,அதுக்கு அப்புரம் லிப்டு கொடுங்க
குகு
// அ.மு.செய்யது said...
//நசரேயன் said...
அண்ணே இந்தப்பதிவை போன வாரம் போட்டப்ப நான் முதல்ல வந்தேன், நீங்க பதிவை தூக்கிபுட்டீங்க, இது செல்லாத ஆட்டம்
//
நாட்டாம.....//
தம்பி செய்யது... என்ன பண்ணனும் சொல்லுங்க... செஞ்சிடுவோம்
// Valaipookkal said...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//
நன்றி வலைப்பூக்கள்
// Blogger வருங்கால முதல்வர் said...
நசரேயன் said...
அடுத்து ஊருக்கு வரும்போது சொல்லுங்க, நான் வாரேன் லிப்ட் கேட்க்க
//
நசரேயன் நண்பர் வில்லனிடம் கேளுங்க,அதுக்கு அப்புரம் லிப்டு கொடுங்க
குகு //
வாங்க குகு...
தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி
நீங்க இனிமேல் லிப்ட் குடுக்கும் போது செக் பண்ணிட்டு வண்டில ஏத்துங்க இல்லன இப்படித்தான் லிப்ட் வாங்குறவன் நம்மள ஏதிடுவன்
பிரவரி 13 அப்படி என்னதான் இருக்கு பார்ப்போம்
//ஒவ்வொருவருக்கும் சில நாட்களை மறக்க முடியாததாக ஆகிவிடும்.
//
ஆமாம் ஆமாம் எனக்கு நிறைய மறக்கமுடியாத நாள்
//அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டியிருந்ததால்//
அன்னிக்கு எத்தனை ஆணி இருந்தது
//நான் சாதரணமாக யாரவது லிப்ட் கேட்டால் கொடுப்பது வழக்கம். //
இப்படி லிஃப்ட் கொடுத்துதான் நைஜீரியாவுலே போய் இருக்கீங்களா, அங்கெயும் அந்த பழக்கம் இருக்கா
//சாவியை எடுத்துக் கொண்டு வலது பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தேன். //
ஹைய்யோ ஹய்யோ... நானும் பட ஹீரோ மாதிரி சண்டைபோட்டு, போலீஸ்லே புடிச்சிக்கொடுத்தீங்களோனு நினைத்தேன்.....
சரி ஒலிம்பிக்லே கலந்துக்கற அளவிற்கு ஓடினீரோ
//கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் நோ டிரேசிங் சர்டிபிகேட் வாங்கி, வண்டிக்கான இன்சூரண்ஸ் தொகையை பெற்றேன்.//
அதை வாங்குறதுக்குள்ளே மறுஜென்மம் வந்திருக்குமே
நல்ல ஒரு திரைப்பட ரேஞ்சுக்கு கதை திரைக்கதை எழுதி.....
உண்மை சம்பவம்னு நம்புரேன்
//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...
//அன்று பெற்ற அனுபவம், இன்று வரை, யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை...
//
அதுக்காக 70 மாடிக்கட்டிடமா இருந்தாலும் அலுவலகத்தில் , லிப்ட் ஐ யூஸ் பண்ணாம ஏணி வைச்சோ, கவுறு கட்டியோ தான் ஏறுவேன்னு அடம் பிடிக்கறதெல்லாம் கொஞ்சம்
ஓவரு...//
லிப்ட் கொடுப்பதில்லை... யாரா இருந்தாலும் கவுறு கட்டி ஏறுங்க அப்ப்டின்னு சொல்லிவிடுவேன்
//
ஃபையர் டிபார்ட்மென்ட்லே இருந்தீகலோ
//அறிவிலி said...
ஏங்க.. பொறுமையா பைக்க குடுத்துட்டு, அட்லீஸ்ட் கத்தியவாச்சும் கேட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல,பிற்காலத்தில மொக்க போடப்போறோம்னு அப்ப தெரியாதோ...
//
ரிப்பீட்ட்டேய்
// அந்த காலத்தில் அரசர்கள் வைத்து இருப்பார்களே அது மாதிரி பெரிய கத்தி//
எந்த மியூசியத்துலே திருடினானோ
ஆக பிப்ரவரி 13 நீங்க மறக்க மாட்டீர்
அடுத்து எப்போ வருவீங்க ஊருக்கு,
இந்த தடவை வரும்போது கார் லே வாங்கோ
லேட்டுனாலெ தனியா எலனி வெட்டுக்கிட்டு இருக்கேன்
98
99
அப்பாடி தல பதிவுளே முதல் முதலா சதம் அடிச்சாச்சி
ஹிக.. ஹி.......
அப்புட்டுதான் இப்போ எஸ்கேப்பாயிக்கிரேன்
இப்பிடியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சு தான் நான் வண்டியோட்டுவதற்கு தொடங்கிய நாளிலிருந்து யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை...
வாசிக்கும் போதே உங்க படபடப்பு தெரியுதுங்க...
:-)
நல்லதுக்கு காலமில்லே!
இது கலி காலமில்ல!
எங்கள் ஊரிலும் இப்படி அடிக்கடி நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
யப்பா
ரொம்ப டெர்ரரா இருக்குப் பதிவு
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் போல.
நல்ல வேளை, இன்சூரன்ஸ் பணமாவது கெடச்சது.
யப்பா ! பயங்கரமான அனுபவமா இருக்கே -
Congratulations - யூத்விகடன் குட் ப்லோக்சில் வந்திருக்கு !!!
http://youthful.vikatan.com/youth/index.ஆசப்
அன்புடன்
மாசற்ற கொடி
வாழ்த்துகள் ராகவன் அண்ணே !!!
நானும் பார்த்தேன்..யூத்ஃபுல் விகடனில் உங்கள் பதிவு ஜொலிக்கிறது.
எழுத்துலகில் தாங்கள் இன்னும் பல சிகரங்களை எட்டிப்பிடிக்க
இந்த தம்பியின் பிரார்த்தனைகள்.
என்னது அவன சும்மா விட்டுட்டீங்களா?ஏன்.....?பைக் சாவிய கொடுத்ததும் அவன சொன்னான் இவரு ரொம்ப நல்லவரு அப்படின்னு.....
ஹி ஹி ஹி சும்மா தமாசு அண்ணே....
உண்மையில் நீங்கள் செய்தது தான் சரி.....
Post a Comment