Monday, November 16, 2009

என்ன தலைப்பு வைக்க..


வேளாச்சேரியில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் உள் சாலை.. ஆரம்பமே... குப்பை கூளத்துட்டம் ஆரம்பிகின்றது.மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரிக்கரை ஓரமாக கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள் - இது ஒரு சாம்பிள் தான்.. ஏரிக்கரை ஓரமாக சென்றீர்கள் என்றால் இது மாதிரித்தான் இருக்கும். அழகான ஏரி... இதன் அருமை தெரியாமல் இப்படி வீணடிக்கின்றார்களே என்ற வருத்தம்தான்.
சென்னையில் அண்ணா சாலையில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படம் எதற்காக என்றுதானே கேட்கின்றீர்கள்.

செக்யூரிட்டி அறை அந்த கட்டடத்தை விட்டு வெளியே, மக்கள் நடக்கும் நடை பாதையின் மேல் அமைந்துள்ளது.

இந்த கட்டடம் நந்தனம் சிக்னலுக்கும், எஸ்.ஐ.இ.டி. சிக்கனலுக்கும் இடையில் கருமுத்து மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது.

கட்டடம் கட்டும் போதே இதை அரசு அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா.. இத்தனைக்கும் இது மிக முக்கியமான, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் செல்லும் வழியில் இருக்கின்றது.

இதே போல், எத்தனைப் பேர் கவனித்து இருப்பீர்கள் எனத் தெரியாது... சென்னை VGP யின் வாயில், நடை பாதையின் மேல்தான் அமைந்து இருக்கு. எத்தனையோ ஆட்சிகள் வந்துப் போயிருக்கு, நானும் பல வருடங்களாக கவனித்து இருக்கின்றேன், இது வரை யாருமே, எந்த ஆட்சியாளருமே இதை பற்றி கேள்வி கேட்டதில்லை..

ஆண்டவருக்கே வெளிச்சம்.

39 comments:

सुREஷ் कुMAர் said...

இப்போதைக்கு மீ த ஃபஸ்ட்டேய்..

सुREஷ் कुMAர் said...

காலையில் பொறுமையா படிச்சு கமென்ட்டுறேன்..

सुREஷ் कुMAர் said...

"என்ன தலைப்பு வைக்க.."

அம்பியின் அங்கலாய்ப்பு'னு வெச்சுடலாமா.. :-)

vasu balaji said...

அண்ணே! இப்புடியெல்லாமா கேக்குறது? வி.ஜி.பி. யாரு. =)). ஐயப்பா நகரில் அனியாய குப்பை

கலகலப்ரியா said...

நானும் மடிப்பாக்கம் பக்கம் போயிருக்கேன்... ஆனா இந்த சிக்னல் விவரம் எல்லாம் தெரியாது... ரொம்பத் தேவையான... சமூக அக்கறை கொண்ட இடுகை... தொடரட்டும் உங்கள் பணி...

தலைப்பு: "மடிப்பாக்கமும்.. எஸ்.ஐ.இ.டி சிக்னலும்... இடையில் பிடி குப்பையும்.."

அப்புறம் தமிழ்மணம் புட்டுக்கிச்சு... நாளைக்கு வாக்களிக்கப்படும்...

ஹேமா said...

ராகவன் ஓட்டுப் பதிஞ்சிட்டேன்.
தெரியாத விஷயம் பத்திப் பேசக்கூடாது.போய்ட்டு வரேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

// எத்தனையோ ஆட்சிகள் வந்துப் போயிருக்கு, நானும் பல வருடங்களாக கவனித்து இருக்கின்றேன், இது வரை யாருமே, எந்த ஆட்சியாளருமே இதை பற்றி கேள்வி கேட்டதில்லை..//

நாமளும் ஆட்சியாளர்கள்தானே

மக்கள் ஆட்சியாளர்கள்

இதை ஒரு பெட்டிசன் போட்டீங்கன்னா ஒரு 30 35 வருசங்களுச்சாச்சும் ஆக்சன் எடுப்பாங்கன்னு நினைக்கிறேன் ..

பா.ராஜாராம் said...

அக்கறையான பதிவு அண்ணாச்சி.ஜூனியர் விகடன் மாதிரி சகலமும் பேசுகிறது உங்கள் தளம்.

அப்பாவி முரு said...

''ஆண்டவருக்கே வெளிச்சம்"

ஆண்டவருக்கே -ன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவர்களா?

இப்போ ஆள்பவருக்கு வெளிச்சம் இல்லையா?

ஜோதிஜி said...

இந்த வசனம் ஞாபகம் இருக்கிறதா?

" மணியா வரலாறு தெரிஞ்சுக்கோனும். சாமியே இல்லைங்றவன் கூட கோயில ஓடச்சதுல்ல. ஆனா............."

இன்றைய சென்னை மேயரின் ஆரம்ப வாழ்க்கை எங்கிருந்து தொடங்கியது தெரியுமா? ஒரு தெருவோர டீக்கடை. இந்தப் பட நாயகன் போலத்தான்.

தவறு இல்லை. உழைப்பு. சிறப்பு. ஆளுமை.

ஆனால் பத்து நாளைக்கு முன் இந்த மேயர் "கட்டுமரமாக மிதந்து வருவேன்" ஊடக வாயிலாக நேர்காணல் அளித்தார் . 1450 கோடி உலக வங்கி ஓப்புதல் அளித்து விட்டது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு இடங்கள் அதில் வருகிறது. ஆனால் தெளிவாக புரிந்து அறைகுறை அறிவு இல்லாமல் மிகத் தெளிவாக பேசியது மிகவும் ரசித்தேன்.

சிரித்துக்கொண்டு மணைவியிடம் சொன்ன போது " சும்மா கேட்க விடுங்க. கொறைய சொல்லிக்கிட்டு இருக்காதீங்க"

இப்போது உங்கள் எழுத்தை படித்தவுடன் " ஆமா அவருக்கும் புள்ள குட்டி இருக்கும்ல"

எப்பூடிடிடிடி?

தலைப்பூ / தமிழனத்தலைவரின் தரமான ஆட்சியின் காட்சிகள்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - சென்னையில் எப்ப எழுதின இடுகை இது - அங்கே உக்காந்து கிட்டு இங்கே நடக்கறதப் பத்தி எழுதுறீங்களா

பலே பலே - நல்வாழ்த்துகள் ராகவன்

சங்கர் said...

நீங்க யாரு, நைஜீரியால என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க (echo)

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க யாரு, நைஜீரியால என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க (echo)

//

ஹா..ஹா..ஹா..

நீண்ட நாட்களுக்குப்பிறகு மிகவும் இரசித்த பின்னூட்டம் :)

அ.மு.செய்யது said...

சம்பந்த பட்டவர்களிடம் இந்த பதிவு சென்றடையுமா ??? ஆவண செய்யுங்கள்.

பீர் | Peer said...

அட.. இந்த பாதுகாப்பு அறை, கட்டிட பாதுகாப்பிற்குன்னு நெனச்சீங்களா? இல்லைங்க... மக்கள் பாதுகாப்பிற்கு, அதனாலதான் நடைபாதையில் கட்டியிருக்காங்க.

தருமி said...

சென்னை பற்றி - விட்ட குறை .. தொட்ட குறை.

தமிழ் அமுதன் said...

வாங்கண்ணே நாமெல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்...! ;;))

முனைவர் இரா.குணசீலன் said...

உள்நாட்டு ரகசியங்களை உலகறிய வெளியிட்டுவிட்டீர்களே...
இது தானே நண்பரே..
நம் அசுர பலம்!!!

வால்பையன் said...

//ஆண்டவருக்கே வெளிச்சம்.//

தப்பான ஸ்டேண்ட்மெண்ட்!

”ஆட்சியாளருக்கே வெளிச்சம்” என்பதே சரி!

கலையரசன் said...

உங்களுக்கு கேமரா வாங்கி குடுத்தது தப்பா போச்சுண்ணே! பாருங்க.. சும்மாயில்லாம போட்டோ புடிச்சு ஒரண்ட இழுக்குறீங்க!!

கலையரசன் said...

அப்புறம் தமிழ்மணம் புட்டுக்கிச்சு... நாளைக்கு வாக்களிக்கப்படும்...

Rajeswari said...

பொறுப்பற்ற அதிகாரிகளினால் ஏற்படும் அவலங்களில் இதுவும் ஒன்று...

தமிழ் உதயம் said...

சொன்னது கொஞ்சம்... சொல்லாதது அதிகம்... நீங்கள் அயல்நாட்டில் இருப்பதால் கேட்கிறேன்... நைஜிரிய மக்கள் சட்டத்தை பேணுவதில் எப்படி. ஒரு இடுரை போடுங்களேன்.

S.A. நவாஸுதீன் said...

பா.ராஜாராம் said...
அக்கறையான பதிவு அண்ணாச்சி.ஜூனியர் விகடன் மாதிரி சகலமும் பேசுகிறது உங்கள் தளம்

ஆமாண்ணே. அப்படித்தான் இருக்கு. கலையரசன் சொல்றதிலையும் நியாயம் இருக்கு

கலகலப்ரியா said...

appada pending over... ! varta..!

ஆரூரன் விசுவநாதன் said...

nice article ragavan sir

ஜெட்லி... said...

மக்களை பற்றி யார் கவலைபடுகிறார்கள் சார்...

ஈரோடு கதிர் said...

ஆண்டவருக்கே வெளிச்சமா!!!

அப்போ ஆள்பவர்களுக்கு!!!???

நிஜாம் கான் said...

எங்க அண்ணன் சிஐடி வேலைல எப்ப சேர்ந்தாரு? நல்லாத்தான் இருக்கு

Shabeer said...

VGP யின் பொய் பித்தலாட்டங்களில் நானும் கொஞ்சம் பாதிக்கபட்டுயிருக்கேன். அவர்கள் போடும் ஆட்டையை பற்றி தெரிந்தவர் யாராவது பதிவு இடுங்கள்.

பிரபாகர் said...

இந்த மாதிரி இடுகை போட்டு மனச தேத்திக்கலாம். திருந்தறதுக்கு ரொம்ப காலம் ஆகுமண்ணே...

பிரபாகர்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.எத்தனை ஆட்சி மாறினாலும்,இங்கே எதுவும் மாறப் போவதில்லை.

Mahesh said...

என்னத்தைச் சொல்ல.....

RAMYA said...

தலைப்புலேயே குழப்பாமா!!

"தமிழ்நாட்டின் தலை எழுத்து" அப்படீன்னு வச்சுடலாமா :)

ஆ.ஞானசேகரன் said...

Nice idukai

அன்புடன் மலிக்கா said...

இப்படிதானிருக்கிறதா இன்னும்?????????????நம்நாடு...

Thenammai Lakshmanan said...

அம்பியியின் அங்கலாய்ப்பு

தமிழ்நாட்டின் தலையெழுத்து

மடிப்பாக்கமும் எஸ் ஐ ஈடி சிக்னலும் இடையில் பிடி குப்பையும்

என்று உங்களுக்கு தலைப்பு குடுக்க ஏகப்பட்ட வாசகர்கள் முன் வர்றாங்களே ராகவன் குடுத்து வைத்த ஆள்தான்

நட்புடன் ஜமால் said...

ஐயோ! பாவம்

(நாம தான்)

அனாதி said...

விதியேன்னு படிக்க வேண்டியது தான்.