Sunday, April 26, 2009

எது உன்னதம்.....


டிஸ்கி.... : தயவு செய்து கடைசி வரை படிக்கவும்....


தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் உங்களுக்கு விருப்பமில்லையா... அப்படியானால்....

கொஞ்சம் பிட்சா...

நோ பிட்சா ... அப்படியானால் டாக்கோ..

டாக்காவும் இஷ்டமில்லையா....

சரி மெக்சிகன் உணவு..???
இதுவும் இஷ்டமில்லையா.. ம்.. ம்... சைனீஸ் உணவு..

நூடுல்ஸ்.....????
பர்கர்ஸ்...............????

அதுவும் இல்லையென்றால்
வட இந்திய (அ) தென்னிந்திய உணவு வகைகள்...


இல்லாட்டி பாஸ்ட் புட்....?

முடிவில்லாத வகைகள் - தோசை வகைகள்..??


இல்லாட்டி அசைவ உணவுகள்....???

இல்லாட்டி இலைப் போட்டு ஒரு முழுச்சாப்பாடு....???
இதுவும் இல்லாவிடில் நம் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப எதாவது கிடைக்கும்.

ஆனால்....

இவர்களுக்கு
எந்தவிதமான விருப்பமும் கிடையாது.... விரும்பியதும் கிடைக்காது


இவர்களுக்கு தேவை எல்லாம் உயிர் வாழ கொஞ்சம் உணவு..

கொஞ்சம் நினைத்துப் பாருங்க .... உணவு விடுதியில் இருந்து வாங்கி வரும் சாப்பாடு நல்லா இல்லை என்று தூக்கி எறியும் போது..
கொஞ்சம் நினைத்துப் பாருங்க.... பொன்னி அரிசி சாதம் இல்லை என்று சொல்லும் போதோ... ரொட்டி ரொம்ப கடினமாக இருக்கின்றது என்று சொல்லும்போதோ

தயவு செய்து உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்.

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை ஒரு உதவும் அமைப்புக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.......


உதவும் கரங்கள் பிராத்தனை செய்யும் உதடுகளை விட உன்னதமானது.

உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.நன்றி : நண்பர் ஸ்ரீரங்கன் அவர்களுக்கு ...

69 comments:

சி தயாளன் said...

:-)...உண்மை தான்....நாம் வீணாக்கும் உணவுகள், குறிப்பாக தினமும் நட்சத்திர விடுதிகளில் வீணாக்கும் உணவுகளை பாக்கும் போது கவலையாக இருக்கும்

Anonymous said...

நல்ல பதிவுங்க. சிறு வயதிலே பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டிய சமாச்சாரம்.
நான் படித்த பள்ளிக்கூடத்தில் உணவை ஒழுங்காக சாப்பிடவேண்டும் என்று கறாராக இருப்பார்கள். அதனாலோ என்னவோ இன்று வரை எனக்கு சாப்பாட்டை வீணடிக்கும் பழக்கம் வரவில்லை. (என் குழந்தை மீதம் வைப்பதையும் சேர்த்து சாப்பிட்டு டபுள்ஸ் அடித்து கொண்டிருப்பது வேறு விஷயம்).

sakthi said...

arumaiyana pathivu raghav anna

தமிழ் அமுதன் said...

நீங்க சொல்லி இருக்கும் கருத்து அருமை!

நாம் சொல்ல வந்த விஷயத்தை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று
உங்ககிட்டதான் கத்துக்கணும்! கிரேட்!!

வழிப்போக்கன் said...

நல்ல கருத்து...

S.A. நவாஸுதீன் said...

நல்ல கருத்துள்ள பதிவு இராகவன். அதை ரொம்ப அழகா வேற சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

Anonymous said...

Naatukkoru Nalla Seithi...

Rajeswari said...

great post.

Rajeswari said...

கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.நிறைய பேருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

Rajeswari said...

ஜீவன் said...
நீங்க சொல்லி இருக்கும் கருத்து அருமை!

நாம் சொல்ல வந்த விஷயத்தை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று
உங்ககிட்டதான் கத்துக்கணும்! கிரேட்!!
//

ஜீவன் அண்ணா சொன்னதை வழிமொழிகிறேன்

அப்பாவி முரு said...

அண்ணா,

அருமையான பதிவு.

எல்லோரும் உணவு விசயத்தில் புத்தி சொல்லுறப்ப ஆப்ரிக்க நாடுகளை மட்டும் காமிப்பாங்க.

ஆனால், இந்தியாவுலையும் உணவுக்கு கஷ்ட்டப்ப்டுற மக்கள் இருக்காங்க, மிச்சமாகும் உணவை எடுத்திட்டு போகவும் அமைப்பு இருக்கு காமிச்சீங்களே, நல்ல மனசு, நல்ல முயற்சி.

துளசி கோபால் said...

நல்ல பதிவு ராகவன்.

உணவுப்பொருட்களை வீணாக்குவதே பாவம்.

தேவைக்கு மட்டுமே சாப்பிடணும்.

விசேஷ நாட்களுக்கு ஆடம்பரமாச் செலவு செய்யாமல் ஒரு பகுதிக் காசை பிள்ளைகளைக் காப்பாற்றும் சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கணும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆரம்பத்துல ஏதோ விளையாட்டு சமாச்சாரம்னு நினைச்சேன் நண்பரே.. நல்ல பதிவு.. எங்க கல்லூரி ஹாஸ்தல்ல இந்த மாதிரி படங்கள் போட்டு உணவை வீணாக்க வேண்டாம்னு கோரிக்கை வச்சு இருக்கோம்.. படங்களை பார்க்கும்போது மனசு கனத்துப் போவது நிஜம்

ஆதவா said...

பசியோடுதான் படங்களைப் பார்த்தேன்
பசி மறந்துவிட்டது.

பெரும்பாலும் (99%) நான் உணவு வகைகளை வீணாக்குவதில்லை. ஏனெனில் அதன் அருமை நன்கு உணர்ந்தவன். உணவுக்காக எப்படி அலைந்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதைப் போன்றே நான் வீட்டில் சமைக்கு உணவு வகைகளில் குறை கூறவும் மாட்டேன்.

நான் வாழ்வில் பிச்சையிட்டது ஒரே ஒருமுறை. அது ஒரு மூதாட்டிக்கு..

இரண்டு இட்லிகள்!!

ஆதவா said...

உங்களது சமூக சிந்தனைகளுக்கு நான் தலைவணங்குகிறேன்!!!

அன்புடன்
ஆதவா

நிகழ்காலத்தில்... said...

நண்பர்களை சிந்திக்க வைக்கும் பதிவு

வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

உணவு எவ்வளவு முக்கியம் உயிர் வாழ அதை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை
சொல்லியிருக்கிறீர்கள் .

வேத்தியன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு ராகவன் அண்ணா...

நல்ல முயற்சி...

வேத்தியன் said...

முக்கியமாக திருமண வீடுகளில் சொல்லவே வேண்டாம்...

தத்தமது பலத்தைக் காட்டுவதற்கு ஆயிரக்கணக்கில் உணவுப்பண்டங்களை செய்து கொணர்ந்து தேவையா இல்லையா எனக் கூடக் கேட்காமல் ஒவ்வொரு இலையிலும் வைத்து விட்டுச் செல்வார்கள் உணவு பரிமாறுபவர்கள்...
அதில் ஏராளமானவை அநியாயமாகக் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுவது வருத்தம்...
உணவுப் பணட்ங்களை செய்து கொணர்வது தப்பில்லை..
அதை தேவையானவர்களுக்கு மட்டும் பரிமாறி மீதியை தேவைப்பட்டவர்களுக்கு கொண்டுபோய் கொடுக்கலாம் இல்லையா...

நல்ல இடுகை அண்ணா...

coolzkarthi said...

அண்ணா,

அருமையான பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

அருமை.... படங்களில் ஒரு கவிதை, ஒரு போராட்டம், ஒரு திரைப்படம் எல்லாம் முடிந்தது... முடிந்ததும்... மனம் கனத்தது..... நாமும் ஏதாவது செய்யனும் என்ற எண்ணம் உருவாக்கிவிட்டது.... பாராட்டுகள் நண்பா... "உணவு பொருளை வீணடிக்க வேண்டாம் என்ற சபதம் எடுத்தாச்சி"

அறிவிலி said...

நல்லெண்ணத்திற்கு பாராட்டுகள்.

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் கூறிய சிந்தனைக்கு பாராட்டுகள்.. எங்கள் ஊரிலும் திருமணம் போன்ற விழாக்களில் மீதம்படும் உணவை அருகில் உள்ள அனாதை இல்லத்திற்கு வழங்குவது உண்டு. சிலர் இந்த இல்லதிற்காகவே அதிகமாக சமையல் செய்து கொடுப்பதும் உண்டு..... அன்பு இல்லம் என்ற அமைப்பு நடத்தி வருகின்றது.. மேலும் தஞ்சையிலும் அந்த அமைப்பு உள்ளது. இங்கு 45 அனாதை குழந்தைகள் உள்ளார்கள்.. இதில் சில குழந்தைகள் எய்ஸ்ல் பாதிதுள்ளார்கள் என்பது வேதனையான விடயம்...

அப்துல்மாலிக் said...

பார்க்க பார்க்க பசித்தது

பார்த்தவுடன் பசி மறத்தது

அருமையான விழிப்புணர்ச்சி அண்ணாத்தே

அப்துல்மாலிக் said...

நல்ல சிந்தனை தல‌

எங்க ஊரிலும் திருமணம் மற்றும் சில காரியங்கள் நடந்து உணவு மிகுதியானாள் பைத்துல்மால் (பொது நல தொண்டு) என்ற அமைப்புக்கு கொடுத்து உணவில்லாதவற்களுக்கு பகிர்ந்தளீக்கப்படும்

அப்துல்மாலிக் said...

இன்னும் மேலே போய் கல்யாணம் மற்ற காரியங்களுக்கு விருந்து கொடுத்து வீண்விரயம் செய்வதற்கு... ஏழை மாணவர்கள் (அனாதைகள்) படிக்கும் பள்ளிக்கு அன்று ஒரு நாள் அதே சுவையுடன் நல்ல விருந்து பரிமாரப்படும்.... இது எங்க ஊரில் நடந்துவருகிற ஒரு நல்ல காரியம்.

Unknown said...

மிக நல்ல பதிவு. தெரிந்து தெளிய வேண்டிய கருத்துகள்.

தேவன் மாயம் said...

பின்னீட்டிங்க! உணவை வீணாக்கக்கூடாது!

தேவன் மாயம் said...

இன்னும் மேலே போய் கல்யாணம் மற்ற காரியங்களுக்கு விருந்து கொடுத்து வீண்விரயம் செய்வதற்கு... ஏழை மாணவர்கள் (அனாதைகள்) படிக்கும் பள்ளிக்கு அன்று ஒரு நாள் அதே சுவையுடன் நல்ல விருந்து பரிமாரப்படும்.... இது எங்க ஊரில் நடந்துவருகிற ஒரு நல்ல காரியம்.///

இதுவும் நல்ல ஐடியா/

மணிநரேன் said...

நல்லதொரு கருத்துள்ள பதிவு.

தேவன் மாயம் said...

உணவுப்பொருட்களை வீணாக்குவதே பாவம்.உண்மை தான்நல்ல பதிவுங்க

Dr. சாரதி said...

great ragavan sir

தேவன் மாயம் said...

ஒவ்வொரு முறை உண்ணும்போதும் இது நினைவுக்கு வந்தால் போதும்/

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான் பதிவுண்ணே

http://urupudaathathu.blogspot.com/ said...

கருத்துள்ள பதிவு...

உன்மை தான்...

rose said...

ஆரம்பத்தில் சிரிப்புடன் படித்தேன் பிறகு மெய் மறந்தேன்.அருமை அண்ணா

rose said...

அதை நீங்கள் விளக்கி இருக்கும் விதம் அதைவிட அருமை

மகேஷ் : ரசிகன் said...

நல்ல கருத்து அண்ணே..

அ.மு.செய்யது said...

காரணம் இல்லாம ட்ரீட் என்ற பெயரில் ஒரு உயர்தர விடுதிக்கு சென்று ஒரு நபர் புஃபேக்கு 400 முதல் 600 வரை கூசாமல் செலவு செய்கிறோம்.

அந்த 400,500 ரூபாய் இருந்தால் 10 பேருக்கு வயிராற உணவளிக்கலாம் என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.

நல்லதொரு பதிவு ராகவன் அவர்களே !!!!

அ.மு.செய்யது said...

//"எது உன்னதம்....."? "

நிச்சயமாக உங்கள் பதிவு தான்.

சிந்திக்க வைத்த பதிவு !!!

vasu balaji said...

பயனுள்ள பதிவு. நன்றிங்க‌

ஆளவந்தான் said...

பயனுள்ள தேவையான் பதிவு

இதையும் பாருங்கள்

புதியவன் said...

//எந்தவிதமான விருப்பமும் கிடையாது.... விரும்பியதும் கிடைக்காது//

பொட்டில் அடித்தது போல் இருந்தது...

சிந்திக்க வேண்டிய பதிவு ராகவன் அண்ணா...

Cable சங்கர் said...

அருமையான பதிவு இராகவன்..

Unknown said...

தேவைக்கு அதிகமான நாட்கள் அரசாங்கத்தால் கிடப்பில் வைக்கப்பட்டு பல டன்கள் யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப் படுகிறது. அவற்றை சரியாக மக்களுக்கு கொண்டு சென்றாலே அவர்களுக்குப் பாதி கஷ்டம் இல்லை. தேர்தலென்று வந்தால் தான் ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் என்று அறிவிப்பு வரும்.

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான பதிவு. அவசியமும் கூட.

கடைக்குட்டி said...

சிந்தனையைத் துண்டும் பதிவு..

SUBBU said...

நல்ல கருத்து...

Tech Shankar said...
This comment has been removed by the author.
Tech Shankar said...

me the 50th

நன்றிகளுடன்

நானே

सुREஷ் कुMAர் said...

உண்மையிலேயே நல்ல கருத்து அண்ணா..
அதுவும், பக்கம் பக்கமா எழுதி புரிய வெக்காம, இப்டி டக்கரான படங்களில் தொடங்கி பீலிங்க்ஸ் படங்களின் முடிவில் கருத்தை நச்சுனு போட்டு தாக்கிடிங்க தலைவா..

सुREஷ் कुMAர் said...

அடடா.. 50'a மிஸ் பண்ணிட்டனே..

வால்பையன் said...

அண்ணே எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டிங்க!

Unknown said...

நெம்ப டச் பண்ணிபோட்டீங்கோவ்..!! அருமையான விழிப்புணர்வுங் ....!! இனிமேலு யாருமும் உணவை வீனாக்கமாட்டாங்கோவ் ....!!!!


அருமை ....!! வாழ்த்துக்கள்....!!!!

லோகு said...

அருமையான பதிவு....

ஒரு நல்ல செய்தி.. எங்கள் கிராமப்பகுதியில் விசேச தினங்களில் மீதமாகும் உணவுகளை அருகிலுள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுக்கும் பழ்க்கம் பெருகி வருகிறது..

நானும் சில முறை இதை செய்திருக்கிறேன்..

Anonymous said...

http://kettavan666.blogspot.com/2009/04/ipl.html .... தங்கள் வாக்கை இங்கே அளிக்கலாம் .....

Suresh said...

:-( படித்து கண்ணீர் விட்டேன் ஹாட்ஸ் ஆப் இராகவன் சார்

கீழை ராஸா said...

அருமையானபதிவு நண்பரே...

குடந்தை அன்புமணி said...

தயவுசெய்து கடைசிவரை படிக்கவும் என்று போட்டிருந்ததும்... ஏதோ ஒரு அதிரடி இருக்குன்னு நினைச்சேன். ஆனா...இப்படி எதிரடியாக இருக்கும்னு நினைக்கவில்லை...நல்ல பதிவு. அனைவரும் நிச்சயம் கடைப்பிடிக்கணும்!

தீப்பெட்டி said...

முகத்தில் அறைந்த பதிவு..
நன்றி

Anonymous said...

பாவப்பட்டவர்களின் பசிமுகம்..
பணக்காரர்ககளின் ருசிவகை ஒரு அறிமுகம்...
அறிந்துக்கொள்ள ஆயிரம் புரிந்துக்கொள்ள கோடி என அறிவுறித்தினீர்...

ers said...

நல்ல பதிவு. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

jothi said...

Good,.. All of us start to follow this,.

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு. உணவினை வழங்க உடன் தொடர்பு கொள்ள உதவியாக தொலைபேசி எண்ணும் கொடுத்திருப்பது சிறப்பு.

பாருங்களேன் நேரம் கிடைக்கையில் இதையும்.

Erode Nagaraj... said...

வாசுதேவன் வாய் திறந்தால்
வானம்-பூமி வகைகள் கண்டோம்...
வாடிய இவர்க்கு வாய்த்திருந்தால்
வாயோரம் நகைகள் காண்போம்.
வஞ்சமின்றி உண்ணுகையில்
வந்து போகும் இம்முகங்கள்,
கொஞ்சமென்று கொடுத்திடினும்
கொண்டு வரும் நல்வினைகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசியில ஏதோ காமெடியா முடிப்பீங்கன்னு நெனச்சேன், ஆனா கலங்கடிச்சிட்டீங்களே...

அந்தக் குழந்தையை கையில் வைத்திருக்கும் இன்னொரு குழந்தை

அய்யோ...........
கண்டிப்பா நீங்க சொல்லியிருக்கிற விஷயம் ஃபாலோ பண்ணவேண்டிய ஒன்னு.

வலசு - வேலணை said...

நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் ஐயா

Poornima Saravana kumar said...

உண்மையிலேயே நல்ல பதிவு அண்ணா..
நன்றாக சொன்னீங்க.. முடிந்த வரையில் உணவை வீணாக்காமல் இருந்தால் போதும்.

seethag said...

while browsing landed in your blog ....i thot ill informa correction. 1098 is child helpline, and they specifically mention that they DONT collect food.So could you please correct the information.

Otherwise i totally agree with you. PARTICulalry the vulgar waste of money in our weddings...that could feed many people many times.