Tuesday, February 24, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!


என்னைக் கவர்ந்தவர்கள் பற்றி நண்பர் ”தமிழ்துளி” திரு. தேவா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

என்னைக்கவர்ந்தவர்கள் பலர் இருப்பினும், இந்த இரு இருவரும் மிகக்கவர்ந்தவர்கள் என்பதை விட, என் உள்ளத்தில் மிக உன்னதமான இடம் இந்த இருவருக்கும் உள்ளது...
Dr. Santha


அடையாறில் (சென்னை) புற்று நோய் கழக மருத்துவ மனையை நிறுவியவர் டாக்டர் சாந்தா அவர்கள். 50 ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோய் சிகிச்சையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

புற்று நோய் ஒழிப்பில் அவருடைய சேவையை பாராட்ட எனக்கு வயது இல்லை அதனால் அவரை வணங்குகின்றேன்.

பொதுச்சேவை என்றால் என்ன என்று இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னலமில்லாத பொதுச் சேவை...

அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.

அடையார் புற்று நோய் கழகத்தின் ஒரு தோற்றம்...


எம்.எஸ். சுப்புலஷ்மி...

கர்னாடக சங்கீதத்தின் ஒரு அத்தாரிட்டி

அந்த காந்தர்வ குரல்...

குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா... மூதறிஞ்சர் அவர்களின் பாடலுக்கு தன் தேனினும் இனிய குரலால் உயிர் கொடுத்தவர்.

இன்று கேட்டாலும் மனதில் ஒரு நிம்மதி, ஒரு இனம் புரியாத அமைதி.

அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள், மீரா பஜன்கள் இவர் பாடியதை இன்றும் மறக்க முடியுமா...

திருமதி. எம். எஸ் அவர்களும் பிலிப்பைன்சின் உயரிய விருதான ரமேன் மகசேசே பெற்றுள்ளார்.

சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...

ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.இந்த தொடர் பதிவுக்கு இரண்டு நபர்களை அழைக்க வேண்டும் என்று நண்பர் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

யாரவது இரண்டு பேர் மாட்ட மாட்டாங்களா என்ன...

முதல்ல ஒரு புதுப்பதிவர்... ரசனைக்காரி - 9 நாள்ள 13 பதிவு போட்டவர். (24.02.09 நைஜிரியா நேரம் 9 மணிப்படி உள்ள கணக்கு). இவரின் பள்ளிகள் அனுபவப்பாடம் .. படித்து பாருங்க ... சூப்பர்.

அடுத்து மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நண்பர் கண்ணாடி ஜீவன் அவர்களையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கின்றேன்.

57 comments:

muru said...

அண்ணே வணக்கம்,

பரவாயில்லை, நீங்க சொன்ன ரெண்டு பெரையும் யாராலயும் மறுக்க முடியாது. நினைவு படுத்தியதுக்கு நன்றி.

அப்புறம் பதிவேத்தியபோது நைஜீரியாவில் எத்தனை மணி?

மீ த ஃபஸ்டூ?!

அறிவிலி said...

எல்லோரையும் கவர்ந்தவர்கள் என்ற கூட சொல்லலாம்.

கர்னாடக இசை தெரியாதவர்கள் கூட M.S.ன் குரலில் மயங்குவார்கள்.

Mahesh said...

நீங்க வித்தியாசமான ரசனை உள்ளவர்னு தெரியுது... சூப்பர் !!

அ.மு.செய்யது said...

//அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.//

புதிய தகவல்..தினமும் கேன்சர் இண்ஸ்டிட்யூட்டை பக்கமாக தான் எங்கள் பேருந்து செல்கிறது.

இவ்ளோ விஷயம் இருக்கா அங்க...

அ.மு.செய்யது said...

கர்னாடக சங்கீதத்தின் ஒரு அத்தாரிட்டி //

அது என்னவோ உண்மை தான்.

நட்புடன் ஜமால் said...

\\அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்\\

அரிய தகவலுக்கு நன்றி.

thevanmayam said...

நேற்றைய
கைது பிடிவாரண்ட் லிஸ்டில் இருந்து தப்பிச்சிட்டீங்க!!
பார்க்க:http://abidheva.blogspot.com/2009/02/blog-post_24.html

thevanmayam said...

\\அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்\\

அரிய தகவலுக்கு நன்றி.//

ஆமா ஆமா...

அனுஜன்யா said...

நல்ல பதிவு. நல்ல தேர்வு. "உன் நண்பர்களைக் காண்பி; நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். போலவே, உங்கள் தேர்வு உங்களையும் காண்பிக்கிறது. வாழ்த்துகள்.

அனுஜன்யா

வேத்தியன் said...

இந்த இரு இருவரும்//

:-))))

வேத்தியன் said...

புற்று நோய் ஒழிப்பில் அவருடைய சேவையை பாராட்ட எனக்கு வயது இல்லை அதனால் அவரை வணங்குகின்றேன்.//

அவரின் சேவைக்கு நானும் தலைவணங்குகிறேன்...

வேத்தியன் said...

அட நமக்கு பிடிச்ச எம்.எஸ்.சுப்புலஷ்மி...
கலக்கிபுட்டீங்க ராகவண் அண்ணே...

வேத்தியன் said...

குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா... மூதறிஞ்சர் அவர்களின் பாடலுக்கு தன் தேனினும் இனிய குரலால் உயிர் கொடுத்தவர்.//

உண்மை உண்மை...

வேத்தியன் said...

சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...

ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.
//

அட அட அட அட...
சூப்பர்ங்க....

Rajeswari said...

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே அவரவர் துறையில் ஜொலித்து கொண்டு சமுதாய வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்தவர்கள் .

இந்த பதிவின் தொடர்ச்சிக்கு என்னை மாட்டிவிட்ட ராகவன் சாருக்கு மிகவும் நன்றி ..

இந்த அழைப்பின் மூலம் உங்கள் மாபெரும் பதிவர் வட்டத்தில் , என்னையும் இணைத்தமைக்கு மிகவும் நன்றி .(பொறுப்பு ரொம்ப கூடிருச்சு போல இருக்கே )

"என்னை கவர்ந்தவர்கள் " பதிவின் தொடர்ச்சி விரைவில்..... (இதுதான நம்ம style )

வால்பையன் said...

தமிழக சாதனை பட்டியலில் நீங்கா இடம் பிடித்தவர்கள், பெண்களின் தன்நம்பிக்கைக்கு இவர்களின் பெயரை உச்சரிப்பதே உரமாகும்.

அன்புமணி said...

இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இருவருமே தலைசிறந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது. யாரும் மறக்கவும் கூடாது. பெண்களுக்கு இவர்கள் ஓர் முன்னுதாரணம்.

அபுஅஃப்ஸர் said...

வாங்க அண்ணாத்தே ஆணியை எல்லாம்புடுங்கி போட்டாச்சா

அபுஅஃப்ஸர் said...

//பொதுச்சேவை என்றால் என்ன என்று இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்./

ஆம்.. இவர்களெல்லாம் சிறந்த் ஒரு எடுத்துக்காட்டு, நம்பிக்கை தெம்பு கொடுப்பவர்கள்

அபுஅஃப்ஸர் said...

//பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்//

பிலிப்பன்ஸ் நாட்டில்தான் விருது தேடிதேடி கொடுக்குறாங்களா, ரொம்ப நல்லவங்கலோ

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜீவன் said...

நல்ல பதிவு அண்ணே! இரண்டு பெண்மணிகளும் மதிக்க பட வேண்டியவர்கள்தான்!

என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி!! விரைவில் பதிவிடுகிறேன்!!!

இராகவன் நைஜிரியா said...

// muru said...

அண்ணே வணக்கம்,

பரவாயில்லை, நீங்க சொன்ன ரெண்டு பெரையும் யாராலயும் மறுக்க முடியாது. நினைவு படுத்தியதுக்கு நன்றி.

அப்புறம் பதிவேத்தியபோது நைஜீரியாவில் எத்தனை மணி?

மீ த ஃபஸ்டூ?! //

நன்றி முரு. பதிவிடும் போது நைஜிரியாவில் இரவு 10.30. சிங்கைக்கும் நைஜிரியாவுக்கும் 7 மணி நேரம் வித்யாசம். (நைஜிரியா - GMT+1, சிங்கப்பூர் GMT +8).

யெஸ் யு ஆர் தி பர்ஸ்ட்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி அறிவிலி...
நன்றி மகேஷ்....
நன்றி அ.மு. செய்யது...
நன்றி ஜமால்...

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

நேற்றைய
கைது பிடிவாரண்ட் லிஸ்டில் இருந்து தப்பிச்சிட்டீங்க!!
பார்க்க:http://abidheva.blogspot.com/2009/02/blog-post_24.html //

என்னாது இது.. ரொம்ப கஷ்டப்பட்டு, தனியா டீ ஆத்தி, 24 பின்னூட்டம் போட்டு, 101 பின்னூட்டம் வரவழைச்சுருக்கேன்...

மருத்துவரே... நம்மல கவனிக்கவே மாட்டீங்களா..

ஆதவா said...

///பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.////

இவ்விருது பெற்றபின்னர்தான் இவரின் சேவை குறித்து நானும் அறிந்தேன்.....

உங்களுக்குப் பிடித்தமானவர்களில் இருவரும் பெண்களாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது!!!! வாழ்த்துக்கள்!1!!

ஆதவா said...

எம்.எஸ்.எஸ்...... நான் சிறுவயதில் அதிகம் கேட்ட குரல்..... நேற்றுகூட தொலைக்காட்சியில் லயித்தேனே!!!

ஆதவா said...

இருந்தாலும், நீங்கள் எம்.எஸ் குறித்து மேற்கொண்டு பல தகவல்களைக் கொடுத்திருக்கலாம்....

தொடர் ஏற்படுத்தி இணைத்தமைக்கு தேவா சாருக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களைக் கவர்ந்தவர்கள் எங்களையும் கவர்ந்தவர்கள் தாம்.

சொல்லியதோடு நில்லாமல் மேலதிக தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

நன்றி அனுஜன்யா....
நன்றி வேத்தியன்....
நன்றி ராஜேஸ்வரி...
நன்றி வால்பையன்...
நன்றி அன்புமணி...
நன்றி அபு...
நன்றி ஜீவன் அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// ஆதவா said...

இருந்தாலும், நீங்கள் எம்.எஸ் குறித்து மேற்கொண்டு பல தகவல்களைக் கொடுத்திருக்கலாம்....

தொடர் ஏற்படுத்தி இணைத்தமைக்கு தேவா சாருக்கு நன்றி //

நன்றி ஆதவா...

நீங்கள் கூறியபின் தான், நினைத்துப் பார்க்கின்றேன்... இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்று.

இராகவன் நைஜிரியா said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களைக் கவர்ந்தவர்கள் எங்களையும் கவர்ந்தவர்கள் தாம்.

சொல்லியதோடு நில்லாமல் மேலதிக தகவல்கள் தந்தமைக்கு நன்றி. //

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..

thevanmayam said...

என்னாது இது.. ரொம்ப கஷ்டப்பட்டு, தனியா டீ ஆத்தி, 24 பின்னூட்டம் போட்டு, 101 பின்னூட்டம் வரவழைச்சுருக்கேன்...

மருத்துவரே... நம்மல கவனிக்கவே மாட்டீங்களா..///

அய்யா ! தாங்கள் போட்டதைப்பார்த்தேன்1

thevanmayam said...

நன்றி நன்றி நன்றி நன்றி!!!
இஃகி!! இஃகி!!!இஃகி!!

thevanmayam said...

சும்மாதானே சொன்னேன்

thevanmayam said...

ஒரு மருத்துவரை
சொன்னத்ற்கு நன்றி

thevanmayam said...

சுப்புலக்‌ஷ்மி தெய்வம் மாதிரி

thevanmayam said...

என்னைக் கவர்ந்தவர்கள் பற்றி நண்பர் ”தமிழ்துளி” திரு. தேவா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

நன்றி

thevanmayam said...

என்னைக்கவர்ந்தவர்கள் பலர் (தேவாவை யும் சேத்து)இருப்பினும், இந்த இரு இருவரும் மிகக்கவர்ந்தவர்கள் என்பதை விட, என் உள்ளத்தில் மிக உன்னதமான இடம் இந்த இருவருக்கும் உள்ளது...

thevanmayam said...

அடையாறில் (சென்னை) புற்று நோய் கழக மருத்துவ மனையை நிறுவியவர் டாக்டர் சாந்தா அவர்கள். 50 ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோய் சிகிச்சையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
///
பெண்கள் நினைத்தா முடியாதது எது?

thevanmayam said...

புற்று நோய் ஒழிப்பில் அவருடைய சேவையை பாராட்ட எனக்கு வயது இல்லை அதனால் அவரை வணங்குகின்றேன். //

ஆஹா நானும்!!

thevanmayam said...

பொதுச்சேவை என்றால் என்ன என்று இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னலமில்லாத பொதுச் சேவை...
///

நம்மாளுங்க அப்படி ஒரு சேவையா? ந்னு கேக்கிறாங்க!
சமையல் குறிப்பு(பொதுசேவை) அனுப்பவும்!!
இஃகி!!இஃகி!!

thevanmayam said...

அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.

விருதுக்கும் மேல் அவர்

thevanmayam said...

எம்.எஸ். சுப்புலஷ்மி...

கர்னாடக சங்கீதத்தின் ஒரு அத்தாரிட்டி//

ஆமாங்கோ?

thevanmayam said...

அந்த காந்தர்வ குரல்...

குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா... மூதறிஞ்சர் அவர்களின் பாடலுக்கு தன் தேனினும் இனிய குரலால் உயிர் கொடுத்தவர்.

இதுக்கு இணை ஏதுமில்லை

thevanmayam said...

இன்று கேட்டாலும் மனதில் ஒரு நிம்மதி, ஒரு இனம் புரியாத அமைதி.//

எப்போதும் மாறாத பாடல்

thevanmayam said...

அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள், மீரா பஜன்கள் இவர் பாடியதை இன்றும் மறக்க முடியுமா.//

நான் கேட்டதில்லை

thevanmayam said...

எல்லோரையும் கவர்ந்தவர்கள் என்ற கூட சொல்லலாம்.

கர்னாடக இசை தெரியாதவர்கள் கூட M.S.ன் குரலில் மயங்குவார்கள்.

thevanmayam said...

சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...

ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.//

ஆஹா இதுவே அழகு

thevanmayam said...

இந்த தொடர் பதிவுக்கு இரண்டு நபர்களை அழைக்க வேண்டும் என்று நண்பர் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.//

5 பேரைக்கூப்பிடுக. 2 தேறுவர்

thevanmayam said...

ஐய்ம்பது ம் நானே நானா!!!

thevanmayam said...

முதல்ல ஒரு புதுப்பதிவர்... ரசனைக்காரி - 9 நாள்ள 13 பதிவு போட்டவர். (24.02.09 நைஜிரியா நேரம் 9 மணிப்படி உள்ள கணக்கு). இவரின் பள்ளிகள் அனுபவப்பாடம் .. படித்து பாருங்க ... சூப்பர்.//

படிச்சு பார்க்கிறேன்..

புதியவன் said...

//அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.//

தகவலுக்கு நன்றி...

புதியவன் said...

//சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...
ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.//

முற்றிலும் உண்மை...உங்களைக் கவர்ந்தவர்கள் எங்களையும் கவர்ந்தவர்கள் தான்...

SK said...

நல்ல அழாகான தேர்வு.

coolzkarthi said...

அண்ணே....எனக்கும் அவங்களை பிடிக்கும்.....சில நாட்களுக்கு முன்பு என் அப்பாயி(பாட்டிக்கு)M.S இன் மீரா படம் வாங்கி கொடுத்து கூட சேர்ந்து பார்த்தேன்....பாடல்கள் உண்மையில் மயக்கின.....

coolzkarthi said...

அண்ணே இப்ப ப்ரீ ஆயாச்சா?

ஹேமா said...

இராகவன் திரும்பி வந்திட்டீங்களா?நான் கவனிக்கவே இல்லையே.

எனக்கும் எம்.எஸ். சுப்புலஷ்மி...அவர்களை நிறையவே பிடிக்கும்.