Tuesday, March 24, 2009

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

Monday, March 9, 2009

போய் விட முடிவு செய்துவிட்டேன் ...நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.


ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

என் வேலையை விட்டு விட்டு், சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.

நான் : கடவுளே.... நான் இந்த உலகத்தை விட்டு செல்லப் போகின்றேன்..

கடவுள் : இல்லை அது மாதிரி செய்யக்கூடாது

நான் : ஏன் இந்த உலகத்தை விட்டு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல காரணத்தை கூறுங்களேன்.

கடவுள் : உன்னைச் சுற்றி உள்ள புற்களையும், மூங்கில்களையும் பார்.

நான் : ஆம்... மிக நன்றாக இருக்கின்றன.

கடவுள் : இந்த புற்களையும், மூங்கில்களையும் நான் விதைத்தேன்.
அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
அவைகளுக்கு தேவையான காற்று, வெளிச்சம், தண்ணீர்
அனைத்தையும் அளித்தேன்.
முதல் வருடத்தில் புற்கள் மிக வேகமாக பூமியில் இருந்து
வந்தன. பூமியை பச்சை நிறத்தால் மூழ்கடித்தன.
மூங்கில் விதையில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக மூங்கிலை நான் கை விட்டு விடவில்லை.
இரண்டாம் வருடத்தில் புற்கள் காடுகள் முழுவதுமாகப் மிக
அழகாகப் படர்ந்தன.
மூங்கிலில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக நான் மூங்கிலை விட்டு விடவில்லை.
மூன்றாம் வருடமும் நான்காம் வருடமும் மூங்கிலில் இருந்து
ஒன்றும் வரவில்லை.
அதற்க்காக நான் அதை விட்டுவிடவில்லை.
ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.
மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.
ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது.

மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.
--------------------------------------------------------------------------------------------
நட்புடன் ஜமால் said...
\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\அருமையானது.
திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று
\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\
23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்
--------------------------------------------------------------------------------------------
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.

உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.

உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....

நான் : எவ்வளவு உயரம் வரை நான் வளரமுடியும்? ...

கடவுள் : எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.

ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.

சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.

ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.

Friday, March 6, 2009

புயலுக்கு முன் அமைதி ...நண்பர் அணிமா...

மிக அழகான நண்பர்..

பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர், பழகுவதற்கு ஒரு நல்ல நண்பர்.

பட்டாம் பூச்சி விருது பெற்றவர்.

பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.


அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார், வலைப்பூ நண்பர்களையும் உதவி கோரினார். அந்த பதிவு...

அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.

சில காலம் இந்தியா சென்று இருந்ததாக தகவல்கள் வந்தன.

அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.

இடைவெளி அவசியமா?? என்ற பதிவில் .. பிப்ரவரி 28 வரை விடுப்பு எடுத்து இருந்தார். இன்னும் திரும்பி வராததால் தான் இந்த பதிவு.


தற்போதைய நிலவரப்படி, நைஜிரியா திரும்பி வந்துவிட்டார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்பி அணிமா, உங்க பின்னூட்ட புயல் எப்ப ஆரம்பிக்கும்?

அணிமாவும் நானும் எடுத்துக் கொண்ட புகைப்படம். கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு, அணிமா ஸ்டைலில் ஒரு ப்ளாக் லேபிள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தம்பி அணிமா பற்றி, தம்பி ஜமாலின் பதிவைப் படிக்க

அணிமா இல்லை... ஹனி - மா.. படிக்க


உங்கள் அனைவரின் சார்பாகவும் அவரை திரும்ப பழையபடி, அதே உத்வேகத்தோடு திரும்பி வருமாரு அழைக்கின்றேன்.


Tuesday, March 3, 2009

அகோரியின் கையில் அலைபேசி

நண்பர் அனுப்பிய ஒரு மெயில்

உங்கள் அனைவரின் பார்வைக்காக...

கடவுள் கூட கலந்துரையாடலோ...
என்ன சொல்லுவது...
இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !
தற்ப்போதைய இந்தியாவின் தேசிய விளையாட்டு (Unofficial)

உங்களுடைய எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.