எல்லோருக்கும் கம்பெனில வேல செய்ய ஓவர் டைம் கொடுப்பாங்க.. நம்ம விஷயம் வேற மாதிரிங்க.. நம்ம மேலதிகாரிக்கு நம்ம பிடிச்சு போச்சுங்களா.. அவர் நான் லீவுல போகும் போது, இந்தியாவில் இருந்து திரும்பி வரும் போது டிரைவிங் லைசன்ஸ் கூடத்தான் வர வேண்டும் என கண்டிச்சு சொல்லி அனுப்புனாருங்க.. நாமும் மடிப்பாக்கத்தில இருக்கிற XXX டிரைவிங் ஸ்கூல் போய் அந்த டிரைவிங் ஸ்கூல் முதலாளியைப்பார்த்து பணத்தையும் கட்டியாச்சுங்க.. பேருக்கு டிரைவிங்கும் கத்துகிட்டு..லைசென்ஸ்ம் வாங்கியாச்சுங்க..
சைனா போய் நம்ம தலைவர்கிட்ட லைசன்ஸ் வாங்கியாச்சு அப்படின்னு காண்பிக்க அவரும் அவருடைய நிசான் கார கொடுத்து (நாம கத்துகிட்டது மாருதிங்க) ஓட்டு அப்படின்னாரு..
முதல்ல வண்டியில சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணி, கிளட்ச அமுக்கி, முதல் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரில் கால வச்சதுதாங்க தாமசம், அவரு பயந்து போய், stop, stop அப்படின்னு கத்தினாருங்க.. (ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )
முதல்ல நல்லா வண்டி ஓட்ட கத்துக்க.. அப்புறமா இங்க லைசன்ஸ் வாங்கலாம் அப்படின்னு சொல்லிட்டாருங்க..
அதுக்காகத்தான் 1 மாசத்துக்கு தினமும் 1 மணி நேரம் ஓவர் டைம் கொடுத்து அவர் வண்டியையும் கொடுத்து கம்பெனி யார்ட்ல (அங்கதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல யாரும் இருக்க மாட்டார்கள்) ஓட்ட பழகிக்கொடுத்தாருங்க.. இதுதாங்க வண்டி ஒட்ட கத்துக்க ஓவர் டைம் வாங்கின விஷயம்..
நம்ம ஊர்ல இடது ப்க்கம் ஓட்டணுமிங்க.. சைனாவில் வலது பக்கம் ஓட்டணுமிங்க.. நம்ம நண்பர் ஒருத்தர் எப்போதும் கூட வருகின்றவர், வலது பக்கம் ஓட்டு அப்படின்னு ஞாபகப்படுத்திக்கிட்டே வருவாருங்க. அவர் வேலையை ராஜினாமா பண்ணிகிட்டு போய்டாருங்க. அவரு இருந்த வரைக்கும் எல்லாம் சரியா போய்கிட்டு இருந்தது.
3 வருஷம் நல்லாதான் வண்டிய ஓட்டிகிட்டு இருந்தோமுங்க.
2000 வருஷத்தில 3 வாரம் லீவுல நம்ம ஊருக்கு வந்திட்டு திரும்பி போனேங்க..
ஒரு நாள் நானும் என்னுடைய செகரட்டரியும் டாக்ஸ் ஆபீஸிக்கு போய்ட்டு திரும்பி வந்திகிட்டு இருக்கும் போது, இந்தியாவில் ஓட்டுகின்ற ஞாபகத்தில் இடது பக்கம் வந்துட்டேங்க.. நேரா ஒரு வண்டி வருதுங்க... நம்ம ஊர் ஆம்னி டைப் வண்டிங்க அது... நாம அன்னிக்கு ஓட்டிகிட்டு இருந்தது சாண்ட்ரோ டைப் வண்டிங்க.. அப்ப கூட மனசுல தோணலங்க பிரேக் போடணும்னு.. மனசுகுள்ள ஒரு நினைப்பு, இந்த ஆள் ஏன் ராங் சைடுல வரான் அப்ப்டின்னு.. நேரே கொண்டு போய்... டமால்.. இரண்டு நிமிஷம் ஒன்னும் புரியலங்க...
முன்னாடி வந்த காரின் முன்பக்க கண்ணாடி (windshield) சினாமாவில காண்பிக்கற மாதிரி பறந்து போச்சுங்க.. அந்த வண்டியின் ஓட்டுனருக்கு தலையில் சிறு காயம்ங்க..
நம்ம செகரெட்டரிக்கு தோள்பட்டை மூட்டு நழுவிடுச்சுங்க..
நமக்குங்க, முட்டில சரியான அடிங்க, சீட் பெல்ட் போட்டதால தப்பிச்சுட்டேங்க.. நம்ம வண்டிக்குங்க சரியான அடிங்க.. முன் பானட், கண்ணாடி எல்லாம் நொருங்கி போச்சுங்க..
இதில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்தும் தப்பிச்சோமுங்க், நான் வண்டி ஓட்டிகிட்டு போனது ஆற்றின் கரை மேலங்க.. வண்டிக்கு இடது பக்கம் ஆறு ஓடிட்டு இருக்குதுங்க.. தப்பித்தவறி ஆறுல விழுந்திருந்தா, 20 அடி ஆழம் வேறங்க..
இதனால், இப்பொதெல்லாம் வண்டி ஓட்டும் போது பலதடவை சொல்லிக்கிறது என்ன அப்ப்டின்னாங்க.. இந்த ஊர்ல வலது பக்கம் ஓட்டணும், கூட வரவங்கிட்ட ஒரு தடவை நான் இடது பக்கம் போனா உடனே சரி பண்ணுங்க அப்படின்னு சொல்லிப்புடறதுதானுங்கோ..
மேலும் சீட் பெல்ட் போடம வண்டி ஓட்டுறதில்லைங்கோ.. வேற யார் ஓட்டினாலும் சீட் பெல்ட் போடம உட்காரவதில்ங்க.. நம்ம ஊர்ல வண்டி ஓட்டும்போது கூட சீட் பெல்ட் போடமா போறதில்லைங்க.. நம்ம ஊர்ல நிறைய நண்பர்கள் இதுக்காக நம்மல கிண்டல் பண்ணுவாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லைங்கோ.. நம்ம உசுரு நமக்கு முக்கியம்.. என்ன நான் சொல்றது சரிதானுங்க..
வண்டி ஓட்டும் போது வேறு சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கறதுலீங்க..
என்னங்க.. இது உங்களுக்கு பிடிச்சா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்... அப்படியே தமிலிழில் போய் உங்க பொன்னான வாக்குகளையும் பதிவு செஞ்சுடுங்க