இந்தியாவிலேயே முதன் முதலாக தசை திறன் குறைபாடு (மஸ்குலர் டிஸ்ட்ரோபி) உள்ள குழந்தகளுக்கான ப்ள்ளி சென்னையில் துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் ரூ. 14.50 லட்சம் செலவில் 5 வகுப்பறைகளுடன் தேவையான வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பள்ளி, ஆயிரம்விளக்கு மாதிரி பள்ளித் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தினுள் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வாய் பேசாதோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குறைந்தோர் போன்றோருக்கெல்லாம் தனிப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆனால் தசைத் திறன் குறைந்தோர்க்கு தனிப் பள்ளி இல்லை. இவர்களுக்காக பிரத்தியேக அமைப்புகளுடன், தேவையான வசதிகளுடன் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு முதல் +2 வரை வகுப்புகள் நடத்தப் படும் என்றும், இதுவரை 28 பேர் சேர விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தசைக் குறைபாடு உடைய குழைந்தகளுக்கு, குறைகளைப் போக்கக்கூடிய பயிற்சி அளிப்பதோடு, கல்விப் பயிற்ச்சியும் அளிக்க்கப் படும் என்றும் கூறினார். இந்த மாதிரி குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு சிறப்புப் பேருந்தும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
தசை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் கஷ்டம் என்ன என்பது என் போன்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
பள்ளியில் இடம் கிடைத்தாலும், மற்ற குழந்தைகள் செய்கின்ற கிண்டல்களை அவர்களால் தாங்க இயலாமல் போகின்றது.
ஒரு சில ஆசிரியர்கள் (சில ஆசிரியர்கள் மட்டும்), இவர்களை எப்படி நடத்தவேண்டும், எப்படி பழக வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லாமல் நடக்கும் போது நம் மனம் உடைந்து போய்விடும்.
அது மாதிரி இருக்கும் பெற்றோர்களுக்காக, அவர்கள் கஷ்டம் புரிந்து, அதற்காக ஒரு தனிப்பள்ளி திறந்த துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், சென்னை மேயர் திரு. சுப்ரமணியன் அவர்களுக்கும், என் போன்ற எண்ணற்ற பெற்றோர்கள் சார்பாக
கோடானு கோடி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி - தினமலர் நாளிதழ்.
