தம்பி ராஜ்குமார் (அறிவிழி) தீடிரென எழுதுவதை நிறுத்திவிட்டார்.
ஒரு அறிவிப்பு... இனிமேல் எழுதப் போவதில்லை. காரணம் கூறப்பட்ட பதிவைப் படிக்க இங்கு சொடுக்கவும்.
கூறப்பட்ட காரணமும் ”(தொடர்ந்து எழுத விருப்பம் இல்லாததால் விடைபெறுகிறேன்.............)” சரியில்லை. எனக்கு ஏற்புடையதாக இல்லை.
பதிவை நிறுத்தி 8 நாள் கழித்து ஏன் இந்த பதிவை இடுகின்றீர்கள் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.
நான் அவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்ததால், அதற்காக எந்த பதிவையும் இடாமல் இருந்தேன்.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது..
நான் பார்த்தவரை, தம்பி ராஜ்குமாரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். விசயங்களை அவர் அலசிய விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்த போதும், கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கத்தவறியதில்லை.
அவரின் பதிவு எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகின்றேன்.
அவருக்கு என்று ஒரு வாசகர் வட்டம் உண்டு. அவர் கருத்தில் உடன் படாதவர்கள் கூட அவரின் பதிவைப் படிக்காமல் இருக்க மாட்டார்கள். (இல்லை என்றால் 1100 ஹிட்ஸ் ஒரு நாளைக்கு கிடைக்காது )
-----------------------------------------------------------------
-------- ---- -------- ---------------
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார். நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.
---------------------------------------------------
அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.
நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் - உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின், உங்கள் கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டுகிறேன். எனது பதிவில் கடின வார்த்தைகளுக்கு இடமில்லை. கடின வார்த்தைகளுடன் வரும் எந்த ஒரு பின்னூட்டதையும் நான் வெளியேற்றுவேன் என்பதையும் தங்களுக்கு பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
24 comments:
நானும் தவறாமல் படித்ததுண்டு ...
அவசியம் திரும்பி வாருங்கள் நண்பரே
உங்களின் எழுத்துக்களை இரசிக்க பலர் இருக்கின்றோம்
விலக வேண்டாம்.
// நட்புடன் ஜமால் said...
நானும் தவறாமல் படித்ததுண்டு ...
அவசியம் திரும்பி வாருங்கள் நண்பரே
//
ரிப்பீட்டேய்ய்ய்...
//அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.//
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார்.
நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...
என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.
கழக உடன்பிறப்பு தம்பி அறிவிழி தொடர்ந்து எழுதாதது மிகப் பெரிய ஏமாற்றமே. தம்பி திரும்பி வா, கழகப் பணி அதிகம் இருக்கிறது. கழகம் பற்ற் மட்டும் அல்ல உன் அனைத்து பதிவுகளுமே அருமை உடன்பிறப்புகளை மட்டும் அல்ல வாசகர்களையும் ஏமாற்றிவிடாதே
அரசியல் உள்ளிட்ட பல விசயங்களில் எனக்கும் அறிவிழிக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் என் நண்பன் மறுபடியும் எழுத வேண்டும் என்பதே என் அவா...
அறிவிழி திரும்பி எழுத வேண்டும்...
நானும் ரசித்துப் படித்ததுண்டு...
முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் அறிவிழி அவர்களே...
யோவ் அறிவிழி!தம்பி இராகவன் கோவிச்சுகிட்டா கோவிச்சுகிட்டும், நான் அப்படித்தான் திட்டுவேன். தம்பி! உனக்கு நான் கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு. ஒழுங்கா வந்து சூப்பரா ஒரு பதிவு போடு. இன்னிக்கு நல்ல நாள். தளபதி பிறந்த நாள். உடனே ஸ்டாட் மீசிக்....
நம்ம உடன்பிறப்பு சொன்ன மாதிரி நமக்கு எல்லாம் நிறைய இனி தான் வேலையே இருக்கு. தேர்தல் வந்துடுச்சு தம்பி! ஓடி வா உடனே!
நான் இந்த பிளாக்கிற்கு புதுமுகம், தாங்கள் எழுத்துக்களை படித்து ரசித்து ஃபாலோவர் ஆனவன், தாங்களின் இந்த திடீர் அறிவிப்பை நினைத்து வருந்துகிறேன், மீண்டு வருவீர் என்ற நம்பிக்கையுடன்
மற்றவர்கள் திருடுகிறார்கள் என்பது ஒரு காரணம் இல்லை, அதை திருட திருட உங்களின் இமேஜ் உயரத்தில், சொந்த படைப்புகள் என்றும் வீண் போகா
இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்றால் அவர் உணர்வுபூர்வமாக வலையில் ஒன்றி விட்டார் என்று அர்த்தம்..
திரும்பி வருக நண்பரே!!
நண்பர் அறிவிழி அவர்கள் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். அதே சமயம் அவருடைய முடிவுக்கும் மரியாதை கொடுத்து மீண்டும் திரும்ப வருவார் என்று நம்புவோம். மற்றவர்களது அபிப்பிராயத்தில் எமது முடிவுகள் இருக்கும் என்றால் அந்த முடிவை மீள் பரிசோதனை செய்வது நல்லது என்பதும் எனது கருத்து.
ராகவன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பதிவில் தொடர்ந்த பதிவாளர்கள் எல்லோரும் திடீரென மறைந்து விட்டார்கள் (my followers list just disappeared from my blog). என்ன காரணமாக இருக்கும் என்பதை அறியத் தாருங்கள்.
எல்லாம் இங்கு நடக்குற அநியாயங்கள் தான் காரணம். நானும் எழுதினேன். எத்தனை பேர்களில். விட்டார்களா பாவிகள்? நான் யாரென்று உங்களுக்குத் தெரியும். பலபெயரில் உலவிய ஒரு பினாமி. சீர்திருத்தவாதி. பெண்ணியவாதி. கம்யூனிஸ்டு. எனப் பல பட்டங்கள் வாங்கினேன். இப்பொழுது ஓரமாக ஒதுங்கி வருவதைப் படிக்கிறேன். ஏன் ஐயா உங்களுக்குமா இன்னமும் புரியல?
// BOOPATHY said...
நண்பர் அறிவிழி அவர்கள் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். அதே சமயம் அவருடைய முடிவுக்கும் மரியாதை கொடுத்து மீண்டும் திரும்ப வருவார் என்று நம்புவோம். மற்றவர்களது அபிப்பிராயத்தில் எமது முடிவுகள் இருக்கும் என்றால் அந்த முடிவை மீள் பரிசோதனை செய்வது நல்லது என்பதும் எனது கருத்து.
ராகவன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பதிவில் தொடர்ந்த பதிவாளர்கள் எல்லோரும் திடீரென மறைந்து விட்டார்கள் (my followers list just disappeared from my blog). என்ன காரணமாக இருக்கும் என்பதை அறியத் தாருங்கள்.//
மன்னிக்க வேண்டும் தோழி பூபதி. எனக்கு இது மாதிரி பிரச்சினைகள் வரும் போது உதவுகின்றவர்கள் தம்பி ராஜ்குமாரும், தம்பி ஜமாலும் தான்.
நண்பர்கள் யாரவது அவருக்கு உதவுங்களேன்.
// muru said...
//அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.//
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார்.
நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...
என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.//
நானும் தம்பி முருவின் கருத்தை ஆமோதிக்கின்றேன்.
புதிய வலைபதிவர்கள் வரும்போது மகிழும் நம் மனம் ஏனோ நம்மில் சிலர் விடைபெறும் போது ஒரு வித வலியை ஏற்படுத்துகிறது.
அவர் குறிப்பிட்டிருக்கும் காரணம் எதுவாக இருப்பினும் அவரை மீண்டும் வலைதளத்துக்கு வரவைத்து அவர் பணியை தொடர முயலுமாறு
அண்ணன் ராகவனை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
அறிவிழியின் வலை பயணம் தொடரவேண்டுமென்பதே எனது அவா!
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
தி.மு.க ஆதரவு பதிவுகள் தவிர்து பார்த்தால் அவருடய பதிவுகள் ஏற்புடயதே!
ஆதரிப்பதும், எதிர்ப்பதும் அவரது பிரியம். ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும். எதாவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால் ஒரு மாத ஓய்வுக்கு பின் மீண்டும் வரசொல்லுங்கள்.
அறிவிழி நண்பரே நீங்க அ.தி.மு.க சேர்ந்திட்டதா ஒரு தகவல் உலவுது :)
உடனே இதை மறுத்து ஒரு பதிவு போடுங்க. நாங்கெல்லாம் ஆவலா இருக்கோம்.
// அன்புமணி said...
அறிவிழியின் வலை பயணம் தொடரவேண்டுமென்பதே எனது அவா!
//
ரிப்பீட்டேய்ய்..
உங்களின் எழுத்துக்களை இரசிக்க நாங்கள் இருக்கின்றோம்.
விலக வேண்டாம். மறுபடியும் எழுதுங்கள்!!!
// அன்புமணி said...
அறிவிழியின் வலை பயணம் தொடரவேண்டுமென்பதே எனது அவா!
//
ரிப்பீட்டேய்ய்..
Post a Comment