நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..
Showing posts with label சங்கிலித் தொடர் இடுகை. Show all posts
Showing posts with label சங்கிலித் தொடர் இடுகை. Show all posts
அன்புத் தோழி தேனம்மை லஷ்மணன் அவர்களின் அழைப்பிக்கிணங்க இந்த சங்கிலி தொடர் இடுகை...
பொறுப்பி : நமக்கு இடுகை போடுவதற்கான புத்திசாலித்தனம் இல்லை... இதுதாண்டா சரியான நேரம்... சீனாரானா ... (எத்தனை நாள்தான் சூனாபானான்னு மத்தவங்க பேரைச் சொல்லிகிட்டு இருப்பது... நம்ம பேரை நாமளே சொல்லவில்லை என்றால் எப்படி...) அப்படின்னு சொல்லிகிட்டு, இந்த தொடர் சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்...
நிபந்தனைகள் :
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.. (இருந்தா மட்டும் தெரியவா போகுது...)
வரிசை முக்கியம் இல்லை... (என்னிக்கு வரிசையில நின்னுயிருக்கோம் இங்க கொடுப்பதற்கு..)
இந்த தொடர் இடுகையில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது நலம். (இதுவும் ஒருவிதத்தில் நல்லதாப் போச்சு... இல்லாட்டி ஒரே துறையில் பத்து பேர் சொல்லுன்னா நாம... மூளையை... அதுகூட இல்ல... எத கசக்கறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கணும்...)
1. மதர் தெரசா (1910 - 1997)
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என தொண்டு புரிந்தவர். தன்னலமில்லாமல் ஜாதி, மதம் கடந்து உதவ வேண்டும் என கொள்கையை மறக்க முடியுமா.
2. எம். எஸ். சுப்புலக்ஷ்மி (1916 - 2004)
தேனினும் இனிய காந்தக் குரல், முகத்தில் ஒரு சாந்தம். கர்னாட சங்கீதத்தை எங்கும் பரவச் செய்ததில் இவரின் பங்கு மறக்க முடியாது.
3. எஸ். ஜானகி (1938)
இவரின் திரைப் படப் பாட்டுகளுக்கு நான் அடிமை. சிங்கார வேலனே தேவா ஆகட்டும், உயிரே படப்பாட்டு ஆகட்டும் இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவரின் எளிமை ரொம்ப பிடிக்கும். தமிழில் அதிகமான கதாநாயகிகளுக்கு முதல் பாட்டு பாடியவர் இவர்தான். (ராதா, ரோஜா, மீனா, சங்கவி, விந்தியா, ரஞ்சிதா, ரேகா, பானுப்ரியா, ராதிகா, ரேவதி, சுஜாதா, ப்ரீதி ஜிந்தா)
4. அன்னி பெசண்ட் அம்மையார். (1847 - 1933)
இந்திய விடுதலைக்காக போராடிய பெண் புலி. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்டு இருந்தாலும், பெண்கள் விடுதலைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளுக்காகவும் பாடுபட்டவர்.
5. இந்திரா காந்தி. (1917 - 1984)
இந்தியாவின் இரும்புப் பெண்மணி. இன்று இருக்கும் பல பெண் அரசியல்வாதிகளுக்கு மானசீக குரு அன்னை இந்திரா காந்தி என்றால் அது மிகை ஆகாது.
6. மார்க்ரெட் தாட்சர் (1925)
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் (1979 - 1990). இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று இவரைச் சொல்லலாம்.
7. மேதா பாட்கர். (1954)
லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அறிந்த சோஷியலிஸ்ட், மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு மிக நல்ல பெண்மணி.
8. பத்மினி. (1932 - 2006)
என்னை மிகவும் கவர்ந்த ஒரு நடிகை. (நடிக்க தெரிந்தவர்.) இன்னமும் என்னிடம் யார் சிவாஜிக்கு சரியான ஜோடி என்றுக் கேட்டால் உடனே தயங்காமல் பதில் சொல்லுவேன் பத்மினி என்று.. (வியட்னாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் இரண்டு போதுமே உதாரணத்துக்கு..)
9. P.T. உஷா. (1964)
தங்கத் தாரகை - உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டியவர்களில் முக்கியமானவர்.
10.சகுந்தலா தேவி (1939)
பிறவி கணித மேதை. இவரின் கணித திறமைக்காக “மனித கணினி” என்று அழைக்கப்பட்டவர். இவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. 1977 -ல் 201 டிஜிட் நம்பருக்கு ஸ்கொயர் ரூட் மனக் கணக்காக போட்டுக் காண்பித்தவர்.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு சங்கிலித் தொடர் இடுகை, வலைப் பதிவுகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.தொடங்கியவர் திரு. மாதவராஜ் அவர்கள். இந்த சங்கிலித் தொடர் இடுகையைத் தொடர என்னை அழைத்து இருப்பவர் அன்புத் தம்பி“ஷஃபி” உங்களில் ஒருவன்.
இந்த பிடித்தது, பிடிக்காததுப் பற்றி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.
இன்று நான் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று போடப்படுவது அனைத்தும் இன்றைய மன நிலையில் போடப்படுகின்றது.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்.
இந்த இடுகையைப் போடும் போது பின் வரும் விதி முறைகளையும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றனர். அவை
அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்
குறிப்புகள் :
பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்
இதோ எனது பத்துக்கு பத்து:
1. அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்கள் : யாருமே இல்லை
பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இரண்டிற்கும் காரணம் ஒன்னுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.
2. எழுத்தாளர்கள் :
பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)
பிடிக்காதவர்கள் : யாருமே இல்லீங்க.. (சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது)
3. திரைப்பட பாடலாசிரியர்கள் :
பிடித்தவர்கள் : வைரமுத்து (இவரின் கற்பனை வளம் எனக்கு பிடித்தது), கவிஞர் வாலி... (என்னைக் கட்டிப் போடும் வரிகள்)
பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும் (வாலி, வைரமுத்து குத்து பாட்டு எழுதும் போதும் எரிச்சலாகத்தான் வ்ரும்...)
பிடிக்காதவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசி நடிக்கும் அனைவரும். இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரிகின்றது.
5. நடிகர் :
பிடித்தவர்கள் : சரியாக நடிக்கும் போது - யாராக இருந்தாலும்..
பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...
6. நடிகை :
பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.
பிடிக்காதவர்கள் : இன்று திரைத் துறையில் இருப்பவர் அனைவரும்
7.தொழில் அதிபர்கள் :
பிடித்தவர்கள் : வேணு சீனிவாசன்... சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர். அங்கு வேலை பார்த்ததால் அவரைப் பற்றி நன்கு தெரியும்.
பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்
8. இயக்குனர் :
பிடித்தவர்கள் : இதில் குறிப்பிட்டு இவர்தான் என்று சொல்லத் தெரியவில்லை. படம் பிடிக்கும் போது, அவரைப் பிடிக்கின்றது.. உதாரணம் - பாரதிராஜா - முதல் மரியாதை படத்துக்காக அவரை ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காதவர்கள் : ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.
9. பதிவுலகம் :
பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.
10. திரைப்படங்கள் :
பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி
பிடிக்காதது : எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்.
இந்த தொடர் இடுகையை தொடர யாரையும் நான் அழைக்கவில்லை.
காரணம் - கிட்ட தட்ட எல்லாரும் எழுதியாச்சு...
அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.
உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. சரி நமக்கும் இடுகை எழுத விஷயம் ஒன்னும் கிடையாதா, இதுதாண்டா சாக்கு அப்படின்னு, இந்த சங்கிலித் தொடர் இடுகையை கெட்டியா பிடிச்சுகிற வேண்டியதா இருக்குங்க.
சும்மா(நம்புங்க வலைப்பூ பெயர்ங்க..) அப்படின்னு சொல்லிகிட்டு, பொளந்து கட்டிகிட்டு இருக்கும் கவிதாயினி, தேனம்மை லஷ்மணன் அவர்கள், சுமார் 15 நாட்களுக்கு முன் இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்து இருந்தார்கள். இன்னிக்கு எழுதலாம், நாளைக்கு எழுதலாம் என்று நாட்களை கடத்தியாச்சுங்க. சோம்பேறித்தனம் என்று இல்லை... வேலை பளு கூடுதல்தாங்க காரணம். ஒரு வழியா இன்னிக்கு முடிவு பண்ணி இந்த தொடர் இடுகையை தொடர்கின்றேன்.
ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க. அதனால், மீ த லாஸ்ட்...
1. A - Available / Single- தனிமரம் தோப்பாகுதுங்க...
2. B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்ஷே இல்ல
3. C- Cake or pie - பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..
4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி
5.E - Essential items you use everyday - மூளை அப்படின்னு சொல்லுணும் ஆசை.. ஆனால் இருப்பவங்கதான் அதைச் சொல்ல முடியும் அப்படிங்கிறதால, எதையெல்லாம் தினமும் உபயோகப் படுத்துகின்றேனோ, அது எல்லாம்.
6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...
7. G - Gummy bears or worms - இது சத்தியமா என்ன என்று புரியலை.. அதனால் Pass..
8. H - Hometown - எந்த ஊரைச் சொல்ல... படிச்சது கும்பகோணம்.
9. I - Indulgence - இது வேறாயா... அப்படி ஒன்னும் கிடையாது
10. J - January/Feruary - இரண்டுமே... தங்கமணி பிறந்த நாள் ஜனவரி.. என்னோடது பிப்ரவரி அதனாலத்தான்
11. K - Kids and their names - இளவரசு ஒருவர் மட்டும் தாங்க - அரவிந்த்
12. L - Life is incomplete with out - அன்பு
13. M - Marriage date - நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)
15. O - Oranges or Apples - எது கொடுத்தாலும் எனக்கு ஓகே
16. P - Phobias/ Fears - பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்
17. Q - Quotes for today - இரண்டு சொல்ல ஆசைப் படுகின்றேன்
ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.
BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS (இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது - ரொம்ப பிடித்தது)
18. R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்
19. S - Season - Four season
20. T- TAG 4 PEOPLE - யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)
21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்
22. V - vegetables you dont like - சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் அப்படின்னு இருக்கோம் .. இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம் சொல்லமுடியுமா என்ன..
23. W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..
24. X - Xrays you had - அது நிறைய இருக்குங்க... வருஷா வருஷம் எடுப்பது என்றில்லாமல், அவ்வப்போது முதுகு, மார்பு, கழுத்து என்று நிறைய இருக்கு..
25. Y - Your Favourite Food - சைவ உணவு வகைகள்
26. Z - Zodiac Sign - மகரம் / Acquarian
அன்பிற்கு உரியவர்கள் - நான் அன்பு செலுத்துபவர்கள், என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும்
ஆசைக்குரியவர் - அன்பு மனைவியும், ஆசை மகனும்
இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்
துபாயில உட்கார்ந்துகிட்டு என்னை மாட்டிவிட்டுட்டாரு....
இதைத் தொடர்ந்து அழைத்தவர் பிரியமுடன் ...வசந்த்... கத்தாரில் உட்கார்ந்துகிட்டு மாட்டிவிட்டவர்...
முதலில் ராகவன் என்பது யார்...? இதுக்கு பதில்.... ????? !!!!
பிள்ளைக்கு தகப்பனா, தகப்பனுக்கு பிள்ளையா, தாய்க்கு மகனா, மனைவிக்கு கணவனா, மச்சானா, மாமனா இப்படி பல கேள்விகள் தோணுது.. .
சரி இப்ப புலம்பி என்னா செய்வது....
இந்த இடுகையைத் தொடர்வது என்று முடிவு செய்தாச்சு.. (மாட்டேன் சொன்னா தம்பிகள் கிட்ட அடிவாங்க முடியாதில்லையா... அதனால் (ஆ)ரம்பம் சங்கிலித் தொடர் இடுகை....)
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பா, அம்மா வச்ச பேரு. பேருல என்ன இருக்கு பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும். அது ஒரு அடையாளம்தான். இத தவிர நண்பர்கள் வச்ச பட்ட பெயர்கள் நிறைய உண்டு. அது எல்லாம் சொல்லப்பிடாது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
தாயையும்(27-01-2005) , தந்தையும் (26-11-2005) மறைந்த போது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும். நெஜமாவே நல்லா இருக்குங்க.
4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா சமைத்த, மனைவி் சமைக்கும் எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும். இதுதான் வேண்டும் என்பது கிடையாது. தயிர்சாதம், ஊறுகாய் கூட போதுமானதுதான்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
எல்லோரிடமும் நட்பாகத்தான் இருக்க நினைப்பேன். நன்கும் பழகுவேன். தொடர்வது காலத்தின் கையில்...
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1. என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.
2. திறைமையான தம்பி. புதிதாக பதிவராக வந்தாலும், எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கின்றது. நான் எப்ப சாட்டிங்கில் வருவேன் என்று காத்துக் கொண்டு இருக்கும் அன்புத் தம்பி.
3. தைரியமாக எழுதும் பதிவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை அவருக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்பதாலும்....
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
சூப்பர் கடி மன்னர். எப்படி எல்லாம் யோசிக்கின்றார். 2008 -ல் 1 பதிவு போட்டவர், 2009 மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 69 பதிவுகள் போட்டு சிலிர்க்க வைத்தவர். மனம் விட்டு சிரிக்க இவரது பதிவுகளைப் படியுங்க.
17. பிடித்த விளையாட்டு?
கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய
18.கண்ணாடி அணிபவரா?
ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காம நெடி இல்லாத காமடி படங்களை ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
மைக்கேல் மதன் காமராஜன்.... (டிவிடியில் பார்த்தது)
திரையரங்கில் கடைசியாகப் பார்த்த படம் - சிவாஜி
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்..... மழை பெய்வதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
புத்தகம் படிப்பதற்கு இங்கு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அதனால் இணையத்தில் படிப்பதுடன் சரி. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதுங்க.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அது எல்லாம் மகன் செய்வது. நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
விடியற் காலையில் ஒலிக்கும் பறவைகளின் சத்தம், குழந்தைகளின் மழலை, சிரிப்பு.
வாகனங்களின் ஏர் ஹார்ன் சத்தம், ஆட்டோ சத்தம், சைலன்சரை கழட்டி விட்டுட்டு வண்டி ஓட்டுபவர்களைக் கண்டாம் பயங்கர கோபம் வரும்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நைஜிரியாதான் அதிக தூரம் .
இதற்கு முன் சைனாதான் அதிக பட்ச தொலைவு சென்ற இடம்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித் திறமையா... அப்படின்னா என்னங்க
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கைத் துரோகம், திருட்டு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்தான்....
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இந்தியாவில் எல்லா இடமும் பிடிக்கும். சென்னையில் இருந்த வரை நான் அடிக்கடி போகும் இடம் புதுச்சேரி ஆரோவில். இதுத்தவிர டாப்ஸ்லிப், குன்னூர், கோடைக்கானல் ... இப்படி நிறைய இடம் சொல்லலாம்.
வெளிநாட்டில் சுற்றிப் பார்க்க ஆசை எல்லாம் கிடையாதுங்க. நம் நாட்டை சுற்றிப்பார்க்கவே இந்த ஆயுசு போதாதுங்க...
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, உபத்திரவமா இருக்க கூடாதுன்னு நினைக்கின்றேன்.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அப்படி எல்லாம் ஒரு நினைப்பே கிடையாதுங்க.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். இன்பமும், துன்பமும், சந்தோஷமும், கஷ்டமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஓவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம். நம் கஷ்டத்தை அடுத்தவர்கள் மேல் திணிக்காமல் மற்றவர்களுக்கு நம்மால முடிந்த உதவிகளை செய்து வாழ வேண்டும்.
தம்பி டக்ளஸ் என்னையும் மதித்து இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு என்னை அழைத்து இருக்கின்றார். தம்பி டக்ளஸ் நேதாஜி பற்றிய இடுகையைக் காண இங்கு சொடுக்கவும்.
முன்னமே என்னைக் கவர்ந்தவர்கள் என்று ஒரு இடுகை எழுதியிருக்கின்றேன். தம்பி டக்ளஸ் அழைப்பை ஏற்று இந்த சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்.
மனதிற்குள் ஒரு சிறு பயமும் உண்டு. இந்த இடுகையை எந்தவிதமான தப்புகளும் இல்லாமல் எழுதவேண்டுமே, அதிலும் தமிழ் தாத்தா அவர்களைப் பற்றிய இடுகை என்பதால், மிகக் கவனமாக எழுத முயற்சித்துள்ளேன். தப்புகள் இருந்தால் தமிழ்த் தாத்தா மன்னிப்பாராக.
அனைவராலும் தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப் படும் டாக்டர் உ.வே. சா அவர்கள் பிறந்தது 19 - 02 -1855. உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாதய்யர் என்பதின் சுருக்கமே உ.வே.சா.
தந்தையார் திரு. வேங்கட சுப்பையர் - தாயார் திருமதி சரஸ்வதியம்மாள்.
பலரிடம் பல பாடங்கள் கேட்டபின், திருவாடுதுறை ஆதினத்தின் பெருங் கவிஞரவாகவும் சிறந்த புலவராகவும் விளங்கிய மகா வித்வான் திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 6 வருடங்கள் பாடங்கள் படித்தார் தமிழ்த் தாத்தா அவர்கள். (1870 முதல் 1876 வரை). மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் 1876 - ல் மறைந்தைதால் அவரிடம் மேலும் பாடம் படிக்க இயலாமல் போய்விட்டது.
பிள்ளை அவர்கள் மறைவிற்குப் பின் தமிழ்த் தாத்தா திருவாடுதுறை ஆதினகர்த்தர் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் அவர்களிடத்தில் பாடம் கேட்க ஆரம்பித்தார். அதோடு மற்ற பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் பணியினை மேற்க் கொண்டார்.
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் அவர்கள் ஓய்வு பெரும் காலம் வந்த போது, அவரின் சிபாரிசின் காரணமாக ஐயரவர்களை தமிழாசிரியாராக வேலை 1880 ஆம் ஆண்டு முதல் வேலைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
கல்லூரியில் வேலைப் பார்த்த காலத்தில் தமிழ்த்தாத்தா அவர்களுக்கு கிடைத்த நட்பு, கும்பகோணம் ஜில்லா முன்சீப் திரு. சேலம் இராமசாமி முதலியார் அவர்கள். அவர்கள் மூலம் அவருக்கு கிடைத்த நூல் தான் சீவக சிந்தாமணி. இராமசாமி முதலியார் அவர்கள் தமிழ்த் தாத்தா அவர்களிடம் சீவக சிந்தாமணி பாடம் சொல்லிக் கொடுக்க சொல்லியுள்ளார்கள். அதனை பாடம் எடுக்கும் போது அன்னாருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட அதை அவர் ஜைன மத நண்பர்கள் மூலம் கற்றறிந்து, அவருக்கு விளக்கினார்.
தமிழ் தாத்தா அவர்கள் விடாப்பிடியாக முயன்று, 1887 - ல் சீவக சிந்தாமணியை அச்சில் வெளியிட்டார்.
தமிழ்த்தாத்தா அவர்கள் முயற்ச்சியினால் அச்சில் கொண்டு வரப் பெற்ற மற்ற நூல்கள் பத்துப்பாட்டு (1889) , சிலப்பதிகாரம் (1892), புறநானுறு(1894), மணிமேகலை(1898) என்று இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லுகின்றது.
கும்பகோணம் கல்லூரியில் இருந்து 1903 ஆம் ஆண்டு சென்னை கல்லூரிக்கு தமிழாசிரியாராக சேர்ந்தார்கள் தமிழ்த் தாத்தா அவர்கள்.
தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது மிகப் பெரியத் தொண்டு. ஏட்டில் இருந்து பிரதி எடுத்து, அதை அப்படியே அச்சிடும் வேலை அல்ல ஐயரவர்கள் செய்தது. ஏட்டில் உள்ள் பாடம் பிழைப் பட்டு இருக்கும். இன்னதென்று ஊகிக்க முடியாத சிதைவுகள் ஏற்பட்டு இருக்கும். அதை சரி செய்து வெளியிடுவது என்பது மிகப் பெரிய விசயம். தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது இதுதான்.
தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம், தமிழர் மரபு என்று பலவாறு பேசிக் கொண்டு இருக்கின்றோம். தமிழ் இந்திய மொழிகளில் மிகப் பழமையானது என்று இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். இந்த உயர்வுக்கு காரணம் தமிழ்த்தாத்தா அவர்களின் அயராத தொண்டும், உழைப்பும் தான் காரணம்.
தமிழ்த்தாத்தா அவர்கள் பெற்ற பட்டங்கள் தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது.
இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தாத்தா அவர்களின் புகழ் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எழுத விசயங்கள் ஏராளாமாக உண்டு.
இவரின் பெருமையை திரு ராகவையங்கார் அவர்கள் செய்யுளாகவே கொடுத்துள்ளார்.
ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை எழுதி யாய்ந்த குறிப்புறை யெத்தனை பாடு பட்ட பதத்தெளி வெத்தனை பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை கோதி லாச் சாமி நாதன் யமிழ்க் கென்றே!
தமிழ்த் தாத்தா அவர்கள் 28.04.1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
தமிழ்த் தாத்தா அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்க முடியாதது.
இந்த சங்கிலித் தொடர் இடுகையை அன்பு நண்பர் திரு ஜீவன் அவர்களை தொடரும் படி அழைக்கின்றேன்.