Monday, April 6, 2009

நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கைநட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். பல சமயங்களில் நட்பு மிக உதவியாக இருக்கின்றது. நான் நைஜிரியா வரக் காரணமாயிருந்ததே நட்புதான். அவர் சீனாவைச் சேர்ந்தவர். நைஜிரியா மட்டுமல்ல, எனக்கு இதுவரை கிடைத்த வேலைகள் அனைத்திற்க்கும் , இன்றைய நல்வாழ்விற்கும் காரணம் எனக்கு கிடைத்த நட்புகள்தான்.

நட்பில் நான் உயர்ந்ததாக கருதுவது, கர்ணன், துரியோதனன் நட்பை. கர்ணன் துரியோதனுடன் கொண்ட நட்பை செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லலாம். ஆனால், துரியோதனன் அப்படி அல்ல.

கர்ணனுக்கும் துரியோததுனக்கும் இடையேலான நட்பை ஒரு சிறு சம்பவம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. துரியோதனன் மனைவி பானுமதியுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார் கர்ணன். அப்போது அங்கு வந்த கணவனைக் கண்ட பானுமதி விளையாட்டினை பாதியில் நிறுத்தி விட்டு எழும் போது அவர்களது மடியில் கட்டியிருந்த முத்து மாலையை பிடித்து இழுத்து கர்ணன் நிறுத்தப் பார்த்த போது முத்துக்கள் நிலத்தில் சிதறி உருண்டோடின. அதனைக் கண்ட துரியோதனன் நண்பன் மேல் எவ்விதச் சநதேகமும் இன்றி "எடுக்கவோ கோக்கவோ" என்றானர்.
தன்னுடைய மனைவியை மாற்றான் ஒருவன் தொட்டு விட்டானே, என்று கோபம் கொள்ளாமலும், அவளை சந்தேகப்படவும் இல்லை துரியோதன் . மாற்றாக சிரித்த முகத்தோடு அவர் கூறிய வார்த்தை, "எடுக்கவோ கோக்கவோ". நட்பை பெரிதாக மதித்ததால் தான் “எடுக்கவோ, கோட்கவோ” என்று கூறினார்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு இன்றும் போற்றப் படவேண்டிய நட்பு. மனதை நெகிழ வைக்கும் நட்பு. முன் பின் காணாமல் கொண்ட உயிர் நட்பு. நண்பர் உயிர்விட்ட போது அவரோடு தாமும் உயிர் விட்ட ஓர் உன்னதமான நட்பு.

தங்களது கோட்பாடுகளால் வேறு பட்டு இருந்தாலும், நட்பில் என்னை நெகிழ வைத்தவர்கள் , மூதறிஞர் ராஜாஜிஅவர்களும், தந்தை பெரியார் அவர்களும்.

நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான். ஆனால் நல்ல நட்பில், தவறு / தப்பு செய்யும் போது இடித்துரைக்க தவறக் கூடாது.

இதற்காகத்தான் அய்யன் வள்ளுவர் நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல் என்ற 4 அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதினார் போலிருக்கு .

அதில் இரண்டு குறள்கள் மிகப் பிடித்தது, மறக்க முடியாதது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு.


தூறல் அவர்கள் இடுகையில் நட்பு பற்றிய ஒரு ஹைக்கூ படித்தேன். அதை முழுவதுமாகப் படிக்க இங்கே அமுக்கவும். அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.

விஜி அவர்களின் அருமையான நட்பு கவிதை படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் மிகவும் பிடித்த வரிகள்..

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


முஜிமைந்தன் அவர்கள் நட்பு கவிதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

புரிந்துக கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.

சிறு வயதில் படித்தது..

எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.

கடைசியாக எங்கோ படித்தது.. வலைப்பூவில்தான் படித்தது.. யாரென்று தெரியவில்லை... இருந்தாலும் ஞாபகத்தில் இருந்து அந்த வரிகளை அப்படியே கொடுத்துள்ளேன்.

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

வலைப்பூவிற்கு வந்தபின் கிடைத்த நட்புகள் ஏராளாம். அதிலும் பலர் நட்புக்கு மேல் போய், கூடப் பிறந்த சகோதரன் போலேவே “ அண்ணே” என்று கூப்பிட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

மிக மிக மதிக்கத்தக்க அந்த நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்திய வணக்கங்கள். அந்த நட்புக்கும், நண்பர்களுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன்
உங்கள் இராகவன்.


110 comments:

நட்புடன் ஜமால் said...

நட்பு

சிறந்த பூ

நட்புடன் ஜமால் said...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...\\

புரிந்து கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.
\\

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன். \\

அற்புத வரிகள்
அற்புதம் செய்யும் நட்பிற்கு
அற்புதமான பதிவு

அ.மு.செய்யது said...

//நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள்.//

முற்றிலும் உண்மை !!!!!

அ.மு.செய்யது said...

//நைஜிரியா மட்டுமல்ல, எனக்கு இதுவரை கிடைத்த வேலைகள் அனைத்திற்க்கும் , இன்றைய நல்வாழ்விற்கும் காரணம் எனக்கு கிடைத்த நட்புகள்தான்.
//

அந்த நட்பு வட்டாரத்தில் நானும் ஒரு புள்ளியாக இருக்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

அப்பாவி முரு said...

நீண்ட நாட்களுக்குப்பின் வந்த பதிவானாலும், தரமான பதிவு.

வாழ்த்துக்கள் அண்ணே...

நட்புடன் ஜமால் said...

25ஆம் பதிவுக்கு

வாழ்த்துகள் அண்ணே!

குடுகுடுப்பை said...

எனக்கும் அப்படியே.நட்புதான் வேலை வாங்கிகொடுத்தது.

கோவி.கண்ணன் said...

//Labels: கும்மி இல்லை, நட்பு //

மெடிசன் சாப்பிடும் போது மங்கியை நினைக்காதேன்னு சொல்வதாக
:)

ச.பிரேம்குமார் said...

//முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு./

எனக்கும் மிக விருப்பமான குறள் இது. பகிர்ந்தமைக்கு நன்றி :)

Raju said...

அருமையான பதிவு அண்ணே...
ரஜினி படம் நடிக்கிற மாதிரி பதிவு போட்டாலும்...சும்மா சிவாஜி மாதிரி இல்ல கலக்குறீங்க!
அடுத்த "எந்திரன்" எப்போ?

நட்புடன் ஜமால் said...

\\கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு\\

நான் போற்றும் நட்பு.

Thangavel Manickam said...

நட்பு - மனித குலத்தினரின் வரம். நட்பை பற்றிய உங்களின் பதிவு அருமையோ அருமை.

Rajeswari said...

நட்பை பற்றிய கவிதைகளுக்கு கொடுத்த லின்க் சூப்பர்...

சிறு வயதில் என் தந்தை என்னிடம் கூறிய வார்த்தைகள் சில..

“நட்பு உப்பை போல ..
குறைந்தாலும்,கூடினாலும்
வாழ்வெனும் உணவு
சுவை படாது..”

பாலா said...

nalla payanulla pathivu

nanri raghavan anna

அண்ணன் வணங்காமுடி said...

நட்பே சிறந்தது

Vidhya Chandrasekaran said...

:)

Anonymous said...

எனக்கு பிடிச்சது தளபதி படத்துல வர்ற சூர்யா - தேவா நட்பு தானுங்க அண்ணே...
இஃகி இஃகி ...

புதியவன் said...

நட்பென்னும்
பூக்களை வைத்து
சரம் தொடுத்தது போல் உள்ளது...

அருமையான பதிவு...

Anonymous said...

இங்கு நளினமாய் தெரிவது நட்பு மட்டுமல்ல நன்றியும் கூடத்தான்.

நட்புக்கு நல்ல உதாரணங்கள் அன்று முதல் இன்று வரை.

நட்பும் நன்றியும் உள்ளவரை

நல்லவரும் நல்லதும் வாழும்.

வாழ்த்துகள்.

அறிவிலி said...

//Labels: கும்மி இல்லை, நட்பு //

464 லேர்ந்து மீண்டு வர இவ்ளோ நாளா?

அப்போ 10411 எப்போ அடுத்த பதிவு போடுவார்?

coolzkarthi said...

நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்...

coolzkarthi said...

நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு
உன் கவலைகள்...

coolzkarthi said...

A good friend is one who will not let u to do wrong things,....
|


|


|

|

|

alone............

அப்துல்மாலிக் said...

நட்புக்கு வானமே எல்லை என்பதை சும்மாவா சொன்னாங்க‌

அப்துல்மாலிக் said...

நட்பை பற்றி அழகான விளக்கங்கள் தல‌

ம்ம் நல்ல பதிவு
அதுலே எனக்கும் ஒரு இடம் என்பது நினைத்து சந்தோஷம்

அப்துல்மாலிக் said...

//நட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
//

சிறப்பான விளக்கம், நட்பின் மற்றுமொறு அகராதி நீங்க‌

அப்துல்மாலிக் said...

//நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். பல சமயங்களில் நட்பு மிக உதவியாக இருக்கின்றது//

முற்றிலும் உண்மை

அப்துல்மாலிக் said...

//எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்//

உறவினர்களை விட நட்பு மேலானது

அப்துல்மாலிக் said...

//எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.
//

ஆமாம் செருப்பை தேவையான இடத்துலே மட்டும்தான் பயன்படுத்துவோம், ஆனால் கால்கள், அருமையா சொன்னீங்கண்ணா

RAMYA said...

இப்போது உள்ளேன் அப்புறம் வாரேன் !!

அப்துல்மாலிக் said...

//நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.//

தத்துவ களஞ்சியம்

குடந்தை அன்புமணி said...

//நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான். ஆனால் நல்ல நட்பில், தவறு / தப்பு செய்யும் போது இடித்துரைக்க தவறக் கூடாது.//

உண்மையோ உண்மை!

நட்புடன் ஜமால் said...

\\ coolzkarthi said...

நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு
உன் கவலைகள்...\\

அருமை.

gayathri said...

நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான்

mmmmmmmmmm sariya solli irukenga anna

ஆ.ஞானசேகரன் said...

நட்பை மதிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்...

ஆ.ஞானசேகரன் said...

//தங்களது கோட்பாடுகளால் வேறு பட்டு இருந்தாலும், நட்பில் என்னை நெகிழ வைத்தவர்கள் , மூதறிஞர் ராஜாஜிஅவர்களும், தந்தை பெரியார் அவர்களும்.//

நல்ல உதாரணம் போல இருக்கு

மணிஜி said...

தனக்கு நல்லது என்றில்லாமல்
உனக்கு இது நல்லது..
என்று எடுத்துரைக்கும் நட்பு
அபூர்வம்தான்...ஆனால்
அது எல்லோருக்கும் நிச்சயம்
வாய்க்கும் என்பதே உண்மை

sakthi said...

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன். \\

arputham

sakthi said...

நீண்ட நாட்களுக்குப்பின் வந்த பதிவானாலும், தரமான பதிவு.

nijam

S.A. நவாஸுதீன் said...

நட்புக்காக ஒரு நல்ல பதிவு.

Friends, you and me...
You brought another friend...
And then there were 3...
We started our group...
Our circle of friends...
And like that circle...
There is no beginning or end...

S.A. நவாஸுதீன் said...

தலைப்பே முழுவதையும் சொல்லிவிட்டது நண்பரே

Suresh said...

//நட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
//

அருமை தோழரே

coolzkarthi said...

உங்களை அண்ணே என்று கூப்பிடுபவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ......

அப்பாவி முரு said...

//அதனைக் கண்ட துரியோதனன் நண்பன் மேல் எவ்விதச் சநதேகமும் இன்றி "எடுக்கவோ கோக்கவோ" என்றானர். தன்னுடைய மனைவியை மாற்றான் ஒருவன் தொட்டு விட்டானே, என்று கோபம் கொள்ளாமலும், அவளை சந்தேகப்படவும் இல்லை துரியோதன்//

அந்த இடத்தில், துரியாதனனுக்கு தன் மனைவியின் மேலிருந்த அளவிட முடியாத நம்பிக்கையை காட்டுமிடம்.

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகள் கூட வாழ்க்கை தரும்

அந்த வார்த்தை நட்ப்பால் மட்டுமே முடியும்

(நண்பனால் மட்டும் அல்ல - நட்ப்பால்)

அப்பாவி முரு said...

//அதனைக் கண்ட துரியோதனன் நண்பன் மேல் எவ்விதச் சநதேகமும் இன்றி "எடுக்கவோ கோக்கவோ" என்றானர். தன்னுடைய மனைவியை மாற்றான் ஒருவன் தொட்டு விட்டானே, என்று கோபம் கொள்ளாமலும், அவளை சந்தேகப்படவும் இல்லை துரியோதன்//

துரியோதனன் கர்ணனை வாழ்நாள் அடிமையாக்கிய இடம்.

நட்புடன் ஜமால் said...

நண்பன் என்பவன்

நமக்கு கண்ணாடி போல்

நமது அழுக்கையும், அழகையும் காட்டும்.

அப்பாவி முரு said...

//தங்களது கோட்பாடுகளால் வேறு பட்டு இருந்தாலும், நட்பில் என்னை நெகிழ வைத்தவர்கள் , மூதறிஞர் ராஜாஜிஅவர்களும், தந்தை பெரியார் அவர்களும்//

நல்ல ஒப்பு நோக்கு., வரலாற்றில் நடந்ததை கதையின் வாயிலாக அறிந்து கொண்டதை நம்புவதைவிட., இருதுருவங்களுக்கிடையே இருந்த இந்த ஆழமான் நட்பு...

மறுப்பீடில்லாத்து..

அப்பாவி முரு said...

//உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு//

இந்த குறளை, நேற்றிரவுதான் நினைவு கொண்டேன், இன்று அண்ணனில் பதிவில்.

வெகுவிலைவில் பயன்படுத்துவேன் என் பதிவில்.

நட்புடன் ஜமால் said...

சற்றே ஆங்கிலம்

Friendship is not a word

but a

wor(L)d with Love.

தேவன் மாயம் said...

நட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்////

நல்லா சொல்லியிருக்கீங்க!!

தேவன் மாயம் said...

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன். \\

தோழர்களின் தோள்களாலேயே அன்பு இதயங்கள் பல ஆறுதல் அடைகின்றன!

நட்புடன் ஜமால் said...

நட்பில் மிக(ப்)பெரிய உதவியே
உபத்திரவம் கொடுக்காம இருப்பதுதான்.

அமுதா said...

/*"நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை"*/
அர்த்தமுள்ள தலைப்பு

/*நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...*/
நட்பின் சிறப்பு...

/*நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்*/
நல்ல நட்பு

வேத்தியன் said...

ரொம்ப நல்ல பதிவு நண்பரே...

ஒருவனுடைய நண்பர்களை வைத்து அவனுடைய குணத்தை தீர்மானிக்கலாம்ன்னும் சொல்லுவாங்க...
அந்தளவுக்கு நல்ல நட்பும் நல்ல நண்பர்களும் முக்கியம்...

S.A. நவாஸுதீன் said...

உன் நண்பர்களைப்பற்றிச் சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன். சும்மாவா சொன்னாங்க

Anu said...

Natpu patri roampa alaha sollierukinga anna..

superb

Anu said...

நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்*/
enakku intha lines roampa pidicheruku

Mahesh said...

ரொம்ப நெகிழ்வான பதிவு... அண்ணே :)))))))))))))

அப்துல்மாலிக் said...

Friendship is NOT a Word.. But Its a Sentence....
அடிக்கடி என் நண்பன் சொல்லுவான் இதை

biskothupayal said...

நட்பின் மேல் நடக்கவைக்கவில்லை!

மிதக்க வைத்துவிட்டிர்கள்

biskothupayal said...

நட்பின் மேல் நடக்கவைக்கவில்லை!

மிதக்க வைத்துவிட்டிர்கள்

சி தயாளன் said...

துரியோதனன்..கர்ணன்..நட்பு...துரியோதனனுக்கு யுத்தத்தில் அருச்சுனனை வெல்ல கர்ணன் தேவைப்பட்டது...என்பதால்

தமிழ் அமுதன் said...

நட்பிற்கு கிரீடம் சூட்டும் அழகிய படைப்பு!

துரியோதனன் நட்பை கூறிய விதம் அருமை!

http://urupudaathathu.blogspot.com/ said...

Good Post BRO

http://urupudaathathu.blogspot.com/ said...

//"நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை"////

கும்மி என்பது வார்த்தையல்ல நட்பு !!!!1

http://urupudaathathu.blogspot.com/ said...

/// Labels: கும்மி இல்லை, நட்பு ///கும்மி என்பது வார்த்தையல்ல நட்பு !!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான பதிவுண்ணே

வெற்றி-[க்]-கதிரவன் said...

அண்ணாத்த என்னா மேட்டர,, இன்னமா சொல்லிகின...

புரிந்து கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு

இது தூக்கலு..

அடுத்த பதிவுல உங்க கவிதைய கொஞ்சம் எடுத்துவிடுங்க....

தத்துபித்து said...

அண்ணே கர்ணன் படம் பார்த்துட்டு போட்ட பதிவா?

பாசமலர் எப்பணே?

பழமைபேசி said...

மீண்டும் ஒருதடவை படிக்கணும்!

malar said...

எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.


நல்ல வரிகள் நண்பரே

கடைக்குட்டி said...

//எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்//

எனக்குப் பிடித்திருந்தது!!!

ஆதவா said...

இருபத்தி ஐந்தாம் பதிவுக்கு வாழ்த்துக்கள் இராகவன் அவர்களே!!!

அருமையான தலைப்போடு எழுதியிருக்கிறீர்கள்!! வரண்டு போகும் வாழ்க்கைக்கெல்லாம் நட்பு மட்டுமே நீராக இருக்கிறது! நட்பு மட்டும் இல்லையேல் ஆதவா என்றோ ஆகாதவா ஆயிருப்பான்!!!

நட்பு கவிதைகள் எனும் தலைப்பில் ஒரு தளத்தில் நான் பலரையும் எழுத வைத்தேன்... அதில் எனது முதல் கவிதை :

உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?


இது ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் கிறுக்கி வைத்தது!!

புரிந்துக கொண்டவர்களுக்குள்

மட்டுமே

புரிந்து கொள்ளப்படுகிற

விசித்திரமான

மொழிப்பரிமாற்றம்தான்

நட்பு.


அழகான கவிதை!! புரிந்துணர்வு என்பது நட்பு மற்றும் காதலின் அடிப்பாகத்தில் அழுந்தி நிற்கிறது. புரிதல் என்று கலைந்து போகிறதோ அன்றிலிருந்து விரிசல் உருவாகிறது! நட்புக்கு உரிமைகள் அதிகம்.. வலிமையும் தான்!

நல்ல பதிவு!! பிடித்திருந்தது!!

RAMYA said...

//
நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை
//

தலைப்பே அசத்தல்!!

RAMYA said...

//
நட்பு, தோழமை என்பது இருவர் வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
//

அருமை மிகசரியாச் சொன்னீங்க !!
அனைத்தையும் தாண்டியது தான் நட்பு!

RAMYA said...

//
உயிர் காப்பான் தோழன் என்பார்கள். பல சமயங்களில் நட்பு மிக உதவியாக இருக்கின்றது. நான் நைஜிரியா வரக் காரணமாயிருந்ததே நட்புதான்.
//

நட்பு எத்துனை உதவிகள் வேண்டுமானாலும் செய்யுமே !!

RAMYA said...

//
அவர் சீனாவைச் சேர்ந்தவர். நைஜிரியா மட்டுமல்ல, எனக்கு இதுவரை கிடைத்த வேலைகள் அனைத்திற்க்கும் , இன்றைய நல்வாழ்விற்கும் காரணம் எனக்கு கிடைத்த நட்புகள்தான்.
//

நன்றி சீனா பாஸ், உங்களால் தான் இவ்வளவு அருமையான,
ராகவன் அண்ணா நைஜீரியா ராகவன் அண்ணாவா எங்களுக்கு
கிடைத்திருக்கின்றார்.

RAMYA said...

//
நட்பில் நான் உயர்ந்ததாக கருதுவது, கர்ணன், துரியோதனன் நட்பை. கர்ணன் துரியோதனுடன் கொண்ட நட்பை செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லலாம். ஆனால், துரியோதனன் அப்படி அல்ல.
//

அவர்களின் நட்பு எனக்கு கூட மிகவும் பிடித்த உவமானம்!!

RAMYA said...

//
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு இன்றும் போற்றப் படவேண்டிய நட்பு. மனதை நெகிழ வைக்கும் நட்பு. முன் பின் காணாமல் கொண்ட உயிர் நட்பு. நண்பர் உயிர்விட்ட போது அவரோடு தாமும் உயிர் விட்ட ஓர் உன்னதமான நட்பு.
//

இதுவும் அருமையான சரித்திர நட்பின் நினைவு கூர்தல்.

அருமை நினைக்கிலேயே மனதெல்லாம் பரவசம் ஆகிவிடுகின்றது.

நான் அனுபவித்து ரசித்த நட்புகளில் இவர்களது நட்பும் ஒன்று
உயிர் நீத்து சரித்த்திரம் படைத்த நட்பல்லவா??

RAMYA said...

//
நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான். ஆனால் நல்ல நட்பில், தவறு / தப்பு செய்யும் போது இடித்துரைக்க தவறக் கூடாது
//

இதுவும் நட்பின் இலக்கணத்தில் ஒன்றுதான்!!

RAMYA said...

//
இதற்காகத்தான் அய்யன் வள்ளுவர் நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல் என்ற 4 அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதினார் போலிருக்கு .
//

அருமையான அராயிச்சி அண்ணா
நன்றி பகிர்தல்களுக்கு !!

RAMYA said...

//
சிறு வயதில் படித்தது..

எங்கிருந்தாலும்
என் நினைவுகளை
நீ
மறக்க முடியாது,
ஏன் என்றால்
நான்
உன்
கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்.
//

அருமை அருமை!!

RAMYA said...

//
நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.
//

அருமை யார் சொல்லி இருந்தாலும்
அவர்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.

அருமையா உணர்ந்து எழுதி இருக்கின்றார்கள் !!

RAMYA said...

அருமையான பதிவு, நல்ல மன நிறைவோடு சொல்கின்றேன்
தலைப்பு சூப்பர், விவரங்களும் சூப்பர்.

மறுபடியும் கூறுகின்றேன் மிக நல்ல பதிவு!!

நசரேயன் said...

நல்லா இருக்கு அண்ணா ..
வலைப்பூ நட்பு

CA Venkatesh Krishnan said...

தலைப்பும் பதிவும் உண்மை சார்.

நான் கூட நட்புக் கோட்டைன்னு ஒரு பதிவு போட்டிருக்கேனே!

நட்புன்ற ஒரு உறவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக நாம் வெற்றியடையமுடியும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது.

pudugaithendral said...

நட்பின் பெருமையை அழகாகச்சொன்னதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Suresh said...

அருமை இராகவன்,

உங்களை நிறைய பதிவில் பார்ப்பேன் நானும் உங்க அன்புக்கு அடிமை..

நேரம் இருந்தால் சக்கரை கடை பக்கம் வாங்க

நிஜமா நல்லவன் said...

அண்ணே....25-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/ புதுகைத் தென்றல் said...

நட்பின் பெருமையை அழகாகச்சொன்னதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்/

ரிப்பீட்டேய்....!

Suresh said...

கையும் ஓடல காலும் ஓடல நன்பா ரொம்ப ரொம்ப நன்றி என் கடை வருகைக்கு ... :-0 ரொம்ப சந்தோசமா இருக்கேன் .. அடிக்க்டி உங்கள் கையெழுத்து :-) இது மாதிரி வேணும் ரொமப் ரொம்ப நன்றி தல

*இயற்கை ராஜி* said...

ந‌ல்ல‌ ப‌திவு:-)

ஹேமா said...

நட்பை இவ்வளவு போற்றும் உங்களின் நட்புக் கிடைத்தவர்கள் உண்மையில் அதிஷ்டசாலிகள்.நல்ல மனிதன் நீங்கள் இராகவன்.

சுரேஷ் - ஆப்ரிக்காவில் ஒரு தமிழன் ! said...

nice
welcome to another blogger from nigeria

வால்பையன் said...

நட்புக்காக உங்கள் வலைப்பூவிலேயே ஒரு வலைச்சரம் தொடுத்து விட்டீர்களே!

Unknown said...

ஆஹா.....!! நெம்ப அருமையான பதிவுங்கோ தம்பி.......!!! நட்புக்கான இலக்கணத்த சொல்லீருக்குறீங்க .....!!! வாழ்த்துக்கள்....!!!


" நட்பு.....

தோல்கொடுக்கும் சிரிப்பு மத்தாப்பு....."

மகேஷ் : ரசிகன் said...

அருமையான தொகுப்பு... :)

सुREஷ் कुMAர் said...

99.. padichuttu vaaren..

सुREஷ் कुMAர் said...

sabaa.. motho motholaa இராகவன் annaththa pathivula yennoda
100..
100..
100..
100..
100..

Rajeswari said...

ராகவன் அண்ணாவுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் இப்புத்தாண்டில் நிறைவேறிட இறைவனை பிரார்த்திக்கிறேன்...(தங்களது மெயில் ஐடி தெரியவில்லை.ஆதலால் கமெண்ட்டாக போட்டுவிட்டேன்)

सुREஷ் कुMAர் said...

நட்பை பத்தின உங்களின் இந்த பதிவால் ஒருபாக்கெட் கொசுவத்தி சுருள் தீந்துருச்சு.. சுருள அவ்ளோ சுத்திட்டேன்.. செம பதிவு..

Poornima Saravana kumar said...

நல்ல பதிவுண்ணா:))

Poornima Saravana kumar said...

நல்ல நண்பர்கள் அமைவதுகூட ஒரு வரம் தான்!

vasu balaji said...

நட் பூ. மிக அருமை. நன்றி.

சாரதி said...

//எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்..///

உண்மைதான்...
நட்பு மட்டும்
இல்லையென்றால்
நமக்கு நட்டு கழண்டு போயிடும்..

ரகளை தான் போங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

நடப்பு உலகம் நட்ப்பினாலே நடக்கிறது

தங்க முகுந்தன் said...

அன்பு இராகவனுக்கு!

வாழ்த்துக்கள்!

எனது கிருத்தியம் வலைப்பதிவைத் தொடங்கிய போது எழுதப்பட்ட 3 கட்டுரைகளுள் நான் 1985ல் எழுதிய குறிப்பையும் சேர்த்திருந்தேன்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்!!
அதெப்படி இருவருடைய எண்ணங்களிலும் ஒரே மாதிரியான நட்பைப் பற்றிய குறிப்புகள் தென்பட்டது என்று!
முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் நட்பை எதிர்பார்த்திருக்கும்
என்றும் மறவாதவன்

அன்புடன் மலிக்கா said...

புரிந்துக கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.

நட்பை புரிந்தவர்கள் நல்லமனிதர்கள்
அருமையான வரிகள் பாராட்டுக்கள்

shibly sri lankan said...

(நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்)
இது எனது பார்வையில் நட்பு.
ur words very nice friend