நண்பர் அறிவிழி எவ்வளவு கஷ்டப்பட்டு பல நல்ல பதிவுகளை எழுதுகின்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரின் பதிவுகள் எல்லாமே அரசியல், சமூகம் பற்றிய முக்கியமான நல்ல பல கருத்துக்களுடன் இருப்பதும் நாம் அறிந்ததுதான்.
அவருடைய படைப்புகளை சிலர் வெட்கம், மானம், சூடு சுரணையின்றி திருடுகின்றனர்.ஒருவரது பதிவுகளை அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது, அவருக்குத் தெரியாமல் தங்களது பதிவுகளில் வெளியிட்டுக் கொள்வது மிகப் பெரிய திருட்டுத்தனம் - அயோக்கியத்தனமதானே.
தம்பி ராஜ்குமாரின்(அறிவிழி) பதிவுகளைத் திருடி வெளியிடும் இவர்கள் யாரும் அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இவருடைய சில பதிவுகளும் அதை திருடியவர்களின் பதிவுகளும் பின் வரும் சுட்டிகளில் கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்களேன்..
அவருடைய படைப்புகளை சிலர் வெட்கம், மானம், சூடு சுரணையின்றி திருடுகின்றனர்.ஒருவரது பதிவுகளை அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது, அவருக்குத் தெரியாமல் தங்களது பதிவுகளில் வெளியிட்டுக் கொள்வது மிகப் பெரிய திருட்டுத்தனம் - அயோக்கியத்தனமதானே.
தம்பி ராஜ்குமாரின்(அறிவிழி) பதிவுகளைத் திருடி வெளியிடும் இவர்கள் யாரும் அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இவருடைய சில பதிவுகளும் அதை திருடியவர்களின் பதிவுகளும் பின் வரும் சுட்டிகளில் கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்களேன்..
ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா?
நண்பர் அறிவிழி அவர்கள் எழுதியதை படிக்க இங்கு சுட்டவும்
திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.
ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா? (இவர் கொஞ்சம் நல்லவர்.. நன்றி அறிவிழி என்று போட்டுள்ளார்..)
நண்பர் அறிவிழி அவர்கள் எழுதியதை படிக்க இங்கு சுட்டவும்
திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.
திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.
ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா? (இவர் கொஞ்சம் நல்லவர்.. நன்றி அறிவிழி என்று போட்டுள்ளார்..)
நண்பர் அறிவிழி அவர்கள் எழுதியதை படிக்க இங்கு சுட்டவும் திருடி எழுதிய பதிவை படிக்க இங்கு சுட்டவும்.
சத்யம் ராசு நல்லவரா? கெட்டவரா? 420யா? இல்லை வள்ளலா?
அறிவிழி எழுதிய சுட்டிக்கு இங்கு சொடுக்கவும்.
மற்றவர் எழுதிய சுட்டிக்கு இங்கு சொடுக்கவும். (இவர் கொஞ்சம் நல்லவர்.. நன்றிஅறிவிழி என்று போட்டுள்ளார்..)
மற்றவர் எழுதிய சுட்டிக்கு இங்கு சொடுக்கவும். (இவர் கொஞ்சம் நல்லவர்.. நன்றிஅறிவிழி என்று போட்டுள்ளார்..)
அமெரிக்க பொருளாதார நெருக்கடி-இந்திய மென்பொருள் வல்லுனர்கள் தெருவில் நிற்கப் போகின்றனர்...
அறிவிழி அவர்களின் பதிவு பார்க்க..
அதனின் நகல் அறிவிழி அறியாமல் போடப்பட்ட பதிவு...
Sun Tv - Padikathavan - சன்டிவியின் "வெற்றிப்படம் படிக்காதவன்"! சன்டிவியின் தந்திரங்கள்
அறிவிழி அவர்களின் பதிவு பார்க்க..அதனின் நகல் அறிவிழி அறியாமல் போடப்பட்ட பதிவு...
ஓவ்வொரு பதிவும் போட தம்பி ராஜ்குமார் (அறிவிழி) உழைக்கும் உழைப்பு எனக்குதான் நன்கு தெரியும்.
இது போல நோகாமல் நொங்கு திங்கறவங்கள என்னச் சொல்லுவது..
நண்பர் அறிவிழியின் மிக சமீபித்திய கட்டுரையான
கம்ப்யூட்டர்மலர் இதழால் திருடி வெளியிடப்பட்ட எனது பதிவு!
வெளியிடப்பட்ட வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு..
// நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் நேரத்தை செலவிட்டு, சிரத்தை எடுத்து நாம் எழுதும் பதிவுகள் - இது போல நமக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நமது வலைப்பூவின் பெயரைக் கூட குறிப்பிடாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுவது வேதனையாகத் தானே இருக்கும், அப்படி செய்வது தவறுதானே? புரிந்தவர்கள் விளக்குங்கள்..................//
ஒரு தனிமனிதனின், சொத்துக்களை, பணத்தை திருடுவது மட்டும் திருட்டல்ல.. அவரின் உழைப்பை சுரண்டுவதும் ஒரு வகையானத் திருட்டுதான். திருட்டு விசிடி / டிவிடி விற்பது எவ்வளவு தப்போ அந்த அளவுக்கு தப்பு இந்த கருத்து திருட்டும்.
உங்கள் பதிவில் நீங்கள் நண்பர் அறிவிழி அவர்களின் கட்டுரைகளை இடவேண்டும், உங்கள் பதிவுக்கு ஹிட்ஸும் வேண்டும் என்று நினைத்தால், நண்பர் அறிவிழி அவர்களுக்கு ஒரு இ-மெயில் PIDHATRAL@GMAIL.COM என்ற முகவரிக்கு அனுப்பினீர்கள் என்றால் அவரும் மனமுவந்து அளிக்கப் போகின்றார்.
பிறர் உழைப்பை சுரண்டுபவர்களே, இத்துடன் உங்கள் திருட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள்.
ஒரு மனிதன் கக்கியதை எடுத்து உண்ண வேண்டாம்.
// நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் நேரத்தை செலவிட்டு, சிரத்தை எடுத்து நாம் எழுதும் பதிவுகள் - இது போல நமக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நமது வலைப்பூவின் பெயரைக் கூட குறிப்பிடாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுவது வேதனையாகத் தானே இருக்கும், அப்படி செய்வது தவறுதானே? புரிந்தவர்கள் விளக்குங்கள்..................//
ஒரு தனிமனிதனின், சொத்துக்களை, பணத்தை திருடுவது மட்டும் திருட்டல்ல.. அவரின் உழைப்பை சுரண்டுவதும் ஒரு வகையானத் திருட்டுதான். திருட்டு விசிடி / டிவிடி விற்பது எவ்வளவு தப்போ அந்த அளவுக்கு தப்பு இந்த கருத்து திருட்டும்.
உங்கள் பதிவில் நீங்கள் நண்பர் அறிவிழி அவர்களின் கட்டுரைகளை இடவேண்டும், உங்கள் பதிவுக்கு ஹிட்ஸும் வேண்டும் என்று நினைத்தால், நண்பர் அறிவிழி அவர்களுக்கு ஒரு இ-மெயில் PIDHATRAL@GMAIL.COM என்ற முகவரிக்கு அனுப்பினீர்கள் என்றால் அவரும் மனமுவந்து அளிக்கப் போகின்றார்.
பிறர் உழைப்பை சுரண்டுபவர்களே, இத்துடன் உங்கள் திருட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள்.
ஒரு மனிதன் கக்கியதை எடுத்து உண்ண வேண்டாம்.
55 comments:
இணையத்தில் நமது சிந்தனைகளை யாராவது திருடியிருக்கிறார்களா என்பதை
கண்டு பிடிப்பதற்கு கீழ்காணும் வலைத்தளம் உதவுகிறது...
http://www.copyscape.com/
இந்த வளைத்தளம் சென்று நம் பதிவின் முகவரியை கொடுத்தால்
நமது எழுத்துக்களை திருடியவர்களை சுலபமாகக் கண்டு பிடித்துவிடலாம்,
சில வரிகள் மாற்றி அமைக்கப் பட்டிருந்தாலும் கண்டு பிடித்துவிடலாம்...
அந்தக் கடைசி வரி.... சாட்டையடி !!
ஆனா திருடித்தான் பொழைக்கறதுன்னு முடிவு பண்ணி செய்யறவனுக்கு இதெல்லாம் உறைக்கவே உறைக்காது :(
மிக சிறந்த பதிவு நண்பரே. அதே போன்று நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில.....
இதுவரை திருட்டு VCD / இணையத்தில் யில் எந்த சினிமாவும் பார்த்ததில்லையா?
தற்போது கணினியில் உபயோகித்து வரும் அனைத்து மென்பொருள்களும் காசு கொடுத்து வாங்கியவையா?
ஆம் என்றால் கண்ணாடி முன் நின்று கேட்டு கொள்வோம் ... "இதெல்லாம் ஒரு பொழப்பா?"
இவையும் அடுத்தவன் உழைப்பை சுரண்டுவதாகும்.
// Anonymous Krishna said...
மிக சிறந்த பதிவு நண்பரே. அதே போன்று நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில.....
இதுவரை திருட்டு VCD / இணையத்தில் யில் எந்த சினிமாவும் பார்த்ததில்லையா?
தற்போது கணினியில் உபயோகித்து வரும் அனைத்து மென்பொருள்களும் காசு கொடுத்து வாங்கியவையா?
ஆம் என்றால் கண்ணாடி முன் நின்று கேட்டு கொள்வோம் ... "இதெல்லாம் ஒரு பொழப்பா?"
இவையும் அடுத்தவன் உழைப்பை சுரண்டுவதாகும் //
நன்றி கிருஷ்ணா அவர்களே...
இது வரை நான் திருட்டு விசிடியில் / இணையத்தில் படம் பார்த்தது இல்லை. எனக்கு திருட்டு விசிடியில் படம் பார்ப்பது என்றுமே உடன் பாடில்லை அதனால் என்னால் நிச்சயமாக, என் மனசாட்சி அறிய இதுவரை திருட்டு படம் பார்த்ததில்லை.
தற்போதும் நான் கணினியில் உப்யோகித்து வரும் அனைத்து சாப்ட்வேர்களும் (எனக்கு அதிக பட்ச தேவை.. ஆண்டி வைரஸ்.. காசு கொடுத்து வாங்கியது, எம் எஸ் ஆபீஸ்.. அது கணினி உடன் வந்தது, அக்கௌண்ட் சாப்ட்வேர்.. காசு கொடுத்து வாங்கியது) அதனால் அதுவும் என்னைப் பொருத்தவரை சரியாகத்தான் இருக்கின்றேன்.
இணையத்தில், இனாமாக கொடுக்கப் படும் சாப்ட்வேர் (உதா.. NHM Writer, Winamp, google chrome, Firefox) போன்றவற்றை உபயோகிக்கின்றேன்... இதில் தவறு / தப்பு ஒன்றுமில்லை என நினைக்கின்றேன்.
அண்ணா மிகவும் அருமையான பதிவு திருட்டு மிகவும் அநாகரிகமான செயல்.
எவ்வளவு கஷ்பட்டு ஒவ்வொறு பதிவும் உருவாக்கப் படுகின்றன.
அதை நோகாமல் திருடறாங்க.
நமது சுட்டிகளுக்கு பாதுகாப்புக்கு மிக அவசியம். அதையும் செய்து கொடுத்தால் இந்த பிளாக்கர் உலகம் சார்பில் நான் நன்றி சொல்லுவேன்.
நண்பர் புதியவன் கூறி இருக்கும் கருத்துக் கூட ரொம்ப நல்லா இருக்கு.
இத கூட உபயோகிக்கலாம்.
அனைவரின் சார்பிலும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
நல்ல சமுதாயச் சீர் கேடுகளுக்கு மற்றும் ஒரு சாட்டையடி கொடுக்கும் அருமையான பதிவு.
திருடர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் அண்ணா!!
இனிமேலாவது திருந்தட்டும், இல்லேன்னா திருந்த வைப்போம்
எல்லா வலைத்தளத்தையும் சுற்றிவருவதால் உங்களுக்குத் தெரிகிறது. அத்தகையவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள்தான். புதியவன் அவர்களின் யோசனையை ஏற்போம்.
naanum ippo niraia thirutu pativukala paarkiren. ithu remba thappunga nalaa solli irukanga
//இதுவரை திருட்டு VCD / இணையத்தில் யில் எந்த சினிமாவும் பார்த்ததில்லையா?
தற்போது கணினியில் உபயோகித்து வரும் அனைத்து மென்பொருள்களும் காசு கொடுத்து வாங்கியவையா?
//
ஆனால் அப்படிப் பார்க்கிற / உபயோகிக்கிற யாரும் அது தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாதே. இந்த வாதத்தை வைப்பதால் நான் அதை சரி என்று கூறுவதாக எண்ண வேண்டாம்.
பதிவுத் திருடுகள் அப்படி இல்லையே. எனவே இவை இரண்டும் ஒரே வகை என்று சொல்ல முடியாது.
நன்றி புதியவன்.
தங்கள் மேலாதிக்க தகவல்களுக்கு
நன்றி மகேஷ்..
// பதிவுத் திருடுகள் அப்படி இல்லையே. எனவே இவை இரண்டும் ஒரே வகை என்று சொல்ல முடியாது.//
நீங்கள் சொல்வது சரிதான். இரண்டையும் ஒரே வகை என்று சொல்ல இயலாதுதான்
நன்றி ரம்யா... தங்கள் மேலான ஆதரவிற்கு
//Blogger அன்புமணி said...
எல்லா வலைத்தளத்தையும் சுற்றிவருவதால் உங்களுக்குத் தெரிகிறது. அத்தகையவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள்தான். புதியவன் அவர்களின் யோசனையை ஏற்போம்.//
நன்றி நண்பர் அன்புமணி..
என்ன கொடும சார்... படிக்காதவர்களை எல்லாம் ஏளனம் செய்யும் இக்காலத்தில் இங்கு படித்தவர்கள் (சத்யம் ராஜூ போன்று) தான் இது போன்ற பெருந்தவறுகள் செய்கிறார்கள். என்ன தான் செய்வது இவர்களை.
நீங்கள் குறிப்பிட்ட சிலர், படித்தது ரசித்தது என்று தங்கள் பிளாகிற்கு விளக்கம் குடுத்துள்ளதை கவனித்தீர்களா?
இருந்தாலும் சோர்ஸை தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.
இந்தப் பதிவிலிருந்து உமக்கு,பதிவுல நண்பர்களின் "ஆண்ட்டி வைரஸ்" பட்டம் கொடுக்க உள்ளோம்.
really good one
This is spreading like a virus, Raghavan. When people started copying my English blog without even having the courtesy of informing me, I was on the boil. I started using the Copyscape software, but the downside is that only 5 searches are allowed per month. I guess ultimately people will know the difference between genuine and fake. Timely article!
ஐயா! எனது தளத்தில் நான் படித்த சுவாரசியமான தகவல்கள் இடம்பெறுகிறது. நான் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துவிட்டே பதிவை போடுகிறேன்
ராகவன் அண்ணா,
உங்கள் பதிவில் ஒரு ரோசா பூ படம் வைத்து உள்ளீர்களே... அது எங்கிருந்து சுட்டீர்கள். அந்த படத்தை எடுத்தவருக்கு உரிய சுட்டி குடுத்து உள்ளீர்களா? இல்லை அது நீங்கள் எடுத்த படமா? சும்மா தமாசு....
என்னுடய பதிவுகளையும் அப்படித்தான் எடுத்து போட்டுவிடுகிறார்கள்.
அதுக்குன்னு சினிமா விமர்சனத்தை கூடவா போடுவார்கள். சமீபத்திய வெளியீடு.. என்னுடய வெண்ணிலா கபடி குழு.. விமர்சனம்.
http://cablesankar.blogspot.com/2009/01/blog-post_29.html
இது நம்ம ஆளோடது..
http://dhandionnet.blogspot.com/2009/01/blog-post_30.html
Krishna said...
மிக சிறந்த பதிவு நண்பரே. அதே போன்று நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில.....
இதுவரை திருட்டு VCD / இணையத்தில் யில் எந்த சினிமாவும் பார்த்ததில்லையா?
தற்போது கணினியில் உபயோகித்து வரும் அனைத்து மென்பொருள்களும் காசு கொடுத்து வாங்கியவையா?
ஆம் என்றால் கண்ணாடி முன் நின்று கேட்டு கொள்வோம் ... "இதெல்லாம் ஒரு பொழப்பா?"
இவையும் அடுத்தவன் உழைப்பை சுரண்டுவதாகும்.
Well said Krishna,
இங்கு யாருமே ஒழுங்கு கிடையாது!
ஆனா பதிவின் உரிமையாளருக்கு நன்றிகூட தெரிவிக்காமல் என்னமோ தாமே எழுதியது மாதிரி பதிவு எழுதுவது தவறு!
மானம்ங்ற மூனு சொல்லு வார்த்தைல சமுதாயத்தை கட்டுக்கோப்பா வெச்சு இருந்தாங்க நம்ம பெரியவங்க. குடுக்குறதை குடுக்கலனா மானம் போயிரும். குழந்தைய நல்லா வளர்க்கலைனா மானம் போயிரும். பொய் பேசினா மானம் போயிரும். ஒழுக்கம் தவறினா மானம் போயிரும். பொண்டாட்டி புருசனுக்கு மரியாதை தரலைனா, மானம் போயிரும் (அப்படியே, சந்துல சிந்து பாடிறலாம்!). வாக்கு தவறினா மானம் போயிரும். விருந்தாளிய கவனிக்காம விட்டா மானம் போயிரும். சரியான இடத்துல உதவி செய்யலைன்னா மானம் போயிரும். இப்படி மானம்ங்ற அந்த மூனு எழுத்து வார்த்தைல எல்லாமே கட்டுப்பட்டுச்சு. என்னைக்கு அதுல இருந்து வெளிய வந்தமோ, அப்ப போக ஆரம்பிச்சது எல்லாம். இனி திரும்ப வரவா போகுது?!
பெரியவிங்க இதுக்குத்தான் மானம்ங்ற மூனு எழுத்து சொல்லை வச்சி, அத்தனையும் கட்டுக்குள்ள வெச்சி இருந்தாங்க.... இப்ப அந்த சொல்லுக்கு பெரிய அளவில மதிப்புக் கிடையாது. காரணம், இனம்ங்றது அழிஞ்சுட்டு வருது. ஆகக் கூடி சொல்ல வர்றது என்னன்னா, பழமை போற்றுவீர்! வாழ்வில் இன்பம் காண்பீர்!!
ஐயா, இந்தப் பதிவையும் யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்க..... இஃகிஃகி!
அது நாந்தான்னு நீங்க நினைச்சா, நான் என்ன சொல்லறது?
நல்ல பதிவு அண்ணா...
உண்மையாகவே கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்...
//இதுவரை திருட்டு VCD / இணையத்தில் யில் எந்த சினிமாவும் பார்த்ததில்லையா?//
பதிவுக்கு நன்றின்னு சொல்லி பதிஞ்சா சரின்னு பெரும்பாலானோர் நினைக்குற மாதிரி, நானும் மனதளவில சேவையத் திருட்டுத்தனமா வழங்குறவிகளுக்கு நன்றி சொல்லிட்டுத்தான், நிறைய தமிழ்ப் படங்கள், துடுப்பாட்ட நேரடி ஒளிபரப்பு எல்லாம் பாக்குறேன். ஆக, இதையும் ஏத்துக்குங்க....இஃகிஃகி!
மன்னிக்கவும், சிரத்தையான பதிவுல கும்மி அடிக்கிறதுக்கு. என்னோட நோக்கம் அதுவல்ல. இதெல்லாம், அதீத அறிவியல் வளர்ச்சியின் தாக்கமுங்க ஐயா! இதே பதிவை, இது திருடப்பட்ட பதிவுன்னு நான் பதிஞ்சா அங்கதான் கூட்டம் உங்க பதிவை விட அதிகமா வரும். வருத்தமாத்தான் இருக்கு!
நல்ல பதிவண்ணேன்.
புதியவன் தகவலையும் ஏற்போம்.
நல்ல விடயங்களை பிற இடங்களுக்கு கொண்டு போவது நல்லதுதான்.
ஆனால் எழுதியவரின் பெயர் போடுதல் அவசியம்
பதிவர்கள் காப்பி அடித்தால் கூட தெரியாமல் செய்கிறார்கள் என்று விட்டு விடலாம். ஆனால், "தமிழ் கம்ப்யூட்டர்" மாத இதழ், நான் அந்த மாதம் வெளியிடும் அத்தனை பதிவையும், தொடர்ந்து மூன்று பக்கத்திற்கு வெளியிட்டுள்ளனர். எனக்கு ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பவில்லை. மேலும், என் பெயர் மாற்றப் பட்டுள்ளது. தளமுகவரியும் வெளியிடவில்லை. ஒரு நிறுவனம் செய்யும் போது மிகவும் வேதனை தருகிறது. இதுவரை 4 புத்தங்களில் "22 பதிவுகள்" திருடி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல்,நேற்று எனது வலைத்தள வாசகர் கூறிய பிறகு தான், பழைய புத்தங்களை தேடிப் பிடித்து பார்த்தேன்.
என்ன செய்யலாம்னு சொல்லுங்க பாஸு!
என் பதிவை ௬ட திருடுறாங்க, இதிலிருந்தே அவங்க எவ்வளவு மட்டமானவங்க ன்னு தெரியுது
//ஒரு மனிதன் கக்கியதை எடுத்து உண்ண வேண்டாம்.//
சாட்டையடி ராகவன்...!!!!!
பெயரில்லாமல் வந்து அறிவிழியின் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் பற்றி கேள்வி கேட்ட நெருங்கிய நண்பருக்கு :-
அறிவிழியின் போட்டோ பதிவுகளில் உள்ள புகைப்படங்கள், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கருத்திற்கு ஒத்துவரக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் கூகிள் இமேஜெசின் மூலமாக வெவ்வேறு இணையங்களில் இருந்து தேடி எடுத்துச் சேகரித்துப் போடப் பட்டவை. யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் எடுத்துச் சேகரித்து பதிவாகப் போட்டவற்றை அப்படியே வெட்டி எடுத்து இங்கே ஒட்டவில்லை.
அறிவிழியின் வீடியோப் பதிவுகளைப் பொறுத்தவரை யூடியுபில்(YOUTUBE) பொது பயன்பாட்டிற்கென அனுமதிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்து அதன்பின்னர் போடப்பட்டவையே, யாரோ ஒருவர் டவுன்லோட் செய்து சேகரித்து வைத்தனவற்றை எடுத்து அப்படியே போடவில்லை. இதில் எதுவும் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
பலமணிநேரம் செலவழித்து எழுதப்பட்ட அறிவிழியின் பதிவுகளை அப்படியே வரிபிசகாமல் வெட்டி ஒட்டிய செயலையும் இதையும் ஒப்பிடுவது முறையா?
நன்றி நண்பரே... தங்களின் மற்ற கருத்துக்களுடன் ஒத்து போகின்றேன். வார்த்தைகளை சற்று சரியாகப் போட்டு இருக்க வேண்டும்.
Thanks Arnold Edwin...
நன்றி தேனியார்...
நன்றி பழமைபேசி...
Thanks Expatguru...
நன்றி ஷங்கர்...
திரு அறிவிழி அவர்களின் லிங்கை அதில் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதுதான் வருத்தம். அதனால்தான் இப்படி எழுத வேண்டியதாகிவிட்டது. நண்பர் அறிவிழி அவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தாலும் அவர் சரி என்று ஒத்துக் கொண்டு இருப்பார்.
// Anonymous Anonymous said...
ராகவன் அண்ணா,
உங்கள் பதிவில் ஒரு ரோசா பூ படம் வைத்து உள்ளீர்களே... அது எங்கிருந்து சுட்டீர்கள். அந்த படத்தை எடுத்தவருக்கு உரிய சுட்டி குடுத்து உள்ளீர்களா? இல்லை அது நீங்கள் எடுத்த படமா? சும்மா தமாசு..//
என் பிறந்த நாளுக்கு என் நண்பர் அனுப்பிய ஒரு படம். அதை அவர் நினைவாக இந்த தளத்தில் வைத்துள்ளேன். நான் எடுத்தப்படமில்லை.
//Cable Sankar said...
என்னுடய வெண்ணிலா கபடி குழு.. விமர்சனம்.
http://cablesankar.blogspot.com/2009/01/blog-post_29.html
இது நம்ம ஆளோடது..
http://dhandionnet.blogspot.com/2009/01/blog-post_30.html //
இது எல்லாவற்றையும் விட ரொம்ப மோசமானதுங்க..
என்ன பண்றது, முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, இந்த பதிவுலேயே இணைத்து இருப்பேன்.
நன்றி வேத்தியன் ...
நன்றி ஜமால்...
நன்றி பாபு... கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங், ஜிங்ன்னு ஆடிச்சாம்... அது மாதிரி இல்ல இருக்கு உங்க நிலமை...
// நசரேயன் said...
என் பதிவை ௬ட திருடுறாங்க, இதிலிருந்தே அவங்க எவ்வளவு மட்டமானவங்க ன்னு தெரியுது //
என் பதிவை கூட அப்படின்னு போட்டு இருக்கீங்க... உங்க பதிவுக்கென்ன குறைச்சல்... Dear don't degrade yourself like this. I love your blogs a lot.
நன்றி அ.மு.செய்யது
ஐயா சாமி நான் திருடவே இல்லை, a-z என்னுடைய சொந்த உழைப்பு. என் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான். சரியான சூடாக இருக்கிறீங்கள் ராகவன்;
நல்ல விடயம் எல்லோரிடமும் சென்றடைவது நல்லதுதான் ஆனால் என்ன, ஒரு வார்த்தை அறிவிழியிடம் கேட்டிருக்கவேண்டும். ராகவன் நீங்கள் தமிழ் ஈழத்தில் பிறந்திருக்கவேண்டும், தட்டி கேட்பவன்தான் தன்மானமுள்ள தமிழன். வாழ்க உங்கள் பணி.
ராகவன் சார், டென்ஷனாகாதீங்க. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மேற்கோள் காட்டி எழுதும் கட்டுரையாளர்களை என்ன சொல்வது ? இணையமென்றால் இலவசமென்றாகி விட்டது. இணையத்தில் எதுவும் நம்மதில்லை. நம்மோடு கொண்டு வந்ததுமில்லை. இணைய முகவரி கூட ஓசி.
போகட்டு விட்டு விடுங்கள். இதெல்லாம் வாழ்வில் சகஜம். நம்முடைய சமூகம், சினிமா நடிகனைப் பார்த்து ஹேர் ஸ்டைலும், டிரஸ் கோடும் மாற்றும் வழக்கமுடையது. இதைக் காப்பி அடிக்கிறார்கள் என்றா சொல்ல இயலும்.
அறிவிழியின் கருத்துக்கள் பிடித்து அதை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிற போது சந்தோஷம் தானே.
நல்ல பதிவு அண்ணா
நல்லா உரைக்கிற மாதிரி சொல்லிப் புட்டீங்க ராகவன் அண்ணா...
நடைமுறைக்கு எவ்வளவு தூரம் இது சாதியமாகுதுன்னு பார்ப்போம்.
ஏன்னா
"திருடனை பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது"
என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.
னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))
//Subbu said...
னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
என்னோட பதிவை யாருமே களவாட மாட்டேங்குறாங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்...
//Sriram said...
"திருடனை பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது"
என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.
//
அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!!
நன்றி பூபதி...
நன்றி தங்கவேல் மாணிக்கம்.
நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் சரிதான். சரியான கோபம்... கொட்டி தீர்த்துவிட்டேன்.
நன்றி பூர்ணிமா சரண்..
நன்றி ஸ்ரீராம்...
// பழமைபேசி said...
//Subbu said...
னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
என்னோட பதிவை யாருமே களவாட மாட்டேங்குறாங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்...//
நண்பரே நான் களவாடிட்டுமா..
தாங்கள் அதற்கு அனுமதி கொடுத்தால், நான் ரெடி...
பின்னாடி என்னைத்திட்டி ஒரு பதிவு நீங்கப் போடக்கூடாது
// பழமைபேசி said...
//Sriram said...
"திருடனை பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது"
என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.
//
அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!! //
ஆமாம் அதானே...
அவருக்கு தெரிஞ்ச அவர் சொல்லிட்டாரு.. அதுக்கு உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா...
இஃகி, இஃகி
சாட்டை அடி அண்ணா.......அருமை....
கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விஷயம்.
டிடெக்டிவ் ராகவன் சார்! சாட்டையடி கொடுத்தது சரியே!
// அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!!//
மணி அண்ணே என் மேல ரொம்ப பாசமா இருக்கீய போல...
சும்மா வாரு வாருன்னு வாருறீங்களே...
மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!
இப்போ என்னைய எடுத்துகோங்க ஒரு நாய் மதிக்காது!
http://kathalukai.blogspot.com/
// மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!
இப்போ என்னைய எடுத்துகோங்க ஒரு நாய் மதிக்காது! //
நான் வேற மாதிரி சொல்ல வந்தேன். நீங்களே சொல்லிடீங்கள்.
மீ த பிப்டி :)
அண்ணே வணக்கம்,
நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என்பதை நான் நேரில் பார்த்தவன், அவரையும் பார்க்க கடல் கடந்து வந்திருந்த என்னிடம் அவர் பேசுவதற்கு நான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவரைப் பார்த்து., இந்தளவு பிசியானவர் எவ்வாறு இவ்வளவு பதிவுகள் தரமானதாக, நல்ல எழுத்து நடையுடன் எழுதமுடிகிறது என்று வியந்தேன்.
பொறுத்திருப்போம்.,
காலம் விடை சொல்லும்.
அண்ணே வணக்கம்,
நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என்பதை நான் நேரில் பார்த்தவன், அவரையும் பார்க்க கடல் கடந்து வந்திருந்த என்னிடம் அவர் பேசுவதற்கு நான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவரைப் பார்த்து., இந்தளவு பிசியானவர் எவ்வாறு இவ்வளவு பதிவுகள் தரமானதாக, நல்ல எழுத்து நடையுடன் எழுதமுடிகிறது என்று வியந்தேன்.
பொறுத்திருப்போம்.,
காலம் விடை சொல்லும்.
ராகவன், ரொம்ப உணர்ச்சிவசப் பட வேண்டாம். திருட்டு தவறானது தான். ஆனால் ஒரு நண்பர் “நன்றி: அறிவிழி” என்று போட்டிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிங்க. அது எந்த வகையில் திருட்டு ஆகும்?. தனக்கு பிடித்த பதிவை பலரும் படித்து பயனுற வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. அறிவிழி தன் பதிவில் “ அனுமதி இன்றி என் பதிவுகளை யாரும் பயன்படுத்தக் கூடாது” என்று அறிவித்திருக்கிறாரா?. அபப்டி அறிவிக்காமல் இருந்தால் அவர் பதிவை பயன்படுத்தி விட்டு அவருக்கு நன்றி சொல்வது நாகரிகமானது மட்டுமில்லை.. அவரை பெருமை படுத்துவதும் கூட. ஆகவே அந்த நன்றி சொல்லி பயன்படுத்திய நண்பரை திருடன் என்று சொல்வது மிகவும் தவறு.
மற்றவர்கள் அறிவிழி பெயரைக் குறிப்பிடாமல் பயன் படுத்தி இருந்தால் நிச்சயம் தவறு தான். அதிலும் கூட சில விஷயங்களை யோசிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் இதை தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பதை அறியவேண்டும். இன்று புதிது புதிதாய் எழுத ஏராளமானவர்கள் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பிறர் பதிவை போடுகிறார்கள். அபப்டி போடும் போது பதிவுக்கு சொந்தக்காரருக்கு நன்றி சொல்லி இணைப்புக் கொடுக்க வேண்டும் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை. ஆகவே அவர்களிடன் விளக்கம் கேட்டுவிட்டு குறை சொல்வதே நியாயம்.
நீங்கள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் மொத்த வலைப்பூக்களையும் கவனித்து பின்னூட்டம் மட்டுமே போட்டு எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு எழுத ஆரம்பித்தீர்கள். எல்லாரும் அதே போல் இருக்க மாட்டார்கள்.
ஆகவே கொஞ்சம் நிதானம் கடபிடிக்கவும்.
இந்த பின்னூட்டம் திருடுபவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல. தெரியாமல் செய்பவர்களுக்காக மட்டுமே.
அந்த மாத/வார இதழில் பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமே. ஏன்னா, அவர்கள் வணிக நோக்கத்தில் அந்த இதழை வெளியிடுகிறார்கள்.
தங்கள் பதிவை யாரும் பயன்படுத்தக் கூடாது என நினைப்பவர்கள் நண்பர் புதியவன் சொல்லி இருக்கும் வலைதளத்தை அனுகவும்.
என்ன ராகவன் சார் SanJai காந்தி கமெண்டுக்கு பதிலையே காணோம்! மனசாட்சி உறுத்துதா.....
இந்த பதிவை போடுறதுக்கு முன்னாடி நீங்க சொன்ன அந்த பதிவு திருடர்களிடம் சொல்லி தவறை சரிசெய்ய சொன்னீர்களா?
நீங்க பாட்டுக்கு அவசரப்பட்டு ஒரு பதிவ போட்டு நல்லா ஹிட் வாங்கீடீங்க!
Post a Comment