Sunday, April 26, 2009

எது உன்னதம்.....


டிஸ்கி.... : தயவு செய்து கடைசி வரை படிக்கவும்....


தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் உங்களுக்கு விருப்பமில்லையா... அப்படியானால்....

கொஞ்சம் பிட்சா...

நோ பிட்சா ... அப்படியானால் டாக்கோ..

டாக்காவும் இஷ்டமில்லையா....

சரி மெக்சிகன் உணவு..???
இதுவும் இஷ்டமில்லையா.. ம்.. ம்... சைனீஸ் உணவு..

நூடுல்ஸ்.....????
பர்கர்ஸ்...............????

அதுவும் இல்லையென்றால்
வட இந்திய (அ) தென்னிந்திய உணவு வகைகள்...


இல்லாட்டி பாஸ்ட் புட்....?

முடிவில்லாத வகைகள் - தோசை வகைகள்..??


இல்லாட்டி அசைவ உணவுகள்....???

இல்லாட்டி இலைப் போட்டு ஒரு முழுச்சாப்பாடு....???
இதுவும் இல்லாவிடில் நம் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப எதாவது கிடைக்கும்.

ஆனால்....

இவர்களுக்கு
எந்தவிதமான விருப்பமும் கிடையாது.... விரும்பியதும் கிடைக்காது


இவர்களுக்கு தேவை எல்லாம் உயிர் வாழ கொஞ்சம் உணவு..

கொஞ்சம் நினைத்துப் பாருங்க .... உணவு விடுதியில் இருந்து வாங்கி வரும் சாப்பாடு நல்லா இல்லை என்று தூக்கி எறியும் போது..
கொஞ்சம் நினைத்துப் பாருங்க.... பொன்னி அரிசி சாதம் இல்லை என்று சொல்லும் போதோ... ரொட்டி ரொம்ப கடினமாக இருக்கின்றது என்று சொல்லும்போதோ

தயவு செய்து உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்.

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை ஒரு உதவும் அமைப்புக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.......


உதவும் கரங்கள் பிராத்தனை செய்யும் உதடுகளை விட உன்னதமானது.

உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.நன்றி : நண்பர் ஸ்ரீரங்கன் அவர்களுக்கு ...

Monday, April 20, 2009

அபுஜா, நைஜிரியா - படங்கள்ரோஜாவின் அழகே தனிதான்...வீட்டின் பின்புறம் உள்ள வாழைமரம்
வீட்டின் முன்புறம் உள்ள மலை, இயற்கை காட்சிஇந்த படத்தைப் போடாம இருக்க முடியுமாங்க..

அபுஜாவின் சாலைகள்... பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கின்றது இல்ல.
மற்றுமொரு சாலை... (திரும்பவும் பொறாமையா இருக்கில்ல)
சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது
Transcorp Hilton, அபுஜா
புழுதிப் புயல் அடித்த போது
இந்த நிழற்ப்படங்களை எல்லாம் எடுத்த நண்பர் ஸ்ரீநாத்...
(புது கேமரா வாங்கிய பவுசு... நிழற்படமா எடுத்து தள்ளிவிட்டார்..)

எச்சரிக்கை :

இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்.

Thursday, April 16, 2009

நெல்லைத்தமிழ் டாட் காம் ஓட்டளிப்பு பட்டைநெல்லைத்தமிழ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் பிளாக்கிலும் நிறுவமுடியும். இந்த வசதியின் வாயிலாக நெல்லைத்தமிழில், கணக்கு இல்லாவிட்டாலும் கூட உங்கள் தள பார்வையாளர்களும் உங்களி படைப்புகளுக்காக ஓட்டளிக்க முடியும்.

nellaitamil.com பட்டையை உங்கள் தளத்தில் இணைப்பது மிக மி சுலபமானதுதான்.

உதாரணத்திற்கு உங்கள் blogger.com பிளாக்குகளில் எப்படி இதனை இணைப்பது என்று பார்ப்போம். உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expan Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தைப் பெரியதாக்கி பார்க்கவும்.
பின்பு அந்த HTML -


என்ற code -ஐ தேடவும். தேடுவது உங்களுக்கு சிரமமாக இருப்பின்....
கண்ட்ரோல் F (ctrl+f) கொடுங்கள் Find என்ற மெனுபார் விண்டோசின் அடிப்பகுதியில் தோன்றும். அதில் மேற்கண்ட நிரலியை காப்பி பேஸ்ட் செய்து Enter கொடுங்கள். இப்போது.... குறிப்பிட்ட பகுதியை சுட்டிக்காட்டி நிற்கும். இந்த நிரலிக்கு அடியில் இந்த சுட்டியை சொடுக்கி நெல்லைத்தமிழ் இணையத்தில் உள்ள Code-ஐ Copy செய்து உங்கள் வலைத்தளத்தின் எச்டிஎம்எல் பகுதியில் Paste செய்யலாம்.


சேர்க்க வேண்டிய Code (Copy & Paste)
இங்கே இருந்து காப்பி செய்யவும்.

பின்பு Save Template கிளிக் செய்யவும்.

இதன் பின்பு உங்கள் தளத்தில் இருந்தே நீங்கள் பதிவுகளை நெல்லைத்தமிழில் சேர்க்கமுடிவதுடன், உங்கள் தளத்திற்கு வரும் நண்பர்களும் நெல்லைத்தமிழ் இணையத்தில் உங்களுக்காக வாக்களிக்க முடியும்.

Monday, April 6, 2009

நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கைநட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். பல சமயங்களில் நட்பு மிக உதவியாக இருக்கின்றது. நான் நைஜிரியா வரக் காரணமாயிருந்ததே நட்புதான். அவர் சீனாவைச் சேர்ந்தவர். நைஜிரியா மட்டுமல்ல, எனக்கு இதுவரை கிடைத்த வேலைகள் அனைத்திற்க்கும் , இன்றைய நல்வாழ்விற்கும் காரணம் எனக்கு கிடைத்த நட்புகள்தான்.

நட்பில் நான் உயர்ந்ததாக கருதுவது, கர்ணன், துரியோதனன் நட்பை. கர்ணன் துரியோதனுடன் கொண்ட நட்பை செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லலாம். ஆனால், துரியோதனன் அப்படி அல்ல.

கர்ணனுக்கும் துரியோததுனக்கும் இடையேலான நட்பை ஒரு சிறு சம்பவம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. துரியோதனன் மனைவி பானுமதியுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார் கர்ணன். அப்போது அங்கு வந்த கணவனைக் கண்ட பானுமதி விளையாட்டினை பாதியில் நிறுத்தி விட்டு எழும் போது அவர்களது மடியில் கட்டியிருந்த முத்து மாலையை பிடித்து இழுத்து கர்ணன் நிறுத்தப் பார்த்த போது முத்துக்கள் நிலத்தில் சிதறி உருண்டோடின. அதனைக் கண்ட துரியோதனன் நண்பன் மேல் எவ்விதச் சநதேகமும் இன்றி "எடுக்கவோ கோக்கவோ" என்றானர்.
தன்னுடைய மனைவியை மாற்றான் ஒருவன் தொட்டு விட்டானே, என்று கோபம் கொள்ளாமலும், அவளை சந்தேகப்படவும் இல்லை துரியோதன் . மாற்றாக சிரித்த முகத்தோடு அவர் கூறிய வார்த்தை, "எடுக்கவோ கோக்கவோ". நட்பை பெரிதாக மதித்ததால் தான் “எடுக்கவோ, கோட்கவோ” என்று கூறினார்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு இன்றும் போற்றப் படவேண்டிய நட்பு. மனதை நெகிழ வைக்கும் நட்பு. முன் பின் காணாமல் கொண்ட உயிர் நட்பு. நண்பர் உயிர்விட்ட போது அவரோடு தாமும் உயிர் விட்ட ஓர் உன்னதமான நட்பு.

தங்களது கோட்பாடுகளால் வேறு பட்டு இருந்தாலும், நட்பில் என்னை நெகிழ வைத்தவர்கள் , மூதறிஞர் ராஜாஜிஅவர்களும், தந்தை பெரியார் அவர்களும்.

நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான். ஆனால் நல்ல நட்பில், தவறு / தப்பு செய்யும் போது இடித்துரைக்க தவறக் கூடாது.

இதற்காகத்தான் அய்யன் வள்ளுவர் நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல் என்ற 4 அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதினார் போலிருக்கு .

அதில் இரண்டு குறள்கள் மிகப் பிடித்தது, மறக்க முடியாதது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு.


தூறல் அவர்கள் இடுகையில் நட்பு பற்றிய ஒரு ஹைக்கூ படித்தேன். அதை முழுவதுமாகப் படிக்க இங்கே அமுக்கவும். அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.

விஜி அவர்களின் அருமையான நட்பு கவிதை படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் மிகவும் பிடித்த வரிகள்..

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


முஜிமைந்தன் அவர்கள் நட்பு கவிதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

புரிந்துக கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.

சிறு வயதில் படித்தது..

எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.

கடைசியாக எங்கோ படித்தது.. வலைப்பூவில்தான் படித்தது.. யாரென்று தெரியவில்லை... இருந்தாலும் ஞாபகத்தில் இருந்து அந்த வரிகளை அப்படியே கொடுத்துள்ளேன்.

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

வலைப்பூவிற்கு வந்தபின் கிடைத்த நட்புகள் ஏராளாம். அதிலும் பலர் நட்புக்கு மேல் போய், கூடப் பிறந்த சகோதரன் போலேவே “ அண்ணே” என்று கூப்பிட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

மிக மிக மதிக்கத்தக்க அந்த நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்திய வணக்கங்கள். அந்த நட்புக்கும், நண்பர்களுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன்
உங்கள் இராகவன்.