Sunday, August 23, 2009

சிறப்புப் பள்ளி - நன்றி துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு

இந்தியாவிலேயே முதன் முதலாக தசை திறன் குறைபாடு (மஸ்குலர் டிஸ்ட்ரோபி) உள்ள குழந்தகளுக்கான ப்ள்ளி சென்னையில் துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் ரூ. 14.50 லட்சம் செலவில் 5 வகுப்பறைகளுடன் தேவையான வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பள்ளி, ஆயிரம்விளக்கு மாதிரி பள்ளித் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தினுள் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வாய் பேசாதோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குறைந்தோர் போன்றோருக்கெல்லாம் தனிப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆனால் தசைத் திறன் குறைந்தோர்க்கு தனிப் பள்ளி இல்லை. இவர்களுக்காக பிரத்தியேக அமைப்புகளுடன், தேவையான வசதிகளுடன் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு முதல் +2 வரை வகுப்புகள் நடத்தப் படும் என்றும், இதுவரை 28 பேர் சேர விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தசைக் குறைபாடு உடைய குழைந்தகளுக்கு, குறைகளைப் போக்கக்கூடிய பயிற்சி அளிப்பதோடு, கல்விப் பயிற்ச்சியும் அளிக்க்கப் படும் என்றும் கூறினார். இந்த மாதிரி குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு சிறப்புப் பேருந்தும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

தசை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் கஷ்டம் என்ன என்பது என் போன்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.

பள்ளியில் இடம் கிடைத்தாலும், மற்ற குழந்தைகள் செய்கின்ற கிண்டல்களை அவர்களால் தாங்க இயலாமல் போகின்றது.

ஒரு சில ஆசிரியர்கள் (சில ஆசிரியர்கள் மட்டும்), இவர்களை எப்படி நடத்தவேண்டும், எப்படி பழக வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லாமல் நடக்கும் போது நம் மனம் உடைந்து போய்விடும்.

அது மாதிரி இருக்கும் பெற்றோர்களுக்காக, அவர்கள் கஷ்டம் புரிந்து, அதற்காக ஒரு தனிப்பள்ளி திறந்த துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், சென்னை மேயர் திரு. சுப்ரமணியன் அவர்களுக்கும், என் போன்ற எண்ணற்ற பெற்றோர்கள் சார்பாக

கோடானு கோடி

நன்றி
நன்றி
நன்றி

நன்றி - தினமலர் நாளிதழ்.

40 comments:

அபி அப்பா said...

அடி தூள்!!!!! அட்ரா சக்கை அட்ரா சக்கை !!!! அட்ரா சக்கை!!!!!!!

அபி அப்பா said...

அவரின் எல்லா செய்கையும் மிக்க நல்லதாக இருக்கே!!!!!

அபி அப்பா said...

கட்சிக்காக சிறை சென்றவனுக்கும், மிதி பட்டவனுக்கும் தான் துனை முதல்வர் பற்றி தெறியும்!!!!!!!!

அபி அப்பா said...

இப்படி ஒரு குறை பாடு இருப்பதே பல பேருக்கு தெரியாத இந்த காலத்தில் இப்படி ஒரு பள்ளி அவசியமே!!!! வாழ்க துனை முதல்வர்!!!!

அபி அப்பா said...

என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் எங்க தளபதிக்கு!!!!!!!!!

அபி அப்பா said...

பதிவை பதிந்த இராகவா அண்ணாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்ள்!!!!

அபி அப்பா said...

முதன் முறையாக வாயை திறக்கின்றேன். தலைவர் ஒதுங்கி கொண்டு தளபதிக்கு வழி விடலாம். அவரின் எல்லா நடவடிகையும் சூப்பர். முதல்வர் மாநாட்டில் அவர் பேச்சு தான் டாப் நம்பர் 1!!!!!!!

அப்பாவி முரு said...

செய்தித் தாளில் இந்த செய்தியை படித்ததும் மனமகிழ்தவர்களில் நானும் ஒருவர்.


புறச்சூழலால் பாதிப்படையாமல் காலகாலத்துக்கும் நிலைத்து நிற்க வாழ்த்துகள் (பள்ளிக்கூடம் தான்)

பழமைபேசி said...

நல்ல செயல்கள் தொடர வேண்டிக் கொள்வோமாக!

goma said...

நல்ல செயல்கள் தொடர வேண்டிக் கொள்வோமாக!

பழமைபேசியை வழி மொழிகிறேன்

மணிஜி said...

மனமாச்சர்யங்களை கடந்து ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்தான்

நட்புடன் ஜமால் said...

மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.

மிக்க நன்றி பகிர்தலுக்கு.

Cable சங்கர் said...

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

Saravanan Trichy said...

நல்ல செயல்களை வரவேற்போம். பாராட்டுவோம்.!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல விஷயம்.தொடர்ந்து சிறப்பாக அந்த பள்ளி இயங்க வேண்டும்.வாழ்த்துகள் துணை முதல்வருக்கு.

கலையரசன் said...

கெட்டது செய்யும் போது காரிதுப்பும் நாம்...
நல்லது செய்யும் போது வாழ்த்துவோம்!!

வாழ்த்துக்கள் + நன்றி தளபதி..

அ.மு.செய்யது said...

நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் தான் ஸ்டாலின்.மட்டற்ற மகிழ்ச்சி !!!

நன்றி அண்ணே பகிர்வுக்கு !!!

கார்ல்ஸ்பெர்க் said...

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!!!

Prapa said...

அப்பிடியே தான் இருக்கிறோமில்ல ... நீங்க எப்பிடி ?

குடந்தை அன்புமணி said...

//தனிப்பள்ளி திறந்த துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், சென்னை மேயர் திரு. சுப்ரமணியன் அவர்களுக்கும், என் போன்ற எண்ணற்ற பெற்றோர்கள் சார்பாக
கோடானு கோடி
நன்றிநன்றிநன்றி//

உங்களின் நிலை புரிகிறது அண்ணா. படித்ததும் கண் கலக்கம் கொள்ளச் செய்கிறது. உங்கள் சார்பாக நானும் அவருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

கோடானு கோடி

நன்றி
நன்றி
நன்றி

மகிழ்ச்சியில் நான் நன்றி சொல்கின்றேன்...

S.A. நவாஸுதீன் said...

சந்தோஷமான செய்தி. நன்றிகள் நம் சார்பிலும்

SUFFIX said...

நல்ல முயற்சி, மிக்க மகிழ்ச்சி!!

வால்பையன் said...

நல்ல விசயம்!

vasu balaji said...

பாராட்டுகிறேன் துணை முதல்வரை.தொடரட்டும் நற்பணிகள். உங்களுக்கு பகிர்தலுக்கு நன்றி

நிஜாம் கான் said...

நாளைய தமிழகம் எங்கள் தளபதியின் இது போன்ற பணிகள் இனிவரும் நாட்களில் விரிவடையும். முன்னேற்றப் பாதையில் தங்கத் தமிழகம்.எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்யும் வசைமாறி தொலைக்காட்சி மட்டுமே வரும் நைஜீரியாவில் இருந்தும் செய்திகளை துல்லியமாக அறிந்து நமது தளபதிக்காக ஒரு பதிவேயிட்ட அண்ணன் வாழ்க வாழ்க!

குடுகுடுப்பை said...

நன்றி துணை முதல்வர் ஸ்டாலின்.

ஜோசப் பால்ராஜ் said...

இது ஒரு நல்ல முயற்சி. இதை செய்த ஸ்டாலின் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் .

அதோடு இன்னொரு முக்கியமான நபரையும் நாம் இதில் பாராட்டியே ஆக வேண்டும். அவர் மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் நெப்போலியன். அவரது மகன் தணுஷ் இந்த குறைபாடு உள்ளதால் அதன் வலியை நேரடியாக அறிந்தவர். அவருடை முழு முயற்சியும் இந்தப் பள்ளி திறக்க மிக முக்கிய காரணம்.

அதேப் போல் சென்னை மேயர் மா.சுப்ரமணியன் அவர்களுடைய மகனும் இந்தக் குறைபாடுள்ளவர். அவரும் இந்தப் பள்ளி அமைய பெரும் பங்காற்றினார் என்பதை மறுக்க இயலாது.

ஜோசப் பால்ராஜ் said...

//அபி அப்பா said...
கட்சிக்காக சிறை சென்றவனுக்கும், மிதி பட்டவனுக்கும் தான் துனை முதல்வர் பற்றி தெறியும்!!!!!!!!//

எப்ப தான் இவரு திருந்துவாரோ தெரியல

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

அப்துல்மாலிக் said...

நல்ல முயற்சி

இது போல் நிறைய இடங்களில் நிறுவ இந்த அரசாங்கம் முயற்சி செய்தால் நல்லது

பகிர்தலுக்கு நன்றி அண்ணா

Unknown said...

நன்றி திரு மு.க.ஸ்டாலின்.
குட்டிக்கொண்டு மட்டும் இருப்பதல்ல எங்கள் வேலை. நல்லது செய்தால் தட்டியும் கொடுப்போம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்

Thamira said...

நான் சொல்ல விழைந்ததை அட்சரம் பிசகாமல் ஜோஸப் சொல்லிவிட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோரான நெப்போலியன், மா.சுப்பிரமணியன் ஆகியோரின் முன்முயற்சியால் இது நிகழ்ந்தது. அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஸ்டாலினின் பேச்சைவிடவும், செயலில் காட்டும் முனைப்பு பாராட்டத்தகுந்தது. பாசாங்கற்ற அவரின் பேச்சு எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது. துணை முதல்வருக்கு நன்றிகள்.

இராகவன் அண்ணாவின் குழந்தை விரைந்து முழு நலன் பெற வாழ்த்துகள்.!

सुREஷ் कुMAர் said...

இதை உங்களை சந்திக்குமுன் படித்திருந்தால் வெறும் செய்தியாக மட்டுமே படித்திருப்பேன் என நினைக்கிறேன்.. ஆனால், இப்போது இதன் பயன் நன்றாகவே புரிகிறது..

இப்படி ஒரு பள்ளியின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்ட தளபதிக்கு உண்மையில் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள்.

Admin said...

நல்ல விடயமாகவே இருக்கிறது.

புருனோ Bruno said...

மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

ஒரு போலியின் வேலை

ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!

இராகவன் நைஜிரியா said...

// புருனோ Bruno said...

மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

ஒரு போலியின் வேலை

ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!//

தங்களிடம் முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மருத்துவரே. உண்மையாக அது போலி என்று நான் நினைக்கவேயில்லை. அதனால் தான் அந்த பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்தேன். அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. சரி பார்க்காமல் விட்டது என் தப்புதான்.

போலி பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

"உழவன்" "Uzhavan" said...

நல்ல செயல்.. பாராட்டுக்கள்!