Wednesday, December 24, 2008

கார் ஓட்டிய அனுபவம்

எல்லோருக்கும் கம்பெனில வேல செய்ய ஓவர் டைம் கொடுப்பாங்க.. நம்ம விஷயம் வேற மாதிரிங்க.. நம்ம மேலதிகாரிக்கு நம்ம பிடிச்சு போச்சுங்களா.. அவர் நான் லீவுல போகும் போது, இந்தியாவில் இருந்து திரும்பி வரும் போது டிரைவிங் லைசன்ஸ் கூடத்தான் வர வேண்டும் என கண்டிச்சு சொல்லி அனுப்புனாருங்க.. நாமும் மடிப்பாக்கத்தில இருக்கிற XXX டிரைவிங் ஸ்கூல் போய் அந்த டிரைவிங் ஸ்கூல் முதலாளியைப்பார்த்து பணத்தையும் கட்டியாச்சுங்க.. பேருக்கு டிரைவிங்கும் கத்துகிட்டு..லைசென்ஸ்ம் வாங்கியாச்சுங்க..

சைனா போய் நம்ம தலைவர்கிட்ட லைசன்ஸ் வாங்கியாச்சு அப்படின்னு காண்பிக்க அவரும் அவருடைய நிசான் கார கொடுத்து (நாம கத்துகிட்டது மாருதிங்க) ஓட்டு அப்படின்னாரு..

முதல்ல வண்டியில சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணி,  கிளட்ச அமுக்கி, முதல் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரில் கால வச்சதுதாங்க தாமசம், அவரு பயந்து போய், stop, stop அப்படின்னு கத்தினாருங்க.. (ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )

முதல்ல நல்லா வண்டி ஓட்ட கத்துக்க.. அப்புறமா இங்க லைசன்ஸ் வாங்கலாம் அப்படின்னு சொல்லிட்டாருங்க.. 

அதுக்காகத்தான் 1 மாசத்துக்கு தினமும் 1 மணி நேரம் ஓவர் டைம் கொடுத்து அவர் வண்டியையும் கொடுத்து கம்பெனி யார்ட்ல (அங்கதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல யாரும் இருக்க மாட்டார்கள்) ஓட்ட பழகிக்கொடுத்தாருங்க.. இதுதாங்க வண்டி ஒட்ட கத்துக்க ஓவர் டைம் வாங்கின விஷயம்.. 

நம்ம ஊர்ல இடது ப்க்கம் ஓட்டணுமிங்க.. சைனாவில் வலது பக்கம் ஓட்டணுமிங்க.. நம்ம நண்பர் ஒருத்தர் எப்போதும் கூட வருகின்றவர், வலது பக்கம் ஓட்டு அப்படின்னு ஞாபகப்படுத்திக்கிட்டே வருவாருங்க. அவர் வேலையை ராஜினாமா பண்ணிகிட்டு போய்டாருங்க. அவரு இருந்த வரைக்கும் எல்லாம் சரியா போய்கிட்டு இருந்தது. 

3 வருஷம் நல்லாதான் வண்டிய ஓட்டிகிட்டு இருந்தோமுங்க.  

2000 வருஷத்தில 3 வாரம் லீவுல நம்ம ஊருக்கு வந்திட்டு திரும்பி போனேங்க.. 
ஒரு நாள் நானும் என்னுடைய செகரட்டரியும் டாக்ஸ் ஆபீஸிக்கு போய்ட்டு திரும்பி வந்திகிட்டு இருக்கும் போது, இந்தியாவில் ஓட்டுகின்ற ஞாபகத்தில் இடது பக்கம் வந்துட்டேங்க.. நேரா ஒரு வண்டி வருதுங்க... நம்ம ஊர் ஆம்னி டைப் வண்டிங்க அது... நாம அன்னிக்கு ஓட்டிகிட்டு இருந்தது சாண்ட்ரோ டைப் வண்டிங்க.. அப்ப கூட மனசுல தோணலங்க பிரேக் போடணும்னு.. மனசுகுள்ள ஒரு நினைப்பு, இந்த ஆள் ஏன் ராங் சைடுல வரான் அப்ப்டின்னு.. நேரே கொண்டு போய்... டமால்..   இரண்டு நிமிஷம் ஒன்னும் புரியலங்க... 

முன்னாடி வந்த காரின் முன்பக்க கண்ணாடி (windshield) சினாமாவில காண்பிக்கற மாதிரி பறந்து போச்சுங்க.. அந்த வண்டியின் ஓட்டுனருக்கு தலையில் சிறு காயம்ங்க..

நம்ம செகரெட்டரிக்கு தோள்பட்டை மூட்டு நழுவிடுச்சுங்க..

நமக்குங்க, முட்டில சரியான அடிங்க, சீட் பெல்ட் போட்டதால தப்பிச்சுட்டேங்க.. நம்ம வண்டிக்குங்க சரியான அடிங்க.. முன் பானட், கண்ணாடி எல்லாம் நொருங்கி போச்சுங்க..

இதில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்தும் தப்பிச்சோமுங்க், நான் வண்டி ஓட்டிகிட்டு போனது ஆற்றின் கரை மேலங்க.. வண்டிக்கு இடது பக்கம் ஆறு ஓடிட்டு இருக்குதுங்க.. தப்பித்தவறி ஆறுல விழுந்திருந்தா, 20 அடி ஆழம் வேறங்க..

இதனால், இப்பொதெல்லாம் வண்டி ஓட்டும் போது பலதடவை சொல்லிக்கிறது என்ன அப்ப்டின்னாங்க.. இந்த ஊர்ல வலது பக்கம் ஓட்டணும், கூட வரவங்கிட்ட ஒரு தடவை நான் இடது பக்கம் போனா உடனே சரி பண்ணுங்க அப்படின்னு சொல்லிப்புடறதுதானுங்கோ..

மேலும் சீட் பெல்ட் போடம வண்டி ஓட்டுறதில்லைங்கோ..  வேற யார் ஓட்டினாலும் சீட் பெல்ட் போடம உட்காரவதில்ங்க.. நம்ம ஊர்ல வண்டி ஓட்டும்போது கூட சீட் பெல்ட் போடமா போறதில்லைங்க.. நம்ம ஊர்ல நிறைய நண்பர்கள் இதுக்காக நம்மல கிண்டல் பண்ணுவாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லைங்கோ.. நம்ம உசுரு நமக்கு முக்கியம்.. என்ன நான் சொல்றது சரிதானுங்க..

வண்டி ஓட்டும் போது வேறு சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கறதுலீங்க..

என்னங்க..  இது உங்களுக்கு பிடிச்சா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்... அப்படியே தமிலிழில் போய் உங்க பொன்னான வாக்குகளையும் பதிவு செஞ்சுடுங்க


71 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல அனுபவம் தான் போல

நட்புடன் ஜமால் said...

\\நம்ம உசுரு நமக்கு முக்கியம்.. என்ன நான் சொல்றது சரிதானுங்க..\\

மிகச்சரியே ...

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா நான் தான் first அப்படின்னு வந்தா , இங்க இன்னொருத்தர் முந்திக்கிட்டாரே

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருக்கு அண்ணே..

Athisha said...

ஏன்ங்க அந்த டிரிபிள் எக்ஸ் டிரைவிங் ஸ்கூல் எங்கருக்கு...

பேரே குஜாலாருக்கே..

அங்க ஒன்லி ஃபோர்வீலர்தான.. இல்லை டூவீலர் அலவ்டா?

பதிவு செம ஜாலியா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

அனுபவம் புதுமை ???????

http://urupudaathathu.blogspot.com/ said...

சீனா சென்று கார் ஓட்ட கற்று கொண்ட அண்ணன் வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

//நாமும் மடிப்பாக்கத்தில இருக்கிற XXX டிரைவிங் ஸ்கூல் போய்///


க் கே கே எக் ஏக கி கி கி

http://urupudaathathu.blogspot.com/ said...

//(ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )///



குதிச்சா என்ன ஆகும்?? ரொம்ப சர்வாதிகார போக்கா இருக்கே ??

இராகவன் நைஜிரியா said...

நன்றி அதிரை ஜமால்..

உங்களது அன்புக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

வாங்க அணிமா

மிக்க நன்றி

இராகவன் நைஜிரியா said...

// அதிஷா said...
ஏன்ங்க அந்த டிரிபிள் எக்ஸ் டிரைவிங் ஸ்கூல் எங்கருக்கு...

பேரே குஜாலாருக்கே..

அங்க ஒன்லி ஃபோர்வீலர்தான.. இல்லை டூவீலர் அலவ்டா?

பதிவு செம ஜாலியா இருக்கு //

நன்றி அதிஷா..

டிரைவிங் ஸ்கூல் பேரச் சொல்ல வேண்டாம் என்றே XXX என்றுப் போட்டுள்ளேன்.

Poornima Saravana kumar said...

//வலது பக்கம் ஓட்டு அப்படின்னு ஞாபகப்படுத்திக்கிட்டே வருவாருங்க. அவர் வேலையை ராஜினாமா பண்ணிகிட்டு போய்டாருங்க//

நம்ம கெட்ட நேரம் ( நல்ல நேரம் அவருக்கு )

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
//(ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )///



குதிச்சா என்ன ஆகும்?? ரொம்ப சர்வாதிகார போக்கா இருக்கே ?? //

சர்வாதிகாரமா..

என்னோட பாஸ் பயந்தது எனக்குத்தானே தெரியும்

Poornima Saravana kumar said...

இப்போ நல்லா பழகிட்டீங்களா ?

இராகவன் நைஜிரியா said...

// PoornimaSaran said...
இப்போ நல்லா பழகிட்டீங்களா ? //

இப்போ எல்லாம் நல்லா பழகிட்டேங்க..

அப்பாவி முரு said...

அண்ணே, சீனால உங்கள எதுத்து வண்டி ஓட்டி வந்த டிரைவரை அடிச்சாங்களா... இல்லையா...?

என்னா தெனாவட்டு அவனுக்கு?

இராகவன் நைஜிரியா said...

// muru said...
அண்ணே, சீனால உங்கள எதுத்து வண்டி ஓட்டி வந்த டிரைவரை அடிச்சாங்களா... இல்லையா...?

என்னா தெனாவட்டு அவனுக்கு? //

மண்டைய ஒடைச்சிட்டோமில்ல

பழமைபேசி said...

நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க.....
வாழ்த்துகள்!!!

Mahesh said...

சோக்கா சொல்லிக்கீறீங்கோ.... அப்டியே பிக்கா பண்ணி போய்னே இருங்க....

Sanjai Gandhi said...

அட.. ரொம்ப அழகா எழுதறிங்க ராகவன்.. இனி வெருமனே ஓட்டு போடற வேலை மட்டும் பாக்காம ஒழுங்கு மரியாதையா அடிக்கடி இது மாதிரி ஜாலியா எழுதுங்க.. :)

கடைக்குட்டி said...

ஓவர் டைம் குடுத்து ஓட்ட கத்துதற்றாங்களா.....

நல்லா இருக்குங்க...

உங்கள் எழுத்து நெம்ம்ம்ப நல்லா இருக்குதுங்கோவ்...அப்பிடியே என்னோட பிளாக் பக்கமும் கொஞ்ச வர்றது....

கடைக்குட்டி said...

கொஞ்சம்ம்ம்ம் வர்றது....


பிழையை பொறுத்தருள்க...

SK said...

அழகா அருமையா முக்கியாமான விடயத்தை சொல்லி இருக்கீங்க.

புதிய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

வந்துட்டம்லா, நானும் இந்தியாவில கட்டை வண்டி மட்டும்தான் ஓட்டிருக்கேன், அதுனால அந்த குழப்பம் இங்கெ எனக்கு வருவதில்லை.மற்றபடி நல்ல விழிப்புணர்வு பதிவு.சீனா பேர பாத்தவுடந்தான் ஞாபகம் வருது என்னோட சீனப்பயணப்பதிவு பாதில நிக்குது.

குடுகுடுப்பை
வ.மு வில்
ஒரு அங்கம்

நசரேயன் said...

நல்ல அனுபவம், எல்லோரும் பின்பற்ற வேண்டியது

சாந்தி நேசக்கரம் said...

அனுபவம் பகிர்வாகியுள்ளது. வாழ்த்துக்கள் இராகவன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

சாந்தி

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க.....
வாழ்த்துகள்!!! //

நன்றி பழமைபேசி அவர்களே..

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
சோக்கா சொல்லிக்கீறீங்கோ.... அப்டியே பிக்கா பண்ணி போய்னே இருங்க....//

வாங்க மகேசு அவர்களே..

ரொம்ப நன்றிங்க..

இராகவன் நைஜிரியா said...

// SanJaiGan:-Dhi said...
அட.. ரொம்ப அழகா எழுதறிங்க ராகவன்.. இனி வெருமனே ஓட்டு போடற வேலை மட்டும் பாக்காம ஒழுங்கு மரியாதையா அடிக்கடி இது மாதிரி ஜாலியா எழுதுங்க.. :) //

அப்படிங்களா...

உங்க உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டது

இராகவன் நைஜிரியா said...

// கடைக்குட்டி said...
ஓவர் டைம் குடுத்து ஓட்ட கத்துதற்றாங்களா.....

நல்லா இருக்குங்க...

உங்கள் எழுத்து நெம்ம்ம்ப நல்லா இருக்குதுங்கோவ்...அப்பிடியே என்னோட பிளாக் பக்கமும் கொஞ்ச வர்றது.... //

ஆமாங்க உண்மைதாங்க.. அந்த மேலதிகாரிக்கு நம்ம மேல அவ்வளவு பிரியுமுங்க..

உங்க பிளாக் url கொடுங்க.. போய் பார்த்துடுவோம்

இராகவன் நைஜிரியா said...

// SK said...
அழகா அருமையா முக்கியாமான விடயத்தை சொல்லி இருக்கீங்க.

புதிய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். //

நன்றி SK

இராகவன் நைஜிரியா said...

// வருங்கால முதல்வர் said...
வந்துட்டம்லா, நானும் இந்தியாவில கட்டை வண்டி மட்டும்தான் ஓட்டிருக்கேன், அதுனால அந்த குழப்பம் இங்கெ எனக்கு வருவதில்லை.மற்றபடி நல்ல விழிப்புணர்வு பதிவு.சீனா பேர பாத்தவுடந்தான் ஞாபகம் வருது என்னோட சீனப்பயணப்பதிவு பாதில நிக்குது.

குடுகுடுப்பை
வ.மு வில்
ஒரு அங்கம் //

வாங்க முதல்வரே..

நீங்க வந்ததாலே நம்ம பதிவுக்கே பெருமைங்க...

அடிக்கடி வாங்க முதல்வரே..

குடுகுடுப்பை மட்டுமில்லங்க.. நானும் ஒரு அங்கம் தானுங்க

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
நல்ல அனுபவம், எல்லோரும் பின்பற்ற வேண்டியது //

வாங்க நசரேயன்..

வந்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் ரொம்ப நன்றிங்க..

இராகவன் நைஜிரியா said...

// tamil24.blogspot.com said...
அனுபவம் பகிர்வாகியுள்ளது. வாழ்த்துக்கள் இராகவன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

சாந்தி //

வாங்க சாந்தி.. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க..

ரவி said...

ங்க ங்ன்னு சொலொலாதீங்க ன்ங்க ங்க ங்க

ஹேமா said...

முதல் வணக்கம் இராகவன் அவர்களுக்கு.இப்போதைய பதிவு பார்த்து ரசித்தேன்.நகைச்சுவையாக இருந்தாலும் அனுபவ அதிர்வு.
நிச்சயம் வாசிப்பவர்கள் அத்தனை பேர்கள் மனதிலும் படியும்.

Thangavel Manickam said...

கார் முட்டிய அனுபவம் என்று தலைப்பிட்டிருந்தால் சுவராசியம் சேர்ந்திருக்கும். முதல் பதிவு மற்றும் எழுத்து முயற்சிக்கு வாழ்த்துக்கள். சைனா ரொம்ப அழகா இருக்குமா ராகவன் ???? ஹி.. ஹி.... சைனீஸ் படமென்றால் தனி பிரியம். இப்படி ஊர் சமாச்சாரமெல்லாம் பகிர்ந்து கொண்டால் படிக்க படிக்க சுவாரசியமாய் இருக்கும். அப்புறன் நைஜீரியாவில் நைட் கிளப்பெல்லாம் உண்டாம். நண்பர்கள் சொல்வார்கள். தினம் ஒரு கதையோடு கடுப்பேத்துவார்கள். வேறுபட்ட நாடுகளில் வசித்து வரும் தாங்கள் அந்த நாடுகளில் உங்களைக் கவர்ந்த கலாச்சாரம், மற்றும் மாறுபாடுகளை எழுதினால் மகிழ்வேன்.

☀நான் ஆதவன்☀ said...

உலகம் சுற்றும் வாலிபன் போல நீங்க...
நல்ல கருத்தோடு சுவாரஸியமான அனுபவம்

Thamira said...

அதிஷா said...
பதிவு செம ஜாலியா இருக்கு// யோவ் சீரிஸா ஒரு விஷ‌ய‌ம் சொன்னா உன‌க்கு ஜாலியா இருக்குதா.?

இராகவன் நைஜிரியா said...

// செந்தழல் ரவி said...
ங்க ங்ன்னு சொலொலாதீங்க ன்ங்க ங்க ங்க //

நன்றி செந்தழல் ரவி..

திருத்திக்கொள்கிறேன். தப்புகளை சுட்டி காட்டியதற்கும், வருகைக்கும் மிக்க நன்றி

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
முதல் வணக்கம் இராகவன் அவர்களுக்கு.இப்போதைய பதிவு பார்த்து ரசித்தேன்.நகைச்சுவையாக இருந்தாலும் அனுபவ அதிர்வு.
நிச்சயம் வாசிப்பவர்கள் அத்தனை பேர்கள் மனதிலும் படியும். //

வணக்கம் ஹேமா அவர்களே. தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல

இராகவன் நைஜிரியா said...

// தங்கவேல் மாணிக்கம் said...
கார் முட்டிய அனுபவம் என்று தலைப்பிட்டிருந்தால் சுவராசியம் சேர்ந்திருக்கும். முதல் பதிவு மற்றும் எழுத்து முயற்சிக்கு வாழ்த்துக்கள். சைனா ரொம்ப அழகா இருக்குமா ராகவன் ???? ஹி.. ஹி.... சைனீஸ் படமென்றால் தனி பிரியம். இப்படி ஊர் சமாச்சாரமெல்லாம் பகிர்ந்து கொண்டால் படிக்க படிக்க சுவாரசியமாய் இருக்கும். அப்புறன் நைஜீரியாவில் நைட் கிளப்பெல்லாம் உண்டாம். நண்பர்கள் சொல்வார்கள். தினம் ஒரு கதையோடு கடுப்பேத்துவார்கள். வேறுபட்ட நாடுகளில் வசித்து வரும் தாங்கள் அந்த நாடுகளில் உங்களைக் கவர்ந்த கலாச்சாரம், மற்றும் மாறுபாடுகளை எழுதினால் மகிழ்வேன். //

நன்றி நண்பர் தங்கவேல் மாணிக்கம்.
சைனாவில் நான் தங்கியிருந்த இடம் மிக அழகாக இருக்கும். அதைப்பற்றி மிக விரிவாக போடலாம் என இருக்கின்றேன்.
நைஜிரியா நைட் கிளப் பற்றி ஒன்றும் தெரியாதுங்க.. மனைவி இங்கு என் கூட இருப்பதால், எங்கும் செல்வதில்லை.
கலாசாரம் பற்றி இங்கு உள்ளவர்களிடம் பேசி, பகர்ந்து பதிவு போடுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// நான் ஆதவன் said...
உலகம் சுற்றும் வாலிபன் போல நீங்க...
நல்ல கருத்தோடு சுவாரஸியமான அனுபவம் //

நன்றி ஆதவன் அவர்களே..

இராகவன் நைஜிரியா said...

// தாமிரா said...
அதிஷா said...
பதிவு செம ஜாலியா இருக்கு// யோவ் சீரிஸா ஒரு விஷ‌ய‌ம் சொன்னா உன‌க்கு ஜாலியா இருக்குதா.? //

சிக்ஸ் சிக்மா பற்றி எழுதியவர், நம்மை பாராட்டினார் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாதுங்க..

RAMYA said...

அண்ணா நல்ல அனுபவம்ண்ணா
அதை நல்லா ரசிச்சு சொல்லி இருக்கீங்க

RAMYA said...

//
வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது
//


ஏன்னா ட்ரிவிங் சரியா
சரியா சொல்லி கொடுக்கலையா
டுபாக்கூர்??????????

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//நாமும் மடிப்பாக்கத்தில இருக்கிற XXX டிரைவிங் ஸ்கூல் போய்///


க் கே கே எக் ஏக கி கி கி

//

அணிமா என்னமோவெல்லாம்
கேக்கறாரு இதற்கு என்னா அர்த்தம்?
ABCD எல்லாம் எழுதி இருக்காரு
இன்னும் பால பாடம் முடியலை
போல் இருக்குண்ணா

RAMYA said...

உருப்புடாதது_அணிமா said...
//(ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )///


குதிச்சா என்ன ஆகும்?? ரொம்ப சர்வாதிகார போக்கா இருக்கே ??
//

ஒன்னும் ஆகாது நீங்களும் குதிப்பீங்க
அவ்வளவுதான் வேறு ஒன்னும் ஆகாது
இது கூட தெரியலையே
இஃஇ, இஃஇ, இஃஇ, இஃஇ,

RAMYA said...

இப்போ வலது, இடது
problem இல்லையே
நல்லா ஓட்டறீங்களா ???

RAMYA said...

ஹய்யா நான் தான்
50th பின்னுட்டம்
அண்ணா ஒரே
சந்தோஷம்ண்ணா

RAMYA said...

நல்லா செம் ஜாலி ஆ
பதிவு இருந்ததுண்ணா
நல்லா எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள் அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
//
வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது
//


ஏன்னா ட்ரிவிங் சரியா
சரியா சொல்லி கொடுக்கலையா
டுபாக்கூர்?????????? //

வாங்க ரம்யா..
வருகைக்கு நன்றி..

அங்க கத்துகிட்ட வண்டிக்கும், இங்க ஓட்டின வண்டிக்கும் வித்யாசம் இருக்குதுங்க.. அதனால்தான் இந்த ப்ராப்ளம்

Raghavan said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
இப்போ வலது, இடது
problem இல்லையே
நல்லா ஓட்டறீங்களா ??? //

இப்போ இந்த problem இல்லைங்கோ.. இங்கு ஓட்டுனர் இருக்காருங்க..

Cable சங்கர் said...

என்னது டிரைவிங் ஸ்கூல் பேரே ஒரு மாதிரி குஜாலா இருக்கு.. எங்க்ன்னு அட்ரஸ் கொடுத்தீங்கன்னா.. நான் திரும்பவும் டிரைவிங் கத்துக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// Cable Sankar said...
என்னது டிரைவிங் ஸ்கூல் பேரே ஒரு மாதிரி குஜாலா இருக்கு.. எங்க்ன்னு அட்ரஸ் கொடுத்தீங்கன்னா.. நான் திரும்பவும் டிரைவிங் கத்துக்கிறேன். //

குஜாலா இருக்குதுங்களா...

இருக்கும், இருக்கும்...

பிரபாகரன் said...

"அங்கதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல யாரும் இருக்க மாட்டார்கள்"

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு

பிரபாகரன் said...

"3 வருஷம் நல்லாதான் வண்டிய ஓட்டிகிட்டு இருந்தோமுங்க."

மூணு வாரத்துல மறந்துட்டீங்களே.

பிரபாகரன் said...

"1 மாசத்துக்கு தினமும் 1 மணி நேரம் ஓவர் டைம் கொடுத்து"

இதுக்கெல்லாம் "ஓவர்டைம்" கொஞ்சம் ஓவர்தான்.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரன் said...
"3 வருஷம் நல்லாதான் வண்டிய ஓட்டிகிட்டு இருந்தோமுங்க."

மூணு வாரத்துல மறந்துட்டீங்களே. //

முப்பது வருஷம் ஓட்டின பழக்கம்.. 3 வருஷத்தில மாறுமா

தங்கள் வருகைக்கு நன்றி பிராபகரன் அவர்களே

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரன் said...
"1 மாசத்துக்கு தினமும் 1 மணி நேரம் ஓவர் டைம் கொடுத்து"

இதுக்கெல்லாம் "ஓவர்டைம்" கொஞ்சம் ஓவர்தான். //

கொஞ்சம் இல்லீங்க.. ரொம்பவே ஓவர்தான்..

இதற்காக என் மேல் பொறாமை அடைந்தவர்கள் கொண்டவர்கள் நிறைய பேர்..

coolzkarthi said...

அண்ணே சூப்பரு...

coolzkarthi said...

நல்ல கருத்துக்களும் கூட....

ஓட்டு பொறுக்கி said...

இப்போ இந்திய வந்தா வலது பக்கம் ஓட்டுவீங்களா இல்லை இடது பக்கமா?

சரவணகுமரன் said...

நல்லா ஜாலியா சொல்லி இருக்கீங்க... :-)

நாடோடிப் பையன் said...

The same is true in the US.
Many Indians who drove cars in India have trouble driving here. They often fail in the driving test too.

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...
அண்ணே சூப்பரு... //

thanks Coolzkarthi

இராகவன் நைஜிரியா said...

// ஓட்டு பொறுக்கி said...
இப்போ இந்திய வந்தா வலது பக்கம் ஓட்டுவீங்களா இல்லை இடது பக்கமா? //

என்ன சின்ன புள்ள தனமான கேள்வி இது..

இந்தியாவுல நாங்கெல்லாம் நடு செண்டர்ல ஓட்டித்தான் பழக்கம்...

எத்தன பேர் இந்தியாவுல ஒழுங்கா ஓட்டுறாங்க..

டிராக் டிரைவிங் என்பது நம்ம ஆளுங்களுக்கு பழக்கமில்லாத ஒன்னுங்க..

இராகவன் நைஜிரியா said...

// சரவணகுமரன் said...
நல்லா ஜாலியா சொல்லி இருக்கீங்க... :-) //

ரொம்ப நன்றிங்க...

இராகவன் நைஜிரியா said...

// நாடோடிப் பையன் said...
The same is true in the US.
Many Indians who drove cars in India have trouble driving here. They often fail in the driving test too. //

நன்றி நாடோடி பையன் அவர்களே..

மேலாதிக்க தகவல்களுகு நன்றி