Showing posts with label போணி. Show all posts
Showing posts with label போணி. Show all posts

Wednesday, December 24, 2008

போணி... லாபம்

எல்லோருக்கும் வணக்குமுங்க..

நம்ம நண்பர்கள் கொடுத்த தெம்புல ஒரு ப்ளாக் (ஆ)ரம்பிச்சுட்டேங்க..
சரி எப்படி ஆரம்பிக்கறது அப்படின்னு எல்லாம் நம்ம கணிணியில வந்துச்சுங்க.. அதை வச்சு ஆரம்பிச்சுட்டேங்க..  ஆனா எப்படி எழுதறதுன்னு இன்னும் புரியலங்க..

நானும் எதாவது எழுதுவோமுங்க.. நீங்க எல்லாம் படிக்க வேண்டியது உங்க தலைவிதிங்க..

இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கணும் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க.. அவங்களுக்காக ஆரம்பிச்சுதுதானங்க இது.. அவங்க எல்லாம் யாரு ..

அணிமா, அறிவிழி, அதிரை ஜமால், அதிஷா, பழமைபேசி, சாரல், ரம்யா, குடுகுடுப்பை, வருங்கால முதல்வர், கிரி, பதிவு,  ஸ்ரீராம் மற்றும் பலர்..

கொலை செய்தவனை விட தூண்டியவனே குற்றவாளி.. என்னை ப்ளாக் ஆரம்பிக்கச்சொல்லி தூண்டியவர்கள் மேலே குறிப்பிட்டவர்கள் தான். அதானால் யாரவது என்னை கடித்து குதற விரும்பினால், மேலே உள்ளவர்கள்தான் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பை.. பை.. சொல்லிட்டு பின்னாடி வரேணுங்க..


வந்தவங்களுக்கும், வராதவங்களுக்கும் ரொம்ப நன்றிங்க..

கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்..    (இஃகி..இஃகி.. பழமைபேசி படித்ததின் தாக்கம்.. வேறு ஒன்னுமில்லீங்க)