Tuesday, February 17, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்


வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பற்றி ஒரு பதிவு போடுவதற்காக தங்கைகள் "சாரல்" பூர்ணிமா அவர்களும், "Will To live" ரம்யா அவர்களும் அழைத்து இருக்கின்றார்கள்.

என்ன பதிவது, எப்படி பதிவது என்று ஒரே மண்ட குடைச்சல்...

அப்படி இருக்கும் போது, பூர்ணிமா அவர்கள் பதிவில் நண்பர் முத்துசாமி அவர்களின் பின்னூட்டம்,

/Muthusamy said... If u would like to get to know more old Tamil words, read any of the Sangam literature books. By this way you can get countless words..! //

சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட திரிகூடராசப்ப கவிராயரின் திருக்குற்றால குறவஞ்சி (இங்கே கிளிக்கினால் நீங்களும் பதிவிரக்கம் செய்யலாம்) பதிவிரக்கம் செய்து படித்து பார்த்தேன்...

பள்ளியில் படித்த குறவஞ்சி பாட்டான... குறத்தி மலைவளம் கூறுதல்..

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்...

ஆகா இரண்டு வார்த்தைகள் கிடைத்தன... (நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுது)

வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்.
ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி..

இதில் மூன்றாவது பாட்டாக வருவது இன்னும் அழகானது...

தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்காலும் வழுகும்.

இதில் தேனருவி - அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட வழக்கொழுந்துவிட்டதாகவே நினைக்கின்றேன்.
இப்போது அனைவரும் உபயோகப் படுத்துவது நீர்வீழ்ச்சி.
இந்த பதிவை எழுதும் போது, ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவு வருகின்றது... WATERFALLS தமிழ் படுத்தியதன் விளைவுதான் இது என்பார்.


இப்போது எனக்கு தெரிந்த சில சொற்க்கள் -

அம்மி, குழவி - அம்மி கருங்கல்லால் செய்யப்பட்டது - தட்டையாக இருக்கும் அம்மி... அதன் மேல் அரைப்பதற்கு உதவுவது குழவி எனப்படும். இது உருண்டையாக இருக்கும். இதுவும் கருங்கல்லாதான் செய்யப்பட்டு இருக்கும். (டிஸ்கி - யாரவது அம்மியில் அரைக்கிறேன் என்று தங்கள் கையை நசுக்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

மேலும் குழவி என்னும் சொல் - குழந்தையும் குறிப்பிடுவார்கள்.


கல்லுரல் - இதை ஊற வைத்த பொருட்கள் அரைக்கவும், மிளகாய் பொடி போன்றவற்றை இடிக்கவும் பயன் படுத்துவார்கள். இது கிரைண்டர் மாதிரி - கருங்கல்லால் செய்யப் பட்டு இருக்கும் - நடுவில் ஒரு குழி இருக்கும், மேலும் ஒர் உருண்டை கல் இருக்கும் அந்த குழியில் பொருந்துமாறு இருக்கும் - இதற்கும் குழவி என்றுதான் பெயர் - சிலர் இதை ஆட்டுக்கல் என்றும் அழைப்பர். இடிக்கும் போது உலக்கையை பயன் படுத்துவார்கள். உலக்கை இரும்பினால் செய்யப்பட்டது ம் உண்டு, மரத்தினால் செய்ய்யப் பட்டதும் உண்டு. மரத்தினால் செய்தது, உரலில் நெல் குத்தும் போது உபயோகப் படுத்தப்படுவது.

அழுக்காறு - பொறாமை
அநாமாதேயம் - முகமறியாத, அடையாளம் தெரியாத, அடையாளம் காட்டாத
ஒற்று - உளவு
ஒற்றர் - உளவு பார்ப்பவர்
ஒறுத்தல் - மன்னிக்காமல் தண்டித்தல்
(இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்)

ஓதுதல் - படித்தல் (ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்)
பொல்லாங்கு - புறம் கூறுதல். (பொல்லாங்கு ஒருவரையும் சொல்ல வேண்டாம்)

அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்... (3 நபர்களை மாட்டிவிடணுமா.. சரி..)

நான் மூன்று பேரை இந்த வழக்கொழிந்த சொற்கள் பதிவை தொடருவதற்கு அழைக்க வேண்டும் இல்லையா... (நண்பர்கள் அதனால் முன் அனுமதி பெறாமல் அழைத்துவிட்டேன்... கோபப் படாமல்.. இந்த தொடர்பதிவை தொடருங்கள்)

கடல்புறா - திரு. சாய்ராபாலு - கவிதைகளால் நம்மை கட்டி போடுகின்றார்.

பூபதி - சக பதிவாளர் என்பதை விட - நமது கணக்கு பிரிவை சார்ந்தவர் என்பதால். தற்போது ஆஸ்திரிலேயாவில் உள்ள என்னை மாதிரியான புலம் பெயர்ந்த நண்பி.

இலக்கியா அன்புமணி (குடந்தை பாசம்) .. காதலில் கரை கண்டவர் என்பதாலும்...

73 comments:

அ.மு.செய்யது said...

me the 1st ??

அ.மு.செய்யது said...

வாழ்த்துகள் ராகவன் அண்ணே..

உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும்..

அ.மு.செய்யது said...

எழுத்துலகில் நீங்கள் இன்னும் பல சிகரங்களை எட்டிப்பிடிக்க இந்த தம்பியின் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்...

அ.மு.செய்யது said...

வழக்கொழிந்த தமிழ்சொற்கள்...

ஆஹா..நீங்க முந்திக்கிட்டீங்களா....

அபுஅஃப்ஸர் said...

//அ.மு.செய்யது said...
வாழ்த்துகள் ராகவன் அண்ணே..

உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும்..
//

அப்படியா சொல்லவே இல்லே...

இந்த தம்பியோட வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

இருங்க படிச்சிட்டு வாரேன்

அ.மு.செய்யது said...

//வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்.
ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி..//

எங்கள பத்தி எதும் எழுதலியே !!!!!!

அ.மு.செய்யது said...

//பள்ளியில் படித்த குறவஞ்சி பாட்டான... குறத்தி மலைவளம் கூறுதல்..

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்...//

மெமரி ப்ளஸ் டேபிளட் சாப்டுவீங்களோ..

அபுஅஃப்ஸர் said...

ஆஹ்ஹா நீங்கள் முந்திக்கிட்டீரா
ரம்யா என்னையல்லவா அழைத்திருந்தார்

அ.மு.செய்யது said...

//மேலும் குழவி என்னும் சொல் - குழந்தையும் குறிப்பிடுவார்கள்.//

உபரிதகவல்: அதை 'செய்யது' ஐ குறிக்கவும் பயன்படுத்தலாம்.

அபுஅஃப்ஸர் said...

//சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...//

ஏதாவது சங்கத்துக்கு போகவேண்டியதுதானே, நைஜீரியாவுலே அதெல்லாம் இல்லியோ

அ.மு.செய்யது said...

//கல்லுரல் - இதை ஊற வைத்த பொருட்கள் அரைக்கவும், மிளகாய் பொடி போன்றவற்றை இடிக்கவும் பயன் படுத்துவார்கள். //

அப்ப ஊற‌ வைச்சி கும்முறதுக்கு என்ன சொல்வாங்க தல..

அபுஅஃப்ஸர் said...

//அ.மு.செய்யது said...
//மேலும் குழவி என்னும் சொல் - குழந்தையும் குறிப்பிடுவார்கள்.//

உபரிதகவல்: அதை 'செய்யது' ஐ குறிக்கவும் பயன்படுத்தலாம்.
/

7 கழுதவயசாயிடுச்சினு ஒரு குக்கிலே பாத்தேன்... இன்னும் அந்த நினெப்பு இருக்கா

அபுஅஃப்ஸர் said...

//தேனருவி //

இது வழக்கில் இருக்கே.. நிறைய கவிதை படித்திருக்கிறேன்

அ.மு.செய்யது said...

//அநாமாதேயம் - ‍‍முகமறியாத, அடையாளம் தெரியாத, அடையாளம் காட்டாத //

'அனானி'னு ஒத்த வார்த்தையில சொல்லிருக்கலாம்ல..

அ.மு.செய்யது said...

//7 கழுதவயசாயிடுச்சினு ஒரு குக்கிலே பாத்தேன்... இன்னும் அந்த நினெப்பு இருக்கா//

அது என்னதுங்க 'குக்கிலே' ?

அ.மு.செய்யது said...

//சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...
//

வேறங்க...எங்க ஊர் காயிலாங்கடைக்கு தான்..

அபுஅஃப்ஸர் said...

//அம்மி கருங்கல்லால் செய்யப்பட்டது - தட்டையாக இருக்கும் அம்மி... அதன் மேல் அரைப்பதற்கு உதவுவது குழவி எனப்படும். இது உருண்டையாக இருக்கும். இதுவும் கருங்கல்லாதான் செய்யப்பட்டு இருக்கும்//

இதிலே அரைச்ச துவையல் சாப்பிட்டிருக்கீறா?
அதன் சுவையே தனிதான்

இன்னமும் பெரிய திருமணவிருந்த்துக்கு அம்மியில் அரைத்துதான் சமயல் செய்கிறார்,, ரொம்ப டேஸ்ட்

அபுஅஃப்ஸர் said...

//கல்லுரல் - இதை ஊற வைத்த பொருட்கள் அரைக்கவும், மிளகாய் பொடி போன்றவற்றை இடிக்கவும் பயன் படுத்துவார்கள். இது கிரைண்டர் மாதிரி - கருங்கல்லால் செய்யப் பட்டு இருக்கும் - நடுவில் ஒரு குழி இருக்கும், மேலும் ஒர் உருண்டை கல் இருக்கும் அந்த குழியில் பொருந்துமாறு இருக்கும் - இதற்கும் குழவி என்றுதான் பெயர் - சிலர் இதை ஆட்டுக்கல் என்றும் அழைப்பர்//

இதை குடக்கல் என்றும் அழைப்பர்

அபுஅஃப்ஸர் said...

//அ.மு.செய்யது said...
//7 கழுதவயசாயிடுச்சினு ஒரு குக்கிலே பாத்தேன்... இன்னும் அந்த நினெப்பு இருக்கா//

அது என்னதுங்க 'குக்கிலே' ?
//

டைப் மிஸ்டேக், கும்மி

அபுஅஃப்ஸர் said...

// இடிக்கும் போது உலக்கையை பயன் படுத்துவார்கள். உலக்கை இரும்பினால் செய்யப்பட்டது ம் உண்டு, மரத்தினால் செய்ய்யப் பட்டதும் உண்டு. மரத்தினால் செய்தது, உரலில் நெல் குத்தும் போது உபயோகப் படுத்தப்படுவது.//

மண்வாசனை படம் பாருங்க தெரியும்

அபுஅஃப்ஸர் said...

//அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்...//

இப்போதானே ஆரம்பிச்சி வெச்சிருக்கீங்க.......

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
//7 கழுதவயசாயிடுச்சினு ஒரு குக்கிலே பாத்தேன்... இன்னும் அந்த நினெப்பு இருக்கா//

அது என்னதுங்க 'குக்கிலே' ?
//

டைப் மிஸ்டேக், கும்மி
//

யார் சொன்னாங்க..எனக்கு 3 கழுத வயசு தாங்க ஆவுது...3*7= ?????

அதாவது நம்ம ராகவன் அண்ணாத்தயை விட 23 வருடங்கள் மைனஸ்.

அபுஅஃப்ஸர் said...

//கடல்புறா - திரு. சாய்ராபாலு - கவிதைகளால் நம்மை கட்டி போடுகின்றார்.//

நிறைய கயிறு வெச்சிருக்காரோ

அபுஅஃப்ஸர் said...

25

அபுஅஃப்ஸர் said...

//இலக்கியா அன்புமணி (குடந்தை பாசம்) .. காதலில் கரை கண்டவர் என்பதாலும்...//

எந்த கரையை கண்டார்...ஏரிக்கரை, குளத்துக்கரை...?

அபுஅஃப்ஸர் said...

ஹாய்யா நாந்தான் லெக் சதம்

அபுஅஃப்ஸர் said...

//ஆகா இரண்டு வார்த்தைகள் கிடைத்தன... (நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுது)

வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்//

என்னா உறவு தல அவுக உங்களுக்கு

அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
//இலக்கியா அன்புமணி (குடந்தை பாசம்) .. காதலில் கரை கண்டவர் என்பதாலும்...//

எந்த கரையை கண்டார்...ஏரிக்கரை, குளத்துக்கரை...?//

என்ன நம்ப தலை உருளுது? நான் மெரீனா கரையை கண்டவன்.(தற்போது சென்னை வாசம். காதலும் இங்கதான்)
அதுசரி... ராகவன் அண்ணே! என்ன இப்படி மாட்டிவிட்டீங்க! ம். கொஞ்சம் டைம் கொடுங்க பிரிச்சி மேஞ்சிரலாம்!

அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
வாழ்த்துகள் ராகவன் அண்ணே..

உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும்..//

கேட்டிச்சா!
வாழ்த்துகள் ராகவண்ணன்!

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

இடுகைக்கும் ,இதழில் வந்த பதிவிற்கும்

நட்புடன் ஜமால் said...

\\உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..\\

ஆஹா

அருமை அண்ணேன்

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி.\\

வானரம் - மந்தி தெரியும்.

ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் தெரியாது.

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
\\ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி.\\

வானரம் - மந்தி தெரியும்.

ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் தெரியாது.
//

விலா வாரியா அடுத்தபதிவுலே சொல்லப்படும், பின்னூட்டமிட நீங்க ரெடியா

வேத்தியன் said...

தேவையான பதிவு...
வாழ்த்துகள்...

Anonymous said...

வாழ்த்துகள் ராகவன் அண்ணே..

உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும்..
ரிப்பீட்டே

நட்புடன் ஜமால் said...

\\ஒறுத்தல்\\

இது தெரியாது

பொருத்தல் இதன் மூலம் தான் வந்திருக்குமோ

நட்புடன் ஜமால் said...

\\அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்... (3 நபர்களை மாட்டிவிடணுமா.. சரி..)\\

இது வேறையா

பழமைபேசி said...

//அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட வழக்கொழுந்துவிட்டதாகவே நினைக்கின்றேன்.//

வருத்தமானது. கொஞ்சப் பேர்க்கு, அருவின்னா குற்றாலம்... அஃக்ஃக்ஃஃகா!

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

வழக்கொழிந்த தமிழ்சொற்களை மீட்டெடுப்பது ஒரு அரிய பணி. முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

தேனியார் said...

//உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும்..//

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

எப்படியோ தேடி கண்டுபிடிச்சி போட்டுடிங்க்ளே!
என்னை இதுவரைக்கும் மூணு பேரு கூப்பிட்டுடாங்க!
ஒருத்தர் யாருக்கும் தெரியாம சிலர் வார்த்தைகளை கூறி உதவி பண்ணியிருக்காங்க!
இருந்தாலும் எனக்கா எதாவது ஒரு வார்த்தை தோணாதான்னு தேடிகிட்டு இருக்கேன்,
விரைவில் எனது பதிவு வரும்

coolzkarthi said...

ராகவன் அண்ணே.....கலக்கல்....அப்படியே புதிதாக வழக்கில் இருக்கும் சொற்களையும் சொல்லுங்களேன்.....(ம்ம்ம்ம் டமாரு,டரியல்.....)

coolzkarthi said...

எங்கேயோ படிச்ச மாதிரியே இருக்குதே?ஆங் தமிழ் புக் ல .....நன்றி அண்ணே.....
உண்மையில் அரிய பணி.....

coolzkarthi said...

சாரி அண்ணே ,ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் வலை பக்கமே வரேன்.....வீட்டுக்கு போய் இருந்தேன்....இன்னைக்கு தான் வந்தேன்.....

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

இடுகைக்கும் ,இதழில் வந்த பதிவிற்கும்!!

BOOPATHY said...

நன்றி ராகவன் என்னையும் அழைத்தமைக்கு. முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
பிழை இருந்தால் திருத்துங்கள் நண்பர்களே.

அறிவிலி said...

"வழக்கொழிந்த"

எங்கே?

தமிழ் நாட்டில் வழக்கொழிந்த பல சொற்கள் இன்னமும் கடல் கடந்து வாழும் தமிழர்களால் உபயோகிக்கப்படுகிறது.

எ.கா - சிங்கப்பூர் வனொலி(ஒலி)
சிங்கப்பூர் தொலைக்காட்சி
(வசந்தம்)

நட்புடன் ஜமால் said...

\வால்பையன் said...

எப்படியோ தேடி கண்டுபிடிச்சி போட்டுடிங்க்ளே!
என்னை இதுவரைக்கும் மூணு பேரு கூப்பிட்டுடாங்க!
ஒருத்தர் யாருக்கும் தெரியாம சிலர் வார்த்தைகளை கூறி உதவி பண்ணியிருக்காங்க!
இருந்தாலும் எனக்கா எதாவது ஒரு வார்த்தை தோணாதான்னு தேடிகிட்டு இருக்கேன்,
விரைவில் எனது பதிவு வரும்\\

இதே நிலை தான் நமக்கும்.

நட்புடன் ஜமால் said...

அட 50 நாம தானா

நசரேயன் said...

நீங்க ஒரு தமிழ் பேராசிரியர்ன்னு சொல்லவே இல்லை!!!
எல்லாம் நல்லா இருக்கு

muru said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

விகடன்ல, உங்களோட பிப்ரவரி 13, 2003 வந்திருக்கு பாத்தீங்களா?

அப்படியே என்னோடது

மாப்புள்ள நீயெல்லாம் குதி(டி)க்காத,
கலை வளர்க்கும் தமிழகம் - பாகம் 1

என ரெண்டு கட்டுரைகளுக்கு சுட்டி கொடுத்திருக்காங்கக பாத்தீங்களா?

அண்ணன் வணங்காமுடி said...

அம்மி, குழவி:

சிலர் இதை தலையில் போட்டு கொல்வதற்கும் பயன்படுத்தலாம்

ஹேமா said...

//உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..//

வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.
இராகவன்.அம்மி,குழவி,உரல்,உலக்கை எல்லாம் உங்க ஊர்ல இன்னும் இருக்கா-வச்சிருக்காங்களா? அதிசயம்தான்.

RAMYA said...

//

உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே
//

முதலில் என் வாழ்த்துகள் அண்ணா!!!

RAMYA said...

வழக்கொழிந்த தமிழ்சொற்கள்!!!

நான்தான் நீங்க எழுதி
விடுவீங்கன்னு சொன்னேனே!!

அதான் எழுதிவிட்டீங்க.

நானும் நீங்க கொடுத்த லிங்க்
மற்றும் பொன்னியின் செல்வன்
இருந்து எடுத்தேன்.

தேடுவதற்குள் தான் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு நான் எழுதிய "அட்டாலி"
எனக்கு தெரிஞ்சவுங்க சொல்லுவாங்க

RAMYA said...

Anna better never than late???

thevanmayam said...

கவிதை போட்டு உள்ளேன் வருக

ஆதவா said...

வழக்கொழிந்த வா? வழக்கொழிக்கப்பட்ட வா?

இரண்டும் ஒன்றுதானே!! எனக்கும் பல தமிழ் சொற்கள் அர்த்தம் தெரியாது. எனது பழைய கவிதைகளில் நான் பல தமிழ்ச் சொற்களை உபயோகித்திருக்கிறேன். இன்று சொற்கள் சொற்பமாகி வருகின்றன... அதாவது உபயோகப்படுத்துவது வெகுவாக குறைவாகி வருகின்றன.

நல்ல பதிவு இராகவன் அவர்களே!

Anonymous said...

எனக்கென்றால் இதுகள் எல்லாமே வழக்கத்தில் உள்ள சொற்கள் போலவே இருக்கு. மந்தி, வானரம் வேறுபாட்டைத் தவிர்த்து.

எட்வின் said...

நல்ல முயற்சி ராகவன் சார்... உங்ளை எழுதத்தூண்டியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

அண்ணா, ஒரு வழியா வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பதிவ போட்டாச்சு.......

Poornima Saravana kumar said...

//சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...
//

என்ன கேள்வி இது???????சி.பி தனமா!!!!

Poornima Saravana kumar said...

//நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுது

வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்.
ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி..//

இனம் இனதோடு தான் சேருமுன்னு பழமொழி படித்ததா நியாபகம்!!!

Poornima Saravana kumar said...

//இதில் தேனருவி - அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட வழக்கொழுந்துவிட்டதாகவே நினைக்கின்றேன்.
இப்போது அனைவரும் உபயோகப் படுத்துவது நீர்வீழ்ச்சி.
இந்த பதிவை எழுதும் போது, ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவு வருகின்றது... WATERFALLS தமிழ் படுத்தியதன் விளைவுதான் இது என்பார்.
//

நாங்க எல்லாம் அருவினு தான் சொல்லரோம்..

Poornima Saravana kumar said...

//அம்மி, குழவி //

ஹி ஹி

Poornima Saravana kumar said...

//
அநாமாதேயம் - முகமறியாத,
ஒற்று - உளவு
ஒறுத்தல் - மன்னிக்காமல் தண்டித்தல்
//

இது நமக்கு புதுசு...

Poornima Saravana kumar said...

//அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்...//

ஒரு மாதிரினா????? இன்னா அது????

Poornima Saravana kumar said...

கடல்புறா
பூபதி
இலக்கியா


வாழ்துக்கள்:))

Poornima Saravana kumar said...

70

thevanmayam said...

நான் ஆரம்பித்த பணி என்ன ஆயிற்று?
தேவா..

thevanmayam said...

வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை
என்ன அழகாக கொடுத்துள்ளார்.
ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி.//

வார்த்தைகள்
தெரியும்
ஆனால் பால்
பாகுபாடு
இப்போதுதான்
தெரியுது!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்