Sunday, August 30, 2009

பாசப் பறவைகள் - பாகம் 4

ஜுன் 25, 2009

மாலை நேரம் அண்ணன் கேபிளாரை அழைத்தேன். அண்ணன் அப்போ ரொம்ப பிசியா கொடைக்கானலில் டிஸ்கஷனில் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவேன் என்றும் பின்னர் அழைப்பதாகவும் சொன்னார். சற்று நேரத்திற்கெல்லாம் அண்ணன் தண்டோரா அழைத்தார். நலம் விசாரித்தார். ஜூன் 29, 2009 அன்று பதிவர் சந்திப்பு நடேசன் பூங்காவில் இருப்பதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் அழைத்தார். அதற்கு முன்பாக சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நிச்சயம் சந்திக்கலாம் என்று கூறி கேபிள் அண்ணனும் வந்துவிடட்டும் என்றும் கூறினேன்.

அன்று மாலையே அண்ணன் இலக்கியா குடந்தை அன்புமணி அவர்களையும் அழைத்து இருந்தேன். அவர் நிச்சயம் மறு நாள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.

ஜூன் 26, 2009

அண்ணன் இலக்கியா அன்பு மணி மாலை 6.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அவர் கூட பல விசயங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். குறிப்பாக குடந்தை யில் வாழ்ந்த நாட்களைப் பற்றியும், ஊரைப்பற்றியும், துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும் பேசினோம். நான் பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார். பதிவர் சந்திப்பில் அண்ணன் உண்மைத் தமிழன் வருவார் என எதிர்பார்த்து இருப்பதாகவும், அவர் வந்தால் அவரிடம் சில கேள்விகள் (முக்கியமாக கவிதை என்று சொல்லி ஒரு இடுகைப் போட்டாரே அதைப் பற்றி - அதைப் படிக்க இங்க சொடுக்கவும்) கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அதை அண்ணன் இலக்கியா ஒரு பதிவாகவே போட்டுவிட (அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்), அண்ணன் உண்மைத் தமிழன் பதிவர் சந்திப்பில் இருந்து அப்ஸ்காண்ட்.

பெ....ரி...ய பதிவாக எழுதி தள்ளிய அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள், நேற்று மட்டும் கிட்டதட்ட 16 இடுகைகள் எழுதி டரியலாக்கிவிட்டார். அண்ணே மத்தவங்க பதிவையும் நாங்க எல்லாம் படிக்கணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் போடுங்கண்ணே... தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போடணும், பின்னூட்டம் போடணும், நாங்களும் இடுகை எழுதணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க...

நண்பர் இலக்கியா அவர்களை அழைத்தது ஞாபகம் இல்லாமல் எனது நண்பர் மணி அவர்களுடன் இரவு உணவுக்காக வெளியில் செல்வதாக சொல்லிவிட்டேன். அதனால் அவர்களை பார்த்து பின்னர் இரவு உணவுக்கு அவருடன் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் இருவரும் கிளம்பி நண்பர் மணி அவர்களைப் பார்க்க போனோம்.

பின்னர் அண்ணன் குடந்தை அன்புமணி, அவர்கள் DMS அருகில் இறங்கி, வேறு சென்றார்.

ஜூன் 27, 2009.

அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்திக்கலாம் என்று அண்ணன் கேபிளாருக்கு தொலைப்பேசினேன். அவரும் அண்ணே சைதாப்பேட்டை வந்திடுங்க அண்ணன் தண்டோரா அலுவகத்தில் சந்திக்கலாம் என்றும் சொன்னார்.

சரி என்று சைதாப்பேட்டைக்கு வந்து அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் சந்திக்கப் போனப்போது அங்கு அண்ணன் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா அவர்கள் இருந்தார்.

மிக்க சந்தோஷமாக இருந்தது. முதன் முதலாக இவர்களைப் பார்த்தப் போதும், அது முதல் சந்திப்பு மாதிரியே இல்லை. நெடு நாள் பழகிய நட்பு மாதிரி இருந்தது. அண்ணன்கள் கேபிளாரும், தண்டோராவும் வாங்கிக் கொடுத்த சாத்துக்குடி ஜூசுக்கு ஒரு பெரிய “”. அன்று பல் மருத்துவர் அவர்களின் அப்பாயின்மெண்ட் இருந்ததால், நெடு நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியவில்லை.

இதற்கு பிறகு இரண்டு / மூன்று முறை அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்தித்தேன்.

அண்ணன் ச்சின்னப்பையன் அவர்கள் இந்தியா வந்தபோது அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் வைத்து சந்தித்தோம்.

அண்ணன் கேபிளாரிடம், ஒரு விடியோ காசெட் சரியில்லை எனவும், அதை டிவிடி யாக மாற்ற உதவிச் செய்ய இயலுமா என்றுக் கேட்டேன். அண்ணன் கேபிளார் தன்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னை ரிச்சி தெருவில் உள்ள பல கடைகளில் ஏறி இறங்கி, கடைசியாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டாலின்ஸ் என்ற இடத்தில் கொடுத்து அதை டிவிடியாக மாற்றிக் கொடுத்தார். விடியோ காசெட் மாற்றுவதில் என்ன கஷ்டம் என்று நீங்க நினைப்பது எனக்குப் புரிகின்றது. அது Sony Hi8 காசெட். அந்த காசெட் சரியாக வேலைச் செய்யாமல், எங்கேயோ சிக்கிக் கொண்டு, விடியோ காமில் போட்டால் ஓடவேயில்லை. அதை நானும் எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. அந்த காசெட்டில் அப்படி என்னதான் இருக்கு என்றால், என் மகன் அரவிந்த் சிறுவனாக இருந்த போது அடித்த லூட்டிகள், நடந்தது, ஓடியது எல்லாம் அந்த காசெட்டில்தான் இருந்தது. இந்த உதவி செய்த அண்ணன் கேபிளாருக்கு நன்றிகள் பல. உண்மையாகச் சொல்லுகின்றேன் அன்று அவர் எனக்காக அலைந்ததும், நண்பர்கள் பலரை அழைத்து தொலைப் பேசியதும், பின்னர் ஏக்னாத் போய் முயற்சி செய்த்தும் மறக்க இயலாதது. நன்றி கேபிள்அண்ணே... கேபிள் அண்ணன் கிட்ட கேளுங்க, நிச்சயம் சரி செஞ்சு கொடுப்பார் என்று சொன்ன புதுகை அப்துல்லா அண்ணனுக்கும் நன்றி.


அண்ணன் கேபிளாரும், அண்ணன் தண்டோராவும் நான் நைஜிரியா திரும்பும் முன் என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அப்போது இணைய நண்பர்களுக்காக பதிவர் ஸ்ரீ... அவர்களும் வந்து இருந்தார்.

அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களும் வீட்டிற்கு வந்து இருந்தார். மகன் அரவிந்து கூட அவரின் படமும் .. அரவிந்து கூட அப்துல்லா அண்ணன் பேசிகிட்டு இருந்தார். என் கூட பேசியவை ரொம்ப குறைவு. அவர்கள் இருவரும் பேசியதை நம் இடுகையில் போடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அதைப் பற்றி எதுவும் இந்த இடுகையில் கிடையாது. (உண்மையைச் சொல்லப் போனால் இருவரும் என்னைப் பேசவே விடவில்லை..)

அண்ணன் கேபிளார் அவர்களை படம் எதுவும் எடுக்கவில்லை. எப்போதும் மனதிலேயே இருப்பதால் படங்கள் எடுக்கவில்லை.


அண்ணன் புதுகை அப்துல்லா, அரவிந்த்..அண்ணன் தண்டோரா (இந்த படம் எடுத்தது அண்ணன் கேபிளார்)இணைய நண்பர்களுக்காக .... ஸ்ரீ.. (இந்தப் படம் எடுத்ததும் அண்ணன் கேபிளார்தான்...)


அடுத்து

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் மதுரைப் பதிவர்கள சந்திப்பு பற்றி...

தொடரும்

Sunday, August 23, 2009

சிறப்புப் பள்ளி - நன்றி துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு

இந்தியாவிலேயே முதன் முதலாக தசை திறன் குறைபாடு (மஸ்குலர் டிஸ்ட்ரோபி) உள்ள குழந்தகளுக்கான ப்ள்ளி சென்னையில் துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் ரூ. 14.50 லட்சம் செலவில் 5 வகுப்பறைகளுடன் தேவையான வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பள்ளி, ஆயிரம்விளக்கு மாதிரி பள்ளித் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தினுள் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வாய் பேசாதோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குறைந்தோர் போன்றோருக்கெல்லாம் தனிப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆனால் தசைத் திறன் குறைந்தோர்க்கு தனிப் பள்ளி இல்லை. இவர்களுக்காக பிரத்தியேக அமைப்புகளுடன், தேவையான வசதிகளுடன் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு முதல் +2 வரை வகுப்புகள் நடத்தப் படும் என்றும், இதுவரை 28 பேர் சேர விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தசைக் குறைபாடு உடைய குழைந்தகளுக்கு, குறைகளைப் போக்கக்கூடிய பயிற்சி அளிப்பதோடு, கல்விப் பயிற்ச்சியும் அளிக்க்கப் படும் என்றும் கூறினார். இந்த மாதிரி குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு சிறப்புப் பேருந்தும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

தசை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் கஷ்டம் என்ன என்பது என் போன்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.

பள்ளியில் இடம் கிடைத்தாலும், மற்ற குழந்தைகள் செய்கின்ற கிண்டல்களை அவர்களால் தாங்க இயலாமல் போகின்றது.

ஒரு சில ஆசிரியர்கள் (சில ஆசிரியர்கள் மட்டும்), இவர்களை எப்படி நடத்தவேண்டும், எப்படி பழக வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லாமல் நடக்கும் போது நம் மனம் உடைந்து போய்விடும்.

அது மாதிரி இருக்கும் பெற்றோர்களுக்காக, அவர்கள் கஷ்டம் புரிந்து, அதற்காக ஒரு தனிப்பள்ளி திறந்த துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், சென்னை மேயர் திரு. சுப்ரமணியன் அவர்களுக்கும், என் போன்ற எண்ணற்ற பெற்றோர்கள் சார்பாக

கோடானு கோடி

நன்றி
நன்றி
நன்றி

நன்றி - தினமலர் நாளிதழ்.

விகடனாருக்கு என்னாச்சு...நேற்று முதல் விகடன் வெப் சைட் திறக்க இயலவில்லை. முதலில் கூகுள் குரோமில் மட்டும் தான் இந்த ப்ராப்ளம் இருந்தது. இப்போது ஃபயர் பாக்ஸிலும் வந்துவிட்டது.

கிடைத்த மெசெஜ்...

// Reported Attack Site!
This web site at vikatan.com has been reported as an attack site and has been blocked based on your security preferences.

Attack sites try to install programs that steal private information, use your computer to attack others, or damage your system.

Some attack sites intentionally distribute harmful software, but many are compromised without the knowledge or permission of their owners. //

என்ன ப்ராப்ளம் என்று why was this site blocked என்ற பட்டனை அமுக்கினால் கீழே உள்ள மெசெஜ் வருகின்றது...

// Safe Browsing

What is the current listing status for vikatan.com?

Site is listed as suspicious - visiting this web site may harm your computer.

Part of this site was listed for suspicious activity 3 time(s) over the past 90 days.

What happened when Google visited this site?

Of the 184 pages we tested on the site over the past 90 days, 28 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-08-22, and the last time suspicious content was found on this site was on 2009-08-22.

Malicious software includes 10 scripting exploit(s), 10 trojan(s).

Malicious software is hosted on 1 domain(s), including ms1.6600.org/.

This site was hosted on 1 network(s) including AS20284 (INETUASN1).

Has this site acted as an intermediary resulting in further distribution of malware?

Over the past 90 days, vikatan.com appeared to function as an intermediary for the infection of 2 site(s) including indiagrid.com/, juniorvikatan.com/.

Has this site hosted malware?

No, this site has not hosted malicious software over the past 90 days.

How did this happen?

In some cases, third parties can add malicious code to legitimate sites, which would cause us to show the warning message.

Next steps:

Updated 8 hours ago //

சரி இந்த ப்ராப்ளத்தை விகடனாருக்கு தெரியப் படுத்தலாம் என்று webmaster@vikatan.com என்ற முகவரிக்கு எழுதினால் அதுவும் பின் வரும் காரணங்களினால் திரும்புகின்றது..

// This is an automatically generated Delivery Status Notification

Delivery to the following recipient failed permanently:


Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the recipient domain. We recommend contacting the other email provider for further information about the cause of this error. The error that the other server returned was: 554 554 5.7.1 This message has been blocked because ASE reports it as spam. (state 18). //

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கின்றீர்களா...

நான் விகடனாருக்கு நீண்ட நாள் வாசகன்
நான் விகடனாருக்கு பணம் கட்டி படிக்கும் வாசகன் ... அதனால் தான்.

விகடனாரே என்ன ப்ராப்ளம் என்பதை கவனியுங்களேன்... அப்படியே என்னுடுய மெயிலுக்கும் ஒரு பதில் அனுப்புங்களேன்...

username : cbsr5@sify.com

விகடனார் இந்த இடுகைக்கு பதில் அளிக்க நினைத்தால், raghavannigeria@gmail.com என்ற முகவரிக்கு பதில் அளிக்களாம்.

அன்புடன்.. இராகவன், நைஜிரியா

Thursday, August 20, 2009

பாசப் பறவைகள் பாகம் - 3 - பொன் மாலைப் பொழுது சந்திப்பு

ஜூன் 24, 2009

சிலப் பதிவர்களைச் சந்திக்கலாம் என்று எண்ணி, என்னிடம் கைவசம் இருந்த தொலைப் பேசி எண்களை வைத்து பதிவர் நண்பர்களை ஜூன் 24 காலையில் இருந்து கூப்பிட ஆரம்பித்தேன். அப்போது தங்கச்சி ரம்யா இன்று டின்னர் சாப்பிட எதாவது ஹோட்டல் போகலாம் என்று சொன்னார்கள். தங்கச்சி ரம்யாவிடம் எந்த ஹோட்டல் போகலாம் என்று விசாரித்து, அவர்கள் சொன்ன 4 ஹோட்டல் நிராகரித்துப் பின் T. Nagar GRT Grand days - ல் சந்திக்கலாம் என்று முடிவு செய்து, மாலை 6.00க்கு பார்க்கலாம் என்று நேரத்தை முடிவுச் செய்தோம்.

பின் GRT Grand Days - தொலைப்பேசியில் அழைத்து, மொத்தம் 10 பேருக்கான இடத்தை ரிசர்வ் செய்தோம்.

நான் வீட்டில் இருந்து மாலை 5.30 க்கு கிளம்பி, ஆட்டோ பிடித்து, பின் தங்கச்சி ரம்யாவை கூப்பிட்டேன். அண்ணே கிளம்பிட்டோம், வந்துகிட்டு இருக்கோம், டிராபிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்றார்கள். வரும் போது ரசனைக்காரி, நாமக்கல் சிபி இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதாகவும் கூறினார்கள்.

அடுத்து தம்பி செய்யதுவை கூப்பிட்டேன், அவர் அண்ணன் ஜீவன் கூட வருவதாகவும், அவரும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும் சொன்னார்.

அடுத்து அண்ணன் புதுகை அப்துல்லா, வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொன்னார். அண்ணே எப்படியாவது வந்திருங்க அண்ணே என்று சொன்னதற்காக, எப்படியோ, அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, வந்திட்டார்.

ஆதிமூலகிருஷ்ணன், அவர்கள் 6 மணிக்கு சரியாக வந்துவிட்டு, லாபியில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

நான் 6.15 க்குப் போய் அண்ணன் ஆதி அவர்கள் கூட பேசிகிட்டு, (எங்களுக்கு தெரிஞ்ச சிக்ஸ் சிக்மா / குவாலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பற்றி அவரிடம் கொஞ்சம் போட்டுப் பார்த்தோமில்ல..) இருக்கும் போது அண்ணன் புதுகை அப்துல்லா வந்தார்...

சிறுது நேரத்திற்கொல்லாம் தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரசனைக்காரி, அண்ணன் நாமக்கல் சிபி, நண்பர் சுரேஷ், கலை அக்கா எல்லோரும் வந்தனர்.

இன்னும் சிறிது நேரம் பொருத்து, சென்னை டிராப்பிக்கில் நொந்து நூடுல்ஸ் ஆகி அண்ணன் ஜீவனும், தம்பி செய்யதுவும் வந்து சேர்ந்தனர்.

அனைவரும் 6.30க்கு ஆஜர்...

GRT Grand Days ஹோட்டலில் டின்னர் 7.30 க்குத்தான் ஆரம்பிக்குமாம்.

எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சோம்... யாரும் மாட்டினாலும் மாட்டிகிட்டவரைஅனைவரும் சேர்ந்து கும்மி அடிச்சு தீர்த்தோம்...

அப்போது தங்கச்சி ரம்யா அவர்கள், சிபி அவர்கள் வண்டியில் வரும்போது, ரசனைக்காரி ராஜேஸ்வரியிடம், நான் தான் கோவி கண்ணன் என்று சொல்லுகின்றார். அதை இவங்களும் நம்பிகிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. அப்ப ஆரம்பிச்ச கும்மி டின்னர் முடியரவரைக்கும், போயிகிட்டு இருந்தது ...

அன்றுச் சந்தித்த பதிவர்கள்...

அண்ணன் புதுகை அப்துல்லா அண்ணன்
அண்ணன் ஆதிமூல கிருஷ்ணன் (எ) தாமிரா
அண்ணன் நாமக்கல் சிபி
அண்ணன் ஜீவன்
தம்பி அ.மு. செய்யது
தங்கச்சி ரம்யா
தங்கச்சி ரசனைக்காரி
நண்பர் (சித்தர்) சுரேஷ்
கலை அக்காதம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..தம்பி அ.மு. செய்யது


அண்ணன் புதுகை அப்துல்லா


அண்ணன் அப்துல்லா, அண்ணன் ஆதி, அண்ணன் சிபி, அண்ணன் ஜீவன், நண்பர் சுரேஷ்..

டின்னர் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. கடைசியில் நண்பர்கள் சிலர் காப்பி வேண்டும் என்றுச் சொல்லவும், அங்கு வந்த பேரரிடம், நாங்க இரண்டு காப்பி கொண்டு வாங்க என்றுச் சொன்னோம். இதோ கொண்டு வருகின்றோம் என்று சொன்னவர், 10 நிமிடம் ஆகியும் கொண்டு வரவில்லை.

அதன் பின் அவருக்கு மேல் உள்ள சூப்பர்வைசரிடம் சொன்னோம். இதோ என்று சொல்லிவிட்டு போனவர் தான் அப்புறம் ஆள் மிஸ்ஸிங்.

இப்படியாக ஒரு 25 நிமிஷம் போனவுடன், நான் நேராக மேலாளரிடம் சென்றேன். பின் வருமாறு அவரிடம் சொன்னேன்...

ஐயா, இங்கு நாங்கள் அனைவரும் நன்றாகச் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. கவனிப்பும் மிக அருமையாக இருந்தது. ஆனால் இனிமேல் இந்த ஹோட்டலுக்கு வருவதாக இல்லை. நீங்க பணம் கொடுத்து வாங்கன்னு கூப்பிட்டாக் கூட வருவதாக இல்லை. ஒரு காப்பிக்காக 25 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்று இங்குத்தான் பார்த்தேன். அதுவும் இரண்டு பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை அதைவிட வெட்கக் கேடான விசயம் வேறில்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

எவ்வளவு கலகலப்பாக போச்சோ, அதை அத்தனையும் ஒரு நிமிடத்தில் போக்கடித்துவிட்டனர் GRT Grand Days.

இது மாதிரி நான் சென்ற இடங்களில் நடந்தவைகள் சில... அவற்றை ஒரு தனி
இடுகையாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்...

அன்று எனது அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

அதிலும் அண்ணன் அப்துல்லாவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துக் கொண்டு இருந்தது, அண்ணன் ஆதி வீடு மாற்றிக் கொண்டு இருந்தார், அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கும், அண்ணன் ஜீவன், தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரஜேஸ்வரி அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குப் போய்விட்டு எனக்காக வந்தது மிக நெகழிச்சியாக இருந்தது.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவுடன், ரம்யா அவர்களது காரில் என்னை திருவல்லிக்கேணியில் கொண்டு விட்டார்.

அடுத்து பிரபல பதிவர்கள் குடந்தை அன்புமணி, கேபிள் சங்கர், தண்டோரா மணி, வண்ணத்துப் பூச்சியார் சுரேஷ் அவர்களை சந்தித்ததைப் பற்றியும், சென்னைப் பதிவர் சந்திப்பைப் பற்றியும் .... அடுத்த இடுகையில் பார்க்கலாமே...


தொடரும்.....

Saturday, August 15, 2009

பாசப் பறவைகள் பாகம் - 2

ஜூன் 21 மாலை 6 மணி...

சரியாக மாலை 6.15... தம்பி சரவணன், தம்பி கலையரசன், அண்ணன் சுந்தராமன் மூவரும் வருகை தந்தனர்.

வரும் போதே கையில் இட்லி,வடை இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர். உபயம் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள்.

சிறிது நேரம் அரவிந்த் கூட உலக விவகாரங்களை அலசி கொண்டு, கிரிகெட் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.

பின்னர் நண்பர்களிடம் ஒரு கேமிராவும், சட்டையும் வாங்க வேண்டும் என்று சொன்னவுடன், அண்ணன் சுந்தர்ராமன் சாரதியாகவும், தம்பி சரவணன் வழி காட்டுபவராகவும், நான் துபை கட்டிடங்களைப் பாராக்குப் பார்ப்பவனாகவும், இப்படியாக ஒரு கடைக்கு அழைத்துச் சென்றனர்.

காமிரா கடைக்குப் போனதும், கலையரசனிடம், தம்பி நம்ப பட்ஜெட் 2500 திராம்ஸ் எந்த காமிரா நல்லா இருக்குமோ அதைப் பார்த்து வாங்கி கொடுங்க என்று சொன்னேன்.

உடனே, அண்ணன் ஜாக்கி சேகர் உபயோகப் படுத்திகின்ற மாதிரி ஒரு காமிராவைப் பார்த்தார். அண்ணே நீங்க ப்ரொபஷனல் போட்டோ கிராபரா, இல்லை அமெச்சூரா (இந்த மூஞ்சியைப் பார்த்தவுடன் ப்ரொபஷனல் போட்டோகிராபரா என்று கேட்க நினைத்தாரே அதுவே பெரிய விசயம்தான்) என்றார். போட்டோகிராபிக்கும் நமக்கு பல காத தூரம் தம்பி, அதனால் எது நல்ல காமிராவோ அதை வாங்கிக் கொடுங்க, ரொம்ப கேள்விகேட்காதீங்க அப்படின்னு சொன்னனேன்.

அண்ணே அப்படின்னா இந்த காமிரா உங்களுக்கு வேண்டாம். சாதாரண காமிரா போதும், அப்படின்னு சொல்லிட்டி, Sony, Canon, இப்படி பல காமிராவை பார்த்து, அந்த சேல்ஸ் மேனை ஒரு வழியாக்கி, அப்புறம் எல்லோரும் கலந்து பேசி, Canon Digitial IXUS 951S என்ற மாடலை 1000 திராம்ஸ்க்கு வாங்கி கொடுத்தார். அண்ணே மீதி பணத்துக்கு ஒரு விடியோ காம் எடுத்துகுங்க அப்படின்னு சொல்லி, Sony வாங்கலாமா, JVC வாங்கலாமா அப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, JVC வாங்குவது என்று முடிவு செஞ்சு, அதையும் வாங்கிகிட்டோம்.

கூட வந்து, ஒத்துழைத்து, ஒரு நல்ல காமிரா வாங்கிக் கொடுத்த தம்பி கலையரசனுக்கு நன்றிகள் பல. காமிராவைப் பார்த்த பலரும் (விசயம் அறிந்தவர்கள்) ரொம்ப நல்லா இருக்கு, சூப்பர் காமிரா என்று சொன்னார்கள். அந்த காமிராவில் எடுத்த படங்கள் அடுத்த இடுகைகளில் வரும்...

இந்த காமிரா வாங்கிக் கொண்டு இருக்கும் போதே அண்ணன் ஆசாத், தம்பிகள் கண்ணா, நாகா மூவரும் தங்கள் வருகையை கலைய்ரசனையும், சரவணனையும் தொலைப் பேசியில் அழைத்து சொல்லிவிட்டனர்.

அதனால் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்பினோம்.
பதிவர் சந்திப்பில் படங்கள் இல்லாமல் இருக்க கூடாதல்லவா... அதனால் தம்பி கலையரசன், நாகா பதிவில் இருந்து சுட்ட படங்கள்... (கலை & நாகா பர்மிஷன் இல்லாமல் போட்டதற்கு- மன்னிக்கவும்....)


அறைக்கு திரும்பியதும், பதிவர்கள் நாகா, ஆசாத், மற்றும் ப்ரதீப் வந்து அரவிந்த், தங்கமணி கூட பேசிகிட்டு இருந்தார்கள்.

நாங்க பேசிக் கொண்டு இருந்த போது தம்பி அபு அஃப்சர் வந்து கலந்து கொண்டார். துபாயில் இருந்து தம்பி ஜமால் கூட தொலைப் பேசியில் உரையாடிக் கொண்டு இருந்த போது, அண்ணே அரவிந்துக்கு என்னப் பிடிக்கும் என்று கேட்டார். நானும் சாதாரணமாக அரவிந்திற்கு கம்பூயட்டர் கேம்ஸ் பிடிக்கும் என்று சொன்னேன். அவர் தம்பி அபுகிட்ட சொல்ல, வரும்போதே, கேம்ஸ் சிடியும், சாக்லெட்டும் வாங்கிவந்துவிட்டார். அரவிந்த் தினமும் தம்பி அபுவை நினைக்காத நாளில்லை. நன்றி அபு.

பின்னர் வந்து இணைந்துக் கொண்டவர் எனது 25 வருடகால நண்பர் திரு ஸ்ரீதர் அவர்கள். பார்த்து பல வருடங்கள் ஆன போதிலும், ஒரே ஒரு தொலைப் பேசி செய்ததற்கு, வந்து பார்த்தார்.

சட்டை வாங்கவில்லை என்று சொன்னதுமே கண்ணாவும், கலையரசனனும் இருவரும் சென்று வெள்ளைக் கலரில் ஒரு சட்டை வாங்கி வந்தனர். நன்றிகள் பல. பணம் வாங்க மறுத்துவிட்டனர் தம்பிகள்.

நண்பர்கள் பலரும் பேசியதில், பொதுவாக பேசப்பட்ட விசயங்கள் தான் அதிகமிருந்தன. நைஜிரியாவில் வெயில் எப்படி, என்ன என்ன தொலைக் காட்சிகள் தெரிகின்றன, உங்க கூட தமிழர்கள் வேலை செய்கின்றனரா, உருப்புடாதது அணிமா எப்படி இருக்கின்றார் என்பன போன்ற விசயங்கள்தான்.

மேலும் பேசிய விசயங்களில், நமது வலைப் பதிவைப் பாதுகாப்பது எப்படி, கும்மி அடிப்பது எப்படி, உங்களால எப்படி இவ்வளவு பின்னூட்டம் போட முடிகின்றது (இது பெரிய விசயமே இல்லை... இடுகை எதுவும் போடவில்லை என்றால், போடத் தெரியவில்லை என்றால் பின்னூட்டம்தான் போட முடியும் !!!!)

இப்படியாக பேசிக் கொண்டே இருக்கும் போது, எல்லோருக்கும் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள் வாங்கி வந்திருந்த இட்லி, வடைக் கொடுக்கப்பட்டது.

நண்பர்கள் அனைவரும் விடைப் பெற முடிவு செய்த போது, அண்ணி சொன்ன வார்த்தைகள்...

“இந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்”

பின்னர் என்னிடம் சொல்லியது..

“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. கூடப் பிறந்தவர்கள் மாதிரி எவ்வளவு அன்பா, பாசமா இருக்காங்க எல்லோரும்”

பின்னர் அனைவரும் 8.30 க்கு விடைப் பெற்றுச் சென்றனர்...

வேலை நாளாக இருந்தாலும், தங்கள் வேலைக்களை முடித்துவிட்டு என்னைச் சந்தித்துச் சென்ற நண்பர்கள்

சரவணன்
கலையரசன்
சுந்தர் ராமன்
நாகா
ஆசாத்
கண்ணா
அபு அஃப்சர்
ப்ரதீப்

உங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் எங்கள் குடும்பத்தினரின் நன்றி, நன்றி, நன்றி.

எங்களுக்குத் தேவையான வண்டி 11.00 மணியளவில் வந்து துபை விமான நிலையம் வந்து, சென்னைக்கு ஜூன் 22, 2009 காலை 8.10 க்கு வந்துச் சேர்ந்தோம்...

ஓவர் டு சென்னை...

இந்தியாவில் பதிவர்களைச் சந்தித்ததுப் பற்றி...

அடுத்த பாகத்தில் பார்க்கலாமே..


தொடரும்...

Tuesday, August 11, 2009

பாசப் பறவைகள் - பாகம் 1

என்னுடைய விடுமுறையில் பல பதிவர்களையும் சந்தித்தேன். நண்பர்கள் பலரையும் சந்தித்தது மிக மிக சந்தோஷமாக இருக்கின்றது. அவர்களின் பாசம் அளவிட முடியாதாது.

நிறைய நண்பர்களைச் சந்தித்தாலும், பல நண்பர்களை சந்திக்கமுடியாமல் போனது மிக வருத்தமாகத்தான் இருக்கின்றது.

சந்தித்த நண்பர்களைப் பற்றியும் அவர்கள் எனக்கு உதவியதும் நான் பாச மழையில் நனைந்ததும் ...

ஜூன் 21, 2009 - காலை 7.30 மணி

இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே, மெயில் மூலம் தம்பி சரவணன் (குசும்பன்), அண்ணே துபாய் வந்தவுடன் என்னை அழையுங்கள் என்றுச் சொல்லி அவரின் மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். அவரிடம் எனக்கு தேவையான உதவிகளைச் செய்யச் சொன்னவர் அன்புத்தம்பி அபி அப்பா.

இவரைத்தவிர தம்பி அபுவும் தன்னுடைய மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். ஆனால் அவர் அப்போது இந்தியா சென்று இருந்தார், நான் வருகின்றேன் என்ற காரணத்திற்காகவே அவசரம், அவசரமாக துபாய் திரும்பினார்.

துபாய் விமான நிலையத்தில் இறங்கி, குடியுரிமை பரிசோதனைகளை முடித்துவிட்டு, பின் அவர்கள் கொடுத்த வண்டியில் Pearl Residence ஐ அடையும் போது மணி காலை 9.30. சற்று இளைப்பாறிவிட்டு, தம்பி சரவணணை அழைத்தவுடன், அவர் கேட்ட முதல் கேள்வி அண்ணே ப்ரேக்பாஸ்ட் ஆச்சா என்று தான்.

இல்லை என்றவுடன், நான் வரும்போது இட்லி வாங்கி வருகின்றேன். அண்ணி தயிர் சாதம் வேண்டும் என்று சொன்னவுடன், அதையும் வாங்கி வருகின்றேன் என்றார். சரியாக 30 நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்றவர், 29 நிமிடத்தில் அங்கு இருந்தார். கையில் டிபனுடன்.

இதற்கிடையில் நான் தம்பி அபி அப்பா அவர்களை அழைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. அரவிந்த் கூட நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.. அரவிந்த்க்கு அவர் கூட பேசியதில் நிரம்ப சந்தோஷம்.

அண்ணி தங்க வளையல் வாங்கப் போகவேண்டும் என்றவுடன், அரவிந்தையும் கூட்டிக் கொண்டு, கோல்ட் சூக்கிற்கு உடனே அழைத்துச் சென்றார்.

இதற்கு இடையில் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, நான் வந்த விவரத்தை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு, அனைவரையும் மாலை 6 மணிக்கு Pearl Residence க்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அங்கு அண்ணி வளையல் வாங்கும் போது நடந்தவை உங்களுக்காக..

முதல் கடையில் :
சரவணன் : அண்ணி இங்கு தங்கம் நல்லா இருக்கும். எடைச் சரியாக இருக்கும்.
அண்ணி : வளையல் மாடல் காண்பிக்கச் சொல்லுங்க.
சரவணன் : எவ்வளவு பவுன் அண்ணி வாங்கப் போறீங்க..
அண்ணி : 4 பவுன்
சரவணன் : என்ன அண்ணி இது அண்ணன் பத்து பவுன் என்று சொல்லிகிட்டு இருக்கார் .. நீங்க 4 பவுன் என்று சொல்கின்றீர்கள்.
நான் மனதிற்குள் : (போட்டு கொடுக்கின்றாயா தம்பி..!! - நல்லாயிரு அப்பு)
அண்ணி : அவர் அப்படித்தான் சொல்லுவார்... 4 போதும்
ஆனால் அந்தக் கடையில் அண்ணிக்குப் பிடித்த டிசைன் கிடைக்கவில்லை.

அதனால் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்...

சரவணன் : அண்ணி இங்கு குவாலிட்டி நல்லா இருக்கும் வாங்கிகுங்க.
அண்ணி அங்கு ஒரு டிசைனை செலக்ட் பண்ணி இது நல்லா இருக்கு வாங்கிகலாம் என்றுச் சொன்னாங்க.
சரவணன் : 6 வளையல் வாங்கிகுங்க
அண்ணி : 2 போதும்பா
சரவணன் : என்னங்க அண்ணி இது... அண்ணனுக்கு செலவு வைக்க மாட்டிங்க போலிருக்கு..
அண்ணி : வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொள்ளத்தானே ... இரண்டு வளையல் போதும்.
சரவணன் : இல்லீங்க அண்ணி, இன்னும் இரண்டு சேர்த்து 4 வளையலா வாங்குங்க...

இப்படியாக அவங்க பேசி 50 கிராமில் 4 வளையல் வாங்கிட்டாங்க.

பின்னர் தம்பி எங்களை ரூமில் இறக்கிவிட்டுவிட்டு, சாயங்காலம் 6 மணிக்குப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டார்...

சரவணன் எங்களை இறக்கிவிட்டு சென்றபின் அண்ணி சொன்ன வார்த்தைகள்..
பாசத்தின் மறு பெயர் சரவணன்

சாயங்காலம் 6 மணி...

தொடரும்....

Sunday, August 9, 2009

திரும்பிவிட்டேன்

என்னுடைய 42 நாள் விடுப்பு முடிந்து திரும்பிவிட்டேன்.

பல வலையுலக நண்பர்களையும் பல இடங்களில் சென்றுப் பார்த்தேன். பலர் என்னை வந்து அன்புடன் பார்த்தனர்.

அனைத்தையும் இடுகைகளாக எழுத இன்னும் சிறிது நாட்கள் ஆகும்.

நீண்ட விடுப்பில் சென்றதால், வேலைப் பளு மிக கூடியுள்ளது.

விரைவில் அந்த வேலைகளை முடித்துவிட்டு வருகின்றேன்.

அதுவரை சற்று பொருத்துக் கொள்ளுங்க...

அன்புடன்

இராகவன், நைஜிரியா.