Friday, June 19, 2009

இ....டை.....வெ.......ளி...ஜுன் 20, 2009 - அபுஜா - லாகோஸ் - காலை 9.15
ஜூன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.30 .. ரெடி ..ஸ்டெடி..
ஜுன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.50 .... ஸ்டார்ட்ஜுன்21, 2009 - துபை காலை 7.35ஜூன் 22, 2009 துபை - சென்னை - காலை 2.45ஜுன்22, 2009 - சென்னை (இறங்க ஆரம்பிச்சாச்சுப்பா...)ஜுன்22, 2009 - சென்னை காலை 8.20 (வந்தாச்சு.....ஊஊஊஊஊ...)

நண்பர்களே, விடுப்பில் இந்தியா செல்ல இருக்கின்றேன். வித்யாசமா இருக்கட்டுமே என்று... ( இதெல்லாம் ஒரு வித்யாசமா..?)

6 வார காலத்திற்கு விடுப்பு கொடுத்து இருக்கின்றார்கள்... (வேலையில் இருந்தா மட்டும் என்னா பெரிசா கிழிச்சுட்டேன்னு கேட்பது காதில் விழுகின்றது...)

இப்போதைக்கு பை... பை... நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்...

அதுவரை....

என்றென்றும் அன்புடன்

உங்கள் இராகவன்...

Thursday, June 11, 2009

சரணாகதி..........!!!

தங்கமணி வளையல் வாங்கணும் அப்படின்னு முடிவுப் பண்ணிட்டாங்க. அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...

சிவப்பு கலரில் இருப்பது தங்கமணி பேசியது
நீலக் கலரில் இருப்பது நான் பேசியது..
(அடைப்புக் குறிக்குள் இருப்பது என் நினைப்பு அதாவது என் உள் மனசு - பச்சைக் கலரில் )


அப்பாடா டிக்கெட் புக்கிங் பண்ணி, இ-டிக்கெட் இன்னிக்கு கைக்கு வந்துடுச்சும்மா அப்படின்னு தங்கமணிகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்... அப்போது...

என்னங்க.
(ஆசையாக...)
சொல்லும்மா.
நாம துபாயில் ஒரு நாள் முழுக்க தங்குவோமில்ல.
ஆமாம்மா. கார்த்தல 8 மணிக்கு போயிடுவோம். அப்புறம் அடுத்த ப்ளைட் மறுநாள் காலை 2 மணிக்குத் தான்.
அங்கு கோல்ட் நல்லா இருக்குமில்ல. நீங்க கூட பதிவு போட்டு இருக்கீங்கில்ல..
(ராகவா சுதாரிச்சுக்கோ.... உள்மனசு சொல்வதையெல்லாம் நாங்க கேட்போமா என்ன..)
நான் இடுகைப் போட்டது கத்தாரில் தங்கம் வாங்குவதுப் பற்றிம்மா...
கத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...
(ராகவா தப்பிக்க முடியாது.... மாட்டிகிட்ட)

ஆமாம்மா அங்கு கோல்ட் நல்லா இருக்கும். எதுக்கு கேட்கிற..
ஒன்னுமில்லீங்க...
அப்படின்னா சரி.. ஒன்னுமில்லைன்னு நீ சொன்ன பிறகுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..
அதில்லீங்க
என்னது அதில்லீங்க....
நான் சொல்லவதை கேளுங்க
என்னது நான் சொல்வதை கேளுங்க..
நடுவில் என் மகன் புகுந்து ... அப்பா இந்த ஜோக் வடிவேலு சொல்லிட்டார்... நீங்க வேற கடிக்காதீங்க - அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டுட்டார்....
இப்ப கேட்கப் போறீங்களா இல்லையா...
(ராகவா.... சமத்தா இருடா... வம்பை விலைக்கு வாங்காதே... அப்புறம் சோத்துக்குத் தாளம் போட வேண்டியிருக்கும்)
சரி சொல்லும்மா..
எதுக்கு சொல்ல வந்தேன்னா...
அதான் ஆரம்பிச்சாச்சே .. சொல்லும்மா...
இப்ப இருக்கின்ற வளையல் எல்லாம் சின்னதா ஆயிடுச்சுங்க...
என்னது வளையல் சின்னதா ஆயிடுச்சா.. (ராகவா ரொம்ப பேசற... இது நல்லதுக்கு இல்ல...)
ச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...
சரிம்மா சொல்லும்மா... (ராகவா... வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டே..)
என்ன சொன்னேன்..... (அப்பாடா மறந்துட்டீயா... ரொம்ப சந்தோஷம்..)
வளையல் சின்னதா ஆயிடுச்சுன்னு சொன்னே... (வாழ்க்கையிலே முதல்தடவையா கேள்விப் படுகின்றேன்..)
வளையல் சின்னதா ஆயிடுச்சுன்னு சொன்னேன் இல்ல...
ஆமாம்... வளையல் சின்னதா ஆயிடுச்சு... (துணி மாதிரி சுருங்கிப் போச்சு. ஊருக்குப் போனவுடன் வளையல் வாங்கிய கடையில் போய் சண்டை போடணும்..)
துபாயில் வளையல் ஒரு ஜோடி வாங்கலாமா.... (என்னாடா பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கேன்னுப் பார்த்தேன்...)
பார்க்கலாம்.. (ப்பாடி இன்னிக்குத் தப்பிச்சாசு...)

அதற்கு அடுத்த நாள்..

ஏங்க..
ஏம்மா ஏங்கற, நான் இங்கத்தானே இருக்கேன்.. (ராகவா .. பார்த்து அடிவாங்கப் போறே... வாயை வச்சுகிட்டு சும்மா இருடா..)
சரி, சரி வழிய வேண்டாம்
ஓகே.. ஓகே ...சொல்லும்மா (அப்பாடா அடிவாங்காம தப்பிச்சுட்டேன்...)
துபாயில்தானே வளையல் வாங்கப் போகின்றோம்..
அப்படியா எனக்குத் தெரியாதே.. (மனசுகுள்ள பெரிய நடிகன்னு நினைப்பு...)
இப்படி எல்லாம் சொன்னா எப்படி
எப்ப சொன்னேன் துபாயில் வளையல் வாங்கப் போகின்றோம் என்று..
நேத்து சொன்னேன் இல்ல.... வளையல் வாங்க வேண்டும் என்று
ஆமாம் ...
பார்க்கலாம் என்று நீங்க கூடச் சொன்னீங்க, அப்படின்னா வாங்கலாம் என்றுதானே அர்த்தம்
சரி இப்ப அதுக்கு என்ன ஊருக்குப் போவதற்கு இன்னும் நாள் இருக்கும்மா (இப்பவும் தப்பிச்சாச்சு..)

இரண்டு நாள் கழித்து... சாப்பாடு போட்டுக் கொண்டே...

நாம துபாயில் வளையல் வாங்குகின்றோம் தானே..
அப்படியா... எனக்குத் தெரியாதே... (ராகவா சாப்பாடு போட்டுகிட்டு இருக்காங்க... ஞாபகம் இருக்கட்டும்...)
என்னது தெரியாதா... வாங்குகின்றோம்... சரியா.. வாங்குகின்றோம்..
சரிம்மா வாங்கலாம்.... (வேற வழி...)
மொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...
என்னாது 4 பவுனா... (ஷாக் டிரீட்மெண்ட் !!)
என்னங்க ஒரு வளையல் 2 பவுனுக்கு குறைவா இருந்தா வளையல் போட்ட மாதிரி இருக்காதுங்க
(போட்ட மாதிரி இருக்காதா... ம்... எல்லாம் நேரம்...)
ம்..ம்.... சரி வாங்கிடலாம்.. (4 பவுன் 6 ஆக மாறுவதற்கு முன் ஒத்துக்கோடா ராகவா..)
நான் எதாவது கேட்டு இல்லேன்னு சொன்னதேயில்லைங்க நீங்க...
நீங்க ரொம்ப நல்லவர்ங்க...
அப்படின்னு எல்லாம் புகழ்ந்து பேசினாங்க...

(இதுக்கு மேலும் தர்க்கம் செய்யாத ராகவா... )
4 பவுன் என்னம்ம.... அதுக்கு மேலேயே வாங்கிக்கோம்மா... உனக்கு இல்லாதாதா... (டோட்டல் சரணாகதி !!!...)

என்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...

Monday, June 8, 2009

தொ(ல்)லைப் பேசி ????!!!

அன்று அலுவலகத்தில் நுழையும் போது எல்லோரும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க.

அது ரொம்ப அதிசயமான விசயம். திங்கட்கிழமை காலை என்றாலே பெரும்பகுதி ஆட்கள் இ... தின்ன கு.... மாதிரியாடுவாங்க.

எனக்கே ஆச்சர்யம். என்னப்பா ஆச்சுன்னா...

சார் இன்னிக்கு சந்துரு அவருடைய பெண்டாட்டியை எதிர்த்துப் பேசிட்டாரு சார் அப்படின்னாங்க

என்னாடா இது அதிசயமா இருக்கு ... சந்துருவா !!!..
இருக்காது..
பொய் சொல்லாதீங்கப்பா...
திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது...

இல்லை சார் ... கண்ணனைக் கேளுங்க அப்படின்னு கூட இருந்த தர்மா சொன்னாரு..

கண்ணா என்னாச்சுப்பா.........

கண்ணன் சொன்னது ...

சந்துருவின் போன் அடிக்குது...

நம்பரை பார்த்துட்டு, தலை அடிச்சுகிட்டு, மனுஷனை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டேயே அப்படின்னு சொல்லிட்டு..

சந்துரு : சொல்லும்மா...
மனைவி : #*#*#
சந்துரு : சரிம்மா
மனைவி : ##**##
சந்துரு : சரிம்மா
மனைவி : ##*:)
சந்துரு : சரிம்மா
மனைவி : ????
சந்துரு : சரிம்மா
சந்துரு : உனக்கு எத்தனை தடவை சொல்வது... ##&&&^^^???!!!(திட்டுகின்றார்)

கண்ணனுக்கு பயங்கர ஆச்சர்யம். மனைவியிடம் இருந்து போன் வந்தாலே பயப்படுவாரே, இன்னிக்கு இவருக்கு என்னாச்சு அப்படின்னு,

பயங்கர ஷாக் ஆகி... சந்துரு கையில் இருந்து போனைப் பிடிங்கி பார்த்தால்....|
|
|
|
|
|
|
|
|
|
|போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....

இத சொன்ன உடனே, என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..

சார் நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா......
ஆள உடுங்க சார் .....