Wednesday, July 21, 2010

நினைவலைகள்



பல வருடங்கள் கழித்து, கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு பின், நாம் படித்தப் பள்ளியைப் பார்க்கும் போது, அதன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில படங்கள் உங்கள் பார்வைக்காக...



பள்ளியின் நுழை வாயில்


சற்றே தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


எங்கள் குறும்புகளைப் தாயன்போடு பொறுத்துக் கொண்ட எங்க அன்பு தலைமை ஆசிரியர், எல்லோராலும் அன்போடு கே.ஜி.கே என்றழைக்கபடும், உயர் திரு. கே.ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்கள். அன்னாருக்கு அகவை 84. இன்றும் அவரின் கம்பீரமான குரலும், ஞாபக சக்தியும் மிகவும் ஆச்சர்யமூட்டுவதாக அமைகின்றது. அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை விட, அவர் என் தந்தையின் மாணவர் என்பதில் பெருமை அதிகம்.



தற்போதைய தலைமை ஆசிரியை... கடந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 97 சதவிகிதம் என அவர் வாயால் சொல்ல கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.




+2 வில் கூடப் படித்த நண்பர் திரு. ராம நாதன் அவர்கள். 30 வருடம் கழித்து சந்தித்த போது, பல மணி நேரங்கள் பேசியும், பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருப்பது மாதிரியே தோன்றுகின்றது. சிகப்பு சட்டையில் அமர்ந்திருப்பவர் என் அண்ணன் முரளி அவர்கள்.



லேப் வகுப்புக்ள் நடைபெறும் கட்டடம்.


கணினி பயற்சி வகுப்பு.. அருமையாக இருக்கின்றது.


கலையரங்கம் - புதியதாக கட்டப் பட்டுள்ளது


தூரப் பார்வையில்... வலதுகை பக்கம் முதல் வகுப்புதான் நான் படித்த போது வகுப்பறையாக செயல் பட்டது. அப்போதெல்லாம் இவை கூரை வேயப் பட்டு இருந்தது... இப்போது அழகாக..


இந்த சிறுவர்களைப் பார்க்கும் போது... இங்குதான் குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ், எலந்த பழம், எலந்த வடை... வாங்கி சாப்பிட ஞாபகங்கள்...


பள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...

74 comments:

ஸ்ரீ.... said...

அண்ணே,

தமிழ்நாட்லதான் இருக்கேன்னு இந்தத் தம்பிக்குத் தெரியாது. ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே! பரவாயில்லை. எப்ப சென்னைக்கு? இடுகையும், படங்களும் அருமை! நேரில் சந்திக்கும் நாளை எதிபார்த்திருக்கிறேன்.

ஸ்ரீ....

மங்களூர் சிவா said...

சூப்பர். நான் படிச்ச ஸ்கூல் திரும்ப நான் எப்ப பாக்க போறேன்னு தெரியலை :(

Jey said...

பள்ளிக்காலங்களின் நினைவுகள் எப்போதும் நம்மைவிட்டு அகல்வதில்லை.

மதுரை சரவணன் said...

என் நினைவலைகள் உங்களின் பேச்சின் தாக்கம் இன்னும் குறையவில்லை.. உங்களைப்பற்றி ஒரு போட்டி என் பிளாக்கில் வைத்துள்ளேன்... பார்க்கவும்.. என் அடுத்த பதிவிற்கு டைப் செய்து கொண்டு இருப்பதால் ஒரு சிறிய விளம்பர இடைவேளை ...உங்களை வைத்து ... நினைவலைகள் அருமை. மூண்றாவது இடுகை மறக்காமல் படிக்கவும். ...வாழ்த்துக்கள். அரவிந்த் கேட்டதாக கூறவும்.

Santhosh said...

நான் வார வாரம் நான் படிச்ச பள்ளி கூடம் பக்கம் போறேனே :)

ஷங்கர் said...

சார் ,
கும்பகோணம் பாண துறை பள்ளியா சார் நீங்கள் ? என் நண்பனும் இங்கு தான் படித்தான் ....,அவன் 1996-1997 ஆம் ஆண்டு பத்தாவது முடித்தான் ...இப்போ நல்ல நிலைமையில் உள்ளான் ஒரு கம்பென்யில் QUALITY MANAGER ஆகா உள்ளான் சார் ...

ஷங்கர்
சென்னை

சிநேகிதன் அக்பர் said...

மலரும் நினைவுகள் அருமை ராகவன் அண்ணா.

க ரா said...

நல்ல நினைவோடை.

நேசமித்ரன் said...

அடி தூள்!!! களம் இறங்கியாச்சா??

நேசமித்ரன் said...

படம் பக்கா !

நேசமித்ரன் said...

நாட்டாம தலைப்பு சரியா ?

"நினவலைகள்" ????????

நீச்சல்காரன் said...

சுவரஸ்யமாக உள்ளது.

ராம்ஜி_யாஹூ said...

மிக அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள், புகைப் படங்கள் மிக அருமை. நன்றிகள்

shortfilmindia.com said...

ahaa. எல்லாருக்கும் இம்மாதிரியான வாய்ப்புகிடைப்பதில்லை அண்ணே..
கேபிள்சங்கர்

butterfly Surya said...

அலாதி அனுபவம்..

அசத்தல்.

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான சந்திப்பை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

புகைப்படங்கள் அழகு.

Unknown said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே....

படங்கள் நல்லா இருக்குங்க.

பத்மா said...

அப்போ இங்க ஊர் பக்கம் வரலியா?

Jerry Eshananda said...

பகிர்வுகள் அருமை,இனி...நாளும் அன்பில் தொடர்வோம்.

pudugaithendral said...

இனிமை நிறைந்த நினைவுகள்.

தமிழ் உதயம் said...

எத்தனை வளர்ச்சிகளை நாம் பெற்றாலும், அந்த மாணவப் பருவத்தை நாம் மறக்க இயலாது. நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததும் அந்த மாணவப் பருவம் தான் என்பதையும் மறுக்க முடியாது.

CS. Mohan Kumar said...

ஆஹா ராகவன் நீங்க கும்பகோணமா? நான் நீடமன்கலம் அண்ணே; எங்க அப்பா கும்பகோணம் தான். ரொம்ப மகிழ்ச்சி.

பழைய பள்ளி போய் வருவது ரொம்ப இனிமையான நினைவு தரும். அருமை

Vidhoosh said...

அதானே பார்த்தேன். இத்தனை குசும்பு எப்படி வத்ததுன்னு... :))

ஊருக்கு வந்துட்டு இப்டி கம்னு போனா எப்படி?

வெங்கட் நாகராஜ் said...

பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தி பார்ப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம். அதுவும் நாம் படித்த பள்ளிக்கு இத்தனை காலம் சென்று வரும்போது குதூகலம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். பார்க்கலாம் எனக்கு இந்த வாய்ப்பு எப்போது வருகிறது என. பகிர்வுக்கு நன்றி.

நாடோடி said...

இனிமையான‌ நினைவ‌லைக‌ள்....

Rajeswari said...

மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்றுமே நம்மை விட்டு அகலாமல் இருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்று பள்ளி பருவம். அந்த காலகட்டத்தில் இருந்த இடங்களை இன்று சென்று பார்ப்பது என்பது மிகப்பெரிய பாக்கியம். புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது சந்தோசமாய் இருக்கிறது.

vasu balaji said...

Enjoy:)

Chitra said...

அருமையான நினைவுகளை படங்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அருமையா இருக்குதுங்க....!

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு ராகவன்.. சென்னைக்கு எப்ப வர்றீங்க..?

ஹேமா said...

வாங்கோ வாங்கோ இராகவன்.
சுகம்தானே.நிறைய நாளைக்கு அப்புறம் நிறைவான எங்களின் வாழ்வை,அறிவை,பண்பை உயர்த்திய இடத்தோடு களை கட்டி நிற்கிறது பதிவு.நீங்க இருந்த வகுப்பறை,உங்க இருப்பிடத்தையும் எடுத்திட்டு வந்திருக்கலாமே !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாங்க வாங்க..! ரொம்ப அருமையான நினைவுகள், அழகான படங்களுடன்..!

Unknown said...

என் பள்ளிக்கூடத்துக்கு போன மாதிரி இருக்கு...

தேவன் மாயம் said...

அங்கேயிருந்தே ஆரம்பிச்சாச்சா!!! நல்ல பகிர்வு!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடி திரிந்த பறவைகளே,
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் - நாம்
பிரிந்து செல்கின்றோம்.

பள்ளி நினைவலைகளில் மூழ்க
வைத்த இடுகை!

'பரிவை' சே.குமார் said...

பள்ளி நினைவுகளை என்றும் பசுமையானவைதான்... அதிலும் படித்த பள்ளிக்கு மட்டும் செல்லாமல் நண்பருடன் அளவளாவிய சந்தோஷமும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்த இரட்டை சந்தோசத்தை படங்களுடன் எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி ராகவன் சார்.

'பரிவை' சே.குமார் said...

பள்ளி நினைவுகளை என்றும் பசுமையானவைதான்... அதிலும் படித்த பள்ளிக்கு மட்டும் செல்லாமல் நண்பருடன் அளவளாவிய சந்தோஷமும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்த இரட்டை சந்தோசத்தை படங்களுடன் எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி ராகவன் சார்.

மதுரை சரவணன் said...

அண்ணா தற்போது எங்கு உள்ளீர்கள்..நான்காவது பதிவு படித்து ...நினைவலைகளை பகிரவும்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஸ்ரீ... சென்னை வந்ததும் தகவல் தெரிவிக்கின்றேன்..

நன்றி மங்களூர் சிவா

நன்றி Jey

நன்றி மதுரை சரவணன் - மதுரை சந்திப்பின் தாக்கம், உங்கள் அன்பு என்னோடு எப்போதும் பயண செய்து கொண்டே இருக்கின்றது.

நன்றி சந்தோஷ்

நன்றி ஷங்கர்

நன்றி அக்பர்

நன்றி இராமசாமி கண்ணண்

நன்றி நேசமித்ரன்
// நாட்டாம தலைப்பு சரியா ?

"நினவலைகள்" ???????? // புரியலை நேசா...

நன்றி நீச்சல்காரன்

நன்றி ராம்ஜி_யாஹூ

நன்றி கேபிள்சங்கர்

நன்றி butterfly Surya

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி கலாநேசன்

நன்றி பத்மா
// அப்போ இங்க ஊர் பக்கம் வரலியா? // இல்லீங்க அடுத்த தடவை வருகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜெரி ஈசானந்தன்.

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி தமிழ் உதயம்

நன்றி மோகன் குமார்
// ஆஹா ராகவன் நீங்க கும்பகோணமா? நான் நீடமன்கலம் அண்ணே; எங்க அப்பா கும்பகோணம் தான். ரொம்ப மகிழ்ச்சி.

பழைய பள்ளி போய் வருவது ரொம்ப இனிமையான நினைவு தரும். அருமை // ஆமாங்க படித்தது எல்லாம் கும்பகோணம்..

நன்றி Vidhoosh(விதூஷ்)
//அதானே பார்த்தேன். இத்தனை குசும்பு எப்படி வத்ததுன்னு... :))

ஊருக்கு வந்துட்டு இப்டி கம்னு போனா எப்படி? //

அது காவேரித்தண்ணியின் மகிமை.

நன்றி வெங்கட் நாகராஜ்
// பார்க்கலாம் எனக்கு இந்த வாய்ப்பு எப்போது வருகிறது என. பகிர்வுக்கு நன்றி. // விரைவில் கிடைக்கும்..

நன்றி நாடோடி

நன்றி தங்கச்சி Rajeswari

நன்றி வானம்பாடிகள் அண்ணே

நன்றி Chitra அக்கா

நன்றி thenammailakshmanan
// அருமையான பகிர்வு ராகவன்.. சென்னைக்கு எப்ப வர்றீங்க..? // ஞாயிற்றுக்கிழமை (25/07/10) மாலை சென்னையில் இருப்பேன்.

நன்றி ஹேமா.

நன்றி Ananthi

நன்றி கே.ஆர்.பி.செந்தில்


நன்றி மருத்துவரே.. தேவன் மாயம்

நன்றி NIZAMUDEEN

நன்றி சே.குமார்

நன்றி மதுரை சரவணன்
// அண்ணா தற்போது எங்கு உள்ளீர்கள்..நான்காவது பதிவு படித்து ...நினைவலைகளை பகிரவும்.//

படித்துவிட்டேன்.. அண்ணே மதுரைக்காரவுக எல்லாம் ரொம்ப பாசமானவுங்க... நீங்க அன்பு மழை பொழியறீங்க. உங்க புகழ்ச்சிக்கெல்லாம் நான் தகுதியானவானா என்று புரியலீங்க..

வால்பையன் said...

கலக்கிபுட்டிங்க அண்ணே!

எனக்கும் படிச்ச பள்ளி பக்கம் போக ஆசை வந்துருச்சு!

pinkyrose said...

ஹ்ய்யோ ஸ்கூலா?

இராகவன் நைஜிரியா said...

நன்றி வால்பையன்

நன்றி பிங்கி ரோஸ்

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

நினைவலைகள் - கொசு வத்தி சுத்துவது - மலரும் நினைவுகள் - அருமை அருமை

சிறு வயதில் பள்ளி வாழ்க்கை சுகம்

படியுங்களேன்

http://cheenakay.blogspot.com/2007/11/5.html

நல்வாழ்த்துகள் ராகவன்
நட்புடன் சீனா

Kumky said...

:))

தொடரை எதிர்பார்க்கின்றேன்...

R.Gopi said...

அட..........

கூட பிறந்தவர்களையே மறந்து விடும் இந்த காலத்தில் நீங்கள் படித்த பள்ளி, தலைமையாசிரியர் ஆகியோரை சென்று பார்த்தது, 30 வருடம் கழித்து ஃப்ரெண்ட் ராமநாதனை பார்த்தது, எல்லாமே மிகவும் பாராட்டத்தக்கது தல....

//வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்//

கண்டிப்பாக மிக மிக இனிமையான அனுபவம் தான்...

இராகவன் நைஜிரியா said...

நன்றி சீனா ஐயா. உங்களின் இடுகையைப் படித்தேன். நன்றி.

நன்றி கும்க்கி - இந்த தடவை தொடர் என்னிடம் இருந்து வராதுங்க. நண்பர்கள் போடுவார்கள்.

நன்றி கோபி

நேசமித்ரன் said...

நினைவலைகள் தான் அண்ணே சரி

நினவலைகள் தவறு :) ’னை’

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்ப திருச்சி பக்கம் வல்லியா? திருச்சி பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன். உங்களுக்காக ஒரு மூன்று பதிவுலக நண்பர்கள் காத்துக் கிட்டு இருக்கோம்!

இராகவன் நைஜிரியா said...

// ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
அப்ப திருச்சி பக்கம் வல்லியா? திருச்சி பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன். உங்களுக்காக ஒரு மூன்று பதிவுலக நண்பர்கள் காத்துக் கிட்டு இருக்கோம்! //

திருச்சி பக்கம் நீங்க இருக்கீங்கன்னு தெரியாதுங்க. கும்பகோணம் - மதுரை திருச்சி வழியாகத்தான் போனோன். தெரிஞ்சு இருந்தா வந்து பார்த்து இருப்பேன்.

அடுத்த தடவை இந்தியா வரும்போது அவசியம் வந்து பார்க்கின்றேன்.

jokkiri said...

இடுகைக்கு சம்பந்தம் இல்லாதது தான்.. இருப்பினும், இங்கு வருகை தரும் நண்பர்களும், நீங்களும் என் இந்த பதிவை கட்டாயம் படித்து உதவலாமே..

ஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி
http://edakumadaku.blogspot.com/2010/08/blog-post.html

குடந்தை அன்புமணி said...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்... சுகமான நினைவலைகள்.... பள்ளிக்கூடத்தோடு திரும்பியாயிற்றா... மற்ற இடங்கள்... அடுத்த பதிவிலா...

Vijiskitchencreations said...

nice pictures.
We never get those school days.
Especially nice memories and friends.

www.vijisvegkitchen.blogspot.com

ப.கந்தசாமி said...

பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் சந்தோஷமானவை.

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

மா.குருபரன் said...

அருமையான பதிவு நண்பரே.... புகைப்படங்களையும் அவற்றிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் சிறு குறிப்பும் எம்மையும் பாடசாலை நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது. நன்றி

Punnakku Moottai said...

ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.

ஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.

Punnakku Moottai said...

ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.

ஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.

R. Gopi said...

கும்பகோணமா உங்களுக்கு? நானும்தான். நான் டவுன் ஹை ஸ்கூல்.

Priya Magesh said...

நீங்க கும்பகோணம்ஆ, இப்போ தன உங்க பதிவ படிச்சேன். ஊர்காரவங்கள பார்த்த ஒரே சந்தோஷம் தான். வாழ்த்துக்கள் அண்ணா.

ஜோதிஜி said...

தாங்கள் இன்று பெற்றுள்ள வளர்ச்சியின் அடிப்படை இங்கிருந்து தான் தொடங்கியது என்பதை நினைக்கும் போது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கு தல.

அன்புடன் நான் said...

இப்பதாங்க படித்தேன் படிக்கும் போது ஒருவித இனம்புரியா உணர்வு ஒட்டிக்கொள்கிறது.....

அது ஒரு கனா காலம்.

priyamudanprabu said...

பள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...
///////

EPPAVUME SUKAMANA ANUPAVAM ATHU..

RVS said...

நீங்க இப்ப என்னோட பள்ளி பருவ ஞாபகங்களை கிளப்பி விட்டுட்டீங்க. இப்ப நா அதை பதிவா எழுதி படுத்தினா எல்லோரும் உங்களை தான் திட்டப் போறாங்க.. முடிக்கறத்துக்கு முன்னாடி ஒன்னு.. உங்களுக்கு பக்கத்தில தான் நான்.எனக்கு குடி அதாவது மன்னார்குடி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ADHI VENKAT said...

ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கும் இப்போதே என் பள்ளிக்கூடத்தை போய் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

இடைவெளிகள் said...

பாண்டவர் பூமி படத்தில்வரும் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் எனும் பாடலை நினைவுப்படுத்துகிறது உங்களின் பள்ளிக்கூட நினைவலைகள். பாராட்டுக்கள்

பாத்திமா ஜொஹ்ரா said...

ஈத் முபாரக்

Unknown said...

பள்ளிக்காலங்களின் நினைவுகள்... எப்போதும் குதூகலம் வருகிறது.வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி said...

ரொம்ப நாளா ஒண்ணும் எழுதலயே, ஏன்? வேலைப்பளுவானால் பரவாயில்லை. சலிப்பு என்றால் அதை விரட்டுங்கள்.

ரிஷபன் said...

நீங்க படிச்ச பள்ளிய பார்க்கையில ரொம்ப சந்தோஷம்..

Admin said...

படங்களோடு ஓர் அனுபவப் பகிர்வு... அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் சார்

Aathira mullai said...

கருவில் வார்த்தெடுத்த அன்னையையும் கல்வியில் வளர்த்தெடுத்த பள்ளியையும் யாரால மறக்க முடியும். நல்ல பதிவு.. கிளர்ந்தெழுந்த பள்ளிப்பருவ நினைவுகளுடன்..

Ahamed irshad said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

Thoduvanam said...

1958 இல் பாணாதுறைப் பள்ளியில் படித்தேன் நல்ல சிவந்த நிறம்.கணீர்க் குரல்.கே.ஜி.கே அவர்கள் சரித்திரப் பாடம் எடுத்ததாக நினைவு கன்னையன் என்ற என் வகுப்புத் தோழர்,பிரபலம் ..பழைய நினைவுகளில் என்னை மறந்தேன் ..
நன்றி ..உங்களை மாதிரி தடுக்கி விழுந்த விட்டில் ..

அப்பாதுரை said...

பாணாதுறை பள்ளி மாணவரா நீங்க! என் அம்மா வழியில் அத்தனை பேரும் படித்த பள்ளி. அதனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.