Thursday, January 8, 2009

அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி..

தமிழ் ஆசிரியர் : தவறு செய்த மாணவரின் காதை திருகிக்கொண்டே கேட்டார் - இனிமே இந்த பாடம் மறக்குமா .. மறக்குமா

மாணவன் :  சார்,  மரக்காது, மரக்காது..

தமிழ் ஆசிரியர் :  மரக்காது தானே, அப்படின்னா காது வலிக்காது நல்லா திருகலாம்.....
___________________________________________________________________

ஆசிரியர் Progress Report -  ல் இப்படி எழுதியிருந்தார் - Your SUN  is very WEEK in English and needs  tution..

மாணவரின் தந்தை :  You are also very WEAK  in English
___________________________________________________________________

வகுப்பறையில் சத்தம் போட்டுக்கொண்டு இருந்த மாணவர்களைப் பார்த்து ஒரு ஆசிரியர் இவ்வாறு சொன்னார்

ஏ.. நாய்ஸ்... Don't make Noise
___________________________________________________________________
இது ஒரு உண்மைச்சம்பவம்..

மாணவன் தேர்வு நடக்கும் இடத்தில் சுமார் 1 மணி 30 நிமிடங்கள் (தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்) சும்மாவே உட்கார்ந்து இருந்தான்.  பொறுத்து பார்த்த ஆசிரியர், அந்த தேர்வுக்கு உரிய பாடப்புத்தகத்தை எடுத்து கொடுத்து தேர்வு எழுதச்சொன்னார்.. 

15 நிமிடம் கடந்தும் அந்த மாணவன் சும்மாவே இருக்கவே, ஆசிரியர், ஏன் சும்மா இருக்க, புத்தகத்தை பார்த்து பதில் எழுத வேண்டியதுதானே எனக்கேட்டார்..

அதற்கு அந்த மாணவர் கூறிய பதிலை கேட்டவுடன்.. ஆசிரியருக்கு மயக்கம் வராத குறைதான்.. 

சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)
____________________________________________________________________
படிக்கும் காலத்தில், ஒருதடவை ஆசிரியர் பெரிய சைஸ் நோட் புக் வாங்கி வரச் சொன்னார்..
நானும் என் தந்தையிடம் வந்து, அப்பா டீச்சர் நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், வாங்கி கொடுங்கள் என்றேன்.
அவரும் சிறிய நோட்டை வாங்கி கொடுத்தார்.. நான் இது இல்லையப்பா நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், காம்போசிஷன் எழுதுவதற்கு எனச்சொன்னபோது அவர்.. 

அவங்க நோட் புக் Neat - அதாவது சுத்தமாக இருக்க வேண்டும் எனச்சொல்லுகின்றார்கள், நீதான் அதை தப்பாக புரிந்து கொண்டு விட்டாய்....!! 

அதுக்கபுறம் அழுது அடம்பிடித்து, பெரியச நோட் புக் வாங்கியது பற்றி இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகின்றது. 
___________________________________________________________________
நான் என் அப்பாவிடம் : அப்பா எனக்கு அந்த சோப்பு வாங்கிதாங்கப்பா.. அதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும் அப்படின்னு விளம்பரம் பண்றாங்க..

அப்பா :  அதெல்லாம் சரிடா.. அது அழகுக்கு தான் அழகு சேர்க்கும்.. உனக்கில்லை.. அதனால் அது வேண்டாம்..  இந்த சோப்பே உனக்கு போறும்.
____________________________________________________________________

எங்கோ படித்தது..

திரு. கி.வா.ஜ அவர்கள் சிலேடையில் வல்லவர். ஒருமுறை அவர் நண்பர் வீட்டுக்கு போயிருந்த போது, பாலும், பழமும் கொடுத்துள்ளார்கள். அவர் சிலேடையாக, இங்கு எனக்கு பழம் பால் கிடைத்தது என குறிப்பிடாராம். 
(பழம் பால் - பழைய பால் என்கிற அர்த்தமும் வரும்)
____________________________________________________________________

கி.வா.ஜ அவர்கள் புத்தகம் ஒன்றில் படித்தது

தமிழாரிசியர், ஆங்கிலப் புலமை இல்லாதவர் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.  அப்போது மாணவர்களைப் பார்த்து அண்டருலகம் என்றால் என்ன வென்று தெரியுமா எனக் கேட்கின்றார்.

ஒரு மாணவர் எழுத்து, அண்டருலகம் என்றால், பாதள உலகம் என்கின்றார். 

ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை.. அண்டருலகம் என்றால், தேவர் உலகம் அது மேலே தானே இருக்கும், இவன் ஏன் பாதாள உலகம் என்று சொல்கின்றான். அண்டவர் என்றால் தேவர் என்ற அர்த்தம் அல்லவா என்று கேட்க, அப்போதுதான் அந்த மாணவர்,  under என்ற ஆங்கில வார்த்தையை இதனுடன் இணைத்து விட்டார் எனப் புரிந்ததாம். 
____________________________________________________________________
திரு கி.வா.ஜ. புத்தகத்தில் படித்த மற்றொரு விஷயம்.

படிப்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது..

அந்த மாணவர், முனைவர் பட்டம் பெறுவதற்க்காக ஒரு பேராசியரிடம், சேருகின்றார். அதிலும் தமிழ் முனைவர் பட்டம். பேராசியர், அவரிடம் நூலகத்தில் போய் அழற்படுகாதை எடுத்து வா என்று சொல்லியுள்ளார்.  அந்த மாணவரும், நூலகத்திற்கு சென்று அழற்படுகாதையை தேடு தேடு என்று தேடிவிட்டு, பேராசியரிடம் வந்து, ஐயா, நூலகத்தில் அழற்படுகாதை என்ற நூல் இல்லை என்கின்றார்.  பேராசியர், உடனே, அழற்படுகாதை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பகுதி, நான் தங்களை அதைத்தானே எடுத்து வரச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று கூறினாராம். 
-----------------------------------------------------------------------------------------------

எப்படி இருந்தது என்று ஒரு பின்னூட்டமும், உங்கள் பொன்னான வாக்குகளை, தமிழிஷிலும், தமிழ்மணத்திலும் போடும்படி மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.



55 comments:

அப்பாவி முரு said...

///நான் என் அப்பாவிடம் : அப்பா எனக்கு அந்த சோப்பு வாங்கிதாங்கப்பா.. அதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும் அப்படின்னு விளம்பரம் பண்றாங்க..


அப்பா : அதெல்லாம் சரிடா.. அது அழகுக்கு தான் அழகு சேர்க்கும்.. உனக்கில்லை.. அதனால் அது வேண்டாம்.. இந்த சோப்பே உனக்கு போறும்.///

உங்களின் அப்பாவிக்கும் நல்ல காமெடி சென்ஸ்...

நான் தான் பஸ்டூ....

அத்திரி said...

எல்லாம் ஓகே.week, weak ஆனாலும் தான் பெஸ்ட்

வேத்தியன் said...

//Your SUN is very WEEK in English and needs tution..\\

வாத்தியாரே இப்படியா???

//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)\\
சார் ஆசிரியர் முற்பிறவியில் என்னென்ன பாவம் செய்தாரோ???
:)))

Mahesh said...

நல்லா இருக்கே....

நான் படிச்ச ஒரு தமிங்கிலீஸ் ஜோக்..

"அண்டர் அப்பர்ல, அப்பர் அண்டர்ல"

தேவர்கள் மேல... அப்பர் (நாவுக்கரசர்) கீழ (பூமில)

குடுகுடுப்பை said...

அத்திரி said...

எல்லாம் ஓகே.week, weak ஆனாலும் தான் பெஸ்ட்

கூடுதலாக பழம்பால் எனக்கு சிலேடை ரொம்பவே பிடிக்கும்.

நசரேயன் said...

எல்லாமே நல்லா இருக்கு

எட்வின் said...

//ஏ.. நாய்ஸ்... Don't make Noise// அருமை... மாணவர்கள் ஆசிரியரை கடித்து ஒன்றும் வைக்கவில்லையே :)

ers said...

மரக்காது ஜோக் நன்றாக இருந்தது.


http://india.nellaitamil.com/

சின்னப் பையன் said...

எல்லாமே நல்லா இருக்கு...

நட்புடன் ஜமால் said...

\\"அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி.."\\

அண்ணேன் என்னாதிது

ஹி ஹி ஹி

நட்புடன் ஜமால் said...

\\மரக்காது தானே, அப்படின்னா காது வலிக்காது நல்லா திருகலாம்\\


ஹா ஹா ஆரம்பமே அருமை அண்ணா

ஹேமா said...

//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இராகவன் நல்லா சிரிச்சேன்.இந்த மாணவன் நீங்களா?

பாலா said...

ellamay supperrrrrrrrrrr

பட்டாம்பூச்சி said...

அனைத்துமே நன்றாக உள்ளது :-)

RAMYA said...

//

படிக்கும் காலத்தில், ஒருதடவை ஆசிரியர் பெரிய சைஸ் நோட் புக் வாங்கி வரச் சொன்னார்..

நானும் என் தந்தையிடம் வந்து, அப்பா டீச்சர் நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், வாங்கி கொடுங்கள் என்றேன்.

அவரும் சிறிய நோட்டை வாங்கி கொடுத்தார்.. நான் இது இல்லையப்பா நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், காம்போசிஷன் எழுதுவதற்கு எனச்சொன்னபோது அவர்..


அவங்க நோட் புக் Neat - அதாவது சுத்தமாக இருக்க வேண்டும் எனச்சொல்லுகின்றார்கள், நீதான் அதை தப்பாக புரிந்து கொண்டு விட்டாய்....!!


அதுக்கபுறம் அழுது அடம்பிடித்து, பெரியச நோட் புக் வாங்கியது பற்றி இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகின்றது.
//

அண்ணா நீங்க Long Size அப்படி
அப்பா கிட்டே கேட்டிருக்கணும்
நீட்டு புக் நீட்டு புக் எப்படி தெரியும்?
நீங்க ரொம்ப வெள்ளையா இருந்திரிக்கிறீங்க

RAMYA said...

/
ஹேமா said...
//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இராகவன் நல்லா சிரிச்சேன்.இந்த மாணவன் நீங்களா?

//

ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்

ஹேமா said...

//RAMYA...ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்//

ரம்யா,ஓ...அவரா இவர்.சரி...சரி.

RAMASUBRAMANIA SHARMA said...

VERY INTRESTING...KI.VA.JA..IS A GREAT TAMIL PULAVAR...IT REMINDS ME OF MY SCHOOL DAYS...OUR CLASS TEACHER USES THIS DIALOGUE.."DON'T MAKE NOISE"..."MY DEAR NAIS"(tamizla padikkavum)...

Thamira said...

பலவும் படிப்பது இதுவே முதல் முறை, அட்டகாசமான தொகுப்பு.! சிரித்து மகிழ்ந்தேன்.!

பழையசோறு said...

ஜோக் எல்லாம் ஓகே.. ஆனா அது என்னா ”அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி.. ” ? புர்லயே !

பழமைபேசி said...

இஃகிஃகி!

அழற்படுகாதை பத்தித் தெரிஞ்சுகிட்டேன்....நன்றி ஐயா!

தமிழ் தோழி said...

///ஆசிரியர் Progress Report - ல் இப்படி எழுதியிருந்தார் - Your SUN is very WEEK in English and needs tution..
மாணவரின் தந்தை : You are also very WEAK in English___________________________________________________________________///
ஹ........ஹ.....ஹ.......
சூப்பர் அண்ணா.

தமிழ் தோழி said...

///RAMYA said...
/
ஹேமா said...
//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இராகவன் நல்லா சிரிச்சேன்.இந்த மாணவன் நீங்களா?

//

ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்///

அடடே அப்படியா..........
ஹ....ஹ..........ஹ...............

தமிழ் தோழி said...

///ஹேமா said...
//RAMYA...ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்//

ரம்யா,ஓ...அவரா இவர்.சரி...சரி.///

அவரு தான் ஹேமா. இத யார்ட்டயும் சொல்லிடாதீங்க.ரகசியமா வச்சுக்கங்க

தமிழ் தோழி said...

///பழையசோறு said...
ஜோக் எல்லாம் ஓகே.. ஆனா அது என்னா ”அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி.. ” ? புர்லயே !///

நீங்க என்ன தமிழ் ஆசிரியரா?
ஹி..ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// muru said...
உங்களின் அப்பாவிக்கும் நல்ல காமெடி சென்ஸ்...

நான் தான் பஸ்டூ....//

சூப்பர் காமெடிசென்ஸ் அவரிடம் உண்டு..

ஆமாங்க நீங்கதான் பஸ்டூ..

இராகவன் நைஜிரியா said...

நன்றி அத்திரி

//வேத்தியன் said.
சார் ஆசிரியர் முற்பிறவியில் என்னென்ன பாவம் செய்தாரோ???
:)))//

உணமைதாங்க.. ரொம்ப பாவம் பண்ணியிருப்பார் போல இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
நல்லா இருக்கே....

நான் படிச்ச ஒரு தமிங்கிலீஸ் ஜோக்..

"அண்டர் அப்பர்ல, அப்பர் அண்டர்ல"

தேவர்கள் மேல... அப்பர் (நாவுக்கரசர்) கீழ (பூமில)//

வாங்க மகேசு... நீங்க சொன்ன தமிங்கிலீஸ் ஜோக்கும் நல்லாதாங்க இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

நன்றி குடுகுடுப்பை,
நன்றி நசரேயன்,

// Arnold Edwin said...
//ஏ.. நாய்ஸ்... Don't make Noise// அருமை... மாணவர்கள் ஆசிரியரை கடித்து ஒன்றும் வைக்கவில்லையே :)//

வாத்யார பார்த்தலே நடுக்கம் இல்ல...
பின்னி பெடல எடுத்துடமாட்டாறா அவரு..

இராகவன் நைஜிரியா said...

நன்றி tamil cinema
நன்றி ச்சின்னப்பையன்

இராகவன் நைஜிரியா said...

வாங்க ஜமால்...

நீங்க ஒவ்வொரு ஜோக்கையும் அனுபவிச்சு படிச்சு இருக்கீங்கன்னு நினைக்கின்றேன்

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இராகவன் நல்லா சிரிச்சேன்.இந்த மாணவன் நீங்க //

படிச்சமா, சிரிச்சமா, பின்னூட்டம் போட்டமான்னு இருக்கனும்... இப்படியெல்லாம் நோண்ட கூடாது .. அப்புறம் தங்கச்சி ரம்யா கோச்சுக்கும்

இராகவன் நைஜிரியா said...

// sayrabala said...
ellamay supperrrrrrrrrrr //

அப்படிங்களா.. ரொம்ப நன்றிங்க..

இராகவன் நைஜிரியா said...

// Pattaampoochi said...
அனைத்துமே நன்றாக உள்ளது :-)//

ரொம்ப நன்றிங்க...

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
அண்ணா நீங்க Long Size அப்படி
அப்பா கிட்டே கேட்டிருக்கணும்
நீட்டு புக் நீட்டு புக் எப்படி தெரியும்?
நீங்க ரொம்ப வெள்ளையா இருந்திரிக்கிறீங்க //

எங்க அப்பாகிட்ட பெரிய நோட்டு அப்படின்னு கேட்டா, ஒரு 192 பக்கம், சின்னசைஸ் நோட் புக் அப்படின்னு சொல்லிவிடுவார்.. எப்படி கேட்டாலும் அதற்கு சரியான விளக்கம் கொடுப்பார்..

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
/
ஹேமா said...
//சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இராகவன் நல்லா சிரிச்சேன்.இந்த மாணவன் நீங்களா?

//

ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்//

இதுக்குதான் தங்கச்சி வேணும் அப்படின்னு சொல்றது...

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
//RAMYA...ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்//

ரம்யா,ஓ...அவரா இவர்.சரி...சரி.//

எவரா இவர்... ஒன்னுமே புரியல..

இராகவன் நைஜிரியா said...

// RAMASUBRAMANIA SHARMA said...
VERY INTRESTING...KI.VA.JA..IS A GREAT TAMIL PULAVAR...IT REMINDS ME OF MY SCHOOL DAYS...OUR CLASS TEACHER USES THIS DIALOGUE.."DON'T MAKE NOISE"..."MY DEAR NAIS"(tamizla padikkavum)... //

வாங்க சர்மா... நினைவலைகளை கிளறியாச்சா...

இராகவன் நைஜிரியா said...

// தாமிரா said...
பலவும் படிப்பது இதுவே முதல் முறை, அட்டகாசமான தொகுப்பு.! சிரித்து மகிழ்ந்தேன்.! //

சிக்ஸ் சிக்மாவே நம்ம பார்க்க வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது...

அடிக்கடி நம்ம பக்கம் வாங்க...

இராகவன் நைஜிரியா said...

// பழையசோறு said...
ஜோக் எல்லாம் ஓகே.. ஆனா அது என்னா ”அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி.. ” ? புர்லயே !//

அ..அ..அ.. புரியலயா...

ரொம்ப சிம்பிள்ங்க... ஆனா எனக்கும் எப்படி சொல்றதுன்னுதான் புரியல..

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இஃகிஃகி!

அழற்படுகாதை பத்தித் தெரிஞ்சுகிட்டேன்....நன்றி ஐயா! //

தமிழுக்கே தமிழா... என்னங்க இது.. உங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்ற அள்விலா நான் இருக்கின்றேன்... சும்மா கிச்சு, கிச்சு மூட்டக்கூடாது...

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் தோழி said...
///ஹேமா said...
//RAMYA...ஹேமா இந்த மாணவன்
அண்ணன் இல்லே
நட்புடன் ஜமால்//

ரம்யா,ஓ...அவரா இவர்.சரி...சரி.///

அவரு தான் ஹேமா. இத யார்ட்டயும் சொல்லிடாதீங்க.ரகசியமா வச்சுக்கங்க//

ரகசியம்.. பரம ரகசியம்... யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க... ஆமா தமிழே சொன்னா அதற்கு அப்பீலே கிடையாது

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் தோழி said...
///பழையசோறு said...
ஜோக் எல்லாம் ஓகே.. ஆனா அது என்னா ”அழற்படுகாதையை தேடு தேடு.....ஹி..ஹி.. ” ? புர்லயே !///

நீங்க என்ன தமிழ் ஆசிரியரா?
ஹி..ஹி...ஹி... //

இல்லைங்க நான் கணக்குபிள்ளை...!!

Anonymous said...

உங்களுக்கு அழற்படுகாதைன்னா, எனக்கு யுகாதி. பாடத்துல யுகாதின்னு வந்திருந்துது. தமிழ் வாத்தியார் கிட்ட யுகாதின்னா என்னன்னு கேட்டேன். பிறகு சொல்றேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஏறக்குறைய இரண்டு மூண்று மாதத்துக்குப் பிறகு, அரையாண்டுத் தேர்வுக்காக மறுவாசிப்பு செய்துகொண்டிருந்த போது மீண்டும் யுகாதி. மீண்டும் அவரிடம் "யுகாதி"ன்னா என்ன சார்னு கேட்டது தான் தாமதம் "நாயே, நடத்தும்போது கவனிக்காம இப்போ வந்து என்ன கேள்வின்னு" முதுகுல பரோட்டா போட்டுட்டார்.

புதியவன் said...

ஹா...ஹா...ஹா...

நல்ல காமெடிக் கதம்பம்
ரசித்தேன் சிரித்தேன்...

coolzkarthi said...

தல கலக்கல்.....அனைத்தும் அருமை.....இந்த இங்கிலீஷ் தெரியாம பாடு படுற வாத்திகள் பாவம்....

coolzkarthi said...

ஹையோ ஹையோ ...ஒரே காமெடி....

ஹேமா said...

தமிழ்தோழி,ரம்யா சத்தியமா "
அவர்தான் இவர்"ன்னு யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன்.எனக்கு ரகசியத்தைப் பாதுகாக்கிற ரசியம் தெரியும்.அது அந்த சரி அவர் யார்?அந்த இவர் யார்?மறந்தே போச்சு ரம்யா!

coolzkarthi said...

சார் இன்னும் இங்கிலீஷ் காமெடி இங்கே http://coolzkarthi.blogspot.com/2008/10/blog-post_14.html....நல்லா இருக்கா பாருங்க....முன்னாடியே படிச்சி இருப்பீங்களோ?

சிம்பா said...

எல்லாம் சரி.. இந்த பேனாவ கேட்ச் புடிச்சு, அண்ணனுக்கு ஒரு விஷ் ஹாப்பி வாழ்த்துக்கள்..

மேவி... said...

பல்சுவையான பதிவு.....

Poornima Saravana kumar said...

//
சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)//

இது நீங்க சொன்ன துன்னு எனக்கு தெரியும்!!

BOOPATHY said...

சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள் என்பது உங்களது பதிவையும் பதிவில் வந்த பதில்களையும் பார்க்கும் போது புரிகின்றது.

சிரிக்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும் முடியவில்லை. உங்களுக்கே வெற்றி.

TamilBloggersUnit said...

நல்ல காமெடி

தேவன் மாயம் said...

ராகவன் சார்,
சும்மா ஜாலியா எழுதினேன்!!
நம்ம பதிவை வேறு ஒருவர் வேறு தளத்தில் போடுவாங்கன்னு எனக்கு தெரியாது!!!

அப்புறம் நான் பாதி எழுதியவுடன் நண்பர் சாய்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன்!!!

அப்படி போடலாம் என்று சொன்னார்!!
இது தெரியாம எழுதிட்டேனேன்னு பார்த்தேன்!!!

இதையே ஒரு பதிவா போட்டு உங்களை கடுப்படிக்க முயற்சி
பண்ணினேன்!!!

இப்படி கடுப்படிக்கிறாயே என்று நீங்கள்ளாம் கடுப்பாவீங்கன்னு
நினைத்தேன்!!!

முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டேன்!!!!

இப்பவும் புரியலயா?

அய்யகோ!!!

தேவா..