Saturday, November 14, 2009

அகர வரிசை சங்கிலித் தொடர் இடுகை...


உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. சரி நமக்கும் இடுகை எழுத விஷயம் ஒன்னும் கிடையாதா, இதுதாண்டா சாக்கு அப்படின்னு, இந்த சங்கிலித் தொடர் இடுகையை கெட்டியா பிடிச்சுகிற வேண்டியதா இருக்குங்க.

சும்மா (நம்புங்க வலைப்பூ பெயர்ங்க..) அப்படின்னு சொல்லிகிட்டு, பொளந்து கட்டிகிட்டு இருக்கும் கவிதாயினி, தேனம்மை லஷ்மணன் அவர்கள், சுமார் 15 நாட்களுக்கு முன் இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்து இருந்தார்கள். இன்னிக்கு எழுதலாம், நாளைக்கு எழுதலாம் என்று நாட்களை கடத்தியாச்சுங்க. சோம்பேறித்தனம் என்று இல்லை... வேலை பளு கூடுதல்தாங்க காரணம். ஒரு வழியா இன்னிக்கு முடிவு பண்ணி இந்த தொடர் இடுகையை தொடர்கின்றேன்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க. அதனால், மீ த லாஸ்ட்...

1. A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...

2. B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல

3. C- Cake or pie - பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..

4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி

5.E - Essential items you use everyday - மூளை அப்படின்னு சொல்லுணும் ஆசை.. ஆனால் இருப்பவங்கதான் அதைச் சொல்ல முடியும் அப்படிங்கிறதால, எதையெல்லாம் தினமும் உபயோகப் படுத்துகின்றேனோ, அது எல்லாம்.

6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...

7. G - Gummy bears or worms - இது சத்தியமா என்ன என்று புரியலை.. அதனால் Pass..

8. H - Hometown - எந்த ஊரைச் சொல்ல... படிச்சது கும்பகோணம்.

9. I - Indulgence - இது வேறாயா... அப்படி ஒன்னும் கிடையாது

10. J - January/Feruary - இரண்டுமே... தங்கமணி பிறந்த நாள் ஜனவரி.. என்னோடது பிப்ரவரி அதனாலத்தான்

11. K - Kids and their names - இளவரசு ஒருவர் மட்டும் தாங்க - அரவிந்த்

12. L - Life is incomplete with out - அன்பு

13. M - Marriage date - நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)

14. N - Numberof siblings - 2 அன்பான அக்காக்களும் 2 அன்பான அண்ணன்களும்

15. O - Oranges or Apples - எது கொடுத்தாலும் எனக்கு ஓகே

16. P - Phobias/ Fears - பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்

17. Q - Quotes for today - இரண்டு சொல்ல ஆசைப் படுகின்றேன்

ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.

BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS (இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது - ரொம்ப பிடித்தது)

18. R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்

19. S - Season - Four season

20. T- TAG 4 PEOPLE - யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)

21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்

22. V - vegetables you dont like - சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் அப்படின்னு இருக்கோம் .. இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம் சொல்லமுடியுமா என்ன..

23. W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..

24. X - Xrays you had - அது நிறைய இருக்குங்க... வருஷா வருஷம் எடுப்பது என்றில்லாமல், அவ்வப்போது முதுகு, மார்பு, கழுத்து என்று நிறைய இருக்கு..

25. Y - Your Favourite Food - சைவ உணவு வகைகள்

26. Z - Zodiac Sign - மகரம் / Acquarian


அன்பிற்கு உரியவர்கள் - நான் அன்பு செலுத்துபவர்கள், என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும்

ஆசைக்குரியவர் - அன்பு மனைவியும், ஆசை மகனும்

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்

ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

உலகத்தில் பயப்படுவது - கூட இருந்தே குழி பறிக்கும் ஆசாமிகள்

ஊமை கண்ட கனவு - அது அவரைத்தாங்க கேட்கணும்

எப்போதும் உடன் இருப்பது - உயிர் (இப்போதைக்கு...) பின்னர் - நாம் செய்த நல்ல காரியங்கள், தான தர்மங்கள்

ஏன் இந்தப் பதிவு - கூப்பிட்டு இருக்காங்க - ஏமாத்தக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - நல்ல விஷயங்கள்.. பெரியோர்களின் வாழ்த்துகள்

ஒரு ரகசியம் - ரகசியம் .. பரம ரகசியம்.. இரண்டாவது ஆளுக்கு தெரிஞ்சா அது ரகசியமே இல்லை

ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..

ஒளவை மொழி ஒன்று - ஆறுவது சினம்..


பொறுப்பி :-

இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் ஐம்பது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் 50 வரை போட்டாச்சு...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

117 comments:

கலகலப்ரியா said...

50th idugaikku vazhththukal!

Mahesh said...

Congrats Raghavan sir !!!

ஹேமா said...

ராகவன்,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அட...ராஜபக்சவையும் இதுக்குள்ள கொண்டு வந்து ஜோக்கர் ஆக்கிட்டீங்களே.எதுக்கும் கவனமா இருங்க.

vasu balaji said...

50வது இடுகைக்கு வாழ்த்துகள். அசத்தலா மீ த 50னு போட வேணாமா=))

பா.ராஜாராம் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.பதில்கள் ரசனை..

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

இளவரசையும் பட்டத்தரசியையும் விசாரித்த்ததாகக் கூறவும்

இயல்பான பதில்கள்

அருமை

ஐம்பதாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

50வது இடுகைக்கு வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

50க்கு வாழ்த்துக்கள்

ஏன் இன்னைக்குத்தான் திருமண நாளா?தேதி சொன்னா குறைந்துடுவீங்களோ?
வாழ்த்து சொல்லுவோம்ல....

ரொம்ப.......லேட்டான தொடரிடுகை...

அறிவிலி said...

50க்கும், திருமண நாளுக்கும் வாழ்த்துகள்.

thiyaa said...

50வது இடுகைக்கு வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஆகா ஆகா திருமண நாள் இம்மதம் தானா - சொல்லவே இல்லையே - நல்வாழ்த்துகள்

Anonymous said...

5oபதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

14. ஏன் அண்ணா இந்த தங்கை கணக்கில் இல்லையா?

18. அதான் எங்க அண்ணா

22. உண்மை அண்ணா

24. உடம்பை பார்த்துக்கோங்க

சங்கர் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்


//B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல//

அப்போ 'பொன்சேகா'ன்னு வச்சுக்கலாமா?

SUFFIX said...

50வது இடுகைக்கு வாழ்த்துக்கள் பெரியண்ணே!!

SUFFIX said...

பதிலகள் தெள்ளத்தெளிவா புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க....ஹி..ஹி!!

SUFFIX said...

//சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் //

லிமிட்ட‌டா அன்லிமிட்டடா?

SUFFIX said...

// கோபம் ... முன் கோபம்..//

I dont believe......

S.A. நவாஸுதீன் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

//W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..//

உங்களைப் பார்த்தால் அப்படி தெரியலையேண்ணே

RAMYA said...

50வது இடுகைக்கு வாழ்த்துகள் அண்ணா:))

RAMYA said...

//
நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)
//

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

சொல்லவே இல்லே பாத்தீங்களா ?

RAMYA said...

//
N - Numberof siblings - 2 அன்பான அக்காக்களும் 2 அன்பான அண்ணன்களும்
//

இதுலே நானு இல்லையா??

RAMYA said...

//
ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.
//

இது எனக்கும் ரொம்ப பிடிக்கும், முடிந்த வரை இதை கடைபிடிக்க நினைக்கிறேன்!

RAMYA said...

//
R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்
//

ஹா ஹா சூப்பர் நல்லா சொல்லி இருக்காங்க அண்ணி:-)

RAMYA said...

//
எப்போதும் உடன் இருப்பது - உயிர் (இப்போதைக்கு...) பின்னர் - நாம் செய்த நல்ல காரியங்கள், தான தர்மங்கள்
//

அருமையான பதில். மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது!!

இது நிதர்சனமான உண்மை அண்ணா!!

RAMYA said...

//
ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..
//

எனக்கும் இவைகள் எல்லாம் பிடிக்கும் :))

RAMYA said...

//
இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் ஐம்பது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் 50 வரை போட்டாச்சு...
//

வாழ்த்துக்கள்!! அண்ணா ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

விரைவில் நூறு மற்றும் ஆயிரம் இடுகைகள் எழுத என்னோட வாழ்த்துக்கள் அண்ணா!!

கார்த்திகைப் பாண்டியன் said...

சிம்பிளான, உண்மையான பதில்கள்..

அம்பதுக்கு வாழ்த்துகள் அண்ணே..!!

நிஜாம் கான் said...

//பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்//

அண்ணியப் பாத்து பயம் இல்லயா அண்ணே!

நிஜாம் கான் said...

//பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..//

இது தான் டாப்பு..,

நிஜாம் கான் said...

//கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி//

நைஜீரியாவில கிடைக்குதா? அய்யோ அய்யோ!

நிஜாம் கான் said...

// உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்//

அவ்..அவ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிஜாம் கான் said...

50க்கு வாழ்த்துக்கள் அண்ணே!

கலையரசன் said...

பதில்கள் எல்லாத்திலேயுமே உண்மை தெறிக்குதுண்ணே!! கொஞ்ச நாளா எங்க ஆளையே கானும்? பிசியோ?

நட்புடன் ஜமால் said...

50க்கு வாழ்த்துகள் அண்ணா

-------------


BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS]]

அருமையான விடயம் ...

coolzkarthi said...

பதில்கள் ரசனை,ஐம்பதாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் அண்ணா....

ஆ.ஞானசேகரன் said...

//இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. //

முதலில் வாழ்த்துகள் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

பதில்களில் அழகு தெரிகின்றது

Thenammai Lakshmanan said...

//4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி//

ஆஹாஹா என்ன சுவை டிகிரி காபி ம் ம் ஞாபகப் படுத்திட்டீங்க

Thenammai Lakshmanan said...

நன்றி ராகவன் நீங்க இதை தொடர்ந்ததுக்கு

வாழ்த்துக்கள்...

50 ஆவது இடுகையா ?

அற்புதமா இருக்கு

Thenammai Lakshmanan said...

//6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...//


தங்கமணி படிச்சாங்களா இந்த பதிலை

Thenammai Lakshmanan said...

//ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.//


எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்

Thenammai Lakshmanan said...

//21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்//

:-)))

hahaha nice

Thenammai Lakshmanan said...

//ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்//

good keep it up

Thenammai Lakshmanan said...

//இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்//


கலக்குறீங்க ராகவன்

விஜய் said...

அண்ணே மகரம் - capricorn aquarius - கும்பம்

அழகான பதில்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

Thenammai Lakshmanan said...

//ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..
ஒளவை மொழி ஒன்று - ஆறுவது சினம்..//

excellent and thanks Raagaan

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

அப்துல்மாலிக் said...

ரசிக்கத்தக்க அதே சமயம் சிந்திக்க வைத்த பதில்கள்

அப்துல்மாலிக் said...

50 வது பதிவுலே 50 போட்டுக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

லேட்டா வந்தாலும் அண்ணாத்தை இடுக்கையை மறக்க மாட்டோம்லே

அப்துல்மாலிக் said...

//இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்
//

அண்ணாத்தே நாங்க இன்டெர்நெட் கனெக்ஷனுக்கு காசு கட்டிதான் போடுறோம், இல்லேனா எதிசலாத் காரன் காதை திருகிடுவான்..உங்களுக்கு இது இலவசமா கிடைக்கலே ஏன்னா உங்க காசு என்காசு என் காசு என் காசு.. ஹெ ஹெ

அப்துல்மாலிக் said...

நகமும் சதையும் போல்
பேனாவும் மையும் போல்
பிளாக்கும் பின்னூட்டமும் போல்
பட்டத்தரசியும் நீண்ட வருடங்கள் வாழ‌

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!!

//
நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)
//இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!
தேதி சொல்லியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போம்..

Menaga Sathia said...

//
ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.
//

எனக்கு பிடித்த வரிகள் இவை..

Menaga Sathia said...

//பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..// சூப்பர்..

Menaga Sathia said...

//Z - Zodiac Sign - மகரம் //ஹைய் நீங்களும் நானும் ஒரே ராசிக்காரங்க..

Jaleela Kamal said...

எல்லா பதில்களும் ரொம்ப அருமை

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் நன்பரே,
50தாவது இடுகைக்கும்,
அழகான திருமண நாள்
நினைவிற்கும்.

Thenammai Lakshmanan said...

Raagavan

thumbaippuu en 50th flower idukai

vanthu paarthu aasirvathinga

ungalala thaan naanivvalavu flowers patri ezuthi irukiren

nandri RAAGAVAN

அன்புடன் மலிக்கா said...

50 தாவது இடுகைக்கு மனமர்ந்த வாழ்த்துக்கள்..

தொடரட்டும் உங்களின் பணி..

லதானந்த் said...

ராகவன் வாழ்த்துக்கள்.
நீங்க இருக்கிரது நைஜீரியாவா?
அதைப்பத்தி எதாச்சும் எழுதுங்களேன் வித்தியாசமா?

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் தல..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

all the best anna

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
50th idugaikku vazhththukal! //

Thanks a lot

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
Congrats Raghavan sir !!! //

Thanks a lot Mahesh...

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
ராகவன்,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அட...ராஜபக்சவையும் இதுக்குள்ள கொண்டு வந்து ஜோக்கர் ஆக்கிட்டீங்களே.எதுக்கும் கவனமா இருங்க. //

வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல. நிச்சயம் கவனமாக இருந்துக்குறேங்க.

ஸ்ரீராம். said...

லதானந்த் சொல்றா மாதிரி நைஜீரியா பற்றி எழுதலாமே...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
50வது இடுகைக்கு வாழ்த்துகள். அசத்தலா மீ த 50னு போட வேணாமா=)) //

அண்ணே நன்றிங்க அண்ணே... சரியாச் சொன்னீங்க மீ த 50 சொல்லியிருக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// பா.ராஜாராம் said...
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.பதில்கள் ரசனை.//

கவிஞரே... வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
வாழ்த்துகள்! //

ஐயா நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// cheena (சீனா) said...
அன்பின் ராகவன்

இளவரசையும் பட்டத்தரசியையும் விசாரித்த்ததாகக் கூறவும்

இயல்பான பதில்கள்

அருமை

ஐம்பதாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் //

ஐயா தங்களின் அன்புக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டு இருக்கேன்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

இராகவன் நைஜிரியா said...

//T.V.Radhakrishnan said...
50வது இடுகைக்கு வாழ்த்துகள் //

நன்றி TVR...

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
50க்கு வாழ்த்துக்கள்

ஏன் இன்னைக்குத்தான் திருமண நாளா?தேதி சொன்னா குறைந்துடுவீங்களோ?
வாழ்த்து சொல்லுவோம்ல....

ரொம்ப.......லேட்டான தொடரிடுகை... //

நன்றி வசந்த்.

என்னுடைய திருமண நாள் 08-நவம்பர்-1992.

அன்றும், அதற்கு முந்தைய நாளும் நண்பர்கள் பலருடன் சாட் செய்யும் போது சொல்லவில்லை. அடிவுழுமே என்பதால் தான் தேதி சொல்லவில்லைங்க. இப்ப சொல்லிட்டேன். கும்முறவங்க கும்முங்க.

இராகவன் நைஜிரியா said...

// அறிவிலி said...
50க்கும், திருமண நாளுக்கும் வாழ்த்துகள். //

நன்றி அறிவிலி.

இராகவன் நைஜிரியா said...

// cheena (சீனா) said...
ஆகா ஆகா திருமண நாள் இம்மதம் தானா - சொல்லவே இல்லையே - நல்வாழ்த்துகள் //

நன்றிங்க ஐயா... 8-நவம்பர்-1992 திருமண நாள்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழரசி said...
5oபதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

14. ஏன் அண்ணா இந்த தங்கை கணக்கில் இல்லையா?

18. அதான் எங்க அண்ணா

22. உண்மை அண்ணா

24. உடம்பை பார்த்துக்கோங்க //

நன்றி தமிழரசி...

நீங்க என் உடன் பிறவா சகோதரிங்க

இராகவன் நைஜிரியா said...

// சங்கர் said...
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்


//B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல//

அப்போ 'பொன்சேகா'ன்னு வச்சுக்கலாமா? //

நன்றி சங்கர் தங்கள் வாழ்த்துகளுக்கு.

வம்புல மாட்டிவிட்டுடாதீங்க அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள் பெரியண்ணே!! //

நன்றி ஷஃபிக்ஸ்..

// பதிலகள் தெள்ளத்தெளிவா புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க....ஹி..ஹி!! //

வஞ்சகப் புகழ்ச்சி அணிமாதிரி தெரியுது..

// // கோபம் ... முன் கோபம்..//

I dont believe......//

அப்படிங்களா... அய்யோ பாவம்.. இவ்வளவு வெள்ளாந்தியா இருக்கீங்களே..

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

//W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..//

உங்களைப் பார்த்தால் அப்படி தெரியலையேண்ணே //

நன்றி நவாஸுதன்.

அப்படியா... ரொம்ப நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
50வது இடுகைக்கு வாழ்த்துகள் அண்ணா:)) //

நன்றி தங்கச்சி.


// திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

சொல்லவே இல்லே பாத்தீங்களா ? //

இல்லம்மா... நவம்பர் 8 திருமணத் தேதி.

// இதுலே நானு இல்லையா?? //

நீங்க உடன் பிறவா சகோதரிங்க

// ஹா ஹா சூப்பர் நல்லா சொல்லி இருக்காங்க அண்ணி:-) //

ஓ சப்போர்ட் இப்படி மாறிடுச்சா..

//வாழ்த்துக்கள்!! அண்ணா ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

விரைவில் நூறு மற்றும் ஆயிரம் இடுகைகள் எழுத என்னோட வாழ்த்துக்கள் அண்ணா!! //

நன்றி தங்கச்சி.. உங்களுடைய வாழ்த்துகளுக்கு

இராகவன் நைஜிரியா said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
சிம்பிளான, உண்மையான பதில்கள்..

அம்பதுக்கு வாழ்த்துகள் அண்ணே..!! //

நன்றி நன்றி கார்த்திகை பாண்டியன்..

இராகவன் நைஜிரியா said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//அண்ணியப் பாத்து பயம் இல்லயா அண்ணே! //

சில சமயம் உண்மைகளை இப்படி போட்டு உடைக்க கூடாது... ஆமாம் சொல்லிபுட்டேன்... அண்ணனைப் பார்த்தா பாவமா இல்ல..

// நைஜீரியாவில கிடைக்குதா? அய்யோ அய்யோ! //

இங்கு பால் பவுடர் போட்ட இன்ஸ்டண்ட் காப்பி.

// அவ்..அவ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

இப்படி எல்லாம் அழப்பிடாது... கண்ணை துடைச்சுகுங்க.

// 50க்கு வாழ்த்துக்கள் அண்ணே!//

நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// கலையரசன் said...
பதில்கள் எல்லாத்திலேயுமே உண்மை தெறிக்குதுண்ணே!! கொஞ்ச நாளா எங்க ஆளையே கானும்? பிசியோ? //

நன்றி கலை.

கொஞ்சம் பிசி.. நிறைய பேரை ஃபாலோ பண்ணும் போது, சில இடுகைகள் படிக்காமல் விட்டு போயிடுது..

இனிமேல் தவறாமல் உங்க இடுகைக்கு வந்துடேறங்க

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
50க்கு வாழ்த்துகள் அண்ணா

-------------


BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS]]

அருமையான விடயம் ... //

வா தம்பி வா..

உன் வாழ்த்துகளுக்கு நன்றி.

என்னப்பா ஒரே ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு ஒடிட்ட...

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...
பதில்கள் ரசனை,ஐம்பதாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் அண்ணா.... //

நன்றி கார்த்தி...

இராகவன் நைஜிரியா said...

// ஆ.ஞானசேகரன் said...
//இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. //

முதலில் வாழ்த்துகள் நண்பா... //


//பதில்களில் அழகு தெரிகின்றது //

நன்றி ஞானசேகரன்.. உங்கள் அன்புக்கு நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
//4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி//

ஆஹாஹா என்ன சுவை டிகிரி காபி ம் ம் ஞாபகப் படுத்திட்டீங்க //

அந்த சுவையே தனிதாங்க..


// நன்றி ராகவன் நீங்க இதை தொடர்ந்ததுக்கு

வாழ்த்துக்கள்...

50 ஆவது இடுகையா ?

அற்புதமா இருக்கு//

கவிதாயினி வாழ்த்துகளுக்கு நன்றி.

//6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...//


தங்கமணி படிச்சாங்களா இந்த பதிலை //

படிச்சாங்களே...

##//ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.//


எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் ##

மிக்க நன்றி

##//21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்//

:-)))

hahaha nice##

நன்றி

##//ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்//

good keep it up##

ஆமாங்க..

##//இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்//


கலக்குறீங்க ராகவன் ##

நன்றி


// Raagavan

thumbaippuu en 50th flower idukai

vanthu paarthu aasirvathinga

ungalala thaan naanivvalavu flowers patri ezuthi irukiren

nandri RAAGAVAN //

தங்களின் பாசத்திற்கு நன்றி. வலையுலகு தந்த அன்புத் தங்கைகளில் நீங்களும் ஒருவர்.

தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றிகள் பல

இராகவன் நைஜிரியா said...

// கவிதை(கள்) said...
அண்ணே மகரம் - capricorn aquarius - கும்பம்

அழகான பதில்கள்

வாழ்த்துக்கள்

விஜய் //

மிக்க நன்றிங்க. கவிஞர் விஜய் என் வலைப்பூவிற்கு வந்தது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அண்ணே மகரம் - நட்சத்திரம் படி
Acquarian - ஆங்கில காலண்டர் முறைபடி
அதனாலத்தான் அப்படி போட்டேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super :-))))))))))

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... //

நன்றி... நன்றி... நன்றி..

// அபுஅஃப்ஸர் said...
ரசிக்கத்தக்க அதே சமயம் சிந்திக்க வைத்த பதில்கள் //

மீண்டும் ஒரு முறை நன்றி..


// 50 வது பதிவுலே 50 போட்டுக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

லேட்டா வந்தாலும் அண்ணாத்தை இடுக்கையை மறக்க மாட்டோம்லே //

தங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப் பட்டவனாக இருக்கின்றேன்.

##//இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்
//

அண்ணாத்தே நாங்க இன்டெர்நெட் கனெக்ஷனுக்கு காசு கட்டிதான் போடுறோம், இல்லேனா எதிசலாத் காரன் காதை திருகிடுவான்..உங்களுக்கு இது இலவசமா கிடைக்கலே ஏன்னா உங்க காசு என்காசு என் காசு என் காசு.. ஹெ ஹெ ##

இது அபு டச்..

// நகமும் சதையும் போல்
பேனாவும் மையும் போல்
பிளாக்கும் பின்னூட்டமும் போல்
பட்டத்தரசியும் நீண்ட வருடங்கள் வாழ‌

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் //

நன்றி அபு... தங்கள் வாழ்த்துகளுக்கு

இராகவன் நைஜிரியா said...

// Mrs.Menagasathia said...
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!!//

நன்றி..

##// நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)
//இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!
தேதி சொல்லியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போம்.. ##

சொல்லியிருக்கலாம். தேதி சொல்ல விட்டு போச்சு. இப்ப சொன்னா சிலரிடம் அடி வாங்க நேரிடும், ஏன் அப்பவே சொல்லவில்லை என்று.. அதனாலத்தான்..


##//பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..// சூப்பர்.. ##

வெளி நாட்டில் இருக்கும் தாங்க பசியோட கொடுமை தெரியுங்க

##//Z - Zodiac Sign - மகரம் //ஹைய் நீங்களும் நானும் ஒரே ராசிக்காரங்க.. ##

ஹையா... வெரி நைஸ்..

இராகவன் நைஜிரியா said...

// Jaleela said...
எல்லா பதில்களும் ரொம்ப அருமை

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் //

ரொம்ப நன்றிங்க...

இராகவன் நைஜிரியா said...

// Ravichandran said...
வாழ்த்துக்கள் நன்பரே,
50தாவது இடுகைக்கும்,
அழகான திருமண நாள்
நினைவிற்கும். //

நன்றிங்க ரவிச்சந்திரன். தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

இராகவன் நைஜிரியா said...

// அன்புடன் மலிக்கா said...
50 தாவது இடுகைக்கு மனமர்ந்த வாழ்த்துக்கள்..

தொடரட்டும் உங்களின் பணி.. //

நன்றி மலிக்கா..

உங்களின் கவிதைகளின் ஆழத்தைப் பார்த்து வியந்து போகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// லதானந்த் said...
ராகவன் வாழ்த்துக்கள்.
நீங்க இருக்கிரது நைஜீரியாவா?
அதைப்பத்தி எதாச்சும் எழுதுங்களேன் வித்தியாசமா? //

நன்றிங்க ஐயா.

என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். உங்க பின்னூட்டத்தைப் பார்த்து இனிய அதிர்ச்சி.

கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த போது தங்களை சந்திக்க நிறைய ஆசை இருந்தது. ஆனால், ஒரு தயக்கம்.. உங்கள் பதவி, அதற்காக நீங்க அலையும் அலைச்சல்.. தொந்திரவு செய்யக் கூடாது என்ற எண்ணம்.

நைஜிரியா பற்றி எழுத விஷயங்கள் சேகரிக்க வேண்டும். என்னுடைய வேலையில் எங்கு வெளியில் செல்லும் வேலை எதுவும் கிடையாது என்பதால் செல்வதில்லை.

தகவல்களுக்காக, சிலரிடம் பேசிக் கொண்டு இருக்கின்றேன். கிடைக்கும் போது பகிர்கின்றேன்.

தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// வினோத்கெளதம் said...
வாழ்த்துக்கள் தல.. //

நன்றி வினோத்.

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீ.கிருஷ்ணா said...
all the best anna //

நன்றி ஸ்ரீ. கிருஷ்ணா..

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீராம். said...
லதானந்த் சொல்றா மாதிரி நைஜீரியா பற்றி எழுதலாமே... //

நன்றி ஸ்ரீராம்...

எழுதணும்... தகவல்கள் சேகரித்துக் கொண்டு இருக்கின்றேன்.

கிடைத்ததும் எழுதுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீ said...
super :-)))))))))) //

நன்றி ஸ்ரீ...

ஜோதிஜி said...

50வது உங்கள் இடுகைக்கு என்னுடைய பின்னூட்டம் தான் 100 என்பது போல் காட்டுகிறது.

காரைக்குடி சாப்பாடு பந்தியில் கூட இடம் பிடித்து விடலாம் போலிருக்கிறது.

ஆனால் உண்மைத்தமிழன் இடுகைக்கு அடுத்து உங்கள் இடுகையில் தான் அத்தனை கடினமாக இருக்கிறது.

50 இடுகைக்கு இத்தனை உண்மை நட்புக்கூட்டம் என்றால் 100 வரும் போது நான் 200 வது கமெண்ட போடனும் போலிருக்கிறது.

நிறைய வருத்தம். திருப்பூருக்கு வந்தும் நான் பார்க்காமல் விட்டு விட்டேன் என்று.

நீங்கள் போகின்ற போக்கில் எப்போதும் இதில் ஜாலியாக எதார்த்தமாக சொல்லி இருந்தாலும் இரண்டு விசயங்கள்.

இயக்குநர் பாக்யராஜ் சொன்னதும்,(அதுக்குத் தானே சென்ற இடுகையில் இத்தனை உணர்ச்சி கொந்தளிப்புகள்)

டிகிரி காப்பி

மின் மயானத்தில் இறக்கும் போது கூட மனைவியிடம் சொல்லி உள்ளது இந்த பில்டரை சேர்த்து உள்ளே அனுப்பி விடு.

புரியும் என்று நிணைக்கின்றேன்.

உங்களின் தனிப்ட்ட அக்கறையும், இடுகை பண்பாடும், படைப்புகளில் காட்டும் மனித நேயம் அத்தனைக்கும் இந்த அதிகாலையில் வந்த சர்வதேச அழைத்தவருக்கு தூக்கம் கலைத்தவருக்கு நன்றி.

Rajeswari said...

முதலில் 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

இருங்க மத்தத படிச்சிட்டு வர்ரேன்

Rajeswari said...

12,17 சூப்பர்...

pudugaithendral said...

50க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் 500 ஆவது பதிவு போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

இப்பத்தான் அம்பதாவது பதிவா!?

வாழ்த்துக்கள் அண்ணே!

Thenammai Lakshmanan said...

உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி ராகவன்

Prathap Kumar S. said...

//உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. //

இப்படித்தான் சார் நிறையே பேரு தப்பு பண்ணிடறாய்ங்க...ஹஹஹ நல்லாருக்கு ...
கலக்கல் வாத்யாரே...

Prathap Kumar S. said...

//A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...//

சார்... ரெண்டு மரமும் தோப்பாகாது... அப்ப எத்தனை பேரு...கில்லாடிசார் நீங்க...

Prathap Kumar S. said...

//R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்//

இதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க... அவங்க உங்களை கலாயக்கிறாங்க....

நேசமித்ரன். said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள்

அட பார்த்தா அப்படி தெரியலியே

ஒஹ்ஹ் அங்கிளுக்கிள் தாத்தா வா ?

சரி சரி :)

- நேசமித்ரன்

இராகவன் நைஜிரியா said...

நன்றி தேவியர் இல்லம் ஜோதிஜி..

உங்கள் புகழ்ச்சிக்கு என் வந்தனங்கள். இந்த புகழ்ச்சிக்கு எல்லாம் நான் தகுதியானவனா என நினைக்கத் தோன்றுகின்றதுங்க...

இராகவன் நைஜிரியா said...

நன்றி தங்கச்சி ரசனைக்காரி ராஜேஸ்வரி..

இராகவன் நைஜிரியா said...

நன்றி புதுகைத் தென்றல்

இராகவன் நைஜிரியா said...

நன்றி வால்பையன்

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி ராகவன் //

நன்றி...

இராகவன் நைஜிரியா said...

// நாஞ்சில் பிரதாப் said...
//உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. //

இப்படித்தான் சார் நிறையே பேரு தப்பு பண்ணிடறாய்ங்க...ஹஹஹ நல்லாருக்கு ...
கலக்கல் வாத்யாரே...//

ஹி.. ஹி...


// சார்... ரெண்டு மரமும் தோப்பாகாது... அப்ப எத்தனை பேரு...கில்லாடிசார் நீங்க... //

பரட்ட பத்த வச்சுட்டீய..


// இதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க... அவங்க உங்களை கலாயக்கிறாங்க....//

ச்...சூ... சூ இப்படியெல்லாம் உண்மையை வெளியேச் சொல்லக்கூடாது..

இராகவன் நைஜிரியா said...

// Kavingan said...
ஐம்பதுக்கு வாழ்த்துகள்

அட பார்த்தா அப்படி தெரியலியே

ஒஹ்ஹ் அங்கிளுக்கிள் தாத்தா வா ?

சரி சரி :)

- நேசமித்ரன் //

வாய்யா கவிஞரே...

இப்படியெல்லாம் வேற நினைப்பிருக்கா...

நடக்கட்டும்..

இரசிகை said...

nallaayirukku...!