Wednesday, January 14, 2009

ஆபாச பின்னூட்டங்கள் இடுபவர்களே!தானாக திருந்துங்கள்!இல்லை கைக்கு காப்பு தயார்!


பெண் பதிவர்களையும் புதிதாகப் பதிவுகள் எழுதத் துவங்கும் ஆரம்ப காலப் பதிவர்களையும் குறிவைத்து ஆபாசமான அநாகரீகமான பின்னூட்டங்களைக் கொண்டு கேவலமான தாக்குதல் தொடுத்து அவர்களின் மன உறுதியைக் குலைத்து பதிவுலகை விட்டுத் துரத்தும் நோக்கத்க்துடன் சில மன நோயாளிகள் இங்கே உலவிக் கொண்டு உள்ளனர்.

வலைப்பூ என்பது ஒருவர் தனது வாழ்வின் சுவையான அனுபவங்களையும், மகிழ்வுகளையும், சோகங்களையும், சமூக நிகழ்வுகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதற்காக பயன்படக் கூடிய ஒன்று.

ஒருவர் தனது வலைப்பூவில் எழுதும் பதிவுகள் மூலமாகப் பலருடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் அதைப் படிப்பவர்களுக்கு,

விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,

மன மகிழ்ச்சியைத் தரலாம்,

நல்ல நகைச் சுவையாக அமைந்து பொழுதுபோக்காக அமையலாம்,

சில புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவலாம்,

படிப்பவரின் பழைய காலங்களை நினைவு படுத்துவதாக இருக்கலாம் என்பன போன்ற பல வகையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில நேரங்களில் பதிவுகளைப் படிக்கும் ஒருவருக்கு பதிவானது பிடிக்காமல் போய் விடவோ அல்லது பதிவின் கருத்துக்களில் உடன்பாடு இல்லாமலோ இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் எல்லோருடைய கருத்துகளும் ஒத்துப் போகாது இல்லையா?

அதேபோல சில நேரங்களில் பதிவு எழுதப்பட்ட எழுத்து நடையிலோ அல்லது கருத்துகள் சொல்லப் பட்ட முறைகளிலோ படிப்பவர் பெருத்த ஏமாற்றம் அடையவும், பதிவினைப் படித்ததால் தனது நேரம் வீணாகிப் போனதாகக் கூட எண்ணி விடும் வாய்ப்புகள் உள்ளன.

பதிவுகளைப் படிப்பவர் அந்தப் பதிவுகளைப் பற்றியும், பதிவின் கருத்துகள் பற்றியும், பதிவரின் எழுதும் முறை பற்றியும் தனக்குத் தோன்றும் நிறை குறைகளைப் பதிவருக்குத் தெரிவிக்கவும் பதிவின் கருத்துகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதைப் பதிவருக்கும் பதிவினைப் படிக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்கவே பின்னூட்டங்கள் பயன்படுகின்றன.

பதிவின் கருத்துகளில் நமக்கு உடன்பாடு இல்லா விட்டாலோ பதிவு நமக்குப் பிடிக்கா விட்டாலோ அது குறித்து நாகரீகமான முறையில் நமது விமர்சனங்களை பின்னூட்டங்களில் பதிவு செய்வதே படித்தவர்களுக்கு அழகு.

ஆனால், அந்த பின்னூட்டத்தில் மிக மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது என்பது தவறான செயல் இல்லையா?. கடினமான வார்த்தைகள் என்றிலாமல் ஆபாச அநாகரீக வார்த்தைகளைப் பயன்படுத்துவது பண்புள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல.

இராகவன், நைஜிரியா என்பவர் ஆண் என்பது பதிவுகளைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். வலைப்பூவிற்கு பதிவராக வந்து 20 நாள்தான் ஆகின்றது, நான் ஆணா / பெண்ணா என்று கூட தெரியாமல், அசிங்கமான பின்னூட்டம் எனக்கு வருகின்றது.. (இரண்டு பின்னூட்டம் தான் அசிங்கமாக வந்தது, முதலிலேயே தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு).

வலைப்பூ என்பதே ஒரு தனிமனிதன் எழுதுவது. அது பிடிக்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். யாரும் யாரையும் படிக்க சொல்லி யாரும் வற்புறுத்தப் போவதில்லை.

எல்லாத் துறைகளிலும் பெண்களை முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் என்பது இது போன்ற இழிபிறவிகளின் நோக்கமாக சில நேரங்களில் இருக்கிறது. இது போன்ற அநாகரீக செயல்கள் மூலமாக பெண் பதிவர்களின் மன உறுதியை சீர்குலைத்து அவர்களைத் தொடர்ந்து எழுத விடாமல் செய்வதும் இவற்ர்களின் கேவலமான குறிக்கோளாக உள்ளது.

தமது மகிழ்ச்சிக்காகவும் கருத்துப் பகிர்தலுக்காகவும் எழுதப்படும் பதிவுகளுக்கு பெயரில்லாமல் அசிங்கமான, கேவலமான பின்னூட்டங்களை போடுபவரைப்பற்றி என்ன சொல்வது?.

அதிலும் வலைப்பதிவர்களை கேவலப்படுத்தி / அசிங்கமான பின்னூட்டம் போடுபவர்கள் மிக கேவலமான இழி பிறவிகள் என்பதுதான் என் எண்ணம்.

தன்னுடன் கருத்து மாறுபடுபவர்களின் அல்லது தனக்குப் பிடிக்காதவர்களின் எதிரே நின்று தங்கள் கருத்தைக் கூற தைரியம் இல்லாமல் அவர்கள் இல்லாத இடங்களிலும் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத இடங்களிலும் சென்று புறம் பேசுபவர்களைப் போன்ற கோழைகள்தான் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

பதிவரிடத்திலும் பதிவின் கருத்துகளிலும் தனக்கு உள்ள மாற்றுக் கருத்துகளை நேருக்கு நேராக எடுத்து சொல்லும் தைரியம் உள்ளவர்கள் நிச்சயம் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்த வகையான பின்னூட்டம் போடுவது என்பது, மன பிறழ்வின் அறிகுறி. பொது இடங்களில் உள்ள சுவர்களிலும், கழிவறையின் சுவர்களிலும் தனக்குப் பிடிக்காதவர்கள் பற்றி ஆபாசமாக எழுதி அதன் மூலம் தங்கள் கேவலமான அரிப்பை தீர்த்துக் கொள்பவர்கள்தான் இவர்களும்.

இது போன்ற மன நோயால் பாதிக்கப்பட்ட தைரியமற்ற கோழைகள் இக்தகைய ஈனச் செயல்கள் மூலம் பெண் பதிவர்களைக் கூட பல நேரங்களில் வேதனைப் படுத்தி அதைக் கண்டு இன்பமடைய முனைகின்றனர்.

இது போன்ற பைத்தியக்காரர்களின் செயல்களுக்கு எந்த வித மரியாதையையும் தராமல் அவற்றைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டு தமது பணியை முன்னை விடப் பன்மடங்கு வேகத்தில் செய்வதே பதிவர்கள் குறிப்பாகப் பெண்பதிவர்கள் இவர்களைப் போன்ற ஈனர்களுக்குச் தரக் கூடிய சரியான தண்டனையாக இருக்கும்.

அதை விடுத்து பதிவர்கள் இது போன்ற முறையற்றவர்களின் செயல்களால் மனம் புண்பட்டு அவர்கள் கூறியதைப் பற்றி சிந்தித்து தமது நேரத்தை வீணாக்குவது என்பது - தேவையற்றது - அவசியமற்றது - கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது..

நம் முன்னே முகம் காட்டக் கூட தைரியம் இல்லாத கோழைகள் செய்யும் இக்தகைய ஈனச் செயல்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை முன்னை விட பன்மடங்கு வேகத்துடன் செயல்படுவதே.

ஆபாசப் பின்னூட்டமிடும் இது போன்ற மன நோயாளிகள் ஒரு நல்ல மனோதத்துவ / மன நல மருத்துவரை அவர்கள் அணுகுவது நலம். ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகினால் அவர்கள் மன நோய் நீங்கி மற்றவர்களைப் போன்ற நல்ல மனிதர்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.

அப்படி நல்ல மன நல மருத்துவர் வேண்டும் என்றால், பின்னூட்டத்தில் பெயருடன் தெரிவியுங்கள், நாங்கள் சிபாரிசு செய்கின்றோம். இல்லையென்றால் நேரடியாக வலைப்பதிவு மனநல டாக்டர் ருத்ரன் அவர்களைப் போய் பாருங்கள், நல்லது நடக்கும்.

கடைசியாக சில வார்த்தைகள்,

திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது... என்று எண்ணிக் கொண்டு துள்ளித் திரியாதீர்கள்,

உங்களைப் போன்ற காமூகர்களைப் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் இப்பொழுதெல்லாம் நல்ல தொழில்நுட்ப நுண்ணறிவுடன் தயாராகவே உள்ளனர்.

நீங்கள் பெயரில்லாமல் பின்னூட்டம் போட்டு விட்டதாகவும் நம்மை யாரும் கண்டு பிடிக்க முடியாது என்றும் பகல் கனவு கண்டு கொண்டு திரியாதீர்கள்.

இரண்டே வினாடிகளில் உங்களைக் கண்டு பிடித்து பின்னர் கைகளில் காப்பு மட்டும் அளவு தொழில்நுட்பம் இப்போது சைபர் கிரைம் போலிசார் வசம் இருக்கிறது என்பதை உணர்ந்து திருந்துங்கள் இல்லை என்றால் மறைமுகமாக ஈ மெயில் மிரட்டல் வீட்டுப் பின்னர் சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தாவது திருந்தி விடுங்கள். 

இல்லை களி தின்றால்தான் உங்களுக்குப் புத்தி வரும் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

70 comments:

ரவி said...

Kothichitteenga pola ?

நசரேயன் said...

யார் அந்த கருப்பு ஆடு, கண்டிக்க படவேண்டிய விஷயம்

பழமைபேசி said...

கண்டிக்க படவேண்டிய விஷயம்!

தமிழ் மதுரம் said...

உங்கள் பதிவில் றக்கர் இருந்தால் அவர்களை நீங்கள் இலகுவாக இனங் கண்டு கொள்ளலாம்,,,யாரப்பா அது???

குடுகுடுப்பை said...

இந்த வகையான பின்னூட்டம் போடுவது என்பது, மன பிறழ்வின் அறிகுறி. பொது இடங்களில் உள்ள சுவர்களிலும், கழிவறையின் சுவர்களிலும் தனக்குப் பிடிக்காதவர்கள் பற்றி ஆபாசமாக எழுதி அதன் மூலம் தங்கள் கேவலமான அரிப்பை தீர்த்துக் கொள்பவர்கள்தான் இவர்களும்.//

மிகச்சரி.

அது சரி(18185106603874041862) said...

//
ஆபாசப் பின்னூட்டமிடும் இது போன்ற மன நோயாளிகள் ஒரு நல்ல மனோதத்துவ / மன நல மருத்துவரை அவர்கள் அணுகுவது நலம். ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகினால் அவர்கள் மன நோய் நீங்கி மற்றவர்களைப் போன்ற நல்ல மனிதர்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.
//

இது மிக உண்மை..மன நோய் பிடித்த மனிதர்கள் பலரும் இருப்பதாக தெரிகிறது....இவர்கள் இப்படியே அலைவது யாருக்கு ஆபத்தோ இல்லையோ அவர்களுக்கு ஆபத்து...மன நோய் மிக முற்றி தெருவில் அலையும் வாய்ப்புகள் உள்ளன...

Muthu said...

ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டும் அசட்டு துணிச்சலில் தவறு செய்து மாட்டி கொண்டவர்கள் வரலாறு இருக்கு இங்க.

என்ன செய்ய விதி வலியது.

காரூரன் said...

இராகவன்,
ரொம்ப உணர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். சில மனிதர்கள் மற்றவர்களை சீண்டித்தான் வாழ்கின்றார்கள். தாழ்வு மனப்பான்மை தான் இப்படியான செய்கைகளுக்கு முதல் காரணம். நைஜீரியா என்றால் நம்மவர்கள் அனேகம் ஆசிரியர்கள் என்பார்கள். கண்டிப்புத் தன்மை அப்படி தோன்றிற்று. நல்ல பயனுள்ள கட்டுரை, தேவைப்படுபவர்கள் வாசிக்க மாட்டார்கள் அது தான் பிரச்சனை தொடர்கின்றது.

எழுதுங்கள்.

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
ஆபாசப் பின்னூட்டமிடும் இது போன்ற மன நோயாளிகள் ஒரு நல்ல மனோதத்துவ / மன நல மருத்துவரை அவர்கள் அணுகுவது நலம். ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகினால் அவர்கள் மன நோய் நீங்கி மற்றவர்களைப் போன்ற நல்ல மனிதர்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.
//

இது மிக உண்மை..மன நோய் பிடித்த மனிதர்கள் பலரும் இருப்பதாக தெரிகிறது....இவர்கள் இப்படியே அலைவது யாருக்கு ஆபத்தோ இல்லையோ அவர்களுக்கு ஆபத்து...மன நோய் மிக முற்றி தெருவில் அலையும் வாய்ப்புகள் உள்ளன...
//

வ.மு வில அனானிமஸ் ஆப்சன தூக்கினதே ஒரு பின்னூட்டத்தில வந்த கெட்ட வார்த்தைகள் மிக மோசம்.

குடுகுடுப்பை said...

ராகவன் சார் வில்லு பாக்கிறதுக்கு முன்னாடி நம்ம கடைக்கு வந்துட்டு போங்க

துளசி கோபால் said...

நல்ல பதிவு ராகவன்.

இதுகளைப் பற்றிக் கவலைப்பட்டால் பின்னே எழுதவே முடியாது.

நமக்குத் தொழில் எழுத்துன்னு நாம் முன்னேறிக்கிட்டே போகவேணும்.

பதிவராக வந்துட்டீங்க. நல்வரவு. இனிய வாழ்த்து(க்)கள்

நட்புடன் ஜமால் said...

சரியாக(ச்) சொன்னீர்கள்.

கவலை மறக்க எழுத வரும் ப்லாக்ர்களை இந்நச்சுகள் நசுக்கிவிடுகின்றன.

மாட்டுனாதான் தெரியும் இவர்களை போன்றவருக்கு ...

நட்புடன் ஜமால் said...

பேரூந்துகளில் பெண்களை உறசுபவர்களை பற்றி 13 வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுறை படித்த ஞாபகம்.

அவர்கள் மிக(க்) கோழைகளாக இருப்பார்கள் என்றும், அது போன்ற விடயங்கள் செய்வது அவர்களுக்கு போதை என்றும், அது செய்ய இயலாவிட்டால் அவர்களுக்கு வேர்த்து, கை - கால் எல்லாம் நடுங்க ஆறம்பித்து விடும் என்றும் ...

அதை போன்றே இப்போது நவீன முறையில் உறசி பார்க்கின்றனர், இக்கோழைகள் பிடிப்பட்டால் தான் விளைவை விளங்குவார்கள்.

இவர்கள் போன்றவர்களால், தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மன உளைச்சல் போக்கவே ஒரு வடிகாலாக ப்லாகில் எழுத வந்தால், இவர்கள் போன்ற மன நோயாளிகளால் மிகுந்த கஷ்டம் ஏற்படுகிறது ...

நட்புடன் ஜமால் said...

\\இது போன்ற பைத்தியக்காரர்களின் செயல்களுக்கு எந்த வித மரியாதையையும் தராமல் அவற்றைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டு தமது பணியை முன்னை விடப் பன்மடங்கு வேகத்தில் செய்வதே பதிவர்கள் குறிப்பாகப் பெண்பதிவர்கள் இவர்களைப் போன்ற ஈனர்களுக்குச் தரக் கூடிய சரியான தண்டனையாக இருக்கும்.\\

ம்ம்ம் ...

இந்த முறையை கையாளவுது தான் சரி. கேடுகெட்ட கோழைகளின் இழிச்செயல்களுக்கு பயந்து நமது செயல்களை நிறுத்திவிடக்கூடாது.

நட்புடன் ஜமால் said...

\\புறம் பேசுபவர்களைப் போன்ற கோழைகள்\\

இச்செயல் இருக்கும் வரை - இதை செய்பவன் முன்னேரவே இயலாது.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி said...

வ.மு வில அனானிமஸ் ஆப்சன தூக்கினதே ஒரு பின்னூட்டத்தில வந்த கெட்ட வார்த்தைகள் மிக மோசம்.
//

மன நோயாளிகள் அப்படித் தான் தல...அவங்க முகத்தை பார்க்க அவங்களுக்கே பிடிக்காது...முற்றிய மன நோயாளிகள் இது மாதிரி கெட்ட வார்த்தையில எல்லா இடத்திலேயும் எழுதறது வழக்கம் தான்...இதுல என்னக் கொடுமைன்னா அவங்க மன நோய் அவங்களுக்கே தெரியாது..அதனால கெட்ட வார்த்தையா பேசறது உண்டு...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
ராகவன் சார் வில்லு பாக்கிறதுக்கு முன்னாடி நம்ம கடைக்கு வந்துட்டு போங்க

January 14, 2009 10:59 PM
//

அங்க வந்தா அப்புறம் எங்க வில்லு பாக்குறது :0)))

ஆனா காசு மிச்சம் பண்ணலாம்...

ராகவன் சார், என்னை நைஜீரியா பிரசிடென்ட் ஆக்குறதா ஒரு ஈமெய்ல் வந்துருக்கு....நம்பலாமா?? என்ன உங்க ஊர் மக்கள் ஒத்துக்குவாங்களா?? எவ்வளவு செல்வானாலும் பரவாயில்ல! :0)))

Mahesh said...

வழிமொழிகிறேன்.... கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

Mahesh said...

என்ன சார்... கோவத்துல எங்க கடைப் பக்கமெல்லாம் வரதே இல்லை போல.... :(

BOOPATHY said...

நான் யார்? இந்தப் பூமியில் எதற்காக பிறந்திருக்கிறேன் என்னும் தேடுதலுக்கு நேரம் ஒதுக்காமல் இப்படிப்பட்ட இழிசெயல்களை செய்வதோடு இவர்களது வாழ்க்கை நிறைவடைந்து விடுகின்றது. ஒரு சாராரை(பெண்களை)
மையமாகவைத்து கொச்சைப்படுத்தவது கோமாளிகள் செய்யும் செயல்; இது அவர்களது மனவியாதியைத்தான் படம் போட்டு காட்டுகிறது.

மலை உச்சிக்கு சென்றவர்களே தாம் கற்றது கையளவுதான் என்று அடக்கமாகக் கூறிக்கொண்டு பல பயனுள்ள பணிகளை ஆற்றும் போது பெண்களை கீழ்தரமாக சிந்தித்து அதில் அற்பமாக மகிழ்சியடைந்து தமது ஆற்றாமையின் வேகத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கின்றார்கள்.

மக்களை சென்றடையும் ஊடகத்தை பாவிப்பவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பது உங்கள் கட்டுரையில் தெளிவாக தெரிகிறது.

சாதாரண பொதுமகனாக இருந்து விடாமால் இப்படிப்பட்ட கூட்டம் தொடர்ந்தும் தமது இழிபணியை செய்யாதிருக்க நீங்கள் எடுத்த முயற்சி பாரட்டத்தகுந்தது.

ஒருவரின் செய்கையில் இருக்கும் அநியாயங்களைச் சுட்டிக்காட்டுவது இந்த ஊடகத்தில் மிகவும் தேவையானது, வரவேற்கத்தக்கது.

Cable சங்கர் said...

ராகவன்.. நீங்கள் மாடுரேஷன் வைத்துக் கொள்ளூங்கள்.. அப்போதுதான் இந்த பிரச்சனையை கையாள முடியும்.. இவர்க்ள் ஒருவர் போனால் இன்னொருத்தர் வந்து கொண்டேதான் இருப்பார்கள்.. பொங்கல் வாழ்த்துகள்

துளசி கோபால் said...

//ராகவன்.. நீங்கள் மாடுரேஷன் வைத்துக் கொள்ளூங்கள்.//

ஆமாம் ராகவன். இன்னிக்கு நல்லநாள் வேற. மாட்டுப்பொங்கல். மாடுரேஷன் வச்சுருங்க. அப்படியே அதுக்குப் பொங்கலும் படைச்சால் ஆச்சு.

ச்சும்மா:-)))) நோ அஃபென்ஸ் ப்ளீஸ்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி செந்தழல் ரவி..

நிசமாவே ரொம்பவே கொதிச்சுதான் போயிட்டேன்.

நன்றி நசரேயன்...

நன்றி பழமைபேசி

நன்றி மெல்போர்ன் கமல் - இந்த றக்கர் போடுவது எப்படி என்பது தெரியவில்லை

இராகவன் நைஜிரியா said...

நன்றி குடுகுடுப்பை

தங்களின் வில்லு விமர்சனம் படித்தேன். காப்பாறியதற்கு மிக்க நன்றி.

நன்றி அதுசரி

// அதுசரி said...

ராகவன் சார், என்னை நைஜீரியா பிரசிடென்ட் ஆக்குறதா ஒரு ஈமெய்ல் வந்துருக்கு....நம்பலாமா?? என்ன உங்க ஊர் மக்கள் ஒத்துக்குவாங்களா?? எவ்வளவு செல்வானாலும் பரவாயில்ல! :0)))//

செலவு மட்டும் ஆகும்... பிரசிடெண்ட் எல்லாம் ஆக முடியாது, பரவாயில்லையா?

எலி வலையானலும் தன் வலை என்பது மாதிரி, நம்ம ஊர்ல இருக்கின்ற சுகம் வருமா?

இராகவன் நைஜிரியா said...

// Blogger முத்து தமிழினி said...

ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டும் அசட்டு துணிச்சலில் தவறு செய்து மாட்டி கொண்டவர்கள் வரலாறு இருக்கு இங்க.

என்ன செய்ய விதி வலியது.//

நன்றி முத்து தமிழினி...

இராகவன் நைஜிரியா said...

நன்றி காரூரன்

நன்றி துளசி கோபால்

நன்றி ஜமால்

இராகவன் நைஜிரியா said...

// Blogger Mahesh said...

என்ன சார்... கோவத்துல எங்க கடைப் பக்கமெல்லாம் வரதே இல்லை போல.... :( //

நன்றி மகேஷ்..

வலைப் பதிவுகளை பார்க்க முடியாத்தற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது, மலேரியா, டைபாய்டு இரண்டும் ஒரே சமயத்தில் வந்துவிட்டது.

இரண்டாவது, Year End Accounts finalisation முடிச்சாகணும்.

இந்த வார முடிவுற்க்குள், Provosional Balance Sheet கொடுக்க வேண்டும். அதனால் தான் எங்கும் அவ்வளவாக செல்ல முடியவில்லை

மன்னிக்கவும்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி பூபதி

// Blogger Cable Sankar said...

ராகவன்.. நீங்கள் மாடுரேஷன் வைத்துக் கொள்ளூங்கள்.. அப்போதுதான் இந்த பிரச்சனையை கையாள முடியும்.. இவர்க்ள் ஒருவர் போனால் இன்னொருத்தர் வந்து கொண்டேதான் இருப்பார்கள்.. பொங்கல் வாழ்த்துகள் //

நன்றி சங்கர்..

மாடுரேஷன் வைத்துள்ளதால் தான் இதை சுலபமாக கண்டு பிடித்து வெளியே தள்ள முடிந்தது...

அபி அப்பா said...

reechar sonna maathiri innikku maattu pongal. nalla naal. innikkee maadureesan poottudungka:-))

Anonymous said...

ராகவன் நன்று தொடர்க உங்கள் பணி

ers said...

என் பதிவுகளிலும் சில நேரங்களில் இம்மாதிரியான அனாணிகளின் பின்னோட்டங்கள் பதியப்பட்டுள்ளன. சில நேரங்களில் நான் வேதனைப்படும் அளவிற்கு இப்பின்னோட்டங்கள் அமைந்திருக்கின்றன. இவர்களுக்கு காப்பு மாட்டினால் சந்தோஷப்படும் முதல்நபராக நானிருப்பேன். தங்களின் இப்பதிவு கழிசடைப்பதிவர்கள் சிலரின் மனதை மாற்றும் என்று நம்புகிறேன்.

ஒரு விளம்பரம்
இன்னும் சில நாட்களில்....
நெல்லைத்தமிழனின் திரட்டி வெளிவருகிறது...
சோதனைக்கு...
http://india.nellaitamil.com/

தேவன் மாயம் said...

துணிச்சலான பதிவு!!!உங்கள் பதிவு புதியவகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்!!!

தேவா...

ramachandranusha(உஷா) said...

கமெண்ட் மாடரேஷனைப் போல, அனானிமஸ், அதர் ஆப்ஷனையும் எடுத்தது மிக நல்ல பயன்
அளிக்கிறது. ஆனால் அவைகளை எடுத்தது இன்னும் மனசுக்கு
வருத்தமாய் தான் இருக்கிறது. ஜனநாயகத்தைக்கு விரோதம் என்றுப் பார்த்தால், பட்ட பாட்டை நினைத்தால் தைரியம் வரவில்லை. அப்படியே ஜீ மெயிலில் பில்டர்
என்று ஒன்று இருக்கிறது. அதையும் பாருங்கள். ஆபாச மெயில்கள் உங்கள் கண்ணில் படாமலேயே
குப்பை தொட்டிக்குப் போய்விடும். ஆனால் ஒன்று, இவைகள் கரப்பான்பூச்சிகள் மாதிரி, கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது. கொஞ்ச நாள் ஆனால் பழகிவிடும் :-)

RAMASUBRAMANIA SHARMA said...

I think, we have been discussing about various events,occuring in worldwide...thru this forum..What the Black Sheeps require, by writing...unwanted....articles..Any way Mr Raghavan, do the needful as mentioned by several, experienced authors....Keep writing your views...

Sinthu said...

நீங்கள் சொல்வது உண்மை.. நானும் பார்த்திருக்கிறேன். தென் பெயரைக் கூட சொல்ல துப்பில்லாத கொலைகள் தான் அவர்கள்..........
Sinthu
bangladesh

குப்பன்.யாஹூ said...

yes its easy nowadys to track IP and user address.

Mainly their ages make this kind of thoughts. Once they r matured and got into finacial worries (like married husbands) they will also be normal.

Anonymous said...

ஆபாசப் பின்னூட்டம் இடுவது பைத்தியக்காரர்களின் செயல் என்பது முற்றிலும் சரியே. வலைப்பதிவர்களுக்கு இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதும் சரியே.
ஆனால் வலைப்பதிவர்கள் இடக்கரடக்கலாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?
குறிப்பிட்ட சமூகத்தினரைப் பழிப்பதும் திட்டுவதும் ஏன்? அவ்வாறு செய்வதால் தமிழ் வளர்கிறதா? சமூகப் புரட்சி ஏற்படுகிறதா?
இந்த வெறுப்பு வியாபாரம் எதற்கு?

Good citizen said...

ராகவன் சார்,

ஒருவரின் கருத்து ஒத்துப் போகவில்லை எனில் அதற்கான மாற்று
கருத்தை விள்க்கி குத்திடுவது தவறில்லை.சில் நேரங்களில் அது கடுமையான் விமர்சனமாக அமைந்து விடுவதுண்டு.ஏன்,உங்களின் கருதுக்கெ
நான் சர்று கடுமையான் மாற்று கருத்த்திட்டிருக்கிறேன் (ஜாதகப் பதிவு
என்று நினைவு) மனித நேயத்தைப் பாதிக்கும் எந்த பதிவுக்கும் நான் மாற்று கருத்திட அயந்ததில்லை.ஆனால் தான் எதற்காக் வாதிடுகிறோம் என்று விளக்காமலும்ம்,தன் அடையாளாத்தையும் மறைத்து கொண்டு ஆபாச் கறுத்திடுபவன் நிச்சயம் ஒரு பேடி,அதிலும் ஒருபெண்னிண் பதிவுக்கு ஆபாசக்
கருத்திடுபவன் நிச்சயம் ஆண்மை இல்லாதவந்தான்.உங்கள் கோபம்
ஞயமானது

ஹேமா said...

இராகவன்,மனநிலை சரில்லாதவர்களும் எங்களோடு இணயத்திற்குள் உலாவுகிறார்கள்.
கண்டு பிடிக்கக் கஸ்டம்தான்!

இனிய தமிழர் திருநாள் வாழ்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

// Anonymous said...
ஆபாசப் பின்னூட்டம் இடுவது பைத்தியக்காரர்களின் செயல் என்பது முற்றிலும் சரியே. வலைப்பதிவர்களுக்கு இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதும் சரியே.
ஆனால் வலைப்பதிவர்கள் இடக்கரடக்கலாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?
குறிப்பிட்ட சமூகத்தினரைப் பழிப்பதும் திட்டுவதும் ஏன்? அவ்வாறு செய்வதால் தமிழ் வளர்கிறதா? சமூகப் புரட்சி ஏற்படுகிறதா?
இந்த வெறுப்பு வியாபாரம் எதற்கு? //

நண்பரே

இந்த முகமூடி எதற்கு..

உங்கள் கருத்தை நேரடியாகவே, உங்கள் பெயரிலேயே சொல்லுங்களேன்.

ஒரு பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கான பின்னூட்டம் போடும் போது, நல்ல வார்த்தைகளை, தன்மையான எழுத்தில் இடுவதில் நட்டம் ஒன்றுமில்லை.

அதை மீறி எழுத்து பிடிக்கவில்லையா, படிக்கவே வேண்டியதில்லை.

அதற்காக, ஆபாசமாக பின்னூட்டம் இடுவது என்பது, அசிங்கத்தின் உச்ச கட்டம்..

இராகவன் நைஜிரியா said...

// அபி அப்பா said...
reechar sonna maathiri innikku maattu pongal. nalla naal. innikkee maadureesan poottudungka:-)) //

நன்றி அபி அப்பா...

நாள் கிழமை எல்லாம் பார்க்கவில்லை... முன்பே மாடுரேஷன் போட்டாச்சு

இராகவன் நைஜிரியா said...

// நட்டு said...
ராகவன் நன்று தொடர்க உங்கள் பணி//

நன்றி நட்டு

இராகவன் நைஜிரியா said...

// tamil cinema said...
என் பதிவுகளிலும் சில நேரங்களில் இம்மாதிரியான அனாணிகளின் பின்னோட்டங்கள் பதியப்பட்டுள்ளன. சில நேரங்களில் நான் வேதனைப்படும் அளவிற்கு இப்பின்னோட்டங்கள் அமைந்திருக்கின்றன. இவர்களுக்கு காப்பு மாட்டினால் சந்தோஷப்படும் முதல்நபராக நானிருப்பேன். தங்களின் இப்பதிவு கழிசடைப்பதிவர்கள் சிலரின் மனதை மாற்றும் என்று நம்புகிறேன்.

ஒரு விளம்பரம்
இன்னும் சில நாட்களில்....
நெல்லைத்தமிழனின் திரட்டி வெளிவருகிறது...
சோதனைக்கு...
http://india.nellaitamil.com //

நன்றி தமிழ் சினிமா

இராகவன் நைஜிரியா said...

நன்றி உஷா

நன்றி RAMASUBRAMANIA SHARMA

நன்றி moulefrite

நண்பர்களே.. உங்கள் புரிதலுக்கும், வருகைகளுக்கும் நன்றிகள் பல

அப்துல்மாலிக் said...

நல்ல கருத்துக்கள் ராகவா, இதெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்... பார்போம் தங்களோட பதிவை பார்த்துவிட்டு திருந்துவார்களா??? என்று..

சும்மாதான் ஆரம்பிச்சேனு சொல்லிட்டு இப்புடி கலக்குறீஹலே... கலக்குங்க தலிவா, நாங்க பின்னாலிருக்கிறோம்..

வேத்தியன் said...

இது மாதிரியான மின்னஞ்சல்கள் எல்லோருக்கும் வந்திருக்கும்..
பலரின் கோபத்துக்குரிய பதிலை இந்தப் பதிவின் மூலம் சொல்லிவிட்டீர்கள்..
அதற்கு பாராட்டுகள் அண்ணா !!!

Anonymous said...

பலபின்னூட்டங்கலில் நானும் வாசித்துள்ளேன், வாசிக்ககூட வாய் கூசுமலவுக்கு எழுதுகிரார்கள்.காரசாரமா ஒரு நல்ல விவாதமா எழுதலாம், அதை விட்டுட்டு தனக்கு மட்டும் தான் கெட்டவார்தைகள் தெரியும் மாதிரி எழுதுவது மிகவும் கண்டிக்கதக்கது.
germany

புதியவன் said...

//வலைப்பூ என்பதே ஒரு தனிமனிதன் எழுதுவது. அது பிடிக்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். யாரும் யாரையும் படிக்க சொல்லி யாரும் வற்புறுத்தப் போவதில்லை.//

நல்ல பதிவு...இனியாவது இவர்கள் திருந்தினால்
நல்லது...

Anonymous said...

nalla vishayam

S.R.Rajasekaran said...

ஆகா இதுலயும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களா

kajan said...

நல்ல வளர்பில் வழ்ளர்ந்தது இப்படி செய்யாது இராகவன் அண்ணா.பின்னூட்டம் என்கிறது எழுத்தளனை சந்தோசப்படுத்துவது மட்டுமல்லாமல்,ஊக்கிவிப்பதுவும்,விடும் பிழைகளை திருத்துவதற்கும்

coolzkarthi said...

ராகவன் சார்,எனக்கும் இந்த மாதிரி வந்தது அதனால் நான் ஒரு பதிவையே தூக்க வேண்டிய நிலை வந்தது.....நன்றி cool....

Poornima Saravana kumar said...

இழிவான பின்னூட்டங்கள் போடும் நாகரிகம் தெரியாதவர்களுக்கு உங்கள் பதிவே சரியான சாட்டை அடி...

g said...

இழிவான பின்னூட்டங்கள் போடும் நாகரிகம் தெரியாதவர்களுக்கு உங்கள் பதிவே சரியான சாட்டை அடி...

Sanjai Gandhi said...

:(

கமெண்ட் மாடுரேஷன் போட்டிங்க.. அதுவே போதும்.. இல்லை என்றால் என்னை போல் கூகுள் அல்லது ஓபன் ஐடியில் வருபவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுவது போல் செய்து விடுங்கள்.

முதல் கமெண்ட் போட்டிருப்பவருக்கு தெரியும் இது மாதிரி ஆட்களுக்கு என்ன ஆகுமென்று.. :)

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

*இயற்கை ராஜி* said...

annoymous,other option illama pannitunga..mosamaanavarhalidam irunthu kappathikka namma veetai nama pathirama pootti vachithan aganum

குடந்தை அன்புமணி said...

\\எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது, மலேரியா, டைபாய்டு இரண்டும் ஒரே சமயத்தில் வந்துவிட்டது.\\
தங்கள் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது? பரவாயில்லையா பாஸ்? தங்களின் பதிவு நன்று!

Unknown said...

I want to remember the very familiar quote said anna even the eppoosite guarden also has smell if you"re unable to observe you"re mentally challenged i"m sure

RAMYA said...

அண்ணா சூப்பர் அண்ணா

பொறுப்பு இல்லாமல் மற்றவைகளை புண்படுத்துவர்களுக்கு இது ஒரு சவுக்கடியாக இருக்கட்டும்

இது போல் நினைக்க மனம் போவதே ஒரு சமுதாயச் சீரழிவுதான்

நல்லா சொல்லி இருக்கீங்க இதை படிச்சிட்டாவது திருந்தினாங்கன்னா
ரொம்ப நல்லது

திருந்தலைன்னா காப்புதான் திருத்தும்!!!

அப்பாவி முரு said...

anney unga mail id enna?
veliyida viruppamillai enil enakku thanippatta muraiyil tharavum

abbaavi muru

இராகவன் நைஜிரியா said...

உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், அலுவலகத்தில் வேலை பளு கூடியதாலும் உடனடியாக அனைவருக்கும் பதில் அளிக்க இயலவில்லை.

இன்னும் ஒரு வாரம் திரும்ப வந்துவிடுகின்றேன்..

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.

தம்பி முரு அவர்களுக்கு ... மெயில் ஐடி...raghavannigeria@gmail.com

பழமைபேசி said...

மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??!

தேவன் மாயம் said...

இராகவன் ஐயா!புதிய இடுகை போடலியா?
சரி
ஒரு அறிவியல்
பதிவுக்கு
உங்கள்
அறிவுரை
தருக.....

coolzkarthi said...

ராகவன் சார்...இப்ப உடம்பு பரவா இல்லையா?

எம்.எம்.அப்துல்லா said...

ராகவன் அய்யா உங்களுக்காவது ஒரு மரைகழண்ட கேசு ஆபாச பின்னூட்டம்தான் போட்டுச்சு. ஒரு மெண்டல் என்னோட வலைப் பதிவையே ஹேக் பண்ணிருச்சு :((

எம்.எம்.அப்துல்லா said...

உடல்நிலை இப்போ எப்படிங்கய்யா இருக்கு?? பரவாயில்லையா??

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

ANU said...

Intha visayathil thappu sythavarkal kadumaiyaa thandikka padavaendum...Matravarkalai punpaduthi parpathae silaruku polzuthu pokkaha eruku...Muthalil nam aellorum manitharkal aendra aennam vanthal poathum..

அன்புடன் மலிக்கா said...

இதுபோன்றவர்களை என்ன செய்வது
அறிவிலிகள் என்றுதான் சொல்லவேண்டும்

நல்லஎண்ணம் உங்களுக்கு இராகவன் சார்.. பாராட்டுக்கள்..