Monday, February 2, 2009

சேமிப்பின் அவசியம்

காரணம் தெரியவில்லை. இன்று காலையில் இருந்து மறைந்த தந்தையின் நினைவுகள். அவர் மறைந்து வருடங்கள் 3 முடிந்தாலும், பல சமயங்களில் அவரின் இழப்பு மறக்க இயலவில்லை. அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விசயம் “சேமிப்பு”. இன்று முழுவதும் அவரின் அறிவுரைகளை நினைத்து கொண்டு இருக்கும் போது, இதை ஏன் ஒரு பதிவாக நாம் போடக்கூடாது என்று தோன்றியது. போட்டுவிட்டேன்.

நாம் ஏன் சேமிக்க வேண்டும். நல்லாதானே சம்ம்பாதிக்கின்றோம். பதவி விலகும் போது, பி.எஃப்., கிராஜுவிட்டி எல்லாம் இருக்குமே போதாதா என நினைக்கக் கூடாது.

சேமிப்பு என்பது சிறு வயது முதல் வரவேண்டும். படிக்கும் காலத்திலேயே என் தந்தை மாதா மாதம் ரூ. 10 கொடுத்து, என் பெயரிலேயே, அஞ்சல் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் போட வேண்டும், அதுவும் நானே போய் போட்டுவிட்டு வரவேண்டும் எனவும் சொல்லுவார்.

என் தந்தை கற்று கொடுத்தது.. எவ்வளவு சம்பளம் என்பது முக்கியமல்ல.. எவ்வளவு குறைந்த சம்பள்மாக இருந்தாலும், அதிலும் சேமிக்க பழக வேண்டும் என்பார். அவரும் அந்த மாதிரி வாழ்ந்தும் காட்டினார்.

சேமிப்பு என்பது எந்த அளவுக்கு எனக்கு உதவியது என்பதற்கான உதாரணம் இது..
நான் அப்போது ஒரு இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன். சம்பளம் மாதம் ரூ. 600 தான். மாதா மாதம் 50 ரெக்கரிங் டெபாசிட் போட்டுகிட்டு வருவேன்.

1988 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ராத்திரி நிறுவனம் திடீரென lockout பண்ணிவிட்டார்கள். மறுநாள் சம்பளம் வரும் நினைச்சுகிட்டு இருந்தபோது இப்படி ஆகிப்போச்சு. என்ன செய்வது கையிருப்பு வெறும் 20 ரூபாய்தான். அங்கதாங்க நான் போட்ட ரெகரிங் டெபாசிட் உபயோகப்பட்டுச்சுங்க. மார்ச் மாதம் 2 ஆம் தேதியோட என்னோட ரெகரிங் டெபாசிட் முடிவடைஞ்சுதுங்க.. 640 ரூபாய் கைல கிடைச்சுதுங்க.. அந்த பணம் அந்த சமயத்தில் ஒரு பொக்கிஷம் கிடைத்த மாதிரி இருந்ததுங்க..

சேமிப்பைப் பற்றி இதில் நான் கற்ற அறிவு, எந்த பள்ளியில் படித்தாலும் கிடைக்காது.. அனுபவம் நல்ல ஆசான்..

ஒரு காசு பேணின் இரு காசு தேறும் (என்னங்க பழமை இது சரியா எனச்சொல்லுங்களேன்)

46 comments:

நசரேயன் said...

நல்ல தகவல்

வெற்றி said...

சிறு பதிவாக இருந்தாலும் அறுமையான பதிவு.இன்றைய இளைஞர்கள்,(அதுவும் உங்கள் நைஜீரியா பலமுறை வந்ததுண்டு)வரவுக்கேத்த செலவு செய்து பழகி இருக்கிறார்கள்.அதாவது 1000 சம்பாதிக்கும் போதும் 100 மிச்சம்,1000 சம்பாதிச்சலும் அதே 100 தான் மிச்சம். இன்னும் ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கலாம்.நேரமில்லையோ?

ஹேமா said...

நல்ல தகவல் இராகவன்.எனக்கும் உங்கள் அப்பா போலத்தான்.என் அப்பா உண்டியல் தந்திருந்தார்.இன்றும் சரிவரச் சேமித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
அதோடு சிறுவயதிலிருந்தே கஷ்டம்,வறுமை என்றால் எப்படி என்றும் சொல்லி வளர்த்திருந்தார்.
இன்று உதவியாய் இருக்கிறது.நன்றி அப்பாவுக்கு.ஞாபகப்படுத்திய உங்களுக்கும் நன்றி.

பழமைபேசி said...

நல்ல தகவலாப் போட்டு, ரெண்டு மூனாகாம செய்தாச்சு.... நன்றிங்க ஐயா!
இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்குறதா இரம்யா அவிங்களும் அவிங்க குழுமத்தாரும் பேசிகிட்டு இருந்தாங்க....இஃகிஃகி!

Mahesh said...

காலத்துக்கேத்த அருமையான பதிவு.

புதியவன் said...

//ஒரு காசு பேணின் இரு காசு தேறும் (என்னங்க பழமை இது சரியா எனச்சொல்லுங்களேன்)//

மிகச் சரியே...மிகவும் தேவையான பதிவு தொடருங்கள் ராகவன் அண்ணா...

நட்புடன் ஜமால் said...

முதல் செலவு உங்கள் சேமிப்பா இருக்கட்டும்.

நட்புடன் ஜமால் said...

நான் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடத்தில் IOB அக்கவுண்ட் ஒன்னு எல்லொருக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு உண்டியலும் கொடுத்தார்கள்.

நல்ல திட்டம்.

நட்புடன் ஜமால் said...

\\அனுபவம் நல்ல ஆசான்.\\

சரியாக சொன்னீங்க அண்ணன்.

BOOPATHY said...

எங்கு பார்த்தாலும் போர், தீ, மரணம் என்று தலைசுத்தும் நேரத்தில் கொஞ்சம் மனதுக்கு இதமான பதிவு. சேமிப்பு எனக்கும் எனது அப்பாவுக்கும் தெரியாத, முடியாத விடயம். எனது அப்பாவின் பழக்கவழக்கங்கள் என்னிடம் தொத்திக்கொண்டதுதான் அதிகம். ஆனால் எப்போதும் எங்களிடம் கையில் காசு இருக்கும். இருப்பதை வைத்து மகிழும் ரகம் நாங்கள். ஆனாலும் சேமிப்பும் முக்கியம் ராகவன். நாளை ஒருவேளை காசில்லாவிட்டால் நைஜீரியா பேங்க் அனுப்புமா?

அப்பாவி முரு said...

///BOOPATHY said...
நாளை ஒருவேளை காசில்லாவிட்டால் நைஜீரியா பேங்க் அனுப்புமா?///

நைஜீரியாவிலிருந்து பணம் வராது, வேண்டுமானால் பணம் சம்பாரிச்சு கொடுக்க நல்ல திறமையான நாலு கடல் கொள்ளையர்கள் அனுப்பலாம். வேண்டுமா பூபதி அண்ணே.

அமுதா said...

நல்ல பதிவு. சேமிப்பின் அவசியத்தை நாம் கற்றுக் கொண்டது போல் அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். பலர் இதில் தவறி விடுகிறார்கள்.

வெற்றி said...

சிறு பதிவாக இருந்தாலும் அறுமையான பதிவு.இன்றைய இளைஞர்கள்,(அதுவும் உங்கள் நைஜீரியா பலமுறை வந்ததுண்டு)வரவுக்கேத்த செலவு செய்து பழகி இருக்கிறார்கள்.அதாவது 1000 சம்பாதிக்கும் போதும் 100 மிச்சம்,10000 சம்பாதிச்சலும் அதே 100 தான் மிச்சம். இன்னும் ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கலாம்.நேரமில்லையோ?

coolzkarthi said...

அண்ணே எங்களை போன்றோருக்கு உண்மையில் பயனுள்ள கருத்து....எனக்கு என்ன பண்ணாலும் சேமிக்கணும் அப்படின்னு மட்டும் தோனவே தோணாது...இனி ட்ரை பண்ணி பாக்குறேன்...

RAMYA said...

அண்ணே ரொம்ப நல்ல பதிவு அண்ணேஎதிர் காலத்துக்கு தேவையான அளவிற்கு நாம் சேமிக்க வேண்டும் என்ற நம் அப்பாவின் சிந்தினை நமக்கு இப்போ எவ்வள்ளவு பயனுள்ளதான கருத்து பாத்தீங்களா?

RAMYA said...

நிறைய கஷ்டப் படும்போதும்
சேமிக்க முடியாத சூழ்நிலையிலும்
நான் சேமிக்க தவறியதில்லை.

சில சமயம் சேமிக்க முடியாத
நிலையும் நான் கடந்து வந்தேன்.

நீங்கள் சொல்லவது எல்லாருக்கும்
நல்ல அறிவுரை,
இதை பின் பற்றினால்
கஷ்டங்கள் வரும்போது
கவலைப் பட தேவை இல்லை

RAMYA said...

//
பழமைபேசி said...
நல்ல தகவலாப் போட்டு, ரெண்டு மூனாகாம செய்தாச்சு.... நன்றிங்க ஐயா!

இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்குறதா இரம்யா அவிங்களும் அவிங்க குழுமத்தாரும் பேசிகிட்டு இருந்தாங்க....இஃகிஃகி!

//

ஆமா நான் பாக்கிறேன்
பழமை பேசி அண்ணா நான்
பேசியதை எங்கே அண்ணா
ஒட்டு கேட்டார்,

இது நியாயமா ??

நேரா வந்து கேட்டிருக்கலாம்
இல்லையா என்ன நான் சொல்லறது
சரிதானே ???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

பழமை பேசி அண்ணா
இதெல்லாம் சரி இல்லை
பாசமலர்கள் இடையே
பிரிவினை வாதத்தை
தூண்டுவதால் உங்களை
என்ன செய்யலாம் என்று
யோசிச்சு ஒரு நல்ல
முடிவிற்கு வரலாம்னு
இருக்கேன்.

RAMYA said...

பழமை பேசி அண்ணனா
என்னவோ போங்க
என்னா பிரிவினை
பண்ணினாலும் கடைசியிலே
இஃகிஃகி!

இப்படி ஒரு சிரிப்பை
சிரிச்சு ஓடிப்போயிடரீங்களா
இருங்க ஒரு நாள் எங்க கிட்டே
நல்லா மாட்டுவீங்க!!!

இராகவன் நைஜிரியா said...

// Blogger நசரேயன் said...

நல்ல தகவல் //

வாங்க நசரேயன்.. நன்றி தங்கள் வருகைக்கு

இராகவன் நைஜிரியா said...

// Blogger தேனியார் said...

சிறு பதிவாக இருந்தாலும் அறுமையான பதிவு.இன்றைய இளைஞர்கள்,(அதுவும் உங்கள் நைஜீரியா பலமுறை வந்ததுண்டு)வரவுக்கேத்த செலவு செய்து பழகி இருக்கிறார்கள்.அதாவது 1000 சம்பாதிக்கும் போதும் 100 மிச்சம்,1000 சம்பாதிச்சலும் அதே 100 தான் மிச்சம். இன்னும் ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கலாம்.நேரமில்லையோ? //

உண்மையைச் சொல்லனும்மின்னா...

நமக்கு இவ்வளவுதாங்க எழுத வருது...

இன்னும் அழுத்தம் திருத்தமாக சொல்ல வரவில்லை...

மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டேன்... அம்புடுதேன்..

நீங்க அருமையாச் சொல்லியிருக்கீங்க... 1000 சம்பாதிக்கும் போதும் 100 மிச்சம், 1000 சம்பாதிச்சாலும் 100 தான் மிச்சம்... அழகுத் தமிழிலி விளையாடிடீங்க..

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஹேமா.. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.

// Blogger பழமைபேசி said...

இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்குறதா இரம்யா அவிங்களும் அவிங்க குழுமத்தாரும் பேசிகிட்டு இருந்தாங்க....இஃகிஃகி!//

நண்பரே என்னாது இது... you too பழமைபேசி ?

இராகவன் நைஜிரியா said...

நன்றி மகேஷ்...

நன்றி புதியவன்...

நன்றி தம்பி ஜமால்...

பள்ளியில் நான் படிக்கும் காலத்தில், சேமிப்பு திறனை வளர்க்க வேண்டும் என்று பள்ளிகளில், சஞ்சயிகா என்று ஒன்று இருந்தது... பின்னர் அதுதான் IOB யால் எடுத்துக்கொள்ளப்பட்டது என நினைக்கின்றேன்

இராகவன் நைஜிரியா said...

// Blogger BOOPATHY said...

எங்கு பார்த்தாலும் போர், தீ, மரணம் என்று தலைசுத்தும் நேரத்தில் கொஞ்சம் மனதுக்கு இதமான பதிவு. சேமிப்பு எனக்கும் எனது அப்பாவுக்கும் தெரியாத, முடியாத விடயம். எனது அப்பாவின் பழக்கவழக்கங்கள் என்னிடம் தொத்திக்கொண்டதுதான் அதிகம். ஆனால் எப்போதும் எங்களிடம் கையில் காசு இருக்கும். இருப்பதை வைத்து மகிழும் ரகம் நாங்கள். ஆனாலும் சேமிப்பும் முக்கியம் ராகவன். நாளை ஒருவேளை காசில்லாவிட்டால் நைஜீரியா பேங்க் அனுப்புமா? //

சேமித்து பழகுங்கள் பூபதி...

நைஜிரியா பேங்க அனுப்புமா என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்...

உங்களுக்கு 5 மில்லியன் / 7 மில்லியன் டாலர் பணம் இருக்கு, உங்க பேர், ஊர், அக்கௌண்ட் நம்பர், எல்லாம் கேட்டு மெயில் வந்ததில்ல...

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி... உங்ககிட்டு இருந்து பிடிங்கிப்பாங்க...

இராகவன் நைஜிரியா said...

// Blogger muru said...

///BOOPATHY said...
நாளை ஒருவேளை காசில்லாவிட்டால் நைஜீரியா பேங்க் அனுப்புமா?///

நைஜீரியாவிலிருந்து பணம் வராது, வேண்டுமானால் பணம் சம்பாரிச்சு கொடுக்க நல்ல திறமையான நாலு கடல் கொள்ளையர்கள் அனுப்பலாம். வேண்டுமா பூபதி அண்ணே.//

இது கூட நல்லா இருக்கே...
அனுப்பலாமே...

என்னங்க பூபதி.. இதுக்கு என்ன சொல்றீங்க

இராகவன் நைஜிரியா said...

// Blogger அமுதா said...

நல்ல பதிவு. சேமிப்பின் அவசியத்தை நாம் கற்றுக் கொண்டது போல் அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். பலர் இதில் தவறி விடுகிறார்கள். //

ஆமாங்க.. அதுக்காகத்தான் இந்த பதிவ நான் போட்டேங்க...

இராகவன் நைஜிரியா said...

// Blogger coolzkarthi said...

அண்ணே எங்களை போன்றோருக்கு உண்மையில் பயனுள்ள கருத்து....எனக்கு என்ன பண்ணாலும் சேமிக்கணும் அப்படின்னு மட்டும் தோனவே தோணாது...இனி ட்ரை பண்ணி பாக்குறேன்... //

டிரை பண்ணுங்க...

நல்ல பழக்கங்கள் முதலில் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்... ஆனால் அது பழக்காமாகி விட்டால், அதுதான் சுகம்

இராகவன் நைஜிரியா said...

// Blogger RAMYA said...

பழமை பேசி அண்ணா
இதெல்லாம் சரி இல்லை
பாசமலர்கள் இடையே
பிரிவினை வாதத்தை
தூண்டுவதால் உங்களை
என்ன செய்யலாம் என்று
யோசிச்சு ஒரு நல்ல
முடிவிற்கு வரலாம்னு
இருக்கேன். //

அதானே...

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல... ஆமாம் சொல்லிபுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// Blogger RAMYA said...

பழமை பேசி அண்ணனா
என்னவோ போங்க
என்னா பிரிவினை
பண்ணினாலும் கடைசியிலே
இஃகிஃகி!

இப்படி ஒரு சிரிப்பை
சிரிச்சு ஓடிப்போயிடரீங்களா
இருங்க ஒரு நாள் எங்க கிட்டே
நல்லா மாட்டுவீங்க!!! //

ஹை... நம்ம பழமைபேசி மாட்டிக்கிட்டாரு...

அப்துல்மாலிக் said...

வாழ்வில் சேமிப்பின் அவசியத்தை நல்லா சொன்னீங்கண்ணா

அப்துல்மாலிக் said...

//காரணம் தெரியவில்லை. இன்று காலையில் இருந்து மறைந்த தந்தையின் நினைவுகள். அவர் மறைந்து வருடங்கள் 3 முடிந்தாலும், பல சமயங்களில் அவரின் இழப்பு மறக்க இயலவில்லை. அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விசயம் “சேமிப்பு”. //

தந்தை சொல் ஒரு மந்திரம்தாங்க‌
ஒரு சிறந்த தந்தை தன் தந்தையாக அமைய ஒவ்வொருவரும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்..

அதுக்கு என் பதிவில் (என் மதிப்பிற்குரிய வழிகாட்டி) யும் ஒரு சான்று

அப்துல்மாலிக் said...

நன் பயின்ற பள்ளியில் கனரா வங்கியில் கட்டாயம் சேவிங்ஸ் அக்கொண்ட் திறக்கனும் என்று சொல்லி ஒவ்வொருவரும் திறந்து...

பல வருஷங்களுக்கு பிறகு, நான் இன்னமும் அதை maintain பண்ணிக்கொண்டிருக்கிறேன், நன்றி கனராவங்கி

பழமைபேசி said...

//RAMYA said...
//
பழமைபேசி said...
நல்ல தகவலாப் போட்டு, ரெண்டு மூனாகாம செய்தாச்சு.... நன்றிங்க ஐயா!

இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்குறதா இரம்யா அவிங்களும் அவிங்க குழுமத்தாரும் பேசிகிட்டு இருந்தாங்க....இஃகிஃகி!

//

ஆமா நான் பாக்கிறேன்
பழமை பேசி அண்ணா நான்
பேசியதை எங்கே அண்ணா
ஒட்டு கேட்டார்,

இது நியாயமா ??
//

கொஞ்சம் கூட நியாயம் இல்ல... சொல்லத் தயக்கமா இருக்கு, நீங்களாவது சொல்லக் கூடாதான்னு சொன்னீங்க... அதான் விசயத்தை சபையில சொல்ல வேண்டியதாப் போச்சு....

பழமைபேசி said...

//RAMYA said...
பழமை பேசி அண்ணா நான்
பேசியதை எங்கே அண்ணா
ஒட்டு கேட்டார்,
//

சபையோரே, நல்லாக் படிச்சுகுங்க....அவிங்க பேசினதைத் திருப்பிச் சொன்னதா அவிங்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்து இருக்காங்க...

பழமைபேசி said...

//RAMYA said...
இப்படி ஒரு சிரிப்பை
சிரிச்சு ஓடிப்போயிடரீங்களா
இருங்க ஒரு நாள் எங்க கிட்டே
நல்லா மாட்டுவீங்க!!!
//

சரியாச் சொன்னீங்க சகோதரி, அதான் இப்ப இராகவன் ஐயாவை விட்டுடாதீங்க...இன்னும் நிறைய பதிவுகள நாம எதிர்பார்க்குறோம் இல்ல?

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
ஹை... நம்ம பழமைபேசி மாட்டிக்கிட்டாரு...
//

என்னா ஒரு மகிழ்ச்சி?

S.R.Rajasekaran said...

அண்ணாச்சி அப்படியே எனக்கு ஒரு 10 ஆயிரம் டாலர் அனுப்பிவயுங்க அத வச்சி இன்னும் மும்மரமா சேமிக்க ஆரம்பிக்கிறேன்

BOOPATHY said...

//உங்களுக்கு 5 மில்லியன் / 7 மில்லியன் டாலர் பணம் இருக்கு, உங்க பேர், ஊர், அக்கௌண்ட் நம்பர், எல்லாம் கேட்டு மெயில் வந்ததில்ல...//
ஓ அது நீங்களா ராகவன். ஏன் இப்படி ஆசை காட்டி மோசம் செய்யிறீங்கள். வரவுக்கு மேலே செலவு ராகவன் எப்படி சேமிப்பது. lottery வாரத்துக்கு ஒரு தடவை எடுக்கிறேன் கையில் காசு வரும் என்ற நம்பிக்கையில்.

BOOPATHY said...

Muru
//நைஜீரியாவிலிருந்து பணம் வராது, வேண்டுமானால் பணம் சம்பாரிச்சு கொடுக்க நல்ல திறமையான நாலு கடல் கொள்ளையர்கள் அனுப்பலாம். வேண்டுமா பூபதி அண்ணே//
சரியான அப்பாவி தான் Muru நீங்கள் பூபதி எண்டால் அண்ணா மட்டும்தனா?

நாலு கடல் கொள்ளையர் வேண்டாம் ஒரு கொள்ளையன் போதும் பணம் சம்பாரிச்சு கொடுப்பதட்கு அல்ல இருக்கிற பணத்தை அளிப்பதறகு

இராகவன் நைஜிரியா said...

நன்றி அபுஅஃப்ஸர் ..

நன்றி பழமைபேசி... இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தை.

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை..
//

:-o)

pudugaithendral said...

அழகா சொல்லியிருக்கீங்க.

என் அம்மம்மா கூட இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார். 10 பைசா தானே என்று செலவு செய்யாமல் தினம் 10 பைசா உண்டியலில் போட்டால் 10 நாளில் 1 ரூபாய். கீரைக்கட்டுக்கு உதவும் என்பார்.

அனைவருக்கும் அவசியமாக இந்தப் பதிவு

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

அசோசியேட் said...

நான் பள்ளிக்கூடம் படித்த கால கட்டத்தில் சஞ்சைகா என்று ஒரு சேமிப்பு திட்டம் இருந்தது. மிக அருமையான பதிவு !

kanavu said...

திருப்பூரில் இருக்கும் நைஜீரியர்கள் இப்படி சேமிக்காதவர்கள் மாதிரி செல்வௌ செய்கிறார்கள்

சுப்ரபாரதிமணியன்