பட்டாம்பூச்சி விருது கொடுத்தவர் : ரம்யா தேவி அவர்கள்
பட்டாம்பூச்சி விருது பெறுபவர் : யாரு நான் தேன்..இராகவன் நைஜிரியா
ரம்யா அவர்களுக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்தவர் : பூர்ணிமா சரண் அவர்கள்
பூர்ணிமா அவர்களுக்கு கொடுத்தவர் : விஜய் அவர்கள்
விஜய் அவர்களுக்கு விருது கொடுத்தவர் : திவ்ய ப்ரியா அவர்கள்
திவ்ய ப்ரியாஅவர்களுக்கு விருது கொடுத்தவர் : G3 அக்கா (பிராவாகம்) அவர்கள்
G3 அக்கா அவர்களுக்கு கொடுத்தவர் : கார்த்தி அவர்கள்
(என்னால முடிஞ்ச அளவு கண்டு பிடிச்சுட்டேன்.. இதுக்கு மேல யாரவது கண்டுபிடிப்பாங்க..)
இவங்களுக்கெல்லாம் கிடைச்சது சரிதான்.. இந்த லிஸ்ட்ல நான் எங்க வரேன்னு எனக்கு புரியவேயில்லை.. பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு ஜாலியா கும்மி அடிச்சுகிட்டு, தமிலிழில் ஓட்டு போட்டுகிட்டு இருந்த எனக்கு..அதுவும் Coolest .. ரொம்ப குளிருதுப்பா..
சரி, சரி விருது கிடைக்கிறதுன்னா சும்மாவா..
கிடைச்சுதுன்னா வாங்கி போட்டாச்சு...
அடுத்து யாருங்க டாக்டர் பட்டம் கொடுக்க போறீங்க.. (வ.மு அவர்களை காக்கா பிடிக்க வேண்டும் - குடுகுடுப்பை, துக்ளக் மகேஷ், அது சரி, நசரேயன் சிபாரிசு பண்ணுவார்கள் என நம்புகின்றேன்... யார் சிபாரிசு செய்தாலும் அவர்களுக்கு தனியாக black label, green label, gold label, Balentine, Chivas Regal, Black Dog, Bacardi, Smir Off, Beefeater இதில் ஒன்று தனியாக கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும் )
எவ்வளவோ நல்லவர்கள், வல்லவர்கள் இந்த வலைப்பூ உலகத்தில் இருக்க, எனக்கு விருது கொடுத்த தங்கச்சி ரம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.. (அண்ணன் மேல உள்ள பாசத்தால் அவங்க கொடுத்திட்டாங்க.. என்ன பண்ணுவது.. பாசம் கண்ண மறைச்சுடுச்சு..அதுக்காக அவங்க மேல கோபப்படாதீங்க)
இந்த விருதை நான் இன்னும் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க வேண்டும்.. அவர்கள்
1. அன்புத்தம்பி அணிமா - வாரத்திற்கு ஒரு பதிவாவது போட வேண்டும் என்பதற்காக
2. நண்பர் முரு - என்கிற அப்பாவி.. மிக அழகாக எழுதுவதற்காக
3. நண்பர் coolzkarthi - அப்போ அப்ப மொக்கை போடுவதற்கும், புதிர் போடுவதற்கும்
இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது
- இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.
- உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த ராகவனை மறக்காதீங்க
- முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
- தங்கச்சி பாசத்தில் எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி தங்கச்சி..
கடைசியாக என் அம்மா அவர்கள் சொல்வது தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது
எதுக்கோ அரைக்காசு கிடைச்சுதாம், அத வச்சுகிட்டு அது ஆடுமாம், பாடுமாம், அரக்காச தண்ணியில போடுமாம், அப்புறம் தேடுமாம், அர்த்த ராத்திரில குடை பிடிக்குமாம்... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சுங்களே...