Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...
நண்பர் இளைய பல்லவன்(ர்), பட்டய கணக்கர், காஞ்சித்தலைவன் அவர்கள் ஒரு தொடர் இடுகைக்கு அழைத்துள்ளார், நம்மளையும் நம்பி இந்த உலகம் தொடர் இடுகைக்கு அழைப்பதால், அதை மறுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த தொடர் இடுகை..

எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன். இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னைப் பற்றி முக்கியமாக சொல்ல ஒன்றுமே இல்லீங்க. 44 வயசு. 1992 ல் திருமணம். அரவிந்த் என்று ஒரே ஒரு மகன். இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் கணக்குப் பிரிவு, மேலாளர் மற்றும் அட்மின் பிரிவின் உதவி மேலாளராகவும் இருக்கின்றேன். (சிறு குறிப்பு என்று கேட்டதால் இவ்வளவுதாங்க..)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில்தாங்க.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இங்கு இந்தியர்கள் தங்களுக்குள் வீட்டிலேயே கொண்டாடும் தீபாவளிதாங்க. வெடி வெடிக்க இயலாது. கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ஜூலை மாசம் இந்தியா போயிருந்த போது, குளோபசில் புதுத்துணிகள் வாங்கி வந்ததுதாங்க. என்ன ஒரு கஷ்டம், சைஸ் 34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு. நான் இளைச்சு போயிட்டேனா, இல்ல சைஸ் 34 போட்டு பெரிய சைஸ் கொடுத்துட்டாங்களான்னு பார்க்கணும்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மிக்சரும், செவன் கேக், குளோப்ஜாமூன் எல்லாம் வீட்டில் செய்தார்கள்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

பலருக்கும் தொலைப் பேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அலுவலகம் போயாச்சுங்க. மாலை நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு பல நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்கள் கூட உணவு உண்டு சந்தோஷமாக பொழுது கழிந்தது. தொலைக் காட்சி என்றால் இங்கு ஜெயா டிவி, TBO, ஏசியா நெட், கைரளி என நான்கு டிவித்தான் தெரியும். சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை. அலுவலகம் இருந்ததால் எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

விசேஷங்கள் அன்று உதவி என்று எதுவும் செய்வதில்லீங்க. எப்போது எல்லாம் முடிகின்றதோ, அப்போது உதவி செய்வேன். பல தனிப்பட்ட காரணங்களினால் எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அண்ணன் வானம்பாடி அவர்கள் - இவரின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. அஷ்டாவதானி என்று இவரைச் சொல்லலாம். நான் அடிக்கும் கும்மிகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர் என்பது ஒரு காரணம்.

தம்பி நேசமித்ரன் - கவிதையின் புது பரிமாணத்தை எனக்கு உணர்த்தியவர். ஒரு சீரியசான இடுகையில் கும்மி அடிச்ச போதும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர். மேலும் பழக இனிமையானவர்.

சும்மா - பேருதான் சும்மா. வலைப்பூவில், தேனம்மை லஷ்மணன் அவர்களின் கவிதைகள் தேனில் தோய்த்து, சக்கரை பாகில் வடித்திருப்பார். காதலையும், பூக்களையும் இணைத்து கவிதையாக வடித்திருப்பார். அருமையான கவிதைகள்.

ராகவன் - வலைப்பதிவில் சமீபகாலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அழகான கவிதைகள். நெஞ்சைத் தொடுக் கவிதைகள். இவரின் இன்றைய பிள்ளைக்கலி கவிதை நெஞ்சைத் தொடுகின்றது. இவரையும் இந்த தொடர் இடுகை எழுத அழைக்கின்றேன். எங்க இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டும் தாங்க. அண்ணன் கவிஞர். கவி மழைப் பொழிகின்றார். இவரின் மற்றொரு கவிதை குரல் குடித்தனம். படித்துப் பாருங்க அவரின் பெருமை புரிய வைக்கின்ற மற்றொரு கவிதை.

இன்னும் சிலரை அழைக்க ஆசையாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் நாமே எல்லோரையும் அழைத்து விட்டால், மற்றவர்களுக்கும் ஆள் கிடைக்க வேண்டுமே என்ற காரணத்தினால், இதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.

51 comments:

SUFFIX said...

நான் தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா ஃபர்ஸ்ட்டா?

SUFFIX said...

//ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி.../

அந்த நதி நீர் இணைப்புத் திட்டத்தை பேசாமல் அண்ணனிடம் கொடுத்திடலாம் போல.

SUFFIX said...

//ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது//

அப்போ சங்கு சக்கரம், புஷ்வாணம், பாம்பு இதுல இன்ட்ரெஸ்ட் காண்பிச்சு இருக்கலாம். சரி அடுத்த தீபாவளிக்கு வச்சுக்கலாம்.

SUFFIX said...

//34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு//

இதுக்கு ஏண்ணே ரொம்ப யோசனை, 34ஐ அழிச்சுட்டு 32ன்னு பேணாவில் திருத்தி போட்டுக்களாமே!!

SUFFIX said...

//சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை//

ஏழு நாட்களில் ஹிந்தி, ரெபிடெக்ஸ் இது மாதிரி புத்தகங்களை பக்கத்தில் வச்சுக்கோங்க, புரியாததும் புரியும்.

SUFFIX said...

பதில்கள் அனைத்தும் அருமை, ரசிக்கும்படியாக இருந்தது!! வாழ்த்துக்கள் அண்ணா.

vasu balaji said...

அபுஜா தீபாவளி! அழைப்புக்கு நன்றி அண்ணே.

பழமைபேசி said...

//தொடர் இடுகை//

:-)

Thenammai Lakshmanan said...

அழைப்புக்கு நன்றி ராகவன் ஸார்

மணிகண்டனிடம் இருந்து ஒரு தொடர் இடுகைக்கு அழைப்பு வந்து இருக்கு
அதில் பாதியை யவது நிறைவேற்றவேண்டும்

பின்பு உங்களழைப்பையும் ஏற்று எழுதுகிறேன் ஸார்

ராகவன் said...

அன்பு இராகவன்,

எப்படி இருக்கீங்க!

இராகவன், ராகவனையும் அழைத்திருக்கலாமே தீபாவளிக்கு! உங்க name sake ஐ கூப்பிட மறந்துட்டீங்களே!

இருந்தாலும், பரவாயில்லை. இது போல தொடர் இடுகை மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிவது, உங்களுக்கு ஜெயா டிவிய விட்டா தமிழ் சேனல் வேற கிடையாது என்பது போன்ற தகவல்கள், பாவம் சார் நீங்க!

அன்புடன்
ராகவன்

மணிஜி said...

ராகவாஸ்திரம்

Thenammai Lakshmanan said...

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.


ellar childhood ilum ithuthaana

hahaha

thiyaa said...

ஹாய் ! உங்கள் அழைப்புக்கு நன்றி சார்

கலகலப்ரியா said...

அடுத்த தீபாவளியும் வர போறது.. இப்போ தொடர் இடுகையா.. நல்லா இருக்கு ராகவாச்சார்யா.. அந்த 34 அளவு எல்லாம் ரொம்ப டூ மச்.. அத பையன் கிட்ட கொடுத்துட்டு.. பையனோட சட்ட வாங்கி போட்டுக்குங்க.. சரியா இருக்கும்..

அப்புறம் தொடர் இடுகைக்கு என்னை அழைக்காததுக்கு நிஜம்மா நன்றி.. =)))))

Rajeswari said...

தீபாவளி அன்றைக்கு கூட வேலையா...பொறுப்பான ஆளுதான் போங்க...

இராகவன் நைஜிரியா said...

@@ ஷஃபிக்ஸ் / Suffix

// நான் தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா ஃபர்ஸ்ட்டா? //

ஆமாங்க. நீங்கதான் ஃபாஸ்டா பெஸ்டு பர்ஸ்டுங்க.

// அந்த நதி நீர் இணைப்புத் திட்டத்தை பேசாமல் அண்ணனிடம் கொடுத்திடலாம் போல.//

ஏங்க இந்த கொலைவெறி

// அப்போ சங்கு சக்கரம், புஷ்வாணம், பாம்பு இதுல இன்ட்ரெஸ்ட் காண்பிச்சு இருக்கலாம். சரி அடுத்த தீபாவளிக்கு வச்சுக்கலாம். //

ஓகே அடுத்த தீபாவளிக்கு வச்சுகிடலாம்... நானும் உங்களைப் பார்க்க குடும்பத்தோடு உங்க ஊருக்கு வந்துடறேன்.

// இதுக்கு ஏண்ணே ரொம்ப யோசனை, 34ஐ அழிச்சுட்டு 32ன்னு பேணாவில் திருத்தி போட்டுக்களாமே!!//

ரொம்ப நல்ல யோசனையா இருக்குதுங்க..

// ஏழு நாட்களில் ஹிந்தி, ரெபிடெக்ஸ் இது மாதிரி புத்தகங்களை பக்கத்தில் வச்சுக்கோங்க, புரியாததும் புரியும். //

புத்தகம் போட்டவர் நல்லா பணம் பண்ணிட்டார் அப்படின்னா?

// பதில்கள் அனைத்தும் அருமை, ரசிக்கும்படியாக இருந்தது!! வாழ்த்துக்கள் அண்ணா. //

நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

@@ வானம்பாடிகள்

//அபுஜா தீபாவளி! அழைப்புக்கு நன்றி அண்ணே.//

ரொம்ப நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

@@ பழமைபேசி said...
//தொடர் இடுகை//

:-)

நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
அழைப்புக்கு நன்றி ராகவன் ஸார்

மணிகண்டனிடம் இருந்து ஒரு தொடர் இடுகைக்கு அழைப்பு வந்து இருக்கு
அதில் பாதியை யவது நிறைவேற்றவேண்டும்

பின்பு உங்களழைப்பையும் ஏற்று எழுதுகிறேன் ஸார் //

மிக்க நன்றிங்க. அவசியம் எழுதுங்க.

//
ellar childhood ilum ithuthaana

hahaha//

ஆமாங்க. எவ்வளவோ அடி வாங்கியிருப்போம்.

இராகவன் நைஜிரியா said...

// ராகவன் said...
அன்பு இராகவன்,

எப்படி இருக்கீங்க!

இராகவன், ராகவனையும் அழைத்திருக்கலாமே தீபாவளிக்கு! உங்க name sake ஐ கூப்பிட மறந்துட்டீங்களே!

இருந்தாலும், பரவாயில்லை. இது போல தொடர் இடுகை மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிவது, உங்களுக்கு ஜெயா டிவிய விட்டா தமிழ் சேனல் வேற கிடையாது என்பது போன்ற தகவல்கள், பாவம் சார் நீங்க!

அன்புடன்
ராகவன் //

ஹையா ஒருத்தர் தானா வந்து மாட்டிக்குவேன் என்கிற போது கூப்பிடாம இருப்போமா? கோத்து விட்டுட்டோமில்ல...

வாங்க வந்து தொடர் இடுகையை தொடருங்கள்.

இராகவன் நைஜிரியா said...

// தண்டோரா ...... said...
ராகவாஸ்திரம் //

ஆஹா... ஒரு வார்த்தை என்றாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// தியாவின் பேனா said...
ஹாய் ! உங்கள் அழைப்புக்கு நன்றி சார் //

தங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
அடுத்த தீபாவளியும் வர போறது.. இப்போ தொடர் இடுகையா.. நல்லா இருக்கு ராகவாச்சார்யா.. அந்த 34 அளவு எல்லாம் ரொம்ப டூ மச்.. அத பையன் கிட்ட கொடுத்துட்டு.. பையனோட சட்ட வாங்கி போட்டுக்குங்க.. சரியா இருக்கும்..

அப்புறம் தொடர் இடுகைக்கு என்னை அழைக்காததுக்கு நிஜம்மா நன்றி.. =))))) //

யக்கோவ்.. இந்த தொடருக்கான அழைப்பு இப்போதுதாங்க வந்தது. அதான் போட்டேன்.

முதலில் உங்களைத்தான் கூப்பிட வேண்டும் என எண்ணினேன். அண்ணன் வானம்பாடிகளை நான் கூப்பிட்டுள்ளேன். அவர் உங்களை கூப்பிடுவார் என்பதால் நான் உங்களை கூப்பிடாமல் விட்டுவிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...
தீபாவளி அன்றைக்கு கூட வேலையா...பொறுப்பான ஆளுதான் போங்க... //

நமக்குத்தாங்க தீபாவளி. கம்பெனியில் தீபாவளி என்றால் என்ன என்றுத் தெரியாதுங்க. அதனால் விடுமுறையில்லைங்க.

ஹேமா said...

இராகவன் வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் அன்றைய தினத்தை நினைத்துக்கொள்கிறோம்.அவ்வளவும்தான்.என்னைவிட நீங்க பரவாயில்லை.அழகா சந்தோஷமாவே கொண்டாடியிருக்கீங்க.எனக்குக் குளிக்ககூட நேரமில்லை இந்தத் தீபாவளி.

பி - கு
இராகவனுக்கு என்னில என்னமோ கோவம் இருக்கு.என்னன்னு தெரியல.

வெண்ணிற இரவுகள்....! said...

//சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. //
இந்த பதிலில் ஒரு ஏக்கம் தெரிந்தது

S.A. நவாஸுதீன் said...

//இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் //

அண்ணா. எல்லாம் இடமும் பார்த்துட்டீங்க. அப்படியே சௌதி அரேபியா பக்கமும் வந்துட்டு போங்க.

S.A. நவாஸுதீன் said...

//சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது.//

நெகிழ்ச்சியா இருக்குண்ணா

***********************************

//கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.//

தீபாவ(ளி)லி. நம்ம வாழ்க்கையே இப்படித்தானே. என்ன பன்றது

***********************************

vasu balaji said...

நான் முதல்ல இத பார்க்கலை.
/இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை./

நம்பீஈஈஈட்டோம்ல. படிக்கிற எல்லாரும் இஃகின்னாங்களா இல்லையா கேளுங்க:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதில்கள் அனைத்தும் அருமை

நிஜாம் கான் said...

இப்ப நேரமில்ல, அதனால மொதல்ல ஓட்ட போட்டுட்டு அப்பாலிக்கா வாரேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. நாங்களும் இந்தப் பதிவு போட்டுட்டோம்ல..:-)))

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு.... உங்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டோம்.

ஜெட்லி... said...

இத்தனை ஊரில் வேலையா??
உலகம் சுற்றும் வாலிபன் என்றால் நீங்கள் தான்.
அதில் வாலிபனை மட்டும் எடுக்கணும்.....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super :-)

Menaga Sathia said...

தீபாவளி அன்னிக்கும் வேலையா?பொறுப்பா இருக்கிங்க அண்ணா...

பாண்டிச்சேரி நம்ம சொந்த ஊரிலும் வேலை பார்த்துருக்கிங்க.

////ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது// நிஜம் தான் இப்போ எனக்கும் அந்த ஆசை போய்விட்டது..

பா.ராஜாராம் said...

யதார்த்தமான பங்களிப்பு அண்ணாச்சி!நெருக்கமாய் உணர வைக்கிற நடை.நல்ல தேர்வும்!

Thenammai Lakshmanan said...

ராகவன் ஸார்

நானும் தங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கிறேன் ..

உங்கள் ஹாஸ்யம் நாங்கள் அறிந்ததுதான் ..

இதில் இன்னும் சிறப்பாக எழுதுங்கள் வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

தொடர் இடுகை என்பதுதான் சரியானது

ப்ரியமுடன் வசந்த் said...

எதார்த்தமான பதில்கள் அண்ணா

என்ன இருந்தாலும் சொந்த ஊர்ல தீபாவளி கொண்டாடுற மாதிரி வருமா?

ஆ.ஞானசேகரன் said...

//எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன்//

நம்பிட்டோம்... நம்புகின்றோம்.... நம்புவோம்

ஆ.ஞானசேகரன் said...

எதார்த்தமான பதிலகள்

அப்துல்மாலிக் said...

ஆகா இதுக்கூட அழகான தொடரா இருக்கே, ஒவ்வொருத்தரோட பண்டிகைகளின் கொண்டாட்டங்கள்

காலம் தாழ்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அண்ணன்... ஓட்டு போட்டுட்டேன்.
பதில்கள் நறுக்,நறுக்.
தீபாவளி வாழ்த்துக்கள் (அட்வான்ஸாக...)

வால்பையன் said...

தீபாவளி!

நட்புடன் ஜமால் said...

ஓட்டு போட்டாச்சுங்கோ ...

ஆனாலும் மீ தி வெரி வெரி லேட்

ஜோதிஜி said...

இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது

சத்தியமான வார்த்தைகள்.

யக்கோவ்..

அபுஜாவில் இருந்தாலுதாலும் அலும்பு அப்படியே இருக்கிறது ஐயா.

அன்றைய தினத்தை நினைத்துக்கொள்கிறோம்.

இது வார்த்தைகள் அல்ல. வேறு எங்கங்கோ அழைத்துச் செல்கிறது.

நெருக்கமாய் உணர வைக்கிற நடை

எழுத்தும் மட்டுமல்ல. உரையாடிய பிறகு கூட அந்த மகிழ்ச்சி கிடைத்தது.

Thenammai Lakshmanan said...

ராகவன் ஸார்
தொடர் இடுகை வெளியிட்டுள்ளேன்

வந்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க

தேவன் மாயம் said...

ஆம் பணமிருக்கு!! வெடிக்கும் விருப்பம் இல்லை!!

தேவன் மாயம் said...

நான் 50/ 50 பார்த்து ரொம்ப நாளாச்சு!!!

ஆரூரன் விசுவநாதன் said...

இயல்பாக சொல்லியிருகிறீர்கள் ராகவன்.......வாழ்த்துக்கள்